Thursday, September 6, 2012

""எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்.

ஒன்றினால் ஒன்றும்... ஒதுங்கினால் ஒதுங்கும்.'' ""எந்த ஒன்றையும்- படிப்பு, செயல் போன்ற எந்த ஒன்றையும் மனசு ஒன்றி ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் நம்மோடு ஒன்றும்; ஒதுங்கி நின்றால் ஒதுங்கும்.'' "" .'' ... சாதாரண சூரிய ஒளியாலே பஞ்சை எரிய வைக்க முடியுமா?'' ""சூரிய ஒளியால் பஞ்சையா? அது எப்படி?'' ""சூரிய ஒளியை ஒருமுகப்படுத்தினால்- ஒரு புள்ளியில் கொண்டு வந்தால்?'' ""என்ன சொல்ற... தெளிவா சொல்லு.'' ""லென்ஸ் வழியா சூரிய ஒளியை ஒரு புள்ளியில் கொண்டுவந்து, அந்த லென்ஸின்கீழ் பஞ்சை சிறிது நேரம் வைத்திருந்தால்?'' ""பஞ்சு எரியும்.'' ""சாதாரண சூரிய ஒளியால் பஞ்சு எரியாது. ஆனால் "லென்ஸ்' என்ற கருவி மூலம் சூரிய ஒளியை ஒருமுகப்படுத்தி ஒரு புள்ளியில் கொண்டு வரும்போது பஞ்சு எரிகிறது. அதுபோலதான் நாமும் நம் மனசை ஒருமுகப்படுத்தி... எதைச் செய்ய வேண்டுமோ அந்த ஒரு புள்ளியில் கொண்டுவந்து பதிவு செய்து செயல்பட்டால், அந்தச் செயலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.'' ""ஆயிரத்தெட்டு பிரச்சினையிலே அலைபாயுற மனசை எப்படி ஒருமுகப்படுத்தறது? நல்ல கதையா இருக்குதே... சொல்றது சுலபம்.'' ""நெப்போலியன் குதிரையில போகும்போது தான் தூங்குவாராம். அதுவும் நிம்மதியா தூங்கு வாராம். "எப்படி உங்களால தூங்க முடிகிறது'ன்னு நெப்போலியனைக் கேட்டபோது, "புறாக்கூண்டு போல என் மூளையில் பல அறைகள் இருக்கின்றன. எந்த அறையில் பிரச்சினை ஏற்படுதோ அந்த அறையை மட்டும் திறந்து சரிப்படுத்திவிட்டு மூடிவிடுவேன். தூங்கவேண்டும் என்று எண்ணும்போது எல்லா அறைக் கதவுகளையும் மூடிவிடுவேன். அது மட்டுமல்ல... சரியானபடி திட்டமிடு கிறேன். அதனால நிம்மதியா எந்தச் சூழலிலும் தூங்க முடிகிறது' என்று சொன்னாராம்.'' ""உனக்குப் பிடித்த... விருப்பமானதைச் செய்யும்போது வேறு எதிலாவது மனசு போகுதா?'' ""இல்ல.'' ""நம்மால முடியும்னு முழு நம்பிக்கை வைக்கணும்... மனசு தானா ஒன்றும். மகாபாரதத்திலே துரோணர் வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கும்போது அர்ச்சுனனைத் தவிர தருமனுக்கோ பீமனுக்கோ மனசுல பிடிப்பு ஏற்படல... அதனாலதான் அர்ச்சுனனுக்கு பறவையின் கண்ணு மட்டும் தெரிந்தது. குறி பார்த்து பறவையை அர்ச்சுனனால வீழ்த்த முடிந்தது. எது செய்யறமோ அதுமட்டும்தான் தெரியணும். மனசை கேமிராபோல வைத்துக்கொண்டு "க்ளிக்' செய்து பார்... நிச்சயம் படிப்பு உள்பட எல்லாமே சரியானபடி பதிவாகும். வெற்றி நிச்சயம் பெறலாம்.'' ""எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். மனசை தெளிவா வைத்திரு. ஒன்றினால் ஒன்றும்; ஒதுங்கினால் ஒதுங்கும்.

No comments:

Post a Comment