Friday, June 21, 2013

பிரணவ மந்திரம் .


' ஓம் ' என்ற மந்திரத்தில் ' அ ' ' உ ' ' ம் ' என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருக்கிறது . இதில் ' அ ' என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியிலிருந்து சக்தியுடன் எழுந்து வருகிறது . ' உ ' என்பது நம்முடைய கண்டத்தில்லிருந்து புறப்படுகிறது . நாம் முடிக்கும் ' ம் ' என்ற எழுத்து இந்த உச்சரிப்பை , உதடுகளை மூடி முடித்து வைக்கிறது . இந்த மூன்றும் மொழியை அமைக்கும் ஒலிகளை பிரதிபலிக்கும் செயல்களாக அமைகின்றன . ஆரம்பம் , இடை , முடிவு என்ற நிலைகளையும் அவை காட்டுகின்றன . நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைத்திருக்கிறார்கள் . ஒவ்வொரு ஜீவனும் விழிப்பு , கனவு , உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் இணைத்து , உடலின் மூன்று பகுதிகளையும் சேர்க்கும் ' ஓம் ' என்ற மந்திரம் காட்டுகிறது . நாம் உட்கார்ந்து 'ஓம் ' என்று சொல்லும்போது , இந்தத் தத்துவத்தை முழுமையாக உணர வேண்டும் .
--- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்

No comments:

Post a Comment