கருத்தும் கதையும் :
----------------------------
இளமைப் பருவத்தில் ஒருள் நாள் கிருஷ்ணர் ,பலராமர்,ஸாத்யகி மூவரும் காட்டிற்குள் வேட்டைக்கு புறப்பட்டனர்.நீண்ட நேரம் சென்று விட்டதாலும் இரவு பொழுது அங்கே வந்து விட்டதாலும் அங்கேயே ஓய்வெடுக்க தீர்மானித்து பாதுகாப்பிற்காக ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருக்க முடிவு செய்தனர்.
முதல் ஜாமம் ஸாத்யகி காவல் காக்கும் போது ஒரு விகாரமான தோற்றம் கொண்ட பூதம் ,"உன் சிநேகிதர்களை கொல்லப் போகிறேன் ",என்று கூறிக் கொண்டே வந்தது .கோபம் கொண்ட ஸாத்யகி போருக்கு ஆயத்தமானார் ....
பூதத்தினுடைய பலத்தின் ரகசியம் என்னவென்றால் யார் அந்த பூதத்தை எதிர்த்து கோபப்பட்டாலும் அதன் உடல் பெரிதாகி அதன் பலம் பலமடங்காக கூடிவிடும்.
ஸாத்யகி கோபத்துடன் போரிட பூதத்தின் பலம் பெருகியது. ஸாத்யகிக்கு ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டன.அவருடைய காவல் நேரம் முடிந்ததும் பூதம் காணாமல் போனது.
அடுத்து பாலராமரின் காவல் முறை வந்தது.மீண்டும் பூதம் வந்து "உன் சகோதரனையும் ,நண்பனையும் கொல்லப் போகிறேன்" என்று கூறியது.
அதற்கு பலராமர் ,"நான் ஒருவன் காவல் இருக்கும்போது உன்னால் இவர்களை கொள்ள முடியாது ',என்று கோபத்துடன் கூறிக் கொண்டே சண்டையிட்டார்.முன்பு போல் பூதம் பெரும்பலத்துடன் சண்டையிட்டு பலராமரை காயப்படுத்தி விட்டு காணாமல் போனது .பலராமர் கிருஷ்ணரை எழுப்பிவிட்டு அலுப்புடனும் பலத்த காயத்துடனும் தூங்கி விட்டார்.
கிருஷ்ணரின் காவல் முறை வந்தபோது முன்பு போல் பூதம் வந்து,"உன் சகோதரனையும் ,நண்பரையும் விழுங்கப் போகிறேன்'என்று கூறியதும் கிருஷ்ணர் பலமாக சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறாய் ?' என்று பூதம் பகவானை பார்த்து கேட்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் ,என்னுடன் விடியும் வரை விழித்திருக்க யாரு இல்லையே என்று நினைத்தேன் .நல்ல வேலை நீ வந்தாய்.இனி எனக்கு நேரம் போவதே தெரியாது 'என்று கூறி கொபமிள்ளது நிதானமாக மீண்டும் சிரித்தார்.
அவ்வப்போது பூதம் சண்டையிட வரும் போதெல்லாம் கிருஷ்ணர் சிரிக்க பூதத்தின் உருவம் சிறிதாகி கொண்டே சென்றது.பொதுவாக் எதிரியின் கோபம் பூதத்திற்கு சக்தியூட்டும் என்றால் நிதானம் ,கொபமின்மை பூதத்தின் சக்தியை குறைக்கும் என்பது கிருஷ்ணருக்கு தெரியாத என்ன ?
விடிந்த பின்பு பலராமரும், ஸாத்யகியும் கிருஷ்ணரை பார்த்து 'உன்னையும் பூதம் தாக்கியதா ?'என்று கேட்டார்கள்.கிருஷ்ணர் ,'உங்களை தாக்கிய பூதத்தை நான் புழு அளவாக மாற்றி என் துணியின் நுனியில் கட்டி வைத்துள்ளேன்'என்று அதை எடுத்து காட்டினார்.
"தீராக்கோபம் போராய் முடியும் "என்ற பொன்மொழிக்கிணங்க ஒருவர் உள்ளத்தில் தோன்றும் கோபம்,பூதம் பெரிதாவது போல் மனதில் வெறித்தனத்தை மேலோங்க செய்து விடும்.மனதில் கோபம் இருக்கும் வரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் மிருகத்தனமாக செயல்படுவர்.
இதனால் அங்கு பகவானை நிலைநிறுத்தி மந்திரம் கூறி பூஜிக்கும் அனைவரும் கோபம் என்ற பலவீனத்திலிருந்து விடுப்பட்டு வெற்றி பெறுவர்.

No comments:
Post a Comment