Sunday, October 20, 2013

திருஷ்டி கழிப்பு


திருஷ்டி கழிப்பு

தாய்மார்க்கள் தங்கள் குழந்தைகளைச் சீவிச் சிங்காரித்து, அழகான ஆடைகளை உடுத்தி இறுதியாகக் குழந்தைமேல் யார் கண்ணாவது பட்டுவிடப் போகிறது என்று கருதிக் கன்னத்தில் கறுப்பாக ஒரு பொட்டு வைப்பார்கள்! கேட்டால் திருஷ்டிபடக்கூடாது என்பார்கள்! கேட்டால் திருஷ் படக்கூடாது என்பார்கள்! பொறாமை எண்ணத்துக்கும் பார்க்கின்றவர்ளின் எண்ணத்தோடு பார்க்கின்றவர்களின் எண்ணத்துக்கும் சிலவகை ஆற்றல் உண்டு; அதற்காகவே கண்ணூறு கழித்தல் என்ற பழக்கம் உண்டு. காலப்போக்கில் கண்ணேறு கழித்தல் என்று ஆகிவிட்டது.

இரண்டு தொண்டர்கள் :...

அன்னையின் ஆலயத்தில், அன்னைக்கு அபிடேகம் செய்து அலங்காரம் செய்து இறுதியில் திருஷ்டி கழிப்பது வழக்கம். இந்தப் பணிகளைச் செய்வதில் தேர்ந்த தொண்டர்கள் இருவர் உண்டு! வீரசாகவன், முனுசாமி என்ற இருவரும் அன்னைக்கு அலங்காரம் செய்வார்கள்! இதிலே ஒரு வியப்பு! இந்த இருவரும் அலங்காரம் செய்யும் கலையை முன்பின் பயின்று அறியாதவர்கள். சிறு வயது முதற்கொண்டே இங்கே தொண்டு செய்து வருபவர்கள் !

தொண்டர் வீராகவனுக்கு ஒரு சந்தேகம்! அம்மா தான் தெய்வம் ஆயிற்றே! அதிலும் ஆதிபராசக்தி ஆயிற்றே எல்லாத் தெய்வங்களைக் காட்டிலும் தலைமையான தெய்வம் ஆயிற்றே! அப்படி இருக்க அம்மனுக்கு எதற்காகத் திருஷ்டி கழிக்க வேண்டும்?

இந்தச் சந்தேகத்தை அம்மா விடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்க்கு நீண்ட நாளாக ஆவல்! அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தாயே உனக்கும் கூடவா திருஷ்டி கழிக்க வேண்டும்? அது ஏன் ? என்று அருள் வாக்கில் கேட்டு விட்டார்.

அதற்கு அம்மா பின் வருமாறு சொன்னாள். ''மகனே! தாய்குழந்தைக்கு என்ன செய்கிறாள் ? நன்றாகக் குளிப்பாட்டி, தலை சீவி, அழகான ஆடையணிவித்து, மற்றவர்கள் கண்பட்டுவிடப் போகிறது என்று திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள் அல்லவா மகனே! அது போலவே நீயும் எனக்குச் செய்கிறாய். அலங்காரம் செய்யும் போது தான் குழந்தை யாகிறேன்; நீ எனக்குத் தாயாகி விடுகிறாய் மகனே! அதற்குப் பிற்பாடுதான் தான் தாய்; நீ மகன்!'' என்றாள்.

இப்படி சொல்லிய அம்மா எப்படிப் பட்டவள் ? 1008 போற்றி மலரில் ''சிவன் துணை ஆனாய் போற்றி என்று இருந்த மந்திரத்தை எடுத்து விடு! நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டு பட்டவள் அல்லள் என்று சொன்னவள்!

தொண்டர் ஒருவரிடம், ''மகனே! பஞ்ச பிரேதாஸ நாஸீநாயை நம ( 249 லலிதா சகஸ்ர நாமம்) பஞ்ச ப்ரம ஸ்வரூபண்யை நம என்ற மந்திரம் தெரியுமா உனக்கு? எல்லாவற்றுக்கும் மேலாக நான் அமர்ந்து உள்ளேன் என்பதை அறிவாயா? எந்த மந்திரத்தை நீ செபித்தாலும் அதனைப் பெறுபவள் நான்தானடா மகனே!'' என்று இவ்வாறு தன் பரத்துவத்தைச் ( மிக மிக உயர்ந்த நிலையை ) சொன்ன அம்மாதான் வீரராகவனிடம் தன் சௌலப்பியத்தை ( மிக மிக எளிமையான நிலையை) எடுத்துச் சொன்னாள். ''நீ எனக்கு அலங்காரம் செய்யும் போது நான் குழந்தை யாகிறேன் நீ எனக்குத் தாயாகி விடுகிறாய்'' என்றாளே ! அப்பப்பா ! என்ன கருணை ! எத்தனை எளிமை !!!

No comments:

Post a Comment