மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி குருவை மூன்றாம் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே. குரு முக்கியமில்லையா?
பாலகுமாரன் பதில் -
நீங்கள் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பாலூட்ட தாய் தேவைப்படுகிறாள். சுத்தம் செய்து, சுமந்து, வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் காப்பாற்றி உங்களை ஆசுவாசப்படுத்த தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. உங்களை ஆசுவாசப்படுத்தி, நல்ல உணவு கொடுத்து, நன்கு வளர்ப்பதற்காக அந்த தாயின் பக்கபலமாக, பின்பலமாக தந்தை தேவைப்படுகிறார். உங்களுடைய நான்காவது, ஐந்தாவது வயதில் நீங்கள் போடுகின்ற ஆட்டமும், பேச்சும், சிரிப்பும், உங்களை மேலும் பலப்படுத்த தந்தை உதவியாய் இருக்கிறார்.
ஆனால் பதினாறு வயதில் உலகம் பற்றிய ஞானத்தை தேடுகின்றவனாய், வாழ்வு குறித்த கேள்விகள் உள்ளவனாய் நீங்கள் வாலிபனாய் நிற்கிறபோது உங்களுக்கு குரு என்பவரே மாதா. குரு என்பவரே பிதாவாக இருந்து தெய்வத்திடம் அழைத்துப் போகக் கூடியவராக இருக்கிறார். தாயும் தந்தையுமாகி நிற்கின்ற குரு நீங்கள் வளர்ந்த பிறகு உதவி செய்பவர். உங்கள் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்துகிறவர். உங்களை வழி நடத்துகிறவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறும் வரை குரு என்பவர் உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் வாலிபமான பிறகு குரு என்பவர் இல்லாது வாழ்க்கை இல்லை. குரு என்பவருக்குள் மாதா, பிதாவும் ஏன் கடவுளும் அடக்கம்....

No comments:
Post a Comment