Thursday, October 24, 2013

நவராத்திரியை ஒட்டி கன்னி பூஜைக்கு குழந்தைகளின் வயது

நவராத்திரியை ஒட்டி கன்னி பூஜை எனப்படும் "கன்யா பூஜையை' நடத்துவது மிகவும் சிறப்பு. இதற்கு இரண்டு வயதுக்கு மேல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு வயது குழந்தையை சிலர் தேர்வு செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். காரணம், ஒரு வயது குழந்தைக்கு பூ, புத்தாடை, ஆபரணங்கள் சூட்டும் போது, அதைக்கண்டு குழந்தை மகிழ்ச்சியடையும் பக்குவமான வயதாக அது இல்லை. எனவே, இரண்டு மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால், இவற்றைக் கண்டு மனம் மகிழும். அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பெறுவதே இந்த பூஜையின் நோக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளை பாலா திரிபுரசுந்தரி வடிவில் வணங்க வேண்டும். பாலா என்றால் "குழந்தை' அல்லது "கன்னி'. அம்பாளை குழந்தை வடிவில் வழிபடுவது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்

No comments:

Post a Comment