மனிதர்களும்,எதிர்மறையான சிந்தனைகளும்: ------------------------------ ------------------------------ --- பெரும்பாலன மனிதர்களுக்கு வாழ்வில் ஏற்படும், மிகப்பெரிய ப...ிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் எதிர்மறையான சிந்தனைகளே ஆகும். ஒரு மனிதருக்கு,ஒவ்வோரு நாளைக்கும் சுமார் 56000 எண்ணங்கள் தோன்றுகின்றன.அதில் 90 சதவீதம் எதிர்மறையான சிந்தனைகளே ஆகும்.இதற்கு மனிதர்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது.சமுதாயத்தின் பங்கும் உள்ளது.மேலும் இப்பொழுது உள்ள மீடியாக்கள் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கும் பொழுதுஅதில் பிழைத்தவர்களின் எண்ணிக்கையைகூறாமல்,இறந்தவர்களி ன்எண்ணிக்கையையும் கூறுவதோடு மட்டும் அல்லாமல்,பரபரப்புக்காக பலவீனமான செய்திகளையும் கூறுகின்றன. ஒவ்வொரு மானிதரும் தன் சுயநலத்துக்காக அடுத்தவரின் பல வீனங்களை,தன பலமாக்கிகொள்கின்றனர்.ஒருவன் பலவீனமான் நிலையில் இருக்குபொழுது அவனுக்கு நேர்மறையான கருத்துகளை கூறி அவனை நல்வழிபடுத்தாமல்,மேலும் அவனை பலவீனமாக்கி சில மனிதர்கள் சந்தோஷப்பட்டுகொள்கின்றனர். பெரும்பாலான ஜோதிடர்கள்,ஒருவர் ஜாதகம் பார்க்க வரும்பொழுது,முதலில் அவர் ஜாதகத்தில் உள்ள ப்லவீனங்களை மிகைப்படுத்தி கூறி,அதன் மூலம் தன்னை வளப்படுத்திகொள்கிறார்கள் நான் யார் ஜாதகம் பார்க்க வந்தாலும்,முதலில் அந்த ஜாதகத்தின் வழுவான விசயங்களை எடுத்துகூறி,பின் அதில் உள்ள குறைகளை கூறி அவருக்கு நல்வழிகாட்டுவேன்.. ஒரு குவளையில் இருக்கும் தண்ணீரை காட்டி,எதில் எவ்வளவு நீர் இருக்கிறது என ஒருவரிடம் கேட்டால்,பெருமபாலனவர்கள் பாதி குறைந்திருக்கிறது என்று தான் சொல்லுகிறார்கள்.பாதி நிறைந்து இருக்கிறது என்று சொல்வது நேர்மறையான சிந்தனை,பாதிகுறைந்து இருக்கிறது என்பது எதிர்மறையான சிந்தனை ஆகும். நேர் மறையான சிந்தனைகளும்,எண்ணங்களும் ஒரு மனிதருக்கு ஆத்ம பலத்தையும்,தன்னம்பிக்கையும் கொடுக்கும்.இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் வெர்றி பெறுவது உறுதி.
No comments:
Post a Comment