Friday, October 11, 2013

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்


 

பெற்றோரை தவிக்கவிட்டு காசியில்
நீராடுபவனை கடவுள் கண்
திறந்து பார்ப்பது இல்லை..!
"
கங்கையிலே காவிரியில்
நூறுமுறை மூழ்கி; கணக்கற்ற...
திருக்கோயில் கால்தேற சுற்றி;
வெங்கொடிய
பலநோன்பு ஏற்றுடலை வருத்தி;
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம்
செய்து;
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து;
பசுவதனைப் பூசித்து அதன்
கழிவை உண்டு; தங்களுயிர்
மோட்சத்தை அடைவதற்கே முயலும்;
தயவில்லார் சத்தியமாய்
முக்தியதை யடையார்."

-
ஆசான் வள்ளலார்-
 
 
 
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்




நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே....
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

No comments:

Post a Comment