கர்மவினை / விதி பற்றி ஸ்ரீ அரவிந்தர்.....
வினா: விதி என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்கள்?
இந்தியக் கருத்தின்படி விதி என்பது கர்மா. அதாவது, வினைப் பயன். நமது செயல்களின் மூலம் நாமே விதியை உருவாக்குகிறோம். நம்மால் உருவாக்கப் பட்ட விதி நம்மையே கட்டிப் போடுகிறது. நாம் விதைத்த வினையின் பயனை இந்தப் பிறவியிலோ அல்லது மறு பிறவியிலோ அனுபவித்தே ஆக வேண்டும்....
வினா: நமது கடந்த காலச் செயல்கள் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும்; இப்போது நாம் நமது வருங்கால விதியை நிர்ணயிக்கச் சங்கல்பம் செய்யலாமல்லவா?
நிச்சயமாக, நாம் தான் நமது வருங்கால விதியை உருவாக்கிக்கொண்டி ருக்கிறோம். கடந்த கால வினைப் பயனை அனுபவித் தவாறே எதிர்கால விதியை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம். நமது சங்கல்பத்திற்கும் செயலுக்கும் அது தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது.
வினா: நமது கடந்த காலக் கர்மா பலனுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமா?
நமது நிகழ்காலச் சங்கல்பத்தினாலும் செயலாலும் கடந்த காலக் கர்மாவை மாற்ற முடியாது என்பதில்லை. எனினும் சில கர்மாக்கள் உண்டு. உத்கட கர்மா எனப்படும் கொடிய வினைப் பயனை மாற்றுவது கடினம். இத்தகைய விதியை - ஆன்மீக உயர்நிலையை அடைந்தவர்களால் மாற்ற முடியும். ஆன்மீக நிலையை அடையும்போது பிரபஞ்சமளாவிய தெய்வ சங்கல்பத்துடன் ஒன்றிவிடும் திறன் வருகிறது. தான் படைத்தவற்றை மாற்றும் ஆற்றல், அந்தச் சங்கல்பத்திற்கு உண்டு. கர்மத்தின் குறுகிய, இறுகிய தன்மையைத் தளர்த்தி, விரிவான சுதந்திரத்தை அதனால் ஏற்படுத்த முடியும். எனவே கர்மாவோ சோதிடமோ மாற்ற முடியாத விஷயங்கள் அல்ல''ஆக, மனிதன் தன்னுடைய நலனைக் கருதியேனும் பிறருக்குத் தீங்கிழைக்காமலும் கொடுஞ்செயல்கள் செய்யாமலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.!

No comments:
Post a Comment