பசு நெய்.. பசுஞ்சாண வரட்டி
---------------------------------------
கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர் உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, ஹோம குண்டங்களில் இடப்படும் பொருட்கள், அக்னி மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த தெய்வங்களையோ, தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.
அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
பசுந...ெய்யை ஹோமத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்புகின்றன. இவை <ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியுடையவை. நரம்பு மண்டலம் வலுவடையும். டென்ஷன் குறையும்.
வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள். அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம் சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர் போட, சமைக்க என பயன்படுத்தினார்கள். இந்தச் சாம்பலை செடி, கொடிகளில் தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல் தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள். தேமல் இருந்து, அதில் பூசினால் குணமானது.
என்னதான் நவீனம் வளர்ந்தாலும், பசுவளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். சுத்தமான நெய், வரட்டி முதலானவை கிடைக்க வீட்டுக்கு வீடு ஏற்பாடு செய்ய வேண்டும். பசுக்களை தெருக்களில் அலைய விடக்கூடாது. பசு வளர்ப்புக்கென இடம் ஒதுக்க வேண்டும். அருகிலேயே மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் புல் வளர்க்க வேண்டும். பசுக்களைப் பாதுகாத்தால், ஆன்மிக ரீதியாக புண்ணியம். அறிவியல் ரீதியாக ஆரோக்கியம்.
சொல்றதை சொல்லியாச்சு! இனிமேல் உங்கள் பாடு!

No comments:
Post a Comment