Monday, January 20, 2014

----சுவாமி விவேகானந்தர்

செயற்கரிய செயல்களை செய்பவன் தனக்கென எந்த உரிமையும் கேட்பதில்லை. சோம்பேறியும், உதவாக்கரையும் அவ்வாறே கேட்கிறான் .

----சுவாமி விவேகானந்தர்



கை ஒன்றுக்கு அழகு உண்டாவது ஆபரணங்களை அணிவதால் அல்ல!
ஆபரணங்கள் பூட்டி யாருடைய கையையும் அலங்கரித்துவிடலாம்.

உண்மையில் அடுத்தவருக்கு உதவும் பொழுதே
அந்த கை அழகுடையதாகிறது!



உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது
.
--சுவாமி விவேகானந்தா







மாட்டு வண்டிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்..... ஒரு கற்றை வைக்கோலை மாடுகளின் கண்களுக்குமுன் அவற்றின் வாய்க்கு எட்டாத அளவில் தொங்கவிட்ருப்பார்கள். மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன முயன்றுகொண்டே நடக்கும், ஆனால் அவை எட்டாது. நமக்குப் பிறரால் கிடைக்கும் உதவியும் இதுபோன்றதுதான். பாதுகாப்பு, வலிமை, அறிவு, இன்பம் இவையெல்லாம் வெளியிருந்து கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்; என்றுமே எதிர்பார்க்கிறோம். ஆனால் அது கிடைப்பதில்லை. ஒரு உதவியும் ஒருபோதும் வெளியிலிருந்து வருவதில்லை.

-----சுவாமி விவேகானந்தர்.....





சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவ...ே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.






ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.

----சுவாமி விவேகானந்தர் ....







காந்தி கூறியது :

சுவாமி விவேகானந்தர் பேசியவற்றையும், எழுதியவற்றையும் நான் ஆழ்ந்து படித்தேன். அதன் பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்கு வளர்ந்துவிட்டது. இளைஜர்களே! அவரது நூல்களை படியுங்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்





நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்

----சுவாமி விவேகானந்தர்





ஒரு தலைவன் என்பவன் தன்னுடைய தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் ஓர் இலட்சயதிற்காக நீ உன் உயிரையும் அர்பனிக்கக் கூடியவனாக இருந்தால் தான்; நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.ஆனால் நாம் அனிவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்யமாக முடிந்து போய்விடுகிறது. நாம் சொல்வதை ஒருவரும் கேட்பதில்லை.. முதலில் கீழ்படிவதற்குக் கற்றுகொள்; கட்டளையிடும் பதவி தானாக வரும்.

----சுவாமி விவேகானந்தர் .....







ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

----சுவாமி விவேகானந்தர் ....







கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

----சுவாமி விவேகானந்தர் .......







பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

--சுவாமி விவேகானந்தா .....







தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

--சுவாமி விவேகானந்தா ....





ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

--சுவாமி விவேகானந்தா ....








உருகிய உள்ளத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி , மக்கள் ,பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமா கண்ணிர் உகுக்கிறார்கள் , அனால் இறைவன் மட்டுமே வேண்டும் என்று கதறி அழுபவர் யார் ?

-- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

'பத்தும் புகுந்து பிறந...்து வளர்ந்து
பட்டாடைசுற்றி முத்தும் பவளமும்
பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்
சாம்பிணங்கள் கத்துங் கணக்கென ?
காண் கயிலாபுரிக் காளத்தியே !"

---பட்டினத்தார் ...













No comments:

Post a Comment