Saturday, January 25, 2014

மிளகாயை விரும்பும் அம்பாள்!

மிளகாயை விரும்பும் அம்பாள்!


அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் பிரத்யங்கிரா தேவிக்குரிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்க முகத்துடன், கரிய உடலும் 18 கைகளில்... சூலம், டமருகம், பாசம் முதலான ஆயுதம் தாங்கி இவள், பயம் போக்குவதோடு, மங்களத்தை அருள்கிறாள். அழகைக் கண்டு மகிழ்வதும், அழகற்றதைக் கண்டு வெறுப்பதும் உலக இயல்பு. ஆனால், அழகும், கோர வடிவும் கலந்தவளாக இவள் இருக்க காரணம், விருப்பு, வெறுப்பை சமமாக ஏற்கும் மனநிலை வேண்டும் என்பதால் தான். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள "ஸகஸ்ராக்ஷி என்னும் பெயர் இவளைக் குறிக்கும். "ஆயிரம் கண்ணுடையாள் என்பது இதன் பொருள். பிரபஞ்சம் முழுவதையும் இவள் கண்காணிப்பதால் இப்பெயர் பெற்றாள். உக்ரமான இவளுக்கு, காரமான மிளகாய் விருப்பமானது என்பதால் அமாவாசை யாகத்தில் சிவப்பு மிளகாய் சேர்க்கப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் பாண்டவர்கள் வழிபட்ட பிரத்யங்கிராவுக்கு கோயில் உள்ளது

No comments:

Post a Comment