சால்வை அணிவிப்பது ஏன்;
--------------------------------------
கடையெழு வள்ளல்களுள் முக்கியமானவர் பேகன்.இவர் பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலை...யின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும்.
மாரி(மழை) காலமாகிய ஒருநாள் தன் ரதத்தில் மலையை சுற்றி பார்க்கிறார்.சிறிய தூறலுடன் சாரல் மழை குளிருடன் பெய்கிறது.அபோழுது மயில் தன் தோகையை விரித்து அகவியது.இதை பார்த்த பேகன் மயில் குளிரால் அகவுகிறது என எண்ணி தன் மீது போர்த்திருந்த போர்வையை(சால்வை) மயிலுக்கு போர்த்துகிறார்.
அவரின் இந்த தன்னலமற்ற அருள் உணர்ச்சி வள்ளல் என அனைவரையும் அழைக்கவைத்தது.அந்த காலத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்று மேல் சட்டை அணியாமல் இருக்கும் சான்றோர்களுக்கும்,பெரியவர்களுக்கும்,சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் புரவலர்கள் சால்வை அணிவித்து கௌரவபடுத்தினார்கள்.இதுவே வழி வழியாக நடைமுறைபழக்கமாக தொடர்ந்துகொண்டியிருக்கிறது.
இப்பொழுது சால்வை அணிவிப்பது மற்றவர்களை அங்கிகரிக்க பயன்படுத்தபடுகிறது.பெரும்பாலும் பட்டு சால்வைகள் போர்த்தப்படுகிறது இதனால் எந்த பயனும் இல்லை.அதை மற்றவருக்கு எந்த சந்தர்ப்பதிலாவது போர்த்ததான் பயன்படுகிறது.எனக்கு சால்வை போர்த்தும்பொழுது தேங்காய் பூ துண்டை போர்த்தினாலும் சந்தோசமாக இருக்கும்.அது எல்லாவற்றிற்கும் பயன்படும்.
என்னை பொருத்தவரை சால்வை அணிவிப்பதை விட நல்ல புத்தகங்களை பரிசளிக்கலாம்.

No comments:
Post a Comment