ஞானத்தின் ரகசியம்.
---------------------------
சல சலத்து ஓடும் ஆற்றின் கரையில் ஜென்துறவி ஒருவர் மவுனமாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த ஒருவர் கேட்டார். "உங்களை எல்லோரும் ஞானி என்று கூறுகிறார்களே? ஞானத்தின் ரகசியம் என்ன? உங்களது கொள்கை மற்றும் கோட்பாடுகளின் சாராம்சத்தை ஒரே வரியில் விளக்கிச் சொல்லுங்களேன்."
...
ஞானி இதற்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தார். தமது கேள்வியை அவர் சரியாக கவனிக்கவில்லையோ என்று எண்ணி மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார் வந்தவர்.
"உன் கேள்வியை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அதற்கான பதிலையும் நான் உனக்கு சொல்லிவிட்டேன். என் மவுனம்தான் உன் கேள்விக்கான என் பதில். மவுனமாகத் கழிந்த அந்த வினாடிகள் என் பதிலை உனக்குக் கூறியிருக்குமே?" என்றார் ஞானி.
"புதிரான தத்துவங்களை எல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால்அதை நான் ஏற்கமாட்டேன். தெளிவாக ஒரே வார்த்தையில் எனக்கு பதில் கூறுங்கள்." என்றார் வந்த நபர்.
ஞானி ஆற்று மணலில் தமது விரலால் தியானம் என்று எழுதினார்.
"நீர் ஞானியுமல்ல. மேதையுமல்ல. நீர் ஒரு பைத்தியம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது."
"நான் ஏற்கனவே தவறிழைத்து விட்டேன்" என்ற படி தியானம் என்று எழுதப்பட்ட எழுத்துக்களை அழித்துவிட்டு என் முதலாவது பதிலை மட்டும் வைத்துக்கொள் என்றார்.
ஞானத்தைப்பற்றிய ரகசியத்தை சிலஞானியர்கள் விளக்க முயன்று இருக்கிறார்கள். அதை சிலர் ஏற்றனர், சிலர் மறுத்தனர். ஆனல் ஜென்ஞானிகள் மட்டும் கூறாக ரகசியமாகவே வைத்து இருக்கிறார்கள். அதானால்தான் அந்த ரகசியத்திடம் மக்கள் மறாத நேசம் வைத்து இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment