Friday, March 7, 2014

தீட்ஷை பெறுவது பற்றி ஆன்மிக நூல் ஒன்று இப்படி விபரிக்கிறது:

தீட்ஷை பெறுவது பற்றி ஆன்மிக நூல் ஒன்று இப்படி விபரிக்கிறது:
ஒருவனின் பக்குவத்தைப் பார்த்துத்தான் தீக்ஷை செய்ய வேண்டுமே தவிர, இவன் நல்லவன், எனக்கு வேண்டியவன்,, உயர்ந்த பதவியில் இருப்பவன், அதிகாரம் உள்ளவன் என்ற பயத்தாலோ, இவன் பிள்ளை, உறவினன் என்றெல்லாம் பார்த்து ஆர்வத்தாலோ, இவன் பணக்காரன், நிறைய காசு-தட்சனை தருவான் என்ற அபிமானத்தாலோ தீட்ஷை செய்யக் கூடாது. மீறிச் செய்தால் என்னவாகும் தெரியுமா?
''அச்சத்தால் ஆர்வத்தால் ஆடகத்தால் மற்றமுள...
இச்சையினால் தீக்கை இயற்றின்
வீழ்வர் நிரயத்து இருவரும் வீழ்ந்து அழுங்கி
ஆழ்வாரவர் ஏறல் அரிது ஆங்கு ''

தீக்ஷை செய்த ஆசாரியனும் தீக்ஷை பெற்ற சீடனும் (இருவரும்) நரகத்தில் வீழ்வார்கள்; மீள்வது கடினம்! என்று சொல்கிறது இந்த நூல்

No comments:

Post a Comment