…உபநிஷத்துகளின் வலிமை .......
உபநிஷத்துக்கள் எப்படி ஒருவனுக்கு வலிமையைக் கொடுத்து பயத்தை போக்கும் என்பதை புரிய வைப்பதற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு நிகழ்வை சித்தரிக்கின்றார்.
"என் மனக்கண் முன்னே, பேரரசர் அலெக்ஸ்சாண்டர் , சிந்து நதிக்கரையில் நின்று கொண்டு, அங்கே காட்டில் வசித்துக் கொண்டிருக்கும் நமது சந்நியாசி ஒருவருடன் உரையாடுகின்ற சித்திரம் விரிகிறது. ஒரு கற்பாறையின் மீது அமர்ந்து கொண்டு, சந்நியாசியின் பேரறிவைக் கண்டு வியந்து, பொன் ஆபரணங்களைக் காட்டி கிரீஸ் நாட்டிற்கு வந்து விடுங்கள் உங்களுக்கு பதவி தருகிறேன் என்று ஆசையூட்டுகிறார். அந்தத் துறவியோ பொன்னையும் மணியையும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து, பின் சிரித்தபடி, எதுவும் வேண்டாம் என்று நிராகரித்து விடுகிறார். பேரரசர் அலெக்ஸ்சாண்டர் கோபமுற்று எழுந்து, ஒரு பேரரசனுக்கே உரிய அதிகாரத்துடன், "நீங்கள் என்னுடன் வரவில்லை என்றால், உங்களை இப்போதே ... இங்கேயே கொன்று விடுவேன்" என்கிறார். அந்தத் துறவி குபீர் என்று சிரித்து, "இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை இனி உன் வாழ்க்கையில் பேசாதே..... என்னை யார் கொல்ல முடியும்? நீ ... என்னைக் கொன்று விடுவாயா? வியாபார உலகத்தின் பேரரசரான நீ என்னைக் கொன்று விடுவாயா? முடியாது, நா பிறவாத ....அழியாத ஆத்மா ... நான் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. நான் எல்லைகள் அற்றவன். எங்கும் நிறைந்திருப்பவன். அனைத்தும் அறிந்தவன் நீ .... என்னைக் கொண்டுவிடுவாய? சிறு பிள்ளை போல் பேசுகிறாய் என்றார். இதுதான் வலிமை.....

No comments:
Post a Comment