Saturday, June 14, 2014

அஷ்ட லிங்க தரிசனம் தரும் பலன்கள்

திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து இறை தரிசனம் செய்வார்கள். மலையைச் சுற்றி கிரிவலம் வரும்போது மலை வலப்பகுதியில் அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்யலாம்.

* இந்திர லிங்கம் – இந்திரன் வழிபட்டது
* அக்னி லிங்கம் – ருத்திரர்கள் வழிபட்டது
* எம லிங்கம் – எமதர்மன் வழிபட்டது

* நிருதி லிங்கம் – நிருதி வழிபாடு செய்தது
* வருண லிங்கம் – வருணன் வழிபட்டது
* வாயு லிங்கம் – வாயு வழிபட்டது

* குபேர லிங்கம் – குபேரன் வழிபாடு செய்தது
* ஈசான்யலிங்கம் – நந்தி வழிபட்டது

No comments:

Post a Comment