Thursday, July 9, 2015

நம்உடலும் -சிதம்பரம் கோவிலும்

நம்உடலும் -சிதம்பரம் கோவிலும்
நம் இருதயத்தின் இயக்கமும் அமைப்பும் மிக வியக்கதக்கதாக இருக்கிறது
இருதயம்ஓய்வு ஒழிவு இன்றி இடைவிடாதுஇயங்கி துடித்து கொண்டே இருக்கிறது.இருதயத்தின் துடிப்பினால்தான் இரத்தமானது உடம்பு முழுவதும் சென்று பரவிக் கொண்டும் உடனுக்குடன் மாசு நீங்கி துய்மையுற்றுக் கொண்டும் வருகிறது.ஒவ்வொறு நிமிடமும் 1200 மைல் நீளமுடையை நாளங்களின் வழியாக உடலில் இரத்தம் பரவவும் மீண்டும் தன்பால் திரும்பி வந்து சேரவும் ஏற்றபடி,இருதயம் சிறிதும் அயராமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.24 மணி நேரத்தில் 10,000 லிட்டர் அளவு இரத்தத்தைத் தன்னிடமிருந்து வெளியேற்றியும் உள்ளிழுத்தும் ஒருபெரும் இயக்கநிலையம் (pumping station) போல பணிபுரிந்து வருகின்றது.
வியப்பை விளைவிக்கும் இத்தகைய இருதயத்தை சிதம்பரம் எனவும் அங்குள்ள ஒருபெருந் தெய்வ ஆற்றலையே கூத்தபிரான் எனவும் ;அதன் இடைவிடாத துடிப்பையே நடனம் எனவும் கருதியுணர்ந்து பெரியோர்கள் போற்றியுள்ளனர்
இதையே திருவள்ளூவர்
"மலர்மிசை ஏகினான் மாணடி- சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
என்னும் திருக்குறளில் "மலர்மிசை ஏகினான்" என்றது
திரு ந.ரா.முருகவேள் அவர்களின் 'நடராஐ வடிவம் 'என்ற கட்டுரையில் இருந்து

No comments:

Post a Comment