Thursday, July 16, 2015

வாலி சுக்ரீவன் கதை

்இராமாயணத்தில் ஒரு காட்சி.வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள்.வாலி கொடியவன். சுக்ரீவன் நல்லவன்.வாலி சுக்ரீவனுடைய நாட்டையும்மட்டுமல்ல அவனதுமனைவியையும் அபகரித்துக்கொண்டான்.சுக்ரீவனால் அவனதுஅண்ணனை எதிர்த்து ஒன்றும்செய்யமுடியாமல் திகைத்துக்கொண்டிருந்தான்.ஸ்ரீ ராமன் காட்டில்வந்துகொண்டிருந்தபோது சுக்ரீவன் ஸ்ரீராமனைச் சந்தித்தான். ஸ்ரீ ராமா அபயம்என்று நமஸ்கரித்தான். ஸ்ரீ ராமனிடம் தன்வரலாற்றைச் சொல்லி தான் இழந்ததுஅனைத்தையும் வாலியிடமிருந்துமீட்டுத்தரும்படி வேண்டினான். ஸ்ரீ ராமனும்அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தான்.வாலி மிகுந்த பலசாலி. ஒரே பாணத்தில்ஏழு மரங்களை யாரால்துளைக்கமுடியுமோஅவர்களால் மட்டுமேவாலியிடம் சண்டை போடமுடியும். நீங்கள்அப்படிச் செய்து காட்டுவீர்களா என்றுசுக்ரீவன் ஸ்ரீ ராமனைக் கேட்டான். ஸ்ரீராமனும் ஒரே பாணத்தைவிட்டு ஏழுமரங்களைத் துளைத்துக்காட்டினார்.சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான்.நீ இப்பொழுது வாலியிடம் சண்டை போடு.தக்க சமயத்தில் நான் உனக்குத் துணையாகவருவேன் என்று ஸ்ரீ ராமன் சொன்னான்.இந்த வார்த்தையை நம்பி சுக்ரீவனும்வாலியைச் சண்டைக்கு அழைத்தான்.வாலியும் சண்டைக்கு வந்தான். இருவரும்சண்டை இட்டார்கள். வாலி சுக்ரீவனைநையப் புடைத்து அனுப்பினான்.பலமாகஅடிபட்டு வந்த சுர்க்ரீவன் ஸ்ரீராமா உன்னைநம்பி அல்லவா நான் அவனிடம் சண்டைக்குச்சென்றேன். இப்படிக் கைவிட்டு விட்டாயே.இது நியாயமா என்று அழுதான். சுக்ரீவநீயும் வாலியும் ஒரே மாதிரி இருந்ததால்யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால்அடையாளம் காண முடியவில்லை. நான்அவன் என்று உன்னைத் தாக்கிவிட்டால் என்னசெய்வது என்றுதான் பேசாமல் இருந்துவிட்டேன். இப்பொழுது நான் ஒரு மாலைதருகிறேன் ,இதைக் கழுத்தில்அணிந்துகொண்டு நீ அவனிடம்சண்டைக்குப் போ. நான் நிச்சயம் உன்னைகாப்பாற்றுவேன் என்று ஸ்ரீராமன் சொல்லிசுக்ரீவனை மீண்டும் வாலியிடம்சண்டைக்கு அனுப்பினான். வாலியிடம்சண்டை போடுவதாய் இருந்தால் அவன்எதிரில் நின்று சண்டைபோடக்கூடாது.அவன் எதிரில் யார்வருகிறார்களோ அவர்கள் பலத்தில்பாதியை வாலி எடுத்துக் கொள்வான்என்று சுக்ரீவன் சொல்லிவிட்டுச்சண்டைக்குப் போனான்.சுக்ரீவன்சொன்னது போல ஸ்ரீ ராமனும் வாலியின்பின்னால் மறைந்து நின்று வாலியின்மீது அம்பு தொடுத்தான். வாலி ஸ்ரீராமனைப் பார்த்து ஸ்ரீ ராமா உனக்கும்எனக்கும் எந்தப் பகையும் இல்லை. நீஎன்னைக் கொல்வது தர்மத்திற்குப்புறம்பானது. எதிரில் நின்று சண்டைபோடுவதே வீரனுக்கு அழகு. நீயோகோழைபோல் மறைந்து நின்று என்மீதுஅம்பு தொடுத்து என்னை சாகஅடிக்கிறாய். வானத்து சந்திரனில் களங்கம்இருப்பதுபோல் காலம் உள்ளளவும் நீ செய்தஇந்தக் களங்கமான செயல் உன் பெயரோடுசேர்த்து இனி உன்னை எல்லோரும்ராமச்சந்திரன் என்று அழைக் கட்டும் .நீராமனல்ல ராமச்சந்திரன் என்று சபித்தான்.ராமாயணத்தில் இந்தச் சம்பவம் என்எழுதப்பட்டது? இதன்மூலம் நமக்கு என்னஅறிவுரை வழங்குகிறார்கள்?வாலியும் சுக்ரீவனும்குரங்குகள்.குரங்கு என்பது நமதுமனம்தான்.வாலி கெட்ட மனம். சுக்ரீவன் நல்லமனம். நல்ல மனதைவிட கெட்ட மனமேஆதிக்கம் செய்யும்.இதை உணர்த்தவே வாலி சுக்ரீவனுடையநாடு முதல் அனைத்தையும்பறித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஸ்ரீராமன் என்பது அறிவு. நல்ல மனம் அறிவின்துணையை நாடியது. ஏழு மரங்களை ஒரேபாணத்தால் யாரால் துளைக்க முடியுமோஅவர்கள்தான் வாலியை வெல்ல முடியும்என்றது என்ன வென்றால் , காமம், குரோதம்,லோபம் மோகம் , மதம், மாச்சர்யம்,கொலைஎன்ற ஏழையும் வைராக்கியம் என்ற ஒரேபாணத்தால் யாரால் வெல்ல முடியுமோஅவர்களால்தான் கெட்ட மனதைவெல்லமுடியும் என்பதே. நமக்குள் நல்லமனம் எது ,கெட்ட மனம் எது என்று நம்முடையஅறிவிற்குப் புரியாமல் இருப்பதே ஸ்ரீராமனுக்கு முதலில் வாலி யார் சுக்ரீவன்யார் என்று புரியாமல்போனது.வாலியின் எதிரில் நின்றுசண்டை போடக்கூடாது என்றது ஏன்? கெட்டமனதை நேர் நின்று அடக்க முடியாது,உதாரணத்திற்கு ஒன்று. சிகரெட் பிடிக்கும்பழக்கம் உள்ள ஒருவன் அதை விடவேண்டும்என்றால் சிகரெட்டை தொடக்கூடாதுஎன்று அதையே நினைத்துக்கொண்டிருந்தால் இன்றுமட்டும் ஒன்றேஒன்று பிடிக்கலாம்.நாளையிலிருந்துகட்டாயம் விட்டுவிடலாம் என்றுநினைப்பானாம். அதை விடவேண்டும்என்றால் அந்த நேரத்தில் கோவிலுக்குள்போய்விட்டால் அங்கே சிகரெட்பிடிக்கமுடியாது.அந்தத் தீய பழக்கத்தைமறைமுகமாகத்தான்வெல்லமுடியும்.கெட்ட மனதை எப்படியாவது வென்றேதீரவேண்டும் என்பதே வாலி சுக்ரீவன் கதை. 

No comments:

Post a Comment