Thursday, July 9, 2015

வினை பற்றின விளக்கம்

வினை பற்றின விளக்கம்
_______________________________
உலகில் உயிர்களிடம் பல எற்றதாழ்வுகள் ஏன் காணப்படுகிறது?
கேவலநிலையில் இறைவனின் தனது பெருங்கருணையினால் எல்லா உயிர்களுக்கும் ஒரு சூக்குமதேகம் தரப்படும் .
இந்த உடம்பு அல்லது தேகம் எல்லா உயிர்களுக்கும் ஒரேமாதிரியாக தான் கொடுக்கபடும்.இந்த தேகம் முக்தி அடையும் வரை எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த சூக்கும தேகம் ஒன்றாகவே உயிரோடு இருந்து
உயிர் முக்தி அடையும் போது நீங்கும். இதை ஆன்றோர்கள் குருடனுக்கு கோல் கொடுத்தது போல் என்று கூறுவார்கள்
இப்படி ஒரே மாதிரி சூக்கும தேகத்தை எல்லா உயிர்களுக்கும் இறைவன் அழிப்பதால் இறைவன் சமநோக்குடையவன் என்று தெரியவருகிறது
இறைவன் பேர்அருளால் ஓரே மாதிரியான சூக்கும உடம்பை பெற்ற உயிர்கள் கன்மமலத்தால் எற்றதாழ்வு அடைகின்றன.
கன்மம் எனபது முயற்சியாகும் .
இங்கு ஒரு சந்தேகம்
உடல் இருந்தால் தான் முயற்ச்சியாகிய கன்மம் செய்யமுடியும் உடலே இல்லாத உயிரால் எப்படி முயற்சி செய்ய முடியும்
இது இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவர்.உயர் எபபோதும் விருப்பு வெறுப்பு உடையது
இறைவனிடம் இல்லாத இந்த விருப்பு வெறுப்பு உயிர்களுக்கு இருப்பதற்க்கு உயிரோடு கூடவே இருக்கின்ற ஆணவமலமாகிய அறியாமையே.உயிரோடு பற்றி இருக்கின்ற ஆணவமலத்தால் உயிர் விருப்பு வெறுப்பு என்ற சூழலில் அகப்பட்டுகொள்கிறது
இந்த விருப்பு வெறுப்பு தான் மூல கன்மம் எனப்படுகிறது.
இங்கு நாம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் அதாவது கேவலநிலையில் உள்ள உயிரின் விருப்புக்கும் சகலநிலையில் உள்ள உயிரின் விருப்பு வெறுப்புக்கும் வேறுபாடு உண்டு.
உதாரணம்:பசிக்கு குழந்தையும் அழும் ,வயதான கிழவரும் அழுவார்
குழந்தை பசி தெரியாமல் அழும்
கிழவர் பசி அறிந்தே அழுவார்
குழந்தையின் பசியை அறிந்து அதற்கு தேவயான உணவை தாய் குடுப்பது போல் இறைவன் மூலகன்மமாகிய உயிரின் விருப்பு வெறுப்புக்கு எற்ப்ப தூல உடம்பு இறைவனால் கொடுக்கபடுகிறது.
கிழவர் பசி அறிந்தே அழுகிறார் அதனால் பசிக்கேற்ற உணவை அவரே தேடுகிறார்
அதே போல் தூல உடம்பு பெற்ற உயிரானது மன-வாக்கு-காயங்களால் வினைகள்
பலசெய்து பல பிறவிகளை பெறுகிறது.
உயிர் செய்யும் முயர்சி-கன்மமலம்
இறைவன் கருனையினால் உயிர்களுக்கு
கிடைத்தது -மாயாமலம்
இந்த மலங்கள் ஆணவமலம் நீங்கும் போது தான் உயிரை விட்டு நீங்கும்
ஆணவமலத்தால் கட்டபட்ட உயிர் இறைவன்
கருனையினால் சூக்கமஉடல் கிடைத்த உடன் ஆணவ மலம் சிறிது நீங்கும்
அதன் பின எற்கனேவே சொன்னபடி உயிரின் மூலகன்மத்திற்குஎற்ப ,உயரின் அறிவு,இச்சை,செயல்கள் செயல்பட தொடங்கும் .அவ்வாறு செயல்படதுடங்கியவுடன் உயிர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டாகும் .அந்த விருப்பு வெறுப்புகள் தான்
நல்வினை ,தீவினை எனப்படும்.அந்த வினைனகளுக்கு எற்ப்ப இறைவனால் தூலஉடல் கொடுக்கபடும்.
தூலஉடலை கருவியாக கொண்டு சூக்கும உடலின் எண்ணபடி உயிர் செயல்பட்டு நல்வினை ,தீவினையை ஈட்டும்.
நல்வினையினால் இன்பமும் ,தீவினையினால் துன்பமும் அனுபவிக்கும்
அனுபவித்தபின் பாவம் புண்ணியம் என்று சேர்ந்து பிறவிக்கு வித்தாகும்.
நல்வினை,தீவினை -மனம்- வாக்கு-காயத்தால் ( உடலால்) செயல்படும்
மனம்,வாக்கு,காயத்தால்
நல்வினை ,தீவினை நடைபெறும்
மனதால் செயயபடும் நல்வினை
அன்பு
அருள்
பொறுமை
நடுநிலமை
மனதால் செயயபடும் தீவினை
ஆசை
பொறாமை
தீய எண்ணங்கள்
வாக்கால் செயயபடும் நல்வினை செயயபடும் நல்வினை
உண்மை பேசுதல்
பிறறை பாராட்டுதல்
இனிய சொற்கள் பேசுதல்
வாக்கால் செயயபடும் தீவினை
பொய் பேசுதல்
பிறறைகுறை சொல்லுதல்
கடுமையாக பேசுதல்
பயன்இல்லாத பேச்சு பேசுதல்
உடலால் செயயபடும் நல்வினை
பிறருக்கு உதவுதல்
மாமிசம் சாப்பிடாமல் இருப்பது
பறருக்கு உடலால் துன்பம செய்யாமல் இருப்பது
உடலால் செயயபடும் தீவினை
திருடுதல்
மது அருந்துதல்
புகை பிடித்தல்
காமம்
கொலை
மாமிசம் சாப்பிடுதல்
பொதுவாக வினைகள் இரண்டு வகையாக செயல்படும்
அறிந்து செய்வது
அறியாமல் செய்வது
அறிந்து செய்தாலும் அறியாமல் செயதாலும் அது வினைதான்
அறியாமல் செய்த வினைகளுக்கு பலன் குறைவாக இருக்கலாம்
அறிந்தே செய்யும் வினைகளுக்கு பலன் அதிகம்
உததாரனம்:
விஷம் இரருக்கிறது அதை நாம் விஷம் என தெரிந்து சாப்பிட்டாலும் தெரியாமல் சாப்பிட்டாலும் விஷம் அதன் வேலையை செய்யத்தான் செய்யும.
தெரிந்து உண்டால் மரணம்
தெரியாமல் உண்டால் காப்பாற்றபடுவார்கள்கள்
ஆனால்வேதனை (side effects) ஆயுள்முழுவதும் இருக்கும்
அறியாது செய்த வினைகளுக்கு பிராயாசித்தம் உண்டு
அறிந்தே செய்யும் வினைகளுக்கு பிராயாசித்தம் கிடையாது.
பிறவி எடுத்துதான் கழிக்க வேண்டும்.
தூலஉடலால் செய்யபடும் போது வினை -ஆகாமியம்
சூக்கஉடலில் இருக்கும் போது வினை-சஞ்சதம்
பிறவி எடுத்து இன்ப துன்பத்தை அணுபவிக்கும் போது வினை-பிராரப்தம்
என்று பெயர்கள் பெரும்
நமக்கு வரும் இன்ப துன்பங்களுக்கு காரணம் முயற்சியும,் முயற்சி
இல்லாமையும் என்று நாம் எண்னுகிறோம்.
ஆனால் கஷ்டபட்டு உழைப்பவர் சில சமயம் துன்பம் அணுபவிப்பதையயும்
உழைப்பே இல்லாதவர்கள் இன்பமாக இருப்பதையும் பார்கிறோம்.
அது ,ஊழ் படி தான் பிறவி அமையும் என்பது தெளிவாகும்
ஆகாமிய வினைகள் சேரந்து
சஞ்சிதவினையில் பாதுகாக்கபடுகிறது அதில் பக்குவபட்ட வினைகள்பிராப்த வினைகளாக மாறி அவற்றிற்கேற்ற உடல் இறைவனால் அந்த உயிர்க்கு கொடுக்கபடுகிறது
புதிதாக கிடைக்கபெற்ற உடலால் புதிய ஆகாமிய வினைகளை உயர் மீன்டும செய்யுமானால் மீன்டும் அவை சஞ்சித வினையில் சேர்க்கபட்டு பாதுகாக்கபடும் ஆக பிறப்பால் வினையும் வினையால் பிறப்பும் தொடரும்.
இதில் முக்கியமான விஷயம்
வினைகள் பிராரப்தமாக வரும்போது வரிசைபடிவராது ஒரு பிறவியில் செய்த வினை அடுத்த பிறவியில் வராது வினைகளின் தன்மைக்கேற்ப்ப முன் பின் வரும்
கீரை விதைத்தால் உடனே பலன் தென்னை நட்டால் பலன் பெற பல வருடங்கள் ஆவதுபோல்
சில வினைகளுக்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்.
வினைகள் தானே சென்று உயிரை அடையமுடியாது
ஏன்என்றால் உயிர்கள் சிற்றறிவு உடையவை அவை தானாகஎதுவும் அறியாது அறிவித்தால் மட்டுமே அறியும் தன்மை உடையது
இறைவன் தான் வினைக்கு தகுந்தபடி ஒரு பிறவியை கொடுப்பான்.
இப்போது வினைகள் போக என்ன வழி என பார்ப்போம்:
உயிரானது பல்வேறு நல்வினை,தீவினைகளை செய்து கொண்டே இருக்கும்
இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால்
நல்வினையாயினும் அகங்காரத்தால் செய்யபடுமாயின் அது தீவினையாக மாறிவிடும்
வினைகள் மனம்-வாக்கு -காயமங்களினால் செய்யபடுகின்றன என்பதை
நாம் அறிவோம் ஆனாலும்
ஒன்றால் செய்யபட்ட வினையை மற்றொன்றை வைத்து நீக்க முடியாது
அதாவது ஒரவரை அடித்துவிட்டு பின்பு அவருக்கு அறுசுவை உணவு வாங்கிகொடுததால் அடத்த பாவம் நீங்கிவிடாது
அடித்தது பாவம்
உணவு அளித்தது புண்னியம்
புண்ணியம் செய்தால் பாவத்தை போக்கிவிடலாம் என்ற இப்போதய மக்கள் கருத்து தவறானது.
இரண்டையும் தனித்தனியே தான அனுபவித்து தான் போக்க முடியும்.
நன்றி மறப்பது என்ற கொடிய வினையை தவிர மற்ற வினைகளுக்கு பிராயாசித்தம் உண்டு.
மிகவவும் சிறமம்மில்லாத பிரயாசித்தம் எந்த நல்ல காரியமோ நல்ல விஷயமோ இறைவன் சிவபெருமானை முன்நிருத்தி செய்வது இது நாம் செய்யும் செயல் பசுபுண்ணியமாக சஞ்சிதத்தில் சேராமல் பதிபுண்ணியமாக மாறிவிடும்
என்ணிடம் ஒருநாள் ஒரு செல்வந்தர் "நான் வருடாவருடம் பள்ளி குழந்தைகளுக்கு பாடபுத்தகம் மற்றும் உபகரனங்கள் இலவசமாக குடுத்துகொண்டு இருக்கிறேன்" என்று கூறியபோது நான் நீங்கள் செய்யும் சேவை பசுபுண்ணியம் தான் அதை நீங்கள் பதி (சிவ)புண்ணியமாக மாற்றவேண்டும் இல்லையேல் வாங்கியவர் கொடுத்தவர் இருவருக்கும் வினை சேர்ந்துவிடும் என்று கூறினேன் ,அவர் அதற்க்கு "நான் என்ன செய்யவேண்டும் எனறு கேட்க்க "நான் நீங்கள் அந்த குழந்தைகளை தேவாரத்தில் ஒரு பாடல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க சொல்லுங்கள் அது இருவருக்குமே பதிபுண்ணியமாக மாறிவிடும் எனறு கூறினேன் .
நாமும் தர்மம் போடும் போதும சிவ சிவ எனறு சொல்லியே போடவேண்டும்.
இவ்வாறு செய்வதால் கன்மவினை வழுஇழந்து விடுகிறது இவ்வாறு வழுஇழந்த கன்மம் அனுபவத்திற்கு வராமல் நமக்கு பிறவி வராமல் இருக்கும் .
திருச்சிற்றம்பலம்
முற்றும்
குறிப்பு:
இந்த ஆறு பகுதியும் சிவகிருபையினால் அடியேன் படிததிலிருந்தும்,
கேட்டதிலிருந்தும் தொகுத்து எழுதியது பிழை இருப்பின் திருத்துக.
நன்றி

3 comments:

  1. ஐயா இது உங்கள் கட்டுரையா?

    ReplyDelete
  2. ஐயா இது உங்கள் கட்டுரையா?

    ReplyDelete
  3. ஐயா இது நான் முகநூலில் பதிவிட்டது

    ReplyDelete