Sunday, July 19, 2015

தர்ப்பயை பற்றி தெரிந்துக்கொள்ளுவோமே

தர்ப்பத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுவோமே - அதில் உள்ள தேவதாம்ஸம், மகத்துவம், வேதத்தில் தர்ப்பம், உபயோகம், பவித்ரமும் அதன் ரூபமும், கூர்ச்சம், நியமங்கள், மற்ற உபயோகங்கள் போன்ற பல விஷயங்கள்
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். இதில் சந்தேகமே வேண்டாம். பாவங்களைப் போக்கக் கூடியது தர்ப்பம். நம்மைச் சுத்தமாக்கும் சக்தி இதற்குண்டு.
குச ப்ரசம்ஸை
தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன் ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர்வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.
தேவதாம்ஸம்
தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். ஹாரீதர், மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வ்யாஸர், சாதாதபர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பரத்வாஜர், சாலஸ்காயனர், யாக்ஞவல்க்யர், ஆஸ்வலாயனர், ஆபஸ்தம்பர் போன்ற மகரிஷிகள் தர்ப்பத்தின் விசேஷ தன்மை பற்றி அருள் செய்துள்ளனர். கர்மானுஷ்டானங்களிலும், தேவ, பித்ரு கார்யங்களிலும் தர்ப்பங்களை உபயோகப்படுத்தும் வழிகளில் ஓரிரு வித்யாசங்கள் இவர்களிடையே தென்பட்டாலும், பொதுவாக தர்ப்பத்தின் மகிமையை இம்மகான்கள் அருள் பாலித்துள்ள விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. இது நமது பாக்யமே.
வேதத்தில் தர்ப்பம்
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.
மேலும் ஸாரசமுச்சம், ஸம்ருதிஸாரம், ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி சந்தாமணி, ஸ்ம்ருதி பாஸ்கரம், விஷ்ணுபுராணம் போன்ற கிரந்தங்களிலும் தர்ப்பத்தின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.
தர்ப்பத்தைச் சுற்றி நிறைய புராண சம்பவங்களும் உண்டு.
மஹாபாரதம் (கருடன் & அம்ருதம் & நாகர்கள் சம்பவம்), ராமாயணம் (இந்த்ரபுத்ரன் ஜயந்தன் & காகம் & சீதாதேவி சம்பம்), கூர்மாவதாரம் (ஸமுத்ர மந்தன்), வானமாவதாரம் (மஹாபலியின் தான சம்பவம்) போன்றவைகள் சில உதாரணங்களாகும். புத்த சம்பிரதாயத்தில் தர்ப்ப அம்சம் உண்டு.
பவித்ரம்
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அணிந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே ப்ராஹ்மணன் எப்பொழுதுமே பவித்ரபாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால்தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர்.
மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம் தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம் இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு நாமே பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்
கர்மாவின் பெயர் ஸங்க்யை
ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்
ப்ரேத கார்யங்கள் 1 புல்
பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.
நியமங்கள்
பவித்ரம் அணிவதற்கு முன்பு ஆசமனம் சொல்லியுள்ளது. அதே மாதிரி கர்மா முடிவில் பவித்ர முடிச்சை அவிழ்த்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ஒன்றை கவனித்தல் நல்லது. முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பு பவித்ரத்தைக் காதில் வைத்துக் கொண்டு ஓர் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு பவித்ர கிரந்தியை அவிழ்த்துவிட்டு அதை கீழே «£ட்ட பிறகு மீண்டும் ஓர் ஆசமனம் செய்ய வேண்டும்.
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. அது மாத்திரம் அல்ல. எந்தத் தர்ப்பங்களை விஸர்ஜனம் செய்தாலும் (கையில் இடுக்கிக் கொண்டிருந்த தர்ப்பங்கள், பத்னியிடமிருந்து வாங்கும் தர்ப்பங்கள் முதலியவை) நிர்ருதி மூலையில்தான் போட வேண்டும். எந்தக் கர்மாவாக இருந்தாலும் இதுதான் விதி.
கையில் பவித்ரம் அணிந்திருக்கும் போது (கர்மா நடுவில்) நீர் அருந்த நேரிட்டால், பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு ஜலபாணம் செய்ய வேண்டும். பிறகு காதிலிருக்கும் பவிரத்தைத் தானே கையில் தரித்துக் கொண்டு கர்மாவைத் தொடர்ந்து செய்யலாம். (பவித்ரத்தை வலகு காதில் அல்லாது வேறு இடங்களில் வைப்பதோ, மற்றவர்களிடம் கொடுத்து வைப்பதோ உசிதமல்ல)
ப்ராஹ்மணர்களின் பாதங்களை அலம்பும் போதும். பவித்ரம் வலது காதில்தான் இருக்க வேண்டும்.
மற்ற உபயோகங்கள்
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது. கால் மதிபட்ட தர்ப்பங்கள். பரிஸ்தானம் போன்றவைகளில் உபயோகப்படுத்தப்பட்ட தர்ப்பங்களை வர்ஜிக்க வேண்டும். மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது.
தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.
மகத்துவம்
குச பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார் மகரிஷி ஹாரீதார். மற்றுமொரு ரிஷி குசத்தைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ரா£யுதம் போலவும், பிராஹ்மணன் கையில் குசமுள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்க்ள வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணன் கைவிரலில் உள்ள குசங்களைப் பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.
இப்பேற்பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும். இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்யத்துவத்தை நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.

No comments:

Post a Comment