Saturday, May 7, 2011

இந்துக்கள் செய்ய வேண்டிய கிரியைகள்

இந்துக்கள் செய்ய வேண்டிய கிரியைகள்


* இருது சங்க மனம் : மனைவியின் ருது காலத்தில் கூடும்படி செய்யும் கிரியை.
* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.
* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.
* சீமந்தம் : மூன்றிடத்து வளர்ப்புள்ள பன்றிமுள்ளினால் பிரசவஸ்திரியின் தலைமயிரை வகிர்ந்து செய்யும் கிரியை.
* ஜாதகன்மம் : புத்திர உற்பத்தி காலத்தில் செய்யும் கிரியை.
* உத்தாபனம் : சுத்தமில்லாத வீட்டினின்று சுத்தமான வீட்டின் அறைக்கு குழந்தையைச் சேர்ப்பிக்கச் செய்யும் கிரியை.
* நாமகரணம் : பெயர் வைக்கும் காலத்தில் செய்யும் கிரியை.
* ரவாசம் : குழந்தையுடன் கோவிலுக்குச் செல்லும் கிரியை.
* அன்னப் பிரசாசனம் : குழந்தைக்கு உணவு புசிக்கச் செய்யும் கிரியை.
* பிண்டவர்த்தனம் : குழந்தையின் தேக வளர்ச்சியின் பொருட்டு செய்யும் கிரியை
* செளனம் : ரோமம் வளரச் செய்யும் கிரியை.
* உபநயனம் : சிவனை வணங்குவதற்கு குருமூலமாக செய்யும் கிரியை.
* காண்டோபக்கிரணம் : வேத சாஸ்திரங்களைக் கற்று அறிவதற்கு ஆரம்பிக்கும் கிரியை
* காண்ட மோசனம் : அத்தியனத்தை விடச் செய்யும் கிரியை
* சாமாவர்த்தனம் : பிரம்மசாரி நோன்பை ஒழிக்கச் செய்யும் கிரியை
* விவாகம் : இல்லற வாழ்க்கை நடத்த அக்கினி சாட்சியாக கன்னியைத் திருமணம் செய்யும் காலத்தில் செய்யும் கிரியை.
மேற்குறிப்பிட்ட கிரியைகள் எல்லாம் ஒருமனிதன் புனித பரிபூரணனாக வாழ்வதற்காகவும் இவ்வையகத்தில் வாழும் காலத்தில் அவன் பெயர் நிலைக்கவும், ஆன்மீக ஞான அறிவுடன் வாழ்ந்து வரலாறு படைக்கவும் உதவுவதாகும். இக்கலிகால விஞ்ஞான யுகத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலமென ஒரு மனிதனின் வரலாறு தொடர்கின்றது.
அர்த்தமுள்ள இந்து சமயத்தில் ஆழப் பொதிந்த பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளது- மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. அதற்கு முடியுமானவரை இந்து சமய அறநூல்களையும் ஆன்மீக போதனைகளிலும் ஆலய வழிபாடுகளிலும் மனதை செலுத்தி அவசியம் செய்யவேண்டிய கருமங்களையும் செய்து வருவோமானால் மனித நேயமுள்ள புனிதனாக ஆறறிவு படைத்த மனிதனாக வாழமுடியும்.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,பட்சம்,தமிழ்மாதம் அறிந்து,ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள்,ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும்,அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

சாதாரணமான அமாவாசையானது அனுஷம்,விசாகம்,சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை,புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும்பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும்பித்ருபூஜையானது,பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணியகாலத்தைத் தரும்.

மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால்,அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால்,அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும்.அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!

மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து,அப்போது அந்தநன்னாளில் சிரார்த்தம் செய்தால்,பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

உபநயன சடங்கு

உபநயன சடங்கு
அப்படிப்பட்ட காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள் ஆனால் சிலர் இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லக்கூடாது பிராமணர்கள் மட்டும்தான் சொல்லலாம் ஏனென்றால் சாஸ்திரங்கள் சொல்லுகின்றபடி அவர்கள்தான் துவிஞ்சன் என்கிறார்கள்சாஸ்திரங்கள் துவிஞ்சன் என்று சிலரை குறிப்பிடுகிறது.  துவிஞ்சன் என்றால் இரண்டாவது முறை பிறந்தவன் என்பது பொருளாகும். 
ஒரு மனிதன் வாழும் போதே இரண்டு முறை எப்படி பிறக்க முடியும்?
இரண்டாவது பிறப்பு என்பது உடல் சார்ந்த பிறப்பை அல்ல.  மனம் சார்ந்த பிறப்பாகும். நேற்று வரை கொடியவனாக குரூரம் மனம் படைத்தவனாக வாழ்ந்தவன்  இன்று திடீர் என வள்ளலார் போல மகாத்மா காந்தி போல மாறிவிட்டான் என்றால் என்ன அர்த்தம்?

  அவனுக்குள் இருந்த கொடுர மனப்பான்மை செத்துவிட்டதாக தானே அர்த்தம். 

இப்படி எண்ணங்களாலும் மனதாலும் புதிதாக பிறந்தவனே துவிஞ்சன் ஆவான்.இப்படிப்பட்ட துவிஞ்சன் யாரும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.

பிராமணர்கள் உபநயன சடங்கை இரண்டாவது பிறப்பு என நம்புகிறார்கள். இதனால் தாங்கள் மட்டுமே துவிஞ்சர்கள் என்கிறார்கள்.
  உபநயன சடங்கு மட்டுமே ஒருவனை இரு பிறப்பாளனாக ஆக்க முடியும் என்றால் விஸ்வகர்மாக்களும் ஆரிய வைஸ்சிய செட்டிமார்களும் உபநயனம் செய்கிறார்கள்.

  அவர்களும் காயத்ரி மந்திரத்தை ஓத பிராமணர்கள் சம்மதிப்பார்களா?
  அப்படி அவர்கள் சம்மதித்தால் காயத்ரி மந்திரத்தை பூணூல் போட்டவர்கள் மட்டுமே ஓத வேண்டும் என்பவதை ஏற்றுக் கொள்ளலாம்.
பூணூல் என்பது புறக்கருவியே தவிற அகக்கருவியல்ல மந்திரங்கள் எல்லாமே அகச் சம்மந்தப் பட்டதாகும் எனவே அகமுகமான விஷயங்களுக்கு ஒரு புறக்கருவியை மட்டும் தகுதியாக்க மாட்டார்கள் நமது முன்னோர்கள்
  இன்னொரு முக்கியமான விஷயம் காயத்ரி மந்திரத்தை உருவாக்கிய விஸ்வமித்திரர் பிறப்பால் பிராமணர் அல்ல. சுத்தமான சத்திரியர் ஆவார்.  ஒரு சத்திரியர் உருவாக்கிய ஒரு மந்திரத்தை பிராமணர்கள் உரிமை கொண்டாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.  பிராமணத்தன்மை இருப்பவனாக மந்திரத்தை ஜெபிப்பவன் கட்டாயம் இருக்க வேண்டும்
பிராமணத்தன்மை என்பது பிறப்பால் வருவது அல்ல வாழ்விலும் வாக்கிலும் உண்மை நேர்மை அன்பு கருணை போன்றவற்றை வழுவாது கொண்டவன் என்பதாகும் விஸ்வாமித்திரரும் தன்னிடமுள்ள சத்திரியத் தன்மையான மறக்குணத்தை விட்டப் பின்னேதான் காயத்திரி மந்திரத்தைக் கண்டறிந்தார்
  எனவே பிறப்பால் பிராமணனாக உள்ளவன் மட்டும் தான் காயத்ரி ஜெபிக்க வேண்டும் என்பது முரணான கருத்தாகும்.மனம் திருந்திய எவனும் துவிஞ்சனாகவே கருதப்படுவார்கள்.  துவிஞ்சன் தான் காயத்ரி ஜபிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.ஆகவே மனம் திருந்திய யாரும் காயத்ரி சொல்வது சாஸ்திர விரோதம் ஆகாது.இனி அடுத்த விஷயத்திற்கு வருவோம்.ஆண்கள் மட்டும் தான் கொடுமைகாரர்களாக இருந்து மனம் திருந்துவார்கள் என்பது கிடையாது.  அடங்காபிடாரிகளான பெண்கள் பலாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரேனும் மனம் திருந்தும் போது துவிஞ்சனாக மாறிவிடுகிறார்கள்.எனவே பெண்களும் காயத்ரியை ஜெபிப்பதில் தடையிருக்கவே முடியாது.கல்வி எல்லோருக்கும் பொது என்பது போல மந்திரங்களும் எல்லா ஜாதியினருக்கும் பொதுவானது தான்.

அகத்தியரின் சரிதம் :

அகத்தியரின் சரிதம் :

வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது!

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்டவீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து
தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன்
அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன்
பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி "*அகத்தியம்*" என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் "வாதாபே
ஜீர்ணோ பவ" என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் 'காக உரு' கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில்
இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர் கரை'யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய்விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி
பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல
நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி
கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
*
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியர்,

- தமிழின் ஆதிகவி;
- அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்;
- முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்;
- தொல்காப்பியரின் ஆசிரியர்.

புத்தமதக் கடவுள் அவலோகிவர் எனும் போதிசத்துவரிடம் தமிழ் கற்றவர் என்று
வீரசோழியமும், சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று கந்தபுராணமும், அகத்தியருடைய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இராமன் தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார். சமணர்களால் போற்றப்படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர் இருக்கிறார்.

- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது.

சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை
வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அகத்தியம் என்பதோடு "சிற்றகத்தியம்", "பேரகத்தியம்" என்று இரு நூல்கள்
இருந்தனவாம். சிறுகாக்கைப் பாடினியார், பெருங்காக்கைப் பாடினியார் போல
சிற்றகத்தியார், பேரகத்தியார் என்று குறுமுனிக்குள்ளும் பல அண்டங்கள். சிவபெருமான் திருமணத்தில் வடக்கே இமயம் தாழ, தெற்கு உயர்ந்ததாகவும் வடக்கு, தெற்கை சமநிலைப்படுத்த அனுப்பி வைக்ககப்பட்டவர் அகத்தியர் என்றும் புராணக் கதைகள் உள்ளன. தென்திசை நோக்கி வந்த அகத்தியர் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீர் காவிரிதானாம். "அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று ஒரு நூல், தேவாரப் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக உள்ளது. அகத்தியர் தொகுத்தாரா? அவர் அகத்தியம் தந்த அகத்தியராக இருக்க முடியாது. அகத்தியர் பெயரை வைத்துக்கொண்ட சிவனடியார் ஒருவர் தேவாரப் பாடல்களில் சிலவற்றைத் தொகுத்துப் போட்டிருக்கலாம். தேவாரம்
பாடிய மூவர் பெயரும் இல்லாமல் தொகுத்துத் தந்தவர் தனது பெயரில் தேவாரத்
திரட்டு என்று நூலாக்கியிருக்கிறார். தேவாரம் என்றாலே மூவரும் நினைவிற்கு
வருவார்கள் என்பதால் தொகுத்தவர் தனது பெயரில் நூலைத் தந்திருக்கலாம்.
திருமுறைக் கலைஞர், திருச்சி வித்வான் திரு பட்டுச்சாமி ஓதுவார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதி வெளியீடாக 1956-ல் இந்நூல் வந்துள்ளது. தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை என்றும் மூவர் பாடிய பதிகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்த பலனை எளிதில் பெரும் பொருட்டு அகத்தியரால் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியளிக்கப்பட்டதாகவும் முன்னுரை கூறுகிறது. இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகளும்,
அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் வெய்யில் கடுமையாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகைமலை போகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கும் மேல்

- கல்யாணதீர்த்தம்,
- பாணதீர்த்தம்,

பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதிமூலம்-பொதிகைத் தென்றல் புறப்படும் பூங்குளம், அதற்கும்மேல் அகத்தியர் மொட்டை எனும் பொதிகைமலை உச்சி.

மூன்று நான்குநாள் பயணத் தேவைகளோடு மலையேறி அகத்தியரைப் பார்க்கப்
போகிறார்கள். பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்புகின்றார்கள். சித்த மருத்துவத்திலும் அகத்தியருக்கு இடமிருக்கிறது. பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் இருக்கிறார். இவ்வாறு அகத்தியர்

- இலக்கியம்,
- இலக்கணம்,
- பக்தி,
- மருத்துவம்,
- சமயம்

என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி

- தமிழ்-வடமொழி;
- சைவம்-வைணவம்;
- சமணம்-புத்தம்;
- இராமாயணம்-மகாபாரதம்;
- வடக்கு-தெற்கு;
- இமயம்-குமரி,
- கங்கை-காவிரி,
- வடநாட்டார்-தமிழ்நாட்டார்

ஆகியவற்றிற்கிடையேயான நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார்.

Thursday, May 5, 2011

"திருமணப் பொருத்தம்

"திருமணப் பொருத்தம்"

 :திருமணப் பொருத்தம்" என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபீட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் என்பதாம்.
விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க கீழே உள்ள read more என்ற பொத்தானை அழுத்துங்கள்

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிஸ்டம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன(காதல்) பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு "ஜாதப் பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன: (நட்சத்திரமூலம் கணிக்கப்பெறுபவை)
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த எண்ணிக்கையுள் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசியகில் நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம்-கெடுதல் இல்லை.
உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதையம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகளில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை ராக்ஷ்தகணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கதில் பார்க்கவும்)

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளைல் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்கும்மாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணூக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். இடபம் முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது. (இராசி என்பது சந்திர லக்கினத்தை குறிக்கும்)

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.

சூரியன் - குரு
சந்திரன் - புதன், குரு,
செவ்வாய் - புதன், சுக்கிரன்
புதன் - சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி;
குரு - சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி;
சுக்கிரன் - செவ்வாய், புதன், குரு, சனி;
சனி - புதன், குரு, சுக்கிரன்.

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி ஆண் ராசி
மேஷம் சிங்கம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருட்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கையாய் இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்டரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபிரச்சு (உதரம்): கிருதிகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊருரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாதரச்சு (பாதம்): அஷ்வினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்.

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோரச்சு: புருஷன் மரணம்
கண்டரச்சு: பெண் மரணம்
நாபிரச்சு: புத்திர தோஷம்
ஊருரச்சு: பண நஷ்டம்
பாதரச்சு: பிரயாணத்தில் தீமை

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

அட்சய திருதியை

அட்சய திருதியை
படைப்புக் கடவுளான பிரம்மன் சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதியை நாளன்றுதான் உயிர்களை உருவாக்கும் தொழிலை தொடங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தொடங்கும் செயல் வளர்ச்சியடையும் என்பது அனைவரின் நம்பிக்கை.

நாளை அட்சய திருதியை தினமாகும் . இந்த நாளில் ஏழை, எளியோருக்கு தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பன்மடங்காக பெருகி நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

“அட்சய” என்ற சொல்லுக்கு அழிவின்றி வளர்வது என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான, தர்மங்கள் செய்தால் குறைவின்றி வாழலாம் என்பது முன்னோர் வாக்கு.

அட்சய திருதியை நாளினைப் பற்றி மகாபாரதத்தில் பல கதைகள் உண்டு.


பாண்டவர் வனவாசம் சென்ற போது, பசியால் அவதிப்பட்டனர். அதிலிருந்து விடுபட மகாவிஷ்ணுவை வழிபட்டனர். அப்போது அவர், சூரியபகவானை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி வழிபாடு செய்தவுடன் சூரிய பகவான் அட்சய பாத்திரம் வழங்கினார். சித்திரை மாதத்தில் பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் கேட்டதையெல்லாம் வழங்கியது என்கிறது மகாபாரதம்.

இதுபோல் மற்றொரு மகாபாரதக் கதை அட்சய திருதியை நாளின் சிறப்பை விளக்குகிறது.


கண்ணனின் நண்பரான குசேலரின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்திருந்தது. தன் வறுமையை போக்க, ஒரு பிடி அவலோடு கண்ணனை காணச்சென்றார் குசேலர்.அவலை எப்படி கொடுப்பது என்று குசேலர் யோசித்த போது, கண்ணன், “அக்ஷய” என்று சொல்லி அந்த அவலை எடுத்து உண்டார்.வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு செல்வம் குவிந்திருந்து என்கிறது இதிகாச கதை.அட்சய திருதியை நாளில் அம்பிகையே அன்று தன் கையால் இறைவனுக்கு உணவளிக்கிறாள் என்றும், ஆகவே நாமும் சாப்பிடும் உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து மாலையில் பசுமாட்டிற்கு உணவளித்துவிட்டு உணவுண்பது நல்லது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், அரிசி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். நமக்காக தங்கம் வாங்கி சேமிப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவனை நினைத்து பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் புண்ணியம் பெறுவோம்.

Wednesday, May 4, 2011

சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கம் ஏன் ?

சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கம் ஏன் ?


ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், 
உயிர்கள் ( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக 
மூன்று விதமான வடிவங்களை எடுத்துக் கொண்டு வந்து, 
நமக்கு அருள்செய்கின்றான்.

அவ் வடிவங்கள்,

அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது -
இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.

உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும் - 
இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.

அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை - 
இது சகள நிட்களத் திருமேனி  எனவும் சொல்லப்படும்.

இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது
உருவம் -  உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் - போன்றவை
இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 )  வகையாக உள்ளதாக 
ஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து ( 25 ) வடிவங்கள் - 
மகேசுவர மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன.

மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே - சிவலிங்கம் எனப்படும்.

" இலிங்கம் " - என்பதற்கு குறி என்பது பொருள்,

" குறி " - என்றால் = ஒரு அடையாளம்

ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமே சிவலிங்கம் எனப்படும்.

சிவலிங்கம் = சிவ + லிம் + கம்

சிவம் - இறைவர்
லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம்
கம் - ஒடுங்கிய அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும் தோன்றும் இடம்,

ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும் அருளவும்
வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும்,

சிவலிங்கத்தின் அடிப்பாகம் - நாற்கோண வடிவினதாய் இருக்கும் -
இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய் இருக்கும் -
இது விஷ்னு தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய் இருக்கும் -
இது சிவ தத்துவம் ( இது பாணம் எனப்படும் )





இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும்,

இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும்,

இந்த பாணத்தின் மேல் பாகத்தில் - சதாசிவனும்,
இருக்கிறார்கள்.

இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும்,  அவை,

1.   பரார்த்த லிங்கம்
( திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில் எழுந்தருளியிருப்பது )

2.  ஆன்மார்த்த லிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்
( விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்று இல்லத்தில் வைத்து பூசிப்பது )

விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் ) ஆராய்ச்சி செய்த போது,
அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும்,
அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்,
இந்த பச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

இத்தகையை அற்புதமான இலிங்க வடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் ,

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்.

- எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8

என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து வியக்கலாம்.
ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை தரிசிப்போம்..  உய்வு பெறுவோம்.

மரங்களின் அரசன் அரசமரம்-கருப்பை கோளாறுகளை நீக்கும்

மரங்களின் அரசன் அரசமரம்-

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.


ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா  வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை  பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் ’என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைஅக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

சூரிய பகவான்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல்நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய்
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க
வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை
சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

அக்னி ரூபானை வழிபடுவோம்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும்
சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

Monday, May 2, 2011

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்


 பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று , சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய  உள்மனசு துடிக்கும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது . 

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும்.  பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள , சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.
இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து , போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.
சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. 
இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது..
நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால் , வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே ..!!கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து , யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம். இல்லை இந்த கடமையை நிறைவேற்றக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் :

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் :  

மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு - அடுத்த நிலையை அறிய உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் போன்ற தேவதை வசிய சக்தியை உடையவை - மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.

ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.
அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.
கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.

ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.
உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.
பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.
தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.
பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.
மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்.

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.

மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்.

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...



எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , ஏழரை சனி நடந்து கொண்டு இருந்த போது , தனது முப்பது வருட சேமிப்பை - சுமார் 50 லட்சங்களை, தனி தொழில் தொடங்குகிறேன் என்று ஆரம்பித்து , அத்தனையும் தொலைத்தார்.. அவரது வாழ்க்கை சுமார் முப்பது வருடம் பின் தங்கி விட்டது.. அதற்கு முன்பு வரை , தெய்வ நம்பிக்கை அவருக்கு அதிகம் கிடையாது. அவரது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து , நாம் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்து,  இந்த ஸ்லோகத்தை மனமுருக , 108 முறை தினமும் துதித்து , வேண்டி - இன்று அவரது ஒரு நிலத்தை விற்றதின் மூலம் , முழுவதுமாக மீண்டு விட்டார்.

இது முழுக்க, முழுக்க - உங்களை கடன் தொல்லைகளில் இருந்து தப்புவிக்க உதவும் ஸ்லோகம். கீழே " யூ ' டியூப் இணைப்பையும் கொடுத்துள்ளேன்..  உச்சரிப்பு தெளிவாக இருக்கிறதா என்று உங்களுக்கு சரி பார்க்க உதவும்

கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..

ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்..

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்            9.

குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு

குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு


ஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.

திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.
சதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.

"ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்?

"ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்?



ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்து , முறுக்கிப் பிழிந்து,  காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.


விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஸவரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.


எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!
முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது.பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன  பெரும்பாலோர்கள் என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.


ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.


அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான்.  பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
மேலே அனுப்பி வைத்து விடுவார்.


அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!


அஷ்டமச் சனி என்பது , எவர் ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ , அதை வைத்துக் கூறுவது.  இப்போது கண்ணியில் சனி இருப்பதால் , கும்பத்திற்கு இப்போது அஷ்டமம் நடந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அஷ்டமம் என்பது , ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.

இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்கள் தப்பிக்க , முடிந்தவரை நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டு , இறை வழிபாடு முறைப்படி செய்தலே. இல்லையென்றால் மிக சிரமமாகத்தான் உணர்வீர்கள்...

சக்தி பீடங்கள்

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று  ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன்.
தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே  நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.
அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா? அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான்.

அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ? அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.
தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறுகிறார்.
தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா?

அதனை புரிந்து கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே? சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா? என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன்.
அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள்.

அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , "ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாகத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்" என்றான்.
வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது.
தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன.

அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்..
  அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப்  பெருகி - இன்றும்  உலகை, நாடி வரும் பக்தர்களை  - காத்துக் கொண்டு இருக்கிறது.. !!
பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. ..!!

சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள்

சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..
ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். 
இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  

ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...

ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சில ஆன்மீக குறிப்புகள்:

சில ஆன்மீக குறிப்புகள்:

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.

* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.

* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.

* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.


பூசலார் நாயனாரின் கதை

பூசலார் நாயனாரின் கதைகோடி கோடியாய் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை. அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான். இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.
சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் என்பவர் ஏழை சிவபக்தர்.திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை.இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.

இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி குடமுழுக்கு செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான். குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.

இதனால் ஆவல் கொண்ட மன்னன், தனது பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று, பூசலாரை வணங்கி நின்றார். மன்னனே தம்மை காண வந்த நோக்கம் அறிந்த பூசலார் மெய்சிலிர்த்தார். தமது உள்ளக்கோவிலில் எழுந்தருள வேண்டி மன்னனையே வேறு நாள் மாற்றச் சொன்ன இறைவனை நினைத்து உள்ளம் உருகினார் பூசலார்.பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஒரு ஆலயம் எழுப்பினார். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் கம்பீரமாக உள்ள இருதயாலீசுவரர் ஆலயம்.இந்த ஆலயத்தின் கருவறையில் ஈசனின் லிங்கத்துடன் பூசலாரின் சிற்பமும் இணைந்துள்ளது சிறப்பம்சம். தினமும் மனதில் நினைத்து வழிபட்ட பூசலார் நாயன்மாரின் கதை இன்றைய தலை முறையினருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்

தேங்காய் உடைப்பதின் தத்துவம்“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு.புண்ணியம் என்பது இங்கே பூஜையை குறிக்கிறது. இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். ஆனால் இந்துசமயத்தில் பூஜையின் போது தேங்காய் இடம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

சிவ அம்சம் நிறைந்த தேங்காய்

நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைக்கிறோம். எதனால் இந்த வழிபாடு என்பதற்கான காரணம் வியப்பிற்குரியது. விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்கு பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களை கொண்ட தேங்காயை சிவன் படைத்தார்

என்கிறது புராணகதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேற பக்தர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

முக்கண் சிறப்பு

விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. வழிபாட்டுக்குப் பயன்பட இது முக்கிய காரணம். வழிபாட்டில் தேங்காயைப் பயன்படுத்த எந்தவித வரம்புகளும் இல்லை. இதனை இந்து சமயத்தவர் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

தேங்காயை உடைத்தல்

பூஜை நேரத்தில் இறைவனின் திருமுன் தேங்காயை “உடைத்தல்” என்பது பழங்காலம் முதல் இருந்துவரும் ஒரு வழிபாட்டு முறை. தேங்காயை வணங்கி, அதைத் தீபம் அல்லது தூபத்தில் காட்டி, உடைத்து, அதன் குடுமியைக் களைந்து, எந்தக் குற்றமும் அதில் இல்லாமையை உணர்ந்து, வெண்பருப்பு இறைவனைத் தரிசிக்குமாறு வைத்து, அர்ச்சனை செய்து, கற்பூர தீப ஆராதனை காட்டுவது முறை. தேங்காயை உடைக்காமல், வழிபாடு பூரணமாவதில்லை; முழு நிறைவு பெறுவதில்லை.

தேங்காய் இறைவனுக்குரிய அர்ச்சனைப் பொருள். அழுகல் முதலிய எந்தக் குறையுமற்ற, கச்சிதமாக உடையக் கூடிய நெற்றுத் தேங்காயே வழிபாட்டிற்கு உகந்தது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்

மக்கள் இரு கண்களுடன், நன்கு பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றனர். பக்குவமுடைய மனமே இறைவனை வழிபடத்தக்கது. பக்குவ நிலையறிதல், தேங்காய்க்கும், மனத்திற்கும் பொது. பக்குவம் குலைந்தால் தேங்காயும், மனமும் அழுகிவிடும்.

தேங்காய்-மும்மலம்; நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. தேங்காய்-இதயம்; மூன்றாம் கண்-ஞானக் கண்; வெண்மை-சத்துவகுணம். “சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது.” என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது

எதிர்காலத்தை உணர்த்தும் தேங்காய்

பூஜையின் பயனையும், வாழ்வின் எதிர்கால நிகழ்வுகளையும் உடைந்த தேங்காயின் பகுதிகள் உணர்த்துகின்றன. அதனால்தான் வீட்டிலும், கோவிலிலும் தேங்காய் உடைக்கப்படும்போது, அது செம்மையாக உடைபட வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும், பக்தியுடனும் கவனிப்பார்கள்.

தேங்காய் ஒரே அடியில் இரு பகுதிகளாக உடைவது மிக நல்லது.உடைத்த தேங்காயில் பூ இருப்பதும், நூல் பிடித்தால் போல், சரிபாதியாக உடைவதும் மிகச்சிறப்பு. பகுதிகளில் ஏற்ற இறக்கம் இருப்பதால் தவறில்லை. தொட்டில் போல் உடைந்தால் மகப்பேறு கிடைக்கும். குடுமிப்பகுதி மற்ற பகுதியை விடச் சற்றுப் பெரிதாக உடைவது நல்லது. ஓடு சிதறி, முழுத் தேங்காய், கொப்பறையைப் போல விழுந்தால், அதைச் சரி பாதியாய்ப் பிளந்து படைக்கலாம். தேங்காய் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அதைத் தீர்த்தமாகப் பயன்படுத்தலாம். உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்துப் பொருத்தக் கூடாது.

தவிர்க்க வேண்டியது

தேங்காய், ‘தேரை மோந்தும்’, அழுகியும் இருப்பது குற்றம். சிதறுகாய் போலத் தூள் தூளாக உடைவது குற்றம். குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது குற்றம். தேங்காய் நீர் நாறுவது குற்றம். தேங்காயை உடைக்கும்போது கை விட்டு நழுவி அப்பால் போய் விழுவது அபசகுனம்.

தேங்காய்ப் பிரசாதத்தை, உடைத்து அனைவருக்கும் தர வேண்டும். அல்லது சுத்தமான சைவ உணவு வகைகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.

சிதறு தேங்காய்:

தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிப்பது “சிதறு தேங்காய்.” சிதறிய தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி ‘கொள்ளை’விடுவது சூறைத் தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை அடிப்பது ‘சதுர்த்தேங்காய்.’

தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. விநாயகரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு சிலர் 108 தேங்காய்களைச் சூறை விடுவதுண்டு.

சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே உரியது. உண்மைதான். குழந்தைப் பிள்ளையாரின் பிரசாதத்தில் பிள்ளைக் குழந்தைகளுக்கல்லவா உரிமை இருக்க வேண்டும்?

அர்ப்பணிப்பு உணர்வு

சிதறுகாய் போடுவதால் அகங்காரம் நீங்குவதோடு, தியாகமும் நிறைவேறுகிறது. உடைக்கும் சிதறுகாயை எத்தனையோ பேர் எடுத்துச்செல்கின்றனர். இது தர்மம் செய்த புண்ணியத்திற்கு சமமானது. எனவே, இறைவன் திருமுன் அகங்கார மண்டையோடு உடைய வேண்டும்; அமுதமயமான அறிவு நீரை அர்ப்பணிக்க வேண்டும் என்பன சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்

இளநீர்

அரசு, ஆல், அத்தி, வில்வம், துளசி முதலியன தெய்வீக மூலிகைகள். இந்த வரிசையில் தென்னையும் சேரத்தக்கது. இளநீர் மருத்துவ குணமுடையது. சிறப்பாக மருந்து செய்ய ஓர் அடிப்படைப் பொருளாகத் செவ்விள நீர் திகழ்கிறது. இளநீர் உலகத்திலேயே மிகச் சுவையான, மிகத் தூய்மையான ஒரே நீர். இயற்கையின் வரப்பிரசாதம். இது அபிஷேகப் பொருள்களில் ஒன்று.

பற்றற்ற நிலை

அறவே நீரற்ற தேங்காய் கொப்பரையாகும். முற்றிய எல்லாத் தேங்காய்களும் கொப்பரையாவதில்லை. பல அழுகிவிடும். ஏதோ ஆயிரத்திலொன்று கொப்பரையாகலாம். நீர் வற்றி உள்ளேயே உலர்ந்த தேங்காய் கொப்பரையாகிறது.

தேங்காய்ப் பருப்பு, அகப்பற்றான நீரை அகற்றிவிட்டது; அந்த நீரின் சுவையையும், சக்தியையும் பறித்துக் கொண்டது. புறப்பற்றான ஓட்டை விலக்கிவிட்டது; அதனோடு கொண்ட பற்றுத் தொடர்பினை முறித்துக் கொண்டது. கொப்பரையும் அதன் ஓடும் பற்றற்று விளங்குகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயைப் “பூரண ஆகுதி”யாகப் பயன்படுத்துகின்றனர்.

வேள்வியாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. முடிவாக-நிறைவாக-பூரணமாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இளநீரை விட, தேங்காயை விட, கொப்பரைத் தேங்காயே அதன் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காய் இறைவடிவமாகவே கருதப்படுகிறது எனவேதான், வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.