Sunday, May 15, 2011

தமிழ் எழதி
இப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +g அழுத்தவும்) அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Latest topics
» சதுரகிரி யாத்திரை நூல்
by k.seenivaasan Yesterday at 12:05 pm

» 28 கொடிய நரகங்கள்.
by துறவி Sat May 14, 2011 1:42 pm

» அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,
by துறவி Sat May 14, 2011 1:24 pm

» தாலி மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்
by துறவி Sat May 14, 2011 1:18 pm

» வேறு கருவில் ஊராத கருவூரார்
by mgbala2005 Wed May 11, 2011 11:21 am

» அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை -எஸ். இராமச்சந்திரன்
by Admin Sun May 08, 2011 8:26 pm

» இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம் - ரமணர்
by லெட்சுமணன் Sat May 07, 2011 4:59 pm

» மந்திர ஜெபம் செய்யும் முறை
by Admin Sat May 07, 2011 11:48 am

» பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர்
by லெட்சுமணன் Thu May 05, 2011 5:57 pm

» முருகனின் பல்வேறு பெயர்களும், காரணங்களும்
by லெட்சுமணன் Thu May 05, 2011 5:51 pm

» சைவ வினாவிடை
by Admin Thu May 05, 2011 1:59 pm

» பலிபீடம் எனபது
by Admin Thu May 05, 2011 1:36 pm

» அபிராமி அந்தாதி அபிராமி பட்டர்-உரை கவிஞர் கண்ணதாசன்
by Admin Tue May 03, 2011 1:28 pm

» சங்கரன்கோவில் தவம்
by Admin Tue May 03, 2011 1:11 pm

» விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்
by நடத்துனர் Sun May 01, 2011 11:03 am

» என் அறிமுகம்...
by லெட்சுமணன் Sat Apr 30, 2011 8:02 pm

» இந்த வழியில் போனால் கடவுளை காணலாம்
by லெட்சுமணன் Sat Apr 30, 2011 7:56 pm

» அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
by சரவணபவ Sat Apr 30, 2011 11:44 am

» கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
by Admin Thu Apr 28, 2011 10:01 am

» இஸ்லாம் இந்தியாவில் ஒரு ரத்த வரலாறு
by Admin Wed Apr 27, 2011 8:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]
Alexa Certified Traffic Ranking for tamilhindu.net
 
View previous topic View next topic Go down

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம் என்ன?

Post 



வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.

நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சைனஸ், சளித் தொந்தரவுகளுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.

கிரகப் பிரவேசத்தின் போது, வெற்றிலையின் மேல் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, விநாயகர் அகவலைப் பாடி, தாராளமாக கிரஹப் பிரவேசம் செய்யலாம். எனவே, கணபதி ஹோமம் செய்து விட்டுதான் கிரஹப் பிரவேசம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

விநாயகரை மனதார வழிபட்டாலே முழுமையான பலன்களை எதிர்பார்க்கலாம். கணபதி ஹோமம் செய்யவில்லை என்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டுத் துவங்க வேண்டும். அதற்கு இதெல்லாம் எளிய முறைகள்.

நல்ல முகூர்த்த தினத்தில் கணபதி ஹோமம் செய்ய குருக்கள் கிடைக்கவில்லை என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி விநாயகரை வணங்கலாம். புதிய வீட்டில் குடிபுகுந்த பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து கணபதி ஹோமம் செய்தாலும் தவறில்லை.

எனவே, பசுவின் சாணத்தையும், அருகம்புல்லையும் விநாயகராகப் பிடித்து, தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லி வழிபட்ட பின்னர் பால் காய்ச்சி குடிபுகுந்தாலும் எந்த பாதிப்பும் வராது.







 
 
View previous topic View next topic Back to top

இறை நாமத்தை எழுதுவதால் ஏற்படும் பலன்

இறை நாமத்தை எழுதுவதால் ஏற்படும் பலன்
Post
வேதங்களே பகவந் நாமத்தின் பெருமையைக் கூறுகின்றன. "கோ தர்ம ஸர்வ தர்மானாம்....' என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு ஆணித்தரமான பதிலாக "எல்லா தர்மங்களையும்விட மேலானது இறைவனது திருநாமத்தை ஓதுவதே' என்று மகாபாரதம் அடித்துப் பேசுகிறது. அனைத்துப் புனித நூல்களும் இறை நாமத்தின் பெருமைகளைக் கூச்சலிட்டுச் சொல்கின்றன. "இறைவனது திருநாமங்களை ஓதும்போது அந்தப் பரமாத்மாவை தியானிக்க வேண்டுமென்பதுகூட அவசியமில்லை' என்று "ஸ்ரீ பகவந்நாம ரúஸôதயம்' என்ற கிரந்தம் அறுதியிட்டுத் தெரிவிக்கின்றது. இறைவனையே நினைக்காமல் ராம நாமத்தை எழுதியிருந்தால்கூட அந்தப் புண்ணியம் எழுதியவரை சத்தியமாகக் காப்பாற்றும். இது ஒரு புறமிருக்க இறை நாமத்தை எழுதுவதாலும், எல்லா நேரங்களிலும் (மல ஜலம் கழிக்கும்போது கூட) சொல்லிக் கொண்டே இருப்பதாலும் தியானம் என்ன, அஷ்டாங்க யோகமும் ஸமாதி நிலையுமே தானே வாய்க்கும். இதை ஸ்ரீராம கிருஷ்ண பரம ஹம்ஸர் போன்ற பல மஹான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறைவனின் திருநாமத்தின் மகிமையை விளக்கும் வாக்கியங்கள் புனித நூல்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன! அள்ளி மாளாது! "அந்த வாக்கியங்கள் அனைத்துமே இறைவனது பெயரை மனதினால் சிந்தித்து, வாக்கினால் சொல்வதற்காக மட்டுமே' என்று எவராலும் கூறிவிட முடியாது. இதோ! அசைக்க முடியாத பிரமாணம்! "லேகயந்திஹச நரா: தேஷாம் வாஸ: த்ரிவிஷ்டதே' என்கிறது ஆதி காவியமான ஸ்ரீமத் ராமாயணம். இதைவிட "நாமம் எழுதுவது பெரும் புண்ணியம்' என்று நிரூபிக்க வேறு சான்று ஏதேனும் வேண்டுமா? "மனிதர்கள் ராமாயணத்தை எழுதுவதால் (பிரதி எடுப்பதால்) சொர்க்கமே கிடைக்கும்' என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். இது, யுத்த காண்டத்தின் கடைசியில் சொல்லப்படுவதால், "ராமாயணத்தின் தாத்பரியமே அதை எழுதுவதுதான்' என்றாகிறது. "விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்கு இணையானது ராம நாமம்' என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதன் அடிப்படையில், "ராம நாமம்' எழுதுவதும், ராமாயணத்தை முழுவதுமாக எழுதுவதும் ஒன்றே! "ராம நாமமே ராமாயணத்தின் சாரம்' என்று தனியே வேறு விளக்க வேண்டுமா? எனவே "லேகனம்' என்ற எழுதுதல் பற்றி வால்மீகி முனிவரே கூறிய பிறகு மற்றவர்களின் கருத்துகளை அலட்சியப்படுத்துவதே முறையானது.

இங்கே இன்னொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் ஏடுகளில்தான் எழுதுவார்கள். அது சற்று கடினமான காரியம். இப்போது இருப்பதைப்போல் பேப்பர், பேனா கிடையாது. அந்தக் காலத்திலேயே, ஏட்டில் எழுதச் சொன்னார் வால்மீகி முனிவர். இன்று எழுதுவது எளிதான விஷயமாயிற்றே! எனவே அனைவரும் இறை நாமத்தை எழுதிக் குவித்து, வினைப் பயன்களை எளிதில் பொசுக்கித் தள்ளுவதே எளிதான உபாயம். எழுதுவது சரியா என்ற கேள்விக்கு இடமேயில்லை.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர், ஏராளமான மக்களை ராம நாமம் எழுதத் தூண்டியவர் என்பதை உலகே அறியும். அப்படி எழுதுபவர்களை ஊக்கப்படுத்த தங்க - வெள்ளிக் காசுகளையும் பிரசாதமாக அளிப்பார். இங்கே பரிசென்பது காசல்ல; முக்திக்கான மிக எளிய வழி! அனைவராலும் கடைபிடிக்கக்கூடிய, அவசியம் கடைபிடிக்க வேண்டிய யுக தர்மம். இருப்பினும் மக்களை உற்சாகப்படுத்த "பொன்-வெள்ளி' காசு திட்டத்தைச் செயல்படுத்தினார் காஞ்சி மாமுனிவர். வால்மீகியும், "ராமாயணம் எழுதுவதால் சொர்க்கம் கிடைக்கும்' என்று சொன்னது இந்த வெள்ளிக் காசு மாதிரிதான். உண்மையில் ராம நாமத்தை எழுதிக் குவிப்பதனால் சொர்க்கத்தைவிட மேலான முக்தியே கிடைக்கும்.



_________________

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம்
Post
நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , ..... இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும். மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை அறிவதே வாழ்க்கை. நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க , நாம் நம்மை அறியாமலேயே நிறைய ஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அது பல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்கு உணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதக பலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள் Ph D செய்து தான் ஆக வேண்டும்.. ..


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா


உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

•காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு


 
View previous topic View next topic Go down

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு ?


சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.

தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

ஓம் மித்ராய நமஹ...... சிறந்த நண்பன்

ஓம் ரவயே நமஹ...... போற்றுதலுக்குரியவன்

ஓம் சூர்யாய நமஹ...... ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ...... அழகூட்டுபவன்

ஓம் ககாய நமஹ...... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ...... புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ...... ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ...... நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ...... கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ...... சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ...... வணக்கத்திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ...... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.


மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

 

_________________

 
 
View previous topic View next topic Back to top

கோயில் தரிசனத்துக்கு ஈரதுணி உடுப்பதின் பலன் என்ன?


 
View previous topic View next topic Go down

கோயில் தரிசனத்துக்கு ஈரதுணி உடுப்பதின் பலன் என்ன?




ஈரத்துணி உடுத்தால் அது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுவதுண்டு..

குளித்து ஈரதுணி உடுத்து கோயில் தரிசனம் செய்யும் போது பூரணபரிசுத்தம் மட்டுமே அதிலிருந்து எதிர்ப்பார்க்கின்றோம் என்று கருதி வருகின்றோம்..

நம் நாட்டின் பல கோவில்களிலும் குளத்திலோ அல்லது நதியிலோ குளித்து ஈரதுணியுடன் பக்தர்கள் கோவில் தரிசனம் செய்வதும் கோவில் வலம் வருவதும் ஒரு காலை காட்சி.. இவ்வாறு செய்வதனால் வயிற்றுக்கு தீங்கு என்ற நம்பிக்கை பலர் கொண்டுள்ளனர்.. ஆனால் ஈரத்துணி உடுப்பதால் தீமையல்ல நன்மையே உண்டாகின்றது.. நாம் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் நீரிலிருந்து ஏராளம் நோயணுக்கள் மற்றும் விஷபொருட்கள் உட்செல்லுகின்றன என்று பழைய காலத்திலிருந்தே நாம் அறிந்துள்ளோம்.. இவ்வகை விஷபொருட்களால் உணவு ஜீரணம் பாதிக்கபடுகிறது. சரியான ஜீரண நடக்காமலிருப்பதனால் மலக்கழிவு சரியாக நடப்பதில்லை. இதனால் மலம் சரியாக கழிய வில்லையென்றால் வயிற்றுக்குள் வெப்பம் ஏற்ப்படும். இதனால் பல நோய்கள் வரலாம்.. ஈரதுணி உடுத்து கோயில் தரிசனம் செய்வதின் காரணம் வயிற்றின் வெப்பத்தை குறைப்பதற்காகவே. இதை இன்றைய நவீன மருத்துவமுறையே ஒரு சிகிட்சையாக ஏற்று கொண்டிருக்கின்றனர்



_________________



 
 
View user profile


 
View previous topic View next topic Back to top

•துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

 
 

View previous topic View next topic Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post
காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'


என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'


மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..





 

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ?

Post
இந்த கேள்விகளுக்கு பக்தி திருமகன் "திரு.சுகி.சிவம் தன்னுடைய நினைப்பதும் நடப்பதும் புத்தகத்தில் தெளிவானதொரு பதிலை கொடுத்திருக்கிறார்".அதனை இங்கே தருகிறோம்........

இந்நாள் முதல்வரும் எந்நாளும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பவரும்மான கலைஞர் அவர்கள் எந்தாளும் முதல்வரான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி, விநாயகர் வழிப்பாடு பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.அதில் யோசிக்க வேண்டியவை சில,பதில் கூற வேண்டியவை பல.

!கும்பிட்ட விநாயகரை வீட்டில் வைக்காமல் இப்படி ஆற்றிலும்,குளத்திலும் எறிவதுதான் பக்தியா? என்று கேட்டு இருக்கிறார்.

அய்யா! விநாயகர் என்பது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் வெறும் சாமி பொம்மை அல்ல.இந்த பூமியின் உருவகம்.இந்த பூமியில் மனிதன் உண்டு,பூத ராட்ஸ கூட்டம் உண்டு,தெய்வீகதன்மை கொண்டவர்கள் உண்டு,விலங்குகள் உண்டு,எல்லாம் சேர்ந்ததுதான் பூமி.அதனால்தான் விலங்கு தலை,மனித உடல்,பூத ராட்ஸக் கால்கள்,தெய்வீகதன்மை கொண்டவராக விநாயகர் உருவானார்.நாங்கள் வாழ்வதற்க்கு உதவிய உலகத்தை வணங்குவதே விநாயகர் வழிபாட்டின் தத்துவம்.உலக உருண்டைதான் அவரது உருண்டைவயிறு.

இந்த உலகம் தண்ணீர் துப்பிய துண்டு. அதாவது கடலில் மூழ்கி இருந்த உலகம் கொஞ்சம்,கொஞ்சம்மாக நீர் வடிய,வடிய வெளியே வந்ததுதான் இந்த தரைப்பகுதி.இதுவும் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கடலால் உட்கொள்ளப்பட்டு வேறு ஒரு தரைப்பகுதி மேலே வரும்.இந்த உலகம்மானது இந்த கடல் விட்டுவைத்த மிச்சம்.இது கடலில் மறையக்கூடியது.அழியக்கூடியது.இதை உணர்தவே விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் வந்தது.

உலகம் மண்.அதனால்தான் வேறு எந்த வழிபாட்டிலும் இல்லாதபடி களிமண்ணே விநாயகராக வழிபடப்படுகிறது.பூமிதான் சாமி,சாமிதான் பூமி.இது விநாயகர் வழிபாட்டின் நுட்பம்.கடலில் இருந்து வெளிபட்டு நாம் வாழ வழி வகுக்கும் மண்[பூமி]கட்லில் மீண்டும் மறையும் என்பதை உணர்தவே களிமண் கணேசரை கடலில் கரைக்கும் முயற்சி.

கடல் இல்லாத ஊர்களில் குளங்களில்,ஏரிகளில்,குட்டைகளில் கரைப்பது மரபு.அந்த விநாயகர் தலையில், வயிற்றில், நெற்றியில்,காசை வைத்து கரைப்பது ஒரு சமூக சிந்தனை.அதாவது ஏரி குளம் வற்றும் போது இந்த காசுகளை எடுக்க கூடை கூடையாக மண்ணை வெளியில் கொண்டு வந்து கொட்டுவார்கள்.இதனால் ஏரி,குளம் ஆழம்மாகும்.மழை காலத்தில் நீர் பிடிப்பு அதிகம்மாகும்.உழைத்தவனுக்கு காசு கிடைக்கும்.

எனவே வீட்டிலேயே விநாயகரை வீட்டிலேயே வைத்து வழிபடுங்கள் என்ற உங்கள் யோசனையை விட ஏரி,குளம்,ஆறு, இவற்றில் கரைப்பது என்பதே சமய,சமூக உண்மைக்கான ஏற்ப்பாடு.


 
 

கோபுர தரிசனம் கோடி நன்மை

 கோபுர தரிசனம் கோடி நன்மை
கோபுர தரிசனம் கோடி நன்மை. இக்கோபுர கலசத்தில் ஒன்பது வகை தான்யங்களும் வைக்கப்படும். இவ்வுலகம் அழிந்தாலும் மீண்டும் இவ்வுலகத்தை தோற்றுவிக்கும் விதையாக கோபுரம் திகழ்கிறது. கோவிலுக்குச் செல்ல முடியாமல் வேலையாக உள்ளவர்களும் உடல்நிலை சரி இல்லாதவர்களும் கோபுர தரிசனமாவது செய்து பலன் பெறலாம். இக்கோபுர தரிசனத்தை பார்க்கும் நேரத்தைப் பொறுத்து பலன்களும் அமைகின்றது.


காலையில் கோபுர தரிசனம் - நோய் நீக்கும்

மதியம் கோபுரதரிசனம் - செல்வ வளம் பெருகும்

மாலையில் கோபுர தரிசனம் - பாவம் போக்கும்

இரவு கோபுர தரிசனம் - வீடு பேரு கிடைக்கும்

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.
கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.
சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.
 
 

View previous topic View next topic Back to top


கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

|
ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.


 

Saturday, May 14, 2011

தைபொங்கல்

தைபொங்கல்

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.

பொங்கல் புத்தாண்டு விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்!

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.
உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

பொங்கல் நாளை “மகரசங்கிராந்தி”யாகப் புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.

ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு ஆகும். உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேத காலந்தொட்டு இந்திரனுக்கும், அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.
முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.
(சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!
தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.


உலகளாவிய ஏழு கோடி தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தன்மானத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழும் நாளே எமக்கெல்லாம் இனிய பொங்கல் புத்தாண்டு ஆகும். .

பொங்கல் புத்தாண்டு விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்!

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.
உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

பொங்கல் நாளை “மகரசங்கிராந்தி”யாகப் புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.

ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு ஆகும். உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேத காலந்தொட்டு இந்திரனுக்கும், அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.
முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.
(சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!

விரதங்களும் அவற்றின் பலனும்

விரதங்களும் அவற்றின் பலனும்

நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சோமவார விரதம்
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை :
இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
பிரதோஷம்
நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன்
கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
சித்ரா பவுர்ணமி விரதம்
நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை
இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
தை அமாவாசை விரதம்
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
கந்தசஷ்டி விரதம்
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு
மங்களவார விரதம்
நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
உமா மகேஸ்வர விரதம்
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
விநாயக சுக்ரவார விரதம்
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி
கல்யாணசுந்தர விரதம்
நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்
சூல விரதம்
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
இடப விரதம்
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு
சுக்ரவார விரதம்
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்
தைப்பூச விரதம்
நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்
சிவராத்திரி விரதம்
நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை
மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்
திருவாதிரை விரதம்
நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.
கேதார விரதம்
நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்
விநாயகர் சஷ்டி விரதம்
நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.
முருகன் சுக்ரவார விரதம்
நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்
நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்
நவராத்திரி விரதம்
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

தைஅமாவாசை

தைஅமாவாசை
 
இன்று தை அமாவாசை ஆனால் முழு மதி வந்ததினம்
இன்று தை அமாவாசை ஆனால் அமாவாசையை முழு நிலவு ஆக்கிய
அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்அந்த நிகழ்ச்சியின் சிறு வரலாறு இதோ .
அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற அந்தணர் அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டு இருந்தார். அவர் சமய தத்துவ சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் இவர் பட்டர் என்று அழைக்கப்பட்டார். அவர் தமிழ் மற்றும் வடமொழி இரண்டிலும் வல்லவராகவும் விளங்கினார். அவருக்கு பார்க்கும் இடமெல்லாம் எம் அம்மையின் வடிவாகவே தோன்றியது.

ஒரு முறை சரபோஜி மன்னர் தை அமாவாசையன்று திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார்.
நிஷ்டையிலிருந்த பக்தரை நோக்கி 'இன்று என்ன திதி?` என்று கேட்டார்.
அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர்,
தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். . உடனே அரசன் அது "மதி
கெட்ட தினம்" ( சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு
கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை
காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த
கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால்
உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு
நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.

திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல்.
தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம்
கொண்டாள்
அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய
சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில் அமர்ந்து அபிராமி
அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து
துவக்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயறு சிப்பாய்கள் அறுத்தனர் .
100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால் , நூறு கயரும் அரக்கப் படும் .
பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும் .
அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல்,
சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி
அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக
இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச்
சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது
'குழையைத் தழுவிய' என்று ஆரம்பித்து 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' என
முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ 'உதிக்கின்ற' என ஆரம்பிக்கிறது.

முதல் பாடலைப் பார்ப்போம்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை
'ஆக்கினை' என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம்
'ஆக்கினை'. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ
மத்தியில்தான். ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத்
தொட்டுக்கொண்டுதான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்
என்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர்' என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது
போல் தோன்றினாலும் - சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல்,
இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே
'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்றார். அதாவது புருவமத்தியில் தோன்றி
நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக
மதிக்கின்றனர்.

எனவே, எனக்கு விழுத்துணையாக அபிராமியைக் கொண்டேன் என்கிறார். அபிராமிபட்டர்.
அடுத்து ஒரு பாடல்:

கொள்ளேன் மனத்தில்நின் கோலம் அல்லா(து) அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் மூவுலகக்(கு)
உள்ளே அனைத்தினுக் கும்புறம்பே உள்ளத் தேவிளைந்த
கள்ளே களிக்கும் களியே அளியஎன் கண்மணியே

'உன்கோலத்தைத் தவிர மனத்தில் ...
 
தைஅமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளை ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
கடல் கூடும் கன்னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேசுவரத்தில் புகழ் பெற்ற ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.
கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருமண தடை நீங்கும்:

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

 அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
காகத்திற்கு உணவிடுங்கள் :

 காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத் திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

 அமாவாசை வழிபாடு:
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
புண்ணிய நதியில் நீராடல்:
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.
அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.
சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
முன்னோரின் ஆசி:

 திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப் பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.
பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.
இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.
சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது .
கொடிய பாவங்கள் நீங்கும்:
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால் தான் இறைவனை எளிதில் அடைய முடியும்.வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது .
ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.
இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பவர். தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது.

பங்குனி உத்திரத்தின் மகிமை

பங்குனி உத்திரத்தின் மகிமை
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

நவதுர்க்கை,அஷ்ட சரஸ்வதி,அஷ்ட இலட்சுமி

நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை . இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி

நவதுர்க்கை

துர்க்காதேவி ஒருத்தி என்றாலும், அவள் ஒன்பது வகைகளில் தெய்வங்களுக்கும், பக்தர்களுக்கும் உதவியிருக்கிறாள். இன்றும், நமக்கு பாதுகாப்பாக நின்று அருளுகிறாள். எனவே, இவளை ஒன்பது வடிவங்களாகக் கருதி "ஓம் வனதுர்க்கையே நம:' "ஓம் சூலினி துர்க்கையே நம:' என்று ஒன்பது துர்க்கைகளுக்குரிய மந்திரத்தையும், நாளொன்றுக்கு ஒரு துர்க்கைக்குரிய மந்திரம் வீதம் 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் காரணமற்ற பயம் நீங்கும்.
1. வன துர்க்கை: பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்
2. சூலினி துர்க்கை: திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3. ஜாதவேதோ துர்க்கை: முருகன் உதித்தபோது அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள்
4. ஜுவாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள்
5. சாந்தி துர்க்கை: தட்ச யாகத்தின் போது கோபமடைந்த சிவனை சாந்தப்படுத்தியவள்
6. சபரி துர்க்கை: அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டுவச்சி வடிவில் சென்றவள்
7. தீப துர்க்கை: பக்தர்களுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்
8. ஆசுரி துர்க்கை: அமுதம் கிடைக்க திருமாலுக்கு உதவியவள்
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருக்கனன் வென்று வர தவியவள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி

‘மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.’ இது திருமூலர் வாக்கு. மனதில் சஞ்சலம் இல்லாமல் மிகமிக தெளிவான மனத்துடன் இருப்பதுதான் வாழ்க்கை.

வாழ்க்கையின் அர்த்தமே மனஅமைதிதான். மனஅமைதியுடன் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறும். எந்த எண்ணங்களும் நிறைவேறும். நம்பிக்கையும், துணிவுமே வெற்றிக்கான வழி.

தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி

மனதிற்கும், உயிருக்கும் தொடர்பு உண்டு. உயிருக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு. மனமும், உயிரும் இறைவனால் இயங்குகின்றன. மனம் தெய்வத்தன்மை வாய்ந்தது. தெய்வ நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும், செய்யும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.

மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும், துன்பத்தையும், உண்டாக்கக்கூடாது. மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் முக்கிய சக்தியாக இருப்பது மனத்தூய்மை. மனத்தூய்மை உடையவர் யாரும் எந்தவித கெட்ட சக்திக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.

எண்ணங்களின் வலிமை

நல்ல எண்ணங்கள்தான் நல்ல காரியங்களைச் செய்யும். எண்ணங்களின் தொகுப்பே ஆசையாகவும், நம்பிக்கையாகவும், மாறுகிறது. நல்ல எண்ணங்கள் நல்ல விதைகள் போன்றது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெறும் உடல் வலிமை மட்டுமே வாழ்க்கை அல்ல. உடல்வலிமை ஓரளவிற்குத்தான் வாழ்க்கைக்கு உதவுகிறது.

மனவலிமையும், மன ஆரோக்கியமும்தான் உண்மையான வாழ்க்கை.
மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் ஆதார சக்தியாக விளங்குவது மனத்தூய்மையே. வாழ்க்கையின் அர்த்தமே மனவலிமைதான். மனஅமைதிதான். மனதில் சஞ்சலமோ, குழப்பமோ, இல்லாமல் மிகத்தெளிவான மனத்துடன் நடத்துவதுதான் வாழ்க்கை

நான்கு வகை பக்தர்கள் யார்?

கடவுளை வழிபடும் அனைவரும் பக்தர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த வாரம் காண்போம் .


சதுர்விதா பாஜந்தேமாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜூந
ஆர்த்தோ ஜிக்யசூர்த்தார்தீ க்யாநி ச பரதர்ஷப

- பகவத் கீதை - 7 .16

அர்த்தம்:
பரதர்களின் சிறந்த அர்ஜுனா நான்கு விதமான நல்லோர் எனக்கு தொண்டு செய்கின்றனர் - துயருற்ரோர் , செல்வம் விரும்புவோர் கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவை தேடுவோர் என்பவர் ஆவார்

இத்தகு நான்கு விதமான மனிதர்கள் பக்தி தொண்டிற்காக பரம புருஷனிடம் வரும் போது , தூய பக்தர்களின் உறவால் தூய்மையடைந்து தரமும் தூய பக்தர்களாகி விடுகின்றனர் .