Sunday, May 15, 2011

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ?

Post
இந்த கேள்விகளுக்கு பக்தி திருமகன் "திரு.சுகி.சிவம் தன்னுடைய நினைப்பதும் நடப்பதும் புத்தகத்தில் தெளிவானதொரு பதிலை கொடுத்திருக்கிறார்".அதனை இங்கே தருகிறோம்........

இந்நாள் முதல்வரும் எந்நாளும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பவரும்மான கலைஞர் அவர்கள் எந்தாளும் முதல்வரான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி, விநாயகர் வழிப்பாடு பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.அதில் யோசிக்க வேண்டியவை சில,பதில் கூற வேண்டியவை பல.

!கும்பிட்ட விநாயகரை வீட்டில் வைக்காமல் இப்படி ஆற்றிலும்,குளத்திலும் எறிவதுதான் பக்தியா? என்று கேட்டு இருக்கிறார்.

அய்யா! விநாயகர் என்பது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் வெறும் சாமி பொம்மை அல்ல.இந்த பூமியின் உருவகம்.இந்த பூமியில் மனிதன் உண்டு,பூத ராட்ஸ கூட்டம் உண்டு,தெய்வீகதன்மை கொண்டவர்கள் உண்டு,விலங்குகள் உண்டு,எல்லாம் சேர்ந்ததுதான் பூமி.அதனால்தான் விலங்கு தலை,மனித உடல்,பூத ராட்ஸக் கால்கள்,தெய்வீகதன்மை கொண்டவராக விநாயகர் உருவானார்.நாங்கள் வாழ்வதற்க்கு உதவிய உலகத்தை வணங்குவதே விநாயகர் வழிபாட்டின் தத்துவம்.உலக உருண்டைதான் அவரது உருண்டைவயிறு.

இந்த உலகம் தண்ணீர் துப்பிய துண்டு. அதாவது கடலில் மூழ்கி இருந்த உலகம் கொஞ்சம்,கொஞ்சம்மாக நீர் வடிய,வடிய வெளியே வந்ததுதான் இந்த தரைப்பகுதி.இதுவும் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கடலால் உட்கொள்ளப்பட்டு வேறு ஒரு தரைப்பகுதி மேலே வரும்.இந்த உலகம்மானது இந்த கடல் விட்டுவைத்த மிச்சம்.இது கடலில் மறையக்கூடியது.அழியக்கூடியது.இதை உணர்தவே விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் வந்தது.

உலகம் மண்.அதனால்தான் வேறு எந்த வழிபாட்டிலும் இல்லாதபடி களிமண்ணே விநாயகராக வழிபடப்படுகிறது.பூமிதான் சாமி,சாமிதான் பூமி.இது விநாயகர் வழிபாட்டின் நுட்பம்.கடலில் இருந்து வெளிபட்டு நாம் வாழ வழி வகுக்கும் மண்[பூமி]கட்லில் மீண்டும் மறையும் என்பதை உணர்தவே களிமண் கணேசரை கடலில் கரைக்கும் முயற்சி.

கடல் இல்லாத ஊர்களில் குளங்களில்,ஏரிகளில்,குட்டைகளில் கரைப்பது மரபு.அந்த விநாயகர் தலையில், வயிற்றில், நெற்றியில்,காசை வைத்து கரைப்பது ஒரு சமூக சிந்தனை.அதாவது ஏரி குளம் வற்றும் போது இந்த காசுகளை எடுக்க கூடை கூடையாக மண்ணை வெளியில் கொண்டு வந்து கொட்டுவார்கள்.இதனால் ஏரி,குளம் ஆழம்மாகும்.மழை காலத்தில் நீர் பிடிப்பு அதிகம்மாகும்.உழைத்தவனுக்கு காசு கிடைக்கும்.

எனவே வீட்டிலேயே விநாயகரை வீட்டிலேயே வைத்து வழிபடுங்கள் என்ற உங்கள் யோசனையை விட ஏரி,குளம்,ஆறு, இவற்றில் கரைப்பது என்பதே சமய,சமூக உண்மைக்கான ஏற்ப்பாடு.


 
 

No comments:

Post a Comment