Saturday, March 3, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

வாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா?

மனிதனுக்கு வியாதி என்பதே வரக்கூடாது. தலைவலி வந்தால் தாங்க முடியாது. அவதிப்படும் போது, பல்வலி வந்தால் தலைவலி பரவாயில்லை என்று தோன்றும். வயிற்று வலி வந்தால் இவை இரண்டும் பரவாயில்லையே என்று தோன்றும். இதேபோல் மனிதன் பொருளாதாரத்தினாலும், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் போது தன்னைவிட தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குறைந்தவனை நினைத்தால் நமது கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றும். ஒருவனுக்கு பெரிய கஷ்டம் அல்லது ஆபத்து வரும்போது இதைவிட பெரிய ஆபத்திலும் கஷ்டத்திலும் உள்ளவனை நினைத்தால் இந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. இதற்கெல்லாம் பொறுமையும், தன்னடக்கமும், தெய்வ நம்பிக்கையும் வேண்டும். இன்று என்ன செய்வது என்று யோசிப்பதை விட முதலில் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையே ஒருவனது வாழ்க்கையை உயர்த்தும். வெற்றிக்கும் அதுவே சிறந்த வழி

இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்

மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?

தற்போது மலை தரிசனத்துக்கு மவுசு அதிகம் உள்ளது, கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. நன்றாகப் பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும் என்பார்கள். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை என்கிறார் சுந்தரர். சீபர்ப்பதம் என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். பர்வதம் என்றால் மலை. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். ஸ்ரீ என்பதையே தமிழில் சீ என்றார். மலைக்கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்

300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.


நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...
அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?


யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?
தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும்இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

மராட்டிய மாவீரர் சிவாஜி-இதுதான் உடும்புப்பிடி!


மராட்டிய மாவீரர் சிவாஜி இதுதான் உடும்புப்பிடி!

மராட்டிய மாவீரர் சிவாஜி, முகலாய வீரர்கள் தங்கியிருந்த கோண்டானா கோட்டையைக் கைப்பற்ற முடிவு செய்தார். அதைக் கைப்பற்றிவிட்டால், தங்களுக்கு மாபெரும் வெற்றி என்றார் அவரது அன்னை ஜீஜாபாய். அம்மா சொன்னதை சிவாஜி நிறைவேற்றாமல் இருந்ததில்லை. அங்கே 1500 வீரர்கள் காவல் காத்தனர். சிவாஜியிடம் இருந்ததோ 500 பேர் கொண்ட படை தான். அந்தக்கோட்டை மலை உச்சியில் இருந்தது. செங்குத்தான பாறைகளில் ஏற வேண்டும். ஒருவேளை எதிரிகளிடம் சிக்கிவிட்டால், அங்கிருந்து கீழே விழுந்து சாவதைத் தவிர வேறு வழியில்லை. அதைக் கைப்பற்றும் பொறுப்பை, சிவாஜியின் தளபதி தானாஜியும், அவரது சகோதரர் சூர்யாஜியும் ஏற்றுகொண்டனர். நள்ளிரவு வேளை... அப்போது, ஒருவன் மரப் பெட்டியுடன் வந்தான். அதைத் திறந்து ஏதோ ஒரு விலங்கை எடுத்தான். அது உடும்பு.
அதன் உடம்பில் ஒரு நீண்ட கயிறின் ஒரு முனையைக் கட்டினான். உடும்பை எடுத்து மலைச் சரிவில் வைத்து விசிலடித்தான். விசில் சத்தம் கேட்டதும் அந்த உடும்பு படபடவென ஏறியது. பாறையில் அது வேகமாக ஏறி உச்சியில் நின்றது. அவன் கயிறைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். உடும்பைக் கட்டிய கயிறை அவிழ்த்து, அங்கே இருப்பவர்கள் தூக்கத்தில் இருப்பதாக சைகை காட்டினான். உடனடியாக 500 பேரும் ஏறி மலைஉச்சியை அடைந்தனர். காவலாளிகளை சத்தமின்றி கொன்றனர். ஆனாலும், அங்கிருந்த படைகள் எப்படியோ, வீரசிவாஜியின் படைகள் வந்ததை அறிந்து அவர்கள் மேல் பாய்ந்தனர். கடும் சண்டையில் தானாஜி கொல்லப்பட்டார். தளபதியை இழந்த சிவாஜி படைகள் தயங்கினர்.
அவர்களிடம் சூர்யாஜி, 1500 பேருடன் 500 பேர் மோதுவது கடினமே, அதற்காக, இங்கிருந்து கீழே குதித்து சாவதை விட, இவர்களுடன் மூர்க்கமாகப் போராடி வீரமரணம் அடையலாம். இவர்களில் பலரையும் கொல்லலாம், என ஊக்கப்படுத்தினார். படைவீரர்கள் இந்த வீர உரையால் எழுந்தனர். 1500 பேரையும் வெட்டிச் சாய்த்தனர். தானாஜியின் மறைவைக் கேட்ட சிவாஜி, கர் ஒன்றுக்காக சிம்மத்தை இழந்தேனே, என வருந்தினார். கர் என்றால் கோட்டை. எனவே அந்தக் கோட்டைக்கு சிம்மகர் கோட்டை என்று பெயர் வைத்தார். ஒரு கோட்டையைப் பிடிக்க உதவிய அந்த உடும்பு இப்போது நற்பிறவி எடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கலிபுருஷன்


கலிகாலம் துவங்கிய நேரம். கலிக்கு அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான். மகாராஜா! நான் புதிதாக பூலோகம் வந்தவன். நான் தங்க இடம் கொடுங்கள், என்று கேட்டான். உஹும்...உயர்ந்த மன நிலையுடன் ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை, என்று மறுத்தான் பரீட்சித்து. அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சொல்லுங்கள், என்று கெஞ்சினான் கலி. சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகிய நான்கு இடங்களில் நீ தங்கலாம், என அனுமதித்தார் பரீட்சித்து.
நன்றி மகாராஜா! ஆனால், ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக் குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன், என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக்கட்டியைக் கொடுத்து, கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது, என்றார். கலிக்கு ஏக சந்தோஷம். நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான் தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகம் ஏற்படுத்துவேன், என்று கூறி விடைபெற்றான். கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம் எல்லாருக்குமே தெரியும்!

எல்லா பலனும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்து விடுபவரே மோட்சம் பெறுவார்,


எல்லா பலனும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்து விடுபவரே மோட்சம் பெறுவார்,

புண்ணியம் பெற பணத்தை பிறருக்கு வாரி இறைத்தால் மட்டும் போதுமா! அவ்வாறு கிடைக்கும் புண்ணியம் பிறப்பற்ற நிலையை தந்து விடுமா! இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத, கந்தசாமி என்ற பணக்காரர் தானதர்மத்தை தவறாமல் செய்து வந்தார். ஒருமுறை, துறவி ஒருவர்அவரது ஊருக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்ற கந்தசாமி, அவரைச் சந்தித்து, சுவாமி! நான் கடந்த 20 ஆண்டுகளாக செய்த தானத்தின் மதிப்பு 10 லட்சம். கடந்த வாரம் மட்டும் ஐந்து ஏழை மாணவர்கள் படிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பீஸ் கட்டியிருக்கிறேன். இந்த புண்ணியத்தால் எனக்கு மோட்சம் கிடைத்து விடுமா? என்றார். துறவி மனதுக்குள் சிரித்துக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை. மறுநாளும் கந்தசாமி வந்தார். அன்றைய தினம் பத்து ஏழைகளுக்கு 500 ரூபாய்செலவில் சாப்பாடு வாங்கித் தந்ததாகச் சொன்னார். அதற்கும் துறவி பதிலளிக்கவில்லை. ஆனாலும், கந்தசாமி விடுவதாக இல்லை.
தினமும், தன் அறப்பணியை துறவி யிடம் தெரிவித்து வந்தார். ஒருநாள், கந்தசாமி துறவியைச் சந்தித்து, அன்றைய தர்மக்கணக்கை சொன்னார். துறவி அவரை அழைத்துக் கொண்டு பல விஷயங்களைப் பேசிக்கொண்டே நடந்தார். வெயில் கடுமையாக இருந்தது. காலில் செருப்பு இல்லாததால், காலை ஊன்ற முடியாமல் தத்தளித்தார். அதைக் கவனித்த துறவி, என்னாச்சு என்றார். கால் சுடுகிறது என்ற கந்தசாமியை, அதற்கென்ன! உங்கள் நிழல் தான் முன்னால் விழுகிறதே! அதில் கால் வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றார். கந்தசாமி அவ்வாறே செய்ய முயல, நிழல் முன்னால் நகர்ந்தது. துறவி சிரித்தார். கந்தசாமி! உங்கள் நிழலே உங்களுக்கு உதவ மறுக்கும் போது, உங்களிடமுள்ள பணம் மட்டும் மோட்சத்தைக் காட்டி விடுமா என்ன! தானம் செய்வது அவசியம். ஆனால், பாவபுண்ணிய கணக்குப் பார்த்தோ, பலன் கருதியோ தானம் செய்தால் மறுபிறப்பைத் தவிர்க்க முடியாது. எல்லா பலனும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்து விடுபவரே மோட்சம் பெறுவார், என்றார்.

கடவுள் நினைப்பதே நடக்கும்!


மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது நல்ல கடமையாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற முடிவு, கடவுளின் கையில் தான் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிலருடன் ஆன்மிகம் குறித்த விவாதம் ஏற்பட்டது. கடவுள் நினைப்பதே நடக்கும், நம்மால் எதுவும் செய்ய முடியாது, என்று வாதிட்டார் சுவாமிஜி. இதை இரண்டு பயணிகள் மறுத்தனர். சுவாமிஜி, தன் கருத்தில் உறுதியாக நிற்கவே, ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. உம்மை தூக்கி கடலில் எறிகிறோம், உமது கருத்து சரியானால், கடவுள் உம்மைக் காப்பாற்றட்டும், என்றபடியே, அவரருகே சென்று தூக்க முயன்றனர். ஆனால், மனபலம் மிக்க சுவாமிஜி, அவர்களை உதறி தள்ளினார்.
இருவரையும் சேர்த்துக் கட்டி தூக்கினார். கடலுக்குள் வீச முயற்சிக்கையில், மன்னியுங்கள்! மன்னியுங்கள்! நீர் சொன்னது சரி தான்! விட்டு விடுங்கள்! என்று கதறினர். அவர்களை சுவாமி விட்டு விட்டார். இப்போது சொல்லுங்கள், என்னை கடலில் எறிய முயன்றது நீங்கள். ஆனால், உங்களை நோக்கியே அந்த அஸ்திரத்தைத் திருப்பினார் கடவுள். அது மட்டுமல்ல! உங்களை நான் கடலில் எறிய முயன்றேன். அதை உங்கள் கெஞ்சல் மூலம் தடுத்து நிறுத்தியதும் அவரது சித்தமே! என்றார். அவர்கள் வாய் திறக்காமல் சென்று விட்டனர்.

யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்


யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
முக்கிய உணவுமுறைகள்: நாம் எதை உண்ணுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்கிறது வேதம். நாம் உண்ணும் உணவில் புரதச் சத்து, கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் தாது உப்புகள் போன்றவை சரியான அளவு சேர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர் உடல் தேவைக்கேற்றவாறு உண்ணப் பழக வேண்டும். உணவை நன்கு மென்று கூழாக்கி, எச்சில் கலந்து மெதுவாக உண்ண வேண்டும். உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு நீரருந்தலாம். உண்டு அரை மணி நேரம் பின்பே நீரருந்த வேண்டும். பழ உணவருந்தி பின்பு உண்ணலாம். காபி, தேநீர், மற்றும் குளிர்பானங்கள் அறவே கூடாது. உப்பு, புளி, மிளகாய், எண்ணெய், நெய், பால் பொருட்கள் மிகக்குறைந்த அளவில் உண்ண வேண்டும். இரவு படுப்பதற்கு இரண்டு அரைமணி நேரத்திற்கு முன்பு உணவை முடித்து விட வேண்டும். வெள்ளைச் சீனி, உப்பு, மைதா மாவுப் பொருட்கள் ஆகியவை மிக்க தீங்கு விளைவிக்கும் பொருட்கள். (த்ரீ டேன்ஜரஸ் ஒயிட்) பழ வகைகளில்; பிஞ்சுக்காய், நன்கு பழுத்த பழம் உண்ணலாம். உணவு வகைகளினை மிகக் குறைவாகவோ, வயிறு முழுவதும் நிரம்பும் வகையிலோ உண்ண வேண்டாம். நன்கு பசித்த பின் புசிக்கலாம். தினம் ஒரு கீரை உண்ணவும். உணவில் அவல், சத்து மிகுந்த தானிய பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இரு உணவுகளுக்கு இடையில் குறைந்த பட்சம் 4 மணி நேர இடைவெளி விடவேண்டும். நொறுக்குதீனி நம் ஆயுளை குறைக்கும். கொட்டையுணவு (முந்திரி பிஸ்தா, பாதாம், தேங்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் (கிஸ்மிஸ், அத்தி, பேரிச்சம்பழம்) அவசியம் உணவில் இடம் பெற வேண்டும். தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் சமைத்தால் கொலஸ்ட்ராலைக் கூட்டி நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மலக்குடல் சுத்தமடைய நிறைய நீர் அருந்தி, நார்ச்சத்து உணவு உண்ண வேண்டும். தாகமெடுத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது எனப் பொருள். எனவே 3 முதல் 4 லிட்டர் வரை நீர் தினமும் குடிக்க வேண்டும். தினம் காலை காரட் சாறு, பீட்ரூட் சாறு, கொத்தமல்லிச்சாறு, கீரைச்சாறு, மூலிகைச்சாறு ஆகியவற்றில் ஏதாவதொன்றை அருந்தலாம். மதிய உணவில் அல்லது பாதி சமைத்த காய்கறி கலவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை இரவு வேளை உணவைத் தவிர்த்து உண்ணா நோன்பிருக்கலாம்.
மாதம் ஒருமுறை பழச்சாறு மட்டும் அருந்தி உண்ணா நோன்பிருக்கலாம். பெரும்பான்மையான அசைவ உணவு நச்சுப்பொருள் மிகுந்த உணவாகையால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை படுக்கையினை விட்டு எழுந்தவுடன் முழங்காலிட்டு அமர்ந்து 1 முதல் 2 குவளை மிதமான சூடுடைய நீரையோ அல்லது குளிர்ந்த நீரையோ பருக வேண்டும். டி.வி. பார்த்து கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது. தினமும் இருமுறை மலக்குடலில் சேரும் கழிவுப்பொருட்களை வெளிப்படுத்திப் பழக வேண்டும். மிக மெல்லிய தலையணை வைத்து உறங்க வேண்டும். தினமும் அதிகாலை காலாற 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடக்கவும். இதனை எந்த வயதினரும் (10 வயதினருக்கு மேல்) பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இரவு உண்ட பின்பு 15 முதல் 20 நிமிடம் வரை உலாவவும். பதப்படுத்தப்பட்ட உணவு, கலப்பட உணவு, சுவையூட்டப்பட்ட உணவு, சிந்தெடிக் ரகங்கள் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். மனம் சாந்தமாக இல்லாத போதோ, கவலையாக இருக்கும் போதோ, பசி இல்லாமல் இருக்கும் போதோ உணவருந்தக் கூடாது. அதிக உஷ்ணம், அதிக குளிர் ஏற்றப்பட்ட பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். முகச்சாயம், உதட்டுச் சாயம், சில்க் போன்ற துணிகள், ரசாயனம் அதிகமுடையவைகளை அறவே தவிர்க்க வேண்டும். உணவருந்தும் போது நீர் பருகக்கூடாது. இரவில் நேரம் தாமதமாக உணவருந்தக் கூடாது. இரவில் அதிக உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.கலந்து வாய் கொப்பளிக்கவும், தினமும் வாயின் மேற்சுவரிலுள்ள அசுத்தங்களை அகற்றி விடவும். காலை, மாலை இருவேளையும் கண்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தோலோடு உண்ணப் பழகவும். தினமும் சில நிமிடங்கள் பாட்டிலும், சிரிப்பிலும் மனதை ஈடுபடுத்துங்கள். தொலைக்காட்சிப் பெட்டிக்கும், உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நிர்ணயித்து அமரவும். அதிக நேரம் பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும்.
யோகத்தில் ஆசனத்திற்குப் பின்னுள்ள பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) பிரத்யாகாரம் (நிலையற்றவைகளை எல்லாம் துறத்தல்) தாரணம் (நிலையான உண்மைப் பொருளைப் பற்றிடம்) தியானம் (பற்றியதை விடாமல் எண்ணுதல்) ஆகியவற்றிலும் படிப்படியாக முன்னேறி சமாதியும் (ஆண்டவனுள் ஆழ்ந்து விடல்) கூடிட இறையருளை நாடிடுவோம்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணயாமம் பிரத்தியாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ்ச்சமாதி
அயமுறும் அட்டாங்கமாவது யோகமே
-திருமூலர்.

பிராணயாமத்தின் வகைகள்


உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
-திருமூலர்
பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன.
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்
நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியிøனை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம்-மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்-மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம்-மூச்சை வெளிவிடுதல்
சூன்யம்-மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்
பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பு மேலோங்குகிறது. உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75% விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து விடும். ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும். நம் வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரண மண்டலத்தைச் சீராக்கும். குரல் வளம் மிகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும்.
உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.
சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது மிக நல்லது. வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின் செய்ய வேண்டும். பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம், பிராணயாமம் செய்வதே நல்லது. இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ பிராணயாமம் செய்யக்கூடாது. நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும். எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச் சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
(ஆசனத்திற்குப் பின் யோகம்)
காலை, மாலை குளித்த பின் செய்வது நல்லது. இல்லாவிடில் பிராணயாமம் செய்த பின் அரைமணி நேரம் கழித்தே குளிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டும்.ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தலை, கழுத்து, முதுகு தண்டு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். வாய், நாக்கு சுத்தமாக கழுவப்பட்டிருக்க வேண்டும். உடல் நலமற்ற நாட்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழல் காரணமின்றி இதர எல்லா நாட்களும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவால் மட்டுமே வெற்றி இலக்கினை அடைய முடியும்.
பிராணயாமத்தில் வகைகளில் சில
1. முக பஸ்த்திரிக வலிந்த உள் வெளிமூச்சு: கண்களை மூடிச் செய்ய வேண்டும். ஆசனத்தில் அமர்ந்து இருகைகளையும் மேலே தூக்கும் போது மூச்சை இழுத்து கீழிறக்கும் போது சத்தமாக வெளியிடவும். சிறிது சிறிதாக வேகமாக உள்மூச்சு, வெளிமூச்சு என்று ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 60 முறை செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலுக்கு அதிக பிராண வாயு செல்லும். மனஅழுத்தம் நீங்கும். கரியமில வாயு மற்றும் நச்சுப் பொருட்கள் பெருமளவு உடலை விட்டு நீங்கும். மூளையின் முன்புறத்தில் பெருமளவு இரத்தம் சென்று அப்பகுதியினை மிக மென்மையாக அதிர வைக்கும். மனநோய் நீங்கும். ஆண்மை பெருகும். நரம்பு மண்டலங்களும் நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப் பெறும். மற்றும் பல நன்மைகள் பெருகும்.
எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் இருதய நோய், ஹிஸ்டீரியா உள்ளவர்கள் இந்தப் பயிற்சியினைச் செய்யக்கூடாது. முதன் முறையாகச் செய்பவர்கள் பயிற்சி ஆசிரியரின் உதவியுடன் செய்தல் மிக முக்கியம்.
2. கபாலபதி: கண்களை மூடி வலது கையினை நாசிக முத்திரையில் வைத்து செய்ய வேண்டும். பெருவிரலால் வலது நாசியினை அடைத்து இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பிறகு வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். 1 நிமிடத்திற்கு 10 முதல் 60 வரை செய்யலாம். பின்பு மோதிர விரலால் இடது நாசியினை அடைத்து வலது நாசி வழியாக அதே போல் செய்ய வேண்டும்.
பலன்கள் : முக பஸ்த்திரிகாவின் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
3. சுகப்பூர்வ பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் வைத்து ஒரே நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து வெளி விடுவது மூச்சை முதலில் வெளிவிட்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் உள்மூச்சு, வெளிமூச்சு 1:1 என இருக்கலாம். மெதுவாக 1:2 என்ற நிலைக்கு மாறி விட வேண்டும். முதலில் இடது நாசியில் (சந்திர நாடி) முறையும் பின் வலது நாசியில் (சூரிய நாடி) முறையும் செய்து மெதுவாக எண்ணிக்கையினை உயர்த்தலாம்.
பலன்கள் : இரத்த அழுத்தம் இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை நோய், முதுகுவலி, மூட்டு வலி, தூக்கமின்மை, சோம்பல், ஞாபக மறதி போன்ற பல நோய்கள் குணமாகும்.
4. நாடி சுத்தி பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் மூச்சினை வெளியிட்டு ஆரம்பிக்க வேண்டும். வலது நாசியினை அடைத்துக் கொண்டு இடது நாசியில் மூச்சினை உள்ளிழுத்து (பூரகம்) பின் இருநாசிகளையும் அடைத்துக் கொண்டு (கும்பகம்) வலது நாசி வழியே மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும் (ரேசகம்).
பிறகு அதே போல வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி இடது வழியாக வெளியிட வேண்டும்.
கால அளவு : ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால் 1:1:1 என்று செய்து சில நாட்களில் 1:2:1 என்று நீட்டி பிறகு 1:4:2 என்ற அளவில் செய்யலாம்.
பலன்கள்: 72,000 நாடிகளும் (ட்யூபுலர் சேனல்ஸ்) சுத்தப்படுத்தப்படுகின்றன. நுரையீரலின் கொள்ளளவு மிகும். ஆஸ்துமா, ஈஸ்னோ பிலியாசைனஸ் மற்றும் பல நோய்களை வேரோடு அழிக்கலாம். நினைவாற்றல் பல மடங்கு பெருகும். அலைபாயும் மனது ஒடுங்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். உளவியல் ரீதியான பிரச்சனைகள், மனோ பயம் நீங்கும்.
எச்சரிக்கை : பயிற்சியாளரின் உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது. இதய நோயாளிகள் கும்பக நிலையில் மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது நோயின் தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த மாத்திரையில் செய்ய வேண்டும்

பரசுராமர்

ஜமதக்கனி முனிவர்- ரேணுகா தம்பதியின் மகன் பரசுராமர். பதிவிரதையான ரேணுகா தினமும் குளத்துக்கு சென்று, பச்சை மண்ணில் பானை செய்து, பூஜைக்குரிய தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். ஒருநாள் குளத்துக்கு சென்று தண்ணீர் எடுக்க சென்ற போது, சித்திரரதன் என்பவன் தன்னுடைய மனைவியருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த ரேணுகா மதி மயங்கினாள். (இதே கதையை ஒரு கந்தர்வனின் நிழல் தண்ணீரில் தெரிந்ததாகவும், அதை ரேணுகா பார்த்து மயங்கியதாகவும் சொல்வர். கர்நாடகத்தில், சற்று வித்தியாசப் படுத்துகிறார்கள்) இதனால் அவளது கற்புத்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டது. இதனை ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்கனி, பெற்ற தாயை கொல்லுமாறு பரசுராமருக்கு உத்தரவிட்டார். பரசுராமரும் அதைச் செய்தார். இதற்கு பிராயச்சித்தமாக சிவனை நோக்கி தவம் இருந்தார்

வியாபாரிகள் கடைவாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது சரிதானா?

 வியாபாரிகள் கடைவாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது சரிதானா?

மஞ்சள் மகாலட்சுமி போன்றது. காலில் படும்படியாக இதனைத் தெளிக்கலாமா? சாணம் மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத்தருவது. இதனால் இதனை தெளிக்கலாம்.

** ஒரு நல்லவன், கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்தால் இறையருள் பெறுவானா?

நல்லவனாக வாழ்வதற்கே இறையருள் பெற்றிருக்க வேண்டுமே! கடவுள் நம்பிக்கை உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றோ, நம்பிக்கை இல்லாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் இல்லை. ""இவருக்குக் கடவுளைப் பிடிக்கவில்லை என்றாலும், கடவுளுக்கு இவரைப் பிடிக்கிறதே,'' என்று கூட சுவாரஸ்யமான பேச்சு எழுவதைக் கேட்டிருப்பீர்களே!

* வீட்டில் கிளிகளை வளர்க்க விரும்புகிறோம். சாஸ்திரம் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

"கூண்டுக்கிளி' என்ற சொல் உண்டு. சுதந்திரம் இழந்தவர்களுக்கு உதாரணமாக இதைச் சொல்வார்கள். சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல! பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே அவற்றின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் வளர்க்கலாம்.

* கோயிலைப் போல, வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?

வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கையே உபயோகிக்க வேண்டும். காற்றில் ஆடக்கூடிய சரவிளக்கு, தூண்டா விளக்கு ஆகிய தொங்கும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. அதாவது, வீட்டில் எரியும் விளக்குகள் ஆடக்கூடாது.

* ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுகிறேன். அவர்களுக்கு காவி வஸ்திரம் தான் அணிவிக்க வேண்டுமா? அல்லது வெள்ளை, மஞ்சள் துணிகளையும் அணிவிக்கலாமா?

ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் போன்றோர் தமக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் உலக மக்களுக்காகத் தொண்டாற்றியவர்கள். இந்து சநாதன தர்மத்தின் அடிப்படையில் மக்களிடையில் ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். மக்கள் நலனுக்காக உலக சுக போகங்களைத் தியாகம் செய்தவர்கள். எளிமையாக வாழ காவி அணிந்த மகான்கள். இவர்களின் சிலைகளுக்கு காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்தச் சிலைகளைப் பார்க்கும் பொழுது, அவர்கள் செய்த தியாகத்தையும், தொண்டையும் நினைவில் கொண்டு நாமும் முடிந்ததைச் செய்யவும், காவி ஆடையைப் பார்த்து எளிமையாக வாழவும் பழகிக் கொண்டால் மனசாந்திக்கு குறைவிருக்காது. 

Friday, March 2, 2012

** யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?


** யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?

இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

* கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது?

மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

*ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட
சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?

*வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா?

வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

* ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்?

மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

நிழல் கூட உதவாது!

புண்ணியம் பெற பணத்தை பிறருக்கு வாரி இறைத்தால் மட்டும் போதுமா! அவ்வாறு கிடைக்கும் புண்ணியம் பிறப்பற்ற நிலையை தந்து விடுமா! இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத, கந்தசாமி என்ற பணக்காரர் தானதர்மத்தை தவறாமல் செய்து வந்தார்.
ஒருமுறை, துறவி ஒருவர் அவரது ஊருக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்ற கந்தசாமி, அவரைச் சந்தித்து, ""சுவாமி! நான் கடந்த 10 ஆண்டுகளாக செய்த தானத்தின் மதிப்பு 5 லட்சம். கடந்த வாரம் மட்டும் ஐந்து ஏழை மாணவர்கள் படிப்பதற்கு 30ஆயிரம் ரூபாய் பீஸ் கட்டியிருக்கிறேன். இந்த புண்ணியத்தால் எனக்கு மோட்சம் கிடைத்து விடுமா?'' என்றார்.
துறவி மனதுக்குள் சிரித்துக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை. மறுநாளும் கந்தசாமி வந்தார்.
அன்றைய தினம் பத்து ஏழைகளுக்கு 300ரூபாய் செலவில் சாப்பாடு வாங்கித் தந்ததாகச் சொன்னார். அதற்கும் துறவி பதிலளிக்கவில்லை. ஆனாலும், கந்தசாமி விடுவதாக இல்லை.
தினமும், தன் அறப்பணியை துறவியிடம் தெரிவித்து வந்தார்.
ஒருநாள், கந்தசாமி துறவியைச் சந்தித்து, அன்றைய தர்மக்கணக்கைச் சொன்னார். துறவி அவரை அழைத்துக் கொண்டு பல விஷயங்களைப் பேசிக்கொண்டே நடந்தார். வெயில் கடுமையாக இருந்தது. காலில் செருப்பு இல்லாததால், காலை ஊன்ற முடியாமல் தத்தளித்தார்.
அதைக் கவனித்த துறவி, "" என்னாச்சு'' என்றார்.
""கால் சுடுகிறது'' என்ற கந்தசாமியை, ""அதற்கென்ன! உங்கள் நிழல் தான் முன்னால் விழுகிறதே! அதில் கால் வைத்துக் கொள்ள வேண்டியது தானே'' என்றார். கந்தசாமி அவ்வாறே செய்ய முயல, நிழல் முன்னால் நகர்ந்தது.
துறவி சிரித்தார்.
""கந்தசாமி! உங்கள் நிழலே உங்களுக்கு உதவ மறுக்கும் போது, உங்களிடமுள்ள பணம் மட்டும் மோட்சத்தைக் காட்டி விடுமா என்ன! தானம் செய்வது அவசியம். ஆனால், பாவபுண்ணிய கணக்குப் பார்த்தோ, பலன் கருதியோ தானம் செய்தால் மறுபிறப்பைத் தவிர்க்க முடியாது. எல்லா பலனும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்து விடுபவரேமோட்சம் பெறுவார்,'' என்றார்.

நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும்.


 நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும்.

மகாபாரத யுத்தத்தின் முடிவு சமயம்! பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
ஒரு ஞானியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் தனது சாவுக்காக பயப்படுபவரும் அல்ல. கவுரவர்களுக்காக போர் செய்து தோற்றுப் போனதற்காகவோ, அவர்களின் மரணத்திற்காகவோ கலங்குபவரும் அல்ல! அப்படியானால், எதற்காக அழுகிறார் என்ற சந்தேகத்துடன் கிருஷ்ணர் அவரை அணுகினார். கவுரவர்களும், பாண்டவர்களும், திரவுபதியும உடன் நின்றனர்.
""மகாத்மாவே! ஏன் அழுகிறீர்கள்! ஞானியான தங்கள் கண்ணில் நீர் வழிகிறதென்றால், அதற்கு அர்த்தமில்லாமல் இருக்காதே!'' என்றார் கிருஷ்ணர்.
""கிருஷ்ணா! அறியாதவன் போல் பேசுகிறாயே! எவ்வளவோ இழப்புகள்! பாண்டவர்களுக்காக கடவுளின் அவதாரமாக நீயும் இருக்கிறாய். ஆனாலும், அவர்களின் கஷ்டம் தீரவில்லை, பிரச்னைக்கு முடிவும் கிடைக்கவில்லை. அதை நினைத்து அழுகிறேன்,'' என்றார்.
கண்ணன் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.
அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
சூதாட்டம் தவறு என்று தெரிந்தும் தர்மர் சூதாடினார். அதிலும், மனைவியை பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். இந்த கொடிய செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டாமா! நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும். அதை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

குளிகையின் கதை

குளிகையின்  கதை 

ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.
""குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.
“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.
அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.
“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
""உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன்
இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
""நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது
அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.
இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.
""சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.
""அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
""புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார்.
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.
இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
""இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
""யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும்
மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,''என்றார் சனீஸ்வரர்.
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

பெரியவரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.

பெரியவரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம். 

பல ஆண்டுகளுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றிய ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி காஞ்சிப்பெரியவரை சந்தித்து ஆசி பெற விரும்பினார்.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம், காஞ்சிபுரத்துக்கு வருவதாகவும் பெரியவரைத் தரிசிக்க ஏற்பாடுகளைச் செய்யும்படியும் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பழம், பூ, பூஜைப்பொருட்களை ஊழியர்கள் மூலம் வாங்கச் சொல்லியிருந்தார். குறிப்பிட்ட நாளில், பூஜைப் பொருள் கூடைகளுடன் பெரியவர் முன் வந்தார்.
பெரியவர், சீடர்களை அழைத்து அவற்றை அங்கிருந்து அகற்றும்படி கூறினார்.
அதிகாரியிடம், ""உங்களிடம் பணியாற்றும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு செலவு வைத்தீர்கள்? விருப்பத்துடன் இதை யாரும் செய்திருக்க மாட்டார்கள். உங்கள் வருமானத்தில், ஒருமுழம் பூ மட்டும் வாங்கி வந்தாலும் எனக்கு போதும். இதுவும் ஒருவகை லஞ்சம் தான். அரசு அதிகாரியான நீங்களே இதைச் செய்யலாமா?'' என்று புத்திமதி கூறி பிரசாதம் வழங்கினார். பெரியவரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம். 

எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்.


எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்

ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.
""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.
கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான்.
ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல்,
""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. "ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை, நிகழ்காலமாக்கி விட்டாயே,'' என்றார்.
""சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களை கூட்டி வருகிறேன்,'' என சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.
எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்.

உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்..புரிகிறதா!


பேசுவதை உச்சரிப்பு பிறழாமல் கேட்க வேண்டும். தவறாகக் கேட்டு விட்டு ஒழுங்கான பதிலை எதிர்பார்த்தால் அதெப்படி கிடைக்கும்?
பதஞ்சலி முனிவரை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் ஆதிசேஷனின் அம்சம். பாற்கடலில் பெருமாளைச் சுமந்த இவர், ஒருமுறை பெருமாளின் பாரம் தாங்காமல் கஷ்டப்பட்டார். ""பெருமாளே! திடீரென ஏன் பாரம் கூடியது?'' ""சிவனின் நடனம் கண்டேன், என்னமாய் ஆடுகிறார், உடலே பூரித்து விட்டது. அதனால் எடை கூடிவிட்டது,''.
""அப்படியா! அப்படி ஒரு ஒப்பற்ற நடனத்தை நானும் பார்க்க வேண்டுமே!''
""சரி, தில்லைக்கு போ, பார்க்கலாம்,''.
இப்படியாக பூலோகம் வந்தவர் பதஞ்சலி. மனித முகம், பாம்பு உடல். இவர் இலக்கணத்தில் வல்லவர். இவரைப் போலவே, பாணினி என்பவரும் இலக்கண வித்தகர்.
ஒருமுறை, பாணினி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பதஞ்சலி முகத்தை தண்ணீரின் மேல் வைத்தபடி பாம்பு உடலுடன் மிதந்து வந்தார்.
அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்து""கோர்பவா?'' என்றார். அந்தச் சொல்லில் இலக்கணப்பிழை இருந்தது. அதனால், பதஞ்சலி சற்று கோபத்துடன், ""ஸபோஹம்'' என்றார்.
பதிலிலும் இலக்கணப்பிழை இருந்ததால், பாணினி முகத்தை சற்று கடுமையாக்கிக் கொண்டு, ""ரேதா: குத்ர கதா:'' என்றார்.
இதன் பொருளைப் பார்க்கலாம்.
"கோர் பவா என்றால் "நீங்கள் யார்?' என்று பொருள். அதற்கு "கோ பவா' என்பது தான் சரியான உச்சரிப்பு.
"ஸபோஹம்' என்றால் "பாம்பு'. அதற்கு "ஸர்ப்போஹம்' என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.
"ரேதா குத்ர கதா' என்றால், "ஒரு எழுத்தை விட்டு விட்டு ஏன் பதில் சொன்னீர்' என்பதாகும்.
பாணினி "ர்' என்ற எழுத்தை விட்டுக் கேட்டதால், பதஞ்சலியும் எரிச்சலில் "ர்' என்பதை எடுத்துவிட்டு பதில் சொன்னார். இருவருமே இலக்கணப் புலிகள் தான். ஆனாலும், உச்சரிப்பால் பிரச்னை வந்தது. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்..புரிகிறதா!

ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும்



ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும்

சுவாமி! கயிலைமலைக்கு வந்து யாத்திரை முடிப்பவர்களுக்கு புண்ணிய கதி கிடைக்கிறது. காசி வந்து கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதி என்ன?'' என்று சிவனிடம் கேட்டாள் பார்வதிதேவி.
""உனக்குத் தெரிய வேண்டுமா? என்னுடன் வா!'' என்று காசிக்கு அவளை அழைத்துச்சென்றார் சிவன். பார்வதிதேவி ஒரு மூதாட்டியாக உருவத்தை மாற்றிக் கொண்டாள். சிவபெருமான் தொண்டுக் கிழவரானார். விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் அவர்கள் நின்றனர்.
கிழவருக்கு மூச்சு வாங்கியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டார். கிழவி போவோர் வருவோரைப் பார்த்து, ""ஐயா! அம்மா! என் கணவருக்கு உயிர் பிரியும்நிலை வந்துவிட்டது. யாராவது கொஞ்சம் கங்கை நீர் கொண்டு வந்துவாயில் விடுங்களேன். என்னால் எழுந்து போக முடியவில்லையே...'' என்று கை குவித்துக் கெஞ்சினாள்.
யாரும் உதவ முன்வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் காரியமே முக்கியமாக இருந்தது. காசிக்கு வந்தவர்கள் கங்கையில் நீராடப் போனார்கள். கங்கையில் நீராடியவர்கள் விஸ்வநாதரைத் தரிசனம் செய்யப் போனார்கள். கங்கை நீரைச் செம்பில் கொண்டு சென்றவர்கள், அதைக் கிழவரின் வாயில் ஊற்றி வீணாக்க விரும்பவில்லை.
இருட்டாகிவிட்டது. போவோர் வருவோர் குறைந்துவிட்டனர். ஒரு திருடன் வந்தான். அவன் கையில் இருந்த செம்பில் கங்கை நீர் இருந்தது. கிழவரின் நிலையைப் பார்த்து அவனது மனம் இரங்கிற்று. காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, பிடித்துக் கொள்வார்களே என்ற பயமிருந்தாலும், மண்டியிட்டு அமர்ந்து கிழவரின் வாயில் கங்கை நீரை ஊற்றப் போனான்.
""ஐயா! கொஞ்சம் நில்லும். கங்கை ஜலம் ஊற்றியதும் இவரது உயிர் பிரிந்துவிடும். அதனால், உமது வாழ்க்கையில் செய்த நல்ல காரியம் ஏதேனும் ஒன்றைச் சொல்லியபடியே, அவர் வாயில் கங்கை நீரை விடும்!'' என்றாள் கிழவி.
அவன், எவ்வளவு யோசித்தாலும் நல்லது எதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அப்படி எதையாவது செய்திருந்தால்தானே? அதேசமயம் பொய் சொல்லவும் மனம் துணியவில்லை.
""அம்மா! நான் இதுவரை நற்செயல் எதையுமே செய்ததில்லை. தீயசெயல்கள் நிறைந்த என் வாழ்க்கையில், முதல் தடவையாக இந்த நல்ல காரியத்தை செய்கிறேன்!'' என்று சொல்லிய படியே வாயில் கங்கை நீரை ஊற்றினான்.
அடுத்த நிமிடம், இறைவனும், அம்பாளும் உருவை மாற்றி, அந்தத் திருடனுக்குத் தரிசனம் கொடுத்தனர்.
""அன்பனே! உனக்கு முக்தி அளிக்கிறேன். உனக்கு அளிக்காமல் வேறு யாருக்கு அளிக்க முடியும்? உன் மனத்தில் இரக்கம் இருந்தது. கையில் கங்கை நீர் இருந்தது. வாக்கில் சத்தியம் இருந்தது. இதைவிட முக்தியைப் பெற வேறு என்ன தகுதி வேண்டும்?'' என்று கூறி மறைந்து போனார்.
ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும் என்பது பார்வதிதேவிக்கு விளங்கிவிட்டது.

வேலை செய்வதற்கு முன்பே பணத்தை வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா

வேலை செய்வதற்கு முன்பே பணத்தை வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா
வேலை செய்வதற்கு முன்பே பணத்தைப் பெறுவது,
" இப்படி வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா? மதுரை சொக்கநாதர் தான். வெள்ளம் பெருக்கெடுத்தோடிய வைகையின் கரையை அடைக்க வீட்டுக்கொரு ஆள் வரும்படி மன்னர் உத்தரவிட்டார்.
வந்தி என்னும் சிவபக்தை, முதுமை காரணமாக, தனக்கு பதிலாக, அங்கு வந்த ஒரு வேலையாளை அனுப்பினாள். வந்தது சிவன் என அவளுக்குத் தெரியாது. ""தம்பி! எனக்காக கரையடைக்கச்செல். நான் விற்கும் பிட்டை கூலியாக வாங்கிக் கொள்,'' என்றாள். அவளைச் சோதிக்க எண்ணிய சிவன், வேலையைத் தொடங்கும் முன்னே கூலி தரும்படி கேட்டார். அவளும் சம்மதித்து சூடான பிட்டைக் கொடுத்தாள். சிவனும் வாயில் போட்டுக் கொண்டு ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். "சேலரி அட்வான்ஸ்' வாங்குவது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது.

பிரகலாதனின் துடிப்பு மிக்க பக்தி!

இரண்யனின் சேவகர்கள் பிரகலாதனை மலை மேலிருந்து உருட்டிக் கீழே தள்ளினர். உடம்பில் மற்ற பகுதிகளில் காயம் படுவது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால், மார்பில் அடிபடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். கைகளால் மார்பை மறைத்துக் கொண்டு உருண்டான். காரணம் என்ன தெரியுமா! தன் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் பரம்பொருளான விஷ்ணுவுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாதே என்ற துடிப்பு மிக்க பக்தி!
உள்ளத்தை கடவுளின் இருப்பிடமாக எண்ணி மனிதன் வாழவேண்டும். நமக்குள் அந்தர்யாமியாக (மறைந்து) விஷ்ணு வீற்றிருக்கிறார் என்கிறது வேதம். "மாதவனை இதயத்தில் பிரதிஷ்டை செய்து பக்தி என்னும் பூவால் அர்ச்சித்து மகிழுங்கள்' என்று பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.

மிருகசீரிட நட்சத்திரம்


ஆதிசங்கரர் சிரகசன் என்னும் காபாலிகனுக்கு (நரபலி கொடுப்பவன்) நட்சத்திரக் கதை ஒன்றைச் சொன்னார்.
வேடன் ஒருவன் மானை விரட்டினான். பாய்ந்து சென்ற மானின் கொம்பு, கொடி ஒன்றில் சிக்கியது. வேடன் அதைக் கொல்ல முயன்ற போது ""கொஞ்சம் பொறு! என் மனைவியிடம் சொல்லி விட்டு வந்து உனக்கு உணவாகிறேன்,'' என்றது. இரக்கம் கொண்ட வேடனும் அனுப்பி வைத்தான். சற்று நேரத்தில் ஆண் மானுடன் பெண் மானும் அதன் இருகுட்டிகளும் அவன் முன் வந்து நின்றன.
""ஒருவரை விட்டு ஒருவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடு,'' என்று பெண்மான் வேடனிடம் சொன்னது. மிருகஜாதியிலும் கூட நாணயமும், பாசபந்தமும் இருப்பதை அறிந்த வேடன் மலைத்தான்.
அவனுள் இரக்கம் ஊற்றெடுத்தது. அம்பும், வில்லும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட சிவன், அம்பிகையோடு எழுந்தருளி வேடனுக்கு மோட்சமளித்தார். மான்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்தார். அவை வானமண்டலத்தில் மிருகசீரிடம் என்னும் நட்சத்திரமாகும் பேறு பெற்றன. இந்நட்சத்திரத் தொகுதியில் நான்கு நட்சத்திரங்கள் உள்ளன.மிருகசீரிட நட்சத்திரத்தினர் தங்களை வாக்குத் தவறாதவர்கள், எக்காரணத்தாலும் உயிருக்கு பயப்படாதவர்கள், பாசத்திற்கு கட்டுப்படுபவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம்.

பெரிய குடும்பஸ்தன்'



பாவம் செய்யும் கொடியவர்களையும், தன்னை எதிர்த்து நாத்திகம் பேசுபவர்களையும் கூட, கடவுள் ஒருபோதும் வெறுப்பதில்லை. அவர்களும் திருந்த வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார். ""அப்பனே! தெரியாத்தனமாக இவ்வளவு காலம் பாவம் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு!'' என்று உள்ளம் உருகினால் போதும். ஏற்று அருள்புரிய ஓடிவருவார். குணம் கெட்ட பிள்ளையை வெறுக்காமல் அன்பு காட்டி திருத்த முயற்சிக்கும் தாயாக அவர் இருக்கிறார். அந்த குணத்தை "வாத்சல்யம்' என்று குறிப்பிடுவர். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அதன் தலைவராக இருப்பவர் கடவுள். அதனால், அவரை "பஹு சம்சாரி' என்று சொல்வர். இதற்கு "பெரிய குடும்பஸ்தன்' என பொருள்

மகாமக குளத்தில் நீராடும் மாதங்கள்


மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், ÷க்ஷத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை வெட்டியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.

  மகாமக குளத்தில் நீராடும் மாதங்கள்
ஒரு சமயம், உலகம் அழியும் நேரம் வந்தது. சிவனின் அறிவுரைப்படி, பிரம்மா, அமுதத்தை மண்ணில் பிசைந்து குடம் செய்தார். அதில் உலக உற்பத்திக்கான பீஜ(மூலம்) தொகுப்பை பத்திரப்படுத்தி மேருமலையில் வைத்தார். பிரளய வெள்ளத்தில் மிதந்தகுடம் தென்திசை நோக்கி வந்து கரை சேர்ந்தது. சிவன் வேடனைப் போல் வந்து, அக்குடத்தை அம்பால் உடைத்தார். அதில் இருந்த அமுதம் பூமியில் சிந்தியது. அந்த இடமே மகாமகக்குளமாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாசிமக நாளில் நிகழ்ந்தது. எல்லா புனித நதிகளும் குளத்தை வந்தடைந்தன. சிவபெருமான் பார்வதியுடன் நந்திவாகனத்தில் காட்சியளித்தார். பிரம்மா, அஷ்டதிக் பாலகர்கள், சப்தமாதர், இந்திராதி தேவர்கள் அனைவரும் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். இக்குளத்தில் மாசி, சித்திரை, கார்த்திகை மாதங்களில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்று கும்பகோணம் தலவரலாறு கூறுகிறது.

வசதியிருந்தால் தங்கம் தானம் செய்யலாம் 




கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்கு, மேற்கு கரைகள் நீள்சதுரமாகவும், வடக்கு,தெற்கு கரைகள் சற்று உள் வளைந்தும் இருக்கும். உயரத்தில் இருந்து பார்த்தால் குடம் போல காட்சியளிக்கும். அமுதகுடத்தை நினைவூடடும் விதத்தில் இந்த அமைப்பு காணப்படுகிறது. மாசிமகத்தன்று, இங்கு புனித நீராடுவதுடன், தானமும் அளிக்க வேண்டும். அச்சுதப்ப நாயக்கரின் மந்திரியான கோவிந்த தீட்சிதர், தன் எடைக்கு எடை தங்கத்தை அந்தணர்களுக்கு வழங்கிய சரித்திரம் உண்டு. குளக்கரையில் உள்ள பிரம்ம தீர்த்தேஸ்வரர் துலாபார மண்டபத்தில் தீட்சிதர் தானம் அளித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பொன்னிறமுடைய குரு, பொன்நிறக் கதிர்களை வீசும் சூரியன் ஆகிய இருகிரகங்களிடம் இருந்தும் காந்த ஆற்றலைப் பெற, பொன் தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. வசதி இருப்பவர்கள் செய்யலாமே

இவரை நினைப்பவர்களுக்கு தாலிபாக்கியம் நீடித்திருக்கும்.


1621ல் நடந்த சம்பவம் இது. ராகவேந்திர சுவாமிகளின் நிஜப்பெயர் வேங்கடநாதன். இல்லறத்தில் நாட்டமில்லை.
கலைவாணியின் உத்தரவுப்படியும், தன் குருவின் விருப்பப்படியும் துறவு பூண முடிவெடுத்தார்.
அதே நேரம், மனைவி சரஸ்வதியும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தன் சகோதரருடன் அவர்களை அனுப்பி வைத்தார். பின், குருநாதர் சுதீந்திரரைச் சந்தித்து துறவுக்கு சம்மதம் தெரிவித்தார். காவியுடை அணிந்தார்.
அவரது காதில் மந்திரம் ஓதி, தீர்த்தம் வழங்கப்பட்டது. சந்நியாசியானதும், "ராகவேந்திர தீர்த்தர்' என்று பெயர் சூட்டப்பட்டது.
கணவர் துறவியான தகவல், சரஸ்வதிக்கு தெரிய வரவே, அவர் அடைந்த வேதனைக்கு அளவில்லை. வாழ்வதில் பயனில்லை என நினைத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பேயுருவில் அலைந்தார்.
ஒருமுறை, ராகவேந்திரர் முன் அந்தப்பேய் வந்தது. தன் வாழ்க்கை தொலைந்து போனது பற்றி அழுதது. தற்கொலை செய்தவர்களின் ஆத்மா எளிதில் சாந்தியடைவதில்லை. ராகவேந்திரர் பரிதாபப்பட்டார்.
புனிதநீரை பேய் மேல் தெளித்தார். சரஸ்வதி ஆத்மசாந்தி அடைந்தாள். அப்போது, ""பெண்ணே! சுமங்கலி பூஜை செய்யும் போது நீ நினைவில் கொள்ளப்படுவாய்,'' என்று அருளினார். சரஸ்வதிக்கு முக்தியாகிய பிறவாநிலை கிடைத்தது.
வீடுகளில் சுமங்கலி பூஜை செய்யும் போது, ராகவேந்திரர் அருளியபடி சரஸ்வதி அம்மையாரை நினைவில் கொள்ளுங்கள். அவரை நினைப்பவர்களுக்கு தாலிபாக்கியம் நீடித்திருக்கும்.

விநாயகர் அகவல்

ஒளி வடிவமாகிய விநாயகப் பெருமானை, ஒலிவடிவிற்காட்டி அவரது அமைப்பையும் அருளையும் புகழ்ந்து கூறும் தோத்திர நூல் விநாயகர் அகவல். அவ்வையார், தான் பெற்ற அருள் அனுபவத்தை விநாயகரைப் புகழ்ந்து போற்றும் ஸ்தோத்திரமாகவும், இயக்கிப் பழகும் தொழில்நுட்பச் சாத்திரமாகவும் அருளியுள்ளார். பக்தர்களுக்குப் பூஜை நூலாகவும், யோகா பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சிக் கையேடாகவும் விளங்குகிறது.
"விநாயகர்' என்றால், தலைவருக்கெல்லாம் தலைவர். "அகவல்' என்பது தமிழ்ப்பா வகைகளுள் ஒன்று. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை தமிழின் நான்கு பாவகைகளில், ஆசிரியப்பாவின் இன்னொரு பெயர் "அகவல்பா'. "அகவல்' என்றால் "அழைத்தல்'. மயில் எழுப்பும் ஓசை "அகவல் ஓசை'. பறவைகள் தம்இனத்தை அழைக்கும் ஒலிகளைக் கூர்ந்து கேட்டு அவற்றின் ஒலி அமைப்பில் நுட்பமான வேற்றுமை கண்ட பழந்தமிழர்கள், பறவைகளின் ஒலிகளுக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். "குயில் கூவுகிறது; மயில் அகவுகிறது; காக்கை கரைகிறது; என்று பறவை ஒலிகளை வேறுபடுத்தியது போலவே பாவகைகளையும் ஓசையின் அடிப்படையில் வெவ்வேறாக வகுத்தனர். அகவல் ஓசை உடையது அகவல்பா.
விநாயகரை "வருக வருக' என்று அழைக்கும் ஓசையில் அமைந்த நூலாகையால், "விநாயகர் அகவல்' என்ற பெயரை அவ்வையார் சூட்டினாõர். அவர் பாடியருளிய மற்றொரு ஆன்மிக நூல் ஒன்றுக்கும் பாவகை அடிப்படையில் "அவ்வைகுறள்' என்று பெயர் அமைந்தது ஒப்பு நோக்கத்தக்கது.
விநாயகர் அகவல், எளிமை, இனிமை, மந்திர ஆற்றல் ஆகிய சிறப்புகளை உடையது. எளிய சொற்களைக் கையாண்டிருப்ப தால் எளிமையும், அகவல் ஓசை அமைந்திருப்பதால் இனிமையும், அனுபூதிமானாகிய அவ்வையின் அருள்வாக்கு என்பதால் பலிக்கும் மந்திர ஆற்றலும் இந்நூலில் பொதிந்துள்ளது. விநாயகர் அகவலை தினமும் ஓதினால், வாழும் முறையில் திருத்தமும், உள்ள உருக்கமும், உயிர்கள் மீது இரக்கமும் ஏற்படும். யோகமுறையில் பயிற்சி கிடைக்கும்.

"வரதட்சணை வேண்டாம்' என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.காஞ்சிப்பெரியவர்


"வரதட்சணை வேண்டாம்' என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.காஞ்சிப்பெரியவர் 

கல்யாணத்தை பொருளாதாரப் பிரச்னை ஆகப் பண்ணியிருப்பது "அக்கிரமம்'. இவ்விடத்தில் ""அக்கிரமம்'' என்ற வார்த்தையைத் தான் (அழுத்தி) சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு, பெண்ணோடு பிறந்தவர்கள் தானே? நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், ""வரதட்சணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு'' என்று கண்டிஷன் போட்டு, பெண் குழந்தைகளைக் கல்யாணமாகாமல், கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதுக்கே இல்லை.
"பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா? நம் அகத்தை(வீட்டை) விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்த குழந்தை வர வேண்டும்' என்று சந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல், கல்யாணம் பண்ணிக் கொள்கிற நல்ல மனசு நம் ஜனங்களுக்கு வரவேண்டும்.
இதில்ஸ்திரீகளின்(பெண்களின்) பங்கு விசேஷமானது. பெண்ணாகப் பிறந்தவர்களுக்குத் தான், தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும், அனுதாபமும் இருக்க வேண்டும்.
""நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று வந்ததால், வாங்கிக் கொண்டோம்'' என்று சொல்வது கூட தப்பு தான்.
"வரதட்சணை வேண்டாம்' என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.