Thursday, July 12, 2012

இந்த லோகமும் ஒரு கானல்நீர்,''


பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ""ஹா ஹா'' என்று தாகம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்காது. ஆனால், அங்கே ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அது தான் "கானல்நீர்' என்பது. பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று பிரதேசம் லேசாகி விடுகிற போது, தூரத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே பிரதிபிம்பம் தெரிகிற மாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்தில் இருந்து பார்க்கிற போது, வெறும் மணற்பாங்கான பூமி, ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரை மான்கள் "ஜலம்' என்று நினைத்து தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல் பரிதாபமாக உயிர் விடுகின்றன.
இதுபோல "லோகம் மாயை' என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ""அதெப்படி மாயை? லோகம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே?'' என்று கேட்டால்,"" கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால், அது நிஜமாகி விடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல்நீர்,'' என்று அத்வைத கிரந்தங்களில் சொல்லியிருக்கிறது.

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி


பாரதியார் 39 வயதிலேயே காலமாகி விட்டார். அவரது இளமைக்கால இறப்பு குறித்து, முன்னதாகவே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவரது நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார் (குவளைக் கண்ணன்). ஒருமுறை பாரதியாரும், ஆச்சாரியாரும்
பேசிக்கொண்டிருந்தனர். ""கிருஷ்ணா! நாலாயிர திவ்ய பிரபந்தத்தை எத்தனை ஆழ்வார்கள் இயற்றினார்கள்?'' ""இது தெரியாதா! பத்துபேர் பாடினார்கள்,''. (ஆழ்வார்கள் 12 பேர் என்றாலும், ஆண்டாளை பெரியாழ்வாரோடும், மதுரகவியாழ்வாரை நம்மாழ்வாரோடும் இணைத்து பத்தாகச் சொல்வது வைணவ மரபு) ""பத்து பேர் சேர்ந்து 4000 பாடல் எழுதியிருக்கிறார்கள். பார்... பார்...நான் ஒருவன் மட்டும் 6000 பாட்டு எழுதுகிறேன்,''.
""அது உங்களால் முடியாது பாரதி! ஏனெனில், கலியுகத்தில் மனிதனுக்கு ஆயுள் குறைவு. அதனால், நீங்கள் எடுக்கும் முயற்சி சந்தேகமே!'' என்றார் ஆச்சாரியார்.
பாரதி எழுத ஆரம்பித்து விட்டார். இடையில் வீட்டில் பணக்கஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, வியாதி இவற்றால் 66 பாடல்கள் தான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது விதியை ஒரு யானை முடிவு செய்து விட்டது. பிற்காலத்தில் வந்தவர்கள், அந்த 66 பாடல்களையும் தொகுத்து "பாரதி 66' என்ற பெயருடன் பாடல்களை வெளியிட்டனர். பாரதியாரின் இளமைக்கால இறப்பு குறித்து, குவளையூராருக்கு ஏதோ உள்ளுணர்வு உறுத்தி யிருக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது.

சரஸ்வதியைப் பாடியவர்கள்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் சரஸ்வதி அந்தாதி பாடி கலைமகள் அருள் பெற்றார். குமரகுருபரர், சரஸ்வதியைக் குறித்து, சகலகலாவல்லி மாலை பாடி இந்தி மொழி பேசக் கற்றுக் கொண்டார். பாரதியார் சரஸ்வதியின் பெருமையைக் குறித்து எழுதிய பாடல்கள் புகழ் மிக்கவை. வடக்கே உள்ள புலவர்களில், காளிதாசர் காளியருளால் கவிபாடும் திறம்பெற்று "பஞ்ச காவ்யா' என்னும் ஐந்து காவியங்களை எழுதினார். ராமகிருஷ்ண பரமஹம்சர், தட்சிணேஸ்வரம் காளியோடு நேரில் பேசிப் பழகும் பேறு பெற்றிருந்தார்.

ஈசனே அம்மா என்று அழைத்த "பெச்சம்மா'

கன்னட மொழியில் உள்ள வசவபுராணத்தில், சிவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற பெச்சம்மா கதை கூறப்பட்டுள்ளது. வீரசைவ மரபில் பிறந்த பெச்சமதேவி சிவனின் தீவிர பக்தை. அவளுக்கு குழந்தை கிடையாது. சிவனையே குழந்தையாக எண்ணி வாழ்ந்திருந்தாள். ""அட சிவனே! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் கட்டிக் கொண்டு உன்னைத் திரிய விட்டிருப்பாளா! நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண்போல் பார்த்துக் கொள்கிறேன்,'' என கண்ணீர் வடிப்பாள்.
சிவனும் ஒரு சிசுவாக மாறி, அவள் வீட்டின் முன் கிடந்து அழத் தொடங்கினார். அனாதையாய் கிடந்த பிள்ளையை, பெச்சம்மதேவி, கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல்... உஷ்ணம் ஏறிக்கொண்டேபோனது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. குழந்தை படுத்த படுக்கையானது.
பிள்ளையைக் காண வந்த பெண் ஒருத்தி, ""அடியே! நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்க வேண்டியது தானே!'' என்று ஏளனமாகப் பேசி விட்டாள். மனம் நொந்த பெச்சமதேவி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள அரிவாளை கழுத்தருகே கொண்டு வந்தாள்.
"அம்மா அவசரப்படாதே' என்று வாய் திறந்தது குழந்தை. தன் சுயரூபத்தையும் காட்டி, அவளுக்கு முக்தி அளித்தார். ஈசனே அம்மா என்று அழைத்ததால், "பெச்சம்மா' (அன்னையருக்கெல்லாம் அன்னை)என்று பெயர் பெற்றாள்

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது,'


மதுரையை ஆளும் கூன்பாண்டியன் சமணராக இருந்த சமயத்தில், சைவத்தின் பெருமையை நிலைநாட்ட மதுரை வரும்படி ராணி மங்கையர்க்கரசியார், தன் அமைச்சர் குலச்சிறையார் மூலம் அழைப்பு விடுத்தாள். அப்போது சம்பந்தரும், நாவுக்கரசரரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்தனர். அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற சம்பந்தர் மதுரை புறப்பட ஆயத்தமானார். நாவுக்கரசர் அவரிடம்,""இப்போது நாளும் கோளும் சரியில்லையே. சற்றுநேரம் கழித்து கிளம்பலாமே,'' என்றார். அதற்கு சம்பந்தர்,""நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது,'' என்ற சம்பந்தர் "வேயுறு தோளிபங்கன்' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இரட்டை ஜடை பற்றி சாஸ்திரம்......

கலியுகத்தில்  என்ன   நடக்குமென்று விஷ்ணுபுராணத்தில் பராசர மகரிஷியே சொல்லியிருக்கிறார். சிகை அலங்காரம் பற்றி அவர் சொல்வதைக் கேளுங்கள். பெண்கள் நேர்வகிடு எடுத்துக்கொள்ள வேண்டும். கோணல் வகிடு கூடாது. கூந்தலை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடக்கூடாது. இதனால், குடும்பம் இரண்டுபடும் (பல பள்ளிகளில் இரட்டை ஜடை இன்றும் இருக்கிறது...சாஸ்திரம் தெரியாததால்) கூந்தலை அவிழ்த்துப் போடக்கூடாது. குளித்ததும், ஈரம் சொட்டச்சொட்ட வீட்டுக்குள் வரக்கூடாது. துடைத்து துவட்டி வர வேண்டும். "

"இறையருள் இல்லாதவர்கள், நாத்திகம் பேசுபவர்கள்'. இவர்களுக்கு தன்னை வணங்கும் பாக்கியத்தை ஆண்டவன் தரமாட்டான் என்கிறார் பராசர மகரிஷி

கடவுளை மறந்து உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கிறோம்.

ஒரு கோயில் மண்டபத்தில் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. விருப்பத்துடன் கேட்கும் ரசிகர் ஒருவர், அதைக் கவனிக்காமல் அங்குமிங்கும் பார்த்தபடியே இருந்தார். அவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் எழவில்லை. விசாரித்தபோது," தான் அணிந்திருந்த ஒருபவுன் மோதிரம் தொலைந்து விட்டது. 30 வருஷமாக கையிலே போட்டிருந்தது' என்றார். அவருடைய கவலை நியாயமானது தான். இவர் இப்படி கவலைப் பட்டாலும், ""இத்தனை வருஷமாக அவருடைய விரலில் இருந்தேனே! மறுபடியும் அவரிடம் செல்லவேண்டுமே!'' என்ற கவலை மோதிரத்திற்கு ஏற்படுமா! மோதிரத்தைத் தொலைத்தவரைப் போல பரமாத்மாவான கடவுளும், நம்மை பிரகிருதி (உலகம்) மண்டலத்தில் தொலைத்துவிட்டு கவலைப்படுகிறார். அந்த மோதிரத்தைப் போல நாமும் கடவுளை மறந்து விட்டு, உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கிறோம்.

ஹரிபக்தர்


படைப்புக் கடவுளான பிரம்மா தினமும் மகாவிஷ்ணுவை பூஜிப்பது வழக்கம். பூஜைக்கு தேவையான மலர்கள் தேவலோகத்தில் கிடைக்காது. மணம் மிக்க மலர்கள் பூலோகத்தில் மட்டுமே உண்டு. அங்கு சென்று, தினமும் பூப்பறிக்க சங்குகர்ணன் என்பவனை நியமித்தார். சங்குகர்ணனை இங்கே அனுப்ப மற்றொரு காரணமும் உண்டு. சங்கு கர்ணன் பூலோகம் வந்த சமயத்தில், மக்களிடம் பக்தி குறைந்து தீயசெயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருந்தது. அவர்களிடையே அந்த எண்ணத்தை மறையச் செய்து, பக்திப்பயிர் தழைக்கும் விதத்தில், கிருதயுகத்தில் பிரகலாதன், துவாபரயுகத்தில் பாகலீகராஜா, கலியுகத்தில் வியாசராஜர், ராகவேந்திரர் என தொடர்ந்து நான்கு பிறவிகளை எடுத்து ஹரிபக்தராக வாழ்ந்து காட்டினார்.

நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

நாம் தினமும் ஒரே வேலைக்குப் போகிறோம். செய்ததையே செய்கிறோம். காலையில் அலுவலகத்துக்கோ தொழிலுக்கோ கிளம்பும்போதே, அதே பைல், அதே கம்ப்யூட்டர், தூசு கிளப்பும் அதே மளிகை சாமான், அதே டிரை சைக்கிள்...என்ன வாழ்க்கை இது!'' என்று புலம்புகிறோம்.
செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்தால், நிச்சயம் சலிப்பு தட்டத்தான் செய்யும். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்களைத் தேடி அலைய முடியுமா என்றால் அது சாத்தியமில்லை. ஒருவேளை, அதுவும் சாத்தியமாகி விட்டாலும், தினமும் ஒரு வேலைக்கு மாறும் வேலையே போரடிப்பதாகத்தானே மாறிவிடும்!
ஒரு சம்பவத்தைக் கேளுங்க!
ஒரு ஆசிரியர் இருபது வருடங்களாக வரலாற்றுப் பாடம் கற்றுக் கொடுத்து வந்தார்.
அவரிடம் படித்த மாணவர் பிற்காலத்தில் முதல் மந்திரியானார். ஒருநாள் முதல்வர், தனது ஆசிரியரைக் காண திடீரென்று பள்ளிக்கு வந்தார். ஆசிரியர் தம் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் முதல்வரைக் காண உடனடியாக வரமுடியவில்லை. மந்திரி சிறிதுநேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மந்திரி ஆசிரியரிடம் குசலம் விசாரித்த பின், ""ஒரு முதல்மந்திரியை இவ்வளவு நேரம் காக்க வைக்கலாமா?'' என்று கேட்டார்.
தம் பாடம் பற்றி சிந்திக்க வேண்டியிருந்ததால் சற்று தாமதமாகி விட்டதாக ஆசிரியர் பதிலளித்தார்.
முதல்வர் கேலியாக,"" சார்! இருபது வருடமாக அதே வரலாற்றுப் பாடத்தைத் தானே போதித்து வருகிறீர்கள். இதில் புதிதாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?'' என கேள்வி தொடுத்தார்.
உடனே அந்த ஆசிரியர் உணர்ச்சியுடன்,""நான் போதிக்கும் வரலாற்றுப் பாடம் அதேதான். ஆனால், மாணவர்கள் வருடந்தோறும் மாறுகிறார்களே! நான் மாணவர்களின் திறன் அறிந்து புதிது புதிதாகச் சிந்தித்து பாடம் நடத்தியாக வேண்டுமே! ஏனெனில், பாயும் புனலைப் (ஓடும் நீர்) பருகவே நான் விரும்புகிறேன், தேங்கிய குட்டை நீரை அல்ல,'' என்றார்.
ஆசிரியர் அவ்வளவு அற்புதமானவராக இருந்ததால் தான், மக்கள் அவரது மாணவரை முதல்மந்திரி ஆக்கினார்கள்.
எந்தந்த செயல்களால், நம் அந்தராத்மா திருப்தி அடைகிறதோ அவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.
அதாவது நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். செயல்திருப்தி நமக்கு அத்தியாவசியத் தேவை ஆகும். அது கலைஞர்களுக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. காய்கறி நறுக்குவதிலும், கல் தூக்கினாலும் கூட செயல்திருப்தி கொண்டு வரப்பட வேண்டும்.
ஒரு செயலை தெளிந்த அறிவுடனும், மகிழ்ச்சியுடனும், முறைப்படியும் செய்வது அச்செயலையே திரும்பவும் செய்கிறோம் என்ற தேங்கிய மனநிலையில் இருந்து நம்மை மேம்படுத்தும். நம் வேலையைப் பற்றிய அறிவு... அதைச் செய்யும் போது நமக்குள் நிலவும் சந்தோஷம்...இந்த இரண்டையும் வளர்த்துக் கொண்டால் நமக்கு சலிப்பே தோன்றாது

நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாகச் செய்வது பக்தி தான்.காஞ்சிப்பெரியவர்


மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவானால், செய்யும் செயல் நன்றாக இருக்கிறது. கோபம், வருத்தம், அழுகை, பொறாமை எல்லாம் மனதில் உண்டாகிற போது புத்தி குழம்பி விடுகிறது. அப்போது கொஞ்ச நாழி(நேரம்) சுவாமியை நினைத்துக் கொண்டீர்களானால் மனமும் புத்தியும் தெளிவாகி விடும். நாம் நல்லகுணத்துடன் இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். பிறத்தியாருக்கும் சந்தோஷம். சின்ன பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் வாழ்வில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாகச் செய்வது பக்தி தான். சின்ன வயசிலிருந்தே சுவாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வயதாக வயதாக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் மனசில் முளைக்கத் தொடங்கிவிடும். அவை பக்தியை வளர விடாமல் இடைஞ்சல் செய்யும். பக்தியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ஆசைகளும் உபத்திரவம் பண்ணாது. செடி எப்படி மரமாகி பலபேருக்கு நிழல் தருதோ, அதுபோல சின்னகுழந்தைகளும் பெரியவர்களாகிற போது பல பேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே அம்மையப் பனிடம் பக்தியோடு இருங்கள்.

ஒரு மன்னனுக்கு கிரீடம் முக்கியமானது.


ராமர் விபீஷணனுடன், ஒரு மலை மீது நின்று கொண்டிருந்தார். அப்போது விபீஷணன் அவரிடம், லங்காபுரி மாளிகை மீது ராவணன் நிற்பதைக் காட்டினான். அருகில் இருந்த சுக்ரீவனுக்கு, மாற்றான் மனைவியைக் கவர்ந்த ராவணன் மீது ஆத்திரம் கொப்பளித்தது. தாவிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினான். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ராவணன், பதிலுக்கு சுக்ரீவனைத் தாக்கினான். ராவணனிடம் சிக்கிக் கொண்ட சுக்ரீவன் உயிர் தப்புவானா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டானது. இருப்பினும் ஒருவழியாக அவனிடமிருந்து விடுபட்ட சுக்ரீவன், ராவணனின் கிரீடத்தில் பதித்திருந்த மாணிக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ராமனிடம் திரும்பி வந்தான். ""ராவணனைக் கொல்லாமல், கிரீடத்தில் இருக்கும் கல்லை மட்டும் கொண்டு வந்தேனே!'' என்று வருந்தினான். அதற்கு விபீஷணன் ஒரு மன்னனுக்கு கிரீடம் முக்கியமானது. அதற்கு பங்கம் வந்தால் அது அவனுக்கு நேர்ந்த இழுக்கு தான். நீ வீரச்செயலையே செய்துள்ளாய்,'' என்றுபாராட்டினான்.

சுக்கிரதிசை

"அவனுக்கென்ன சுக்கிரதிசை அடிச்சிருக்கு!' என்று அதிர்ஷ்டசாலியை பாராட்டுவதுண்டு. காரணம், சுக்கிரனே ஒருவருக்கு உலக இன்பங்களை வாரி வழங்குபவர். அழகு, வசீகரம், சாதுர்யம், சங்கீதம், நடனம், ஆடம்பரம், சுகபோகம் ஆகியவற்றுக்கு அதிபதியாகத் திகழ்கிறார். ஒருவரது வாழ்வில் 20 ஆண்டு காலம் இவரது திசை ஒருவருக்கு நடக்கும். இதுவே ஒரு மனிதனின் வாழ்வில் அதிகபட்ச திசை காலம். 

கங்கையை விட புனித நதி காவிரி


கங்காதேவியும், காவிரிக்கும் யார் புனிதமானவர் என்பது பற்றி வாக்குவாதம் எழுந்தது. உலகளந்த திருமாலின் திருவடி ஸ்பரிசம் பட்டதால் தானே உயர்ந்தவள் என்று கங்கை பெருமைப்பட்டுக் கொண்டாள். இதையடுத்து, அவளுக்குச் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க, காவிரியும் தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் காட்சியளித்து, காவிரி நதியின் நடுவில் உள்ள அரங்கத்தில் எழுந்தருளி அருள்புரிந்தார். எங்கேயோ, எப்போதோ கங்கை, திருமாலின் திருவடியை வணங்கினாள் என்பதை விட, எப்போதும் ரங்கநாதரின் முடி முதல் அடி வரை மாலை போலச் சுற்றி வந்து வழிபடும் பாக்கியத்தைப் பெற்றாள். ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய "திருமாலை' என்று பாசுரத்தில், "கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபட்டு' என்று இதன்சிறப்பை போற்றுகிறார்.

உதைத்த பாதம் நொந்ததோ'


பிருகுமுனிவருக்கு சிவனைப் போல மூன்று கண்கள் உண்டு. சிவனுக்கு நெற்றியில் கண். இவருக்கு பாதத்தில் ஞானக்கண். இதைக்கொண்டு, பின்னால் நடக்கப்போவதை முன்பே அறிவிக்கும் சக்தி பெற்றிருந்தார். ஒருமுறை, மகாவிஷ்ணுவின் பொறுமையைச் சோதிப்பதற்காக வைகுண்டம் வந்தார். சயனக்கோலத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த விஷ்ணு, முனிவர் வந்தநோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவரைக் கண்டு கொள்ளாதது போல் நடித்தார். பிருகுவுக்கு கோபம் வந்து விட்டது. ""ஒரு முனிவன் உன்னைத் தேடி வந்தும் என்னை நீ அவமதித்தாய்,'' என்று காலால் விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். துயில் கலைந்து எழுவது போல் நடித்த பெருமாள், "உதைத்த பாதம் நொந்ததோ' என்று கைகளால் தாங்கிப் பிடித்தார். மும்மூர்த்திகளில் பொறுமை மிக்கவர் விஷ்ணுவே என்பதை பிருகு அறிந்து கொண்டார். பரம்பொருளையே எட்டி உதைத்த தோஷத்தால், பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண் மறைந்தது.

பாவம் போக்கி மோட்சத்தைக் கொடுத்து விடும் சிவநாமா-- காஞ்சி பெரியவர்


அவ்வைப்பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இதில், ""சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அவாயம்(அபாயம்) ஒரு நாளுமில்லை'' என்று வருகிறது.
"சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்'. அதாவது "பாபி' என்று அர்த்தம். அப்படியானால் சிவநாமம் சொல்லி விட்டால் பாவம் போய் விடும் என்று தானே அர்த்தம்? எப்படி சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு மூச்சை
கீச்சை அடக்கி ரொம்ப நியமமாகச் சொல்ல வேண்டுமா? சிவனை நினைத்து மனசைச் செலுத்தி புத்தி பூர்வமாக அவன் பேரைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. "சிவப்பு' "அரிசிவடாம்' என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது, சிவப்பிலுள்ள "சிவ', அரிசிவடாமில் நடுவில் இருக்கும் "சிவ' என்ற இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும். அரட்டைப் பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் "சிவ' என்ற இரண்டு அக்ஷரத்தை அறியாமல் சொல்லி விட்டாலும், அதுவே சமஸ்த(எல்லா) பாபத்தையும் போக்கிவிடும். தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவம் பண்ணிவிட்டோம். அது தான் நம்மை மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா அந்த தடையைப் போக்கி மோட்சத்தைக் கொடுத்து விடும்.

Wednesday, July 11, 2012

பிரபத்தியோகம்-மிக எளிமையான யோகம்


யோகம் என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். பங்களா, கார் என்று ஆடம்பரத்துடன் வாழ்பவனை "அவனுக்கென்ன யோகக்காரன்' என்று அனைவரும் சொல்வதுண்டு. ஆனால், ஆன்மிகத்தில் "யோகம்' என்பது இறைவனை அடைவதைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் "இணைப்பது' என்று பொருள். மனதை அலைபாய விடாமல் இறைவனை அதற்குள் நிலைநிறுத்துவதே ஆன்மிக யோகம். இறைவனை அடைய பக்தியோகம், கர்மயோகம் என சில வழிகள் உள்ளன. இவை பின்பற்றுவதற்கு கடினமானவை. மிக எளிமையான யோகம் ஒன்று உண்டு. அதுவே பிரபத்தியோகம். இதற்கு "இறைவனின் திருவடிகளை முழுமையாகச் சரணடைதல்' எனப்பொருள். பன்னிரு ஆழ்வார்களும் திருமாலை இந்த யோகத்தின் மூலமே அடைந்தனர். நரசிம்ம பக்தர்கள் "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்று சொல்லி அவரைச் சரணடைகிறார்கள்.

மணிகர்ணிகாவில் மதியம் 12 மணிக்கு நீராடினால் பலமடங்கு புண்ணியம் பெறலாம்


கங்கைநதி கரையிலுள்ள காசியில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது சக்கர தீர்த்தப் பகுதியில் உள்ள மணி கர்ணிகா காட். காசி விஸ்வநாதர் அபிஷேகத்திற்கு இங்கிருந்து தான் கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்வர். விஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தால் உருவாக்கியது என்பதால் சக்கரதீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. சக்கரதீர்த்தத்தில் நீராட பார்வதியும் சிவபெருமானும் ஒருமுறை வந்தனர். அப்போது சிவனின் காதணி நீரில் விழுந்தது. அதனால், அந்த படித்துறைக்கு "மணிகர்ணிகா' என்ற பெயர் ஏற்பட்டது. "மணிகர்ணிகா' என்றால் "காதில் அணியும் அணிகலன்'. மணிகர்ணிகாவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உச்சிவேளையில் (மதியம்) நீராடுவதாக ஐதீகம். அதனால் மதியம் 12 மணிக்கு இங்கு நீராடினால் பலமடங்கு புண்ணியம் பெறலாம் என்பர்.

எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவர் ஆஞ்சநேயர்

எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக ஆஞ்சநேயர் விளங்கினார். அவரைப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டதாக அர்த்தம். முதன்முதலில் சுக்ரீவனுக்கு ராமனின் வரவைத் தெரிவித்ததன் மூலம், சுக்ரீவனின் மனைவி அவனுடன் சேரக் காரணமானார். அசோகவனத்தில் சிறை இருந்த சீதைக்கு கணையாழியைக் கொடுத்து ஆறுதல் அளித்ததன் மூலம், ராமனுடன் அவள் சேரக் காரணமானார். கிஷ்கிந்தையில் இருந்த ராமருக்கு சீதையின் சூளாமணியை அளித்து நற்செய்தி சொன்னதன் மூலம், அவரது உயிர் பிரியாமல் பாதுகாத்தார். அவர் வாயுவின் பிள்ளை என்பதால், பலரது மூச்சுக்காற்று தொடரச் செய்வதில் சிரமமா என்ன! இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மயங்கிக் கிடந்தபோது, தக்கசமயத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து உயிர் கொடுத்தார். ராவண சம்ஹாரம் முடிந்தபின் "ஸ்ரீராமஜெயம்' என்னும் வெற்றிச் செய்தியை சீதைக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ச்சிக்கடலில் திளைக்கச் செய்தார். ராமனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்ட குகனிடம், ராமனின் வருகையை எடுத்துரைத்தார். அயோத்தின் எல்லையில் நந்திக்கிராமத்தில் இருந்த பரதனிடம் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்புவதை எடுத்துரைத்தார். இப்படி ராமாயணத்தில் ஆஞ்சநேயர் செல்லும் இடமெல்லாம் நல்லசெய்தியை வழங்குவதைக் காணலாம்.

யக்ஷ பிரஷணம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்)


யக்ஷ பிரஷணம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்) தர்ம பாடம்
யஷ பிரஷணத்தைக் குறித்து நான் அறிந்த கதை கொக்கு யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்பது (அல்லது) அசிரீரி (யஷனின் குரல்) கேட்பதாக. மஹாபாரதத்தில் இதை யக்ஷ பிரச்ணம் என்ற படலமாக விவரிப்பார்கள்
‘ப்ரஸ்னம்’ என்பது சரியான சொல். தமிழில் ‘பிரச்னை ஆரூடம்’ என்பார்கள். ‘ப்ரஸ்னம்’ என்பது கேள்வியைக் குறிக்கும்.
மகாபாரத்தில் எட்சன் ஒருவன் அருவமாக இருந்துகொண்டு யுதிஷ்டிரரிடம் கேள்விகள் கேட்டான். தர்மரும் அதற்கெல்லாம் ஏற்ற பதில்களைச் சொன்னார். அந்தக் கேள்வி பதில் சம்பவத்தை ‘யக்ஷ ப்ரஸ்ஸன்னம்’ என்று அழைப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் ‘ப்ரஸ்ன தந்த்ரம்’ என்பது ஒரு பிரிவு. இதிலே பலவகைகள் இருக்கின்றன. சோவிகளைக் குலுக்கிப்போட்டு அந்த எண்ணிக்கைகளை வைத்துக் கட்டம்கட்டி பதில் சொல்வதும்
உண்டு. ‘தேவதா ப்ரஸ்னம்’ என்னும் முறையில் கன்னிப்பெண் அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள பெண்ணின்மீதுகுறிப்பிட்ட தேவதையை உச்சாட்ணத்தின்மூலம் வரவழைத்து அதனைவைத்துக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வார்கள்.
ஒரு முறை ஜயத்ரதன் பாஞ்சாலியை அபகரிக்க, பாண்டவர்கள் அவனை கொன்று அவளை மீட்டனர். களைப்பினால் நீர் குடிக்க ஒரு ஏரி அருகில் செல்ல,அது ஒரு யக்ஷனுக்கு சொந்தமானதால், அதன் நீரை குடிக்க சென்ற, நகுலன், சஹதேவன் ,பீமன், அர்ச்சுனன், என பலரும் மயக்கமுற, கடைசியில் தருமர் செல்ல, அவரிடம் யக்ஷன் பல கேள்விகள் கேட்க அவர் அவைகளுக்கு பதில் சொல்ல, எல்லோரும் உயிர் பெற்றனர். தருமருக்கும் ய்க்ஷனுக்கும் நடந்த விவாதமே” யக்ஷ ப்ரஸ்னம்”என புகழ் பெற்றது. யக்ஷன் யமனின் அவதாரமே.
யட்சனின் கேள்விகளும் தருமரின் பதில்களும்.
சூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்கள் துவைத வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பிராமணன் தருமரிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தான்.
அந்தப் பிராமணன் தன்னுடைய யாகத்துக்காக வைத்திருந்த அரணிக் கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக் கொண்டதால் மான் ஓடிய போது அதுவும் மானுடனேயே சென்றுவிட்டதாகவும், எப்படியாவது அந்த மானிடமிருந்து மீட்டுதருமாறும் வேண்டினான்.
உடனே ஐவரும் வில்லம்புகளோடு மானைத் துரத்திக்கொண்டு சென்றனர். மான் இழுத்தடித்து அவர்களை மிகவும் களைப்புறச் செய்யவே தாகம் மேலிட்டவர்களாய் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர்.
தண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று திரும்பியே வரவில்லை. தருமர் சென்று பார்க்கையில் ஒரு மடுவின் அருகில் நால்வரும் இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார். இவர்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியவில்லையே என்று எண்னியவாறே, குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கையில் அள்ளவும் ஒரு அசரீரி ஒலித்தது.
“நில்தர்மா! எனது கேள்விகளுகுப் பதில் கூறாது அலட்சியப்படுத்திய உன்தம்பியர் இறந்துபட்டனர். நீயாவது என் கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் தண்ணீர் குடிப்பாயாக”
உடனே தருமர், ” நீ யார் மலைகளுக்கு நிகரான என் இளவல்களைக் கொன்றது யார்? என்று கேட்டார். உடனே அசரீரியாய் தோன்றிய யமன் முன்வந்து நின்று தன் கேள்விகளுக்கு சரியான பதில்இறுக்காமல் நீர் அருந்தவேண்டாம் என்றான்..
“சரி உன் கேள்விகளைக் கேள். பதில் கூறிய பிறகே அருந்துகிறேன்” என்றார் தருமர்.
———————————————————————-
கேள்விகளும் பதிலும்
———————————————————————-
யஷன் கேள்வி கேட்கிறான். தருமன் பதிலளிக்கிறார். இவை ஆத்ம ஞானத்தைத் தருபவை.
(1) சூரியனை உதிக்கச் செய்பவர்யார்?
சூரியனை உதிக்கச் செய்வது பிரும்மம். இங்கு சூரியன் என்பது ஞான ஒளியுடன் கூடிய ஆத்ம சூரியன். அதாவது ஜீவன். அதை அறிய உதவுவது வேதம். ஆகவே வேதமே பிரும்மம் என்று கூறப்பட்டது.
(2)சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் சஞ்சரிப்பவர் எவர்?
தேவர்களே அவனுக்கு இரு புறங்களிலும் சஞ்சரிக்கின்றனர். சமம், தமம் என்ற ஒழுக்கங்கள் ஆன்ம அறிவு பெற உதவுகின்றன. எனவே அவை தேவர்களாகக் குறிப்பிடப்பட்டன.
(3) சூரியனை அஸ்தமிக்கச் செய்பவர் யார்?
தருமம். இங்கே தருமம் என்பது முக்தி, செய்வினை, வழிபாடு எனும் உருவில் இருக்கும் தருமமே ஆன்ம விடுதலைக்கு உதவுகிறது.
(4) சூரியன் நிலை பெறுவது எதில்?
சத்தியதில் சூரியன் நிலை பெறுகின்றான். அதுவே பரமாத்மா.. வருவதும், இருப்பதும்,போவதும் பரமாத்மாவிலேயே என்பதால் அதில் ஆன்மனாகிய ஜீவன் நிலை பெறுகிறான்.
(5) மனிதன் சுரோத்திரியனாவது எதனால்?
வேதம் ஓதுவதனால். அதாவது வேதப்பொருளான பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை, ஆசிரியனிடம் கேட்டு அறிபவனே சுரோத்திரியன் எனப்படுகிறான்.
சுரோத்தரியன் – என்பது ச்ருதி எனப்படும் அந்த வேதத்தை அறிந்தவன் என்று
பொருள் படுகிறது.
யக்ஷன்: கேனஸ்விச்ரொத்தரியோ பவதி?
யுதிஷ்டிரன்: ச்ருதேன ச்ரொத்தரியோ பவதி.
17, 18, 19, 20 ஆகியவற்றில் வடமொழி எழுத்துக்கள் சரியாக வராததால் புரியவில்லை.
மூலத்திலிருந்து:
யக்ஷன்:
கிமேகம் யக்ஞாயாம் சாம கிமேகம் யக்ஞாயாம் யஜு:
கா சைசாம் வ்ருணுதே யக்ஞம் காம் யக்ஞோ நாதிவர்ததே
சாமவேதத்திற்கு சமமான ஆத்ம த்யாகம் (அர்ப்பணிப்பு – spiritual sacrifice) எது? யஜுர் வேதத்திற்கு சமமானது எது? ருக்வேதத்திற்கு சமமானது எது? ஆத்ம அர்பணிப்பிற்கு மிகவும் அவசியமானது எது? அது இல்லாமல் முடியாது என்பது எது?
தர்மபுத்திரன்:
ப்ராணோ வை யக்ஞாயாம் சாமா
மனோவை யக்ஞாயாம் யஜு:
ருகேக வ்ருணுதே யக்ஞாம்
தம் யக்ஞோ நாதிவர்ததே.
ஆத்ம அர்ப்பணிப்பில் சாம வேதத்தைப் போன்றது உயிர். மனமே யஜுர் வேதத்துக்கு சமமானது. பக்தியே (prayerfulness) ருக் வேதத்திற்கு சமம். அந்த வகையான பக்தியே ஆத்ம அர்ப்பணிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று.
-*-*-*
இந்த யக்ஷ ப்ரஸ்னத்தில் ஒரு வரியில் இரண்டு மூன்று கேள்விகளை யக்ஷன் கேட்டுக்கொண்டே போக அதற்கிணையாக யுதிஷ்டிரர் பதில் சொல்லிக்கொண்டே போகிறார். இதை விரித்து எழுதினால் ஒவ்வொரு வார்த்தையும் பலபக்கங்களுக்கு எழுதக்கூடும்.
(6) ‘ம?’த்தை அடைவது எதனால்?
தவத்தினால்.
(7) மனிதனுக்கு எது துணை?
துணிவு.
(8) புத்திசாலி ஆவது எப்படி?
அறிவில் சிறந்த பெரியவர்களைச் சேர்ந்து இருப்பதால் மனிதன் புத்திசாலி ஆகிறான்.
(9) பிராமணரின் தேவத்தன்மை எது?
வேதமோதுதலே! அதுவே தேவத்தன்மையான சொர்க்கலோக வாசத்தைத் தருகின்றது.
(10) துறவிகளுக்கு இருப்பது போன்று இவர்களின் தர்மம் எதூ?
தவமே. அதாவது சமமும், தமமுமாகும். அதாவது, உடல்,மன, உள், வெளி அடக்கமே தவமாகவும், வேதம் ஓதுதலுடன் தர்மமாகவும் இருக்கிறது.
(11) மனிதத் தன்மை அவர்களுக்கு எது?
மரணம். அதாவது, ஜனன- மரணத்தைத் தரும் கருமங்கள். அவற்றின் அடிப்படையான ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம். இதுவே f£வ பாவம் ஆகும்.
(12) அவர்களை அ.த்து என்றாக்கும் ‘அதர்மம்’ எது?
பிறரை நிந்திப்பது, அதாவது, தெய்வங்களை, பெரியவர்களை, சாதுக்களைப் பழித்துரைப்பது.
(13) ஷத்திரியர்களின் தேவத்தன்மை எது?
அம்பு, வில் போன்ற ஆயுதங்களே1 அரசர்கள் ஆயுதங்களின் சிறப்பாலே, தருமத்தையும் நாட்டையும், தங்களையும் காத்துக் கொள்கின்றனர்.
(14) துறவிகளைப் போல இவர்களின் தர்மம் எது?
யாகங்கள். அசுவமேதம், ராஜசூயம் போன்றவை. களவேள்வி எனப்படும், நியாய வழியில் நேரும் போரும் இவர்களின் தருமம்.
(15) சத்திரியர்களின் மனிதத்தன்மை எது?
அச்சம். அரச குலத்தினர் அஞ்சுவதே இழுக்கு.
(16) அவர்களின் அதருமம் எது?
அஞ்சி அடைக்கலம் புகுந்தவனைக் காப்பாற்றாதது அதருமம்.
(17) அவர்களின் யாகத்திற்கான ஹோமம் எது?
உயிர், அதுதான் முக்கிய ஹோமம்(கீதம்).
(18) யாக யஜு எது?
மனம் தான் முக்கிய யஜு.(ஹோமம்)
யாகத்தில் ஓமத்தால்(பாட்டால்) தேவதைகளை அழைப்பர். யஜுர் வேதத்தால் ஹோமம் செய்வர். ருக்வேதத்தால் துதிப்பர். இதில் பிராணனும், மனமும் அடக்கப் படுவதே யாகமாகிறது.
(19) யாகத்தை வரிப்பது எது?
ரிக்கு, அதாவது வாக்கு, ஆக வாக்கு, மனம், பிராணன் என்ற மூன்றும் ஆன்ம ஞானம் அல்லது, ஆன்ம வித்தை என்னும் யாகத்தில் உதவவே உண்டாகி உள்ளன.
(20) எதை யக்ஞம் மீறாமல் உள்ளது?
‘ரி’க்கை, வேதவாக்கை மீறாமலுள்ளது.
(21) விவசாயிக்கு எதுசிறந்தது?
மழை! யாகம் செய்பவருக்கும் அதுவே சிறந்தது. மழையால் பொருள்கள் விளைந்து யாகம் செய்வர். மழை இல்லாவிட்டாலும் அதைவேண்டி யாகம் செய்வர்.
(22) விதைப்பவருக்கு எது சிறந்தது?
விதை, (நிலம், தோட்டம்) விதையிருந்தாலேயே விதைக்க முடியும்.. நிலம் இல்லாவிட்டால் விதைக்க முடியாது.
(23) இன்ப வாழ்வு நிலைக்கத் தேவையானது எது?
பசுக்கள், நிம்மதியான மன நிலைக்கு ஏற்ற சாத்வீக ஆகாரத்தை, பால், வெண்ணெய்,தயிர், என்று தருவன.
(24) வமிசா வழிக்கு எது சிறந்தது?
பிள்ளை, அதாவது ஆன்சந்ததியே சிறந்த பரம்பரையாகும் எனப்பட்டது. மகள் வழி ஒருவனது பரம்பரையாகாது.
(25) கண், காது, மூக்கு, நாக்கு,தோல் ஆகிய ஐம்பொறிகள் மூலம் , ஒளி, ஒலி, மணம், சுவை, தொடுகை எனும் ஐந்து புலனுணர்வு உடையனவாகவும், நல்ல நிலையிலுள்ள புத்திமானாகவும், உலகில் எல்லாராலும் பணக்காரன் என்று பாராட்டப் படுபவனாகவும், எல்லா ஜீவன்களும் மனிதன் என்று ஒப்புக்கொள்ளும்படியுமுள்ளவனாகவும், மூச்சு விட்டுக்கொண்டு உயிருடன் இருப்பவனாகவும், ஒருவன் இருந்தும் எந்த மனிதன் உயிரில்லாதவன் ஆவான்? (அதாவது நடைப் பிணமாவான்?)
தேவதைகள். அதிதிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் (பித்ருக்கள்)அல்லது நீத்தார், தான் ஆகிய ஐந்து பேருக்கும் எவன் ?விS முதலியவை தரவில்லைய அவனே நடைப் பிணமாவான்..
(26) பூமியை விடக் கனமானது எது?
தாய்! பிறந்த பின்பே பூமி தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாக பூமியில் விடப்பட்டால் இறந்துவிடும். ஆனால், அந்நிலையிலுள்ள தாய் சிசுவை அருமையாகப் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியை விட மதிப்பிலுயர்ந்த கனமானவள்.
‘பிரிதிவி மாதா’ என்கிறது வேதம்
(27) ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தந்தை! வானத்தைவிடப் புகழ் உயர்ந்தது. அந்தப் புகழ் தந்தையாலேயே உண்டாகிறது. நேரடியாகவோ, அவரளிக்கும் கல்வி மூலமாகவோ புகழ் உண்டாகிஅது. ‘தந்தையோடு கல்வி போம்’ என்பது பழமொழி. குலப் பெருமை என்பதும் தந்தையால் வருவதே!
(28) காற்றறைவிட வேகமானது எது?
மனம்! மனோவேகம் அதிகமானது. ஏற்கனவே மனம் எல்லாவற்றிலும் பரவியுள்ளது; மனத்திலேயே அனைத்தும் உள்ளது.
(29) புல்லைவிட அற்பமானது எது?
கவலை! எவரும் பொருட்படுத்தாததே ‘அற்பம்’ என்பது. புல்லை எவரும் பிரமாதமாக நினைக்க மாட்டார். அதே போலக் கவலையை எவரும் பொருட்படுத்திப் பெரிதாக நினைக்கக் கூடாது என்பது பொருள்.
(30) தூங்கும் போதும் கண்ணை மூடாதிருப்பது எது?
மீன்!
அதாவது ஜீவன் எப்போதும் விழிப்பு நிலையிலிருக்கிறான். எப்போது எனில் கவலைகள் முற்றும் ஒழிந்தபின்னர். கவலைகளைப் பெரிதாக நினைத்தால் அவற்றிற்கு இசைந்து ஆசைகளை நிறைவேற்ற அலையவேண்டிவரும்.
(31) எது பிறந்தாலும் அசைவின்றி உள்ளது ?
முட்டைதான்.
அது பிறந்தும் அப்படியே இடப்பட்டபடி இருக்கிறது. அண்டம் ஆகிய பிரபஞ்சமே முட்டை எனச் சொல்லப்பட்டது. அண்டம் பிரக்ருதி fடமானது. அதைப் புரு”னைச் சேர்த்து பரமாத்மாவே இயங்கச் செய்கிறார்.
(32) எதற்கு இருதயம் இல்லை?
கல்லுக்கு! அப்படி இயங்கினாலும் பிரக்ருதி கல்போன்றே சுக துக்க அனுபவம் இல்லாதது என்பதால் இதயமற்றது என்று கூறப்பட்டது..
(33) எது வேகத்தால் வளருகிறது?
நதி வேகத்தால் வளர்ந்து போகிறது. புலனுகர்ச்சியை விரும்பும் ஆசை வேகத்தால் f£வனுக்கு நதி வளர்வது போல உலக வாழ்க்கை (சம்சாரம்) பற்பல பிறவிகளாக நீண்டு வளர்கின்றது.
(34) ஊர் ஊராகச் சுற்றப் போகிறவனுக்கு தோழன் யார்?
கற்ற வித்தையே! போகிற இடங்களில் பிழைப்புத் தேடிக்கொள்ளவும், ஆபத்தின்றிக் காத்துக்கொள்ளவும், வழிப்போக்கர்களின் கூட்டத்தில் அனைவரும் விரும்பும்படித் துணையாகக் கொண்டு பேசிச் செல்லவும் கல்வியும், வித்தையும் கை கொடுத்து தோழனாகின்றன.
(35) வீட்டிலிருப்பவனுக்குத் துணை யார்?
மனைவியே! வீட்டில் சுக வாழ்வு நிகழ்வதால் அதற்குத் துணையாவது மனைவியே.
(36) நோயாளிக்குத் துணைவன் யார்?
மருத்துவன்! அவனாலேயே நோய்க்குச் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால்.
(37) இறக்கிறவனுக்குத் தோழன் யார்?
தானம்! புண்ணிய பலனை உண்டாக்கி மறுமைக்கும் நலம் சேர்ப்பதாலும், இம்மையில் அவனப் பலர் புகழ்ந்து பேச ஏது ஆவதாலும், அவன் விட்டுச் செல்லும் பணிகள், சந்ததி உறவினர், பொருள்களைக் கவனித்துப் பார்க்க அவன் செய்து சென்ற தானங்கள் உதவும்.
(38) அனைத்துயுரின் விருந்தாளி யார்?
அக்னியே! அனைத்துயிரின் உடலிலும் அக்னியே இருந்து உண்ணும் உணவுகளைச் சீரணிக்கிறது.
(39) எது நிலையான தருமம்?
முக்திக்கான வழிகளே நிலையான தருமம். மற்ற தருமங்கள் பிறவிகளைத் தருவனவாகும்.
(40) எது அமிருதம்?
பசுவின் பால் ஆகிய ‘§.¡மம்’ எனப்படுவதே. மோட்சத்தில் இச்சையை உண்டாக்கும் சாத்வீக குணத்தைத் தருவதால் பசும்பால் அமுதம் எனப்பட்டது.
(41) இவ்வுலகம் முழுவதும் எப்படி உள்ளது?
பிராணனாகவே உள்ளது (வாயு)
(42) எவன் தனியாக சஞ்சரிக்கிறான்?
சூரியனே! யாருதவியின்றி சுய ஒளியுடன் சூரியன் பிரகாசிக்கிறான். உலகப் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.
(43) எவன் பிறந்தும் மீண்டும் பிறக்கிறான்?
சந்திரன்! சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ‘சந்திரன்’ எனப் பிறக்கிறான். அவ்வொளியைப் பூமியில் வீசி பூமியிலுள்ளோருக்கு மீண்டும் ‘சந்திரன்’ பிரகாசிக்கிறான். சந்திரனே மனS தத்துவமாகி அந்த மனத்தாலேயே ‘சந்திரன்’ என்று அறியப்படுகிறான்.
(44) பனிக்கு மருந்து எது?
அக்னிதான்! சூரியன் சந்திரன் இரண்டும் அப்படி இருப்பது அக்னியாலேயே. அக்னி வித்தை எனப்படுவது பிறவிப் பிணியையே பனிபோலப் போக்க வல்லது.
(45) எல்லாவறையும் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் எது?
பூமி! பூவுலக வாழ்க்கையை வைத்தே கடவுள், தேவர், மனிதர், வேதம்பற்பல வித்தைகளும் இருக்கின்றன. இதனால் பூமியில் எல்லாம் அடக்கம்.
(46) தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?
செயல் திறனில் உள்ளது. ஏனெனில் சூட்சுமமான தருமத்தைச் செய்தல், காப்பாற்றுதல், அதருமத்தைத் தவிர்த்தல் எல்லாம் சாமர்த்தியமாகச் செயப்படுவதிலேயே இருக்கிறது.
(47) முக்கியமாகப் புகழ் எதில் நிலைபெறுகிறது?
தானம் செய்வதில் தான். கொடுப்பவனையே உலகம் புகழ்கிறது.
(48) சொர்க்கம் எதில் உள்ளது?
உண்மையில்தான் சொர்க்கம் உள்ளது. கனவில் எதை அனுபவித்தாலும் விரைவில் போய் விடுவதால் உண்மை நல்வாழ்வே சொர்க்கமாக உள்ளது. தற்காலிக சுகமும், பயமும் இருப்பதால் உண்மையில்தவிர சொர்க்கம் இராது.
(49) சுகம் எதில்,நிலைத்து நிற்கிறது?
நல்லொழுக்கத்தில்தான். ஒழுக்கமில்லாத வழியில் வரும் சுகம் நிலைக்காதது. அந்த சுகமே துக்கமாகி விடும்.
(50) மனிதனுக்கு ஆத்மா எது?
புத்திரனே மனிதனின் ஆன்மா. வேதம் ஆத்மாவை,’புத்ர நாமா.¢’ என்கிறது.
(51) மனிதனுக்கு தெய்வம் உண்டாக்கித் தந்த துணையார்?
மனைவி. மனைவி என்பவள் தெய்வத்தால்படைக்கப் பட்டவள்.
(52) மனிதனுக்குப் பிழைக்க வழி எது? (சாதனம்)
மழையே எல்லாவற்றின் அடிப்படை சாதனமாகும்.
(53) மனிதனின் சிரேய.¤க்குச் சாதனம் எது?
மனிதனின் மேலான நிலைக்குத் தானம் தான் சிறந்த சாதனம். கொடுப்பது தியாக புத்தியைத் தரும். தியாகம் அகங்காரத்தை விடும் வழி. அதுவே துறவாகி முக்திக்கு வழிவிடுகிறது.
(54) செல்வதைக் கொடுப்பதில் எது சிறந்தது?
திறமையான முயற்சியே! முயற்சி திருவினையாக்கும்.
(55) பொருள்களுள் சிறந்தது எது?
சாத்திர ஞானம். சாத்திர ஞானம் இன்றி எதையும் செய்து அனுபவிக்க முடியாது.போகமோ, யோகமோ, பந்தமோ, மோட்சமோ சாத்திர ஞானமின்றிக் கிட்டாது.
——————————————————————————–\


——————————————————-
மகாபாரதத்தில் “யக்ஷப்ரச்னம்’ என்பது மிக மிக முக்கியமான பகுதி. தத்துவங்களின் வித்துப் பெட்டகம். அதில் யமதர்மராஜா ஒரு யக்ஷ உருவில் தருமபுத்திரரிடம் கேள்வி கேட்டு, லௌகீக உலகில் காணப்படும் விபரீதங்களை- ஆச்சரியங்களை- தார்மீக நெறிமுறைகளை யெல்லாம் வெளிப்படுத்துகிறார். உலகில் நடக்கும் அவலங்களை- தார்மீக அத்துமீறல் களை- நெறி மீறிய நடப்புகளையெல்லாம் நிதர்சனப்படுத்தும் விவாதமே யக்ஷப்ரச்னம்.
அதில் யமதர்மன் தர்மனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்- “”தருமபுத்திரரே! இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?”
அதற்கு யுதிஷ்டிரர், “”மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே- இதைவிட ஆச்சரியமான விஷயம் ஏது?” என்று பதில் சொல்கிறார். அது கேட்டு யமதர்மன் திருப்திப்படுகிறார்.

வாஸ்து புருஷன் நித்திரையிலேயே இருப்பது ஏன்?


வாஸ்து புருஷன் நித்திரையிலேயே இருப்பது ஏன்?


தேடிய செல்வம் எல்லாம் ஓடி ஒளிகிறதே ஏன்?

வீட்டிற்குள் நுழைந்தாலே காட்டிற்கு போன மாதிரி கவலை சூழ்கிறதே எதனால்?

வருவாய் இருந்தும் வறச்சி, இல்லாமை நடத்தும் புரச்சி, இவற்றோடு மல்லுகட்ட முடியாமல் மனம் நோவதின் காரணம் என்ன?

இந்த கேள்விக்கு விடை தேடி போனால், ஒரு வார்த்தை காரணமாக இருக்கும். அது வாஸ்த்து.

பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்ச்சத்திரத்தின் அடிப்படையில் வீட்டை அமைப்பார்கள். ஆனால் அது அவருக்கு 100 % ராசியான மனையா? வாஸ்த்து குறைபாடு இல்லாமல் இருக்கிறதா, மனையடி குற்றம் நீங்கி விட்டதா, குழி முறிசல் இல்லாமல் இருக்கிறதா என்பது எல்லாம் உறுதி படுத்த முடிவதில்லை.

காரணம்....? சுற்று சூழல். விளைவு .... எதிர்காலமே புதிர் காலமாக காட்சியளிக்கிறது. மனக்குறையும், பணக்குறையும் தொடர்கிறது.

யாரு இந்த வாஸ்த்து புருஷன்?

இவர்தான் மனைகளுக்கு எல்லாம் மகாராஜன்.

ஓ.... வஸ்த்து புருஷன் நித்திரை விட்டு எழும் நேரம் என்று தினசரி காலண்டரிலும், பஞ்சாங்கத்திலும் குறிக்கபட்டு இருக்கிறதே அவரா?

அவரேதான்.

சரி... அவர் ஏன் குறுப்பிட்ட மாதத்தில் கண் விழித்து மற்ற நேரம் உறங்குவதாக சொல்கிறார்களே ஏன்?

அதற்க்கு அவரின் சுயசரிதம் தான் விளக்கம் தரும். சொல்லவா?

அது ஒரு காலம். புராண காலம். சூரியன் உதித்தான். அன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை, திரிதியை திதி, வியதிபாதாம் யோகம், பத்தரை கரணம், கார்த்திகை நட்ச்சத்திரம் கூடிய பொன்னாள்.

ஒரு மாபெரும் சக்தி உதயமாக போகும் நன்னாள் என்று மற்றவர்களுக்கு தெரியாமலே பொழுது புலர்ந்தது.

அப்போது அந்தகாசுரன் எனும் அசுரன் அகில உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருந்த கால கட்டம்.

அசுரர்களுக்கு எப்போதுமே ஐந்தேமுக்கால் அறிவுதான். சிந்திக்கும் ஆற்றலில் சிறிது குறைபாடு இருப்பதால் நிந்தனை செய்வது தேவர்களைதான்.

எந்த நேரமும் சோம பானம், சுறா பானம் அருந்தி கொண்டிருப்பார்கள். போதை தலைக்கு ஏறியதும் தேவலோகத்திருக்கான பாதை மட்டும் தெளிவாக தெரியும்.

அப்பறம் என்ன. படை சேனைகளோடு போய் பலபரிச்சை பார்ப்பதுதான் அவர்கள் வாடிக்கை. அப்பாவி தேவர்கள் அலறியடித்து கொண்டு மும்மூர்த்திகளில் யார் முதலாக தென் படுகிறார்களோ, அவர்களிடம் கதறி கலக்கத்திற்கான காரணத்தை சொல்லுவார்கள்.

நம்மை திரிஷ்டித்தவர்கள் அசுரர்களை அழிக்க ஆயத்தமாவார்கள். இதுபோன்ற ஒரு சூழல் அந்தகாசுரனால் வந்தது.

இந்த முறை சிவபெருமான் களத்தில் இறங்கினார். வரம் பெற்ற அந்தகாசுரனோடு கடும் போர் புரிந்தார்.

பொதுவாக அசுரர்களுக்கு சக்தி பெற்ற பிறகுதான் புத்தி வேலை செய்வதில்லையே. ஆனால் வரம் கேட்கும்போது மட்டும் அறிவு சுடர் ஆயிரம் கண் விட்டு பிரகாசிக்கும்.

சாகாமல் தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கா என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து தான் வரம் கேட்பார்கள். அந்த வகையில் அந்தகாசுரன் பெற்ற வரம் உயிரை காத்தது.

இருப்பினும் அந்தகசுரனின் அழிவு காலம் நெருங்கியது. சிதிரகுப்தன் அவன் ஏட்டை எடுத்து பார்த்தான். எமனின் பாச கயிறு உயர் குடிக்க தயாரானது. போர் உச்சகட்டத்தை அடைந்தது.

கடைசியில் சங்கரனின் பானம் சல்லடையாக துளைத்து அந்தகாசுரன்.

விழுந்தான். மீண்டும் எழவே இல்லை. மரணம் அவனை குடித்து தன் தாகத்தை தீர்த்து கொண்டது.

அப்போது சங்கரன் தன் உடலில் இருந்து வழிந்த வியர்வை துளியை வழித்து எறிந்தார். அதில் இருந்து ஒரு மாபெரும் சக்தி வெளிப்பட்டது. அந்த சக்தியானது பிரம்மாண்டமாக வளர்ந்து அகில உலகத்தையே விழுங்கும் அளவிற்கு பூதமாக வடிவெடுத்து .

பூதம்தானே!

யுத்த களத்தில் கிடந்த வஸ்த்துக்களை எல்லாம் வாரியள்ளி தின்றது. அப்படியும் பசி அடங்கவில்லை. உடன் சிவனை நோக்கி தவம் செய்ய தொடங்கியது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவது அவர் இயல்புதானே. அந்த பூதத்திற்கு முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

உடனே அந்த பூதம் அகில உலகத்தையே அழிக்கும் ஆற்றல் எனக்கு வேண்டும் என்று வரம் கேட்டது.

சற்றும் யோசிக்காமல் தந்தேன் வரம் என்று சொல்லிவிட்டு சிவ பெருமான் மறைந்து விட்டார். அவருக்கு தெரியாதா அடுத்து நடக்க போவது என்னவென்று.

அசுரபுத்தி எப்போதுமே அர்ப்பமானதுதானே. உடனே இந்த பூமியை விழுங்க பார்த்து.

விபரீதத்தை உணர்ந்து கொண்ட பிரம்மா, தேவர்களின் துணையோடு பூதத்தை சூழ்ந்து கொண்டு அதனை கட்டி குப்பற தள்ளினார்.

அதன் மேல் தேவர்களும் முனிவர்களும் ஏறி அமர்ந்து கொண்டனர். பூதத்தின் மார்பு பகுதியில் பிரம்மா அமர்ந்து கொண்டார்.

அப்போது அந்த பூதம்.... என்னை படைத்த சிவனே எதன் பொருட்டு எனக்கு இந்த தண்டனை. பசி பொறுக்கவில்லை. தங்களால் உருவான எனக்கு ஒரு அவ சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாக்கி விட்டிர்களே ஏன்? என்று தன் தலையை உயர்த்தியபடி கேட்டது.

அதற்கு பிரம்மன்... கவலை படாதே. பூமியில் விழுந்து கிடப்பதால் இனிமேல் வீடு கட்டும் அனைவருக்கும் நீ துணையாக இரு. உன்னை வாஸ்து தேவன் என்றும் வஸ்து புருஷன் என்றும் அழைப்பார்கள். உன்னை பூஜிக்கும் அனைவருக்கும் நம்மையை செய்வாயாக என்று கட்டளை இட்டார்.

என் பசி இன்னும் அடங்க வில்லையே அதற்கு நான் என்ன செய்வது?

அப்போது அங்கே சரிசனம் தந்தார் சிவன். கவலைபடாதே.... வீடு கட்டும் மாந்தர்கள் பூஜை அன்று அனைத்து பொருள்களும் உன்னை சாரும்.

அணு தினம் தன் நித்திய சடங்குகளை செய்யும் ஆன்மீகவாதிகள் பயன் படுத்தும் அனைத்து பூஜை பொருள்களும் உன்னை சாரும்.

அது மட்டுமல்ல .... உன் பசியை குறைக்கும் முகமாக நீ விழித்திருக்கும் நாட்கள் குறையும். நீ நித்திரைலேயே இருப்பாய் என்று சிவ பெருமான் வரம் அளித்தார்.

உடன் வாஸ்து தேவனின் அகோர பசி அடங்கியது. தேவர்களும் பிரம்மாவும் பாதம் பதித்து அமர்ந்ததால் புனித தன்மை பெற்றார்.

ஒவ்வொரு குடியிருப்பு மனை சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, வாஸ்து புருஷன் கவிழ்ந்த நிலையில் படுத்திருப்பதாக சொல்லபடுகிறது.     

புராணங்களில் தந்திரம்


புராணங்களில் தந்திரம்

வில்லுக்கு ஒரு விஜயன் என்பார்கள் மகாபாரதத்தில்.

ராமாயணத்தில் அந்த சொல்லுக்கு சொந்தக்காரன் ராமன்.

ராமன் அம்பை எடுத்தால் எதிரிகளை கொள்ளாமல் திரும்பியதில்லை. ஆனாலும் ராமனிடம் இருந்து ஒருவன் தப்பினான். அவன் ஒன்னும் இந்திரனையே வென்ற இந்திரஜித்தும் அல்ல, சாதாரண போர் வீரன்.

அப்படியானால் அவன் பாலகனா வயோதிகனா... நோயாளியா... !

இல்லை... இல்லை... அவன் சாதாரண போர் வீரன். ராமனால் கொள்ளபடாமல் தப்பி ராவணன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். நேராக ராவணிடம் ஓடினான்.

இந்த உலகத்தையே எட்டி உதிக்கும் ஆற்றல் பெற்ற மன்னா... கடல் மாதிரி பெருக்கெடுத்து நின்ற நம் படைகள் முற்றிலும் அழிந்து விட்டன.

ஒருவர் கூட உயிருடன் இல்லை. ராமனின் அம்பு யுத்த களத்தில் கூட்டம் கூட்டமாய் கொண்டு குவிக்கிறது..


ஏ....முடனே... ஒருவர் கூட உயிருடன் இல்லை என்கிறாய். ஆனால் நீ மட்டும் தப்பியது எப்படி.

நான் என் வீரத்தால் தப்பவில்லை. ஒரு தந்திரம் செய்துதான் தப்பினேன்.

தந்திரமா... அப்படி என்ன தந்திரம்?

பிரபு .... போர்க்களத்தில் புடவை கட்டி இருந்தேன்.

புடவையா.. எதற்கு?

ராமன் தன் மனைவியை தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டானாம், என்னையும் ஒரு பெண் என்று நினைத்து விட்டான். அதனால் தப்பினேன் என்றான். என்ன ஒரு தந்திரம்.

கிருஷ்ணன் செய்த தந்திரம்

பிதாமகர் பீஷ்மர். மாபெரும் வீரர். இவரை வெல்ல யாராலும் முடியாது. இவர் துரியோதனன் பக்கம் இருக்கிறார்.

பாண்டவர்கள் பக்கம் இருப்பது கிருஷ்ணனாக இருந்தாலும் பாண்டவர்களை காக்க கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான்.

யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பீஷ்மர் தன் கூடாரத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் பாஞ்சாலியை அழைத்தார். பாஞ்சாலி....பீஷ்மருக்கு இணையான வீரன் இதுவரை பிறக்கவில்லை. இவரை களத்தில் வெல்லவே முடியாது. உன் கணவன் மார்களுக்கு ஆபத்து என்றால் அந்த கர்ணனால் வரபோவதில்லை, இந்த பீஷ்மரால் மட்டுமே பாண்டவர்களை கொள்ள முடியும்.

ஐயோ அண்ணா....

பதறாதே. அதற்க்கு ஒரு வழி சொல்கிறேன். அதன்படி நீ நடந்தால் பாண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

சொல்லுங்கள் அண்ணா.

கூடரத்தில் இருக்கும் பீஷ்மரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேள்.

கேட்டால்....

முதலில் கேள். நீ ஆசிர்வாதம் வாங்கும் போது, உன் திருமாங்கல்யம் வெளியே தெரிகிறமாதிரி குனிந்து நமஸ்கரி.

கிருஷ்ணன் சொன்ன மாதிரியே செய்தால் பாஞ்சாலி. பீஷ்மர் இருக்கும் கூடாரத்திற்குள் நுழைந்ததும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று காலில் விழுந்தாள்.

வந்தது யார் என்று கூட சரியாய் அவர் கவனிக்க வில்லை. ஆனால் ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது. அவளை கவனிக்கும் போது அவள் கழுத்தில் மாங்கல்யம் தொங்குகிறது/

உடன் பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு என்று வாழ்த்துகிறார். இந்த வாழ்த்து தான் யுத்த களத்தில் பாண்டவர்கள் உயிரை காக்க கவசமாக இருந்தது.

இராமரின் குழந்தைப் பருவ லீலை

கோசலையின் மகனுக்கு வசிட்டர் "இராமன்' என்றுதான் பெயரிட்டார். "இராமன் எனப் பெயர் ஈந்தனன்' என்பது கம்பன் வாக்கு.

"இன்பத்தின் இருப்பிடம், அகில உலகுக்கும் அமைதி தருபவன் ஆதலால் இராமன் என்ற பெயரே சிறந்தது' என்று வசிட்டர் பெயரிட்ட தாக துளசி மகா முனிவரும் இதனை உறுதிப் படுத்துகிறார்.

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் இராம காதை இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் இராமன் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் நடைமுறையில் இராமச்சந்திரன் என்றே பண்டிதர் முதல் பாமரர் வரை வழங்குகின்றனர்.

நாட்டுப்புறக் கதையாக உருவான இராம கதைக்கு ஏட்டுப்புற வடிவம் கொடுத்தவரும் வேடர் குலத்தவரான வால்மீகிதானே!

நாட்டுப்புறவாசியின் கற்பனை இன்பம் கண்ட நாட்டுப்புறக் கலைஞன் சும்மா இருப்பானா...?

தன்னுடைய கற்பனையும் அதனுடன் இணைந்து- இயைந்து இருக்க வேண்டும் என்று எண்ண மாட்டானா?

இதன் அடிப்படையிலேயே இராமச்சந்திரன் பெயர் காரணத்தை கற்பனைக் கதையாக வடித்து விட்டான்.

துளசி இராமாயணம் இயற்றிய துளசிதாசரே இராமரின் குழந்தைப் பருவ லீலைகளை பலப்பட பாடியுள்ளார்.

அதில் ஒரு கதை...

கைகேயி இராமனைத் தன் இடுப்பில் வைத்துப் பாலமுது ஊட்டிக் கொண்டிருக் கிறாள்.

இராமன் நிலவினைக் காட்டி, "சந்திரன் என்னுடன் விளையாட வரவேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்.

நிலா நிலா ஓடிவா...

நில்லாமல் ஓடிவா...

என்று பாடத்தான் முடியும். நிலவை இப்பூவுலகுக்குக் கொண்டு வருவது எப்படி?

இராமனின் பிடிவாதம் ஓயவில்லை. நிலவைக் கொண்டு வரமுடியாது. நிலா இல்லாமல் இராமன் சோறு உண்ண மாட்டான்.

தாய் கைகேயி எத்தனையோ போக்குக் காட்டி முயன்றும் இராமனை சாப்பிட வைக்க முடிய வில்லை. இராமன் பட்டினி கிடப்பதை எப்படிப் பொறுப்பது... கைகேயி கண்களில் கண்ணீர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க தாதி ஒருத்தி முன்வந்தாள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வந்து இராமன் அருகில் வைத்தாள். அந்தத் தண்ணீரில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது. "இராமா இதோ பார்! சந்திரன் வந்துவிட்டான். அவனைப் பார்த்துக் கொண்டு சாப்பிடு' என்றவாறு கைகேயி பாலமுதை ஊட்டலானாள்.

இராமனும் பிடிவாதத்தைவிட்டு சந்திரனைக் கண்ட மகிழ்வுடன் சாப்பிடத் தொடங்கினான்.

இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் இராமன் பெயருடன் சந்திரன் பெயரும் இணைந்து உலகம் முழுவதும் இராமச்சந்திரன் என அழைக்கப்பட்டான்.

துரியோதனனிடம் சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்!

பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர்.

பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான்.

பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி.

பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர்.

மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான்.

அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான்.

இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன்.

தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான்.

""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான்.

""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான்.

மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே!

துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்?

தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன்.

""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?''

""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன்.

பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர்.

குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான்.

யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான்.

தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான்.

""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன்.

""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!''

சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது.

மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே.

கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!

பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்ட ஐந்து வீடு


பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது.
எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு.
யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்று அறிவிக்கின்றான். துரியோதனனோடு வாழ முடியாது என்று முடிபெடுக்கின்றார் தருமர். அதன் பின்பே போருக்கான ஆயத்தம் நடக்கின்றது.
பாண்டவர்கள் போரில் வெற்றி கொள்வதற்கு காரணம் அவர்களின் வீரம் என்பதற் கப்பால், ஐந்து வீடு தந்தால் போதும் என்ற விட்டுக் கொடுப்பும், ஈ இருக்கும் இடந்தனிலும் கொடுக்க முடியாது என்ற துரியோதனனின் திமிருமே காரணம் எனலாம்

தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா- பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா

பாண்டவர்கள் ஒரு முறை “இராஜ சூய யாகம்’ செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்தனர்.
“சபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவர் யார்?’ என்ற வினா எழுந்தது.
பல்கலைகளில் தேர்ந்தவனான சகாதேவன் எழுந்து, “”ஆன்றோர்களே! அரசர்களே! இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூஜை பெறத் தகுதியுடையவன்! அத்தகை யோரில் நம்மிடையே கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அதனால் அவருக்கே பூஜை செய்வோம். அப்படிச் செய்தாலே எல்லா உயிர் களுக்கும் செய்ததற்கு ஒப்பாகும்” என்றான்.
அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எதிராக சிசுபாலன் மட்டும் இதனை எதிர்த்தான்.
அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர். நிலைமை மோசமடைந்தது.
இதனை அறிந்த கண்ணன்… பிறரின் பழிக்கு ஆளாகாமல் சிசுபாலனை தானே அழித்தார்.
பின்னர் சகாதேவன் சொன்னபடி கண்ணனுக்கு முதல் பூஜை செய்தனர்.
கண்ணன் ஓர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து அருங்காட்சி அளித்தான்.
இராஜசூய வேள்வி தொடர்ந்து நடைபெற்றது.
ஒரு பக்கம் பல்லாயிரம் பேருக்கு விருந்து படைக்கப் பட்டது.
இந்நிலையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணனைக் காணவில்லை. எல்லாரும் தேடினர். நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.
இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் காணப்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பால் கொட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான்.
முதற்பூஜை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா…!என எல்லாரும் வியந்தனர்.
“”கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் இருக்க, நீர் இக்காரியம் செய்யலாமா? முதற்பூஜை பெற்ற நீ எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா…? உடனே நிறுத்து… எச்சில் பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு சிம்மாசனத்தில் இருந்து காட்சி தா” என வேண்டி நின்றனர்.
“”எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? ஏவலர் எடுக்கும்போது அக்கறை இல்லாமல் இங்கும் அங்கும் ஒழுகவிட்டுத் தரையை சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்வது மறு பந்தியில் அமருவோர்க்கு இடையூறாய் இருக்காதா…? ஆதலால் எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று செய்து காட்டினேன். சொல்லிக் காட்டுவதை விட செய்து காட்டுவது மிகப் பயன்தானே…?
அதுமட்டுமா…? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா…? முதல் பூஜை பெறுவதும் ஒரு தொழில்தான். எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில்தான். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூஜை பெற்ற நான் எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதினால் நான் பெற்ற முதல் பூஜை தகுதிக்காக பெற்றதாகுமா? பகட்டுக்காகத்தானே பெற்றதாக ஆகும்” என்றான் கண்ணன்!

திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ஏன்

** திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ஏன்?

மக்கள் நடமாடும் இடத்தில் திருஷ்டி கழித்த பொருட்களைப் போட்டிருந்தால் அதை மிதிப்பவர்களுக்குத் துன்பம் நேராது. யார் போட்டார்களோ அவர்களையே அந்தக் கஷ்டம் சேர்ந்து விடும். மக்கள் புழக்கம் இல்லாத இடத்தில் யார் கண்ணிலும் படாமல் திருஷ்டி கழித்துப் போட வேண்டும். இது தான் உண்மையாகவே திருஷ்டியைப் போக்கும். தெருவில் அறியாமல் மிதித்து விட்டால் கால்களைக் கழுவிவிட்டு திருநீறு பூசிக் கொண்டால் போதும்.

* கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
.
வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் "தான்' என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் "உலகின் உற்ற நண்பன்' என்ற பொருளில் "விஸ்வாமித்திரர்' என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்

* பரிகாரம் செய்தால் முன்வினைப் பாவம் தீருமா?

சுயநலம், ஆடம்பரம் இல்லாத பக்தி ஒன்று தான் பாவம் போக்கும் பரிகாரம்.

* இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் புரோகிதராகப் பணியாற்றுவதாக அறிந்தேன். இது சரிதானா?

வழிபாட்டுப் பழக்கவழக்கங்கள் தட்சிணாசாரம், வாமாசாரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தட்சிணாசாரம் என்பது தென்னிந்திய வழிபாட்டு முறை. வாமாசாரம் என்பது வடஇந்திய வழிபாட்டுமுறை. சைவ, வைணவ சமயங்கள் பெரிதும் வளர்ந்து நிற்கும் தென்னிந்திய வழிபாட்டு முறைகளில் பெண்கள் புரோகிதராகக் கூறப்படவில்லை. வாமாசார முறைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. சரியா தவறா என்று கூறும் நிலையில் நாடு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தேசாசாரம் (நாட்டு வழக்கம்) தலைதூக்கி நிற்கிறது. ஊரோடு ஒத்துப்போக வேண்டிய நிர்ப்பந்த நிலை இருக்கிறது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது.

* தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே?

இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை இப்படி எடுத்துக் கொள்வது வழக்கத்தில் வந்துவிட்டது. பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறீர்கள். அதுவே அழுகியிருந்தால் சகுனம் சரியில்லை என்று வருந்துகிறீர்கள். தேங்காயை ஸ்கேன் பரிசோதனை செய்து விடலாமா? இதை மூடவழக்கம் என்று தான் சொல்லவேண்டும்.

* கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
.
வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் "தான்' என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் "உலகின் உற்ற நண்பன்' என்ற பொருளில் "விஸ்வாமித்திரர்' என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்

* நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?

* நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?
.
மற்ற உலோகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தங்கத்திற்கு உண்டு. எப்படி என்றால் பலமுறை நெருப்பில் இட்டு மாற்று அடிக்கப்படுவதால் எக்காலத்தும் தோஷம் ஏற்படாத பரிசுத்தமானதாகிறது. எனவே, நம் உபயோகித்திருந்தாலும் சுத்த நீரினால் தூய்மைப்படுத்தி தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கலாம்.


** பிறந்த நட்சத்திரத்தையே குழந்தைக்குப் பெயராக வைக்கலாமா?

நட்சத்திரங்களின் பெயர்களை நிறைய பேர் வைத்திருக்கிறார்களே! ரேவதி, கிருத்திகா, ஆதிரை என்று நட்சத்திரப்பெயர்களை வைக்கலாம். ஆனால், கூப்பிடுவதற்குப் பொருந்தாத பூரட்டாதி, மிருகசீரிடம் போன்ற பெயர்களை எப்படி வைப்பீர்கள்?

* பூஜையறையில் சுவாமி படங்களை எத்திசையில் வைத்து வழிபடுவது நல்லது?

நடுக்கூடத்தில் மேற்குத் திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து அதில் கிழக்குமுகமாக சுவாமி படங்களை வைத்து வழிபடுங்கள். வடக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகளும் ஏற்புடையவை தான்.



* கலியுகத்தில் எந்த தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

என்ன பட்ஜட் என்று கூறியிருந்தால் சொல்வதற்கு வசதியாக இருக்கும். ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். எல்லா யுகங்களுக்கும் ஏற்ற தானம் இது. வளமான இந்தியா உருவாக உதவியாக இருக்கும்.

* நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பதன் தாத்பர்யத்தை தெரிவியுங்கள்.

பெண்களின் உச்சிவகிட்டிற்கு "ஸீமந்தம்' என்று பெயர். திருமணமான பெண்கள் இங்கு அவசியம் குங்குமம் வைக்கவேண்டும். இதற்கு ஸீமந்த திலகம் என்று பெயர். இதனால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்றுதேவியரும் மகிழ்கிறார்கள். பார்வதி தீர்க்க சுமங்கலிபாக்கியத்தையும், லட்சுமி அழகு, இளமையையும், வம்சவிருத்தியையும், சரஸ்வதி நல்லறிவையும் தருகின்றனர். உச்சிவகிட்டில் இருந்து கீழே செல்லும் நரம்பு கருப்பையைச் சென்றடைகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் வளைகாப்பின் போது முள்ளம்பன்றி ரோமத்தால் கீறி விடுவதுண்டு. இந்த ரோமத்துக்கு "ஸீமந்தம்' என்று பெயர். அபிராமிப்பட்டர் அம்பாள் பற்றி,"உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமும்' என்று பாடியுள்ளார்.

* எந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஜாதகத்தில் உள்ள பித்ருசாபம் நீங்கும்?

காகத்திற்கு எள்அன்னம் வைப்பது பித்ருசாபம் போக்க உதவும். முடிந்தால் தினமுமோ அல்லது சனிக்கிழமையோ இதனைச் செய்யுங்கள். அனாதைக் குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள்.

சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்?

 * சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்?

யார் சொன்னது? சொன்னவரிடம் காரணம் கேட்கவில்லையா? சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வதற்கும், குழலூதும் கிருஷ்ணரை வழிபடுவதற்கும் பலபிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் புண்ணியம் செய்திருப்பதால் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். செய்யக்கூடாது என்று சொன்னவர் கடுகளவு புண்ணியம் கூட செய்தவராகத் தெரியவில்லை.

* வடக்கு நோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

கிழக்குநோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி செய்வது முதல்தரம். மேற்கு இரண்டாம்தரம். வடக்கு மூன்றாம் தரம். பூஜை காரியங்களுக்கு மட்டும் ஏற்புடையது. தெற்கு கூடாது. 


கோயிலை விட்டு வெளியேறும்போது விநாயகரை வழிபட்டால் அருளை திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்வதில் உண்மை உண்டா?

உண்மையா என்ற கேட்பதைப் பார்க்கும்போது நீங்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. சிறுபிள்ளைகளிடம் இது போலக் கூறினால் கூட சிரிப்பார்கள். உங்களிடம் இதைச் சொன்னவரிடம் ஒரு சந்தேகம் கேளுங்கள். தரிசனம் கொடுக்காமல் கதவை மூடிக் கொண்டு விடுவாரா என்று. கொடுப்பதற்குத் தான் தெய்வம் இருக்கிறது. திருப்பி எடுத்துக் கொள்வதற்காக அல்ல.

* ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் திருமண ஏற்பாடு செய்யலாமா?

ஏழரைச்சனி என்றாலே கஷ்டம் என்று பயமுறுத்துகிறார்கள். சனிபகவான் இக்காலகட்டத்தில் சில நன்மைகளையும் செய்வார். திருமண வயது வந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால் அவர் மகிழ்கிறார்.



** வாழ்வில் வெற்றி பெற முயற்சித்தால் போதுமா? அல்லது கடவுளின் அருள் தேவையா?

"முயற்சிதிருவினையாக்கும்' என்பது முதுமொழி. திருவினை என்ற சொல்லில் உள்ள "திரு' என்ற சொல்லை சற்று சிந்தித்துப் பார்த்தால் போதும். இறைவனுக்கு "திருவுடையான்' என்று பெயர். வெற்றி, மகிழ்ச்சி, மங்களம், கவுரவம், செல்வம், அழகு என பலபொருள் தரும் ஒரு சொல் "திரு'. முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எழுவது நம் அறிவில் தான். அறிவுக்கு அப்படிப்பட்ட ஆற்றலை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வேறு யாராவது தர முடியுமா? இறையருள் இருப்பவர்களுக்குத்தான் அறிவாற்றல் அதிகமாக இருக்கும். தொடர்ந்து இறை வழிபாட்டுடன் நம் முயற்சிகளை செய்து கொண்டிருந்தால் வினை எனப்படும் முயற்சியின் பலன் "திரு' எனும் அடைவுடன் சேர்ந்து விடும். உங்கள் முயற்சி இறையருளால் திருவினையாகிறது.

அவ்வையாரின் அருமை மொழி


 உறவு, நட்பு, மனைவி, குழந்தைகள், பெற்றோர், குரு, நாடு, உலகம் ஆகியவற்றில் அன்பு செலுத்துபவர்களாக வாழ வேண்டும்.
* உயர்ந்த எண்ணம், மேன்மையான செயல், சிறந்த குணம் நிறைந்திருப்பதே நல்ல நெறியாகும். தானும் உயர்ந்து பிறரையும் உயர்த்துவதால் வீடும், நாடும், உலகமும் உயரும்.
* பயனுள்ளவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். எங்கு நல்லது இருந்தாலும் அதைப் பாதுகாக்க வேண்டும்.
* பிறருடன் நட்பு கொள்ளும் போது, நம் தகுதிக்கு ஏற்றவர்களா என்பதை அறிந்து அதன்பின்பே நட்பு கொள்ள வேண்டும்.
* நூல்களையும், இலக்கியங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. புகழாவிட்டாலும் இகழாதிருப்பதே உயர்ந்த பண்பு.
* உயர்ந்த உணர்வை ஊட்டுவதில் உணவுக்கு அதிக பங்கு இருக்கிறது. நல்ல உ<ணர்வுகளுக்கு உரியன அல்லாத உணவுகளை சாப்பிடக்கூடாது.
* குற்றமானவற்றையும், பொறாமையான சொற்களையும் பேசக்கூடாது.. நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
* எந்த நேரமாக இருந்தாலும், நமது பணிகளை தயக்கமின்றி, தாமதமின்றி, சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக செய்து முடிக்க வேண்டும்.
* பணம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைப் பிறருக்காகப் பயன்படச் செய்வதே பெருமை அளிப்பதாகும்.
* கடுமையான பேச்சு வெறுப்பைத் தரும். பேச்சில் பணிவு இருக்க வேண்டும். இனிமையான பேச்சால் வாழ்க்கையில் எப்போதும் பயம் இல்லை.
* கற்க வேண்டிய காலம் இளமையே. படிப்பவை இளமையில் தான் மனதில் படியும். சாதிக்கும் ஆற்றலும் இளமைக்கே உண்டு.
* தர்மம் செய்வதால் கிடைக்கும் பலன் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
* பயஉணர்வு மனிதனை கெடுத்துவிடும் என்பதால், அதனைக் கைவிட வேண்டும். பிறரைப் பயப்படுத்துவதையும் விட்டுவிட வேண்டும்.
* படிப்பறிவோடு, கேள்வி அறிவும் இணைந்தால் தான் பேரறிவு கிடைக்கும். தெரியாதவற்றை ஏன் எப்படி எதற்கு என பெரியோர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அனுபவத்தால் பெறும் அறிவை விட, பெரியவர்கள் தரும் ஆலோசனை அறிவே உயர்ந்தது.
* வாழ்க்கையில் எப்போதும் ஒழுங்கான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். சிறப்பான நிகழ்வுகளை, கருத்துக்களை, நடத்தையை, ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
* பேச்சில் இனிமை, கனிவு, மரியாதை, அன்பு, நேயம், ஆறுதல் இருக்க வேண்டும். அதனால் நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும்.
* ஒரு செயலை உரிய காலத்திற்குள் நெஞ்சுறுதியுடனும், விருப்பத்துடனும் செய்துவிட்டால் போதும். வெற்றி தேவதை தேடி வருவாள்.
* ஊராருடன் ஒத்துப் போவது பல வகைகளில் நல்லது. வீண் வாக்குவாதம், பொறாமை, வழக்கு, கெட்ட பெயர், பகைவர், வறுமை ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி.
* அன்பான தன்மை வேண்டும். இனிய சொற்கள் ஏற்றம் தரும். அன்பு கலந்த சொற்களால் கேள்வி கேட்க வேண்டும். பிறர் நம்மைத் தவறாக பேசும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.
* வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம் என்றாலும், முந்தைய நிலை தான் முன்னேற்றத்தின் படிக்கல்லாக விளங்கியது என்பதை மறக்கக் கூடாது.

சின்மயானந்தர்--அருமை மொழி




* பக்தியும், விரதமும் நம்மைத் தூய்மைப்படுத்தி ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்கின்றன. மனத்தூய்மை இருந்தால் கண்விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாகத் தோன்றாது.
* பார்வையும், அறிவுக்கூர்மையும் இருக்கும் இளமைப்பருவத்தில் ஆன்மிக நூல்களைப் படிப்பது நல்லது. வயதான காலத்தில் உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்பட்ட பிறகு எதிலும் ஆர்வம் இருக்காது.
* பாலில் உறையிட்டு வைத்து மெதுவாகத் தயிராக்குவது போல, கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக விஷயத்தை கிரகித்துக் கொள்ளவேண்டும். ஒரே சமயத்தில் அதை அறிந்து கொள்ள முடியாது.
* மனிதன் எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் மனதை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறான். தரக்குறைவான எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு பரபரப்பு அடைகிறான். ஆண்டவன் தந்த மனமாகிய தோட்டத்தை பண்படுத்த வேண்டிய அவன், செல்வமாகிய பணத்தோட்டத்தை வளர்க்கும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறான்.
* காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் அமர்ந்து தியானம் அல்லது வழிபாட்டில் ஈடுபடுங்கள். அது மனதைப் பண்படுத்தும்.
* பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், அதன் நற்பலன் எல்லை கடந்தது.
* இளமைக்காலம் உன்னதமான காலம். அதில் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள தேவையான அவகாசம் இருக்கிறது. வாழ்வில் வளர்ச்சி பெற நினைத்தால் இளமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* மனதில் உறுதி நிலைத்து இருக்குமானால், எந்தச் செயலையும் விடாமுயற்சியுடன் செய்து வெற்றிச்சிகரத்தை தொட்டுவிட முடியும்.
* மனதில் தேவையற்ற கலக்கமோ, குழப்பமோ இருக்கக் கூடாது. கம்பீரமான தோற்றம், திட்டமிடுதல், தெளிவு, பாரபட்சம் இல்லாத கண்ணோட்டம் ஆகிய நற்குணங்கள் மனதைச் செப்பனிட உதவும்.
* உலகத்தோடு ஒட்டி உறவாடுங்கள். உலக இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால், அதற்கு அடிமையாக மாறிவிடாதீர்கள். உணவு நன்றாக இருந்தாலும் அதன் சுவை உங்களை வென்றுவிட ஒருபோதும் அனுமதிக் காதீர்கள்.
* அமைதியை நாடுகின்ற வேண்டுகோளாக பிரார்த்தனை இருக்கவேண்டும். சிறு சிறு விஷயங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நினைப்பது கொஞ்சமும் சரியாகாது.
* ஐம்புலன்களாலும் நாம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆனால், அவை வெறும் கருவிகளே. இவற்றை இயக்கும் எஜமானராக இருப்பது மனம். அது காட்டிய பாதையில் புலன்கள் செல்கின்றன.
* மனிதன் மட்டுமே மனதால் புலன்களை இயக்குகிறான். விலங்குகள் புலன்களைப் பயன்படுத்தினாலும் கூட, அறிவால் அவற்றை ஆளும் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவில்லை.
* மனதுக்குப் பூட்டுப் போட்டு எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரமுடியும். அதன் மூலம் வாழ்வில் சிறந்த பலன்களைப் பெறலாம்.

 சின்மயானந்தர்