ராமர் விபீஷணனுடன், ஒரு மலை மீது நின்று கொண்டிருந்தார். அப்போது விபீஷணன் 
அவரிடம், லங்காபுரி மாளிகை மீது ராவணன் நிற்பதைக் காட்டினான். அருகில் இருந்த 
சுக்ரீவனுக்கு, மாற்றான் மனைவியைக் கவர்ந்த ராவணன் மீது ஆத்திரம் கொப்பளித்தது. 
தாவிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினான். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ராவணன், 
பதிலுக்கு சுக்ரீவனைத் தாக்கினான். ராவணனிடம் சிக்கிக் கொண்ட சுக்ரீவன் உயிர் 
தப்புவானா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டானது. இருப்பினும் ஒருவழியாக 
அவனிடமிருந்து விடுபட்ட சுக்ரீவன், ராவணனின் கிரீடத்தில் பதித்திருந்த மாணிக்கத்தை 
மட்டும் எடுத்துக் கொண்டு ராமனிடம் திரும்பி வந்தான். ""ராவணனைக் கொல்லாமல், 
கிரீடத்தில் இருக்கும் கல்லை மட்டும் கொண்டு வந்தேனே!'' என்று வருந்தினான். அதற்கு 
விபீஷணன் ஒரு மன்னனுக்கு கிரீடம் முக்கியமானது. அதற்கு பங்கம் வந்தால் அது அவனுக்கு 
நேர்ந்த இழுக்கு தான். நீ வீரச்செயலையே செய்துள்ளாய்,'' 
என்றுபாராட்டினான்.
No comments:
Post a Comment