Thursday, April 11, 2013
திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள்
திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள்
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே. – (திருமந்திரம் – 568)
விளக்கம்:
பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும்.
இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
(வாமம் – இடது பக்கம், வஞ்சகம் – தந்திரம்)
பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.
பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.
நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.
நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம். பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன் செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.
சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.
பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்
மூச்சைகட்டுப்படுத்தும் கலை
மூச்சைகட்டுப்படுத்தும் கலை
நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.
கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி நல்ல ஆசானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்பாடு. உடலின் எல்லா வித அவயங்களும் சரியாக இயங்க தேவைப்படும் பிராண வாயுவை தருவது மூச்சு.
‘பிராணா (அ) பிராணன்’ என்ற வார்த்தை பல பொருள் கொண்டது பிராணன் என்றால் உயிர் – உயிர்சத்தி, காற்று, வாயு, பிரபஞ்ச சத்தி, சுவாசம், மூச்சு என்று பல பொருள் கூறலாம்.
நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில் “அல்வியோலி” (கிறீஸ்மீஷீறீவீ) என்ற சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன. ரத்தக்குழாய்களுக்கும், அல்வியோலிக்கும் நடுவே உள்ள ‘தடை சுவர்’ ஒரு மைக்ரான் தடிமன் தான்! ஒரு மைக்ரான் ஒரு சென்டி மீட்டரின் 10,000 த்தில் ஒரு பகுதி (1/10,000)! நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை (ளிஜ்ஹ்ரீமீஸீ) ரத்த தந்துகிகளின் (மெல்லிய ரத்தக் குழாய்கள்) சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு (சிணீக்ஷீதீஷீஸீ – பீவீ – ஷீஜ்வீபீமீ) காற்றுப்பைகளுக்கு சென்று, நாம் மூச்சு விடும் போது, மூக்கு வழியே வெளியேறுகிறது நுரையீரலில் ரத்த தந்துகிகளுக்கும், காற்றுப் பைகளுக்கும் காற்றுப் பரிமாணம் இவ்வாறு நடக்கிறது.
பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. இந்த பிராண வாயுவை நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம். பிராண சக்தியின் உடலின் இயக்கம், அறிவு, ஆன்மீக வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது. பிராணன் தான் ஜீவாத்மாவையும், பிரகிருதியையும் இணைக்கிறது. பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.
மனித சரீரத்தில் பிராணன் சுவாசத்தை குறிக்கிறது. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியை கட்டுப்படுத்தியது போல் தான். மூச்சை கட்டுப்படுத்தினால் முனிவராகலாம்!
பிராணாயாமத்தை அறிந்து கொள்ளும் முன்பு, நாம் சொல் வழக்கில் “பஞ்சப் பிராணன்” என்று கூறும் ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.
1. பிராண வாயு
இருக்குமிடம் – தலை
பணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.
2. உதான வாயு
இருக்குமிடம் – கழுத்து, தொண்டை
பணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.
3. வியான வாயு
இருக்குமிடம் – மார்பு
பணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.
4. சமான வாயு
இருக்குமிடம் – தொப்புள்
பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
5. அபான வாயு
இருக்குமிடம் – அடிவயிறு
பணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.
நாடிகள்
பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?
நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை
1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (றிணீக்ஷீணீsஹ்னீஜீலீணீtலீமீtவீநீ ழிமீக்ஷீஸ்மீs) களை இயக்குவது சந்திர நாடி தான்.
2. பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
3. சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.
பந்தங்கள்
பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.
1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (ஞிவீணீஜீலீக்ஷீணீரீணீனீ) இயக்கத்திற்கு உதவுகிறது.
2. ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
3. மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.
சக்கரங்கள்
இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்தி பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.
2. சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.
3. மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.
4. ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.
5. விசுதா – தொண்டையின் இருப்பிடம்.
6. அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.
7. சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்
• பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.
• தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.
• சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.
• ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.
• உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.
• உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
• மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.
• ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பிராணாயாமம் செய்வதற்கு முன்பு
• நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
• பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.
• பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
• செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
• காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
• காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.
• பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
• குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.
• பிராணாயாமம் செய்யும் முன் நாடிசுத்தி செய்ய வேண்டும் இதற்கு குரு தேவை.
பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்)
2. மூச்சை அடக்குதல் (கும்பகம்)
3. மூச்சை வெளிவிடுதல் (ரேசகம்)
பூரகம், ரேசகம் நடுவில் மூச்சை அடக்கி ஒரு நிலையில் வைப்பது
முக்கியமானது. மூச்சை உள்ளே இழுக்காமலும், வெளியே விடாமலும் ஒரு நிலையில் நிற்பது சுவாசத் தேவையை குறைக்கின்றது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. ஒரு வகையில் மூச்சை அடக்கிக் கொள்வது உடலுக்கு ஒய்வை தருகின்றது.
மேற்சொன்ன மூன்று பயிற்சிகளும், ஒவ்வொன்றும் ஒரே அளவு நேரத்தில் செய்ய வேண்டும். மூன்று நிலைகளும் சமமாக இருக்க வேண்டும். யோகா சொல்வது என்னவென்றால் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுப்பது சூட்டை உண்டாக்கும். அதே போல இடது நாசியால் மூச்சை இழுப்பது குளிர்வை உண்டாக்கும்.
பலருக்கு ஏற்படும் சந்தேகம் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அடக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் வெளிவிட வேண்டும். இதை தெரிந்து கொள்ள குருவை நாட வேண்டும். தவறுதலாக செய்தால் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; வேறு கோளாறுகளும் உண்டாகலாம்.
நாடிசுத்தி
கும்பக பயிற்சியில்லாமல் பூரகவும், ரேசகமும் செய்வது நாடிசுத்தி எனப்படும்.
• வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் உட்காரவும்.
• வலது கையின் நடு மற்றும் சுண்டு விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இதர விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதை நாசிக முத்திரை என்பார்கள்.
• இடது கையின் கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை சின் முத்திரை என்பார்கள்.
• வலது கையின் கட்டை விரலால் உங்கள் வலது நாசியை மூடிக் கொள்ள வேண்டும். இடது நாசியின் மூலம் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
• உடனடியாக வலது மூக்கை திறந்து விட்டு இடது நாசியை மோதிர விரல்களால் மூடிக் கொள்ளவும். வலது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும்.
• இப்பொழுது வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இதை மூடி இடது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும். இதை மாற்றி மாற்றி 27 முறை செய்யவும்.
பிரணாயாமா முறைகளிலேயே பல வகைகள் உள்ளன. நாடிசுத்தி,
கபாலபாதி, சூரிய பேதனா, சந்திர பேதனா, விலோமம், சீதளி, பிரதிலோமம் இத்யாதி வகைகளுள்ளன. தகுந்த குருவிடம் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அதன் செயல் முறைகளை குருவிடம் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிராணாயாமத்தின் பல வகைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம். தொடரும்.
1. அனுலோமா – விலோமா பிராணாயாமா
செய்முறை
உட்காரும் யோகாசன நிலைகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரவும். உடலை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும். கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளவும்.
1. இரண்டு நாசி துவாரங்களால் மூச்சை நிதானமாக, முழுமையாக வெளியிடவும்.
2. பிறகு உடனடியாக அடிவயிற்றுத் தசைகளை இயக்கி மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை உள்ளிழுக்கும் பொழுது எந்த சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை உடனே வெளியே விடவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
2. உஜ்ஜை பிராணாயாமா
1. பத்மாசனம் (அ) வஜ்ராசனம் போன்ற உட்காரும் நிலை யோகாசனங்களில் உட்கார்ந்து கொள்ளவும்.
2. நுரையீரலிலுள்ள காற்றை இரண்டு நாசிகளின் வழியே வெளியே விட்டு பிறகு உள்ளிழுத்துக் கொள்ளவும். உள்ளிழுத்து கொள்ளும் நேரம் மூன்றிலிருந்து நான்கு விநாடிகளாக இருக்க வேண்டும். அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த பின் மூலபந்தத்தை செய்யவும். இதை ஆசனவாயை சுருக்கி செய்ய வேண்டும். அதே சமயம் நுரையீரலில் மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூச்சு நிறுத்துவதை ஜலாந்தர பந்தத்தின் மூலம் (முகத் தாடையை மார்பில் அழுத்தி) செய்ய வேண்டும். 10 (அ) 15 விநாடிகள் கும்பக நிலையில் மூச்சை நிறுத்த வேண்டும்.
3. நிதானமாக உஜ்யான பந்தாவை செய்து மூச்சை வெளியிட்டு பந்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். மூச்சை விடுவது 8 லிருந்து 10 விநாடிகள் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுவது இடது நாசி மூலம் செய்ய வேண்டும். அப்பொழுது வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – உஜ்ஜையினி பிராணாயாமத்தில் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுப்பது இரண்டு நாசிகளாலும், மூச்சை வெளிவிடுவது இடது நாசியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
பலன்கள்
1. உஜ்ஜையினி பிராணயாமம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிராணாயாமம் செய்வது நல்லது.
3. ஆஸ்துமா, இருமல் மற்ற சுவாச மண்டல கோளாறுகளுக்கு இந்த பிராணாயாமம் பலனளிக்கும்.
3. சூரிய பேதன பிராணாயாமா
சூரியா என்றால் சூரியன் பேதனா என்றால் திறப்பது.
செய்முறை
வஜ்ராசனம் போன்ற சௌகரியமான ஆசன நிலையில் உட்காரவும். இந்த ஆசனத்தில் நன்றாக முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும். பிறகு இடது நாசியை இடது கை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுப்பது முடிந்தவுடன் மூல, ஜலாந்தர பந்தங்களை செய்யவும். இவற்றை செய்யும் பொழுது வலது நாசியை இடது கையில் நடுவிரலால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மூச்சு நிலைபெற்றிருக்கும். 15 லிருந்து 20 விநாடிகள் மூச்சை நிலை நிறுத்தினால் போதுமானது. மெதுவாக பந்தங்களை விடுவிக்கவும். பிறகு வலது நாசி வழியாக 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி இந்த சுழற்சியை 10 முறை செய்யவும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமத்தில் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நரம்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சீராக வைக்கப்படுகின்றன.
2. ஜலதோஷம், தலைவலி, தொண்டைவலி முதலிய சுவாச மண்டல கோளாறுகள் குணமாகின்றன.
4. சந்திர பேதன பிராணாயாமா
சந்திர என்பது சந்திரனைக் குறிக்கிறது. பேதனா என்றால் திறப்பது என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது. சந்திரன் குளிர்ச்சியை குறிப்பதால் இந்த பிராணாயாமம் சந்திர பேதன பிராணாயாமம் எனப்படுகிறது.
செய்முறை
1. வஜ்ராசனம் போன்ற உட்காரும் யோகாசன நிலையில் சவுகரியமாக அமரவும்.
2. வலது நாசியை மூடிக் கொண்டு 4 லிருந்து 5 நொடிகள் இடது நாசி மூலம் மூச்சை உள்ளிழுக்கவும். கும்பகத்தை 10 லிருந்து 15 விநாடிகள் பந்தங்கள் மூலம் செய்யவும். செய்யும் பொழுது இடது நாசியை மூடிக் கொள்ளவும்.
3. பந்தங்களை விடுவிக்கவும். இடது நாசியால் 6 லிருந்து 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி. இதை 5 லிருந்து 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமம் உடலின் அதீத உஷ்ணத்தை எடுத்து விடுவதால் கண்ணெரிச்சல், மூக்கில் ரத்தம் வருதல் முதலியன குணமாக்கப்படும்.
2. உடல் உஷ்ணத்தால் முடி உதிர்தல், இதர சரும நோய்கள் குணமாகும்.
3. உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு வியாதிகள் குணமாகும்.
மறுபடியும் சொல்கின்றோம், பிராணாயாமம் நன்கு தேர்ந்த யோகாசன
குருவிடம் கற்றுக் கொண்ட பின்பே செய்ய வேண்டும். பிராணாயாமங்களின் பரிமாணம் அற்புதமானது. மூச்சு விடுதலை கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். தற்போதைய ஆய்வுகள் மூச்சு விடும் சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் 16 லிருந்து 20 தடவை நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. உறங்கும் போது இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10 லிருந்து 12 சுழற்சிகளாக குறைகிறது. இதுவே ஆழ்நிலை தியானத்தின் போது ஒரு நிமிடத்தில் 4 லிருந்து 6 சுழற்சிகளாக குறைந்து விடுகிறது! பிராணாயாமமும் தியானமும் நெருங்கிய தொடர்புடையவை.
பிராணாயாமம், மூச்சை, கட்டுப்படுத்தும், கலை,
உணவு, மூச்சு, ஆக்ஸிஜன், யோகாவின், பிராணாயாமம், உயிர், மூச்சு, உடலின்,
நுரையீரலை, மார்பு, ரத்தக், குழாய்கள், அல்வியோலி, பிராண, சக்தி, உலகில்,
தலை, இரத்த, ஒட்டத்தையும், கழுத்து, தொண்டை, உடலிலுள்ள, முதுகுத், தண்டின், பாராசிம்பதெடிக், நர்வுஸ், டையாஃபர்ம், ஜீரண, சக்தி, உடலின், ரத்த, சுழற்சி, நரம்புகள், மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின், உடலுறுப்புகள்,
காக்காய், வலிப்பு, நோய், டாக்டரிடம், பிராணாயாமத்தின், உடலை,
நுரையீரலிலுள்ள, நரம்பு, மண்டலத்தை, உயர், ரத்த, அழுத்தம், ஆஸ்துமா, இருமல், பிராணாயாமம், உடலின், உஷ்ணத்தை, கண்ணெரிச்சல், மூக்கில், ரத்தம்,
பிராணாயாமம் – மூச்சைகட்டுப்படுத்தும் கலை
நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.
கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி நல்ல ஆசானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்பாடு. உடலின் எல்லா வித அவயங்களும் சரியாக இயங்க தேவைப்படும் பிராண வாயுவை தருவது மூச்சு.
‘பிராணா (அ) பிராணன்’ என்ற வார்த்தை பல பொருள் கொண்டது பிராணன் என்றால் உயிர் – உயிர்சத்தி, காற்று, வாயு, பிரபஞ்ச சத்தி, சுவாசம், மூச்சு என்று பல பொருள் கூறலாம்.
நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில் “அல்வியோலி” (கிறீஸ்மீஷீறீவீ) என்ற சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன. ரத்தக்குழாய்களுக்கும், அல்வியோலிக்கும் நடுவே உள்ள ‘தடை சுவர்’ ஒரு மைக்ரான் தடிமன் தான்! ஒரு மைக்ரான் ஒரு சென்டி மீட்டரின் 10,000 த்தில் ஒரு பகுதி (1/10,000)! நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை ரத்த தந்துகிகளின் (மெல்லிய ரத்தக் குழாய்கள்) சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு காற்றுப்பைகளுக்கு சென்று, நாம் மூச்சு விடும் போது, மூக்கு வழியே வெளியேறுகிறது நுரையீரலில் ரத்த தந்துகிகளுக்கும், காற்றுப் பைகளுக்கும் காற்றுப் பரிமாணம் இவ்வாறு நடக்கிறது.
பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. இந்த பிராண வாயுவை நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம். பிராண சக்தியின் உடலின் இயக்கம், அறிவு, ஆன்மீக வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது. பிராணன் தான் ஜீவாத்மாவையும், பிரகிருதியையும் இணைக்கிறது. பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.
மனித சரீரத்தில் பிராணன் சுவாசத்தை குறிக்கிறது. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியை கட்டுப்படுத்தியது போல் தான். மூச்சை கட்டுப்படுத்தினால் முனிவராகலாம்!
பிராணாயாமத்தை அறிந்து கொள்ளும் முன்பு, நாம் சொல் வழக்கில் “பஞ்சப் பிராணன்” என்று கூறும் ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.
1. பிராண வாயு
இருக்குமிடம் – தலைபணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.
2. உதான வாயு
இருக்குமிடம் – கழுத்து, தொண்டைபணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.
3. வியான வாயு
இருக்குமிடம் – மார்புபணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.4. சமான வாயு
இருக்குமிடம் – தொப்புள்பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. 5. அபான வாயு
இருக்குமிடம் – அடிவயிறுபணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.
நாடிகள்
பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?
நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை
1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (றிணீக்ஷீணீsஹ்னீஜீலீணீtலீமீtவீநீ ழிமீக்ஷீஸ்மீs) களை இயக்குவது சந்திர நாடி தான்.
2. பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
3. சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.
பந்தங்கள்
பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.
1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (ஞிவீணீஜீலீக்ஷீணீரீணீனீ) இயக்கத்திற்கு உதவுகிறது.
2. ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
3. மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.
சக்கரங்கள்
இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்தி பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.
2. சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.
3. மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.
4. ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.
5. விசுதா – தொண்டையின் இருப்பிடம்.
6. அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.
7. சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்
• பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.
• தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.
• சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.
• ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.
• உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.
• உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
• மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.
• ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பிராணாயாமம் செய்வதற்கு முன்பு
• நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
• பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.
• பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
• செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
• காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
• காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.
• பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
• குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.
• பிராணாயாமம் செய்யும் முன் நாடிசுத்தி செய்ய வேண்டும் இதற்கு குரு தேவை.
பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை 1. மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்)
2. மூச்சை அடக்குதல் (கும்பகம்)
3. மூச்சை வெளிவிடுதல் (ரேசகம்)
பூரகம், ரேசகம் நடுவில் மூச்சை அடக்கி ஒரு நிலையில் வைப்பது முக்கியமானது. மூச்சை உள்ளே இழுக்காமலும், வெளியே விடாமலும் ஒரு நிலையில் நிற்பது சுவாசத் தேவையை குறைக்கின்றது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. ஒரு வகையில் மூச்சை அடக்கிக் கொள்வது உடலுக்கு ஒய்வை தருகின்றது.
மேற்சொன்ன மூன்று பயிற்சிகளும், ஒவ்வொன்றும் ஒரே அளவு நேரத்தில் செய்ய வேண்டும். மூன்று நிலைகளும் சமமாக இருக்க வேண்டும். யோகா சொல்வது என்னவென்றால் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுப்பது சூட்டை உண்டாக்கும். அதே போல இடது நாசியால் மூச்சை இழுப்பது குளிர்வை உண்டாக்கும்.
பலருக்கு ஏற்படும் சந்தேகம் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அடக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் வெளிவிட வேண்டும். இதை தெரிந்து கொள்ள குருவை நாட வேண்டும். தவறுதலாக செய்தால் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; வேறு கோளாறுகளும் உண்டாகலாம்.
நாடிசுத்தி
கும்பக பயிற்சியில்லாமல் பூரகவும், ரேசகமும் செய்வது நாடிசுத்தி எனப்படும்.
• வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் உட்காரவும்.
• வலது கையின் நடு மற்றும் சுண்டு விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இதர விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதை நாசிக முத்திரை என்பார்கள்.
• இடது கையின் கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை சின் முத்திரை என்பார்கள்.
• வலது கையின் கட்டை விரலால் உங்கள் வலது நாசியை மூடிக் கொள்ள வேண்டும். இடது நாசியின் மூலம் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
• உடனடியாக வலது மூக்கை திறந்து விட்டு இடது நாசியை மோதிர விரல்களால் மூடிக் கொள்ளவும். வலது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும்.
• இப்பொழுது வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இதை மூடி இடது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும். இதை மாற்றி மாற்றி 27 முறை செய்யவும்.
பிரணாயாமா முறைகளிலேயே பல வகைகள் உள்ளன. நாடிசுத்தி,கபாலபாதி, சூரிய பேதனா, சந்திர பேதனா, விலோமம், சீதளி, பிரதிலோமம் இத்யாதி வகைகளுள்ளன. தகுந்த குருவிடம் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அதன் செயல் முறைகளை குருவிடம் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிராணாயாமத்தின் பல வகைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம். தொடரும்.
1. அனுலோமா – விலோமா பிராணாயாமா
செய்முறை
உட்காரும் யோகாசன நிலைகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரவும். உடலை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும். கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளவும்.
1. இரண்டு நாசி துவாரங்களால் மூச்சை நிதானமாக, முழுமையாக வெளியிடவும்.
2. பிறகு உடனடியாக அடிவயிற்றுத் தசைகளை இயக்கி மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை உள்ளிழுக்கும் பொழுது எந்த சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை உடனே வெளியே விடவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
2. உஜ்ஜை பிராணாயாமா
1. பத்மாசனம் (அ) வஜ்ராசனம் போன்ற உட்காரும் நிலை யோகாசனங்களில் உட்கார்ந்து கொள்ளவும்.
2. நுரையீரலிலுள்ள காற்றை இரண்டு நாசிகளின் வழியே வெளியே விட்டு பிறகு உள்ளிழுத்துக் கொள்ளவும். உள்ளிழுத்து கொள்ளும் நேரம் மூன்றிலிருந்து நான்கு விநாடிகளாக இருக்க வேண்டும். அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த பின் மூலபந்தத்தை செய்யவும். இதை ஆசனவாயை சுருக்கி செய்ய வேண்டும். அதே சமயம் நுரையீரலில் மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூச்சு நிறுத்துவதை ஜலாந்தர பந்தத்தின் மூலம் (முகத் தாடையை மார்பில் அழுத்தி) செய்ய வேண்டும். 10 (அ) 15 விநாடிகள் கும்பக நிலையில் மூச்சை நிறுத்த வேண்டும்.
3. நிதானமாக உஜ்யான பந்தாவை செய்து மூச்சை வெளியிட்டு பந்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். மூச்சை விடுவது 8 லிருந்து 10 விநாடிகள் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுவது இடது நாசி மூலம் செய்ய வேண்டும். அப்பொழுது வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – உஜ்ஜையினி பிராணாயாமத்தில் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுப்பது இரண்டு நாசிகளாலும், மூச்சை வெளிவிடுவது இடது நாசியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
பலன்கள் 1. உஜ்ஜையினி பிராணயாமம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிராணாயாமம் செய்வது நல்லது.
3. ஆஸ்துமா, இருமல் மற்ற சுவாச மண்டல கோளாறுகளுக்கு இந்த பிராணாயாமம் பலனளிக்கும்.
3. சூரிய பேதன பிராணாயாமா
சூரியா என்றால் சூரியன் பேதனா என்றால் திறப்பது.
செய்முறை
வஜ்ராசனம் போன்ற சௌகரியமான ஆசன நிலையில் உட்காரவும். இந்த ஆசனத்தில் நன்றாக முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும். பிறகு இடது நாசியை இடது கை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுப்பது முடிந்தவுடன் மூல, ஜலாந்தர பந்தங்களை செய்யவும். இவற்றை செய்யும் பொழுது வலது நாசியை இடது கையில் நடுவிரலால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மூச்சு நிலைபெற்றிருக்கும். 15 லிருந்து 20 விநாடிகள் மூச்சை நிலை நிறுத்தினால் போதுமானது. மெதுவாக பந்தங்களை விடுவிக்கவும். பிறகு வலது நாசி வழியாக 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி இந்த சுழற்சியை 10 முறை செய்யவும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமத்தில் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நரம்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சீராக வைக்கப்படுகின்றன.
2. ஜலதோஷம், தலைவலி, தொண்டைவலி முதலிய சுவாச மண்டல கோளாறுகள் குணமாகின்றன.
4. சந்திர பேதன பிராணாயாமா
சந்திர என்பது சந்திரனைக் குறிக்கிறது. பேதனா என்றால் திறப்பது என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது. சந்திரன் குளிர்ச்சியை குறிப்பதால் இந்த பிராணாயாமம் சந்திர பேதன பிராணாயாமம் எனப்படுகிறது.
செய்முறை
1. வஜ்ராசனம் போன்ற உட்காரும் யோகாசன நிலையில் சவுகரியமாக அமரவும். 2. வலது நாசியை மூடிக் கொண்டு 4 லிருந்து 5 நொடிகள் இடது நாசி மூலம் மூச்சை உள்ளிழுக்கவும். கும்பகத்தை 10 லிருந்து 15 விநாடிகள் பந்தங்கள் மூலம் செய்யவும். செய்யும் பொழுது இடது நாசியை மூடிக் கொள்ளவும்.3. பந்தங்களை விடுவிக்கவும். இடது நாசியால் 6 லிருந்து 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி. இதை 5 லிருந்து 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமம் உடலின் அதீத உஷ்ணத்தை எடுத்து விடுவதால் கண்ணெரிச்சல், மூக்கில் ரத்தம் வருதல் முதலியன குணமாக்கப்படும். 2. உடல் உஷ்ணத்தால் முடி உதிர்தல், இதர சரும நோய்கள் குணமாகும். 3. உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு வியாதிகள் குணமாகும்.
மறுபடியும் சொல்கின்றோம், பிராணாயாமம் நன்கு தேர்ந்த யோகாசன குருவிடம் கற்றுக் கொண்ட பின்பே செய்ய வேண்டும். பிராணாயாமங்களின் பரிமாணம் அற்புதமானது. மூச்சு விடுதலை கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். தற்போதைய ஆய்வுகள் மூச்சு விடும் சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் 16 லிருந்து 20 தடவை நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. உறங்கும் போது இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10 லிருந்து 12 சுழற்சிகளாக குறைகிறது. இதுவே ஆழ்நிலை தியானத்தின் போது ஒரு நிமிடத்தில் 4 லிருந்து 6 சுழற்சிகளாக குறைந்து விடுகிறது! பிராணாயாமமும் தியானமும் நெருங்கிய தொடர்புடையவை
தியானம் செய்யும் முறை
தியானம் செய்யும் முறை
பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்து வெள்ளை ஆடையுடுத்து ஈசுவரனைநோக்கி அமர்ந்து தன்னிடம் தேவதைகளை நியாஸம் (பதிவு) செய்ய வேண்டும்.
உபஸ்தத்தில் பிரம்மா நிலை பெறட்டும்;
பாதங்களில் விஷ்ணுவும்,
கைகளில் ஹரனும்,
தோள்களில் இந்திரனும்,
வயிற்றில் அக்னியும்,
இருதயத்தில் சிவனும்,
கழுத்தில் வசுக்களும்,
வாயில் ஸரஸ்வதியும்,
நாசியில் வாயுவும்,
கண்களில் சூரிய சந்திரர்களும்,
காதுகளில் அசுவினீ தேவர்களும்,
நெற்றில் ருத்திரர்களும்,
தலையின் முன் பாகத்தில் ஆதித்தியர்களும்,
உச்சியில் மஹாதேவரும்,
சிகையில் வாமதேவரும்,
பின்புறம் பிநாகியும்,
முன்புறம் சூலியும்,
இடத்திலும் வலத்திலும்
பார்வதி பரமேசுவரர்களும் நிலைபெறட்டும்.
எல்லாப் பக்கமும் வாயு நிலை பெறட்டும்.
அதற்கப்பால் எங்கும் அக்னி ஜ்வாலை
சுற்றி நிலைபெறட்டும்.
எல்லா அங்கங்களிலும் எல்லா தேவதைகளும் அவரவர்க்குரிய இடங்களில்
நிலைபெற்று என்னை இரக்ஷித்தருளட்டும்.
அக்னி என் வாக்கில் இடங்கொண்டுள்ளது;
வாக்கு இருதயத்திலும்,
இருதயம் ஜீவனாகிய என்னிடத்திலும்,
நான் அமிருதமாகிய பரமாத்மாவிடத்திலும்,
பரமாத்மா பரப்பிரம்மத்தினிடத்திலும் அடக்கம்.
வாயு என் பிராணனிலும்,
பிராணன் இருதயத்திலும்,
இருதயம் என்னிடத்திலும்,
நான் பரமாத்மாவிடத்திலும்,
பரமாத்மா பரப் பிரம்மத்திடத்திலும் அடக்கம்.
அவ்வாறே சூரியன் கண்ணிலும்,
சந்திரன் மனதிலும்,
திசைகள் காதுகளிலும்,
ஜலம் ரேதஸ்ஸிலும்,
பிருதிவி சரீரத்திலும்,
மரஞ் செடி கொடிகள் உரோமங்களிலும்,
இந்திரன் பலத்திலும்,
மழை தலையிலும்,
ஈசானன் கோபத்திலும்,
உயிர் ஆத்மாவிடத்திலும்,
ஆத்மா இருதயத்திலும்,
இருதயம் என்னிடத்திலும்,
நான் அழிவற்ற பரமாத்மாவிடத்திலும்,
பரமாத்மா பரப் பிரம்மத்தினிடத்திலும் அடக்கம் எனத் தியானிக்கின்றேன்.
தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:
தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:
கீதை சொல்லும் தியான முறை
“சுத்தமான இடத்தில் உறுதியான ஆசனம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அது அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும் இருக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது துணி, மான் தோல், தர்ப்பை பரப்பி அதன் மேல் அமர்ந்து கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும்,புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தைச் சுத்தம் செய்வதற்காக யோகத்தைப் பயில வேண்டும்.
உடம்பையும்,தலையையும், கழுத்தையும் சமமாக அசைவில்லாமல் வைத்துக் கொண்டு, உறுதியோடு, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல், அமைதியான மனத்துடன், பயமற்றவனாக,பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாய், மனத்தை வசப்படுத்தி, என்னிடமே மனத்தைச் செலுத்தி,என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்.”
மனதைச் சுத்தம் செய்ய நம்மைத் தயார்ப்படுத்தும் தியான முறைக்கு முதலில் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை ஒரு ஆரம்பம். மனத்திற்கு நாம் தரும் ஒரு அறிவிப்பு. செய்யப் போகிற தியானம் பவித்திரமானது, தெய்வீகமானது என்று சொல்லும் சூட்சுமமான செய்தி. மேலும் பூச்சிகள், எறும்புகள், புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்கும் சுத்தமான இடம் வலியுறுத்தப் படுகிறது. அதே போல உறுதியான ஆசனம் உறுதியான மனநிலைக்கான ஆயத்தம். உறுதியில்லாத ஆசனம் அடிக்கடி மனதின் கவனத்தை சிதறடிக்க வல்லது என்பதால் உறுதியான ஆசனம் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். அதிக உயரம், அதிக தாழ்வு இரண்டும் தியானத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்.
துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும்,உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான, அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது.
அடுத்ததாக உடம்பை நேராக இருத்திக் கொண்டு அமர்வது மிக முக்கியம். பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு விறைப்பாக உட்கார்ந்து கொள்ள முற்படுகிறார்கள். அது தவறு.விறைப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ள முடியாது. உடல் பழைய நிலைமைக்கு வர போராட ஆரம்பித்து விடும். உடல் தியானத்திற்கு அனுகூலமாக வேண்டுமே ஒழிய போர்க்கொடி உயர்த்தினால் தியானம் கைகூடாது. எனவே உடலை விறைப்பில்லாமல் இயல்பாக நேராக இருத்திக் கொள்ளப் பழகிக் கொள்வது முக்கியம்.
அதே போல ’மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதையும் அப்படியே எடுத்துக் கொண்டு முயற்சித்தால் தலைவலி, தலைசுற்றல் போன்றவை வந்து விடக்கூடும். பகவத்கீதைக்கு சங்கரர் தரும் விளக்கத்தில் முழுக் கவனத்தையும் மூக்கின் நுனிக்கு வரச் சொல்கிறார். அதுவே சரியாகப் படுவதாக முயன்று பார்த்த அனுபவஸ்தர்களும் கருதுகிறார்கள்.
கண்களை எல்லா திசைகளிலும் அலைபாய விடக் கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண் போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும் அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.
பிராணாயாமமும் திருமந்திரமும்
திருமந்திரமும் , பிராணாயாமமும்
திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம். ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த நூலை திருமூலர் என்னும் தவயோகி இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை மற்றும் கடவுளை காணும் முறையை அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார். திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள் நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார்.
மந்திரம் :
மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ்.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
பொருள் :
திருமூலர் ஆகிய நான் உலக மக்களின் நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை (பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன். காலையில் எழுந்து கருத்தை அறிந்து படித்தால் கடவுளை அடையலாம்.
ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம். திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும் அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை கூறிய பின் அவருடைய மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கூறுவேன்.
முன்னுரை :
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
பொருள் :
உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும். உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக் கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக் கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன்.
மந்திரம் :
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே.
பொருள் :
இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று நினைத்திருந்தேன்.உடம்பிலே உயிராகிய கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து வருகின்றேன்.
உடலினை வளர்த்த திருமூலர் பிராணாயாமம் மற்றும் ஆசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
நான் பிராணாயாமம் பற்றி மட்டும் கூறுகிறேன்.
பிராணாயாமம் : பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி.
பிராணாயாமத்தின் பயன்கள் :
1. தினமும் செய்தால் வியாதிகள் வராது.
2. ஆரோக்கியமாக இருக்கலாம்.
3. கொழுப்பைக் குறைக்கும்.
4. ஆயுளை அதிகரிக்கும்.
5. நினைவாற்றலை அதிகரிக்கும்.
6. தலைவலி வராது.
7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும்.
8. இரத்தநாளங்கள் சுத்தமாகும்.
9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும்.
10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும்.
11. குரல் இனிமையாகும்.
12. மலம், ஜலம் குறையும்.
13. இரத்த அழுத்தம் குறையும்.
14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.
15. பசி குறையும். தாகம் குறையும்.
16. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
17. தேவையற்ற தூக்கம் குறையும்.
18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம்.
19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும்.
20. மூச்சுக்காற்றை சீராக்கும்.
21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும் மாசுக்களைக் கட்டுபடுத்தும்.
22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும்.
23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால் போதும். 8 மணி நேரம் தூங்க வேண்டியதில்லை. சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும்.
மந்திரம் :
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்து அதுவிட்டளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
பொருள் :
எங்கு இருந்தாலும் மூச்சைப் பிடித்து பிராணாயாமம் செய்தால் உடம்பிற்கு(ஆக்கை) அழிவில்லை. மூச்சை முடிந்த அளவு இழுத்துப் பிடித்து வெளியே விட்டால் தலைவனாகலாம். வாழ்க்கையில் முன்னேறலாம். மற்றவர்கள் போற்றுவார்கள்.
மந்திரம் :
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
பொருள் :
பறவையை விட வேகமாக செல்ல கூடிய குதிரை போன்ற மூச்சை அடக்கினால் போதை பொருட்களை குடிக்கத் தேவையில்லை. நாம் சுறுசுறுப்பாக துள்ளி நடக்கலாம். சோம்பல் ஏற்படாது. உண்மையை சொல்கிறேன் சூடு, சொரணை இருந்தால் கேட்டுக் கொள்.
மந்திரம் :
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.
பொருள் :
இஷ்டபடி வெளியில் வருகின்ற மூச்சுக் காற்றை முறைப்படி பிராணாயாமம் பயிற்சி மூலம் மூச்சை முறைப்படித்தினால் உறுப்புகள் புத்துணர்வு பெற்றுச் சிவக்கும். தலைமுடிக் கறுப்பாகும். பிராணாயாமம் பயிற்சி செய்யும் வரை உடம்பிலிருந்து உயிர் பிரிந்து செல்லாது.
மந்திரம் :
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.
பொருள் :
இடப்பக்கமும், வலப்பக்கமும் மூச்சு பயிற்சி மாற்றி மாற்றி பயிற்சி செய்து தலைவராகலாம் என்று அறிந்தவர்கள் யாரும் இல்லை. மூச்சுப் பெயர்ச்சி செய்து ஒளி வடிவில் கடவுளைக் காணலாம். மூச்சுப்பெயர்ச்சி செய்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தலாம். ஆகவே இதன் மூலம் நூறு வயது வரை நோய் நொடியின்றி இளமையுடன் வாழலாம் என்று திருமூலர்க் கூறியுள்ளார்.
பிராணாயாமம் செய்யும் முறை :
பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள் :
1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.
தகுதியான நேரம் :
1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்து செய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம் கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.
தகுதியான ஆசனம் :
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.
பூரகம் : மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.
ரச்சகம் : மூச்சை வெளியே விடுதல்.
உள்கும்பகம் : மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல்.
வெளிகும்பகம் : மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும்.
பந்தம் :
மூலபந்தம் :
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.
மூலபந்தத்தின் பயன்கள் :
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும்.
ஜலந்தர்பந்தம் :
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
ஒட்டியானபந்தம் :
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
பிராணாயாமம் முறைகள் :
நாடிசுத்தி :
புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றி மாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. இதை செய்ய தேவையில்லையென்றால் இதற்கு அடுத்தப் பயிற்சி செய்யவேண்டும்.
அனுலோம் ,விலோம் :
இடதுமூக்கை மூடிவிட்டு வலதுமூக்கால் மூச்சை மெதுவாக ஒரே சீராக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு இரண்டுபக்க மூக்கையும் மூடிக்கொள்ளவும். முடிந்த அளவு மூச்சை உள்ளே வைத்துக்கொண்டு வலதுபக்கம் வழியாக வெளிவிடவும். அடுத்து வலது மூக்கை மூடி இடது மூக்கால் மூச்சை இழுக்கவும். பின்னர் கும்பகம் செய்து வலது மூக்கால் வெளிவிடவும். இவ்வாறு மூக்கை மாற்றி மாற்றி பயிற்சி செய்யவும். முதலில் சிறிதுக் காலத்திற்கு 5 முறை செய்ய வேண்டும். பிறகு இருபது முதல் முப்பது முறை செய்யலாம். முதலில் 1 விநாடி பூரகம் செய்து 2 விநாடி கும்பகம் செய்து பின்னர் 2 விநாடி ரச்சகம் செய்யவும். பிறகு சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டு சென்று 5:20:10 என்ற கணக்கிற்கு பண்ணலாம்.இதில் இன்னொரு முறையும் உண்டு. வெளிகும்பக முறையில் 5:10:20 என்ற கணக்கிற்கு பண்ணலாம். வெளிக்கும்பக முறை அதிகபலனை தரும். இப்படி செய்வதினால்
1. நுரையீரலில் உள்ள நோய்கள் குறையும்.
2. இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
உள்கும்பக முறை :
1:2:2 ஆரம்ப நிலை 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:10:10
இரண்டுமாதம் கழித்து 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:20:10 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
20 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
வெளிகும்பக முறை :
1:2:2 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:10 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:20 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
20 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
கபால ஜொலிப்பு :
இந்த பிராணாயாமம் செய்வதால் கபாலம் துடிக்கும். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பூரகம் ரச்சகத்தில் செய்யவும். இப்பயிற்சியில் கும்பகம் கிடையாது. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு ஒரு முறை பூரகம் ரச்சகம் செய்யவும். படிபடியாக உயர்த்திக்கொண்டு சென்று ஒரு விநாடிக்கு பத்து முறை வரை பூரகம் ரச்சகம் செய்யவும். வியர்த்துக் கொட்டும் வரை இப்பயிற்சி செய்யவும்.
பயன்கள் :
1. சுவாச குழாய் சுத்தமாகும்.
2. ஆஷ்துமா குணமாகும்.
3. காச நோய் வராது.
4. ரத்தம் சுத்தமடையும்.
உஜவி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை இழுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு உள்ளே கும்பகம் செய்து வலது மூக்கை மூடிக்கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை வெளியே விடவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பை விரிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே சீராக இழுக்கவும்.
சீக்காரி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். நாக்கை மேலே மடித்துக் கொள்ளவும். வாயை திறந்து ஷ்ஷ் சத்தம் போட்டுக்கொண்டு மூச்சை வாய் வழியாக இழுக்கவும். முடிந்த வரை அதிகநேரம் கும்பகம் செய்து இரண்டு மூக்கு வழியாக ரச்சகம் செய்யவும்.
பயன்கள் :
1. தாகம் குறையும்.
2. சோம்பல் குறையும்.
3. தூக்கம் போய்விடும்.
சீத்தாளி :
பத்மாசனம் அல்லது சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். அதன் பிறகு நாக்கை வாய் வெளியே நீட்டிக் கொள்ளவும். அதன்பிறகு காற்றை நாக்கு வழியாக உள்ளே இழுத்து முடிந்த வரை கும்பகம் செய்து பின்பு ரச்சகம் செய்யவும்.
பயன்கள் :
1. கட்டி, மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள் நீங்கும்.
2. தாகம் குறையும்.
3. கோபம் குறையும்.
பஷ்திரிகா :
பஷ்திரிகா என்பது கபாலமும், உஜவியும் சேர்ந்து செய்வதாகும். கும்பக முறையில் செய்யாமல் 5 லிருந்து 10 முறை வேகமாக மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடவும். பின்னர் உஜவி முறையில் காற்றை இழுத்து முடிந்த அளவு கும்பகம் செய்து பின்னர் ரச்சகம் செய்யவும். கோடை காலங்களில் ஒரு முறை செய்யவும். குளிர் காலங்களில் இரண்டு முறை செய்யவும். முதலில் 5 விநாடிக்கு கும்பகம் செய்து பின்னர் படிப்படியாக நான்கு நிமிடம் வரை கும்பக நேரத்தை கூட்டவும்.
பயன்கள் :
குளிர்க்காலங்களில் போர்வை இல்லாமல் இப்பயிற்சி மூலம் உடம்பை சூடாக்கிக் கொள்ளலாம்.
வண்டு பிராணாயாமம் :
வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். மூச்சை வேகமாக இழுக்கவும். பின்னர் தொண்டையிலிருந்து குறட்டை விடும் போது வெளிவரும் சத்தம் போல், வண்டு சத்தம் போடுவது போல் மூச்சை மெதுவாக வெளியே விடவும்.
முடிவுரை:
பிராணாயாமம் செய்யும் போது மனதை ஒருமுக படுத்தி செய்தால் அதிக பலன் கிடைக்கும். ஆகவே கண்களை மூடி ஓம் அல்லது ஓம் மஹா கணபதி நமக என்று மந்திரங்களை கூறிக் கொள்ளலாம்.
Wednesday, April 10, 2013
சிவபுராணம் - பொருள்
சிவபுராணம்
சிவபுராணம் - பொருள்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......
....... வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே 76
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய தன்மைகளை
மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
"ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை
வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே! தந்தையே! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.
திருச்சிற்றம்பலம்
Thursday, April 4, 2013
உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் இருக்கும் அதி விசேட தன்மை
உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் இருக்கும் அதி விசேட தன்மை கீழ் தரப்பட்டுள்ளது. மேலும் இத்தனை விடையங்களை கொண்டுள்ள ஆலயங்களில் ஒன்று தவிர அனைத்தும் இந்தியாவினுள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
•மிகப்பெரிய கோவில் குளம் அமைந்துள்ள இடம்.
1.தஞ்சாவூர் (30 ஏக்கர்).
2.மதுரை (22ஏக்கர்).
3.மதுரை (21ஏக்கர்).
•மிகப்பெரிய நந்தி சிலை அமைந்துள்ள இடம்.
1.மைசூர் , கர்னடகா (24 அடி நீளம், 15 அடி உயரம்).
2.பெங்களூர் , கர்னடகா (20 அடி நீளம், 15 அடி உயரம்).
3.தஞ்சாவூர் , தமிழ்நாடு (19.5 அடி நீளம், 12 அடி உயரம்).
4.இராமேஸ்வரம் , தமிழ்நாடு (12 அடி நீளம், 9 அடி உயரம்).
•ஆயிரம் கால் (தூண்) மண்டபம் அமைந்துள்ள ஆலயங்கள்.
1. குடுமியன் மலை , தமிழ்நாடு.
2. ஸ்ரீரங்கம் , தமிழ்நாடு.
3. மதுரைமீனாட்சி , தமிழ்நாடு.
4. திருஅண்ணமலை தமிழ்நாடு.
5. திருப்பதி , கர்னாடக.
6. திருவனந்த புரம் , கேரள.
• மிக உயர்ந்த கோபுரம் கொண்டுள்ள ஆலயங்கள்.
1. முருதேஸ்வரா , கர்னாடக (249 அடி உயரம்).
2. ஸ்ரீரங்கம் , தமிழ்நாடு (236 அடி உயரம்).
3. திருஅண்ணாமலை தமிழ்நாடு (217 அடி உயரம்).
4. தஞ்சாவூர் பெரிய கோவில் (216 அடி உயரம்).
5. ஆவுடையார் கோவில் தமிழ்நாடு (200 அடி உயரம்).
மிகப் பெரிய விக்கிரகம் (மூர்த்தி) கொண்டுள்ள ஆலயங்கள்.
1. முருகன் , கோலாலம்பூர், மலேசியா (141 அடி உயரம்).
2. சிவன் , முருதேஸ்வரா , கர்னாடக (123 அடி உயரம்).
3. அனுமான் , ஸ்ரீஅனுமான் மண்டிர், பஞ்சாப் (67 அடி உயரம்).
4. அனுமான் , திருவல்லூர் தமிழ்நாடு (40 அடி உயரம்).
5. அனுமான் , பாண்டிச்சேரி (36 அடி உயரம்).
சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? - மஹா பெரியவா
சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? - மஹா பெரியவா
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.
தீபாவளியில் தீப தரிசனம்
தீபாவளியில் தீப தரிசனம்
அதர்மமாகிய நரகாசுரன் அழிக்கப்பட்டு தர்மம் ஜெயித்த திருநாளே தீபாவளி என்பது நமக்குத் தெரியும். தீபாவளிகா, சுக்ராத்ரி, தீபோத்ஸவம் எனப் புராணங்கள் பலவாறு போற்றுகின்றன இந்தப் பண்டிகையை.
நரகாசுரனை அழிக்கச் சென்ற பகவான் கிரி துர்க்கம், ஜல துர்க்கம், அக்னி துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய அவனது நான்கு கோட்டைகளைக் கடந்து உட்புகுந்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இவை ஐம்பூதங்களைக் குறிக்கும் (இங்கு மண், நீர், தீ, வாயு ஆகியன முறையே குறிப்பிடப்படுவதால், ஆகாயமும் தானாக இதில் உட்பட்டுவிடும்.)
நமது உடம்பும் ஐம்பூதங்களால் ஆனது. அதனுள் இறைவனுக்கு இடம் கொடுத்தால், அவர் நம்முள் இருக்கும் மடைமையை பிடுங்கிக்கொள்வார். இதுவே தீபாவளித் திருநாளின் உட்பொருள். இதையே ரமணர் இன்னும் அழகாகச் சொல்வார். 'தீய எண்ணங்களே நரகன். அந்த எண்ணங்களை அடக்கி தானாக ஆவதுதான், அதாவது ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி’ என்கிறார் அவர். காஞ்சி மகா பெரியவரோ, 'பகவத் கீதையின் தம்பி எனப் போற்றுகிறார் தீபாவளியை. இந்த நன்னாளில் தீபங்கள் ஏற்றி வைத்து பேரொளியாய் - வளர்ஜோதியாய் இறையை வழிபடல் வேண்டும்.
தீபம் ஆவளி= தீபாவளி. அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுதல் என்று பொருள். ராவணனை வென்ற ஜயராமன், சீதாராமனாக அயோத்தி திரும்புகிறான். அப்போது நகரெங்கும் தீபம் ஏற்றிவைத்துக் கொண்டாடினார்களாம் அயோத்தி மக்கள். அவர்கள் அரண்மனையில் நுழையும் போது கௌசல்யா தேவி, 'வருக சீதா... நீ இல்லாது போனதால் இருள் நிறைந்துபோனது இந்த அரண்மனை. நீதான் விளக்கேற்றி ஒளியூட்ட வேண்டும்’ என்றாராம். சீதாதேவியும் அரண்மனையில் விளக்கேற்றி எல்லோரையும் அகமகிழ வைத்தாளாம். அந்த நாள் ஒரு தீபாவளி!
தீபாவளியில் தீபத்தின் முக்கியத்துவம் குறித்து இன்னொரு புராணச் சம்பவம் சொல்வார்கள்.
நரகனை அழிக்க பகவான் சென்றதும், பாணாசுரன் முதலான தீயவர்கள் திருமகளை கவர்ந்து செல்ல திட்டமிட்டனராம். இதையறிந்த அலைமகள், அவர்களுக்குப் புலப்படாத வண்ணம் அருகில் இருந்த தீபச் சுடரில் ஐக்கியமாகி விட்டாளாம். இது நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். எனவே இந்த நன்னாளில் தீபமேற்றி வழிபட, நமது வீடுகளில் திருமகள் வாசம் செய்வாள்
கடவுள் என்று ஒன்று என்று சொல்பவர்களுக்கு :
<கடவுள் என்று ஒன்று என்று சொல்பவர்களுக்கு :
ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.அதற்கு ஒரு நீதிபதி அவர்களை தலைமை தாங்கிட அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டம் கடவுள் இல்லையென்று கூறும் நாத்திகவாதிகளால் கூட்டப்பட்டிருந்த கூட்டம்.
அந்த நீதிபதி அவர்களோ,கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்.
அவர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.
உடனே,அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நாத்திகர்,
“நான் பார்க்காத எதையும் நம்ப மாட்டேன்” என்றார்.
அதற்கு அந்த ஆத்திக நம்பிக்கை கொண்ட நீதிபதி,
“அப்பா! உனது மூளை எனது கண்களுக்குத் தெரியவில்லை;அதற்காக அது இல்லை என நான் நம்புவது அழகா?” எனக் கேட்டார்.
நாத்திகத்தை தனது கொள்கைகளாகக் கொண்ட சகோதரர்கள் சிந்திக்கவே இந்த நிஜக்கதை.
நன்றி;இராமகிருஷ்ண விஜயம்,ஜனவரி,2011.
நவராத்திரி விழா
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவை அலங்கரிக்கும் கொலு, 9 படிகளைக் கொண்டதாக இருக்கும். கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தைக் குறிக்கும்; அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், அரசி, மந்திரி, வேலையாட்கள் போன்ற உருவங்கள் ரஜோ குணத்தைக் குறிக்கும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்கு உணர்த்துகின்றன.துர்கை என்றால் 'அகழி’ என்றும் பொருள். அதாவது, அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள். துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், நாம் அவளை துர்கை என்று அழைக்கிறோம். மூன்று சக்திகளின் ஒன்றிய வடிவமாகத் தோன்றியவள் துர்கை. துர்கையைத் தமிழில் 'கொற்றவை’ என்பர். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகும். கல்விக்கு அதிபதி சரஸ்வதி. சரஸ் என்றால் 'பொய்கை’ என்றும், வதி என்றால் 'வாழ்பவள்’ என்றும் பொருள். சரஸ்வதி என்றால் 'மனம் எனும் பொய்கையில் வாழ்பவள்’ என்று பொருள். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள் (நவராத்ர வ்ரதஸ் அஸ்ய நைவ துல்யானி பூதலே). தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய விரதம் நவராத்திரி விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.
சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள்
சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள்
சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது. நண்பர்களே, இன்று சிவராத்திரி தினம். சிவனை வழிபடுங்கள். பலனைப்பெறுங்கள்
மாங்கல்யம் -மஞ்சள்கயிறு.
மாங்கல்யம் -மஞ்சள்கயிறு.
மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. "தந்து' என்றால் "மஞ்சள் கயிறு' என்று பொருள். "திருமாங்கல்ய சரடு' என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை "விதந்து'என்று குறிப்பிடுவார்கள். அதாவது "மாங்கல்ய கயிறு இல்லாதவள்' என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிற்றில்தானே தாலி கட்டப்படுகிறது. பின்னர் அவரவர் தம் வசதிக்கு ஏற்ப மாற்றம் செய்கிறார்கள்.
இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!
இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!
இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
கண்ணீர் விடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்
நிவேதனம்
நிவேதனம்-இது சேஷாத நாத சாஸ்திரிகளின் விளக்கம்:
கோயில்கள் பலவற்றில், சிறு பாத்திரத்தில் இருக்கும் நைவேத்தியத்தையே அனைத்து சந்நிதிகளிலும் நிவேதனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனியே நிவேதனம் செய்வதுதானே சரி?
பாத்திரங்களில் பகிர்ந்தளித்து பல தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நிவேதனம் தயார் செய்து, அதைப் பல்வேறு பாத்திரங்களில் பகிர்ந்துவைத்து, தனித்தனியாக நிவேதனம் செய்யும்போது... முதல் நிவேதனம் ஆனதும், அதாவது முதல் பாத்திரத்தில் உள்ள நைவேத்தியம் நிவேதனம் செய்யப்பட்டதும் மற்றவையும் நிர்மால்யம் ஆகிவிடும். எனவே, மற்ற தெய்வங்களுக்குப் பகிர்ந்தளித்த நிவேதனம் தனது தூய்மையை இழந்துவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். சமைத்த பொருளுக்கு மட்டும் இது பொருந்தும். தேங்காய், பழ வகைகள் தகுதி இழக்காது
கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்
கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…
நம்மில் பலரும் காலை முதல் இரவு வரை பரபரப்புடன் செயல்படுகிறோம். இதில் பூஜை, புனஸ்காரம் இவற்றுக்கெல்லாம் நேரமில்லை என சொல்கிறோம். ஓய்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவும் பலரிடம் இருக்கிறது. ஆனால், பக்தி என்பதும் இளமை முதற்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. “முதுமையில் என்னால் சொல்ல முடியுமோ முடியாதோ, அதனால் இப்போதே நாராயண நாமம் ஜபிக்கிறேன்’ என்று ஆழ்வார்கள் சொல்கிறார்கள்.
ஒருமுறை அர்ஜுனனுக்கு தான் மட்டுமே சிறப்பான சிவபூஜை செய்வதாக மமதை உண்டாயிற்று. இதை அறிந்த கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு தேவலோகத்தில் பவனி வந்தார். ஓரிடத்தில் மலை போல குவிந்து கிடக்கும் மலர்க்குவியலை கண்டனர். அதன் மணம் மிக ரம்மியமாக இருந்தது. அர்ச்சுனன் அதை சிலர் அப்புறப்படுத்துவதை கண்டான். இதை இங்கே குவித்தவர் யார் என கண்ணனிடம் கேட்டான். மலர்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களிடமே கேட்கும்படி கண்ணன் கூறினான். அர்ஜுனனும் அவர்களிடம் கேட்க, “பேசுவதற்கு நேரமில்லை. அடுத்து சிவ பூஜை செய்வதற்குள் இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் இன்னும் நிறைய மலர்கள் சேர்ந்து விடும்’ என்று பணியாளர்கள் சொல்லிவிட்டனர். யார் இவ்வளவு மலர்களைக் கொட்டி பூஜித்தது என ஆச்சரியப்பட்டான். கடைசியில் தனது சகோதரன், பீமனே இவ்வாறு செய்தவன் என்பதை அறிந்தான்.
“”அர்ஜுனா! பீமன் சிறந்த சிவபக்தன். உன்னைப் போல் வெளிப்படையாக பூஜிப்பதில்லை. மனப்பூர்வமாக மானஸ பூஜை செய்கிறான். அந்த வழிபாட்டில் அவன் ஈசனுக்கு அர்ப்பணிக்கும் கற்பனை மலர்களே இவை,” என்று மானஸ பூஜையின் பெருமையை எடுத்துரைத்தார் கண்ணன். மனோசக்தியின் ஆற்றல் மிக வலிமையுடையது. அதனால், மனப்பூர்வமாக இறைவனை வழிபடுவதும் மிக உயர்வுடையதே.
திருவிளக்கு தீபம்
திருவிளக்கு தீபம்
பூஜை முடிந்ததும் திருவிளக்கு தீபம் எவ்வளவு நேரம் சுடர்விட வேண்டும். எண்ணெய் தீரும் வரை சுடர்விட்டு, பிறகு தானாக அணைய விடலாமா?
அதிகாலை ஐந்தரை மணிக்கே பளபளவென விடிந்துவிட்டால், மின் விளக்கை அணைத்துவிடுவோம். ஆறரை மணிக்குத் தாமதமாக விடியும்போது, அதுவரைக்கும் மின்விளக்கு எரியும். தேவை இருக்கும்போது சேவை தொடர்வது பொருந்தும்.
கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். தரிசனம் செய்ய அடியார்கள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக் காக திருவிளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும்.
வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும். தானாகவே அணைய விடுவது அபசாரமாகும். வெளிச்சத்துக்காக மட்டும் நாம் தீபம் ஏற்றுவதில்லை. நாம் செய்யும் சடங்குகளுக்குச் சாட்சியாக விளக்கை எண்ணுவோம். விளக்கை வழிபடுவது பண்பின் அடையாளம்.
லிங்கோத்பவ காலம்!
லிங்கோத்பவ காலம்!
சிவராத்திரி ஐந்து வகைப்படும்.
அவை யோக சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
பக்ஷ சிவராத்திரி,
நித்ய சிவராத்திரி
மற்றும் மகா சிவராத்திரி.
மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமே மகா சிவ ராத்திரி.
சிவபெருமானின் அருவுருவ வடிவான லிங்கோத்பவ வடிவம் உற்பத்தியான தினம் இது. அன்று இரவு 11.30 மணி முதல் 1.00மணி வரை உள்ள காலமே, ‘லிங்கோத்பவ காலம்! ஆகவே, சிவராத்திரியன்று குறிப்பிட்ட இந்த காலத்திலாவது சிவதரிசனம் செய்து பலன்பெற வேண்டும்.
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்)
அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சந்தோஷமாக வாழ ஒரு வழி கிடைக்கும்
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.
லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித...்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும்.
நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ''இருநிலனாய் தீயாகி'' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.
Wednesday, April 3, 2013
குனித்த புருவமும் -அப்பர்.
குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,
பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை
பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.
தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீரை, கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார்கள்?
தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீரை, கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார்கள்?
கிழக்கை நோக்குவதற்கு நம்பிக்கை காரணமாக இருக்கலாம்...சூரியன் உதிக்கும் திசை கிழக்கு தானே...விடியல் அங்கு தானே ஆரம்பம்...அதனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் விடியல் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை ஊட்டுவதற்காக என நினைக்கிறேன்
மருத்து நீர் என்றால் என்ன?
மருத்து நீர்
தமிழ் வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்
தமிழ் வருடப் பிறப்பன்று ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்
ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்
தமது முன்னோர்கள் தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் ஆரோக்கியமான ஒரு காரணத்தை வைத்திருந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆம். அடிப்படையில் அவை ஆரோக்கியமான வாழ்வுக்கான காரணங்களேதான்.
வருடத்தில் ஒரு நாள் மருத்து நீர் வைத்து நீராடும் வழமையும் அதனைத் தயாரிக்க சேகரிக்கப்படும் பொருட்களின் அடிப்படையில் நோக்கும்போது அதுவும் மனித ஆரோக்கியத்தினைக் குறிக்கோளாகக் கொண்டதே ஆகும்.
இந்த நடைமுறைகள் நாகரீகமடைந்த இக்காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒன்றாக இருப்பினும், தமிழ்க் கிராமங்களில் இவ்வழக்கம் இன்றும் பின்பற்றப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
போனவருட துன்பங்களை. தலை முழுகிறதுக்கு..சமய ரீதியாப் பார்த்தால் - துன்பங்களும் தவறுகளும் இந்தப் தூய நீரால் நீராடும் போது கழிந்து செல்லும் எனும் எண்ணம்
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் - அதில் உள்ள மூலிகைகள் உடல் நிலையை சீர்படுத்துவதற்கு....ஒரு வருடத்துக்கு ஒருக்கால் உடலை சரிபார்த்துக் கொள்ளும் ஒரு முயற்சி தான்
அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன.
சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது.
ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும்.
தமிழ்ப் புதுவருடம்
இந்துக்களின் தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகிறது. அதாவது மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை பன்னிரண்டு ராசிகள் சூரியன் செல்லுகின்ற கதியை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு ராசியிலும் சூரியன் வரும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரியன் சஞ்சரிக்கும் காலங்களே ஒவ்வொரு சூரிய மாதமாகக் கணக்கிடப்படுகிறது.
சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களைக் கொண்டதே ஒரு தமிழ் வருடமெனக் கொள்வது எம்முடைய மரபாகும்.
புதுவருடத்தை கணக்கிடும்போது சூரியனை முதலாகக் கொண்ட காரணத்தால் 'சௌரமானம்'' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
அதுபோல சந்திரனைக் கொண்டு புது வருடத்தைக் கணக்கிடும் முறைக்கு 'சாந்தரமானம்'' என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
'சாந்தரமானம்'' முறை மூலம் புது வருடத்தைக் கணிப்பவர்கள் பெரும்பாலும் ஆந்திர தேசத்தைச் சேர்ந்த தெலுங்கர்களாவர். ஆனால் தமிழர்களின் புதுவருடமானது 'சௌரமானம்' எனப்படுகிறது. அதாவது சூரிய தேவனை முழு முதலாகக் கொண்டு புது வருடத்தைக் கணிப்பதாகும்.
ஆண்டுகளைக் கணக்கிடுகின்ற முறை இடத்துக்கு இடம் இனத்திற்கு இனம் வேறுபாடு கொண்டு காணப்படுகிறது.
சர்வதேச ரீதியில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத காலப் பகுதியை ஆங்கில ஆண்டாகக் கணிக்கிறார்கள். இம்முறையைத் தான் அனைத்துலக மக்களும் பொதுத் தொடர்பு ஆண்டாகக் கைக்கொள்கிறார்கள்.
தெலுங்கு தேசத்தவர்கள் 'சாந்தரமானம்' முறையை கடைப்பிடிக்கிறார்கள். கேரள தேசத்தவர்கள் தமது ஆண்டு முறைமையை 'கொல்லம்' என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு இனத்திற்கு இனம் புது வருடப் பிறப்பு வேறுபட்டாலும் அனைத்து இன மக்களும் தமது புதுவருடப் பிறப்பை சம்பிரதாயபூர்வமாகக் கொண்டாடுவதற்கு மிகவும் விருப்பு உடையவர்களாக உள்ளார்கள்.
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வருகின்ற சித்திரை மாதப் பிறப்புடன் பாரம்பரியமாக ஆரம்பமாகிறது 'தமிழ்ப் புதுவருடம்'.
இதைத்தான் சிங்கள பௌத்த மககளும் தமது வருடப் பிறப்பாகக் கொண்டாடும் மரபு உண்டு. இது இரண்டு இன மக்களிடையே காணப்படுகின்ற மிக முக்கியமான ஒற்றுமையாகும். இச்சித்திரைப் புதுவருடம்தான் தமிழ் - சிங்கள மக்களினது வருடத் தொடக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது.
எந்த ஒரு காரியத்திற்கும் அல்லது செயலுக்கும் தொடக்கமும் முடிவும் கட்டாயமாக உண்டு. அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாக பேணி வருகிறார்கள்.
அதே போலத்தான் புது வருடத்தையும் காலங் காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' எனக் கருதி சித்திரையை மகிழ்வுடன் வரவேற்கும் மரபு நம்மிடம் உண்டு.
இதன் காரணமாக தமது மனதில் உள்ள துன்பங்கள், துயரங்கள், கோபதாபங்கள், பழைய பகைமை உணர்வுகள் ஆகியவற்றை மறந்து, மன்னித்து ஒரு புதிய நினைவுடன், புதிய உறவுடன் புதுவருடத்தை நாம் வரவேற்கும் விதத்தில் நம் பெரியவர்கள் கொண்டாட்டங்களை அமைத்துள்ளார்கள்.
'சித்திரைப் புதுவருடம்' எப்பொழுது தொடக்கம் கொண்டாடப்படுகிறது? இக்கேள்விக்குப் பதில் கூறுவது அவ்வளவு எளிதல்ல. காரணம் என்னவெனில் எழுத்து மூலமான எந்த ஆவணமும் இது தொடர்பாகக் கிடையாதென்பர்.
நம் முன்னோர்கள் வழி வழியாக, மொழி வழியாக செய்தவற்றை நல்ல நோக்கத்துடன் நாமும் பின்பற்றுகிறோம். ஆனாலும் முற்காலங்களில் 'வேங்கை' மரம் பூத்து புது வருடத்தை அறிவித்ததாகவும் அறியக் கிடக்கிறது.
இதன்மூலம் இளவேனிற் கால தொடக்கமான சித்திரையிலேயே புது வருடத்தை கொண்டாடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. காலங்காலமாக சித்திரைப் புது வருடத்தை நாம் சில நடைமுறைகளுடன் கொண்டாடுகிறோம்.
அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன.
சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது.
ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும்.
தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணு கிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவற்றை தூய்மையான நீரில் சேர்த்து காய்ச்சி மருத்து நீர் பெறப்படுகிறது.
சித்திரைப் புது வருடத்தன்று எம்மால் ஆன அறங்களைச் செய்ய வேண்டும். தான தர்மங்களைச் செய்தல் மாத்திரமின்றி தெய்வம், குரு, பெற்றோர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்று ஊரும் உறவும் சூழ நண்பர்களுடன் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்தல் பொதுவான கொண்டாட்டமாகும்.
புது வருடத்தன்று 'வேப்பம்பூ பச்சடி' சிறப்பானதாகும். வேப்ப மரம் மருத்துவப் பயன் கொண்டது. சித்திரை பிறந்து விட்டால் வேம்பு பூக்க ஆரம்பித்து விடும்.
யாழ்ப்பாணத்து மக்கள் வேப்பம் பூ கொண்டு செய்யப்படும் வடகத்தை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்துவார்கள். வாழ்க்கையில் இரவும் - பகலும், இன்பமும் - துன்பமும் ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாகும்.
இதை உணர்த்துவதற்காக துவர்ப்பு சுவை கொண்ட வேப்பம் பூவுடன் இனிப்பு சுவை சேர்த்து புது வருடத்தன்று வேப்பம் பூ பச்சடி தயாரிக்கப்படுவது வழக்கமாகும்.
அறுசுவை உணவுடன் மற்றவர்களுக்கு தானமும் தர்மமும் செய்து புது வருடத்தை கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிறைவான வாழ்க்கையைப் பெற முடியும் என்பது நம் பெரியோர்களின் நம்பிக்கையாகும்.
சித்திரைப் புது வருடத்தில் காலையில் ஆலய தரிசனம் செய்த பின் குருமார்கள், ஆசிரியர்கள், பெரியோர்களை சென்று தரிசித்து ஆசி பெற்றுக் கொள்வதுடன் கைவிசேஷம் பெறுவதும் வழக்கமாகும்.
புத்தாண்டு தினத்தில் பெரியவர்களுடைய கரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்ற எந்தப் பொருட்களும் வளரும் அல்லது பெருகும் என்ற நம்பிக்கை எம்மிடையே உண்டு.
பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் மட்டுமல்ல, எண்ணத்திலும் பெரியவர்களாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் பெறுகின்ற ஒரு ரூபா கூட பல்கிப் பெருகும். வாழ்க்கையிலே செல்வச் செழிப்பைக் கொடுக்கும். பஞ்சாங்கங்களில் கூறப்பட்டிருக்கின்ற கைவிசேஷத்துக்குரிய நேரங்களில் பெரியவர்களிடம் இருந்தோ அல்லது இறைவன் பாதத்தில் வைத்தோ கைவிசேஷத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அது தவிர புதுவருடம் பிறந்த பின்னர் வேலை, வியாபாரம், புதுக்கணக்குப் பதிதல், ஏர் பூட்டுதல், புது விதைப்பு, புதுநெல் எடுத்தல், வித்தியாரம்பம், பொங்கலிடுதல், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை நல்ல நேரம் பார்த்து தொடங்கும் பழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே இருந்து வருகிறது.
புது வருடத்தன்று மாலை நேரம் மகிழ்ச்சியான விளையாட்டுக்குரிய நேரமாக வகுக்கப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி மிக முக்கிய விளையாட்டாக தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது.
இது தவிர போர்த் தேங்காய் உடைத்தல், ஊஞ்சல், கிட்டிப்புள், கிளித்தட்டு, எட்டுக்கோடு, கொக்கான் வெட்டுதல், பட்டம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.
இவ்விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தோல்வி ஏற்பட்டாலும் அதை வெற்றியாகக் கருதக்கூடிய மனப்பாங்கை பெரியவர்கள் வளர்த்தார்கள். மனதிலே பொறாமை உணர்வைக் களைந்து நட்பை வலுப்பெறச் செய்வதற்காக தமிழர் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன.
எனவே பிறக்கின்ற புதுவருடத்தை வரவேற்று கொண்டாடுவோமாக
பருவங்களில் சிறந்தது இளவேனிற் பருவம். இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை தான். தமிழ் மக்கள் புத்தாண்டுப் பிறப்பும் சித்திரை மாதப் பிறப்பும் ஒன்றாகவே இடம்பெறும்.சித்திரை மாதத்தில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் பரப்பி மக்களை மகிழ்விக்கும். தேமாவும் தீம்பலாவும் இனிய பழங்களை மாந்தருக்கு வாரி வழங்கும். சிறப்பான வைதீக காரியங்கள் ஆற்றவும் சிறந்த காலம் இது. முத்தமிழ் போல் முக்கடல் சூழ் குமரி முனை வளரும் உத்தமியே ஸ்ரீ சக்கரன் தன்னில் உதித்தவனே அத்தருணத்திலும் எனைப் பிரியாமல் எனக்கிரங்கி சித்திரைத் திங்களில் வந்தருள் செவ்வாய் சிவக்கொழுந்தே அகத்தியர் விகிர்தி என்றால் நலன்களைத் தருவது என்று பொருள். இஃது பொன்னான பொலிவான காலம். ஆறு வகைப் பருவங்களும் சிறந்து விளங்கும் இவ்விளவேனிற் காலத்திலே பூ மழை பொழிந்து இனிய மணம் பரப்பி, நறுங்கனிகள் தந்து எம்மை மகிழ்விப்பவள் சித்திரையாள்.
இவளே தமிழ்ப் புத்தாண்டின் நுழைவாயிலாக அமைகின்றவள். ருதுக்களுள் வசந்த ருதுவாக இருப்பேன் என்கின்றது கீதை. சைத்ரா என்றும் "சைத்ர விஷû' என்றும் அழைக்கப் பெறும் இக்காலத்திலே, சித்திரை மாதம் முதல் நாளன்று, கல்ப் பத்திலுள்ள யுகத்தின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் உலகைப் படைத்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சித்திரை மாதம் பூரணையோடு கூடிய காலமாதலால் சித்திரை மாதம் என்றழைக்கப்பட்டது. இஃது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் ஆறாவதான கன்னி ராசியிலும் அடுத்த துலா ராசியிலுமுள்ள மண்டலத்தைச் சாரும். நட்சத்திர வரிசை பதினான்காவது இடத்தையும் வகிக்கின்றது.
இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள்,மாக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும். இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள்,மாக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும்.
. ஸ்நானம் செய்யும்போது சிரசிலே விளா இலையை வைத்து காலிலே கடப்பமிலையை வைத்து ஸ்நானம் செய்தல் முறையாகும். அன்றைய தினம் புத்தாடை அணிதல் உத்தமம். அல்லது பட்டாடையணிதல், ஆபரணமணிதல் விசேடமாகும். ஸ்நானம் முடித்து சுகந்த சந்தனம் பூசி, நவமலர்களைச் சூடி, கணபதியை வணங்கி, குலதெய்வ வழிபாடு செய்து இல்லத்திலே சூரிய பகவானுக்குப் பொங்கல் செய்தாக வேண்டும்.
அன்றைய தினம் ஆலய தரிசனம் செய்தல் முறையாகும். பொங்கலின் பின் படையல் செய்து பெற்றோர், மூத்தோர், குரு, உற்றார், உறவினர் ஆகியோரை வணங்க, அவர்கள் ஆசி பெற்று அறுசுவை உணவு உண்டு மகிழ்தலும் மரபாகும். அன்றைய உணவில் வேப்பம்பூ சேர்த்து அறுசுவைகளுடன் உணவு தயாரித்தல் வேண்டும். வருடம் பிறந்ததும் மங்கலப் பொருட்களான நிறை குடம், கண்ணாடி தீபம் ஆகியவற்றைத் தரிசித்தல் முக்கியம். தொடர்ந்து பெரியவர்கள் மூலம் இவ்வருடத்துக்குரிய பஞ்சாங்க பலனைக் கேட்டறிதல் வேண்டும். அன்றைய தினம் இயன்ற அளவு தானம் செய்தலும் நற்செயலாகும். அடுத்து வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்.
வருடப் பிறப்பன்று ஆலய தரிசனம், சூரிய பொங்கல், விருந்துண்ணல், இயன்ற அளவு தான தருமம் செய்தல், பஞ்சாங்க பலன் கேட்டல், மாலையில் உறவினர் வீடு செல்லல் ஆகிய சம்பவங்கள் இடம்பெறுதல் பண்டு தொட்டு எமது முன்னோர் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளாம். இதில் பஞ்சாங்க பலன் கேட்டல் என்பது முக்கியம் வாய்ந்ததொன்றாகும். இதன் மூலம் அவ்வருடம் முழுவதும் எமக்கும் எமது நாட்டுக்கும் எத்தகைய பலன்கள் இடம்பெறவுள்ளன என்பதை யாம் மேலோட்டமாகத் தன்னும் அறிந்து கொள்ள முடியும். முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன என்பதை யாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். வருடம் என்னும் கால தேவதைக்கு 12 மாதங்களும் அவளது அவயவங்களாம். சூரியன் முதலிய 9 கிரகங்கள் இங்கு ராஜ்ய பரிபாலனம் செய்வர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பனவே பஞ்ச அங்கங்களாம்.
இவற்றுள் யோகத்தில் அமிர்த சித்த யோகங்கள் சுபகாரியங்களுக்குரியன. மரண யோகம் தவிர்க்கப்பட வேண்டியது. பஞ்ச அங்கங்களுள் திதி நன்மையை விருத்தி செய்யும்; வாரம் ஆயுளை விருத்தி செய்யும். நட்சத்திரம் பாவத்தைப் போக்கும்; யோகம் ரோகத்தை நீக்கம், கரணம் வெற்றியை நல்கும். இவையே பஞ்ச அங்கங்களாம். தமிழ்நாட்டிலே வருடப் பிறப்பன்று நவக்கிரக பூசை, பித்ரு தர்ப்பணம் ஆகியவை இடம்பெறும் வழக்கம் உண்டு.
கேரள மக்கள் அன்றைய தினம் அதிகாலை மங்கலப் பொருட்களில் கண் விழிப்பதை முக்கியமாகக் கொள்வர். உதாரணமாக கனி வர்க்கம், காய்கறிகள், புத்தாடை, பொன்னாபரணம், நவரத்தினம் ஆகியவற்றை ஆயத்தமாக ஓரிடத்தில் வைத்து அதிகாலையில் தீபமேற்றி அவற்றைத் தரிசித்த பின் பெரியோர் ஆசியும் பெறுவர். இவற்றை விட தமிழ் மக்கள் பண்பாட்டை காட்டி நிற்கும் ஆடல், பாடல், கூத்து வகைகள், கிராமிய விளையாட்டுக்கள், தேங்காய் அடித்தல், ஜல்லிக்கட்டு, தயிர் முட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் பொதுவாக கிராமத்து மக்கள் சளைக்காது விளையாடி சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுதல் கண்கூடு. அத்தோடு பட்டிமன்றம், கவிதை அரங்கம் ஆகியவையும் தமிழ்ப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் நிகழ்வுகளாம். இந்த வகையில் நாம் இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுவதோடு நாம் நல்லவற்றை எண்ணி, நல்லவற்றை ஆற்றி, நாமும் நாடும் நலம் பெற இப்புத்தாண்டு தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.
Thursday, March 14, 2013
கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வெறும்தரையில் தான் தூங்கவேண்டுமா?
* கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வெறும்தரையில் தான் தூங்கவேண்டுமா?
பொதுவாக விரதம் இருப்பவர்கள் படுக்கையில் படுக்கக்கூடாது என்பது நியதி. அதற்காக எப்போதும் வெறும் தரையில் உட்காருவதோ, படுப்பதோ கூடாது. பனைஓலைப்பாய், தலைக்குப் பலகை, புதியபோர்வை போன்றவற்றை உபயோகிக்கலாம்.
பொதுவாக விரதம் இருப்பவர்கள் படுக்கையில் படுக்கக்கூடாது என்பது நியதி. அதற்காக எப்போதும் வெறும் தரையில் உட்காருவதோ, படுப்பதோ கூடாது. பனைஓலைப்பாய், தலைக்குப் பலகை, புதியபோர்வை போன்றவற்றை உபயோகிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)