Monday, August 25, 2014

நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:

நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:
1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. 3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. 4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. 5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது 6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது 7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது 8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும். 9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்
துப்பக்கூடாது. 10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. 11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது 12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது 13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. 15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

ஆயுளை வளர்க்கும் ஐந்து!

ஆயுளை வளர்க்கும் ஐந்து!
மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

பெண்கள் கவனத்திற்கு!

பெண்கள் கவனத்திற்கு!
நமது சாஸ்திரம் பெண்களுக்குக் கூறும் சில முக்கியகுறிப்புகள் 1. கணவரோடு மனைவி இருக்கும் போது மல்லிகை, முல்லைப் பூக்களைத் தாம் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்களைச் சூடக்கூடாது. பெண்கள் குளிக்கும் போது முகத்திற்கு அவசியம் மஞ்சள் பூச வேண்டும். 3. ஓவ்வொரு பெண்ணும் அவசியம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாய் கல் வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது விசேஷ சக்தி வாய்ந்ததாகும். 4. ஒவ்வொரு பெண்ணும் காலில் பெருவிரலுக்கு அடுத்தவிரலில் வெள்ளியால் மெட்டி அணிய வேண்டும். 5. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கின் போது தலையில் பூ வைக்கக்கூடாது; சமையல் அறைக்குள் போகக்கூடாது; யாருக்கும் உணவு படைக்கவும் கூடாது. 6, திருமணம் ஆன பெண்கள் இரவு நேரத்தில் கருப்பு, இரத்த சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறம் கொண்ட சேலைகளை உடுத்தக்கூடாது, வெளிறிய வண்ணம் கொண்ட சேலைகளையே உடுத்தவேண்டும். 7. திருமணம் ஆன பெண் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் குளித்துவிட்டுக் கணவன் தூங்கிக்கொண்டுரும் போதே, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு சென்று இதோ பாருங்கள் என்று கூறி எழுப்பித் தன் முகத்தில் விழிக்கும்படி செய்ய வேண்டும்.

காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால்

விசேஷ தரிசனம்!
காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால் அதைவிட்ச் சிறப்பு வேறு எதுவும் இல்லை

இலட்சுமி கடாட்சம்

உப்பு போடுங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் விளக்கேற்றி, உப்புப் பாத்திரத்தை வைத்து அதன் அடியில் பழைய செப்புக்காசு ஓன்றை வைத்து, கடையிலிருந்து உப்பு வாங்கி வந்து அதில் கொட்டி வழிபட்டால் குடும்பத்தில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும், இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும்

வீட்டிற்கு யாகம்!

வீட்டிற்கு யாகம்!
வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் நல்ல நாள் பார்த்துக் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, குபேரன் பூஜை செய்ய வேண்டும்,அப்போதுதான் அந்தக் குடும்பம் விருத்திபெரும்!சிலர் கிரக பிரவேசத்தன்று செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர், கணபதி ஹோமம் மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு ஆகும். மேலே சொன்ன முறையிலே செய்ய வேண்டும். அதுவும், பிரம்ம முகூர்த்தமாகிய காலை 4 மணி முதல் சூரியன் உதயம் ஆவதற்குள் செய்வது சாலச்சிறந்தது ஆகும்!

வீட்டில் நெல்லிக்காய்!

வீட்டில் நெல்லிக்காய்!
ஒவ்வொரு வீட்டிலும் வருஷன் முழுவதும் நெல்லிக்காய் இருப்பது மிகச்சிறப்பாகும். அது ஊறுகாயாகவோ, வற்றலாகவோ இருந்தாலும் சரி, வீட்டில் நெல்லிக்காய் எப்போதும் இருந்தால் இலட்சுமி கடாட்சம் ஆகும்!

வெந்நீர்க்குளியல் கூடாது!

வெந்நீர்க்குளியல் கூடாது!
அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, பொங்கல், பிறப்பு இறப்புகளால் ஏற்படும் தீட்டுக் காலங்கள் ஆகியவற்றின் போது வெந்நீரில் குளிக்கக்கூடாது.

சாஸ்திரம் கூறும் இரகசியங்கள்!

சாஸ்திரம் கூறும் இரகசியங்கள்!
ஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்
1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.

வெள்ளிக்கிழமையின் இரகசியங்கள்!

வெள்ளிக்கிழமையின் இரகசியங்கள்!
வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அது நல்ல அதிர்ஷ்ட்த்தைக் கொடுக்கும்,வெள்ளிக்கிழமை அரிசி வாங்குவதும் நல்லது
வெள்ளிக்கிழமைச் சமையலில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் அது மிகவும் அதிர்ஷ்டம் ஆகும்,நெல்லிக்காயைப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உண்ணக்கூடாது; வெள்ளிக்கிழமைகளில் அரிசி புடைக்கக்கூடாது,அரிசியை வறுக்கக்கூடாது.

சனி நீராடுவதின் இரகசியம்!

சனி நீராடுவதின் இரகசியம்!
சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தால், சனிக்கிரகத்திற்கும் நமக்கும் உள்ள நீண்ட தொடர்பு சில மணி நேரம் நல்லெண்ணெய் உடலில் இருக்கும் வரையில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாகச் சனிகிரகத்திலிருந்து வெளிப்படுகின்ற"மாரீஷ்" என்னும் விஷத்தன்மை வாய்ந்த ஒளிக்கதிர் நமது உடலைத் தொடர்ந்து பாதிக்காமல், இடையில் சிலகாலம் இடைவெளியை ஏற்படுத்துகிறது, இம்மாதிரி உண்டாகும் இடைவெளியினால் மனித உடலுக்குச் சனியினால் உண்டாகக்கூடிய இயக்கம் சமன்படுத்தப்படுகிறது, அதனால் சனிக்குச் சாந்தி ஏற்படுகிறது! இது விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு சனீஸ்வர சாந்தியாகும்

விஷ்ணு அவதாரமும் நவக்கிரகங்களும்!

விஷ்ணு அவதாரமும் நவக்கிரகங்களும்!

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சமாய் விளங்குகிறது.
1. கேது-மத்ஸ்யம் 2. சனீஸ்வரர்-கூர்மம் 3. இராகு-வராகம் 4. செவ்வாய்-நரசிம்மர் 5. குரு-வாமணர் 6. சுக்கிரன்-பரசுராமர் 7. சூரியன்-இராமர் 8. குளிகன்-பலராமர் 9. சந்திரன்-கிருஷ்ணர் 10. கல்கி-புதன்

விருந்துக்கு ஏற்ற நாள்!

விருந்துக்கு ஏற்ற நாள்!

முதலில் மாமனார் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும்,அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும் அதற்கு ஏற்ற நாள்கள் வளர்பிறையில் திங்கள்,புதன்,வெள்ளி,சனி ஆகிய நாள்களே ஆகும் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு,ஆகிய நாள்களில் எக்காரணத்தைக் கொண்டும் விருந்து உண்ணக்கூடாது,மேலும்,தேய்பிறையில் எந்த நாளிலும் முதலில் சாப்பிடக்கூடாது,இதே விதிமுறையைத் தான் நாம் அளிக்கும் விருந்திலும் கடைப்பிடிக்க வேண்டும்!

தலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):

தலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):
ஒருவர் தலைமுடி வெட்டக் கூடாத மாதங்கள் மாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் ஆகும். கிழமைகள் செவ்வாய், வெள்ளி ஆகும்; நட்சத்திரங்கள் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் அவரவர் இராசிக்கான சூன்யதிதிகள். ஆனால்,இறைவனுக்குக் காணிக்கை, பிரார்த்தனை செலுத்த எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை

தீர்த்தங்கள் :

தீர்த்தங்கள் :

1, பிரம்ம தீர்த்தம் 2, சூல தீர்த்தம் 3, ஆனந்த தீர்த்தம் 4, காளி தீர்த்தம் 5. வைணவ தீர்த்தம் 6, இராகு தீர்த்தம் 7. ஆழி தீர்த்தம் 8, சங்க தீர்த்தம் 9. சுக்கிர தீர்த்தம் 10. பராசர தீர்த்தம்11. அகத்திய தீர்த்தம் 12. கௌதமதீர்த்தம் 13. (அக்னி) வண்ண தீர்த்தம் 14. குமார தீர்த்தம் 15. சூரிய தீர்த்தம் 16. சந்திர தீர்த்தம் 17. சேது தீர்த்தம் 18. அகண்ட தீர்த்தம் 19. பதினெண்புராண தீர்த்தம் 20. புறவ நதி தீர்த்தம் 21. கழுமலநதி தீர்த்தம் 22. விநாயகநதி தீர்த்தம்

காசிக்கு நிகரான தலங்கள்

காசிக்கு நிகரான தலங்கள்
1,திருவெண்காடு
2,திருமயிலாடுதுறை
3,திருவையாறு
4,திருவிடைமருதூர்
5,திருவாஞ்சியம்

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

1,உத்தராயண-தக்ஷிணாயன புண்ய காலங்களிலோ
2,துலா விஷு முதலிய காலங்களிலோ
3,செவ்வாய்க் கிழம 4,தேய்பிறையிலோ
-----------------------------------------------------------
(-எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல்_)
பானுவாரம் சிஸ்ரவாரம் முடிய எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தலுக்கான பலன்கள்
1)
ஞாயிற்றுக் கிழமை எண்ணைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் இதயத்தில் எரிச்சலை உண்டு பண்ணும்.
2)
திங்கட்கிழமை எண்ணை ஸ்நானம் தோலின் பொலிவையும்,சிகப்பு நிறத்தையும்
அளிக்கும்.
3)
செவ்வாய் கிழமை எண்ணை ஸ்நானம் அகால மரணத்தைத்தரும்
4)
புதன் கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் பொருள் விருத்தியைத் தரும்
5)
வியாழக்கிழமை எண்ணை ஸ்நானம் ஏழ்மையையும்,பணக் குறைவையும் அளிக்கும்.
6)
வெள்ளிக்கிழமை எண்ணை ஸ்நானம் பல விதங்களில் ஆபத்து விளைவிக்கும்
7) சனிக்கிழமை எண்ணை ஸ்நானம் ஆயுள் விருத்தியையும் மனச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.
(<எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள்>)
க) த்விதியை,திரிதியை,பஞ்சமி,சபதமி,தசமி,த்ரையோதசி ஆகிய தினங்கள் பலத்தையும்,பொருளையும் நீண்ட ஆயுளையும்,புத்திரர்களையும் அளிக்கும்
௨) தசமி திதியில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல் நலம்
௩) தசமி திதிகளில் எண்ணெய் தேய்க்காமல் ஸ்நானம் செய்தால் அது ஆயுள்
புத்திர்க்கூர்மை,புகழ் இவற்றைக் குறைக்கும்
( -தவிர்க்க வேண்டிய திதிகள்_)
பிரதமை, சதுர்த்தி, சஷ்டி,நவமி,சதுர்த்தசி,அமாவசை ஆகியவை வாழ்க்கையில் உள்ள சுகபோகங்களையும் புத்திசாலித்தனத்தையும்,சரீர பலத்தையும்,புகழையும்
குறைக்கும்,ஆகவே அவற்றைத் தவிர்த்தல் நலம்
குறிப்பு:} மேற்கூறிய தினங்கள் எண்ணெய் ஸ்நானம் செய்ய அவசியம் ஏற்பட்டால் கெட்ட பலனைக் குறைக்கு எண்ணெயுடன் நெய்யைச் சேர்த்துக் கலந்து குளித்தால் நல்லது 

ஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர்

ஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர்  "பிராணசக்தி"
 
1,ஒளஷதம்      -புல் பூண்டு செடிகளின் சக்தி
2,பாசுகம்                -ஜீவப்ராணிகளின் சக்தி
3,லெளகிகம்             -உலோக சக்தி

நமஸ்காரம் செய்யும் இடம்

நமஸ்காரம் செய்யும் இடம்
கோவிலில் த்வஜஸ்தம்பம் இருந்தால் அதன் அருகே மட்டும் தான் நமஸ்கரிக்க வேண்டும், இல்லையெனில் கோயில் நுழைவாயில் அருகே
நமஸ்காரம் செய்யலாம் ஒவ்வொரு சுவாமிக்காகவும்    ஆங்காங்கே நமஸ்கரிக்கக் கூடாது தெற்கு நோக்கியும் நமஸ்கரிக்கக் கூடாது கோவிலில் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத பல தேவர்கள், தேவதைகள்
சுற்றி உள்ளனர்,எனவே நுழைவாயிலின் அருகே தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்

ஜீவனும் தீபமும்

ஜீவனும் தீபமும்
இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது அப்படியிருந்தால்
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது.
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது

ஏழு உலகத்தின் இரகசியம்

ஏழு உலகத்தின் இரகசியம்
நமது சாஸ்திரம் ஏழுவகைகள் உலகத்தைப் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது
அந்து உலகத்தில் வாழ்பவர்கள் யார் தெரியுமா? 1,பூலோகத்தில் மனிதரும்
வாழ்கின்றன,விலங்குகளும் 2,புவர்லோகத்தில் வாயு தேவர்களும் 3,சுவர்லோகத்தில்,தேவர்களும்,இந்திரனும் 4, மார்க்கண்டேயர் முனிவர்கள்
மகலோகத்தில் 5, சுர்கலோகத்தில் இந்திராதி தேவகள் 6,சனகர் முதலிய மகான்களும் தவலோகத்தில் 7, பிரமதேவர்களும் சத்தியலோகத்தில் பலர் வாழ்கின்றார்கள்

தேங்காய் சகுணம்


{தேங்காய் சகுணம்} பொதுவாக சாதாரணமாகவே பூஜைக்கு தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இருபுறமும் பிசிர்கள் இல்லாமல் சம்மாக உடைந்தால் சுப சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது எந்த ஒருகாரியம் செய்யத் துவங்குமுன் குளித்து சுத்தமாக தேவதை முன்பாக ஒரு தேங்காயை உடைத்தால் அந்த தேங்காய் சரிசம்மாக பிசிறில்லாமல் உடைந்தால் அந்த காரியம் விக்கினம் இல்லாமல் நடக்கும் அன்ற தேங்காய் உடைக்கும்போது இரண்டுபக்கமும் சரிசமமாக உடைந்தால் காரிய வெற்றியாகும் சுப சகுனமாகும்,கண் உள்ள பக்கம் பெரியதாக உடைந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் கண் உள்ளபகுதி சிறியதாக உடைந்தால் காரியத்தில் விக்கினங்கள் ஏற்படும் நீளவாக்கில் உடைந்தால் ஆகாது துயரம் துன்பம் கெடுதல் ஏற்படும் (3)சில்லாக உடைந்தால் பகையாகும் 4-சில்லாக உடைந்தால் குடும்பத்தலைவர்க்கு ஆகாது 5-சில்லாக உடைந்தால் சண்டை கலகம் வரும் பல சில்லுகளாக உடைந்தால் துன்பங்கள் ஏற்படும் விடைலை தேங்காய் உடைக்கும் போது மட்டும் அதிக சில்லுகளாக உடைவது நல்லது சில்லுகள் தெறிப்பது போல் துனபங்களும் தெறித்து சிதறி நன்மையை ஏற்படுத்தும் எனவே சூரைத் தேங்காய் உடைப்பதும் சாம்பல் பூசனி உடைப்பதும் பல சில்லுகளாவது தான் நல்லது தேங்காய் உடையாமல் ஓடு கழன்று வந்தால் ஆகாது கவலையும் பழியும் வந்து சேரும் மூடிபாகம் இரண்டாக உடைந்தால் சேதம் ஏற்படும் குடும்பம் பிரியும் கையிலிருந்து நழவிச் சென்றால் நோயால் துன்பம் உண்டாகும் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் துன்பமும் அவமானமும் பழியும் பிரிவினையும் ஏற்படும் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவணம் தேவை சகுனம் உள்ளது

மலர்களின் குண நலன்கள்

மலர்களின் குண நலன்கள்
{சுர்கலோக குருவருள் பெற்ற பூக்களின் நன்மைகள்} 1-ரோஜா :இதன் இதயத்திற்கு நறுமணம் பலத்தைக் கொடுக்கும், நெஞ்சு சளியை எதிர்க்கும்2- மல்லிகை :இஅதன் கண்பார்வையைக்கூர்மையாக்கும் நறுமணம்,இதனைப் பயன்படுத்துவதால் நல்ல முறையில் கண்களின் பார்வை செயலபடும்3- ஜாதிமலர் :இதன் பயன் கண் வியாதியைத் தடுக்கும் சிகப்பு கண்களில் படர்ந்தால் கூட பயன்படுத்திக் ஜாதிமலரைப் குணம் அடையலாம்4- செவ்வந்தி மலர் : கூந்தலை இம்மலர் வளரச் செய்யும்,குளிர்ச்சியைத் கண்களுக்கு தரும், ஆனால் செவ்வந்திப்பூவை பிய்த்து உபயோகிக்கக் கூடாது 5-மகிழம் பூ :தலைவலி, சிரோவாதம், குணம், இம்மலரின் கண்நோய் போன்றவற்றை அகற்றும், இதயத்தில் நன்மை பயக்கும்,தலையில் நீர் கொண்டிருந்தால் அகற்றும் அதை 6-செம்பங்கிப் பூ:கஷ்டம் சிறிது கிடைப்பது இம்மலர்,நம் உடம்பில் உள்ள தோஷத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு, வாயுவினால் குறைக்கும் ஏற்படும் வலியைக்குறைக்கும் 7-தாழம் பூ:பலம்தரும் இதயத்திற்குப்:வாத நோய் அகலும்.வயிற்று குறைக்கும் வலியையும் 8-அரளிப் பூ: தலையில் உள்ள நீரை அகற்றும் தலை அரிப்பு போன்றவைகளுக்கும் அகலும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".

வாய்மை
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".
1.ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார்.2.அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது.3.சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான்.4.ஓடி வந்த மனிதன்,ஐயா,"இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா" என்று கேட்டான்.5.எப்போதும் உண்மையே பேசும் குரு, மாடு இந்த வழியே சென்றது என்பதைச் சுட்டிக் காட்டினார்.6.மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான்.7.தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும் அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான். காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன்.8.வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்குமுன் கசாப்புக்கடைக்காரன் தப்பிச் சென்ற, தன்னை அவனிடமெ காட்டிக் கொடுத்த சன்யாசியை சபித்தது.9.பல வருடங்கள் சென்று சன்யாசி மரணமடைந்தான். ஊர் மக்கள் உண்மையே பேசியவர் இவர். இவர் ஆத்மா சொர்க்கத்தில் வாழும் என்று புகழ்ந்தனர்.10.ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யமதூதுவர்கள்,இது சன்யாசிக்குக் கூடமிகவும் அதிர்ச்சியாக இருந்தது.11.யமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி நான் என்ன பாபம் செய்தேன்? என்றார்.12.நீர் ஒரு பொய் சொன்னீர். அதனால் பாபம் செய்து இங்கு வந்துள்ளீர். ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர் என்றான் எம தர்மன்.13.நான் பார்த்த உண்மையைத்தானே சொன்னேன். அது எப்படி பொய்யாகும் என்று வாதிட்டார் சன்யாசி.14.பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும் என்றான் யமதர்மன்.15.நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத ஜந்து ஒன்று கொடுரமாக மரணமடைந்தது. அதன் சாபம் உம்மைப் பீடித்தது.16.மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? எதற்காக மாட்டை விரட்டுகிறாய் என்று கேட்டிருந்தால் அது விவேகம். அதைத் தெரிந்து கொண்டு மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை என்றான் யமதர்மன்.

எந்த உணவை உண்ணக்கூடாது?

எந்த உணவை உண்ணக்கூடாது?
"கர்ப்பச் சிதைவு செய்யவனால் பார்க்கப்பட்டது, மாதவிலக்கில் இருக்கும் பெண்ணால் தொடப்பட்டது, பறவையால் சாப்பிடப்பட்டது, நாயினால் தொடப்பட்டது - இந்த உணவை, உண்ணக்கூடாது."

பகீரதப்பிரயத்தனம்

பகீரதப்பிரயத்தனம் சாதிக்கமுடியாத ஒன்றைச் சாதிக்கும்போது அதை "பெரிய பகீரதப் பிரயத்தனம்" என்று சுட்டுகிறோம். இதன் பின்னணியாவது: பகூரதன் அயோத்தி அதிபதி (மன்னன்) தம் முன்னோர்களான சகரபுத்திரர்களை உய்தி பெற்ச்செய்யாஅகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார் கங்கையை பூமிக்குக் கொண்டு வர, இவருக்கு முன்பு, அம்சுமான், திலீபன் என்ற அயோத்தி மன்னர்களும், முயற்சி செய்து தோற்றனர். பகீரதன் மிகக்கடுமையாக முயற்சித்து, பிரம் மனைத் துதித்து பதினாயிரம் ஆண்டுகளும், சிவபெருமானைத் துதித்து ஜயாயிரம் ஆண்டுகளும், மீண்டூம் சிவனைத் துதித்து இரண்டரை ஆயிரம் ஆண்டுகளும், கங்கையைத் துதித்து இரண்டரை ஆயிரம் வருடங்களும் ஆக முப்பதாயிரம் வருடங்கள் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரச்செய்தார். இதனால் மிக்கமுயற்சியுடன் ஒரு காரியத்தை ந்றைவேற்றினால். அதை"பகீரதப் பிரயத்தனம்" என்று குறிப்பிடும் வழக்குத் தோன்றியது.

திருநீறு பூசுவது ஏன்?

திருநீறு பூசுவது ஏன்?
சைவர்கள் திருநீற்றினை இட்டுக்கொள்கிறார்கள் திருநீறு என்பது சாம்பல்தான். காணும் இந்த உலகமும், எல்லாப் பொருள்களும், நாமும் கடைசியில் அழிந்துசாம்பல் ஆபோம் என்பதைக் குறிப்பதே திருநீற்றின் கருத்தாகும் இந்ய நிலையாமை உண்மையை உணர்த்தவே சைவர்கள் திருநீறு அணிந்துகொள்கிறார்கள். நாம் அழிந்து ஒருநாள் சாம்பலாவோம் என்னும் நிலையாமை உண்மையை நாம் உணர்ந்தால் தான் "நான்""எனது" என்னும் ஆணவத்தால் வரும் சண்டைச் சச்சரவுகள் அகலும் இல்லாமற் போய்விடும். எனவே, தீவினைகளைச் செய்ய அஞ்சி நல்வினைகளை செய்ய முற்படுவோம்! 

அமைதி பெருவது எப்படி

அமைதி பெருவது எப்படி
1.மூட்டைப் பூட்சியைப்போல் பிறரை இ ம்சித்து வாழாதே.2.எலியைப்போல் திருடி வயிற்றை வளர்க்காதே.3.செல்லைப்போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழாதே.4.தேனீயைப் போலவும், எறும்பைப்போலவும் உழைத்து உண். அது உணக்கு அமைதியையும், அன்பையும் தரும்.

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே.
ஒரு விநாடி சினம், ம்றுவிநாடி மகிழ்ச்சி, இப்படி விநாடிக்கு விநாடி மாறுபடுகின்றவனுடைய நட்புக் கூடாது. உறுதுயான உள்ளம் இல்லாதவனுடையநட்பும். அவனால் கிடைக்கும் நன்மையு பயங்கரமானது.பயன் கருதிப் பழகுகின்றவனுடைய நட்பும் கூடாது.சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம் உன்னிடம் என்ன இருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்ப்பார்கள் நன்றி பெற்றவன் கையீரம் உலர்வதற்குமுன் செய்த நன்றியை மறந்து விடுவான்.உதவாத தவிடு, வைக்கோல், போட்டு, இவைகளை உன்பால் பெற்ற பசு அமுதமான பாலைத் தருகின்றது. பாலையே உன்பால் பெற்ற பாம்பு நஞ்சைத் தருகின்றது

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம்
         
मध्ये  -  நடுவில்
पीतगवां -  பஞ்சவர்ண பசுவினுடைய
क्षीरं -  பாலையும்
पूर्वे - கிழக்கில்
सितगवां - வெள்ளை பசுவினுடைய
दधि  -  தயிரையும்
दक्षिणे तु - தெற்கில்
विशेषत: - சிறப்பாக
कपिलागो:  - கபிலவர்ண பசுவினுடைய
घृतं -  நெய்யையும்
उत्तरे  -  வடக்கில்
कृष्णगो:  -   கருப்பு பசுவினுடைய
मूत्रं  -  கோஜலத்தையும்
प्रतीच्यां  -  மேற்குத்திக்கில்
रत्कगो:   - சிகப்பு பசுவினுடைய
शकृतू - சாணத்தையும்
ऎशान्यां - ஈசானதிக்கில்
दर्भतीर्थच्ञ -  குசதீர்த்தத்தையும்
क्रमातू - வரிசையாக
स्थाप्य  - வைத்து
संपूजयेतू  - பூஜிக்க வேண்டும் என்று
प्रोत्कमू - சொல்லப்பட்டுள்ளது.