Friday, September 12, 2014

காசியில் திதி கொடுப்பது எப்படி ?

காசியில் திதி கொடுப்பது எப்படி ?

அன்பின் உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.
இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்தபின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.
இப்போது ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க எண்ணுகிறார். அவருக்கு அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும். ? இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?
அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,
ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.
அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.
இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும்.
இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.

2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் திதி கொடுக்க தயார்.
முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.
திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.
அங்கே நாம் சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு
அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.
( நம் தலையில் நேரடியாக மணலை வைக்கக்கூடாது, மணல் நம் தலையில் படக்கூடாது, கையில் வைத்து மூடிக் கொள்ளவேண்டும்).
இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.
ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!!
எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.
இரண்டாவது கட்டமாக நமது திதி கொடுக்கும் நிகழ்வில் நாம் இப்போது அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்துவிட்டோம். கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது.
மேலும் எம்பெருமான் சிவன் கேதார்நாத்தில் இருப்பதை காட்டிலும் காசியில் இருப்பதை விரும்புகிறார் என்கிறது.
இங்கே நாம் கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடவேண்டும். ( நமஸ்கரிக்கவேண்டும் ) அப்போது நாம் “ ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து தண்டனிட வேண்டும் என்பார் பெரியோர்கள்.
இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன. சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு. கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு. ஜாக்கிரதை.
அடுத்து நாம் செல்லவேண்டியது கயா எனும் நகரம்.
மூன்றாவதாக நாம் செல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”
இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும். ( இரயில்வே ஸ்டேஷனிலேயே நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் காசு கறந்து விடுவார்கள்.
இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.
அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.
நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.
சரி என்று நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும். அதனை நாம் என்றுமே உண்ணவே கூடாது.
(நான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்பிளை விட்டேன், மிகவும் ருசித்து உண்ணும் பாகற்காயை விட்டேன், இலை ஆலமரத்தின் இலையை விட சொன்னார்கள் விட்டேன்.)
ஒன்று.
முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.

இரண்டு
இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும், அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக” என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.

மூன்று
மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும். (இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி (கயாவழியாக - கயாசுரன் வேண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கதை) இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.
நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம்.
நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.
இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்) கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல் ) என்பார்கள்.
பின்னர் அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார் “ இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்களா? அவர்கள், ஆம், சென்று விட்டார்கள், நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள், நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.
அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்,
உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள் . இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.
அடுத்தது நாம் செல்ல இருப்பது இராமேஸ்வரம்.
நாம் அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும், இராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், அவர் உங்களை உள்ளே அமரச்செய்து உங்கள் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் காணச்செய்வார்.
அப்போது நீங்கள் “ ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும். வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.
இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்திலமுடிகிறது மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.
ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா நகரம் இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை.
காரணம் என்ன ? அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள். அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.
காசி யாத்திரை செல்லுங்கள், மூதாதையருக்கு திதி கொடுங்கள். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி நீங்கள் சந்தோஷமாகுங்கள் , உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி அமைத்துக் கொடுங்கள் .

*வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.*

ஏகாதசி விரதங்கள் ஏன் ?

ஏகாதசி விரதங்கள் ஏன் ?
வைகுண்ட ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும், சாப்பிட வேண்டும் என்பது எதற்காக?
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி (Phase of the moon) எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லுகிறது. நான்காவது நாள் அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது. பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனிலிருந்து132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதில் புவிஈர்ப்பு (Gravitation) சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும் போல உணவு அருந்தினால் அது சரியாக் செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவியீர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.
ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் ‘ஏ’ யும், ‘சி’ யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தைப் பேணி வருகின்றன.
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (குற்றாலம்)யினர் தொகுத்த, ‘இந்து சமயம் ஒரு விஞ்ஞானப் பார்வை என்ற நூலிலிருந்து
..

Thursday, September 11, 2014

பிரம்மோற்ஸவத்தை விழாக்கள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர்.

பிரம்மோற்ஸவத்தை  விழாக்கள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர்.




கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்ஸவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். கோயிலுக்கு வந்து வழிபட முடியாதவர்கள் கூட பிரம்மோற்ஸவ வீதியுலாவின் போது இறைவனைத் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர். பிரம்மோற்ஸவத்தை 9 நாட்களாவது விழா நடத்த வேண்டும் என்பது விதி. விழாக்கள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர். 12நாள் திருவிழா நடந்தால் பைத்ருகம், 9நாள்- சவுக்கியம், 7நாள்- ஸ்ரீகரம், 5நாள்- பார்த்திவம், 3நாள்- சாத்விகம், ஒருநாள் மட்டும் நடத்துவதற்கு சைவம். திருவிழாவின் முதல்கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்ஸவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். கோயிலுக்கு வந்து வழிபட முடியாதவர்கள் கூட பிரம்மோற்ஸவ வீதியுலாவின் போது இறைவனைத் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர். பிரம்மோற்ஸவத்தை 9 நாட்களாவது விழா நடத்த வேண்டும் என்பது விதி. விழாக்கள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர். 12நாள் திருவிழா நடந்தால் பைத்ருகம், 9நாள்- சவுக்கியம், 7நாள்- ஸ்ரீகரம், 5நாள்- பார்த்திவம், 3நாள்- சாத்விகம், ஒருநாள் மட்டும் நடத்துவதற்கு சைவம். திருவிழாவின் முதல்நாள், கோயில் கொடிமரத்தில் கொடியேற்ற வேண்டும். திருவிழாவை முறையாக நடத்தாவிட்டால், அரசுக்கும், மக்களுக்கும் தீங்கு நேரும் என ஞானோத்திர ஆகமம் கூறுகிறது.

சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்.

சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்.

1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம

இந்தப்பாடலின் பொருள் என்னவென்று விளக்கிக்கூற முடியுமா?

இந்தப்பாடலின் பொருள் என்னவென்று விளக்கிக்கூற முடியுமா?







இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. எனவே உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை
அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரி நாதரோ ஒரு புது நிபந்தனையைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லிபுத்தூரார் பொருள் சொல்லவில்லையென்றால் வில்லிபுத்தூராரின் காதை அருணகிரி நாதர் அறுக்கலாம். வில்லிபுத்தூரரும் ஒப்புக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரிநாதர், ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.
==================================
இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்

தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!

தத்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்தும் - பல தத்துக்களோடும்

அத்து - இசைவுற்றதுமான

அத்தி - எலும்புகளை மூடிய

தித்தி - பையாகிய இவ்வுடல்

தீ - அக்கினியினால்

தீ - தகிக்கப்படுகின்ற

திதி - அந்நாளிலே

துதி - உன்னைத் துதிக்கும்

தீ - புத்தி

தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்


இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. எனவே உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை

புறத்தில் இருந்து வீட்டினுள் நுழைகையில் கால்களை தேய்த்து கழுவி சுத்தம் செய்யாது விடின் சனி பகாவான்,கலி பகவான் வீட்டினுள் நுழைவார்

 புறத்தில் இருந்து வீட்டினுள் நுழைகையில் கால்களை தேய்த்து கழுவி சுத்தம் செய்யாது விடின் சனி பகாவான்,கலி பகவான் வீட்டினுள் நுழைவார் என்னும் ஓர் நம்பிக்கை உண்டு.....


புறம் என்பது வீட்டை விடுத்த வெளிப்பகுதிகள்...
வெளிப்பகுதிகள் என்பது கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் மற்றும் நோய் தொற்று ஏற்படக்கூடிய பிரதேசமாக இருக்கலாம் என்பது தெரிந்த விடயம்....குறிப்பாக மலங்கள்,மற்றும் அழுக்குகள் என்பவை காலின் பகுதிகளில் ஒட்டிய வண்ணம் வீட்டை அடையலாம் என்பதற்காவே இந்த காரியம் மத நம்பிக்கைகளுடன் ஒருங்கினைத்து சொல்லபட்டது....அது போக புறத்தில் இருந்து வீட்டினுள் வரும் மஞ்சள் தெளித்த பின்பு மனையினுள் வர் வேண்டும் என்ற கட்டாய சம்பிரதாயமும் உண்டு....ஆனால் அச்ச்சம்பிர தாயங்களை நான் பின்பற்றுவதோ நம்புவதோ இல்லை..ஆனால் மஞ்சள் என்பது ஓர் கிருமி நாசினி....ஆக உடலின் பகுதிகளில் தொற்றியுள்ள கிருமிகளை ஒழிக்கவே இந்த சம்பிரதாயம்...

இந்துமத்மும் பெண்களும்

1.பெண்களை ஆலயங்களின் கருவறையிலோ அல்லது சாதாரனமாகவோ மந்திரங்கள் அதாவது சமஸ்கிருத மந்திர உச்சாடணம் செய்யவோ, குருக்கள் அல்லது பிராமண அந்தஸ்து கொடுக்கவோ இந்து மதம் அனுமதிப்பதில்லை...

உண்மையில் மந்திரங்கள் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சார்ந்த்து மட்டும் அல்ல..அது இயல்பியலுடனும் உரசிச்செல்கிறது..
மந்திர ஒலி என்பது அலைகளின் அதிர்வெண்(Frequency) சார்பாக உருவாக்க பட் டது. ஒவ்வொரு மந்திரங்களும் ஒவ்வொரு அதிர்வெண்ணில் அமையப்பெற்றது.மந்திர ஒலி என்பது ஒவ்வொரு சுருதியில் அதாவது மீடிறனில் அமைந்து இருக்கும்...அம்மந்திரங்கள் காதால் கேட்கும் போது கடத்தப்படும் அதிர்வுகளை விட வாயினால் ஜெபிக்கும் போது உடலை ஊடுவிச்செல்லும் அதிர்வு தாக்கம் அதிகம் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண விடயம்....இந்த அடிப்படை காரணத்தை முதலாக கொண்டே பெண்கள் மந்திரங்கள் ஜெபிக்கவோ அல்லது பிராமணர்களாகவோ அனுமதிக்க படுவதில்லை...ஏனெனில் ஆண்களை விட பெண்களின் நிலை உடல் மற்றும் மன ரீதியாக வலிமை குறைந்தது...ஆகவே பெண்கள் இம்மந்திரங்களை ஜெபிக்கும் போது அதிக அளவில் தாக்க படுவர்..அதாவது பெண்களின் மார்பகங்கள்,மற்றும் கருப்பைகள்,போன்ற பகுதிகள் இந்த அதிர்வுகளை தாங்க இயலாது போகலாம்..அதனால் மலட்டு தன்மை மற்றும் பெண்மை சார்ந்த பல தாக்கங்கள் உருவாகலாம்..அதை விட பெண்கலின் மாதவிடாய் காரணங்களினால் மாதத்தின் எல்லா நாட்களிலும் அவர்களால் பணியை தொடர இயலாமல் போகலாம்....இத்தகைய காரணங்களினாலேயே பெண்கள் அனுமதிக்க படுபவது இல்லை...



அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.


2.பெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்வது அனுமதிக்க படுவது இல்லை...



இதற்கும் முன்பு குறிப்பிட்ட அதிர்வு சார் காரணம் பொருந்தும்...சாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்..அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மந்திர ஒலி அதிர்வுகள் காதினால் கேட்கும் போதே பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதே பிரதான காரணம்...அதை விட ஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம்....அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது..ஆனால் காலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்....

சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்?

சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய வேண்டும்?

அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம் மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகு ம். சுவாஷினி என்பதே சுமங்கலி யாக மாறியது எனலாம். கணவ னோடு கூடி இல்லறத்தை நல்லற மாக நடத்துகின்ற பெண்களே சும ங்கலி என்று அழைக்கப்படுவார்க ள்.
நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடு வதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும்
 நாட்டுக்கும் நல்ல தலைமுறை யை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற் றுகருத்து இல்லை அவளை வழி படுவதும் அன்னையை வழிபடுவ தும் ஒன்றுதான்.பொதுவாக சுமங் கலி பூஜை நவராத்திரி தினங்களி ல் சிறப்பாக கொண்டாடப்படுகிற து. ஒரு வீட்டில் திருமணம் ஆகாம ல் நெடுநாட்களாக ஒருகன்னி பெண் இருந்தால் அவளுக்கான தோ ஷத்தை நீக்குவதற்கும் சுமங்கலி பூஜை நடத்தலாம். ஆலயங்களில் மகாலட்சுமி ஹோமம்செய்துமுடித்த பிற கு சுமங்கலி பூஜை நடத்து வது வழக்கம். சுமங்கலி பூஜை செய்தால் சகல தோஷ ங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.வீடுகளில் சுமங்கலி பூஜை செய்ய வேண் டுமென்றால் இல்லத்தை தூய்மை படுத்தி மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அழகு படுத்த வேண்டும். சுவாமி அறையில் உள்ள படங்களுக்கு மாலை சாற்றி தூபமிட்டு விளக்கேற்ற வேண்டு ம். சுமங்கலி பூஜைக்காக ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் அழைக்கப் படலாம் அதாவது மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்ற எண்ணிக்கை யில் பெண் களை அழைப்பது கட்டாயம். பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களுக்கு நல்லமுறையில் வர வேற்பு கொடுக்க வேண்டும். பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற் க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும். குங்குமம் சந்தனம் மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதை யோடு அமர செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பெண்ணையும் அன்னை பராசக்தியாக கருதி தீபா ராதனை செய்து வழிபட வேண்டு ம். ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்கா ரம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு புடவை ரவிக்கை மஞ்சள் கண்ணாடி குங்கும சிமிழ் புஸ்பம் வெற்றிலை பாக்கு தட்சணை கொடுத்து உபசரிக்க வேண்டும்.
பூஜைக்கு வந்த பெண்களுக்குக் கட்டாயம் அறுசுவை உணவு கொடு க்க வேண்டும். அவர்கள் கையலம்பக் கண்டிப்பாக நீர்வார்க்க வே ண்டும். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அவ ர்களை வணங்கி வழியனுப்ப வேண் டும். அதன் பிறகு தான் பூஜை நடத்திய வீட்டுகாரர்கள் உணவு எடுத்து கொள் ள வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு திங்கள், புதன், வெள்ளி போன்ற தினங்கள் உக ந்தது ஆகும். இந்த தினங்களில் ராகு காலம் வராத எந்த நேரமும் நல்ல நேரமே ஆகும். சுமங்கலி பூஜை செய்தால் செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி வள மோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் பக்தியும் இரு க்கிறது. அக்கம் பக்கத்து வீட்டாரோடு கொள்கின்ற ஐக்கியமும் இருக்கிறது.

ஸ்ரீசக்கர நவாவரண பூஜை

காஞ்சி காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

எனது இத்தனை வருட அனுபவத்தில் இத்தலத்தில் ஸ்ரீசக்கரத்துக்கு செய்யப்படும் நவாவரண பூஜையில் கலந்து கொண்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ள எத்தனையோ பேரை பார்த்துள்ளேன். நீங்களும் அந்த பாக்கியத்தைப் பெற பவுர்ணமியன்று நடக்கும் நவாவரண பூஜையில் கலந்து கொள்ளலாம்.

சண்டி ஹோமம்

சாண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சாண்டி.இந்த மகா சாண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும்.செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.

சாண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சாண்டி தேவியை வழிபடுகின்றனர்.  தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சாண்டி

சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம்
இல்லை.இது அனுபவம் வாய்ந்த 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம்.இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது.
  
9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும்.இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.அதில் சில மந்திரங்கள்

கணபதி பூஜை:

கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும்.முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும் 

அனுக்கைய சங்கல்பம்:
   இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும்.
இதன் முலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது

புண்ணியகவஞ்சனம்:
இதை ஆரம்பிபதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்
வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும்

கலச சதப்பனம்:
கலச சதப்பனம் என்பது ஒரு பானையை குறிக்கும்.இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும்.இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது

ப்ரயாண சமர்ப்பணம்:

இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும்.

கணபதி பூஜை:

வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும்.

புண்ணியகவஜனம்:
இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக
இந்த வழிபாடு

கோ பூஜை:
சமஸ்கிருத வார்த்தையான கோ என்பது மாடு என்று பொருள்.இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது.பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக மாடுவிற்கு  வைக்கபடுகிறது

சுஹாசினி பூஜை:
வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது

தம்பதி பூஜை:

இதில் பூஜை செய்து வயதான தம்பதியிடம் வழங்கபடுகிறது.வயதான தம்பதியிடம் தான் கொடுக்கபடவேண்டும்.
பிரம்மச்சாரி பூஜை

திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது.பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது

சாண்டி வேள்வி:
நெருப்பு சடங்கு மந்திரங்கள் கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது.

பூரண ஹோதி:
வெற்றிலை,பாக்கு,பருப்புகள்,நாணயம்,தேங்காய்,குங்குமம்,மஞ்சள்,பூக்கள் இந்த
பூஜையில் வைக்கபடுகிறது.

மகா தீபாராதனை:
சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும்

கிறிஸ்தவர்கள் திருடும் இந்து சடங்குகள் !

கிறிஸ்தவர்கள் திருடும் இந்து சடங்குகள் !

எதிரிகளை வீழ்த்துவதற்கு இரண்டு வழிகள் உண்டு முதலாவது நேருக்கு நேராக நின்று தாக்குதல் நடத்தி எதிரி என்று ஒருவன் இருந்தான் என்ற சுவடேயே அழித்துவிடுவது அடுத்ததாக நேரடி தாக்குதலுக்கு சக்தி இல்லாத போது தோள்மீது கைபோட்டு நயவஞ்சக வார்த்தைகள் பேசி கபட வேடமாடி துரோக வழியில் எதிரியை பூண்டற்று போகவைப்பது
ஏசுவை நம்புங்கள் அவர் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்லும் வல்லமை படைத்தவர் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதை ஒரு வகையில் யாரும் குறைசொல்ல முடியாது என் கடையில் விற்கும் பொருட்கள் மட்டுமே உயர்தரமானது மற்றவைகள் மட்டமானவைகள் என்று ஒரு வியாபாரிக்கு தனது பொருளை சந்தை படுத்த உரிமை இருப்பது போல இதையும் விட்டு விடலாம் ஆனால் காலகாலமாக மக்கள் பயன் படுத்தும் ஒரு பொருளை போலவே போலியாக ஒன்றை செய்து அதை விற்பனைக்கு எந்த வியாபாரி கொண்டு வந்தாலும் அதை வர்த்தகம் என்று எடுத்துக்கொள்ள முடியாது போலி என்றும் ஏமாற்று வேலை என்றும் வேண்டுமானால் அழைக்கலாம்
இந்து தத்துவங்களோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதற்காக இந்து மத நடைமுறைகளை கிறிஸ்தவ மயமாக்க இன்று திட்டமிட்டு பல காரியங்கள் நடந்துவருகிறது.
பாரத திருநாட்டில் காவி நிறம் என்பது இந்துக்களை குறிப்பது விரத காலத்திலும் சன்யாச காலத்திலும் இந்துக்கள் அணிவது என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இன்று கிறிஸ்தவ பிரசங்கிகள் பலர் காவி ஆடை அணிகிறார்கள் இந்துக்களுக்கே உரித்தான துளசி மாலைகளையும் ருத்தாரச்ச மணிகளையும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள் பழனிக்கும் திருமலைக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செய்வது போல வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ ஸ்தலங்களுக்கும் கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை போகிறார்கள் அப்படி போவது அவர்கள் விருப்பம் என்பது ஒருபுறம் என்றாலும் அப்போது அவர்கள் பயன்படுத்தும் காவி ஆடை என்பது முழுக்க முழுக்க இந்துமதத்தை தனதாக்கி கொள்ளும் பெராசையாகும்
இந்து ஆலையங்களில் திருவிளக்கு வழிபாடு நிலவிளக்கு வழிபாடு என்பவைகள் தொன்று தொட்டு நடந்து வருவதை சிறிய குழந்தை கூட அறியும் இந்து பெண்கள் இத்தகைய வழிபாடுகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஏனென்றால் ஜோதி வடிவாக இருக்கும் அன்னையை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்ப இருட்டுகள் மறைந்து விடும் என்பது அவர்களது நம்ப்பிக்கை
இதை திருவிளக்கு வழிபாட்டை பல சிரியன் கிறிஸ்தவ சபைகள் இன்று நடத்துகின்றன ஒவ்வொரு சிரியன் கிறிஸ்தவ வீட்டில் இந்த விளக்கு வழிபாடு தினசரி நடத்த சொல்லி மத பிரச்சாரர்கள் வலியுருத்திகிறார்கள் இதற்கென்றே கிறிஸ்தவ மயமாக்க பட்ட குத்துவிளக்குகள் கடைகளில் விற்பனையாகின்றன நம் வீட்டில் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் குத்துவிளக்குகளை நன்கறிவோம் அவற்றின் மேல்பகுதியில் ஓம் என்ற எழுத்தோ அல்லது சிவ வைஷ்ணவ சின்னங்களோ இருக்கும் ஆனால் கிறிஸ்தவர்கள் அந்த சின்னத்தை மட்டும் எடுத்துவிட்டு அதில் சிலுவையை வைத்து விடுகிறார்கள்
பல கத்தோலிக்க தேவாலையங்களில் அல்லது குருசடி என்று அழைக்கப்படும் புனிதர்களின் வழிபாட்டு கூடங்களில் இந்து மத சடங்குகள் போல் சிகை நீக்கி காது குத்துதல் கிடா வெட்டி சோறு போடுதல் போன்றவைகள் சர்வ சாதரணமாக நடக்கிறது இப்படி பட்ட வழிபாட்டு விருந்துகளை அசனம் என்ற பெயரில் அவர்கள் அழைக்கிறார்கள் கேரளாவில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களில் குத்து விளக்கு ஏற்றப்படுவது கட்டாயமாகவே இருக்கிறது
பொதுவாக நமது குழந்தைகளை விஜய தசமி அன்று பாடசாலைக்கு அனுப்புவது நம் தாத்தா முப்பாட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது ஆசிரியரின் மடி மீது குழந்தையை உட்கார வைத்து நெல் மீது ஹரி ஓம் என்று எழுதவைத்து கல்வியை ஆரம்பிப்பது நமது வழக்கம் இதே மரபை கேரளாவில் உள்ள பல கிறிஸ்தவர்கள் தமது தேவாலயங்களில் நடத்த துவங்கி விட்டார்கள் அவர்களும் விஜய தசமி அன்று குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் சடங்கை செய்கிறார்கள்
முன்பெல்லாம் அயல்நாட்டிலிருந்து பெறுகின்ற பணத்தை வைத்து நடத்துகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு கருணை இல்லம் என்கின்ற மாதிரியான பெயர்களை வைப்பார்கள் ஆனால் இப்போது காலம் மலையேறி விட்டது கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இந்து மதத்திற்கே உரிய ஆசிரமம் என்ற வடமொழி பெயரை சூட்டி கொள்கிறார்கள் இதை விட ஒருபடி மேலே போய் இந்து மத வேதங்களான சதுர்மறையில் ஏசுவின் மறுவருகையை பற்றி குறிப்பு இருக்கிறது ஏசு தான் ஒரே தேவ குமாரன் என்று சொல்லபட்டிருக்கிறது என்றெல்லாம் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்
நிலைமை இப்படியே போனால் ஏசுதான் சிவன் ஏசுதான் பெருமாள் கன்னி மரியாள் தான் ஆதிபராசக்தி திருப்பதி கோவில் பாலன் ஏசுவின் புனித பூமி என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஏசுநாதரை ஈஸ்வரன் என்று குறிப்பிடுகிறார்கள்
நாம் நினைப்பது போல ஈஸ்வரன் என்ற வார்த்தை சிவனை மட்டுமே குறிப்பது அல்ல ஒட்டு மொத்தமான இறைவனையும் ஈஸ்வரன் என்ற வார்த்தையில் அழைக்கலாம் ஆனால் அந்த ஈஸ்வரன் என்ற வார்த்தை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது இந்து கடவுளை மட்டுமே அப்படி அழைக்க முடியும் ஆனால் அதையும் கிறிஸ்தவ பாதிரிகள் விட்டு வைக்க வில்லை தங்களுக்கே உரித்தான வார்த்தை என்பது போல் சர்வ சுகந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள்
சில கலாங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவை அல்லா என்று அழைத்தார்கள் அல்லா என்பது முழுமுதல் கடவுளை குறிக்கும் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை ஆனால் அதை காலகாலமாக இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் அதை மற்றவர்கள் தங்கள் கடவுளின் பெயராக பயன்படுத்தி கொள்ள எந்த உரிமையும் கிடையாது இதை நன்கு உணர்ந்த மலேயா இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பை காட்டினார்கள் கடேசியில் கிறிஸ்தவர்கள் தவறை ஒப்புக்கொள்ள வில்லை பயந்து போய் பின்வாங்கினார்கள்
ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு அப்படி பட்ட கவலை எதுவுமே கிடையாது இந்து மத கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் திருடலாம் திரித்து பொருள் சொல்லலாம் பகவத் கீதையை கூட ஏசுநாதர் தான் உபதேசம் செய்தார் என்று மேடை போட்டு பேசலாம் கேட்பதற்கு இங்கு யாரும் கிடையாது காரணம் அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு சாமரம் வீசும் ஒரு வேலைக்காரனாகத்தான் இருந்து வருகிறது மக்களுக்கும் அதை பற்றி உணர்ச்சி கிடையாது கவலை கிடையாது எது எக்கேடு கெட்டாலும் கவலையில்லை வயிறு நிறைந்தால் போதுமென்று வாய்மூடி கிடைக்கிறார்கள்
யாரவது கிறிஸ்தவர்கள் இந்துக்களின் சம்பிராதயங்களை திருடலாமா என்று கேட்டால் அவன் இந்த சமூகத்தில் மதவாதி பிற்போக்குவாதி அமைச்சர் சிதம்பரத்தின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் காவி தீவிரவாதி இப்படி ஆயிரம் பட்டங்கள் கட்டி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் அதனால் தான் யாரை வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் கபளீகரம் செய்யலாம் என்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் சுதந்திரமாக தமது கபட நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்
சமீபத்தில் திருவனந்தபுரம் பத்நாப சுவாமி கோவிலில் பொக்கிசங்கள் எடுக்கப்பட்டதை நாமறிவோம் அந்த பொக்கிசத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கொச்சியை சேர்ந்த ஜேக்கப் மாப்பிளசேரி என்பவர் சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்துள்ளார் யாரவது நமச்சிவாய முதலியாரோ சுந்தர பாண்டிய நாடாரோ கிறிஸ்தவ அமைப்புகளில் ஆலயங்களில் குவிகின்ற கோடிகணக்கான பணத்தை அரசாங்கம் எடுத்து கொள்ளவேண்டும் என்று நீதி மன்ற வாசலை மிதித்திருந்தால் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அமெரிக்க இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் கூட அலறி புடைத்து ஆர்பாட்டம் நடத்துவார்கள் ஆனால் இது இந்து கோவில் தானே இந்துக்களின் சொத்து தானே எப்படி போனால் என்ன அதில் நாலு காசு நமக்கு கிடைக்குமா? என்று தான் அரசியல் தலைவர்களும் பார்ப்பார்கள்
இந்துக்கள் தங்களது மத அடையாளங்களை கூட கிறிஸ்தவர்கள் விட்டு வைக்காமல் திருடுவதை இனியும் உணர மறுத்தால் மறந்தால் வீட்டு வாசலில் தலைவைத்து நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினால் உங்களது கோவணம் கூட நான்தான் தந்தேன் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை ஆமாம் போட்டு கேட்டுக்கொண்டு அடிமை வாழ்வு நடத்தவேண்டிய நிலை வரும் நான் கிறிஸ்தவர்களை ஆயுதம் கொண்டு தடுக்க சொல்லவில்லை உங்களது எதிர்ப்பை அதிர்ப்தியை உரத்த குறிலில் சொல்லுங்கள் என்று தான் சொல்கிறேன் இல்லை என்றால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தவன் கதையாக போய்விடும் ஜாக்கிரதை.

Wednesday, September 10, 2014

சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று செய்ய முடியாமல் போனால் அடுத்தமாதம் வரும் திதியில் செய்யலாமா ?

சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று செய்ய முடியாமல் போனால் அடுத்தமாதம் வரும் திதியில் செய்யலாமா ?
கண்டிப்பாக சிராத்த நாளில்தான் செய்யவேண்டும், ஏதோ தேவையில்லாத காரணங்களை சொல்லி தள்ளிப் போடுவது தவறு.
ஏதோ ஞாபக மறதியாலோ, தீட்டாலோ, உடல்நலக் குறைவாலோ குறிப்பிட்ட திதியில் செய்ய இயலா விட்டால், ஞாபகம் வரும் நாளிள், தீட்டு போகும் நாளிள், உடல்நிலை சீரான நாளிள் செய்து விட வேண்டும்.அல்லது அடுத்து வரும் அமாவாசையன்றாவது செய்து விட வேண்டும்.
அடுத்தமாதம் வரும் திதியில் சிராத்தம் செய்யவது சாஸ்திர ஸம்மதமில்லை.

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். 

எங்கும் லிங்கங்களாக காட்சி அளித்ததில் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். 

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

உருத்திராக்கம் கோக்கும் முறையும் - அணியும் விதியும்!

உருத்திராக்கம் கோக்கும் முறையும் - அணியும் விதியும்!
உருத்திராக்க மணிகளை நாம் அணிய மாலையாகக் கோக்கின்ற போது; அம்மாலையிலுள்ள மணிகள் அனைத்தும் ஒத்தமுகம் உடையதாகவேயிருக்கும்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஐந்து முக மணி மாலை தயாரிக்கும் போது; அனைத்து மணிகளும் ஐந்து முகம் உடையதாகவே இருக்க வேண்டும். வேறு முகம் கலந்து அணியக் கூடாது. அதைப் போலவே, ஒத்த அளவினதாக உள்ள மணிகளையே ஒரு மாலையில் கோத்தல் வேண்டும். சிகாமணி மட்டும் வேறுபடலாம்; பவளம் படிகம் போன்ற வேறு மணிகளாகவும் இருக்கலாம். உருத்திராக்க மணியின் முகத்தோடு முகத்தையும்; அடியோடு அடியையும்; பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும். நூலில் கோத்துத் தரிக்கும்போது; மணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி கோத்தல் கூடாது; இடையே, ஏதேனும் ஒரு பொருள் தடுப்பாய் இருக்கும்படி கோத்தல் வேண்டும். இடை இடையே பவழம், ஸ்படிகமணி, தங்கம், வெள்ளி, பொன்மணி, முத்து முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து கோத்தும் அணியலாம். உருத்திராக்க மணிகளை; தலைமுடி, சிரசு, இருகாதுகள், கழுத்து, மார்பு, அதன் மேல் அணியும் பூணூல், இரு புயங்கள், கையின் இரு மணிக்கட்டுகள் என பதினொரு தனங்களில் அணியலாம்.
1. தலைமுடியில் ஒரு மணி அணிய வேண்டும்.
2. சிரசில் இருபத்தி இரண்டு மணிய அணிய வேண்டும்.
3. காதுகள் ஒன்றில் ஒரு மணி அல்லது ஆறு மணி அணிய வேண்டும்.
4. கழுத்தில் முப்பத்திரண்டு மணி அணிய வேண்டும்.
5. மார்பில் நூற்றியெட்டு அல்லது ஐம்பத்தி ஒன்று கொண்ட மாலை அணிய வேண்டும்.
6. பூணூலில் ஒரு மணி அணிய வேண்டும்.
7. புயம் ஒன்றில் பதினாறு மணி அணிய வேண்டும்.
8. மணிக்கட்டு ஒன்றில் பன்னிரண்டு மணி அணிய வேண்டும்.
தலைமுடியும், பூணூலும் தவிர்த்த பிற இடங்களில் அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப அவ்வத் தானங் கொண்ட அளவு மணிகளையும் அணியலாம் !
நூற்றெட்டு மணிகளைக் கொண்ட மாலையைப் பயன்படுத்துவது சிறந்தது. இயலாதாயின், ஐம்பத்தொரு மணிகளை மாலையாகக் கோத்து அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ஐம்பத்தி நான்கு மணிகளை மாலையாகக் கோத்து அதை ஜபம் செய்யப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாறுபாட்டை உணர்தல் முக்கியம். கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் மாலையை ஜபத்திற்குப் பயன்படுத்தல் அபச்சாரம். இரண்டிற்கும் தனித்தனி மாலைகளைப் பயன்படுத்த வேண்டும். இதுவே சிவபூஜாவிதி ! உருத்திராக்க மணிகளைக் கோத்து; பூணூலாக அணிதலும்; பௌத்திரமாகப் பயன்படுத்தலும் வழக்கில் உண்டு.

சிவன் சந்நிதிகளில் ஏன் காலபைரவர் ----பைரவரின் சிறப்புகள்

காலபைரவர் சிவன் சந்நிதிகளில் ஏன்
சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.
அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்;
வழக்கில் வெற்றி கிட்டும். திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. *
பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும் அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.
இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது.
அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்......
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.


நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபட வேண்டிய இடங்களும்:-
எண். நட்சத்திரம் வழிபட வேண்டிய பைரவர் இடம்
1. அசுவினி ஞான பைரவர் போரூர்
2. பரணி மகா பைரவர் பெரிச்சியூர் 3. கார்த்திகை அண்ணாமலைபைரவர் திருவண்ணாமலை 4. ரோகிணி பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர் 5. மிருகசீரிஷம் ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம் 6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர் 7. புனர்பூசம் விஜயபைரவர் பழனி
8. பூசம் ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம் 9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி 10. மகம் நர்த்தன பைரவர் வேலூர் 11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம் 12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி 13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர் 14. சித்திரை சக்கர பைரவர் தர்மபுரி 15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை 16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம் 17. அனுஷம் ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை, 18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி, 19. மூலம் சட்டைநாதர் சீர்காழி 20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம் 21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர் 22. திருவோணம் மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி 23. அவிட்டம் பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில் 25. பூரட்டாதி அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை 26. உத்திரட்டாதி வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர் 27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை
ஸ்ரீ சொர்ண பைரவர்
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் இலக்குமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். ஒவ்வொரு இல்லத்தின் பூசை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூசை செய்யின் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.
மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூசை அறையில் அல்லது பூசை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்

பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷைஎடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.
பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக'' என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.
அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது.
இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
கால பைரவர்:பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாலிக்கிறார்.
அசுரர்களை அழிக்க தோன்றியவர் பைரவர்
சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பரைவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாங்க பைரவர் பிராம்ஹி, குரு பைரவர் மாகேஸ்வரி, சண்டபைரவர் கவுமாரி, குரோதான பைரவர், வைஷ்ணவி, உள் மத்த பைரவர், வாராஹி, கபால பைரவர், இந்திராணி, பீஷண பைரவர், சாமுண்டி, சம்ஹார பைரவர், சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்.
தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்ட வருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் - பைரவர்கள்
சித்திரை - சண்ட பைரவர்
வைகாசி - குரு பைரவர்
ஆனி - உன்மத்த பைரவர்
ஆடி - கபால பைரவர்
ஆவணி - ஸ்வர்ணகர்ஷண பைரவர்
புரட்டாசி - வடுக பைரவர்
ஐப்பசி - க்ஷேத்ர பாலபைரவர்
கார்த்திகை - பீஷண பைரவர்
மார்கழி - அசிதாங்க பைரவர்
தை - குரோதன பைரவர்
மாசி - ஸம்ஹார பைரவர்
பைரவர் வரலாறு
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் கூறப்படுகிறது. எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவரை ஏன் வழிபட வேண்டும்?
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவரின் சிறப்பு வடிவங்கள்
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமாëர்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.
உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்கு பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது.
நகரத்தார் கோவில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
பைரவர் வாகனம்
1. அசிதாங்க பைரவர் அன்னம்
2. ருரு பைரவர் ரிஷபம்
3. சண்ட பைரவர் மயில்
4. குரோதன பைரவர் கருடன்
5. உன்மத்த பைரவர் குதிரை
6. கபால பைரவர் யானை
7. பீஷண பைரவர் சிம்மம்
8. சம்ஹார பைரவர் நாய்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் "செல்வ வள சக்தி'' குறைகிறது;
அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;
அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்; அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதாப யார் சொன்னது.
இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்
1. தலை குனியா வாழ்க்கை.
2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
9. இறைவனை எளிதாக உணர்தல்.
10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்

. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் 33

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.
7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.
8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.
9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.
12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.
13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.
20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.
21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.
22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.
23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.
24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.
29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.
30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.
31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.
32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.

Tuesday, September 9, 2014

ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?

ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.
யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.
''ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா; 
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத'' ||
எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.
இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.
பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.
செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.
பிரணவத்தின் வடிவமான\போலவே சின்னமும் புனிதமானது. இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.