பரதன் என்ற பக்தர் காசி புறப்பட்டார்.வழியில் இரண்டு இலந்தை மரங்கள் இருந்தன. அதனடியில் படுத்துறங்கி விட்டு நடந்தார். அவர் தங்கிய இலந்தை மரம் நாளடைவில் காய்ந்து பட்டுப் போனது. அடுத்த பிறவியில் அந்த மரம் இரண்டும் பெண்களாக பிறந்தன. ஏழுவயதை அடைந்தனர் அந்தப் பெண்கள். பரதன் காசிக்குச் சென்று அந்த வழியேதிரும்பினார். அவரைக் கண்ட அந்த பெண்கள், சுவாமி! தங்களின் அருளால் தான் இலந்தை மரமாக இருந்த நாங்கள் மனிதவடிவம் பெற்றோம் என்று சொல்லி வணங்கினர். அவர்களிடம், குழந்தைகளே! உங்களின் வரலாற்றைச் சொல்லுங்களேன் என்றுஆவலாக கேட்டார்.சுவாமி! கோதாவரிக்கரையில் விச்சிந்ந பாபம் என்னும் தீர்த்தம் இருக்கிறது. அங்கு சத்யதபஸ் என்னும் முனிவர் தவம் செய்து வந்தார்.அவருடைய தவத்தைக் கலைப்பதற்காக தேவேந்திரன், எங்களை இங்கு அனுப்பி வைத்தான். ஆடல், பாடலால் அவரின் தவத்தைக் கலைக்க முயற்சித்தோம். கண் விழித்த முனிவர், நீங்கள் கங்கைக்கரையில் இலந்தை மரமாக மாறக் கடவது என்று சபித்து விட்டார். அவரிடம் மன்னிப்பு வழங்கும்படி முறையிட்டோம். அப்போது அவர், பரதன் என்றொரு பக்தன், கீதையின் நான்காம் அத்யாயத்தைஅன்றாடம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பான். அவனுடைய புண்ணிய பலனால் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று சொல்லி புறப்பட்டார். அதன் படியே, உங்களின் வருகையால் எல்லாம் நன்மையாகவே முடிந்தது என்று சொல்லி வணங்கினர். இதைக் கேட்ட பரதன்கீதையின் மேன்மையை உணர்ந்து நெகிழ்ந்தார்.
Thursday, October 16, 2014
கோவிலில் பயன்படுத்துவதற்கென்றே சில சொற்கள்
கோவிலில் பயன்படுத்துவதற்கென்றே சில சொற்கள்
அவற்றைத்தான் கோவிலில் பயன்படுத்தவேண்டும். சாதம் கோவிலில் பிரசாதமாகிவிடும். சுவாமி திருவீதியுலா வருவதை எழுந்தருளல் என்று சொல்வார்கள்.
சிலர், "சாமியைத் தூக்கியாச்சா' என்று கேட்பார்கள். கடைசிப் பயணம் போகிறவர்களைத்தான், "தூக்கியாச்சா' என்று கேட்பது வழக்கம். வார்த்தைகள் மாறும்போது அர்த்தம் அனர்த்தமாகிவிடும். அதுபோல "கோவிலைப் பெருக்கியாச்சா' என்றும் கேட்கக்கூடாது. அதற்கெனவே ஒரு வார்த்தையிருக்கிறது. "திருஅலகு பரிமாறுதல்' என்பதே அது.
அறிந்த சிறிய கதை!!
திருவானைக்காவல் ஆலய மடைப்பள்ளியில் ஒரு சமையல்காரன். அவனுக்கு பிரசாதம் செய்துவைப்பது தவிர நன்குதெரிந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று நன்றாகத் தூங்குவது; அடுத்தது வாய்சிவக்க தாம்பூலம் போடுவது.
ஒருநாள் அவன் பிரசாதம் தயாரித்து வைத்துவிட்டு தாம்பூலம்போட விரும்பினான். கையில் வெற்றிலைப் பாக்கு எதுவுமில்லை. கடையில் போய் வாங்கிவந்து போடுமளவுக்கு அவனுக்குப் பொறுமையில்லை. தூக்கம் ஆளை அசத்துகிறது. தூண்மேல் சாய்ந்து உட்கார்ந்தவன், அடுத்த நிமிடம் அயர்ந்து தூங்கிவிட்டான். இரவானது. மடைப்பள்ளி சமையல்காரன் கோவிலுக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், கோவிலை சாற்றிவிட்டுப் போய்விட்டனர்.
கோவிலில் ஒரு ஐதீகமுண்டு. மனிதர்களாகிய நாம் பூஜைகளையெல்லாம் முடித்து நடைசாற்றிய பிறகு, தேவர்கள்வந்து தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் இன்றைக்கும் இரவில் பூஜை முடித்து வைத்துவிட்டுப்போன பொருட்கள் காலையில் வந்து பார்க்கும்போது இடம் மாறியிருக்குமாம்.
அப்படி இரவில் தேவர்கள் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்டபின் தெய்வங்கள் ஆலயப் பிராகாரத்தை வலம்வருவார்கள். கிராமப்பகுதிகளில் விளக்கு வைத்தபிறகு, ஊரெல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களின் கோவிலருகே நடமாடக்கூடாதென சொல்வார்கள். அதற்கொரு காரணமிருக்கிறது. நகரைக் காவல் காப்பதற்காக அந்த தெய்வங்கள் ஏதோவொரு ரூபத்தில் வலம்வரும். அவர்களைப் பார்க்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடையாதென்பதால் தான் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கின்றன.
மேற்சொன்னதுபோல தேவர்களின் பூஜையை அம்பிகை அகிலாண்டேஸ்வரி ஏற்றுக்கொண்டபின் ஆலயத்தை வலம்வரக் கிளம்புகிறாள்.
அப்படி வரும்போது மடைப்பள்ளி சமையல்காரன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். சமையல்காரனின் பூர்வ புண்ணியம் அது! அம்மா பார்த்துவிட்டு சும்மா போவாளா? தட்டியெழுப்புகிறாள்.
நாம் சில நேரம் வீட்டிலேயே பார்க்கலாம். குழந்தைகள் வெளியே போய் ஓடியாடி விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும். வந்ததும் வராததுமாக உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்துவிடுவான். ""டேய் தூங்கிடாதடா, முடிச்சதும் தோசை சுட்டுத்தர்றேன்'' என்று சொல்லிவிட்டு தாயார் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிடுவாள். நேரம் போவது தெரியுமா? பையன் வீட்டுப்பாடம் எழுதிவிட்டு அப்படியே படுத்துத் தூங்கியிருப்பான். இடையில் வீட்டுக்காரர் வந்து அவர் இன்னொரு பக்கம் படுத்துத் தூங்கியிருப்பார்.
பிறகு தாயானவள் அவசரமாக தோசை வார்த்து கணவனுக்குக் கொடுத்துவிட்டு, பையனை எழுப்புவாள். அவன் எழுந்துகொள்ளாவிட்டாலும் தூக்கி உட்காரவைத்து எப்படியாகிலும் ஒரு தோசையையேனும் ஊட்டிவிடுவாள்.
அப்போதுதான் அவளுக்கு நிம்மதி. தன் பிள்ளை பசியோடு தூங்கக்கூடாது என்பதுதான் அம்மாவுடைய கவலை.
ஒரு ஜென்மத்தில் தாயாக வருகிறவளுக்கே பிள்ளைமேல் இவ்வளவு அக்கறையிருக்கும்போது, நம்முடைய எத்தனையோ ஜென்மங்களில் தாயாக விளங்கிவரும் அந்த அம்பாளுக்கு பிள்ளைகள்மேல் எவ்வளவு கருணையிருக்கும்?
ஒருநாள் திடீரென்று கடவுள் வந்து "என்ன வேண்டும்' என்று கேட்கிறார். "கடவுளெங்கே நேரில் வரப்போறார்' என்று நாம் நினைக்க லாம். பரவாயில்லை; வருவதாக கற்பனை செய்துகொள்வோம். அப்படி கேட்கும்போது நாம் அவரிடம் என்னவெல்லாம் கேட்கலாம்?
கடவுளிடம் கேட்டால் எது வேண்டுமானாலும் கிடைக்கும். அதனால் பங்களா, கார்... இப்படி கேட்கலாம்.
சிலர் "இதையெல்லாம் நாமே உழைச்சு சம்பாதிச்சுக்கலாமே!' என்று நினைக்கலாம். எனவே ஒருவர் தன்னிடம் இல்லாதது எதுவோ அதைத்தான் இறைவனிடம் கேட்கவேண்டும். இல்லையா... அப்படியென்றால் சந்தோஷம் வேண்டுமென்று கேட்கலாமா? இந்த உலகம் இன்பமானதா- துன்பமானதா?
இந்த உலகின் இயற்கையே துன்பம்தான். துன்பத்தை இன்பமாக மாற்றத்தான் நாம் ஆயுள் முழுக்க சிரமப்படுகிறோம். அதனால்தான் ஞானிகள் "உலக வாழ்க்கை துன்பமயமானது' என்று சொன்னார்கள். அவர்கள் கடவுளிடம் "பிறவாப் பெருவரம்' கேட்டார்கள். ஒருவேளை நாம் செய்த வினைப்பயன் தீராமல் பிறக்க நேர்ந்துவிட்டால், "என்றுமுனை மறவா வரம்வேண்டும்' என்று இறைவனிடம் மன்றாடினார்கள்.
அவரவருக்குத் தகுந்தமாதிரி கேட்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
தூங்கிக்கொண்டிருக்கும் சமையல் காரனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று அன்னை விரும்பினாள்.
அவனைத் தட்டியெழுப்பி "என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.
அவனுக்கோ தூக்கக் கலக்கம். யாரோ "என்ன வேண்டும்?' என்று கேட்பது காதில் விழுகிறது.
திருவானைக்காவல் மடைப்பள்ளி சமையல்காரன் அகிலாண்டேஸ்வரியிடம் கேட்டுப் பெற்றது என்னவென நினைக்கிறீர்கள்? அவன் படுக்கும்போது வெற்றிலைப் பாக்கு போடவேண்டுமென்ற எண்ணத்தோடே படுத்தான். அதனால் தூக்கக் கலக்கத்திலேயே "வெத்திலை பாக்கு' என்று கேட்டான்.
கடவுள் வரமருள வந்து நிற்கையில் வெற்றிலைப் பாக்கு கேட்ட ஒரே ஆள் இவன் ஒருவனாகத்தான் இருக்கும்.
பெண்களுக்கு சில கடமைகள் உண்டு. உணவு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், உணவு தயாரானதும் வீட்டிலுள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு உணவு கொடுத்து, கணவனுக்குப் பரிமாறி, கடைசியாக மனைவி சாப்பிடவேண்டும். இதுதான் மரபு. அதேபோல இரவு உணவுக்குப்பின் கணவனுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்; பின் தானும் தரித்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு நியதியுண்டு.
ஆணுக்கும் சில நியதிகள் உண்டு. ஒரு ஆண் தன் மனைவியின் கையால் மட்டும்தான் தாம்பூலம் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக வெற்றிலைப் பாக்கு கடையில்தானே வாங்குகிறோம். அவர் பிறரில்லையா என்று கேட்கக்கூடாது. வெற்றிலைப் பாக்கு வாங்குவது வேறு; மடித்துத் தருவது வேறு. மனைவியிடம் மட்டும்தான் கணவன் மடித்துத் தரும் வெற்றிலையை வாங்கிக்கொள்ளவேண்டும்.
தாம்பூலம் மகாலட்சுமிக்கு சமமானது.
கணவன்- மனைவி இருவர் மட்டுமே தாம்பூலம் பரிமாறிக்கொள்கிறவரை மகாலட்சுமி இல்லத்தில் நிரந்தரமாக இருப்பாள்.
அன்றைக்கும் அம்பாள் வழக்கப்படி தாம்பூலம் தரித்து ஆலயத்தை வலம் வந்தாள். சமையல்காரன் வெற்றிலைப் பாக்கு கேட்டதும், தன் வாயிலிருந்த தாம்பூலத்தையே அவன் வாயில் இட்டுச்சென்றாள்.
அம்பாளின் எச்சில் சாதாரண எச்சிலா! அது ஞானமேயாகிய எச்சில். அது பட்டதும் ஒன்றுமே தெரியாத சமையற்காரன்- முழு மூடன்- கவி காளமேகப் புலவனாக மாறினான்.
ஆயிரக்கணக்கான பாடல்களை அம்பாள் மேல் பாடினான். அத்தனையும் அம்பாள்கொடுத்த ஞானம்.
காளமேகப் புலவர் ஒருசமயம் கும்பகோணம் வழியே போய்க்கொண்டிருக்கிறார்.
நல்ல பசி. அந்தக் காலத்தில் உணவக மெல்லாம் கிடையாது. உணவை விலைக்கு விற்பதைப் பாவமென கருதிய காலம் அது. வழிப்போக்கர்களுக்கென்று அன்னச் சத்திரம் இருக்கும்.
ஒரு அன்னச்சத்திரத்தில் போய் பிற வழிப்போக்கர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார் காளமேகம். அவருக்கு நேரெதிரே சாப்பிடுகிறவர் முன்குடுமி வைத்த சோழியர். அவருக்கு சாப்பாட்டுமேல் வெகுபிரியம்.
அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறார். அந்தசமயம் பார்த்துதானா அவரது கட்டுக்குடுமி அவிழவேண்டும். அவிழ்ந்த குடுமி அவரது உணவில் படுகிறது. நிதானமாக அதனை ஒதுக்கிவிடக்கூட பொறுமையில்லாமல், அவசரமாக அவிழ்ந்த குடுமியைத் தூக்கி பின்னால்விட்டபடி தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அவர் அப்படி குடுமியை தூக்கிவிடுகையில், எச்சில் சாப்பாடு காளமேகம் இலையில் போய் விழுந்தது. அவருக்கு சும்மாவே கோபம்வரும். எச்சில் சோறு விழுந்தால் கோபத்துக்கு கேட்கவா வேண்டும். ஆத்திரம் ஒரு கவிதையாய்க் கொட்டிவிட்டது.
"சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா
சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா
திருக்குடந்தை கோட்டானே நாயே குரங்கே
உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.'
சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா
திருக்குடந்தை கோட்டானே நாயே குரங்கே
உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.'
-இதிலென்ன பெரிய வசையிருக்கிறது என்கிறீர்களா?
தமிழ் இலக்கணம் நிறைந்த அற்புதமான மொழி. பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்தாவிடில் பொருளே மாறிவிடும்.
மாடு கன்று ஈன்றது என்று சொல்ல வேண்டும்.
நாய் குட்டி போட்டது என்பதே சரி.
யானை கன்று ஈன்றதென்றும்; பன்றி குட்டி போட்டதென்றும் சொல்லவேண்டும்.
ஏன் ஒன்றை மட்டும் ஈன்றது என்றும்; மற்றதைப் போட்டதென்றும் சொல்கிறோம்.
மாடு எப்போதுமே ஒரெயொரு கன்றைத்தான் ஈனும். நாய் ஒரேமுறையில் நாலைந்து குட்டிகளைப் பிரசவிக்கும். எனவேதான் ஒரே குட்டியென்றால் ஈன்றதென்றும், நான்கைந்து குட்டியென்றால் போட்டதென்றும் சொல்கிறார்கள். அதேபோல மனிதக் குழந்தை பிறந்தால் பிறந்ததென்றும் மகான்களை திருஅவதாரம் செய்தாரென்றும் சொல்லவேண்டும்.
ஆக, காளமேகம் "உனையொருத்தி பெற்றாளே' என்று ஏன் பாடவில்லை? ஏன் ஒரு இலக்கண மீறலைச் செய்கிறார்.
முந்தைய வரியில் இருக்கிறது சூட்சுமம். ஆந்தையே, நாயே, குரங்கே என்று அடுக்கி, உனையொருத்தி போட்டாளே எனும்போது அந்த முன் குடுமிக்காரரை மனிதத் தரத்திலிருந்து இறக்கிவிடுகிறார் காளமேகம். தமிழின் இந்தச் சிறிய இலக்கண நுட்பம்கூட பொதிந்துவரும்படி கவிதை பாடும் திறன் அவருக்கு அம்பிகையின் அருளால்தான் வாய்த்தது!
Tuesday, October 14, 2014
குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!
குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!
எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன் - இது கீதைநாயகன் கண்ணன் வாக்கு. தெய்வம் மனித வடிவில் வரும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். அந்த வாக்குகளை மெய்ப்பிக்கும் சம்பவத்தைக் கேளுங்கள்.எந்த நேரமும் கண்ணனின் நினைவு. அதன் விளைவாக ஆட்டம், பாட்டம், பஜனை என்று வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போது காட்சியளித்து வந்தார்.பக்தியில் லயித்த அக்ராஜி, ஆதரவற்ற ஒரு சிறுவனை வளர்த்து வந்தார். அவரது பெயர் நாபாஜி. அக்ராஜியின் மடத்தில் நடக்கும் பஜனை, அங்கு வரும் மகான்களின் உபதேசங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் நாபாஜி சிறந்த பக்தராக விளங்கினார். ஒருநாள்... அக்ராஜி பூஜைகள் முடித்து நிஷ்டையில் அமர்ந்தார். வழக்கமாக தரிசனம் தரும் கண்ணன் அன்று நீண்ட நேரமாக வரவேயில்லை.அக்ராஜியின் மனதில் கவலை உண்டானது. என் பக்தியில் குறை வந்து விட்டதா? நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனோ? எனக் கண் கலங்கினார்.அருகில் இருந்த நாபாஜி மெல்ல நெருங்கி வந்து, குருதேவா! உங்கள் பக்தியில் எந்தக் குறையும் இல்லை. ஒரு பெரும் வியாபாரியின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீது பக்தி கொண்டவர். தன்னைக் காப்பாற்றினால், தன் பொருளில் கால்பங்கை இந்த மடத்திற்கு அளிப்பதாக பகவானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற கிருஷ்ணர் அங்கு போயிருக்கிறார். அதனால் தான் இன்று அவர் உங்களுக்குத் தரிசனம் தரவில்லை, என்றார். சற்று நேரத்தில் பகவான் தரிசனம் தந்து, நாபாஜி சொன்ன அதே விஷயத்தையே தாமதத்திற்கான காரணமாகச் சொன்னார். அக்ராஜிக்கு வியப்பு மேலிட்டது. நாபாஜியை புகழ்ந்து பாராட்டினார்.நாபாஜியோ, உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான் கிருஷ்ணரின் அருள் எனக்கு கிடைத்தது என்று பணிவுடன் பதிலளித்தார். அவருடைய உத்தரவுப்படி நாபாஜி எழுதியது தான் பக்த விஜயக் கதைகள்பாண்டுரங்கனின் புகழ்பாடும் அந்த நுõல் உருவாகக் காரணம்....துõய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவையே. நம்மையும் நல்வழியில் வழிநடத்தும்படி அந்த பரம்பொருளையே வேண்டுவோம்.
ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எரிப்பது ஏன்?
ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எரிப்பது ஏன்?
நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேச த்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோ ர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங் கும் அந்த நோக்கத் திலேயே அமைக்கப்பட் டது.
உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந் துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.
இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என் று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்த வரை யில் அவர் இறந்துவிட்டா ர். ஆனால் அந்த உயிரைப் பொறுத்த வரை யில் உடலை விட்டு நழுவி விட்ட தாகத்தான் நினைத் துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நு ழைந்து விடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். என வே, வாய்ப் பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக் கொண்டு இருக்கும். உடல் முழு மையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியா து. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங் கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறி விடும். ஆனால், சரியான புரிதல் இல்லா த உயிர் அந்த உடலையே சுற்றி வரும். இது அந்த உயி ருக்கும் நல்லதல் ல. இறந்தவருடன் பழ கியவ ர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவு களால் வருத்தம் அதிகமாகியே போகும்.
உயிரை விட்டவரும் சரி, உறவினர்களு ம் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேத னையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிர் உண ரவேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண் டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவே தான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படு த்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடி வெடுத்து உயிருடன் இரு க்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட் டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.
தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந் து கைய ளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும் போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக் கொ ண்டு இருக்காது. இங்கு உயிருட ன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒரு வித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாச்சாரத்தில் இருந்துவருகிறது.
போதிய விறகு இல்லாத பாலைவனங் களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!
ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை
ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை
ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.
பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.
ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.
ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.
ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை
ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.
பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.
ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.
ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.
ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை
பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா?
பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா?
பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.
கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
மேற்கண்ட தத்துவத்தின் அர்த்தத்தை பல நாத்திகவாதிகள் பெரியார் முதல் அவரின் அடிபொடிகள் கைத்தடிகள் வரை தவறாகவே விளக்கம் தருகின்றனர்.
அவர்களின் பகுத்தறிவு தரும் விளக்கம் இதுதான் :
நான் ஒரு முதலாளியிடம் வேலை செய்கிறேன், கடமை என்று கருதி வேலை மட்டும் செய்து விட்டு கூலியை எதிர்பார்க்காமல் இருக்கலாமா ? அல்லது அந்த முதலாளி கூலி தராமல் விட்டுவிட்டால் அதை எதிர்த்து கேளாமல் பணி செய்வது நமது கடமை என்று இருத்தலாகுமா ? எனவே கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது முட்டாள் தனமான காலத்திற்கு ஒவ்வாது கருத்து என மறுதளிப்பர்....
சரி அந்த சுயமரியாதை கும்பலிடம் எனது கேள்வி:
கடமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதா ? அல்லது உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதா ? கடமை என்பது முதலாளி தொழிலாளி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உடையதா ? ஆம் எனில் தவறானது உங்களின் கூற்று...........
கடமயை செய் ! பலனை எதிர்பாராதே ! என்பது சிறந்த பொதுவுடைமை கருத்து... மார்க்ஸ் , எங்கெல்ஸ், மாவோ, லெனின் போன்றோர் கூறியதற்கும் முன்பாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாகவே சிறந்த பொதுவுடைமை கருத்து தன கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
கரணம் !
உழைப்பது என்பது தொழிலாளியின் கடமை எனில் அந்த உழைப்பின் மூலம் ஆதாயம் அடைபவனின் (முதலாளியின்) கடமை என்ன ? அந்த உழைப்பாளியின் உழைபிர்க்கேற்ற அந்த உழைப்பின் மதிபிற்கேற்ற கூலியை தரவேண்டியது முதலையின் கடமை அல்லவா ? ஆக தொழிலாளியும் முதலாளியும் ஒருங்கே தனது கடைமையை செய்யும் பொழுது பயன் என்பது தானாக கிடைகின்றது.
தொழிலாளியின் கடமை முடியும் போது முதலாளியின் கடமை துவங்குகிறது.
இதில் ஒருவர் தனது கடமையை தவறினாலும் அது அம்மனிதர்களின் தவறே ஒழிய, பொதுவுடைமை கொள்கையான கடமையை செய் ! பலனை எதிர்பாராதே ! என்ற கோட்பாடின் தவறல்ல........
மேற்கண்ட தத்துவத்தின் அர்த்தத்தை பல நாத்திகவாதிகள் பெரியார் முதல் அவரின் அடிபொடிகள் கைத்தடிகள் வரை தவறாகவே விளக்கம் தருகின்றனர்.
அவர்களின் பகுத்தறிவு தரும் விளக்கம் இதுதான் :
நான் ஒரு முதலாளியிடம் வேலை செய்கிறேன், கடமை என்று கருதி வேலை மட்டும் செய்து விட்டு கூலியை எதிர்பார்க்காமல் இருக்கலாமா ? அல்லது அந்த முதலாளி கூலி தராமல் விட்டுவிட்டால் அதை எதிர்த்து கேளாமல் பணி செய்வது நமது கடமை என்று இருத்தலாகுமா ? எனவே கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது முட்டாள் தனமான காலத்திற்கு ஒவ்வாது கருத்து என மறுதளிப்பர்....
சரி அந்த சுயமரியாதை கும்பலிடம் எனது கேள்வி:
கடமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதா ? அல்லது உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதா ? கடமை என்பது முதலாளி தொழிலாளி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உடையதா ? ஆம் எனில் தவறானது உங்களின் கூற்று...........
கடமயை செய் ! பலனை எதிர்பாராதே ! என்பது சிறந்த பொதுவுடைமை கருத்து... மார்க்ஸ் , எங்கெல்ஸ், மாவோ, லெனின் போன்றோர் கூறியதற்கும் முன்பாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாகவே சிறந்த பொதுவுடைமை கருத்து தன கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
கரணம் !
உழைப்பது என்பது தொழிலாளியின் கடமை எனில் அந்த உழைப்பின் மூலம் ஆதாயம் அடைபவனின் (முதலாளியின்) கடமை என்ன ? அந்த உழைப்பாளியின் உழைபிர்க்கேற்ற அந்த உழைப்பின் மதிபிற்கேற்ற கூலியை தரவேண்டியது முதலையின் கடமை அல்லவா ? ஆக தொழிலாளியும் முதலாளியும் ஒருங்கே தனது கடைமையை செய்யும் பொழுது பயன் என்பது தானாக கிடைகின்றது.
தொழிலாளியின் கடமை முடியும் போது முதலாளியின் கடமை துவங்குகிறது.
இதில் ஒருவர் தனது கடமையை தவறினாலும் அது அம்மனிதர்களின் தவறே ஒழிய, பொதுவுடைமை கொள்கையான கடமையை செய் ! பலனை எதிர்பாராதே ! என்ற கோட்பாடின் தவறல்ல........
சரியான பதில் இது தான்!
சரியான பதில் இது தான்!
பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்களிடம் ஆசிரியர், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒப்பிடுங்கள், என்றார்.ஒரு மாணவன், ராமாயணத்தில் நான்கு சகோதரர்கள். மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்கள், என்றான். இன்னொருவன், ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு மனைவி. ஆனால், பாரதத்திலோ ஐந்து பேருக்கும் ஒரு மனைவி, என்றான்.மூன்றாமவன், ராமாயணத்தின் அட்டை கறுப்பு. மகாபாரதத்தின் அட்டை நீலம் என்றான். நான்காமவன், ஸ்ரீராமர் காட்டில் பதினான்கு வருடங்கள் வசித்தார். பாண்டவர்களின் வனவாசம் பதின்மூன்று வருடங்கள், என்றான். ஐந்தாவது மாணவன், ஐயா! பெண்ணாசையால் ராவணன் அழிந்தான். மண்ணாசையால் துரியோதனன் அழிந்தான், என்றான்.அனைவருடைய பதில்களையும் கேட்ட ஆசிரியர், ஐந்தாம் மாணவன் சொன்ன பதிலே பொருத்தமானது. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதையே ராமாயணமும், மகாபாரதமும் வலியுறுத்துகின்றன. ஆசையற்ற மனதிலே தான் ஆனந்தம் உண்டாகும், என்றார்.
Monday, October 13, 2014
ஒற்றுமைக்கு வழிகோலும் கேதார கௌரி விரதம்
ஒற்றுமைக்கு வழிகோலும் கேதார கௌரி விரதம்
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில தீய எண்ணங்கள் என்னும் இருட்டு உள்ளது. தவிர அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றையும் நம்மில் புகுந்து நம்மை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. தேவையற்ற இந்த எண்ணங்களை அகற்றவும், தீய குணத்தை எரிக்கவும் தீபம் பயன்படுகிறது. அறியாமை இருள் நீக்கும் தீபத்தை வரிசையாக வைத்து வ 'தீபம்' என்றல் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கெளரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான் சக்தியை தன்னில் ஒருபாதியாக சிவன் ஏற்றுக்கொண்டார் என்கின்றன புராணங்கள் அந்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். . இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன. கணவன் – மனைவி ஒற்றுமை "கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது. சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்ற விரதமே கேதார கௌரி விரதமாகும். பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். அர்த்தநாரீஸ்வரர் ஆன கதை பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள். எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார். பார்வதியின் சாபம் இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள். தன்கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.ഀ பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகைதான் இந்த கேதார கௌரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும். கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர். அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்முழுவதும் துதிக்க வேண்டும். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்' பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'
வழிபாடு.
வழிபாடு.
ஒரு சமயம் ஞானி ஒருவர் தன்னை மறந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். நல்ல இரவு நேரம் அது. அப்போது தவளை ஒன்று கொர கொர என்று கத்தத் தொடங்கியது. தவளையின் வரட்டு சத்தம் அவருக்கு நாராசமாக இருந்தது.
இது என்ன தலை வேதனை? நிம்மதியாக பிராத்தனை செய்ய முடியவில்லையே? என்று நினைத்தபடி, சன்னல் பக்கம் பார்த்த அவர் "நான் பிராத்தனை செய்கிறேன். யாரும் கத்தாதீர்கள்" என்றார். ஆத்மஞானியின் குரலுக்கு அனைத்து உயிர்களும் கட்டுப்பட்டன. எங்கிருந்து எந்த ஓசையும் எழவில்லை. இலைகள் கூட அசையவில்லை. எங்கும் பேரமைதி நிலவியது.
ஆனால் ஏனோ தெரியவில்லை, அவரால் பிராத்தனையில் ஒன்றவே முடியவில்லை. எதோ ஒரு அமைதியின்மையை அவர் மனம் உணர்ந்தது. எங்கோ ஒரு குறை இருப்பது போல் அவர் மனதுக்குப்பட்டது.
என்ன இது? ஏன் என் மனத்தால் பிராத்தனையில் ஒன்றவே முடியவில்லை. எங்கே தவறு ஏற்பட்டது?
என்று மனம் உருக அவர் வேண்டியபோது அவர் மனத்துள் ஒரு குரல் கேட்டது. "உன் பிராத்தனையைக் கேட்பது போலவே இறைவன் தவளையின் சத்தத்தையும் கேட்க விரும்புகிறார் போலும்" என்று.
ஞானி சன்னல் பக்கம் பார்த்து "பாடு..!" என்றார் மானசீகமாக தவளையை நோக்கி. மறுகணம் கரகரவென்று அந்தத் தவளை காத்த அதை அடுத்து எல்லாத் தவளைகளும் அதனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தன. எந்த ஓசை முன்பு அவருக்கு கர்ண கடூரமாக ஒலித்ததோ அது இப்போது அமைதியான அந்த இரவுக்கு பொலிவு சேர்ப்பதை உணர்ந்தார் அவர்.
இயற்கையோடு ஒன்றுவதே வழிபாடு. அனைத்து உயிர்களும் இறைவன் படைப்புக்களே. நமது குரல் நமக்கு இனிமை என்றால் தவளையின் குரல் அதற்கு சங்கீதம்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி!
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி!
ஒருநாட்டில் வித்தியாசமான வழக்கம் ஒன்று இருந்தது. பரம்பரையாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு மன்னராக முடியாது. குடிமக்களில் யார் வேண்டுமானாலும் மன்னர் ஆகலாம். ஆனால், பதவிக்காலம் ஓராண்டு மட்டும் தான். அவ்வாறு மன்னர் ஆகிறவர்கள் பட்டம் கட்டிக் கொள்வதோடு சரி... அப்புறம் அரச வாழ்வையே வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். பட்டு மெத்தையில் படுத்தாலும் துõக்கம் வராது. அறுசுவை உண@வ என்றாலும் சாப்பிடப் பிடிக்காது. ஆட்சி முடிந்து விடுமே என்ற கவலை வந்து விடும். இப்படியே ஓராண்டு கழிந்ததும், கடைசிநாளில் அரண்மனைக் காவலர்கள் மன்னரை ஒரு படகில் ஏற்றிச் சென்று ஆளே இல்லாத தீவில் விட்டு விடுவார்கள். வனாந்திரமாக இருப்பதால் மலைப்பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் பிடியில் சிக்கி, உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அங்கில்லை. இப்படியே ஆண்டுதோறும் ஒருவர் மன்னராவதும், கடைசி நாளில் கண்ணீருடன் தீவுக்குச் செல்வதும் வழக்கமாகிப் போனது. அந்த ஆண்டு இளைஞர் ஒருவர் நாட்டின் மன்னராக இருந்தார். பதவியேற்ற நாளில் மட்டுமில்லாமல் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக எப்போதும் இருந்தார். மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். எதிரி நாட்டினர் படையெடுத்து வந்தபோது, திறமையுடன் போரிட்டு நாட்டைக் காப்பாற்றினார். முன்பை விட வரியைக் குறைத்து சலுகைகளை வழங்கினார். அவருக்கும் பதவிக் காலம் முடியும் நேரம் வந்தது. அன்றும் வழக்கம் போல அறுசுவை பரிமாறப்பட்டது. அதை ரசித்து ருசித்தார்.
இரவு பட்டு மெத்தையில் நிம்மதியாக துõங்கினார். மறுநாள் காலையில் தீவுக்குப் புறப்படவும் தயாரானார். மன்னரை அழைத்துச் செல்ல படைத்தளபதி காவலர்களுடன் வந்தார். மன்னரை தீவுக்குக் கொண்டு செல்லப் போகிறோமே என்ற கவலை தளபதிக்குக் கூட இருந்தது. ஆனால், மன்னர் சிறிதும் வருந்தவில்லை. படகில் தீவுக்குச் செல்லும்போது, தளபதி, மன்னா! தீவில் நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும். உங்கள் உயிருக்கு அங்கே உத்தரவாதம் கிடையாது. அதை சிறிதும் உணராமல் எப்படி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். விதியை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் மன்னரானதும் செய்த முதல்பணியே ஆளில்லாத தீவை சீரமைத்து, மக்கள் வாழும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும் என்பது தான். என் நம்பிக்கைக்குரிய நபர்களை ரகசியமாகத் தீவுக்கு அனுப்பினேன். அவர்கள் காட்டை அழித்து நாடாக மாற்றினர். எனக்கான அரண்மனையும் கூட இப்போது அங்கு தயாராக இருக்கிறது. அவர்கள் என் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள், என்றார் மன்னர். இதைக் கேட்ட தளபதி ஆச்சர்யம் கொண்டார். அங்கு ஆளில்லாத் தீவு அழகான நாடாக காட்சியளித்தது. மன்னரை பணியாட்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். உணவும் தயாராக இருந்தது. தளபதிக்கும், உடன் வந்தவர்களுக்கும் தீவில் மன்னர் விருந்தளித்தார். வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லை. அதற்கானதீர்வைத் தேடுபவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
நன்றி தினமலர்
எந்த வடிவிலும் வருவார்!
எந்த வடிவிலும் வருவார்!
ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தில் வாழ்ந்த பக்தர் ராமதாசர். அவர் தன் குருவிடம்,குருவே! ராமபிரானின் தரிசனம் பெற தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். நாளை ராமர் உன் வீட்டிற்கு விஜயம் செய்வார். தயாராக இரு என்றார் குரு. ஊருக்குள் இந்த விஷயம் பரவியது. வாசலில் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் ராமதாசர். வீட்டில் பலவித பலகாரங்கள் தயாரானது. எங்கிருந்தோ ஒரு கன்றுக்குட்டி யாரும் அறியாமல் அவர் வீட்டுக்குள் நுழைந்தது. அங்குமிங்கும் ஓடி பாத்திரங்களைத் தள்ளி விட்டது.
பட்சணங்களைத் தின்ன முயன்றது. அதைக் கண்டு வெகுண்ட ராமதாசர் கம்பால் கன்றுக்குட்டியை அடித்தார். வலி தாங்க முடியாமல் கதறியபடி ஓடியது. கடவுளுக்காக காத்திருந்த நேரத்தில், இப்படி கன்றுக்குட்டி வந்து அலங்கோலப்படுத்தி விட்டதே என்று வருத்தப்பட்டார் ராமதாசர். ராமரோ வரவே இல்லை. ஊரார் முன்னிலையில் தன் பக்தி பொய்த்து விட்டதே என்ற வெட்கப்பட்டார் அவர். குருவிடம் சென்று, நீங்கள் சொன்னது போல ராமபிரான் வரவில்லையே! என்று வருந்தினார் அவர்.
குரு அவரிடம், சற்று முன் தான் ராமபிரான் வந்து, கன்றுக்குட்டி வடிவில் உனக்கு காட்சி தந்ததாகவும், நீயோ கம்பால் நையப் புடைத்து அனுப்பியதாகவும் சொன்னார், என்றார். திடுக்கிட்டார் ராமதாசர். குருவே! கன்றுகுட்டி வடிவில் வந்த கடவுளை அறியாமல் மோசம் போனேனே! என்று சொல்லி அழுதார். அப்போது ராமரே அங்கு காட்சி தந்து, எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்ற உண்மையை எடுத்துரைத்து மறைந்தார்.
நன்றி தினமலர்
Wednesday, October 8, 2014
சதாபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும்
சதாபிஷேகம் எப்போது செய்வது?
சதாபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும்
பதினாறு பேறுகளிலே முக்கியமான மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும் முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். முன்னொரு காலத்தில் 40 வருடங்கள் மட்டுமே சராசரி ஆயுளாக இருந்த்து. அது சமயம் நீடித்த ஆயுளுடன் வாழுவதை கொண்டாடும் விதமாக சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன.
இதில் சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60 வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில் தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர். இதனால் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் கால அளவை பொறுத்தவரை இருவேறு கருத்துக்கள் இல்லை.
ஆனால் இன்றும் சதாபிஷேகம் நடத்த வேண்டிய கால அளவில் சிறிது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவசரம் மற்றும் அவசியம் கருதியோ என்னவோ சமீப காலங்களில் சதாபிஷேகம் என்பது 80 வயது முடிவிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் சதாபிஷேகம் என்பது 84 வயது பிறந்த தினத்தின் போது தான் கொண்டாடப்பட்டுவந்தது.
பரமசிவனை வழிபடும் போது, அப்பர் சுவாமிகள் 'பித்தா பிறை சூடி பெருமானே' என்றே அழைக்கிறார். அமாவாசைக்கு மூன்றாவது நாளான 'துவித்யை' திதியன்று தெரியும் பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில் சூடியுள்ளான். இஸ்லாமிய மதத்தவரும் மூன்றாம் பிறை சந்திரனை கண்டபிறகே ரம்லான் நோன்பை முடித்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மூன்றாம் பிறை சந்திரனிலிருந்து வெள்ிப்படும் கதிர்கள் அத்துனை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிற்து. சதாபிஷேகம் என்பது 1008 முறை மூன்றாம் பிறை க்ண்டவர்க்ளை பரம்சிவனகவே பாவித்து கெளரவிப்பதற்க்காக் கொண்டாடப்படுவது. ஆகவே, சதாபிஷேகம் என்பது ஒருவர் பிறந்த நாளிலிருந்து வரும் 1008 'துவித்யை' திதியை கணக்கிட்டு அதன் பின் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட வேண்டும்.
பூமியை சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருவதால் சந்திரனின் சுற்றுப் பா தை ஒரு வட்டவளைய சுருள் (காயில்) போல் இருக்கும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 27.32 நாட்களாகும். இதுவே 27 நட்சந்திரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஆக்வேதான் நாம் திருக்கோயில்களில் ஒரு வருடத்திற்க்கு நம் நட்சத்திரதிற்க்கு அர்ச்சனை செய்யச்சொல்லி கொடுக்கும்போது 13 அர்ச்சனையாக கணக்கிடுகிறார்கள். இந்த நட்சத்திர சுற்று கால அளவை ஆங்கிலத்தில் 'சைடுரியல் பீரியட்' என்றழைக்கின்றனர்.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரனின் திதி சுழற்ச்சியை ஆங்கிலத்தில் 'சைனோடிக் பீரியட்' என்றழைக்கின்றனர். இதற்க்கான கால் அளவு (ஒரு குறிப்பிட்ட திதியிலிருந்து அடுத்த திதி வரை) 29.53 நாட்களாகும். ஒரு வருடம் என்பதை நாம் மிக சரியாக சொல்லவெண்டுமென்றால், அது 365 நாட்கள், 6 ம்ணி, 9 நிமிடம், 9 செகண்டுகளாகும். இதுவே 365.2425 நாட்களாகும்.
இப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:
ஃ ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
ஃ பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
ஃ அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
ஃ அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.
இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்: ராமன் என்பவர் 27.04.1929 ல் பிறந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம் தேய்பிறை திருதியை திதியில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து 14 நாட்கள் சென்ற்பின், அதாவது 11.05.1929 அன்று 'துவித்யை' நாளில் தன் முதல் பிறையின் கதிர்களை அனுபவிக்கிறார். அன்று முதல் ஒவ்வொரு 29.53 நாளிலும் ஒவ்வொரு பிறை கதிர்களில் நீராடி தன் 1008 வது பிறையை 09.10.2010 அன்று தரிசிப்பார். (அதாவது 11.05.1929 லிருந்து 29736.71 நாட்கள் சென்ற பின் தரிசிப்பார். வருடம் 1929 ல் எஞ்சியுள்ள 234 நாட்கள், அதிலிருந்து வருடம் 2010 வரை உள்ள சதாரண மற்றும் லீப் வருட நாட்க்ளை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 09.10.2010 அன்று தனது 1008 வது பிறையை தரிசிப்பார்) இதற்கு அடுத்து வரும் சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் (மார்ச் / எப்ரல் 2011) சதாபிஷேகம் செய்வது ஏற்றது.
இதைக் கொண்டு பார்க்கும் போது 82 வயது பூர்த்தியாகி 83 வது ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும் என்பது உறுதியாகிறது. ஆயினும், குழந்தை பிறந்து முதல் ஒரு வருடம், ஆயுர் ஹோமம் செய்யும் வரை வரும் பிறைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், 84 வது ஜென்ம நட்சத்திரத்தில் சதாபிஷேகம் செய்வது உத்தமம்
பதினாறு பேறுகளிலே முக்கியமான மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும் முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். முன்னொரு காலத்தில் 40 வருடங்கள் மட்டுமே சராசரி ஆயுளாக இருந்த்து. அது சமயம் நீடித்த ஆயுளுடன் வாழுவதை கொண்டாடும் விதமாக சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன.
இதில் சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60 வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில் தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர். இதனால் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் கால அளவை பொறுத்தவரை இருவேறு கருத்துக்கள் இல்லை.
ஆனால் இன்றும் சதாபிஷேகம் நடத்த வேண்டிய கால அளவில் சிறிது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவசரம் மற்றும் அவசியம் கருதியோ என்னவோ சமீப காலங்களில் சதாபிஷேகம் என்பது 80 வயது முடிவிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் சதாபிஷேகம் என்பது 84 வயது பிறந்த தினத்தின் போது தான் கொண்டாடப்பட்டுவந்தது.
பரமசிவனை வழிபடும் போது, அப்பர் சுவாமிகள் 'பித்தா பிறை சூடி பெருமானே' என்றே அழைக்கிறார். அமாவாசைக்கு மூன்றாவது நாளான 'துவித்யை' திதியன்று தெரியும் பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில் சூடியுள்ளான். இஸ்லாமிய மதத்தவரும் மூன்றாம் பிறை சந்திரனை கண்டபிறகே ரம்லான் நோன்பை முடித்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மூன்றாம் பிறை சந்திரனிலிருந்து வெள்ிப்படும் கதிர்கள் அத்துனை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிற்து. சதாபிஷேகம் என்பது 1008 முறை மூன்றாம் பிறை க்ண்டவர்க்ளை பரம்சிவனகவே பாவித்து கெளரவிப்பதற்க்காக் கொண்டாடப்படுவது. ஆகவே, சதாபிஷேகம் என்பது ஒருவர் பிறந்த நாளிலிருந்து வரும் 1008 'துவித்யை' திதியை கணக்கிட்டு அதன் பின் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட வேண்டும்.
பூமியை சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருவதால் சந்திரனின் சுற்றுப் பா தை ஒரு வட்டவளைய சுருள் (காயில்) போல் இருக்கும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 27.32 நாட்களாகும். இதுவே 27 நட்சந்திரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஆக்வேதான் நாம் திருக்கோயில்களில் ஒரு வருடத்திற்க்கு நம் நட்சத்திரதிற்க்கு அர்ச்சனை செய்யச்சொல்லி கொடுக்கும்போது 13 அர்ச்சனையாக கணக்கிடுகிறார்கள். இந்த நட்சத்திர சுற்று கால அளவை ஆங்கிலத்தில் 'சைடுரியல் பீரியட்' என்றழைக்கின்றனர்.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரனின் திதி சுழற்ச்சியை ஆங்கிலத்தில் 'சைனோடிக் பீரியட்' என்றழைக்கின்றனர். இதற்க்கான கால் அளவு (ஒரு குறிப்பிட்ட திதியிலிருந்து அடுத்த திதி வரை) 29.53 நாட்களாகும். ஒரு வருடம் என்பதை நாம் மிக சரியாக சொல்லவெண்டுமென்றால், அது 365 நாட்கள், 6 ம்ணி, 9 நிமிடம், 9 செகண்டுகளாகும். இதுவே 365.2425 நாட்களாகும்.
இப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:
ஃ ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
ஃ பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
ஃ அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
ஃ அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.
இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்: ராமன் என்பவர் 27.04.1929 ல் பிறந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம் தேய்பிறை திருதியை திதியில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து 14 நாட்கள் சென்ற்பின், அதாவது 11.05.1929 அன்று 'துவித்யை' நாளில் தன் முதல் பிறையின் கதிர்களை அனுபவிக்கிறார். அன்று முதல் ஒவ்வொரு 29.53 நாளிலும் ஒவ்வொரு பிறை கதிர்களில் நீராடி தன் 1008 வது பிறையை 09.10.2010 அன்று தரிசிப்பார். (அதாவது 11.05.1929 லிருந்து 29736.71 நாட்கள் சென்ற பின் தரிசிப்பார். வருடம் 1929 ல் எஞ்சியுள்ள 234 நாட்கள், அதிலிருந்து வருடம் 2010 வரை உள்ள சதாரண மற்றும் லீப் வருட நாட்க்ளை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 09.10.2010 அன்று தனது 1008 வது பிறையை தரிசிப்பார்) இதற்கு அடுத்து வரும் சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் (மார்ச் / எப்ரல் 2011) சதாபிஷேகம் செய்வது ஏற்றது.
இதைக் கொண்டு பார்க்கும் போது 82 வயது பூர்த்தியாகி 83 வது ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும் என்பது உறுதியாகிறது. ஆயினும், குழந்தை பிறந்து முதல் ஒரு வருடம், ஆயுர் ஹோமம் செய்யும் வரை வரும் பிறைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், 84 வது ஜென்ம நட்சத்திரத்தில் சதாபிஷேகம் செய்வது உத்தமம்
ஆயிரம் பிறை கண்ட வாழ்வு
ஆயிரம் பிறை கண்ட வாழ்வு
ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள் அவர் கடந்தாக வேண்டும். அவர் 80&வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரை ஆயிரம் பிறை கண்டவர் என்று வணங்குகிறோம்.
கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக் கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவோ, குறைவாகவோ வரலாம். அந்தக் கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.
கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக் கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவோ, குறைவாகவோ வரலாம். அந்தக் கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.
80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூரண வாழ்வு எனப் பெருமிதமாக நாம் அப்பெரியவரை எண்ணுகிறோம்.
80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அந்த 80 வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடைய செயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளாகவோ அல்லது வெற்றிகளாகவோ இருக்கும்.
30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோ செலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான் தெரியும்.
அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர் சிந்தனையிலிருந்து அது உடனே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.
நாம் பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர, அவருடைய சரீரத்தை அல்ல.
பொதுவாக ஒருவருடைய வயது பிரசவத்திற்குப் பிறகுதான் கணக்கிடப்படுகிறது. ஆணோ, பெண்ணோ அது கருவிலிருக்கும்போதே கணக்கிடப்பட வேண்டும்.
அப்படியென்றால், பிறந்த குழந்தையினுடைய வயது அன்றைய ஒரு நாள் அல்ல. பத்து மாதம் ஒரு நாள் என்பதுதான் சரியானது. (300 + 1 நாள் = 301 நாட்கள்).
அந்த ஒரு & நாள் குழந்தையின் வயது 301 நாட்களாகும். பிறந்த குழந்தை ஆணாக இருந்தால், நான்கு படிகளை அது கடந்தாக வேண்டும். பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற இந்த நான்கும் ஆணுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது.
60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத சாந்தி என்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என்கிறார்கள்.
சதாபிஷேகம் காணும் முதிய தம்பதிகள் அதிகமாக இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அது அவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச் சனகாதிகள் போயிருந்தார்களாம். அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர் வருவார்.
அவ்வாறு வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான் அவர்களின் ஆசையாகும். அவர்கள் எதிர்பார்த்தபடி வந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார். ராஜசூய யாகத்தில் கலந்து சிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.
வாசுதேவரை வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன? நாங்களெல்லாம் உங்களை வணங்கக் காத்திருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது. அத்தகைய நீங்களோ, வேறு யாரையோ நமஸ்கரிக்கிறீர்களே என்று பரமாத்மாவாகிய கண்ணபிரானிடமே கேட்டனர்.
பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதற்கான சமஸ்கிருத சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன். அவர்கள் வணங்கத் தக்கவர்கள். என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும் எப்பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.
அவர்கள் யார் என்று கேட்க, பகவான் கூறினார் தினசரி அன்னம் பாலிப்பவன், வாலிப வயதிலேயே யாகம் செய்பவன், உலகத்தை ஒரு நாள், இரு நாள் அல்ல, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மேற்கொள்பவன், கற்புக்கரசியாக வாழ்கிற பெண்கள், பிரமமத்தை அறிந்த ஞானிகள். இந்த ஐவர்களை மட்டுமல்ல, 6&வதாகவும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆயிரம்பிறை கண்ட பெரியவர்.
கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம் செய்யப்படும் சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப் பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளே புரிந்துகொள்ளும்படி கூறினார்.
இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர யாகம் செய்தும் கொண்டாடலாம் என்கிறது நமது புராணங்கள்.
அதிருத்ர யாகம் என்பது அண்மையில் கேரளாவில் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் வேத சுலோகங்களை இடைவிடாது ஓதி நிறைவு செய்கிற போது, அவை கார்மேகங்களையே ஒன்றுதிரட்டி வெள்ளம்போல் மழையைப் பெய்யச் செய்யும் சக்தியுடையது.
அண்மையில் இந்த யாகத்தை கேரளாவில் செய்தபோது, பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நூற்றுக்கணக்கில் அங்கே குவிந்திருந்தனர்.
ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம். அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனது வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால், இந்த யாகம் அதைப் போக்கும் சக்தியுடையதாம்.
இதைப் போன்றதுதான் மகாருத்ர யாகம். ருத்ரகாதசினீ யாகத்தை பதினோரு கலசங்கள் வைத்து ஜபம் செய்வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம் செய்யப்படுவார். இதை 11 முறை செய்வதுதான் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத்ர யாகமாகும்.
இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறுவான் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற்குச் சமமான ஜபம் வேதஸ்மிருதி எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த யாகம் செய்த பிறகு வைக்கப்படும் நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி என்பதாகும்.
சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் முதல் பார்வதி – பரமேஸ்வர தம்பதியாக மாறிவிடுகிறார்கள்.
இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால், அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு அப்படியே பலிக்கும். நன்மை உண்டாகும்.
இந்த சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட தெய்வத் திருவுருவங்களாகப் பேறு பெற்றவர்களை நாம் வணங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், ஆஸ்தி முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வாழும் பேறு பெறுவோம் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
துளசியில் 9 வகைகள்.
துளசியில் 9 வகைகள்.
1. கரியமால் துளசி
2. கருந்துளசி
3. கற்பூரத் துளசி
4. செந்துளசி
5. காட்டுத்துளசி
6. சிவ துளசி
7. நீலத்துளசி
8. பெருந்துளசி
9. நாய்த்துளசி
1. கரியமால் துளசி
2. கருந்துளசி
3. கற்பூரத் துளசி
4. செந்துளசி
5. காட்டுத்துளசி
6. சிவ துளசி
7. நீலத்துளசி
8. பெருந்துளசி
9. நாய்த்துளசி
கிரகணத்தின் போது என்னென்ன செய்ய கூடாது?
கிரகணத்தின் போது என்னென்ன செய்ய கூடாது? கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது. கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகண நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?
செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம். . கிரகண காலத்தில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும். பட்டம் கட்டிக் கொள்வதென்றால், பனைஓலையில், மஞ்சள் நூலை கட்டி, கிரகணத்துக்கான ஸ்துதியை எழுதி கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கிரகணம் முடிந்ததும், ஸ்நானம் செய்ததும் பட்டத்தை நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும். கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியவைகள் என்ன? கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். (கிரகண நேரத்தில் 3 முறை ஸ்நானம் செய்வது நல்லது). ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இன்று சிராத்தம் செய்ய இருப்பவர்கள், நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு செய்து கொள்ளலாம். கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள வேண்டும். . கவனிக்க வேண்டியவைகள் சந்திர கிரகணம், ரேவதி நட்சத்திரத்தில் நடப்பதால் ரேவதி, உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, அஸ்வினி, பூசம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. (சாந்தி பரிகாரம்- கேதுவுக்கு ஏற்ற 'கொள்' தானியத்தை ஸ்நானம் செய்து விட்டு ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்). சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும். |
குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்
குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்
பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன.
இதனால்தான் முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைத் தரக் கூடாது என்று நம் முன்னோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். தற்காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் அத்தகையோர் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடும் முறை வெகுவாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டும் உணவு நிச்சயமாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய கடமை.
கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே, முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான் குழந்தைகளை தேவையில்லாமல் சபிப்பதோ, அவர்களை அடிப்பதோ, கடுஞ் சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண் மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம். இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும், பயன்படுத்தி பலன் பெறலாம்.
ஆரத்தித் தட்டில் காசு போடலாமா?
ஆரத்தித் தட்டில் காசு போடலாமா?
|
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் பதிலளிக்கிறார்...
நாம் பல்வேறு தருணங்களில் ஆரத்தி எடுக்கிறோம். ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? மங்கல காரியங்களில் ஆரத்தி சுற்றினால், தட்டில் காசு போடுவது ஏன்?
- 'ஆரார்த்திகம்' என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும்.
|
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி எடுப்பர். அலங் காரத்துடன் அழகு ததும்பும் தம்பதி யிடம் திருஷ்டி தோஷம் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக, ஆரத்தி எடுப்பது உண்டு. நிகழ்வின் முடிவைக் குறிக்கும் ஆரத்தி. இதேபோல், என்றும் மங்கலம் பொங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுள் துதியுடன் மங்கல ஆரத்தியும் எடுப்பது உண்டு. கெடுதல் மறைந்து, எங்கும் எப்போதும் மங்கலம் பொங்க வேண்டும் என்பதற்காகவும் ஆரத்தி எடுப்பர். செயலைச் செவ்வனே முடித்தவனுக்கு, மங்கல ஆரத்தி மனநிறைவை உண்டுபண்ணும்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; எவரையும் துன்பம் தொடக்கூடாது என்ற தர்ம சாஸ்திரத்தின் குறிக்கோளை ஆரத்தி நடைமுறைப்படுத்துகிறது (ஸர்வே பத்ராணிபச்யந்துமா கசசித் துக்கபாக் பவேத்).
ஆரத்தி எடுத்ததும் தட்டில் காசுபோட வேண்டும்; அது தவறாகாது. காலக்ஷேபத்தின்போது தட்டில் காணிக்கை சமர்ப்பிப்போம். கற்பூர ஆரத்தி எடுத்த அர்ச்சகரின் தட்டில் காசு போடுகிறோம். சொற்பொழிவு ஆற்றும் பெரியோரின் திருப்திக்காகத் தட்டில் காசு போடுகிறோம். கோயில் யானை துதிக்கையைக் காட்டினால், அதிலும் காசு வைக்கிறோம். 'ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி' என்று இறையுருவத்தின் நெற்றியிலும் காசு வைக்கிறோம். கடவுளை வழிபட்டுத் திரும்பும் வழியில் உள்ள ஏழைகளுக்கும் காசு வழங்குகிறோம். இப்படி, காசு போடாத எந்தச் செயல் மிஞ்சியிருக்கிறது... யோசியுங்கள். எவரையும் நம்மால் முழுமையாகத் திருப்திப் படுத்த முடியாது. நம்மிடத்தில் இருப்பது காசுதான். அதை இயன்ற அளவு அளிக்கும்போது, 'நாமும் உதவினோம்' என்கிற மனநிறைவு ஏற்படும் அல்லவா?! அதைப் பெறுபவரின் மனமும் மகிழுமே! இந்த நல்ல நடைமுறையை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும். மனம், வாக்கு, செயல், பணம் இந்த நான்கையும் பிறருக்கு உதவப் பயன்படுத்தலாம். ஆகவே ஆரத்தித் தட்டில் தாராளமாகக் காசு போடுங்கள்.
சந்திர கிரகணம்... என்ன விசேஷம்?
சந்திர கிரகணத்தைப் புண்ணிய கால மாகக் கொண்டாடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். முறையாகத் தனது கிரணத்தை (கதிர்களை) வாரி இறைக்கும் சந்திரனுக்கு, மறைவு ஏற்படுகிறது. அவனது கட மைக்கு இடையூறு. கண்ணில் திமிரம் (சதைப் பட லம்) மறைப்பதால், பார்வை தடைப்படும். வந்து கொண்டிருந்த கிரணம் திடீரென்று நின்று விடுவதால், அங்கு அசாதாரணமான சூழல் உருவாகும். அதன் விளைவு விபரீதமாகவும் மாறலாம். நல்ல கோடையில் திடீர் மழையும், நல்ல மழைக் காலத்தில் திடீர் வெப்பமும், எதிர் விளைவுக்குக் காரணமாகலாம். அந்த வேளையில், மற்ற செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு மனத்தை ஆன்மிக வழியில் திருப்பி விட்டால், எந்த இடையூறும் நம்மை பாதிக்காது.
‘மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு’ என்று வேதம் கூறும். ‘விராட புருஷனின் மனதிலிருந்து சந்திரன் தோன்றினான்’ என்ற தகவல் வேதத்தில் இருக்கிறது (சந்திரமா மனஸோ ஜாத:). ஜோதிட நூல்க ளும், மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.
கிரகணத்தை ‘அலப்ய யோகம்’ _ அதாவது நல்ல காரியங்களைச் செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம் என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடும். ‘எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. தீட்டுப் பட்டிருக்கிறது. என்னால் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட முடியாது!’ என்று எண்ண வேண் டாம். அவர்களும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று விதிவிலக்கு அளிக்கிறது தர்ம சாஸ்திரம். கிரகண காலம் போனால் வராது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தக் காலத்தில் முன்னோரது தர்ப்பணத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது தர்ம சாஸ்திரம். குளிக்கா விட்டா லும் காலைக் கடனை காலத்தில் செய்ய நிர்ப்பந்திப்பது போல் இதையும் விடாமல் காலத்தி லேயே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. சாதாரண வேளையில் செய்யும் கொடைகள் குறிப்பிட்ட பலனை மட்டும் அளிக்கும். ஆனால், கிரகண காலத்தில் செய்யும் கொடை ஆயி ரம் மடங்கு பலன் அளிக்கும். தான- தர்மங்களுக்கு உகந்த வேளையாக அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம சாஸ்திரம். சந்திரன் பூமியில் நுழைகிறான் (பூச்சாயாம் ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:) என்று ஜோதிடம் கூறும். பூமி, சந்திரனை மறைத்து விடுகிறது என்று பொருள். ராகு, சந்திரனை மறைக்கிறான் அல்லது விழுங்குகிறான் என்று புராணம் கூறும். எது எப்படி இருந்தாலும் மறைவது கண்கூடு. மறைவு அவர்களுக்கும், நமக்கும் இடையூறு. அது விலக நமது செயல்பாடுகள் திருப்பி விடப்பட வேண்டும்.
உடல் தூய்மைக்குக் கிரகணம் துவங்கும் வேளையில் குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு ஆன்மிக விஷயங் களில் மனதை நுழைக்க வேண்டும். கிரகணம் முடிவுற்ற பிற கும் சிறப்பு நீராடல் தேவை. அப்போதுதான் நமது கடமை முழுமை பெறுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரை கிர கண காலத்தைக் கொண்டாடலாம். உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் நீராடுவது சிறப் பானது. குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள், கர்ப் பிணிகள் - ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
மப்பும் மந்தாரமும் இருக்கும் சூழல், நமது வயிற்றில் இருக்கும் உணவு செரிப்பதைத் தாமதப்படுத்தும். அந்த வேளையில் தேவையான ஆதவனின் கிரணங்கள் பரவாத தால், வயிற்றில் இருக்கும் பித்த நீர் சுணக்கமுற்று, செயல்படுவது தடைப்படும் என்று ஆயுர்வேதம் கூறும். நீருண்ட மேகங்கள் அண்டை வெளியில் அப்பியிருக்கும் வேளையில், பேதிக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆயுர்வேதம். ‘கிரகணத்தின் தாக்கம், இயல்பான உடல் செயல்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும்’ என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. எனவே, அந்த வேளையில் உண வைத் தவிர்க்கும்படி வற்புறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.
கிரகண வேளையில் நாம் ஈடுபடும் ஆன்மிக அலுவல்களுக்கு குந்தகம் விளையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கிரகணம் ஆரம்பமாவதற்கு சில மணிகள் முன்பே உணவை முடித்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். உணவு நிரம்பியிருந்தால் சிறுநீர் கழித்தல், சோம்பல், தூக்கம், சுணக்கம் போன்றவை நம்மை அலைக்கழிக்கும். அவற் றைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணுகிறது தர்ம சாஸ்திரம்.
தற்கால மருத்துவர்கள், நம் உடல் நலத்தைப் பேணிக் காக்க தியானம் செய்யவும், யோகக் கலையில் ஈடுபடவும், சூரிய நமஸ்காரம் செய்ய வும், உணவுக் கட்டுப்பாடு வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். அதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நடைபயணமாக ஆலயம் செல்ல வேண்டும், ஆலயத்தை வலம் வர வேண்டும் என்ற ஆன்மிக அறிவுரையை அலட்சியம் செய்தவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி தற்போது இரண்டு கி.மீ. தூரம் காலையிலும், மாலையிலும் நடை பயில்கிறார்கள்.
நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். ஆதவ னிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்க ளால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி- கொடிகளில் தனது கிரணங்க ளால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?
ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!
|
செய்வினை தோஷம் போக வழிபாடுகள்…
செய்வினை தோஷம் போக வழிபாடுகள்…
செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.
அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.
Wednesday, October 1, 2014
சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.
சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.
Subscribe to:
Posts (Atom)