Wednesday, October 8, 2014

சதாபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும்

சதாபிஷேகம் எப்போது செய்வது?
சதாபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும்

பதினாறு பேறுகளிலே முக்கியமான மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும் முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். முன்னொரு காலத்தில் 40 வருடங்கள் மட்டுமே சராசரி ஆயுளாக இருந்த்து. அது சமயம் நீடித்த ஆயுளுடன் வாழுவதை கொண்டாடும் விதமாக சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன.

இதில் சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60 வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில் தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர். இதனால் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் கால அளவை பொறுத்தவரை இருவேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால் இன்றும் சதாபிஷேகம் நடத்த வேண்டிய கால அளவில் சிறிது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவசரம் மற்றும் அவசியம் கருதியோ என்னவோ சமீப காலங்களில் சதாபிஷேகம் என்பது 80 வயது முடிவிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் சதாபிஷேகம் என்பது 84 வயது பிறந்த தினத்தின் போது தான் கொண்டாடப்பட்டுவந்தது.

பரமசிவனை வழிபடும் போது, அப்பர் சுவாமிகள் 'பித்தா பிறை சூடி பெருமானே' என்றே அழைக்கிறார். அமாவாசைக்கு மூன்றாவது நாளான 'துவித்யை' திதியன்று தெரியும் பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில் சூடியுள்ளான். இஸ்லாமிய மதத்தவரும் மூன்றாம் பிறை சந்திரனை கண்டபிறகே ரம்லான் நோன்பை முடித்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மூன்றாம் பிறை சந்திரனிலிருந்து வெள்ிப்படும் கதிர்கள் அத்துனை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிற்து. சதாபிஷேகம் என்பது 1008 முறை மூன்றாம் பிறை க்ண்டவர்க்ளை பரம்சிவனகவே பாவித்து கெளரவிப்பதற்க்காக் கொண்டாடப்படுவது. ஆகவே, சதாபிஷேகம் என்பது ஒருவர் பிறந்த நாளிலிருந்து வரும் 1008 'துவித்யை' திதியை கணக்கிட்டு அதன் பின் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட வேண்டும்.

பூமியை சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருவதால் சந்திரனின் சுற்றுப் பா தை ஒரு வட்டவளைய சுருள் (காயில்) போல் இருக்கும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 27.32 நாட்களாகும். இதுவே 27 நட்சந்திரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஆக்வேதான் நாம் திருக்கோயில்களில் ஒரு வருடத்திற்க்கு நம் நட்சத்திரதிற்க்கு அர்ச்சனை செய்யச்சொல்லி கொடுக்கும்போது 13 அர்ச்சனையாக கணக்கிடுகிறார்கள். இந்த நட்சத்திர சுற்று கால அளவை ஆங்கிலத்தில் 'சைடுரியல் பீரியட்' என்றழைக்கின்றனர்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரனின் திதி சுழற்ச்சியை ஆங்கிலத்தில் 'சைனோடிக் பீரியட்' என்றழைக்கின்றனர். இதற்க்கான கால் அளவு (ஒரு குறிப்பிட்ட திதியிலிருந்து அடுத்த திதி வரை) 29.53 நாட்களாகும். ஒரு வருடம் என்பதை நாம் மிக சரியாக சொல்லவெண்டுமென்றால், அது 365 நாட்கள், 6 ம்ணி, 9 நிமிடம், 9 செகண்டுகளாகும். இதுவே 365.2425 நாட்களாகும்.

இப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:

ஃ ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
ஃ பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
ஃ அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
ஃ அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.

இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்: ராமன் என்பவர் 27.04.1929 ல் பிறந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம் தேய்பிறை திருதியை திதியில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து 14 நாட்கள் சென்ற்பின், அதாவது 11.05.1929 அன்று 'துவித்யை' நாளில் தன் முதல் பிறையின் கதிர்களை அனுபவிக்கிறார். அன்று முதல் ஒவ்வொரு 29.53 நாளிலும் ஒவ்வொரு பிறை கதிர்களில் நீராடி தன் 1008 வது பிறையை 09.10.2010 அன்று தரிசிப்பார். (அதாவது 11.05.1929 லிருந்து 29736.71 நாட்கள் சென்ற பின் தரிசிப்பார். வருடம் 1929 ல் எஞ்சியுள்ள 234 நாட்கள், அதிலிருந்து வருடம் 2010 வரை உள்ள சதாரண மற்றும் லீப் வருட நாட்க்ளை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 09.10.2010 அன்று தனது 1008 வது பிறையை தரிசிப்பார்) இதற்கு அடுத்து வரும் சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் (மார்ச் / எப்ரல் 2011) சதாபிஷேகம் செய்வது ஏற்றது.

இதைக் கொண்டு பார்க்கும் போது 82 வயது பூர்த்தியாகி 83 வது ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும் என்பது உறுதியாகிறது. ஆயினும், குழந்தை பிறந்து முதல் ஒரு வருடம், ஆயுர் ஹோமம் செய்யும் வரை வரும் பிறைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், 84 வது ஜென்ம நட்சத்திரத்தில் சதாபிஷேகம் செய்வது உத்தமம்

No comments:

Post a Comment