சில நாட்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்களுக்கு ஈஷா யோக மையத்தில் காலபைரவ சாந்தி செய்தோம். இப்போது அவர்கள் ஏற்கனவே வேறு எங்காவது மீண்டும் பிறந்திருந்தால் இப்போது சாந்தி செய்ததில் தவறு ஏதுமில்லையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். சத்குரு: காலபைரவரின் கணக்கு நேரம் என்பது ஒரு உயிர் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது வெவ்வேறு விதமான அனுபவமாக அமைகிறது. ஒரு நிலையில் ஒரு நிமிடம் என்பது 100 ஆண்டுகளாக இருக்கிறது. இன்னொரு நிலையில் 100 ஆண்டுகள் என்பது 1 நிமிடமாக இருக்கிறது. ஒரு முறை ஒரு புத்திசாலி பகீரதப் பிரயத்தனம் செய்து காலபைரவரை சந்தித்தார். அப்போது கால பைரவரிடம், “எங்களுக்கு 100 கோடி ரூபாயாக இருப்பது உங்களுக்கு ஒரு பைசா மாதிரி, எங்களுக்கு 1 கோடி வருடமாக இருப்பது உங்களுக்கு ஒரு வினாடி மாதிரி என்றெல்லாம் சொல்கிறார்களே?” என்று கேட்டார்.. அதற்கு காலபைரவர் சொன்னார், “ஆமாம், உனக்கு எது 100 கோடி ரூபாயாக இருக்கிறதோ, அது எனக்கு 1 பைசா மாதிரிதான்”. உடனே அந்த புத்திசாலி, “ஐயா, அப்படின்னா, எனக்கு ஒரு பைசா கொடுங்களேன்!”. உடனே அதற்கு காலபைரவர் பதில் சொன்னார், “சரி, ஒரு வினாடி காத்திரு!” (அனைவரும் சிரிக்கிறார்கள்) காலமும் நேரமும்… நேரம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி கிடையாது. உயிர் உடலுடன் ஒட்டியிருக்கும்போது நேரத்தின் அனுபவம் ஒரு மாதிரி இருக்கின்றது. உடலுடன் இல்லாதபோது நேரத்தின் அனுபவம் இன்னொரு மாதிரி இருக்கின்றது. இப்போது இந்த கூட்டத்தில் நெருக்கடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். கால்கள் மரத்துப் போய் விட்டது. உடம்பு மிகவும் பாதிப்பில் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு நிமிடம் போவதும் உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் உடலே இல்லாமல் போய்விட்டது என்றால் அப்போது அந்த உயிருக்கு நேரம் இப்போது தெரிவது போல தெரியாது. நமக்கு 1 வருடமாக இருக்கலாம். ஆனால் அந்த உயிருடைய அனுபவத்தில் அது ஒரு வினாடி மாதிரி இருக்கிறது. ஏனென்றால் அந்த உயிருக்கு இப்போது உடல் இல்லை. உடல் இருப்பதால்தான் நமக்கு வலியும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடம் போவதும் நன்றாகத் தெரிகிறது. நேரமாகிக் கொண்டிருப்பதை உங்கள் கால் எடுத்துச் சொல்கிறது. முதுகு சொல்கிறது. உங்கள் வயிறும் சொல்கிறது. ஆனால் நமக்கு நேரம் புரிந்த மாதிரி உடல் அற்றவர்க்கு அது புரியவில்லை. அதனால் உடல் இழந்தவுடன் அந்த உயிருக்கு விரைவில் இன்னொரு கருவறைக்குள் நுழைய முடியவில்லை. ஏதோ சில உயிர்கள் மட்டும்தான், 40 நாளிலேயே இன்னொரு உடலைப் பெற்று விடுவார்கள். ஆனால் அது மிகவும் குறைவு. காலபைரவ சாந்தி யாருக்கு செய்யலாம்? எனவே மிகப் பெரும்பாலான உயிர்கள் இன்னொரு உடல் பெற மிகுந்த காலம் பிடிக்கும். அதனால் அந்த உயிர்களுக்கு நீங்கள் சாந்தி செய்வதே மேல். இப்போது காலபைரவ சாந்தியை (லிங்கபைரவியில், இறந்தவர்களுக்காக செய்யப்படும் சடங்கின் பெயர் காலபைரவ சாந்தி) நீங்கள் உயிரோடு பார்த்த மனிதர்க்கு மட்டும் செய்தால் போதும். நீங்கள் பார்த்திராத உங்கள் முன்னோர்களுக்கு செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு வேறு மாதிரி செய்ய வேண்டும். ஆனால் நாம் இன்னமும் அதை இங்கு ஆரம்பிக்கவில்லை. நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்தவர்களுக்கு மட்டும் போதும் என்று ஏன் சொல்கிறோம் என்றால் பொதுவாகவே அந்த உயிர்கள் இங்கேதான் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் இன்னொரு உடல் தேடியிருக்க மாட்டார்கள். அவர்களில் 99 சதவிகிதம் மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பிறப்பது மிக மிக அரிது. அந்தக் கணக்கில்தான் நாம் காலபைரவ சாந்தி செய்து வருகிறோம். நீங்கள் உயிர் என்று அழைப்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி. அந்த சக்தி பல வடிவங்களை எடுக்க முடியும். ஒரு உயிர் நன்றாக வாழ்ந்திருந்தால் அந்த சக்தி மிகவும் மென்மையான வடிவமாக இருக்கும். அந்த உயிர் நன்றாக வாழ்ந்திருக்கவில்லை என்றால் அந்த சக்தி கொந்தளிப்பு நிறைந்ததாக, அமைதியற்றதாக இருக்கும். எனவே அந்த உயிர் உடலற்று இருந்தாலும் சரி அல்லது இப்போது உடலுடன் இருந்தாலும் சரி, அந்த உயிருக்கு அமைதியைத் தர காலபைரவ சாந்தி செய்யலாம். அநேகமாக அந்த உயிர் அதற்குள் உடலைப் பெற்றிருக்காது. ஒருவேளை உடல் பெற்றிருந்தாலும் சாந்தி நல்ல பயனையே தரும். உடலற்ற உயிருக்கு பயனளிப்பது போல் இருக்காது என்றாலும் பயன் தரும்.
Tuesday, October 6, 2015
நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு:-

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து
பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த
பலன் கிடைக்கும்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா
சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி
நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும்
பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு
வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும்
என்கிறார்கள்.
14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில்
வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான
பூஜையாகும்.
16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள்
கிடைக்கும்.
18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே
தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட
வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ,
எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,
ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில்
தானமாக அளிப்பதே சிறப்பானது.
23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே
மிகமிக முக்கியம்.
24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.
25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை
முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல
திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்
கிடைக்கும்.
37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை
தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள்
நமக்கு எளிதாக கிடைக்கும்.
39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும்
தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9
சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம
என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய்
அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,
எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம்
செய்ய வேண்டும்.
46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி
பாகவதம் சொல்கிறது.
47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர்
நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை,
கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச்
செய்யலாம்.
தியானம் செய்வதால் உலகில் போர் எழாமல் காக்க முடியுமா!,

அது எப்படி? ஆறு தீய குணங்கள் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற மாபெரும் போர் நடந்தே இருக்காது.
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை,
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை,
மகாபாரத கதையில் இருந்து நீக்கிப்பாறுங்கள், போர் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. ஒரு மனிதன் தவறு செய்கிறான் என்றால், அதற்க்கு தூண்டுதலாக இந்த ஆறு குணத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இந்த தீய குணம்தான் காரணமாக இருக்கும். இந்த ஆராய்ச்சியை சாதாரண அறிவு உடையவர்கள் கூட செய்யலாம். உங்களை சுற்றயுள்ள ஏதோ ஒரு சமுதாய சிக்கலையோ அல்லது குடும்ப சிக்கலையோ எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியை நீங்களே நடத்தி பார்க்கலாம். அல்லது மகாபாரத கதையிலயே இந்த ஆராய்ச்சியை செய்து பார்க்கலாம்.
இந்த ஆறு தீய குணங்களும் மனிதனுக்கு எந்த மன நிலையில் எழுகிறது என்று சிந்தித்தோமானால் அது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் (at high mind frequency) தான் உருவாகிறது என்பது தெளிவாகும். மனம் அமைதி நிலையில் இருக்கும் பொழுது இந்த தீய குணங்கள் எழ வாய்ப்பே இல்லை. ஒரு மனிதன் ஏன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகிறான்? பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவும், ஒரு சில நேரங்களில் தேவை மற்றும் சூழ்நிலையின் காரணமாகவும் அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளபடுகிறான். ஏற்கனவே பலமுறை உணர்ச்சிவயப்பட்டு, நாம் அந்த நேரத்தில் என்னென்ன நினைத்தோமோ, எந்த எந்த செயல் செய்தோமோ, அந்த செயலினால் என்ன என்ன விளைந்ததோ, அனைத்தும் நம்மில் பதிவாகி விடுகிறது, மீண்டும் அதே மன அலைச்சுழல் (Mind frequency) வரும் பொழுது, முன்பு என்ன என்ன அந்த அலைசுழலில் பதிந்ததோ, அனைத்து எண்ணங்களும், செயல்களும் அவன் மூலம் வெளியாகும்.
இதற்கு உதாரணம், நாம் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் கூட, சில காரியங்களை செய்து துன்பப்படுவோம். இதுதான் பழக்கம். மனிதன் எப்பொழுதும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் நடுவில் போராடிக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலும் பழக்கமே வெற்றி அடைகிறது. ஏனென்றால் பழக்கபதிவு விளக்கபதிவை விட வலிமையாக இருப்பதே இதற்க்கு காரணம். இது போன்று பழக்கத்தின் வழியே மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க மனதிற்கு ஒரு விழுப்பு நிலை வேண்டும். மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும், அந்த அமைதி நிலையில் நிலைக்க வேண்டும். இந்த தகமை அனைத்தும் ஒருவர் தியாணம் செய்துவர படிப்படியாக கிடைக்கும். மனதின் அலைச்சுழல் அதிகமானால் தானே, அந்த அலைச்சுழலில் பதிந்துள்ள தீய குணங்கள் வெளிவரும். ஒருவர் தியாணம் பழக பழக, அவருக்கு மனதை எந்த சூழ்நிலையிலும் அமைதி நிலையில் வைத்திருக்கும் தகமை இயல்பாக வந்துவிடும். இது போன்ற மாற்றம் மனித மனங்களில் உருவாகுமானால், ஆறு தீய குணங்களுக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஆறு தீய குணங்கள் இல்லாமல் போனால், போர் மட்டும் அல்ல இந்த உலகத்தில் நாம் காணும் எந்த வித குற்றமும் நடக்க முடியாது.
இதுவே மனித சமுதாயத்தில் நிலையான அமைதியை பெற்றுத்தரும். அவ்வளவு மதிப்புடையது தியானம்.
Monday, October 5, 2015
சஞ்சீவி மந்திரம்
அந்தக் காலம், அமிர்தத்திற்காகப் பாற்கடல் கடையப்படாத காலம். அமிர்தம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலம். அப்போதெல்லாம் தேவர்களுக்கும் மரணம் சம்பவித்தது. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அடிக்கடிப் போர் நடைபெற்றது. தேவர்கள் அசுரர்களால் கொல்லப்பட்டார்கள். தேவர்களின் எண்ணிக்கை
கிடுகிடுவெனக் குறைந்தது. தேவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அசுரர்களின் எண்ணிக்கையோ குறையவே இல்லை. அதற்கு ஒரு காரணமிருந்தது. தேவர்களும் போரில் அசுரர்கள் பலரைக் கொன்றார்கள் என்பது உண்மைதான். என்றாலும் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர்.
ஒவ்வொருமுறையும் போர் முடிந்த பிறகும் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் போரில் இறந்த அத்தனை அசுரர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து வந்தார் அவர். தேவர்களின் குரு பிரகஸ்பதிக்கு சஞ்சீவி மந்திரம் தெரியாது. அந்த மந்திரம் தெரிந்த ஒரே நபர் அசுரகுரு சுக்கிராச்சாரியார் மட்டுமே. இனி என்ன செய்வது? போகிற போக்கைப் பார்த்தால் தேவர் குலமே அழிந்துவிடும் போலிருக்கிறதே? தேவர்கள் தங்கள் குரு பிரகஸ்பதியிடம் கவலையோடு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பதென ஆலோசனை கேட்டார்கள். பிரகஸ்பதி சொன்னார்:
‘‘பிரச்னையைச் சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் யாரேனும் எந்தச் சூழ்ச்சி செய்தேனும் சுக்கிராச்சாரியாரின் சீடனாகச் சேர்ந்து அவரிடமிருந்து சஞ்சீவி மந்திரத்தைக் கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதைத் தவிர வேறு வழி இல்லை.’’ தேவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவு செய்தார்கள். அவர்களின் குரு பிரகஸ்பதியின் மூத்த மகன் கசன், ஆணழகன். கூர்மையான மூக்கும் சிவந்த உதடுகளும் ஒளிவீசும் முகமும் காணும் யாரையும் கவரும் உடல் வனப்பும் கொண்ட வாலிபன். அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு தேவயானி என்று ஒரு புதல்வி உண்டே? அவள் காண்போரைக் கவரும் கட்டழகி ஆயிற்றே? அவளைக் கசன் கவர்ந்துவிட்டால் போதுமே?
ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது கணக்கு. ஒன்றும், ஒன்றும் ஒன்றுதான் என்பதல்லவா காதல்? அப்படி அவள் மட்டும் இவனிடம் காதல் கொண்டு மனம் ஒன்றுபட்டுவிட்டால் இவனுக்காக அவள் என்னதான் செய்ய மாட்டாள்? தன் தந்தையிடம் இவனைச் சிஷ்யனாகச் சேர்க்க அவள் நினைத்தால் முடியாதா என்ன? தன் புதல்வியின் வேண்டுகோளைச் சுக்கிராச்சாரியாரும் மறுப்பாரா என்ன? கசன் தேவர்களுக்கு உதவ முன்வந்தான். தன் தந்தை பிரகஸ்பதியை வணங்கி ஆசிபெற்றான். பின் அசுரகுரு சுக்கிராச்சாரியார் ஆசிரமம் நோக்கிச் சென்றான். ஆசிரமத்திற்கு வெளியே நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள் தேவயானி. அவள் அருகே சென்றான் கசன்.
அவனை நிமிர்ந்து பார்த்த தேவயானி, அவனது பேரழகைக் கண்டு மயங்கியவளாய் பூக்கூடையை நழுவ விட்டாள். கசன் பணிவோடு கீழே விழுந்த பூக்களையெல்லாம் எடுத்து அந்தக் கூடையில் இட்டு அவளிடம் நீட்டினான். பின் அவளைப் பற்றி ஒன்றுமே அறியாதவன் போல அப்பாவியாக முகத் தை வைத்துக்கொண்டு, அவள் எந்த உலகத்துத் தேவதை என்று விசாரித்தான்! இந்த நாசூக்கான புகழ்மொழி தேவயானியின் உள்ளத்தைக் குளிர்வித்தது. அவள் மணிகளை உருட்டி விட்டாற்போல், முத்துப் பல்வரிசை தெரியக் கலகலவென்று சிரித்தாள். தான் சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி என்று தெரிவித்து அவன் யாரெனக் கேட்டாள்.
கசன் தான் கல்வி கற்க விரும்பும் ஒரு பிரம்மச்சாரி என்றும் அவள் தந்தையிடம் சீடனாகச் சேரும் ஆவலிலேயே வந்திருப்பதாகவும் அவளால் தனக்கு உதவ இயலுமா என்றும் கெஞ்சலுடன் கேட்டான். ஒரு பேரழகனின் கெஞ்சலை அவனால் கவரப்பட்ட ஒரு பேரழகியால் எப்படி மறுக்க முடியும்? அவள் சிரித்துக்கொண்டே அவனைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். ‘‘தந்தையே! உங்களுக்கொரு சீடனைக் கூட்டி வந்திருக்கிறேன்!’’ என்று அறிமுகப்படுத்தினாள். சுக்கிராச்சாரியாரும் அவன் அழகைப் பார்த்து வியந்தார். தன் மகள் மனத்தை அவன் கவர்ந்திருக்கக் கூடும் என ஊகித்தார். ‘‘பெரிய இடத்துப் பரிந்துரையோடு வருகிறபோது நான் இவனை சீடனாக சேர்த்துக் கொள்ளாமல் எப்படி மறுக்க முடியும்?’’ என்று மகளைப் பார்த்து நகைத்தார்.
‘‘போங்களப்பா!’’ என்று வெட்கத்தோடு ஆசிரமத்தின் உள்ளே ஓடினாள், தேவயானி. இவ்விதமாகக் கசன் சுக்கிராச்சாரியாரின் சீடனானான். ‘‘சீடனே! சஞ்சீவி மந்திரம் தவிர மற்ற அனைத்தையும் உனக்குக் கற்பிப்பேன். சஞ்சீவி மந்திரம் மட்டும் எனக்குத் தனி உரிமையானது. அதை நான் யாருக்கும் கற்பிப்பதற்கில்லை!’’ என்றார், குரு. கசன் மனம் சற்றுத் துவண்டது. என்றாலும் காலம் கனியுமென்று காத்திருந்தான். காலம் கனியத்தான் செய்தது. ஆனால், அதன் பொருட்டு அவன் மூன்று முறை மீண்டும் மீண்டும் இறக்க நேர்ந்தது! அசுரர்கள் கசனை சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள்.
திடீரென ஒரு புதியவன் தங்கள் குருவிடம் சீடனாக சேரவேண்டிய அவசியம் என்ன? சஞ்சீவி மந்திரத்தை அபகரிப்பதற்காக தேவர்கள் செய்யும் சூழ்ச்சியாகத்தான் இது இருக்கும் என்று அவர்கள் சரியாகவே ஊகித்தார்கள். எது எப்படியானாலும் சந்தேகத்தின் பலன் எதிரிக்குப் போய் சேரக் கூடாது, அவன் சஞ்சீவியைக் கற்க வந்தானோ இல்லையோ, அவனை ஒழித்துக் கட்டுவதே தங்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தீர்மானித்துக்கொண்டார்கள். ஒருநாள் குருவின் உத்தரவுப்படி மாடுமேய்த்துக் கொண்டிருந்தான் கசன். அவனை அசுரர்கள் ஒன்று சேர்ந்து கொன்றார்கள். பின் அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வன விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தீனியாகப் போட்டார்கள். இனி அவனால் எந்தத் தொந்தரவும் இல்லை என நிம்மதி அடைந்தார்கள்.
கசன் மேல் உயிரையே வைத்திருந்த தேவயானி அவன் இரவு நெடுநேரமாகியும் ஆசிரமத்திற்கு வரவில்லையே என்று தந்தையிடம் புலம்பினாள். மேய்ச்சலுக்குப் போன மாடுகள் வழிதெரிந்து திரும்பிவிட்டன. மேய்த்தவன் வரவில்லையென்றால் என்ன பொருள்? சுக்கிராச்சாரியார் ஒருவேளை அவன் இறந்திருக்கலாம் என்று யூகித்தார். சஞ்சீவி மந்திரத்தை ஜபித்து, ‘‘கசனே! எங்கிருந்தாலும் வா!’’ என்று கூவி அழைத்தார். அடுத்த கணம் நிகழ்ந்த செயல் விந்தையானது. அவன், தன் மாமிசத்தைச் சாப்பிட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மாமிசத் துணுக்குகளாக வெளிப்பட்டான். பின் இணைந்து ஒரே உடல் பெற்றான். ஓடிவந்து தன் குருவைப் பணிந்தான்! அதன் காரணமாக அன்று கானகத்தில் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் வயிறு கிழிந்து இறந்தன.
தேவயானியிடம் நடந்ததைச் சொன்னான் அவன். எப்படியோ மீண்டும் அவன் உயிர்பெற்று விட்டது குறித்து தேவயானி மகிழ்ச்சி அடைந்தாள். ஓர் உயிரைக் காப்பாற்ற விலங்குகள், பறவைகள் எனப் பலவற்றின் உயிர் மாய்க்கப்பட்டதை எண்ணிச் சுக்கிராச்சாரியார் மனம் வருந்தினார். கசன் உயிர்பெற்ற விவரம் அறிந்த அசுரர்கள் அவன் மேல் கடும் விரோதம் கொண்டார்கள். ஒருநாள் அவன் பூஜைக்காகப் பூக்கொய்து கொண்டிருந்த நேரத்தில், மறுபடி அவனைக் கொன்றார்கள். இம்முறை அவன் மீண்டு வரக்கூடாது என்று உடலை, மாமிசத் துணுக்கே மீதமில்லாமல் சுட்டுச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை சமுத்திரத்தில் கரைத்தார்கள்.
தேவயானி மறுபடியும் தன் தந்தையிடம் அழுது புலம்பினாள். சுக்கிராச்சாரியார், அசுரர்கள் கசனை விரோதியாகக் கருதுவதால் மறுபடி மறுபடிக் கொல்வதாகக் கூறி, ஏன் தேவயானி அவனை மறக்கக் கூடாது என்று கேட்டார். ‘‘மறக்க முடியவில்லையே’’ என்று அரற்றினாள் தேவயானி. அவளது கண்ணீரைக் கண்ட சுக்கிராச்சாரியார் மனந்தாளாமல், சஞ்சீவி மந்திரம் ஜபித்து, ‘‘சீடனே வா’’ என அழைத்தார். கடல் அலைகளிலிருந்து ஒன்று சேர்ந்த அவன் மீண்டும் வந்து சுக்கிராச்சாரியாரை நமஸ்கரித்தான். அசுரர்கள் திகைப்படைந்தார்கள். இனி கசனை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட என்னதான் செய்வது? திடீரென அவர்களில் ஒருவனுக்கு விந்தையான ஒரு யோசனை தோன்றியது. அதை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லா அசுரர்களும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.
இம்முறை கசனைக் கொன்ற அசுரர்கள் அவன் உடலைச் சுட்டுச் சாம்பலாக்கியதோடு நிற்கவில்லை. அதை சோமபானத்தில் கலந்து, ‘குருவே! தங் களுக்காகத் தயாரிக்கப்பட்ட விசேஷமான பானம் இது!’ என்று அவரை நம்பவைத்து அவரையே அருந்தச் செய்தார்கள்! இப்போது கசன் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் வெளிப்பட வேண்டுமானால் குருவின் வயிற்றைக் கிழித்துக் கொண்டுதான் வெளிப்பட வேண்டும்! குரு எப்படி, தான் இறக்கச் சம்மதிப்பார்! கசன் கதை முடிந்தது என்று அசுரர்கள் திருப்தி அடைந்தார்கள். ஆனால், அந்தத் திருப்தி நிலைக்கவில்லை. அது ஒரு விபரீதத்தில் முடிந்தது. வழக்கம்போல் தேவயானி தன் தந்தையிடம் அசுரர்களால் கொல்லப்பட்ட கசனை உயிர்ப்பிக்குமாறு அழுதாள்.
மகளின் சோகத்தைத் தாங்க இயலாது சுக்கிராச்சாரியார் சஞ்சீவி மந்திரம் ஜபித்து அவனை அழைத்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரத் தயங்கிய கசன், வயிற்றின் உள்ளிருந்தே குரல் கொடுத்தான். சுக்கிராச்சாரியார் திகைத்தார். அசுரர்களின் முட்டாள்தனத்தை எண்ணிக் கடும் சீற்றமடைந்தார்.
ஆனாலும் இனிச் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தன் மகளை அழைத்தார். ‘‘தேவயானி! முடிவுசெய்து கொள். உனக்கு யார் வேண்டும்? நானா, கசனா? கசன் என் வயிற்றில் இருக்கிறான். நீ சொன்னால் அவன் என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டு விடுவான். ஆனால், நீ என்னை இழப்பாய். சம்மதமா?’’ என்று கேட்டார்.
தேவயானி திகைத்துப் பதறினாள். தந்தை, கசன், இருவரையும் தான் இழக்க விரும்பவில்லை என்றாள். இருவரில் ஒருவர் இறந்தாலும் தானும் இறப் பது உறுதி என்றாள். எந்த முறையிலேனும் இருவரும் உயிர் பிழைக்க உபாயம் தேடுமாறு வற்புறுத்தினாள். சுக்கிராச்சாரியார் யோசித்தார். இனி வேறு வழியில்லை. கசனுக்கு அவன் தன் வயிற்றில் இருக்கும்போதே சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்தார். அவன் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டதும் உபதேசிக்கப்பட்ட சஞ்சீவி மந்திரத்தின் மூலம் அவன் தன்னை உயிர்ப்பிக்க வேண்டும் எனக்கட்டளையிட்டார். கசன் தன் எண்ணம் நிறைவேறுவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். சஞ்சீவி மந்திர உபதேசத்தைப் பெற்றான். குருவின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட அவன், தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தின் மூலம் தன் குருவையும் உயிர்ப்பித்து விட்டான்.
அசுரர்களிடம் அவர்களின் முட்டாள்தனத்தால் கசன் சஞ்சீவி மந்திர உபதேசம் பெற்றுவிட்டான் என்று கூறி சுக்கிராச்சாரியார் அவர்களைக் கண்டித்தார். அவர்கள் வெட்கத்துடன் தலைகவிழ்ந்து சென்றார்கள். தேவயானி கசனிடம் வந்து தான் அவனைக் காதலிப்பதாகவும் தன்னை மணம் புரிந்துகொள்ளுமாறும் வேண்டினாள். கசன் அவளையே கூர்மையாகப் பார்த்தான். பின்னர் சொன்னான்: ‘‘பெண்ணே! நீ தான் என்னைக் காதலித்தாய். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை. சஞ்சீவி மந்திர உபதேசம் பெறத்தான் உன் தந்தையின் சீடனானேன். குருவின் மகள் சகோதரி ஆவாள். தவிர நான் உன் தந்தை வயிற்றில் சிறிது நேரம் இருந்தேன். அந்த வகையிலும் உன் சகோதரனாகிறேன்! விடைபெறுகிறேன்.’’
அவன் விடைபெற்றுச் செல்வதைக் கண்ணீர் வழிய வழியப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி. தன் மகளைத் தேற்றிய சுக்கிராச்சாரியார் சொன் னார்: ‘‘மகளே! திருமண விஷயத்தில் விதிப்படிதான் மணவாழ்க்கை அமையுமே தவிர, நாம் விரும்பிய ஒரே காரணத்தால் அவ்விதமே மணவாழ்க்கை அமையாது. காதல் திருமணமோ நிச்சயித்த திருமணமோ எது நடந்தாலும் அதுவே விதியின் கட்டளை என ஏற்று அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். உன் கண்ணீரைத் துடை. இன்னொருவன் வருவான். அவன் பல விதங்களில் இவனை விட உனக்குப் பொருத்தமானவனாக அமைவான்!’’ தந்தை சொற்படிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் தேவயானி.
வானுலகம் சென்ற கசனைத் தேவர்கள் வெகு பிரியமாக வரவேற்றார்கள். தாங்கள் இறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று முறை இறந்த அவனை அவர்கள் கட்டி அணைத்துப் பாராட்டினார்கள். கசனின் தந்தையும் தேவகுருவுமான பிரகஸ்பதியின் மனம் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது. (மகாபாரதம் உத்தியோக பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தக் கதை, காதலித்தாலும் காதலிக்கா விட்டாலும் ஒருவரின் மணவாழ்வு விதிப்படியே அமையும் என்பதையும், காதல் நிறைவேறாவிட்டால் வருந்துவதில் அர்த்தமில்லை என்பதையும் காதலைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கையே முக்கியமானது என்பதையும் விளக்குகிறது.)
-

சனியே என திட்டாதீர்!
சனியே என திட்டாதீர்!
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி.இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால் அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால் ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.ஆனால் சனியே என திட்டக்கூடாது.இவ்வாறு திட்டினால் யார் திட்டுகிறாரோ அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்

பித்ரு தோஷம் எதனால் வருகிறது
பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.
.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில்தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான்மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச்சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டைபால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
மஹாளய தர்ப்பணம்:- 28.09.2015 முதல் 12.10.2015 மஹாளய அமாவாஸ்யை முடிய..தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் .இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும் பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்:-
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.
ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.
எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.
வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.
பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

வேதம்
தேவ காரியமும் பித்ரு காரியமும்
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய வேண்டும். பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். 'தென்புலத்தார்' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம்' என்பதில் மூன்று சுழி 'ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி 'ன' போட்டும் சொல்ல வேண்டும். 'அயனம்' என்றால் மார்க்கம், வழி என்றும் அர்த்தம். 'உத்தர' என்பதில் வருகிற 'ர' காரத்தினால் 'ன' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது...
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
"பிரதக்ஷணம் பண்ணுவது" என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு 'யக்ஞோபவீதம்' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு 'ப்ராசீனாவீதம்' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு 'நிவீதம்' என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1). அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், "நிவீதம் மநுஷ்யாணாம்" - "மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது [பூணூலை] மாலையாக[ப் போட்டுக்கொள்ள வேண்டும்] " என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பஹூகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது
தர்பைப்புல்
ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்பா நாட்டிலே இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றவன். அவனே மகாபாரதத்தில் உத்யோக பர்வ காண்டம் 99 தில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவான். இனி அவன் வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்தபோது, அவனுடைய ராஜ குரு கூறினார் 'மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவ லோகத்துக்குச் சென்று அங்குள்ள ரிஷி முனிவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும்'.
அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. ஆகா...நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன் ....பூமியிலேயே அனைத்தையும் வென்று விட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒருநாள் பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான். படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரும்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற பிரும்மா அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார். பிரும்மா கூறினார் ' தம்போத்பவா, நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன்...போ...முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா'. தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல இனியதும் யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க, பிரும்மா பூமியில் வட பகுதியில் இருந்த கந்தமாதனா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.
தம்போத்பவாவும் உடனே கிளம்பி கந்தமாதனாவிற்குச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான். இவர்களையா நான் வெல்ல வேண்டும்?, பிரும்மாவிற்கு புத்தி பேதலித்து விட்டதா என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்றுகொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டப் பின்னர் அவர்கள் தம்முடன் சண்டை இட்டு ஜெயிக்க வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் 'தம்போத்பவா, நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்' என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை, அவர்களின் தவத்தை இடையூறு செய்தவண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான்.
எத்தனை நேரம்தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள், தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த, அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள். உடல் முழுதும் வலியால் துடிதுடித்தபடிக் கிடந்தவன் எழுந்திருந்தான். 'முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்துவிட்டதை எண்ணி வியக்கின்றேன் . அதற்கு அத்தனை மகிமையா ?' என்று கேட்டதும் அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் ' மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீயே இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா?
தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா ? சிவபெருமான்... ஆமாம் அவர் சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார். அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா? அப்படிப்பட்டவர் கையில் வைத்துள்ள தர்பையை நீ வெறும் புல்லாகவா நினைக்கின்றாய்?. அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது. நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் நல்லதோ, கெட்டதோ, இரண்டு காரியங்களை செய்யும் போதும் தர்பையினால் ஆனா மோதிரத்தை ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். ஹோம குண்டங்களில், யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த சடங்கையும் செய்யும்போது அதை ஏன் விரலில் ஒரு மோதிரம் போல போட்டுக் கொள்கின்றோம் தெரியுமா? அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலைக் குறிக்கின்றது. ஆகவே நமது உடலை சுற்றி நம்மைக் காப்பது ஒரு சக்தி. அந்த சக்தியாகவே பாவிக்கப்படுவதே தர்ப்பைப் புல். தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது. எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது'. இப்படியாக நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான். அடுத்து தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி காலத்தை அமைதியாக கழித்தான்.

பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்க
பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள்.
1) ஜீவிதோ வாக்யகரணாத் - ஜீவன் உள்ள வரை அவர்கள் சொல்வதை கேட்டு நடைத்தல்.
2) ப்ரத்யப்தம் பூரி போஜனாத் - ஆப்தீகத்தை ஸ்ரத்தையோடு சாஸ்த்ரங்களில் கூறியது போல் ஆசரித்து, அந்த சமயத்தில் ஏனைய பேர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்தல்.
3) கயாயாம் பிண்டதானேன - தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கயையில் பித்ருக்களை உத்தேசித்து பிண்டதானம் செய்தல்.
த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா - இந்த மூன்றையும் ஆசரிப்பவன் யோக்யமா புத்திரனாகிறான் என்று விதிக்கப்பபட்டுள்ளது.
இதில் முதலாவது அவரவர்களின் ப்ரவ்ருத்தியினால் சாத்தியமாகும். மூன்றாவது எப்பொழுதோ ஒரு முறை செய்யத் தகுந்தது. மத்தியில் சொல்லப்பட்ட ஆப்தீகம் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டியது

பொய்யே பேசாத.. அரிச்சந்திரன் மனைவி, மகனை விற்று துன்புற்றது ஏன்?

சத்தியசீலனாகத் திகழ்ந்த அரிச்சந்திரனை, தவமுனிவர் விசுவாமித்திரர் பல சோதனைகளுக்கு உள்ளாக்கி அவன் மனைவி, மகன் ஆகியோரையும் துன்புறச் செய்தார் என்ற வரலாற்றை நாம் அறிவோம். விசுவாமித்திரர் இவ்வாறு செய்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமே. அதையும் காண்போம்.
காசியை ஆண்டுவந்த மன்னன் காசிராஜன். அவன் மகள் மதிவாணி. அழகிலும் அறிவிலும் குணநலன்களிலும் சிறந்து விளங்கிய அவள், சிவபெருமான்மீது மிகுந்த பக்திகொண்டு காசி விசுவநாதரை ஈடுபாட்டுடன் வழிபட்டுவந்தாள். மதிவாணி திருமண வயதை அடைந்தாள். அவளுக்கு மணம் செய்து வைக்க முடிவெடுத்த மன்னன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். நாடெங்குகிலுமுள்ள மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பி வைத்தான். அந்த அழைப்பை ஏற்று திக்கெங்கிலுமிருந்து மன்னர்கள் பலர் காசி வந்தடைந்தனர். அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாளிகைகளில் அவர்கள் தங்கினர். சுயம்வரத்திற்காக வந்திருந்தவர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனின் கம்பீரமான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.
சுயம்வர நாள் வந்தது. சுயம்வர மண்டபத்தில் மன்னர்கள் அவரவர்க்கு அளிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர். சபையில் மங்கல இசை ஒலித்தது. நடன மாதர்கள் நடனமாடி, சபையில் கூடியிருந்தோரை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். சபைக்கு வந்த காசி மன்னன் அனைவரையும் பார்த்து, என்னுடைய அழைப்பைபேற்று என் மகளின் சுயம்வரத்திற்காக வந்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். சுயம்வரத்திற்கான நிபந்தனையின்படி, இந்தக் கூண்டிலுள்ள இளஞ்சிங்கங்களை அடக்கி வெற்றி பெறுபவர்க்கே என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான்.
கூண்டிலிருந்த சிங்கங்களின் தோற்றம் அனைவரையும் அச்சப்பட வைத்தது. மன்னர்கள் தங்கள் இடத்தைவிட்டு அசையாமல் அமர்ந்திருந்தனர். எவருக்கும் சிங்கத்திடம் செல்லத் துணிவில்லை. மகதநாட்டு மன்னன் திரிலோசனன் கம்பீரமாக எழுந்தான். மிடுக்காக நடந்து சென்று கூண்டுக்குள் நுழைந்தான். அடுத்து அங்கு காண்போரைத் திகைக்கச் செய்யும் உக்கிரமான போராட்டம் நடந்தது. வீரத்துடன் போராடிய அவன் அந்த சிங்கங்களை அடக்கி வெற்றிபெற்றான். வெற்றி வீரன் திரிலோசனனுக்கு மதிவாணி மாலையிட்டாள். ஆன்றோர் வாழ்த்த, வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மதிவாணி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என மற்றவர் வருந்தினர். திரிலோசனன் மேல் பொறாமைப்பட்டவர்களும் உண்டு.
திருமணத்தன்று மாலை திரிலோசனன் கங்கையில் நீராடி, கோவிலுக்குச் சென்று விசுவநாதரை வழிபாடு செய்து கொண்டிருந்தான். அவன்மீது பொறாமை கொண்டிருந்த மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து, சற்றும் எதிர்பாராதபடி அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடி மறைந்தான். திரிலோசனன் இறந்த செய்தி நாடெங்கும் பரவியது. திருமணத்தன்றே கணவன் இறந்துவிட்ட துக்கத்தில் மதிவாணி மூர்ச்சையடைந்தாள். மன்னனும் மக்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மதிவாணியின் தாய் மிகுந்த துயருற்றாள். வெகுநேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த மதிவாணி, இனி உயிர் வாழக்கூடாதென முடிவு செய்தாள். அன்று நள்ளிரவுக்குப்பின் யாரும் அறியாதவாறு தன் மாளிகையைவிட்டு வெளியே வந்து கங்கையாற்றில் குதித்தாள்.
அப்போது அங்கு அதிகாலை நீராட வந்த கவுதம முனிவர் இந்த காட்சியைக் கண்டு, அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். அவள் அழுதவாறே முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினாள். முனிவர் அவளுக்கு ஆறுதல் கூறி, மகளே, நீ தீர்க்கசுமங்கலியாக இருப்பாயாக என்று ஆசி வழங்கினார். இதைக்கேட்டு மதிவாணி, முனிவரே, எனக்குத் நேற்றதான் திருமணம் நடந்தது. என் துர்பாக்கியம் திருமணத்தன்றே என் கணவர் இறந்துவிட்டார். கணவரை இழந்த என்னை தீர்க்கசுமங்கலியாய் இரு என்று வாழ்த்தியிருக்கிறீர்களே. இது எனக்கு எப்படிப் பொருந்தும்?
என்று கேட்டாள்.
என்று கேட்டாள்.
கவுதம முனிவர், குழந்தாய், வருந்தாதே. என்னுடைய வாக்கு பொய்க்காது. நடந்தவற்றை மறந்து இப்பிறவியில் மீதியுள்ள நாட்களை தவத்தில் ஈடுபடுத்து. <உன் கழுத்திலிருக்கும் மாங்கல்யத்துடனேயே அடுத்த பிறவி எடுப்பாய். அது யார் கண்ணுக்கும் புலப்படாது. உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குலத்தில் பிறப்பான். உன் சுயம்வரத்தின்போது அவன் கட்டிய இந்தத் திருமாங்கல்யம் அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும். அடுத்த பிறவியில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என வாழ்த்தினார். மதிவாணி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி தவம் மேற்கொண்டாள். சில காலம் சென்று மரண மடைந்தாள். அடுத்த பிறவியில் மதிவாணி சந்திரமதியாகவும் திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர். சந்திரமதியின் தந்தை விதித்த நிபந்தனையின்படி, வேறெவருக்கும் புலப்படாத சந்திரமதியின் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தைக் கண்டு கூறி, அரிச்சந்திரன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அவர்கள் இல்லறம் இனிதே நடந்தது. அவர்கள் புதல்வன் லோகிதாசன்.
அரிச்சந்திரனின் இனிய இல்லற வாழ்க்கையில் விசுவாமித்திரர் புயலெனப் புகுந்தார். அரிச்சந்திரனை பொய்யன் என்று நிரூபிக்க அவனைப் பலவாறு சோதித்து கடுந்துன்பத்தில் ஆழ்த்தினார். அவன் மனைவியையும், மகனையும் அடிமைகளாக விற்றான். வீரபாகு என்பவனுக்கு
அடிமையாகி, மயானத்தில் பிணம் எரிக்கும் வேலை செய்து, அதில் கிடைக்கும் வாய்க்கரிசியை உண்டு வாழும் நிலைக்குச் சென்றான் அரிச்சந்திரன். தவநெறிக்கும் பெருந்தன்மைக்கும் சான்றாக விளங்கும் விசுவாமித்திரர் அரிச்சந்திரனை ஏன் இவ்வாறு கொடுமைப்படுத்தினார் என்பதற்கான காரணத்தை அரிச்சந்திரனின் முந்தைய பிறவியே கூறுகிறது.

அரிச்சந்திரன் முற்பிறவியில் திரிலோசனனாகப் பிறந்திருந்தபோது விசுவாமித்திரரிடம், எனக்குப் பிறவாநெறி தந்தருள வேண்டும் என பிரார்த்தித்தான். விசுவாமித்திரர், திரிலோசனா! நீ பல பிறவிகள் எடுத்து அனுபவிக்க வேண்டிய சஞ்சித வினைகள் நிறைய இருக்கின்றன. நீ வாய்மை தவறாதவனாக இருந்து, ஒரே பிறவியில் அத்தனை வினைகளையும் நுகர்வாயானால் உனக்கு பிறப்பு நேராது. என்று கூறினார். திரிலோசனன் மன நிறைவுடன் அதனை ஏற்றுக் கொண்டான். அதன்படியே அவன் அரிச்சந்திரனாக மறுபிறவியெடுத்து எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்து, பலபிறவி வினைகளை ஒரே பிறவியில் தீர்த்துக்கொண்டான். மீண்டும் பிறவா நிலையை அடைந்தான். திரிலோசனன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனுக்கு பிறவாநெறி அளிப்பதற்காகவே விசுவாமித்திரர் பல துன்பங்களை அனுபவிக்கச் செய்தாரே அன்றி, அவனைத் துன்புறுத்த வேண்டுமென்ற எண்ணத்தாலல்ல!
Saturday, October 3, 2015
யாகம் என்றால் என்ன ?
யாகம் என்றால் என்ன ?
யாகம் செய்வதனால் பலன் உண்டா ?
யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும்,
யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும்,
பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது
தெரியாததை தெரிந்துகொண்டு அதை புரிய வைப்பது தானே நம் வேலை!
யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும்.
நம்மிடம் உள்ள
பொருட்களில் புனிதமானவைகள்
என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும்.

அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா?
அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம்.
அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார்.
அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது.
பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா
யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்
யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும்,
தொழிற்சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்கு
மேயானால் இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது.

சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.
இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:
தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும்.
உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும்.
நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.
பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும்,ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம்
கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.

இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.
Friday, October 2, 2015
துறவி யார்?
துறவி யார்?
“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும்.
ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.
கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்”

இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது.
உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறுபவர்கள் அறியாமைக்குரியவர்களே.

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு ஆகும். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான்.
விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போது வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டு கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.
இப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு.
இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை. துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுக அனுபவம்.

கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.
இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.
இந்து நூலில் இருந்து திரட்டியது.
காசியை காவல் காக்கும் காலபைரவர் ....
காசியை காவல் காக்கும் காலபைரவர் ...........................
காலபைரவர் கோயில்கள் இந்தியாவில் மட்டுமல்ல. இந்தோனேஷியா, நேபாள் முதலான வெளிநாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் காசி ÷க்ஷத்திரத்தை அடுத்து, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இஸன்னபல்லி என்னும் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹைத்ராபாத் நகரிலிருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ளது இக்கோயில். காசிக்குக் காவலரான கால பைரவர் இங்கு எப்படி வந்து கோயில் கொண்டார்? மற்றொரு கிளைக் கதை கர்நாடகத்தை ஆண்ட பாமினி சுல்தான்களுக்கு தோமகொண்டா என்ற சமஸ்தானத்தை தங்களின் கீழ் பரிபாலித்து, வரி வசூலித்துத் தர சமஸ்தானாதிபதி ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அங்கே பிரபலமான காச்சா ரெட்டி என்பவரை அழைத்து சமஸ்தானத்தைப் பரிபாலிக்கும் உரிமையை அஹமத் ஷா மற்றும் அவரது மகன் அஹமத் கான் ஆகியோர் அளிக்கின்றனர். இது கி.பி 1415-1435 ல் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
காச்சா ரெட்டிக்குப் பின் அவர்களின் வம்சாவளியில் வந்த காமி ரெட்டிக்கு(1550-1600) பகைவர்களிடமிருந்து சமஸ்தானத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகப் பட்டது. இந்தக் குழப்பத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்ற காமி ரெட்டியின் கனவில், காலபைரவர் தோன்றி காசிக்குப் போய் தன் சிலையைக் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தால், அவர்களது சமஸ்தானத்தையும் அவர்களையும் தான் காப்பாற்றுவதாக உறுதி கூற, காமி ரெட்டி தன் சகோதரர் ராமி ரெட்டியுடன் காசிக்குச் சென்று சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வருகிறார்கள். அவர்களின் சமஸ்தானத்தை நெருங்கும் போது ஓர் இடத்தில் வண்டிச் சக்கரங்கள் தரையில் புதைந்து நின்று விடுகின்றன. எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை. சிலையும் அசையவில்லை அதனால், பைரவருக்குக் கோயில் அங்கேயே எழுப்பப்பட்டது. அந்த இடம்தான் இஸன்னபல்லி
ஒவ்வொரு பிறப்பிலும் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உடற்பிணிகளும், பில்லி சூன்யம் முதலியவற்றால் ஏற்படும் துயரங்களும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் எட்டு திக்கும் பிரதிஷ்டை செய்யப்படும் அஷ்டதிக் பாலர்களும் காலபைரவர் உறுதுணையுடனே செயல்பட்டு, கிராமங்களை கெடுதல்களிலிருந்து காப்பதாக நம்பிக்கை. மார்கழி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, கண் விழித்து காலபைரவரைத் தியானித்து, அருகிலுள்ள புஷ்கரிணியில் நீராடி, பைரவருக்கு தேங்காய், மலர்கள், கடுகு எண்ணெய், கறுப்பு எள் முதலியவற்றைப் படைத்து வழிபட, ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும். கெட்ட ஆவிகள் தரும் தொல்லை நீங்கும். எடுத்த காரியங்களும் வெற்றிபெறும். சிறைப்பட்டவரும் விடுதலை பெறுவர். இந்தப் புஷ்கரணியில் நீர் கோடையிலும் வற்றுவதில்லை. இதில் முழுகி எழுந்தால் பாவங்கள் மறையும் என்பதும் ஒரு நம்பிக்கை. காலபைரவரின் சக்தியால்தான் புஷ்கரணியில் நீர்மட்டம் குறைவதில்லை என்கின்றனர். சுண்டுவிரலில் பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையுடனும், பைரவ (நாய்) வாகனத்துடனும் சித்தரிக்கப்படும் காலபைரவர், நேபாளத்தில் சுப்ரீம் ஜட்ஜ். இவர் சன்னிதியில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
விதி பற்றி.....
விதி பற்றி.....
விதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விதியை மாற்ற முடியாது என்றும் சொல்கிறார்கள். இப்படி மாற்ற முடியாத விதியின்படிதான் எதுவும் நிகழும் என்றால், மனித முயற்சியே தேவை இல்லையே? தேவை இல்லை என்பது மட்டுமல்ல – முயற்சியினால் எந்தப் பயனும் கிட்டாது – என்றுதானே ஆகிறது? அதாவது, சோம்பேறியாக இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தினாலும், விதி நன்றாக இருந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும் அல்லவா? ஆக, இந்த ‘விதி’ என்பது சோம்பேறித்தனத்தைத்தான் ஊக்குவிக்கும். இல்லையா?...
பதில் ..
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எல்லா மனிதர்களும் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். தானே கூட, எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். அப்படியிருக்க, ‘நீ ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இரு; விதி நன்றாக இருந்தால், உனக்கு நல்லதெல்லாம் நடக்கும்’ என்று சாத்திரங்கள் சொல்லுமா?
விதி, நல்ல நேரம் எல்லாமே, முயற்சி உள்ளவர்களுக்குத்தான் உதவும். நல்ல முயற்சி இருந்தும், ஒருவன் தோற்பது விதியால்தான். மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்க, பேரழிவு ஏற்படுகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்தான் மிஞ்சியிருக்கிறார்கள். கிருஷ்ணர், அர்ஜுனனை அழைத்து, ‘நீ இவர்களை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து சென்று விடு’ என்று கூறுகிறார். அர்ஜுனனும் அதை ஏற்று, அவர்களை எல்லாம் அழைத்துச் செல்கிறான்.
போகிற வழியில், ஒரு கொள்ளைக் கூட்டம் இவர்களை வழிமறித்துத் தாக்குகிறது. முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் கதறுகிறார்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன் அல்லவா? அவன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடிக்க முற்படுகிறான். அவர்களோ கடுமையாகத் தாக்குகிறார்கள். கடைசியில் அர்ஜுனன் தனது சிறந்த ஆயுதமான காண்டீவத்தையே பயன்படுத்துகிறான். அதுவும் பலனளிக்காமல், அந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் பெரும் சேதம் விளைவித்துச் செல்கிறார்கள்.அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீதி இருந்தவர்களோடு அவன் போய்க் கொண்டிருந்தபோது வியாஸரைச் சந்திக்கிறான். அவரிடம் நடந்ததைச் சொல்லி – ‘ஏன் இவ்வாறு நடந்தது? பாரதப் போரில் துரோணர், பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அச்வத்தாமன்… போன்ற பெரும் வீரர்களை எதிர்த்து வென்றேன். ஆனால், இப்போது சாதாரண தீவட்டிக் கொள்ளைக்காரர்களை ஒடுக்க என்னால் முடியாமல் போய்விட்டதே! என் காண்டீவம் கூட பயன் தரவில்லையே? ஏன்?’ என்று கேட்கிறான்.
வியாஸர் சொல்கிறார்: ‘உன்னுடைய வீரத்திற்குக் கிட்டிய நேரம் முடிந்து விட்டது. அதுதான் காலத்தின் வன்மை. காலம் ஒத்துழைக்கவில்லை என்றால், மனித முயற்சி பயன் அளிக்காது’.
அர்ஜுனனுக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்! விதியும், முயற்சியும் சேர்ந்து நன்றாக அமைந்தால்தான், காரியம் கைகூடும். அதற்காக முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்தால், விதியின் கருணை கூட வீண் ஆகிப் போகும்.
அதாவது, மனித முயற்சி நிச்சயமாக வேண்டும்; அது அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. விதியும் நமக்கு நன்றாக இருக்க வேண்டும். ஆக, சோம்பேறித்தனத்தை வளர்ப்பது அல்ல – விதி என்ற தத்துவம். முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போகும்போது – அதற்காகச் சோர்ந்து போய் விடாமல், நாம் தெளிவு பெறுவதற்கு, விதியைப் பற்றிய விளக்கம் உதவும்.

விதி பற்றி துக்ளக் ஆசிரியர்..
Thursday, October 1, 2015
மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் தருமர் அளித்த விடைகளும்
மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் தருமர் அளித்த விடைகளும் .........
12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.
யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.
யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.
யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.
யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.
யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.
யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.
யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.
யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.
யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.
யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.
யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.
யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.
யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.
யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.
யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.
யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.
யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.
யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.
யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.
யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.
யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.
யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.
யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.
யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.
யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்
யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.
யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.
யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.
யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.
யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.
யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.
யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.
யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.
யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.
யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.
இப்படி கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.
தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.
தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.
தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்

கம்பனும் அவ்வையும் .....
கம்பனும் அவ்வையும் .....
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.
”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”
”கண்டாரோ.. மு... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.
“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்கறீரே.. இங்க வந்து கொடுத்துட்டு போனவன்தான் இருக்கிறான். வாங்கிட்டு போனவன் யாருமில்ல. சரி.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.
சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.
அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.
”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”
ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.
சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள். கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.
இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு. ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.
அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க.. இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.
""தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள். தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)
கம்பன் வந்து பார்த்தான். யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை. அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால.
பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.
அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.
என்றாள்.. நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு,கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னால்,
அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்.. உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா.. இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன் என்றாளாம் ஓளவை கிழவி..
இது தான் நம் தமிழ் ...தெய்வத்தமிழ்....

திருமாலுக்குரிய நான்கு குணங்கள்
திருமாலுக்குரிய நான்கு குணங்கள்
திருமாலுக்குரிய குணங்களாகக் கூறப் பெறுவனவற்றுள் நான்கு குணங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுபவை.
அவை 1. வாத்சல்யம், 2. சுவாமித்துவம், 3. சௌசீல்யம், 4. சௌலப்யம் என்பனவாகும்.

வாத்சல்யம் என்பது கன்றிடம் தாய்ப்பசு கொள்கிற அன்பாகும் திருமாலுக்குரிய இக்குணம் கண்ணன் அவதாரத்திலே மிகுதியாக வெளிப்படுகிறது.
குசேலரிடத்திலும் பாண்டவர் மற்றும் திரௌபதியிடமும் மிகுதியாகக் காட்டினார். அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் அவனது குற்றம் நோக்காது உண்மைப் பொருளின் சிறப்பை உணர்த்திய திறத்தால் அவனுடைய வாத்சல்ய குணம் விளங்குகிறது.

சுவாமித்துவம் என்பது கடவுளர்க்கெல்லாம் தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவது. இச்சிறப்பு அனைத்து அவதாரங்களிலும் வெளிப்பட்ட போதிலும் கண்ணன் அவதாரமே அத்தகைய சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை உரைக்கையில் தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டாக அர்ச்சுனனுக்கு பரத்துவத்தை விளக்கியமையால் இக்குணத்தின் சிறப்பு விளங்குகிறது.
சௌசீல்யம் என்பது ஏற்றத் தாழ்வின்றி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி கொண்டிருக்கும் நட்பைக் குறிப்பது. இக்குணமும் கண்ணனுக்கு மிகுதியாக இருந்தது.
சௌலப்யம் என்பது இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது. உலக மாயைக்குக் கட்டுண்ணாத திருமால் மனித வடிவில் வந்து தன் உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய நிலையே எளிமைக்கு எடுத்துக்காட்டாகும்.
சுவாமி படங்களை எப்படி மாட்ட வேண்டும்...
சுவாமி படங்களை எப்படி மாட்ட வேண்டும்....
வீடு, அலுவலகச்சுவரில் சுவாமி படங்களை மாட்டி வைத்திருப்பீர்கள். இந்தப் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இந்த திசைகள் சுத்தமானவை. மற்ற இரண்டும் அசுத்தமானவை. ஆனாலும், ஒரு விதிவிலக்கு இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மற்றும் உக்ர தெய்வங்களான காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு திசை நோக்கி மாட்டலாம். பெருமாள், லட்சுமி, சிவன், விநாயகர், முருகன்,மாரியம்மன் உள்ளிட்ட பிற படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும்.இதுவரை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் மாற்றிக் கொள்ளுங்களேன் !
Subscribe to:
Posts (Atom)