Friday, June 17, 2016

12 ராசி மந்திரம்

 12 ராசி மந்திரம்
மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
MESHAM – OM AIM KLEEM SOUM
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
RISHABAM – OM AIM KLEEM SHRIM
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
MITHUNAM – OM KLEEM AIM SOUM
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KADAGAM – OM AIM KLEEM SHRIM
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
SIMMAM – OM HREEM SHREEM SOUM
கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
KANNI – OM SHREEM AIM SOUM
துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
THULAM – OM HREEM KLEEM SHREEM
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
VRICCIGAM – OM AIM KLEEM SOUM
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
THANUSU – OM HREEM KLEEM SOUM
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
MAGARAM – OM AIM KLEEM HREEM SHREEM SOUM
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KUMBAM – OM HREEM AIM KLEEM SHREEM
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
MEENAM – OM HREEM AIM KLEEM SHREEM
இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு!
==================================
ஒரு பெண் தனக்குப் பெரிதாக பூஜை பக்தி செய்ய நேரமில்லை. ஏதாவது சுலபமான வழிபாடு உண்டா என்று கேட்ட போது கீழ்க்கண்ட மந்திரத்தை அருளினார்.
இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தால் விரிவான பூஜை செய்த பலன் முழுவதும் கிடைக்கும் என்றார்.
ஹரி நாராயண துரித நிவாரண
பரமானந்த சதாசிவ சங்கர!

ஆறு வகை வணக்கங்கள் ! வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?

பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் ‘பிரணாமங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:
Screenshot_1
1) அஷ்டாங்கணம்
– உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
2) ஷாஷ்டாங்கம்
– உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
3) பஞ்சாங்கம்
– உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
4) நமஸ்காரம்
– இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)
5) அபிநந்தனம்
– இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)
6) சரணஸ்பர்ஷம்
– கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)
வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?
ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள். அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.
அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.
இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது.
ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,போவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம். அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.
கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.

மஹாபாரதம் – சுருக்கமாக

மகாபாரதம் என்னும் இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்டது. குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண் மீது ஆவல் கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும் போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார்.
வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்து கொள்ளாமலேயே இறந்து போகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன்.
குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்று விடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான்.
பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

நந்தி வகைகளைப் பற்றிப் பார்ப்போம்

நந்தி வகைகளைப் பற்றிப் பார்ப்போம் 
1. இந்திரநந்தி ( போகநந்தி) - கோவிலுக்கு வெளியே இறைவனை ( சிவபெருமானை) நோக்கி இருப்பது 5 ம் பிரகாரத்தில் ஆகும்
2. பிரம்மநந்தி ( வேதநந்தி) - இது மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி ( அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது ஆகும் ( உ-ம்) காஞ்சி ராமேஸ்வரம் திருவிடைமருதூர் தஞ்சை திருவாவடுதுறை கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய தலங்களில் பெரிய நந்தியாக உள்ளது
3. விஷ்ணுநந்தி - மால்விடை சிவபெருமான் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை ( சிவபெருமானை) ஏந்தியது ஆகும் சிவன் சன்னதி அருகில் உள்ளது
4. ஆத்மநந்தி - கொடி மரத்தருகில் இருப்பது ( இறைவன் - பதி, ஆத்மநந்தி - பசு, கொடிமரம் - பாசம்) பிரதோச காலத்தில் வழிபாட்டிற்குரியது ஆகும் ஆத்மநந்தி ( அ ) சிலாத நந்தி
5. தருமநந்தி - தருமம் நந்தியாக நிலைத்திருப்பது தரும நந்தி மகா மண்டபத்தில் உள்ளது சுவாமி ( சிவபெருமான்) அருகில் உள்ளது சிறியதாக மூலவரின் வயிற்றுப்பகுதியான தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு அதன் மட்டத்திலிருந்து நேராக நந்தி நாசி அமைந்து மூலவருக்கு உயிர்நிலை தருவதாக அமைந்து என்றும் ஆனந்த நிலையில் உள்ளார் இதன் மூச்சு காற்று சுவாமியின் ( சிவபெருமானின்) மீது படுகிறது
மேலும் 2 நந்தி
1. அதிகார நந்தி - உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது ஆகும்
2. விருஷப நந்தி - கருவறை பின்புறம் இருப்பது ஆகும்
நந்தி அருள் பெற்ற நாதர் 8 பேர்
1. சனகர்
2. சனந்தனர்
3. சனதனர்
4. சனற்குமாரர்
5. சிவயோகமாமுனி
6. பதஞ்சலி
7. வியாக்ரபாதர்
8. திருமூலர்
என்ற 8 பேர் நந்தியெம் பெருமான் அருள் பெற்றவர்கள் ஆவார்கள்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–
1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்.

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?
விமானத்தில் பயணம் செய்கிறார்கள், தொலைக்காட்சியில் தலைகாட்டுகிறார்கள் என்று குருமார்களை சாடி ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சத்குரு அளித்த பதில் இந்தப் பதிவில்… கேள்வி சில குருமார்கள் தொலைக்காட்சியில் ஏன் அடிக்கடி தலைகாட்டுகிறார்கள்? குளிரூட்டப்பட்ட அறை, விமானப் பயணம் என்றெல்லாம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? சத்குரு: தொலைக்காட்சி என்பது தொழில் திறனின் முன்னேற்றம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமா? துறவிகள் தங்கள் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? லட்சம் பேர் கூடியிருக்கும் இடத்தில், தொழில்திறனைப் பயன்படுத்தி மைக்கில் பேசாமல் குரு எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் படிக்கும் இந்தக் காகிதத்தில் அச்சாவது கூட தொழில் திறன்தான். குருவிடம் சென்று குருகுல வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? துறவிகளும், குருமார்களும் நடந்துதான் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மாட்டு வண்டியில் பயணம் செய்து ஓரிடத்தை அடைவதற்கு மிகுந்த காலம் பிடிக்கும் என்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது தவறாகுமா? அட, மாட்டு வண்டி என்பது கூட ஒருவிதத் தொழில் திறன் தானே. வருடத்திற்கு நான்கு முறை வகுப்பெடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது. விமானம் இன்றி இது எப்படி சாத்தியம்? வாழ்நாள் மிகக் குறுகியது. வாழ்நாள் முடிவதற்குள் அதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குப் பயன்பட முடியும் என்று வாழ்வைப் பற்றிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக சில வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை ஆடம்பரம் என்று எப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியும்? குரு என்றால் காற்று வராத குகையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பா? அவ்வளவு பழமையானவரா நீங்கள்? கற்காலத்தை விட்டு விலகி வாருங்கள். வாழ்வை வளர்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

கர்பத்தைப்பற்றி உபனிஷத் கூறுவது

கர்பத்தைப்பற்றி உபனிஷத் கூறுவது .......... !!
ஆண் பெண் சம்போகத்தால் ஓர் இரவு கழிந்ததும் கருவானதுகலங்குகிறது.
ஏழ் இரவுகளிள் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் மூங்கில் போன்ற முதுகு எலும்பு உண்டாகிறது
ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள்உண்டாகின்றன
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன்
கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன
தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும்,தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.
மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும்
கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று வாயுவினால்
பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால்
அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
கர்பத்தில்இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது.
ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன.
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.
முன்பு என்னால் ஆயிரக்கணக்கான
யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான
ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும்
ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும்
இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.
நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன்.
யோனியினின்று வெளிவந்தால் இனி நான்
பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந
்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை
நாராயணனை சரணடையப்போகிறேன
யோனியில் இருந்து வெளிவந்தால் இனி நான்
பாபத்தை போக்குவதும் கருமப்
பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான
ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.
யோனியிலிருந்து வெளிவந்தால்
பிரம்மத்தை தியானிப்பேன் என்று
எண்ணுகிறான்.பிறகு யோனித்துவாரத்தை
அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனை
ப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி
பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால்
தொடப்பட்டு நினைவிழந்து
முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும்
அறிவதில்லை !!

Thursday, June 16, 2016

மான் தோல் ஆசனம்

மான் தோல் ஆசனம்
--------------------------------
காடு, மலைகளுக்கு சென்று தவம் செய்தவர்கள், மான் தோல் மீது அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். இதற்கு என்ன அவசியம்? என்ற வினா மனதில் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. அண்மையில் லால் கிதாப் என்ற புத்தகத்தை புரட்டியபோது. அதில் ஒரு தகவல் இருந்தது. மான் தோல் இருக்கும் இடத்திற்கு பாம்புகள் வராதாம். காடு, மலைகளில் தியானத்தில் அமரும்போது மான் தோல் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானித்தால் பாம்புகள் தொல்லை இருக்காது என்பதால் அந்த காலத்தில் மான் தோலை பயன் படுத்தினார்களாம்.

தாம்பத்திய உறவில் ஈடுபட உகந்த நேரம் எது?

தாம்பத்திய உறவில் ஈடுபட உகந்த நேரம் எது?
--------------------------------------------------------------------------
இரவு நேரத்தில் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபடவேண்டும், பகல் நேரத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜோதிட ரீதியாக காரணம் உண்டு. தாம்பத்திய உறவைக்குறிக்கும் பாவம் ஏழாம் பாவமாகும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு துலாம் ராசி ஏழாம் பாவமாக அமைகிறது. லக்கினத்தை உதயம் என்றும், ஏழாம் பாவத்தை அஸ்தமனம் என்றும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பகல் காரகனான சூரியன் காலப்புருச லக்கினத்திற்கு ஏழாம் வீடான துலாத்தில் நீச்சமடைகிறான். இரவுக்காரகனான சனி துலாத்தில் உச்சமடைகிறான். களத்திரக்காரகனான சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடு. உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது என்பதை நீச்ச சூரியன் சுட்டிக்காட்டுகிறான். கண்களுக்கு காரகனான சூரியன் இங்கே நீச்சமடைவதால் உடலுறவின் போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவச்செயல் என்பதை ஏழாம் பாவம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் பகல் நேரம் வெப்பம் அதிகமாக இருக்கும் , இரவு நேரம் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். உடலுறவுக்கு குளிச்சியான நேரமே உகந்தது. பகல் நேரத்தில் உடலுறவு கொள்ளும்போது அதிக வெப்பத்தால் ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல் , விந்து முந்துதல் (துரித ஸ்கலிதம்) போன்ற பிரச்சினைகள் வரும். தாம்பத்திய சுகத்தை சரியாக அனுபவிக்க முடியாது. தாம்பத்திய உறவில் முக்கிய பங்கு சனிக்கு உண்டு. காமப்பசியை கிராமப்புறங்களில் மூட்டு பசி என குறிப்பிடுவார்கள். அதாவது கால் மூட்டு பசி என குறிப்பிடுவார்கள். தாம்பத்திய உறவில் கால் மூட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூட்டுக்களின் பலத்துடன்தான் உடலுறவில் நன்றாக இயங்க முடியும். கால் மூட்டுக்களை குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். காலப்புருச லக்கினத்திற்கு பத்துக்குடையவனான சனி கால் மூட்டுக்களை குறிக்கும் கிரமாகும். சனி துலாத்தில் உச்சமடைவதன் மூலம் தாம்பத்திய உறவில் தனக்கு இருக்கும் வலிமையைக்காட்டுகிறான். எதிர்பாலரை நிர்வாணப்படுத்தி வெளிச்சத்தில் பார்ப்பது பாவச்செயல் என்பதால் பகல் நேரத்தில் உடல் உறவில் ஈடுபடக்கூடாது. மேலும் பகல் நேர உடல் உறவு ஆண்களுக்கு விரைவில் ஆண்மைத்தன்மையை இழக்கச்செய்யும். மீனத்தில் களத்திரக்காரகன் சுக்கிரன் உச்சமடைகிறான். மீனம் காலப்புருச லக்கினத்திற்கு பன்னிரண்டாம் வீடாகும். காலை 4 மணி முதல் 6 மணி வரை பன்னிரண்டாம் பாவம் இயங்கும். அந்த நேரத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பான். இதனால் இந்த நேரத்தில் காம உணர்ச்சி அதிகமாக தூண்டப்படும்.

காரிய சித்தி!

காரிய சித்தி!
நாம் ஒரு காரியமாக ஒருவரிடம் போகிறோம். அவரிடம் ஏதேதோ பேசிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்கு வந்த பிறகுதான், "அடடா, அவரிடம் இதைக் கேட்க மறந்து விட்டோமே...' என்ற, ஞாபகம் வருகிறது. அப்போது ஞாபகம் வந்து என்ன பயன்?
பாண்டவர்கள் வனவாசத்தின்போது, பர்ண சாலையில், ஒரு முனிவர் இருந்தார். அவர், தினமும் அக்னி ஹோத்ரம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவரிடமிருந்த அரணிக்கட்டையை (இதைக் கடைந்து தான் நெருப்பு உண்டாக்க வேண்டும்!) ஒரு மான், தன் கொம்பில் சிக்க வைத்து, தூக்கிக் கொண்டு ஓடியது.
இதைக் கண்ட முனிவர், பாண்டவர்களிடம் கூறி, அரணிக் கட்டையைக் கொண்டு வரும்படி வேண்டினார். சகாதேவனிடம் சொல்லி, மானை துரத்திச் சென்று, அரணிக் கட்டையை மீட்டுவரச் சொன்னார் தருமர். அந்த மான் ஓடிச் சென்று ஒரு மடுவில் இறங்கியதும், ஒரு யட்சசாக மாறியது.
அந்த மடுவிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றான் சகாதேவன். அப்போது அந்த யட்சஸ், "நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தண்ணீரைக் குடிக்கலாம். சரியான பதில் சொல்லா விட்டால், நீ இங்கேயே இறந்து விடுவாய்...' என்று சொல்லி, கேள்வி கேட்டது. பதில் தெரியாத சகாதேவன், அந்த மடுவில் இருந்த நீரைக் குடித்ததும் இறந்து விழுந்தான்.
சகாதேவனை தேடி வந்த நகுலன், அர்ஜுனன், பீமன் எல்லாருமே இதேபோல் மடுவின் கரையில் வீழ்ந்து இறந்தனர். அதன்பின் தன் தம்பிகளை தேடி அங்கே வந்தார் தருமர். தருமரை பார்த்து, "நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். சொல்லாவிட்டால், நீயும் இறந்து விடுவாய்...' என்றது யட்சஸ்.
யட்சஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், சரியான பதில் சொன்னார் தருமர். இது, பாரதத்தில் யட்சப்ரச்னம் என்ற பகுதியில் வருகிறது. யட்சஸ் சந்தோஷப்பட்டு, "இங்கு இறந்து கிடக்கும் நால்வரில் யாராவது ஒருவரை பிழைக்க வைக்கிறேன். யாரை நீ விரும்புகிறாய்...' என்று கேட்டது.
"நகுலனை பிழைக்க வை...' என்றார் தருமர்.
"ஏன்? பலசாலியான பீமனையும், வில்லாளனான அர்ஜுனனையும், சகாதேவனையும் விட்டு விட்டு நகுலனை கேட்கிறாய்?' என்று கேட்டது.
அதற்கு, "குந்திக்கு ஒரு பிள்ளையாக நான் இருக்கிறேன். மாத்ரிக்கு ஒரு பிள்ளையாக நகுலன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நகுலனைக் கேட்டேன்...' என்றார் தருமர்.
தருமரின் நியாய புத்தியை மெச்சி, அனைவரையும் பிழைக்கச் செய்து, "போரில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்...' என்று வாழ்த்தியது யட்சஸ்.
நன்றி சொல்லி, யட்சஸ் கொண்டு வந்த அரணிக்கட்டையையும் கேட்டுப் பெற்றார் தருமர். வந்த காரியத்தை அவர் மறக்க வில்லை. பின், அரணிக் கட்டையை கொண்டு போய், சரியான நேரத்தில் முனிவரிடம் கொடுத்து, ஆசி பெற்றார்.
எவ்வளவு நேரம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தான் வந்த காரியத்தை மறக்காமல், காரிய சித்தியுடன் திரும்ப வேண்டும். ஊர் கதையெல்லாம் பேசி, வந்த காரியத்தை மறந்துவிடக் கூடாது

திருவாசியின் இரு பக்கங்களிலும் உள்ள மகரங்கள்

மகரயாழி----------------------------------------------------------------------------------------''''''''---------
திருவாசியின் இரு பக்கங்களிலும் உள்ள மகரங்கள் தனிப் பொருளுடைய கற்பனை வடிவம். மீன் உடலும்,யானைத் துதிக்கையும்,சிம்மக் கால்களும், குரங்கின் கண்களும்,பன்றியின் காதுகளும்,கோரைப் பற்களும்,பறவையின் இறக்கைகளும், பலவகை இலை , தழைகளும் கொண்ட வாலும் உடைய ஓர் உருவம்.இதை எந்த இனத்தில்சேர்ப்பது என்பதை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. இது பல்லுயிரனங்களின் கூட்டு. இது குழப்ப நிலையை - பிரளயக் காலத்துக் குழம்பிய நிலையைக் காட்டும். இதன் வாயிலிருந்தே கட்டு மாலைகள், சுடர்கள்,முத்துத் தாமங்கள் வெளிவருவதாக உளதல்லவா? இது, லயத்திலிருந்தே பிரபஞ்சம் தோன்றியது என்பதை காட்டும். திருவாசியின் உச்சியில் உள்ள நாசித்தலையானது, இளித்த வாயும், உருண்ட விழிகளும், கோரைப் பற்களும் கொண்டு அமையும், இது உலகம் தோன்றி வளர்ந்து பராக்கிரம நிலையின் உச்சக்கட்டத்தைக் காட்டும். அந் நிலையிலிருந்து பிரபஞ்சப் பொருள்கள் அனைத்தும் சாய்ந்து, சரிந்து, மீண்டும் மகர வாயில் அதாவது லயநிலை அடைகிறது. இதற்கு நாயகமாக இறைவன் உள்ளான் என்ற கருத்தையுணர்த்த கடவுட்படிமத்தின் பின்னணியில் இது வைக்கப்படுகிறது.
ஆனந்த நடம் புரியும் நடராஜப் பெருமானின் திருவாசியில் நாசித்தலை அமைப்பதில்லை. திருவாசியின் விலிம்பிள் தீச்சுடர்களே வரிசையாக அமைந்து விளங்கும். இத் திருவாசி, ஓங்கார வடிவினதென்ற கருத்தையுணர்த்தும் . வட்டவடிவமான இத் திருவாசி உலகத்தை யுனர்த்துகிறது. அதற்குள் காணப்படும் பரம்பொருள் அண்டசராசரம் அனைத்தின் உள்ளிருந்து அனைத்தயும் இயக்கி ஆட்டிக் கொண்டிருக்கிறது என்ற தத்துவத்தை உணர்த்தும்.
மேலுள்ள சிற்பம் உணர்த்துவது குபேரன் போன்று பொருளிருப்பினும் காலம் நம் கையில் இல்லை

Sunday, June 12, 2016

நாலு கோடி பாடல்

நாலு கோடி பாடல்
சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.(ஒளவையார் தனிப் பாடல்:42)
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே!
என்பவை எதிர்மறை ஆகும்.
நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
சொன்ன சொல் தவறாமல் வாழ்!

மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது

ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில்வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்

3ம் பிறையின் ரகசியம்..

3ம் பிறையின் ரகசியம்..
1)அமாவசை என்பது காரிருளை குறிக்கின்றது..அந்த காரிருளில் இறைவன் வெளிச்சமாக வருவதால் சிவராத்திரி ஆகின்றது..இறைவன் வருவதிலிருந்து சிருஷ்டியின் வளர்ச்சி ஆரம்பிக்கின்றது...
2)இறைவன் கலியுகத்தை அழித்து சத்யுகம்
எனும் சொர்க்க சிருஷ்டியை ஆரம்பிக்கின்றார்.. எனவே பழையது அழிந்து புதியது இணையும் அதாவது சங்கமிக்கும் நேரம் அதாவது இறைவன் சிவன் இதை ஒரு சிறிய யுகமாக அழைக்கின்றார்..அதாவது சங்கமயுகம்.. இதையே கீதையில் யுகே..யுகே. என்று சொல்லப்பட்டுள்ளது..அதனால்தான் நதியும்..கடலும்..சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றது..உண்மையில் ஆன்மாவும்..பரமாத்மாவும்...சந்திப்பதே உண்மையான கும்பமேளா ஆகும்..எனவே இரண்டாம் நாள் சிருஷ்டியில் மறைமுகமாக
உள்ள சங்கமயுகம் ஆகும்..
3)இறைவன் தந்தை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட சுவர்க்கம் கண்ணுக்கு தெரியும் 3ம்நாள்...எனவே 3ம் பிறையை பார்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று இன்பமுடன் வாழலாம் என்பது இதன் அடையாளம் ஆகும்..21 மூன்றாம் பிறையை பார்த்தவர்களுக்கு ராஜவாழ்க்கை என்பது சொர்க்கத்தின் பிறவிகள் 21என்பதை குறிக்கும்..வாழ்த்துக்கள்...

Thursday, June 9, 2016

ஞானோதயம் அடைய கிருஷ்ணர் என்ன செய்தார்…

பலருக்கும் கிருஷ்ணரை வெண்ணை திருடிய விளையாட்டுப் பிள்ளையாகவோ, குழலூதும் கண்ணனாகவோ தெரியும். அடுத்த கட்டத்தில் அரசியலில் ராஜதந்திரியாகவும், மஹாபாரதத்தில் பார்த்தசாரதியாகவும் தெரியும். நடுவில் என்ன நிகழ்ந்தது? இந்நிலையை கிருஷ்ணர் எப்படி எட்டினார்? சத்குருவின் விளக்கம்… கேள்வி நமஸ்காரம் சத்குரு. ஞானோதயம் அடைய கிருஷ்ணர் ஏதேனும் ஆன்மீக சாதனையில் ஈடுபட்டாரா? இதுபோன்ற நிலையை அவர் எப்படி எட்டினார்? சத்குரு: ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். தன்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது சிரித்த முகமாகவும், யாரும் தன்னை கவனிக்கவில்லை எனும்போது சோகமே உருவாக முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாய்க் காட்டிவிடும். தனியாய் விட்டுவிட்டால் மனிதர்களில் பெரும்பாலானோர் தாங்கமுடியா துன்பங்களாகிவிடுவர். ஆம்… உங்களால் தனிமையில் இருக்க முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் தவறான சகவாசத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே சரியான சகவாசம்தான் என்றால், தனிமையில் இருப்பது மகத்தான விஷயமாய் இருக்கும். ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். மனிதர்களுடன் கூடி இருப்பது என்பது விழாக்காலம் போன்று… ஆனால் ‘ஒரு உயிராய்த் துடிப்பது’ தனிமையில் மட்டும்தான். நீங்கள் ஒரு அழகான உயிராய் உருவெடுத்தால், இங்கு சும்மா அமர்ந்திருப்பதுமே அற்புதமாக இருக்கும். உங்கள் வாழ்வில் அவ்வப்போது ஏதோ ஒரு சூழ்நிலையில் மட்டும், அல்லது யாரையேனும் பார்த்தால் மட்டும் அன்பாக இருப்பது என்றில்லாமல், வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் எவ்வித பாகுபாடுமின்றி அன்பாக இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுவிதமாக மலரும். விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரும்போது, உங்கள் புத்திசாலித்தனம் ஊனமுறுகிறது. நீங்கள் அன்பாக இருப்பது வேறு ஒருவருக்கு தரும் பரிசல்ல… அது நீங்கள் இருப்பதற்கும், உணர்வதற்குமே அழகான நிலை. உங்கள் உணர்வுகள், மனம், உடல் என அனைத்துமே இனிதாக உணர்வீர்கள். நீங்கள் இனிமையாக இருக்கும்போதுதான் உங்கள் புத்திசாலித்தனம் அதன் உச்சத்தில் இயங்கும் என்பதற்கு, இன்று போதுமான ஆராய்ச்சி சான்றுகளும் கூட இருக்கிறது. ஒத்திசைவில் வாழ்வது உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முறை துடித்தால், நீங்கள் இந்த பூமியோடு ஒத்திசைவில் இயங்குகிறீர்கள் என்று அர்த்தம். ஏதோ செயலில் ஈடுபடும்போது இந்த எண்ணிக்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம், ஆனால், நீங்கள் ஓய்வாக இருக்கும்போது இதயத்துடிப்பின் எண்ணிக்கை 60 ஐவிட அதிகமாக இருந்தால், ஏதோ சரியாக இல்லை என்றுதான் அர்த்தம். இன்று ஆரோக்கியமாக இருக்கும் பலரின் இதயத்துடிப்பு 65 – 75 ற்குள் உள்ளது. இதுவே சூர்ய நமஸ்காரம், ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற மிக எளிமையான யோகப் பயிற்சிகளை 18 மாதங்களுக்கு நீங்கள் செய்துவந்தால் உங்கள் இதயத்துடிப்பு நிச்சயம் 60 ஆகிவிடும். இந்நிலையில் நீங்கள் பூமியோடு ஒத்திசைவில் இருப்பீர்கள் என்பதால், அன்பாக, ஆனந்தமாக, ஒரு மலர் போன்று இருப்பது உங்கள் இயல்பாகவே இருக்கும், ஏனெனில் இந்த உயிர் அப்படித்தான் படைக்கப் பட்டிருக்கிறது. சோகத்தில் ஆழ்ந்து, நோய்வாய்பட்டு உழல்வதற்கு இவ்வுயிர் படைக்கப்படவில்லை… பரந்து விரிந்து, பிரம்மாண்டமாய் மலர்வதே இதன் நோக்கம். இது தான் கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை – அவரைச் சுற்றி இருக்கும் படைப்போடு அவர் கச்சிதமான ஒத்திசைவில் இயங்கினார். இது தான் கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை – அவரைச் சுற்றி இருக்கும் படைப்போடு அவர் கச்சிதமான ஒத்திசைவில் இயங்கினார். சிறு வயதில் அவர் என்னென்ன குறும்புகள் செய்தாலும், அவருக்கு எவ்விதமான சங்கடங்களும் வரவில்லை. பலரின் வீடுகளில் இருந்து அவர் வெண்ணை திருடினாலும், மற்றவர்களின் மீது எத்தகைய சேட்டைகளை அவர் அரங்கேற்றினாலும் அனைவருக்கும் அவர் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். ஏதோ ஒரு வகையில் அவர்களை எல்லாம் அவர் தன்னோடு ஒரு ஒத்திசைவில் இருக்கச் செய்தார் என்பதற்கு இதுவே ஒரு சான்று. யாரொருவரோடு நீங்கள் ஒத்திசைவில் இருக்கிறீர்களோ, அவரோடு இருக்கும்போது நீங்கள் இனிமையாக உணர்வீர்கள். யாரொருவரோடு நீங்கள் ஒத்திசைவில் இல்லையோ, அவரைப் பார்த்தாலே உங்களுக்கு மனக்கசப்பு உண்டாகும். இனிமையும், மனக்கசப்பும் ஒரே நபரிடம் கூட உண்டாகமுடியும். ஆம்… அந்த நபரோடு ஒத்திசைவில் இருக்கும்போது அவரைப் பார்த்தால் இனிமையும், அவரோடு ஒத்திசைவில் இல்லாதபோது அவரைப் பார்த்தால் உங்களுக்கு மனக்கசப்பும் உண்டாகும்… இதற்கு அவர் ஏதும் செய்யவேண்டும் என்றுகூட இல்லை. கிருஷ்ணரின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றம் தனது 16 வயதுவரை கிருஷ்ணரின் ஆன்மீக சாதனை, தன்னைச் சுற்றி இருக்கும் படைப்போடு ஒத்திசைவில் இருப்பதிலேயே இருந்தது. அதன்பின், கிருஷ்ணரின் குரு சாந்திபாணி கிருஷ்ணரைச் சந்தித்து, அவரது வாழ்க்கை வெறுமனே ஆடிக் களிப்பதற்கல்ல, மற்றொரு பெரிய நோக்கம் இருக்கிறது என்று நினைவூட்டினார். கிருஷ்ணருக்கோ அதனை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர் வாழ்ந்து வந்த கிராமத்தின் மீதும், அதில் வாழ்ந்த மக்கள் மீதும் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது! தன்னைச் சுற்றி இருந்த அனைத்தோடும், அது ஆணோ, பெண்ணோ, விலங்கோ, குழந்தையோ… அனைவருடனும், எல்லாவற்றுடனும் அவர் முழுமையான ஈடுபாட்டோடு இருந்தார். அதனால், “எனக்கு பெரிய நோக்கங்கள் எதுவும் வேண்டாம். இந்த கிராமத்தில் சும்மா வசித்திருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கிருக்கும் மாடுகள், மாடு மேய்ப்பவர்கள், கோபியர்கள் மீது எனக்குப் பிரியம். அவர்களுடன் ஆடிப் பாட நான் விரும்புகிறேன்,” என்றார் கிருஷ்ணர். அதற்கு குரு சாந்திபாணி, “நீ எழத்தான் வேண்டும் கிருஷ்ணா. ஏனெனில், நீ பிறப்பெடுத்ததே இதற்காகத்தான். இது நடக்கவேண்டும்,” என்று வலியுறுத்தினார். தனது 22வது வயது வரை தீவிரமான ஆன்ம சாதனையில் ஈடுபட்டார். போர்க்கலைகளையும் கற்று, அற்புதமான மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். கிருஷ்ணர் “கோவர்தன மலை” ஏறி அங்கு நின்றார். அங்கிருந்து அவர் கீழிறங்கி வந்தபோது, அதுவரை இருந்த 16 வயது விளையாட்டுப் பையனாய் அவர் இருக்கவில்லை. முற்றிலும் வேறுவிதமான தீவிரத்தோடு அவர் இருந்தார். அவரைப் பார்த்த மக்களுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பேரதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தாலும், கிருஷ்ணரை இழக்கப் போகிறோம் என்பதையும் அவர்கள் அறிந்தனர். அவர்கள் கிருஷ்ணரைப் பார்த்தபோது, அவரும் புன்னகையுடன் தான் இவர்களை எதிர்நோக்கினார்… ஆனால் அவரின் கண்களில் அன்பு இருக்கவில்லை. ஏதோ தொலைநோக்கு தான் இருந்தது. அவர்கள் கற்பனைகூட செய்திராத விஷயங்களை அவர் பார்த்தார். இந்த நினைவூட்டுதல் நடந்தபின், அவர் செய்த முதல் காரியம், அவரின் தாய்மாமனான கம்சனை அழித்து, யாதவ குலத்தினரை கொடுங்கோல் ஆட்சியினின்று விடுவித்தார். அதன்பிறகு தனது சகோதரன் பலராமருடனும், உறவினன் ‘உதவா’வுடனும் தன் குரு சாந்திபாணியின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கு அடுத்த ஏழு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைபிடித்தார். தனது 22வது வயது வரை தீவிரமான ஆன்ம சாதனையில் ஈடுபட்டார். போர்க்கலைகளையும் கற்று, அற்புதமான மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். இருந்தும் அர்ஜுனர் போன்றோ, பீமர் போன்றோ, தசைகள் நிரம்பிய உடற்கட்டோடு அவர் இருக்கவில்லை. வேறுவிதமான ஆன்ம சாதனை இத்தனை ஆன்ம சாதனைகள் செய்தும், போர்கலைகள் கற்றும், கிருஷ்ணர் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்ததற்குக் காரணம், அவரின் ஆன்ம சாதனை முற்றிலும் வேறுவிதமான கோணத்தில், மாறுபட்ட ஒரு தன்மையில் இருந்தது. குரு சாந்திபாணி அவருக்கு வழங்கிய சாதனைகள், பெரும்பாலும் உள்முகமாக செயல்படும் விதமாகவே வடிவமைத்திருந்தார். கிருஷ்ணர் துவாபர யுகத்தை சார்ந்தவர் இல்லை (அவரின் வாழ்வும் செயலும் அவர் சத்ய யுகத்தை சார்ந்தவர் போன்றே இருந்தது) என்பதால் அவருக்கு எல்லாம் மனதளவிலேயே நடந்தது. கிருஷ்ணருக்கு ஏதேனும் உணர்த்தவேண்டும் என்றால், குரு சண்டிபானி அதை வாய் திறந்து சொல்லவேண்டும் என்றில்லை. உணர்த்த வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மனதளவில் பரிமாறி, மனதளவில் உணர்ந்து, மனதளவிலேயே எட்டவேண்டிய இலக்குகளையும் எட்டினார் கிருஷ்ணர். குருவின் சொற்படி அவரவர் ஆன்ம சாதனைகளை செய்துமுடித்து வெளிவந்த போது, கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் இடையே இருந்த வித்தியாசம் அப்பட்டமாய் இருந்தது. பலராமர் உடலளவில் முறுக்கேறிய தசைகளோடு ஆஜானுபாகு போல் இருக்க, கிருஷ்ணரோ வெளித்தோற்றத்தில் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்தது போன்றே காட்சிதந்தார். இதற்காக பலராமர் கிருஷ்ணரை கேலி செய்ததும் கூட உண்டு. “குரு வழங்கிய சாதனைகளை நீ செய்யவே இல்லை போலிருக்கிறது. நான் கடுமையாக உழைத்தேன். பார்… நான் எப்பேர்பட்ட வீரனாய் வெளிவந்திருக்கிறேன். ஆனால், நீயோ இப்படி இருக்கிறாய்?” என்று. இருந்தாலும் மல்யுத்த போட்டியாக இருந்தாலும், வில்வித்தையாக இருந்தாலும் யாராலும் கிருஷ்ணருக்கு ஈடுகொடுக்க முடியாது. வாள்வீச்சிலும் வெகு சிலரால் மட்டுமே கிருஷ்ணரை எதிர்கொள்ள முடியும். இப்பேற்பட்ட ஆற்றல்கள் இருந்தும் உடலளவில் அவருக்கு முறுக்கேறிய தசைகள் ஏதும் இருக்கவில்லை, ஏனெனில் அவர் செய்த ஆன்மீக சாதனைகள் முழுக்கமுழுக்க மனதளவில் நடந்தேறியது. இதன் தாக்கத்தையும் விஸ்தாரத்தையும் அவரது வாழ்வில் பல்லாயிரம் விதங்களில் அவர் வெளிப்படுத்தினார்

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான் தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான் நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய் ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய் தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்

Wednesday, June 8, 2016

புண்ணியம் வேண்டுமா?

புண்ணியம் வேண்டுமா?
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம்.
ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.
ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.
தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.
எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.
அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!

தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்

ஒரு உயிருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு துணை உண்டு. கர்ணனுக்கு தாய் துணை இல்லை; தந்தை யார் என்று தெரியாது. தேரோட்டி மகனாக வளர்கிறான். வில் வித்தை போட்டியில் விளையாட, அரச குலத்தினர் மறுப்பு தெரிவித்தபோது, துரியோதனன் ஆதரவு கொடுக்கிறான். பரசுராமன், கர்ணன் ஒரு அந்தணர் இல்லை; சத்ரியன் என்று தெரிந்ததும், “நீ கற்றது அனைத்தும் உரிய நேரத்தில் மறந்து போவாய்’ என சாபமிடுகிறார். இதன் மூலம் கர்ணனுக்கு “குரு’ பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
பாரத போர் நடக்கிறது. காயம்பட்டு கர்ணன், கீழே கிடக்கிறான். அந்தணர் வேடத்தில் வந்து தானம் கேட்கிறார், கிருஷ்ணர். என்னிடம் இருப்பதை கேள் தருகிறேன் என
கர்ணன் கூறுகிறான். இறைவனே கையேந்திய வரலாறு கர்ணனின் வரலாற்றில் வருகிறது. புண்ணியத்தை தானமாக கேட்கிறார், அந்தணர். அனைத்தையும் கொடுக்கிறான் கர்ணன்.
தானம் கேட்டு வந்த கிருஷ்ணன் கையில் கர்ணனின் ரத்தம் பட்டதும், கிருஷ்ணனுக்கு தானம் கொடுக்கும் குணம் வந்து விடுகிறது. “உனக்கு என்ன வேண்டும் கேள்,’ என, கிருஷ்ணன் கேட்கிறார். “தானம் கேட்டு வருபவர்களுக்கு தானம் கொடுக்கும் இதயத்தை கொடு,’ என்கிறான் கர்ணன்.
தன்னம்பிக்கை இல்லாதவனால் சம்பாதிக்க முடியாது. கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல; எவன் தன்னை நம்பவில்லையோ, அவன்தான் நாத்திகன். கர்ணன் தன்னை முற்றிலும் நம்புகிறான். கிருஷ்ணர் கர்ணனிடம் இதயத்தை தருகிறேன்; முக்தியும் பெறுவாய், என்றார்.
மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. நான் செய்த காரியங்களை தெரிந்து கொண்டு நான் எங்கே போகிறேன். என தெரிந்தவன் கர்ணன். தாழ்ந்தவன், ஜாதி, மதத்தை கூறி இழிவு செய்யப்பட்டதால், அவன் தீயவனிடம் சென்று சேர்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேர் ஆதரவு இல்லை என்றாலும், கொடை, தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்.

Tuesday, June 7, 2016

ராமாயணத்தில் ... இவர்கள் யார்?

ராமாயணத்தில் ... இவர்கள் யார்?
1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்
4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.
7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்
9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி
10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.
11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்
12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்
14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்
15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்
16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்
19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி
23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.
24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.
26. தசரதர் - ராமனின் தந்தை
27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்
28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.
29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி
31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.
33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்
34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.
35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்
36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்
37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்
38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.
41. மதங்கர் - தவ முனிவர்
42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.
45. மாதலி - இந்திரனின் தேரோட்டி
46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
48. ராமன் - ராமாயண கதாநாயகன்
49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.
50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.
51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்
52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்
54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்
55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.
56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.
58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.
59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.
61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.
63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.
64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்
65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.
66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.
67. மாண்டவி - பரதனின் மனைவி.
68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி........... ஓம் ராமஜெயம்

> நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை

> நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !! <
நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பற்றி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும் அது யாதெனில் ஒவ்வொரு ஆலயமும் அமைய பெற்ற இடமானது ஒரு அறிவியல் சார்ந்த அல்லது அறிவியலுக்கு நேர்மாறான ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எடுத்துக்காட்டாக திருநள்ளாறு, சிதம்பரம், போரூர் போன்ற இடங்களில் அமைய பெற்ற ஊர் மற்றும் ஆலயங்களை எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயங்களில் மூலவராக அமைக்கப்படும் சிலைகள் சாதாரண கல்லாக இருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலான கோவில்களின் மூலவர்கள் சிலாதோரணம், ஸ்படிகம், நவபாசனம், தசபாசனம், மாணிக்கம், மரகதம், ஐம்பொன், என்று இன்னும் கிடைபதற்கரிய பெயர் தெரியாத பலவிதமான பொருட்க்களால் செய்யப்பட்டவையே. அல்லது கதிர் வீச்சு சார்ந்த அறிவியல் உள்ள இடத்தில் மட்டுமே மூலஸ்தானம் அமைக்கப்படும்.
இப்படி அமைக்கப்பெற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்களும் மாறுபடுவதை காணலாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் கலக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருக்கும்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.
முன்னோர்கள் (சித்தர்கள்) குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று குறிப்பிட்ட பொருளால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நாட்கள் அதனை பிரசாதமாக சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.
ஆனால் இன்று கால மாற்றாத்தினால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
இது தெரியாத பல அறிவீலிகள் நாம் அபிஷேகம் என்ற பெயரில் அனைத்தையும் வினாக்குவதாக கேலி செய்துகொண்டு திரிகின்றன.
மீண்டும் சொல்கிறேன் நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !!

சிவாச்சாரியார்களும்பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?

சிவாச்சாரியார்களும் ஐயர்மார்களும் பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?
முக்கியமாக பொருள் தெரியாமல் தவறாக விமர்சனம் செய்யும் அறிவாளிகளும் இதை படிக்கலாம்..
பஸ்மதாரணம்:
விபூதி சிவ சின்னங்களுள் ஒன்று. சைவர்கள் எந்நேரமும் விபூதி அணிந்திருத்தல் அவசியம். “ஆளடையாளத்திற்காகத் திருநீறு இட்டுக்கொள்” என உபநிடதவாக்கியம் கூறுகிறது. நாம் எப்போதும் சிவ சிந்தனையிலிருந்து நீங்காதிருப்தற்கு விபூதி உதவுகின்றது. “வாழ்க்கை நிலையற்றது. நாம் என்றோ ஒரு நாள் சாபராகி விடுவோம்: என்ற எண்ணம் எங்கள் மனத்தில் இருப்பதற்கும் ஒருவகையில் உதவுகின்றது இந்தத் திருநீறு. இந்த எண்ணம் இருக்குமானால் நாம் தீயவற்றை நீக்கி நல்லவற்றைச் செய்ய முயற்சிப்போமல்லவ?
விபூதி பசுஞ் சாணத்தினை நீறாக்குவதால் பெறப்படுகின்றது. பசு சைவர்களின் போற்றுதலுக்குரியது. எல்லாத் தெய்வாம்சங்களும் பசுவில் இருப்பதால் கோமாதா என்றும், காமதேனு என்றும் போற்றி வணங்குகிறோம். அதன் சாணமே நீறாகி வருவதால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. பசுஞ் சாணம் நல்ல ஒரு தொற்று நீக்கி என்றும் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்றும் மருத்துவ ரீதியிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளது. விபூதியிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற நீத்தன்மையை உறுஞ்சும் தன்மையும் விபூதிக்குண்டு. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் உள்ள விபூதியை நாம் ஒரு நற்கருமம் தொடங்குமுன் தரித்துக் கொள்வது அவசியமல்லவா? நெற்றியில் திருநீறு இன்றிச் செய்யும் எக்காரியமும் பலனளிக்காது. அதனால் எந்தக் கிரியையும் ஆரம்பிக்கும் போது விபூதி தரித்தல் அவசியம். அதுவும் மந்திர சகிதமாக தரிக்கும்போது இன்னும் சிறப்பல்லவா? அவ்வேளையில் சொல்லப்பெறும் சுலோகம்:
“ஸ்ரீ கரம் ச பவித்திரம் ச ரோக தோஷ நிவாரணம்
லோக வஸ்யகரம் புண்ணியம் பஸ்மம் த்ரைலோக்ய சாதனம்”
பவித்ரதாரணம் (தர்பை அணிதல்):
விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் யாவற்றிலும் அது முக்கிய இடம் பெறுகின்றது.
சூழலில் இருக்கும் மாசுக்களை நீக்கித் தூய்ம செய்வதுடன் மந்திர ஒலிகளைக் கிரகித்துச் சேகரித்துப் படிப்படியாக் வெளிவிடுவதில் வல்லது. ஒரு கும்பத்தை உருவாக்கும்Bஓது கும்பத்தினுள்ளேயும் வெளியேயுமாக இரு கூர்ச்சங்களும் ஒரு பவித்திரமும் தர்ப்பையால் செய்யப்பட்டு அங்கு போடப்படுகின்றன. தெய்வ சக்தியைக் கும்பத்தில் தேக்கிவைக்க அவை உதவுகின்றன. அதேபோலக் கிரியைகளில் ஈடுபடும் நாம் நமக்கு மனத்தூய்மை, மனத்தெளிவு, மன ஒருமைப்பாடு என்பனவை ஏற்பட்டுக் கிரியைகளில் மனமொன்றி நிற்பதற்காகப் பவித்திரம் அணியப் பெறுகின்றது. அதிக சக்திச் செறிவும் சிறப்பான அதிர்வுகளும் தர்ப்பையில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நமது மோதிரவிரல் மிகச் சிறப்பான ஓரிடம். நமது உடலில் சில இடங்கள் நரம்புகளின் சந்திப்புகளாகவும், பல உணர்வுகளைத் தூண்டல் செய்யக்கூடிய இயல்புடையவைகளாகவும் உள்ளன. இந்த இடங்களில் அதற்குரிய ஊசிகளை முறைப்படி ஏற்றுவதன் மூலம் உடல் நோய்களை நீக்கி ஆரோக்கியம் ஏற்படுத்தும் சீன வைத்திய முறைகயாகிய “அக்யூபன்சர்” முறையை இப்போது பலரும் அறிவர். இதனை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோகள் இத்தகைய இடங்களில் துளையிட்டு தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களினால் ஆன நகைகளை அணிந்தும், பலன் பெற்று இருக்கின்றனர். செடில் காவடியும், இத்தகைய ஒன்றே. கழுத்திலும், மணிக்கட்டிலும் நகைகளை அணிவதன் மூலம் இத்தகைய நற்பலன்களைப் பெறமுடியும் என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மோதிர விரலின் அடிப்பகுதி இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு இடமாகவும் தர்ப்பை நாம் முன்னரே பார்த்தபடி நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் இருப்பதனால் சங்கல்பம் செய்வதன் ஓரங்கமாகப்ப் பவித்திரம் அணிதல் நடைபெறுகின்றது. இந்நேரத்தில் தர்பையினால் ஆன ஆசனத்தில் இருக்கும்படியும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வசதி குறைவுகள் காரணமாக பாவனையாக இரு தர்ப்பைகளைக் காலின் கீழ் போட்டுவிட்டு அமரும்படி கேட்கப்பெற்றுகிறார்க. அதேபோலக் கைவிரலில் பவித்திரம் அணிந்தபின் மலர்களுடன் சில ர்கர்ப்பைகளை உள்ளங்கைகளுக்குள்ளே இட்டுக்கொண்டுதான் சங்கல்பம் ஆரம்பமாகின்றது. தர்ப்பை அணியும் போது சொல்லப் பெறும் மந்திரம்:
“ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ கஊரீபதே தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”
கௌரீ பதியாகிய சிவபிரானே உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) நாள், லக்னம் என்பன சுலபமானவையாகவும் தாரை, சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் சுகம் செய்வனவாகவும் கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு):
யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். அலைபாயும் மனத்தினால் நாம் இறைவனை வழிபடுதல் இயலாது.
மனம் இறைவன் மீது லயித்து நமது சிந்தனை ஒருங்கு குவிக்கபடும் போதுதான் பிரார்த்தனைகள் பலனளிக்கும். அதற்கு வழிவகுப்பதே பிராணாயாமம். புறச்சிந்தனைகளை ஒதுக்கி மனத்தை அகவயப்படுத்தி இறைநினைவைக் கிளரவைத்து நாம் இப்போது மற்றெல்லாவற்றையும் மறந்து இக்கிரியைஅயில் ஒன்றுபடப் போகிறோம் என்ற உணர்வோடு இந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். இப்போது சாதாரணமாக நமக்காகக் கிரியைகளைச் செய்யப் போகின்ற அர்ச்ச்கரே பிராணாயாமத்தில் ஈடுபடுவது வழக்கம்.
“ஓம்பூ: ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம்.
ஓம் த்த்சவிதுர்வரேண்யம். பர்க்கோ தேவஸ்ய தீமஹீ. தியோ யோ த:: ப்ரசோததயாத்.
ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரம்ம பூர்புவஸ்வரோம்.
சுவாசக் கட்டுப்பாடாகிய பிராணாயாமம் பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தில் தொடங்கி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனப்படும் ஏழுலகங்களையும் கூறி அதன் பின் காயத்திரி மந்திரத்தைச் சொல்லி நிறைவு பெறுகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள்; எந்த ஒளிக்கடவுள் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை மனதில் தியானிப்போமாக.
விநாயகரைத் துதித்தல்
எக்காரியமும் விநாயகர் வழிபாட்டோடு தொடங்குவது நமது பாரம்பரிய மரபுமுறைப்படி அமைவதாகும்.இது விக்கினங்கள் இன்றி நமது கருமம் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நெற்றியிலே குட்டுகின்றோம். ஏன் குட்டி வணங்க வேண்டும் என்பதற்குக் கயமுகாசுரன் கதையும், அகத்தியர் கதையும் காரண விளக்கங்களைத் தருகின்றன. என்றாலும் முன்னர் குறிப்பிட்டவாறு நமது உடலில் சில இடங்களில் சில முக்கிய இயல்புகள் இருக்கின்றன.
அவ்வையில் நெற்றியின் இரு மர்ங்கிலும் குட்டும் போது அமிர்த கலசங்கள் கலங்கி உடலை நனைக்கின்றன.என்று ஞானியர் கூறுவர். இவ்வாறான செயல்பாடுகளில் நமது உடலின் கருவிகள் (அங்கங்கள்) ஈடுபட; வாய் மந்திரங்களையோ திருமுறைகளையோ கூற மனம் இறைவனின் திருவுருவையும் அவரது கருணைச் செயல்களையு நினைக்க அவ்வேளையில் நமது ஆன்ம ஈடேற்றத்தின் முதல் நிலையாகிய ஒருமைப்பாடு சித்திக்கத் தொடங்குகிறது.
திரிகரணங்களாலும் அதாவது; மனம், வாக்கு, காயம் (நினைவு,சொல்,செயல்) இறைவனோடு ஒன்றிநிற்றல் எனப்படும் நிலை இதுவே. இவ்வேளயில் சொல்லப்பெறும் விநாயகர் வணக்க சுலோகமும் அதனைத் தொடர்ந்து சொல்லப் பெறும் சில மங்கள சுலோகங்களும் இவை:
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாத்தயே”
வெண்மநிற வஸதிரம் தரித்தவரும், எங்கும் நிறைந்தவரும், நான்கு கரங்களை உடையவரும், மலர்ந்த முகத்தை உடையவருமாகிய விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குதற் பொருட்டுத் தியானிப்போமாக.
“மானசம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம்
ஸ்ரீ சிவஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ஸயஹ”
மனதாலும், வாக்காலும், செயல்களாலும் நாம் செய்துகொண்ட பாவங்கள் சிவனை நினைப்பதால் ஐயமின்றி அழிந்துவிடுகின்றன.
“திதிஸ் சிவஸ் ததாவாரோ நக்ஷ்த்ரம் சிவ ஏவச
யோகஸ்ச்ச கரணம் சைவ சர்வம் சிவமயம் ஜகத்”
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என்னும் பஞ்சாங்க உறுப்புக்களாகிய இவ்வுலகிலுள்ள காலவரையறை எல்லாமே சிவமயமாக, மங்கலமாக இருக்கட்டும். என்பனவாம்

Monday, June 6, 2016

ஏழு தாதுக்கள் என்பது எதனால்?

ஏழு தாதுக்கள் என்பது எதனால்?
**********************************
உணவிலிருந்து, ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து
எலும்புகள்,எலும்பிலிருந்து
ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம்
உண்டாகிறது.அதை இயக்குமிடம்
இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி
உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து
வாயுவஜம்தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை
நாடுகிறது.இது இறைவனின் நீதி.யஜுர்வேதம்
…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால்
ஓரிரவு கழிந்ததும் கருவானது
கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி
போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்
தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு
உண்டாகிறது.ஆறாவது மாதத்தில்
வாய்,மூக்கு கண்கள்.காதுகள்
உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன்
கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்ற
ன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும்,தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும்
ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும்
,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால்
பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால்
அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத் 3கர்பத்தில்
இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது
மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும்.பாபச்செயல்களையும்
உணர்கிறது.முன்பு என்னால் ஆயிரக்கணக்கான
யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான
ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும்
ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும்
இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.
நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன்.
யோனியினின்று வெளிவந்தால் இனி நான்
பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந
்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை
நாராயணனை சரணடையப்போகிறேன
்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான்
பாபத்தை போக்குவதும் கருமப்
பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான
ஞானமார்க்கத்தை அப்பியாசம்
செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால்
பிரம்மத்தை தியானிப்பேன் என்று
எண்ணுகிறான்.பிறகு யோனித்துவாரத்தை
அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனை
ப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி
பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால்
தொடப்பட்டு நினைவிழந்து
முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும்
அறிவதில்லை

Wednesday, June 1, 2016

பசுவவின் புனிதத்தைப் புரிந்துகொள்ளுங்கள்

பசுவவின் புனிதத்தைப் புரிந்துகொள்ளுங்கள் .............................பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.
90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனதுஎன்று ஆராய்ந்து போது ஆச்சர்யம்அடைந்தார்கள்.
ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.
அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.
அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!

மௌனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

இந்த பூவுலகில் பிறந்த எல்லா உயிர்க்கும் இறப்பு மட்டுமே நிரந்தரம். பிறப்பு, பிறந்து நன்கு வளர்ந்த பின்தான் பிறப்பின் இரகசியம் நமக்கு தெரியும். ஆனால் பிறந்தபின் நாம் நிச்சயம் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பதை வாழும்போது உணர்வோம். இந்த இரகசிய பிறப்பை அமைதியாக ரசித்து வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர்.
ஒரு குறுகியகால வாழ்க்கையில் இன்பத்தையும் துன் பத்தையும் அனுபவிக்காதவர்கள் இந்த உலகத்தில் இரு க்கமாட்டார்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களு க்கு இடமில்லை. எல்லாம் இருந்தும் சிலருக்கு வாழ தெரியாது. சிலருக்கு இருப்பதை கொண்டு வாழதெரி யாது. இன்னும் பலர் குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கை யை வட்டமிட்டுகொள்வார்கள்.
ஆனாலும் ஒரு சிலர், தமது வாழ்க்கை போராட்டத் துக்குள் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடு வார்கள். அந்த வாழ்க்கை போராட்டமாக மாறுவது ஏன்? விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு ஆகியன இன்மையால் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகின்றது.
அன்பை கொடுப்பதற்கும் அன்பை பெறுவதற்கும் எம்முடைய வார்த்தை பயன்பாடு மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததாகவும் இருத்தல் வேண்டும். அதுதான் வள்ளுவரே! 'தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்றும் 'யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' . சொல்லியுள்ளார் .
விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு இவற்றை கடைபிடித்தால் அன்புக்கு பஞ்சமே இருக்காது. அன்பு இருந்தால் இந்த உலகத்தில் நிம்மதியாக இருந்துவிடலாம்.
அன்பை வார்த்தைகள் மூலம் மட்டுமல்ல மௌனத்தின் ஊடாகவும் வெளிப்படுத்தலாம். வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம்;. உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம்.
மௌனமும் ஆன்மீகமும் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஆன்மீகத்தின் ஓர் அடையாளமான தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துகிறோம். பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் அவ்வப்போது ஒருநாள் மௌன விரதத்தைக் கடைப்பிடிப்போரையும் காண்கின்றோம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மருத்துவ அடிப்படையிலும் உடல் உறுப்புக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
என்றாலும், எல்லா நேரங்களிலும் மௌனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் தேவையானவற்றைத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுவது அவசியமாகிறது. அதிக ஒலியுடன் ஆவேசமாகப் பேசுவதால் உடலின் சக்தி வீணாவதுடன், அப்படிப் பேசுபவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் தவறானதாக நேரிடும். எனவே, அளவுடன் தேவையானவற்றைப் பேசி நல்ல மனோநிலையை அடைவோம். மௌனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.