Wednesday, June 22, 2016

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.
அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.
இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.
அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.
ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.
அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.
கனவு காணும்.கற்பனை செய்யும்.
மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.
அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!
உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.
பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.
ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி
சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்
நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.
`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)
அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.
`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
என்றான் வள்ளுவன்.
`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.
எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.
இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.
ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.
பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.
கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.
அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
நல்ல குலப்பெண்களால் அது முடியும்.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.
`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.
பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.
நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.
தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்
முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.
எல்லாம் சரி.
அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.
`தாயைப் பார்த்துப் பெண்ணெடு
தரத்தைப் பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்துப் பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
என்பார்கள்.
“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.
“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.
தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.
அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.
ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.
இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.
அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி
முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.
காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)
குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.
`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.
எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள். என்னை கேட்டல் ஜாதி இரண்டொழிய (ஆண்,பெண்) வேறொன்றுமில்லை
நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.
குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.
இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,
ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:
“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”
“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.
குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்
ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”
என்றான் வள்ளுவன்.
“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.
ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.
நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே
வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.
நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறா மற் சந்நியாசம் கொள்!”
“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்
போல்வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே
- தொண்டா
செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”
என்றாள் தமிழ் மூதாட்டி.
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
பின்வந்(து)
உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”
என்று புலம்பினார் பட்டினத்தார்.
சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்
தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
என்கிறார்கள்.
“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.”
இதுவும் மூத்தோர் மொழி.
“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!
இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.
இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு
ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

வீரமங்கை பைசா கிரண்தேவி

வீரமங்கை பைசா கிரண்தேவி ....
அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கலாம் ...
அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நினைவிருக்கிறது ... ஆனால் அக்பர் எத்தனை பெரிய அயோக்கியன் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த காமுகன் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேலா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவானாம். பெண்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் விழா அது. அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வானாம். அவனை கண்ணில் அகப்படும் அழகான பெண்களை அவனின் பெண் வேலையாட்கள் நைச்சியமாக பேசி அக்பரிடம் அழைத்து வருவார்களாம் ... ஏன் ... எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ?
அப்படி ஒரு முறை விழா நடந்தபோது மஹாராணா ப்ரதாபின் தம்பி ஷக்திசிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் ப்ருத்விராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) வந்துள்ளார்.
அவரின் அழகில் கிறங்கிய அக்பர் ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார். அக்பர் அவரை தொடமுயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளி ... அக்பரின் நெஞ்சில் கால் வைத்து ... கத்தியை கழுத்தில் வைத்துள்ளார் ... கீழ்தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார் ... அப்போது அக்பர் "தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் ... என்னை மன்னியுங்கள்" என்று கதறியிருக்கிறான் ... கிரண் தேவி ஆணையிடுகிறார் ... இனி எப்போதும் நவ்ரோஜ் மேலா நடத்தக்கூடாதென்று ... அக்பர் ஒப்புக்கொண்டு ஓடுவிடுகிறார் ...
இந்த தகவல் கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இருக்கிறது ... இந்த ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் "உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து ... கத்தியோடு நிற்கும் கிரண்தேவி" என்ற தகவலுடன் இருக்கிறது ...
Courtesy: @chetan kumawat Gauri Mata Devi Ajay Deb

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்:

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்:
1. சிவபெருமான் ஞானக்கண் எனப்படும் நெற்றிக்கண்ணை உடையவர்,
2. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருப்பவர்
3. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர்.
4. மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.
5. காளை மாட்டை வாகனமாக வைத்திருப்பவர்
6. நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள்
7. தலையில் பாயும் கங்கை..
8. பத்மாசனம் இருக்கை.
9. ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில் - தியான நிலை.
10. செம்மை நிற சடைமுடியான்.
11. தலையில் கொன்றை மலர்.
12. உடல் முழுவதும் திருநீற்று கோடுகள்.
13. கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை.
14. கழுத்தில் பாம்பு.
15. காதில் தோடுகள்
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி சிவனைக் கொல்லும்படி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார்.
பின்பு அந்த வேள்வியில் மானுண்டாகி வர அதனை இடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு மழுவுண்டாகி வர அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர்.
பின் முயலகன் என்னும் அசுரனுண்டாகி வர அவனைக் கீழே தள்ளி முதுகிலேறி நின்றார். மந்திரங்களை ஏவினார்கள் அவைகள் டமருக (உடுக்கை) ரூபங்கொண்டு வர திருக்கரத்தில் வைத்தருளினார்.
சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார்.
காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார்.
துருவாச முனிவரின் மாணவர் சிலாத முனிவர் என்பவருக்கும் சித்திரவதி என்ற குணவதிக்கும் குழந்தைச் செல்வம் இல்லாததால் ஸ்ரீசைல மலையில் புத்திரப்பேறு வேண்டி சிவனை நோக்கி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்கள்.
சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி யாகபூமியை உழுதால் தங்கப் பெட்டகம் ஒன்று வெளிப்படும். அதில் ஒரு புத்திரன் தோன்றுவான். அவன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூலோகத்தில் வாழ்வான் என்று கூறி மறைந்தார். சிறந்த சிவபக்தரான அக்குழந்தையே நந்தி தேவர். சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே.
பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு) கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர்.
பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோளை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.
யானைரூபமாகத் தோன்றிய கஜாசுரனென்பவன்
பிரம்ம தேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பிரம தேவன் தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு பயந்து ஓடிக் காசியில் மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை மிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக் கலக்கியபோது தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொள்ள தேவர்கள் சிவபெருமான் ஒரு பைரவரையனுப்ப அவர்போய் வலைவீசி அந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால் தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார்.
அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலில் மூழ்க அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொள்ள அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கினார். இதனால் மமதை அடைய அவரின் மமதையை அடக்கும் பொருட்டு ஈசன் விநாயகரை அனுப்பிவைத்தார்.
விநாயகர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடல் நீரையெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச் சிந்தினார்.
அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்துக் கிடக்க, விநாயகர் அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்க தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.
ரணியாட்சன் என்னும் அசுரன் பிரம்மதேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான். அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று பின் மமதை அடைய பரமசிவன் சுப்பிரமணியரையனுப்ப அவர் அந்த பன்றியின் தலையை வேலினால் குத்தி அமுக்கி அதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க அதை முன்போலத் தரித்துக்கொண்டார்.
விஷ்ணு வாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க முயலுகையில் சிவபெருமான் வைரவரையனுப்ப, அவரந்த விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து எம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக வைத்துக்கொண்டார்.
இரணியனைக் கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, சிவபெருமான் சரபேஸ்வரர் ரூபமெடுத்து அச்சிம்மத்தின் தலையைப்பிளந்துக் கொன்றனர். தேவர்களதன் தோலைக் கொண்டு சிம்மாசனம் செய்து சுவாமியை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
தேவர்கள் அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக் கண்டு தேவர்கள் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன், நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
குரண்டாசுரனென்னும் அசுரன் கொக்கு ரூபமாயிருந்து, தேவர்களை துன்புறுத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது கொக்கு இறகை அணிந்து கொண்டார்.
பிரம்மா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல் பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை யணிந்திருப்பதனால் சிரமாலியென்றும்
கபாலந்தரித்துக்கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.
அரக்கர்களை அழிக்க விஷ்ணு, அவதாரங்கள் எடுத்து அந்த செயல் முடித்த பின் அந்த அவதாரங்களின் உக்கிரத்தால் யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்பதற்காக தான் அந்த அவதாரங்களின் எலும்புகளையும் சிரங்களையும் மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக் கொண்டதே அன்றி பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டது அல்ல.

சிதம்பர தரிசனம் !!!

சிதம்பர தரிசனம் !!!
இன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார் குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது.
ஐந்து வயது வரை வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை யருள வேண்டினார். அவர், குமரகுருபரரை ஸ்தல யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டார். காசிக் குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று வருந்திய குமரகுருபரரைச் சிலகாலம் சிதம்பரவாசமாவது செய்ய வேண்டும் என்று பணித்தார். குருவின் கட்டளைப் படியே குமரகுருபரர் சிதம்பரம் செல்கிறார்.
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். இது மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்த கோவையைப் போல நேரிசையாசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற செய்யுட்களால் இயற்றப்பட்டது.
இல்லறமும் துறவறமும்
தாம் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் இல்லறத்தின் பெருமையையும் மாண்பை யும் சிதம்பர மும்மணிக்கோவையில் விவரிக்கிறார்.
இல்லறத்தான் நல்ல நூல்களைக் கற்று, நற்குணம் நிறைந்த மனைவியோடு அன்போடு அரு ளும் சேர்ந்து இன்சொல் நிறைந்தவனாக விளங்க வேண்டும். வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும். அடி யார்களையும் பேண வேண்டும். ஐவகை வேள்விகளான பிரமம், தெய்வம், பூதம், பித்ருக்கள், மானிடம் என்னும் 5 வகையான வேள்விகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று என்ற முதுமொழிப் படி வாழ்ந்து பிறன் மனை நயவாமல் தன் மனைவியோடு இனிது வாழ்ந்து நன்மக்கட் பேறடைய வேண்டும்.
துறவறம் – கல்வி கேள்விகளின் மூலம் சிறந்த பேறறிவு பெற்று, அருளும், புலன்களின் வழியே செல் லாத மனவலிமையும், பேரொழுக்கமும், வாய்மை, தவம் தூய்மையும் உடையவனாகி ஓரறிவுடைய மரஞ்செடி கொடி களிடமும் அன்பும் உடையவனாக வேண்டும். கால்நடை யாகவே செல்ல வேண்டும். தோலாடை அணிய வேண்டும். துன்பம் கண்டு துவளாமல் காடும் மலையும் கடக்க வேண்டும். காற்றையும் நீரையும் உண்டு வாழ வேண்டும். பனிக்காலத்தில் நீரில் நின்றும் வெயில் காலத்தில் தீயில் நின்றும் தவம் செய்ய வேண்டும்.
இல்லறம் துறவறம் இரண்டி லுமே பல பிரச்சனைகளும் துயரங்களும் இருப்பதால் இந்த இரண்டு நிலைகளையும் கடைப்பிடிக்க மனவலிமையும் உடல் வலிமையும் இல்லாததால் மனங்கலங்கி வேறு ஏதாவது எளிய வழி இல்லையோ என்று அறிஞர்களைக் கேட்க அவர்கள் முக்தித் தலங்களான திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்கவே முக்தி என்று சொன்னார்கள். நல்ல புண்ணியம் இருந்தால் (ஊழ்) மட்டுமே திருவாரூரில் பிறக்க முடியும். காசிக்குச் செல்வதோ மிகவும் கடினம், காடுகளைக் கடக்க வேண்டும். வழியில் பசியாகிய தீ வாட்டும். மிகவும் குளிராக இருக்கும். பலவிதமான நோய்கள் ஏற்படலாம். போய்ச் சேர நீண்ட காலம் பிடிக்கும்.
காசியில் இறத்தல் நோக்கித் தேசம் விட்டு
அறம்தலைத் தந்த அரும்பொருள் தாங்கிப்
பிறன் பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
கழி பெருங்கானம் நீங்கி வழியிடைத்
தீப்பசிக்கிரங்கி நோய்ப்பிணிக்கு ஒதுங்கிப்
பல்பிணிக்கு உடைந்து செல்லுங் காலத்து
இடைச் சுரத்து இறவாது இன்னுயிர் தாங்கிக்
கிடைத்தனனாயின் அடுத்த நல்லொழுக்கமோடு
உடல் விடுகாறும் அத்தட நகர் வைகி
முடிவது கடைபோக முடிவதோ அரிதே, அதனால்
சிற்றுயிர்க்கிரங்கும் பெரும் பற்றப் புலியூர்
உற்ற நின் திருக்கூத்து ஒருக்கால் நோக்கிப்
பரகதி பெறுவான் திருமுன்பு எய்தப் பெற்றனன்
அளியேன்
என்று தான் சிதம்பர தரிசனம் செய்து முக்தி பெற வந்தாகச் சொல்கிறார் குமரகுருபரர்.
தில்லைத் தாமரை
நடராஜப் பெருமான் நடமிடும் பொன்னம்பலத்தைத் தரிசித்தவருக்கு அது தாமரை மலர் போல் தோன்றுகிறதாம்.ங்குள்ள மாடங்கள் இதழ்களாக வும், மன்றம் தாமரையின் உட்கொட்டையாகவும், விண் தோய் மாடங்களில் படியும் மேகங்கள் வண்டாகவும் காட்சி யளிக்கிறதாம். திருமகள் வீற்றிருக்கும் புண்டரீகத்தோடு நடராஜப் பெருமான் ஆடும் புண்டரீகத்தை ஒப்பிடுகிறார்.
மன்றம் பொகுட்டா, மதில் இதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பரால்—பொன்தங்கும்
நற் புண்டரீகமே ஒக்கும் நடராசன்
பொற் புண்டரீகபுரம்.
ஐவகைத் தொழில்
தூக்கிய திருவடி துணையென நம்பி வந்தவர், பெருமான் ஆக்கி, அழித்து உலகை நீக்கி, மறைத்து, அருளும் ஐந்தொழிலையும் நிகழ்த்துவதைக் காண் கிறார். உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் தானே சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது. இதையே பின்னல் வந்த ஒரு புலவர்
ஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளும்
ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே
தூக்கிய திருவடி துணையென நம்பினேன்
தூய நடராஜனே
என்று நெகிழ்ந்து பாடினார். குமரகுருபரர்,
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்
தானே வகுத்தது உன் தமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே
தோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே
இத்தொழில் ஐந்தும் நின் மெய்த்தொழில்..
என்று போற்றுகிறார். ஐயன் ஐந்தொழில் புரிகிறான் அம்மை என்ன செய்கிறாள்? சிறு குழந்தைகளுக்குச் சில மருந்துகளை நேரடியாகக் கொடுக்க முடியாது. அதற்காகத் தாய் அந்த மருந்தைத் தான் உட்கொண்டு தன் பாலின் மூலம் மருந்தின் பயனைக் குழந்தைக்குக் கொடுப்பாள். அதேபோல உலகமாதாவான சிவகாமி அம்மையும் நடரஜப் பெருமானின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரும் படி செய்கிறாளாம்.
குமரகுருபரரின் பெருமிதம்
பெரிய தவத்தையுடைய தொண் டர்கள் தளராமல் பலகாலம் கற்று, உணர்ந்து, தெளிந்து, செம்பொருள் இதுவென்று பலமுயற்சிகளும் செய்து வீடு பெற்றனர். நானோ அம்பலம் தரிசனம் மாத்திரம் செய்தே பிறவா நெறி பெற்றேன்!
பாம்பு ஆட்டுவிக்க ஆடும் பெருமான்
அம்பலத்தாடும் நடராஜப் பெருமா னையும் சிவகாமி அம்மையையும் தரிசித்த குமரகுருபரர், அங்கு ஒரு பாம்பு ஐயனை ஆட்டுவிப்பதைக் கண்டு அதிசயிக்கிறார். இது என்ன அதிசயம்! ஐந்து இந்திரியப் பாம்புகளையும் ஆட்டுவிக்க வல்ல சித்தராகிய தில்லைக் கூத்தன் இங்கே ஒரு பாம்பு ஆட்டுவிக்க அதற்காக ஆடுகிறாரே என்று வியக்கிறார்.
பதஞ்சலி என்ற முனிவர் பாம்பு வடிவத்திலே ஐயனின் ஆடலைக் கண்குளிரக கண்டு களிக் கிறார். நடராஜப் பெருமான் பதஞ்சலி முனிவருக்காகவே ஆடல் நிகழ்த்துகிறார் என்பது வரலாறு. இதையே
ஓட்டுவிக்கக் கூட்டினை விட்டோடும் பொறியரவு
(ஐந்)தாட்டுவிக்கும் சித்தர் நீராக்கால்—கூட்டமிட்டு
மன்றாடும் உம்மை ஒரு மாசுணம் நின்றாட்டுவிக்க
நின்றாடுகின்றதென் கொல் நீர்?
என்று வினவுகிறார். மன்றில் ஆடும் மாசுணம் என்பது பதஞ்சலி முனிவரை. ஒரு பாம்பு உம்மை ஆட்டுவிக்கிறதே என்று அதிசயிக்கிறார்.
இடம் போதுமோ?
ஆடல் வல்லானைப் பார்க்கப் பார்க்க புலவருக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டாகிறது.
ஐயனுடைய தோள்கள் மலைகளைப்போல இருக்கின்றன வாம். திருமேனியே ஆகாயம்! திருமுடியோ மூதண்டகூடம்! வில்லோ மேருமலை! இவ்வளவு பெரிய திருமேனியுடைய பெருமானுக்கு கையைக் காலை வீசி ஆட இந்த அம்பலம் போதுமா என்ற கவலை உண்டாகிறது.
வேதண்டமே புயங்கள் விண்ணே திருமேனி
மூதண்டகூடமே மோலியாம்—கோதண்டம்
ஒற்றை மாமேரு உமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றம்பலம்.
இப்படித் தன் கவலையைத் தெரிவிக்கிறார் குமரகுருபரர்.
பாம்பு, கங்கை, சந்திரன்
இடம் போதுமா என்ற கவலை இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்க்கும் புலவருக்கு, பெருமானின் மேனியிலிருக்கும் பாம்பு, கங்கை, சந்திரனைப் பார்த்த்தும் இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.
ஐயனின் சடைமுடியிலுள்ள பாம்பு மூச்சு விடுகிறது. அந்த மூச்சுக் காற்றால் கங்கை அலையெறிகிறதாம். ஆனால் பாம்பின் கண்ணிலிருந்து உண் டான தீயால் வற்றி விடுகிறதாம். ஐயன் நெற்றிக் கண்ணிலி ருந்து படர்ந்தெழுந்த தீக் கொழுந்தால் சந்திரனிடமுள்ள அமுதம் உருகி கங்கையில் வற்றிய நீரைச் சமன் செய்து விடுகிறதாம்!
இடது பாதம் தூக்கி ஆடுவது ஏன்?
அம்பலத்தான் ஆட்டத்தில் ஈடு பட்ட குமரகுருபரருக்கு ஒரு கேள்வி பிறக்கிறது. ஐயன் ஏன் இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்? பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா? தனது வலது பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா? அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ? இப்படி எண்ணிப் பார்க்கிறார்.
தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர் முடித்த
நக்கனார் தில்லை நடராசர்—ஒக்கற்
படப்பாயலான் காணப் பைந்தொடி தாள் என்றோ
இடப்பாதம் தூக்கி ஆடியவா இன்று?
என்று தன் கற்பனையை விவரிக்கிறர்.
திருவடிச் சிவப்பு
தூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது? ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ? இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பதஞ்சலியார், பதம்+சலியார் !
நடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே! இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?
ஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+ சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்று கிறது!
சென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்? என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி சாடப் பதஞ்சலியார் தாம்
என்று நயம் படப் பேசுகிறார் குமரகுருபர முனிவர்.
குமரகுருபரரின் விண்ணப்பம்
நட்டம் பயிலும் நாதனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் குமரகுருபரர். புலியூரில் ஆடும் ஐயனே! ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா? அன்று தொட்டு இன்று வரை ‘சுழலும் பிறப்புக்கு வருந்தவில்லை. பெருங்கடலையே நீந்திக் கடக் கும் வல்லமையுடைய ஒருவன் எப்படிச் சிறிய உப்பங் கழி யைக் கடக்க அஞ்ச மாட்டானோ அதுபோல இது வரை எண்ணிலடங்காத பிறப்புக்களை யெடுத்து உழன்ற நான் இனி வரும் பிறப்புக்களுக்கும் அஞ்ச மாட்டேன்.
ஆனால் இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் என்னைப் பற்றிப் பேசுவார்கள். உன் திரு நடனக் கோலத்தைத் தரிசித்த பின்னும் நான் பிறவியைப் பெற்றால் நான் அஞ்ச மாட்டேன். ஒருமுறை திரு நடனம் தரிசனம் செய்த மாத்திரத்தில் முக்தி கிட்டும் என்று வேதம் சொல் வது உண்மையல்லவா? ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே?” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே! எனக்காக இல்லாவிட்டாலும் தேவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவாவது எனக்கு அருள் செய்ய வேண்டும்.
கேட்ட வரம்
தில்லை வாணா! எனக்கொரு வரம் தரவேண்டும். பெருங்குளிரில் அழுக்கடைந்த கந்தைத் துணியைத் தவிர உடுக்க வேறொரு துணியில்லாமல் போனாலும், படுப்பதற்கு வாயிற்புறத் திண்ணையைத் தவிர
வேறு போக்கிடம் இல்லாவிட்டாலும், கடும் பசி வேளையில் வாய்விட்டு அழுதபோதும் உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ் கூடக் கொடுப்பவர் இல்லாவிட்டாலும் ஒழுக்கமும் கல்வி கேள்விகளில் சிறந்த அடியார் கூட்டத்தோடு சேரும் பேறு வேண்டும். என் உயிர் நீங்கும் அளவும் உதவி உன் பெரும் பதத்தை அருள வேண்டும். உன் திருப்பாதமே முக்தி யாதலால். அதையே வேண்டுகிறேன். ஒருவேளை நான் அறியாமையால் வேறு எதையாவது கேட்டாலும் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்கிறார்.
இந்திர பதவியும் வேண்டாம்
புலியூர்ப் பெருமானுக்கு ஆட்படுவதன்றி இந்திரபதவியும் வேண்டாமாம் இவருக்கு.
“இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறுனும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”
என்று பாடிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல இவரும் தீவிரமாகப் பேசுகிறார்.திருமால் பதவியும் இவருக்குத் துச்சமே!
புனையேம் தருவுதவு பொன்னரிமாலை
வனையேம் பசுந்துழாய் மாலை—பனிதோய்
முடிக்கமலம் சூடினேன் மொய்குழலோடு ஆடும்
அடிக்கமலம் சூடினோமால்.
முடியிலே கங்கையையும், இடப் பக்கத்திலே உமாதேவியாரையும் கொண்ட சிவபெருமானு டைய அடித்தாமரையைச் சூடியதால் இந்திரலோகத்துப் பொன்னரி மாலையையும் திருத்துழாயையும் சூடமாட்டேன் என்கிறார்.
வீடுபேறு நிச்சயம்
இறைவனின் திருவடிகளே வீடு பேறு. இறைவனின் அடித்தொண்டு செய்யாத எனக்கும் அவன் தாள் நீழலின் கீழ்ப் பொலியும் சீருண்டு. ஏன் தெரி யுமா? சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால்! அமுதத்தை யார் உண்டாலும் அவர்கள் இற வாமை நீங்கப் பெற்று தேவர்களாகி விடுவதைப் போல், தில்லைக் கூத்தனின் திருநடனத்தை யார் தரிசித்தாலும் அவர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம்.
நீருண்ட புண்டரீகத் துணைத்தாள்
நிழற்கீழ்ப் பொலியும்
சீருண்டு, அடித் தொண்டு செய்யா எனக்கும்
சிற்றம்பலத்து எம்
காருண்ட கண்டனைக் கண்டனனால்
அக்கடலமுதம்
ஆருண்டனர் மற்று அவர் எவரேனும்
அமரர்களே.
இவ்வளவு பெருமைகளைப் பெற்றிருப்பதால் தான்
“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்,
சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ”
என்று நந்தனார் தவித்தாரோ? இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய சிதம்பரத்தை நாமும் ஒருமுறையாவது தரிசிப்போமே.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
தகவல் ; தமிழ் ஹிந்து/சிதம்பர தரிசனம்

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம் -

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம் -
உயிரும் உடலும் ஆகிய மனிதன்
மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா). இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும். புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்
ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
ஓம் - மூச்சி ஒலி (ஆன்மா)
ந - நிலம், தேவதை - நீலி, புலன் - மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்- முனைப்பு
ம - மழை(நீர்), தேவதை - மாரி, புலன் - நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு
சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் - கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு
வா - வாயு, தேவதை - சூலி, புலன் - மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்
ய - ஆகாயம், தேவதை - பாலி, புலன் - காது, ஞானம்-ஒலி,

Tuesday, June 21, 2016

வாழ்க்கை பயண துன்பங்கள்

வாழ்க்கை பயண துன்பங்கள்
*******************************
கடவுளின் சக்தியை அறிந்தவன் இன்பத்தில் துள்ளுவதுமில்லை. துன்பத்தில் துவளுவதுமில்லை. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” ஆனால் நாமோ உணர்ச்சிகளே வாழ்க்கையாக வாழ்கின்றோம். இதுவும் கடந்து போகும் என்னும் பக்குவ நிலை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?
எல்லாவற்றின் மீதும் அளவு கடந்த ஆசை. அடைய வேண்டுமென்ற துடிப்பு அல்லது எதற்கெடுத்தாலும் பயம். எதைச் செய்யப்போனாலும் தயக்கம். அதன் பலனில் சந்தேகம். விளைவு மாறி வந்துவிட்டால் உடனே உலகத்து சோகமெல்லாம் நம்மிடம் தான், எனற மனநிலை.
என்னுடைய நாடகத்தில் இது ஒரு காட்சி என்ற மனநிலையுடன், வருபவற்றை எதிர்கொண்டு, அதனால் பாதிப்பு அடையாமல், அடுத்தது என்ன என்று வாழ்பவர்களே அறிவுடையவர்கள். ஆனால் இது எல்லோருக்கும் சட்டென்று வந்துவிடாது. அறியாமையும் அகந்தையும் உள்ளவரை எல்லாமே கஷ்டம் தான். துன்ப துயரம் தான்.
எனவே தான் ஞானம் பெற்ற நிலையில் கர்மயோகியாக வாழச்சொல்கிறார் முன்னோர்கள். ஞானம் பெற்றவர்களால் தான் சமநிலையில் இருக்க முடியும். எத்தனையோ பாமர மக்கள் எந்தவிதப் படிப்பறிவும் இல்லாமலேயே இத்தகைய பக்குவமடைந்த மனநிலையில் பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர் என்பதும் ஓர் உண்மை.
“இவ்வாறு விவேகத்தால் விடுதலை பெற்றவன் புலன் இன்பங்களாலும், புறப்பொருட்களாலும் கவரப்படுவதில்லை. அதற்கு மாறாக அவன் தன்னுள்ளே இன்பத்தில் திளைத்து மூழ்குபவனாக இருக்கிறான். இவ்வாறு கடவுளின் கருத்தைச் செலுத்துவதால் தனக்குள்ளே இன்பத்தை அனுபவிப்பவன் இறைவனுடன் பொருந்தி அழியாத இன்பத்தை அடைகின்றான்.”
ஞானியர் தனிமையை நாடுவதன் பொருள் இப்போது புரிகின்றதா? ஆன்ம சாதகர்கள் தனிமையை விரும்ப வேண்டும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களில் ஒன்றுமில்லை என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இருக்க வேண்டும்.
ஐம்புலன்களையும் குறைவாகப் பயன்படுத்தப் பழக வேண்டும். பயனற்ற, சிறிதும் நன்மை தராத செயல்களில் புலன்களை ஈடுபடுத்தி அவற்றின் வழி செல்லாமல், புலனடக்கம் கொண்டவர்களாய் இருந்தால் தான் மனம் அடங்கும். மனம் அடங்கிய பின் தான் ஞானவழி திறக்கும்.
ஆத்ம வித்தையை அறியத் துடிக்கும்
நசிகேதன் என்னும் சிறுவன் அதற்குரிய வழியை மரணத்தின் தேவதையான யமனிடம் கேட்கின்றபோது, யமன் அவனது வேண்டுகோளைத் தவிர்க்கிறான். தேவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியாத அந்த ரகசியம் உனக்கு உதவாது என்று கூறுகிறான்.
சிறுவனோ தொடர்ந்து அதையே தனக்குரிய வரமாகக் கேட்கின்றபோது அவனிடம் உலக இன்பங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் அப்படியே வரமாகத் தருவதாக ஆசை காட்டுகிறான். ஆனால் ஞானத்தைப் பெறுவதில் நாட்டம் கொண்ட அச்சிறுவன் அழியக்கூடிய உலக இன்பங்களில் ஆசை கொண்டு புலன்வழிச் செல்ல விரும்பவில்லை.
நீங்கள் தருவதாகச் சொல்கின்ற எல்லாமே அழியக் கூடியவை. எனக்கவை தேவையில்லை. அவற்றையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அழியாத நித்ய சுகத்தைத் தரக்கூடிய ஆத்மஞானத்தைப் பற்றிய விளக்கத்தைப் பெறவே நான் விரும்புகின்றேன். அந்த வரம்தான் எனக்குவேண்டும் என்கிறான்அவன் இப்படிப்பட்ட உறுதியான மனநிலையில் தான் எப்போதும் நிற்க வேண்டும். புற இன்பங்கள் எல்லாமே நிலையற்றவை. அழியக்கூடியவை. ஆன்மாவில் நிலைபெறுவதே முக்திக்கு வழி.
வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற பலவித கஷ்டங்களுக்கும் மூலகாரணம் கடவுளுடன் தனக்குள்ள உறவை ஒருவன் மறந்திருப்பதே ஆகும். கடவுளுடன் தனது உறவை உணர்ந்தவன் உடலால் வாழ்வுச் சிக்கல்களில் சிக்கித் துன்பப்பட்டாலும் கூட விடுதலை பெற்றவனேயாவான்.
தன்னைத் தானே கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற மக்கள் பாவங்கள் ஒழிந்து நித்திய வீட்டில் நிலைபெறுகின்றனர்.”
புலன்களும் போகப்பொருள்களும் சேர்ந்து கிடைக்கச்செய்யும் அனுபவங்கள் எல்லாமே துன்பம் விளைவிப்பவை தாம். ஆரம்பமும் முடிவும் உள்ளவை தான். ஆகையால் அறிவுடையவன் இவற்றில் ஆர்வம் கொள்வதில்லை. இத்தகைய விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அனுபவிக்கவும் விரும்ப மாட்டான். இதை உணர்வது தான் ஞானம்.
நம் சூழ்நிலைக்கேற்ப நமது வாழ்க்கை அமைகிறது. அதில் வரும் உறவுத் தொடர்புகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்ற எல்லாமே நமது பாவங்கள் கழிவதற்கும், வந்து சேர்பவர்களின் பாவங்கள் நம்மோடு சேர்ந்து கழிக்கப்படுவதற்கும் தானே தவிர, அவற்றால் ஒருநாளும் உண்மையான இன்பம் கிடைப்பதில்லை. முதலில் இன்பமாகவும், சுகமாகவும் தெரிகின்ற ஒன்றே பிறகு துன்ப மாகவும், சுமையாகவும் ஆகிவிடுகின்றது. இது வாழ்வியல் உண்மை. ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. புலன்களின் வழியாகத்தான் இன்பங்கள் அனுபவிக்கப்படுகின்றன. இவை நிலையற்றவை. நிலையற்ற எதிலுமே ஞானம் அடைந்தவன் ஆர்வம் கொள்வதில்லை.
“எந்த ஒரு மனிதன் இந்த உடலை விட்டு நீங்கும் முன் தன்னைக் கட்டுப்படுத்திப் புலன் இன்பங்களிலிருந்து விடுபட்டு ஆசை, கோபம் இவற்றையும் கட்டுப்படுத்தித் தலை காட்டாமல் செய்துவிடுகிறானோ அவனே யோகியாவான். அவன் தான் தீரனான ஆண்மகன். அவன் இவ்வுலகில் வாழ்கின்றபோதே மகிழ்ச்சியுடனிருப்பான்.”
இப்படிக் காமக் குரோதம் முதலான கீழானவற்றின் தூண்டலிலிருந்து விடுபட்டு விடுவதால் அவனுக்குப் பரம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிடைக்கிறது. அவன் அதில் லயித்து ஆனந்தமடைகிறான். அவன் ஞானத்தினால் தெளிவடைந்து, தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளேயே மகிழ்ச்சி காண்பவனாய் வாழ்கின்றன்.
வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற பலவித கஷ்டங்களுக்கும் மூலகாரணம் கடவுளுடன் தனக்குள்ள உறவை ஒருவன் மறந்திருப்பதே ஆகும். கடவுளுடன் தனது உறவை உணர்ந்தவன் உடலால் வாழ்வுச் சிக்கல்களில் சிக்கித் துன்பப்பட்டாலும் கூட விடுதலை பெற்றவனேயாவான். தன்னைத் தானே கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற மக்கள் பாவங்கள் ஒழிந்து நித்திய வீட்டில் நிலைபெறுகின்றனர்.”
கடவுள் சொல்கின்ற இந்த நிலைதான் ஞானியரின் நிலை. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் தம்மை உணர்ந்தவராய் தான் வேறு, இந்த உடல்வேறு என்றும், தான்வேறு இந்த வாழ்க்கைவேறு என்றும் அறிந்த நிலையில் ஆத்மாவோடு ஒன்றி, உலக விவகாரங்களில் பற்றின்றி ஒட்டியும் ஒட்டாமல், தாமரை இலையின் மீது விடப்பட்ட நீர் எப்படி அந்த இலையோடு ஒட்டாத நிலையில் நிற்கின்றதோ அதேபோல் செய்யவேண்டியவற்றை தியாகமாக நினைத்து செய்கின்றபோது இறை உணர்விலேயே இருந்துகொண்டு, அனைத்தையுமே இறைரூபமாகப் பார்த்து, அன்பு செலுத்தி அன்புமயமாக வாழ்கின்றனர். இப்படிப்பட்ட உயர்ந்தோரால் தான் உலகம் நன்மை அடைகின்றது.
ஞானியரின் நிலைபற்றிக் கேட்ட நாம், எல்லோராலும் இந்த நிலையை அடைய முடியாதா. என்ற கேள்வி நமக்குள்ளும் எழுகின்றதல்லவா? துன்பச்சூழலில் சிக்கித் தவித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்த யோக நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?
இறைவனை உணர்ந்தவர்களிடம் காமம், குரோதம் சிறிதும் இருக்காது. மனம் அவர்கள் வசமே இருக்கும், அவர்கள் சுய உண்மை நிலையை அறிந்தவர்கள். அவர்களை சாங்கிய யோகி என்பார்கள். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் இறைநிலை அடைந்தவர்கள் ஆவார்கள்.அப்படிப்பட்ட நிலையைத் தியானத்தால்தான் பெறமுடியும். வெளி விஷயங்களை வெளியிலேயே விட்டுவிட்டு, அதாவது எல்லாப் புலனின்பப் போகப் பொருள்களையும் துறந்துவிட்டுக் கண்களின் பார்வையைப் புருவங்களுக்கு இடையில் நிலை நிறுத்தி, நாசித்துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன், அபானன் என்னும் மூச்சுக்காற்றைச் சமானமாக்கி எல்லாப் புலன்களையும், மனத்தையும், புத்தியையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை, பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவராகிறார். இந்நிலையிலேயே நிரந்தரமாய் இருப்பவர் நிச்சயமாய் விடுதலை அடைந்தவரே!
என்ன தான் வெளி விவகாரங்களை ஒதுக்கி சதா பூஜையும், பிரார்த்தனையும் மட்டும் செய்து கொண்டிருந்தாலும் தகுந்த பலன் கிடைக்காது. உலகத் துன்பங்களிலிருந்து விடுபடச் சரியான வழி ஆசையைத் துறத்தல். எல்லாவற்றிற்கும் ஆலாய்ப் பறக்காமல் உடலும் மனமும் முதலில் அடங்க வேண்டும். தியானத்தில் பெற வேண்டும்
வாழ்வில் அமைதி வேண்டுமா?
மனிதன் வாழ்க்கை முழுவதும் விரும்புவது இன்பம்.
மனிதன் வாழ்க்கை முழுவதும் விரும்பாதது துன்பம்.
மனிதனின் வாழ்வில் இன்பம் கிடைத்தாலும் - அது அவன் விரும்பும் அளவு நீடிப்பதில்லை.
மனிதனின் வாழ்வில் துன்பம் வந்தாலோ - அது அவன் விரும்பும் வேகத்தில் நீங்குவதில்லை.
மனிதனின் வாழ்வில் தொடர்கதையே - நீடிக்காத இன்பமும் நீங்காத துன்பமும்
மனிதனின் வாழ்வு இரண்டு பகுதிகள் சேர்ந்தது. ஒன்று மனம் சார்ந்த அகவாழ்வு மற்றொன்று உடல் சார்ந்த புறவாழ்வு. இரண்டும் சேர்ந்ததே மனிதனின் உலகவாழ்வு. அகவாழ்வும் புறவாழ்வும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை ஆயினும் அவற்றின் அடைப்படை இயல்புகள் வேறு. அதை புரிந்து கொள்வது அவசியம். மனிதனின் அகவாழ்வும் புறவாழ்வும் அமைதியாக இருந்தால் மட்டுமே அவன் உலகவாழ்வு அமைதியானதாக இருக்கும்.
நமது வாழ்க்கையானது 100% என வைத்துக் கொண்டால்
உள்ளம் சார்ந்த அகவாழ்வு 40% எனவும்
உலகம் சார்ந்த புற வாழ்வு 60% எனவும் வைத்துக் கொள்வோம்.
அகவாழ்வு :
அகவாழ்வில் நம்மை அறியாமல் நமது அடிப்படை இயல்புக்கேற்ப நினைவுகளும், உணர்வுகளும் தானாக தோன்றிக் கொண்டே இருக்கும். இவை நாமாக இயக்காமல் தாமாகவே இயங்கும் நினைவுகளும் உணர்வுகளும் ஆகும். இது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்ப அனுபவம் தரும் உணர்வுகள், நல்ல உணர்வுகள் தான் வரவேண்டும் என்றும், துன்ப உணர்வுகள், கெட்ட உணர்வுகள் வரக்கூடாது என்றும் மனிதன் அகத்தை சீரமைக்க முயலும்போது, கடந்து போன, இறந்து போன அனுபவம் மீண்டும் உயிர் பெறுகிறது.
அகச் செயல்கள் அனைத்தும் நம்மை மீறிய செயல்கள் என்பதையும், நமது மன இயக்கம் அது இயல்புபடி தான் இயங்கும் என்பதையும் நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதை மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா இருப்பதே அக அமைதிக்கு நல்லது.
அகத்தைப் பொறுத்தவரை நாம் ஒரு குழந்தையாக, ஒன்றுமில்லாத பார்வையாளனாக மாறிவிட வேண்டும்.
புறவாழ்வு
புற வாழ்வு உலகம் சார்ந்த வாழ்வு.
புறச் செயல்கள் சிந்தித்து உணர்ந்து உணர்வோடு செயல்படும் நிலை. நாமாகச் செயல்படும் நிலை. புத்தியையும் புலன்களையும் பயன்படுத்தி செயல்படும் நிலை. மனதால் ஈடுபடும் செயலும் உடலால் ஈடுபடும் செயலும் புறமாகும். புறச் செயல்கள் மூலம் தான் மனிதன் தன் வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்தியாக வேண்டும்.
புறவாழ்வில் நாம் சட்ட திட்டங்களை மதித்து நடந்தாக வேண்டும்; சமூகத்தோடு ஒத்துப் போக வேண்டும்.
நமது செயல்கள் நமக்கு அமைதி தருவதோடு எவ்வகையிலும் அது பிறருக்கு இடையூறாக அமைந்து விடக் கூடாது. புற வாழ்வில் நல்லது கெட்டது உண்டு. தேவையானது, தேவையற்றது உண்டு. தனக்கும், குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் பயனளிக்கக் கூடிய நல்ல செயலைச் செய்ய வேண்டும். செயலின் முக்கியத்துவம் உணர்ந்து, முழு ஈடுபாட்டோடும், உற்சாகமாகவும், பதட்டம் இல்லாமலும் போராடாமலும் செயல்பட வேண்டும்.
அக உணர்வானது தன்னை எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளூம் அதே சமயம்மனிதன் அந்த உணர்வுகளைத் தன் செயல் பாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுகோளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது செயலானது முடிவுற்றதும் அதுவும் அக உணர்வோடு கலந்து விடுவதால் செயல்களின் விளைவையும் புறக்கணித்து விட வேண்டும். புற உலகைப் பொறுத்த அளவில் நாம் முயற்சியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் தான் அனைத்தையும் சீராக்க முடியும். எல்லாம் அதுவாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிட்டால் அவை சரியாகாது.
புறத்தைப் பொறுத்த அளவில் செயலில் தான் தீர்வு இருக்கிறது. புற வாழ்க்கையைப் பொறுத்த அளவில் நாம் ஒரு அறிஞனாக செயல்பட வேண்டும். புறப்பிரச்சினைக்குத் தீர்வு திட்டமிட்ட செயல்பாடு. புறத்தில் எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து செயலைத் தியானமாக செய்வது கர்மயோகம். புற வாழ்வில் அமைதியைப் பெற நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியான காலத்தில் சரியான முறையில் செய்துவிட வேண்டும். செய்யக்கூடாத எதையும் தவறியும் செய்து விடக்கூடாது. இதன்படி நடந்தால் பெரும்பாலும் புற வாழ்வில் அமைதி கிட்டும்.
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
பற்றிய வித்தியாசமான ஆய்வு ...... வாசித்து
பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க்
கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process
-ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக
நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத
உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற
பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை
வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்;
காலனையும் வெல்லலாம்; கடவுளையும்
காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை
வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு.
மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல்
தன்னை வேறொரு பரிமாணத்திற்கு
மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க
வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை
அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான்
முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி
நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், அவ்வையார்,
அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட
பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை
பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய
மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள்
எந்த நாட்டிலும் இல்லை.
முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல,
மனிதனாக இருந்தவர் மகானாக மாறி
இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால்
அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு
மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ்
பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என
முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர்
பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய
நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு
என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம்
சுழுமுனை என்றால் என்ன என்பதினை
தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு
கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக்
காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள
ஒரு மைய நரம்பு. நமது உடலில்
இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள்
எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம்,
கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம்,
கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச்
சொல்லலாம் இவை உடலின் இடது
புறமாகவும் வலது புறமாகவும் ஒரு
மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து
உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது
உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக
இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள்
எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது
உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து
பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால்
இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை
என்பதாகும். இந்த சுழுமுனை
புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து
பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்
பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும்
அர்ஸ் எனவும் ழைப்பர்.மருத்துவர்களின்
லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால்
இது எளிதாக புரியும்.
முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு
நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள
தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும்
சுழுமுனை கோடாகவும் உள்ளது.
மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும்
சுழுமுனையைப் பின்னிப் பினைந்து
செல்பவை நமது அவயங்கள். வலது புறம்
இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது
இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள
அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை
அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல
இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி
சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு
முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன்
உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான்.
இதையே கந்த குரு கவசத்தில் இப்படி
சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து உன்னில்
அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக்
காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து
கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு
வரவில்லையே என திட்ட வேண்டாம்.
ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே
முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி
தெய்வானை.ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை
தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால்
இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய
ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு
மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு
வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை.
முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை
சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன்
ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி
கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையன
சத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு
கடவுள் முருகன் என்றார் . எமது உடலில்
இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு
இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த
சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால்
உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான்
படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை
கொடுப்பதை என்றால் உலக அறிவான
தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே
ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித
ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே
என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும்
அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையக
அதன் அர்த்தம் கருத்து தெரியத வெறும்
ஓசையகவே உணர்வோம். எனவே
ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்
அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன்
அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த
அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து
இருக்கும் சிவனை சிவசத்தியன
சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல்
தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க
பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர்
கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது
முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல்
இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal
இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு
இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது
இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள் .
இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில்
இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும்
சொல்கிளார்கள் சிவன் மனித உடலில்
தலையில் உருவாக்கி இருப்பது தான்
செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க
சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியமை
இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல்
மனித மூளையில் உள்ள செவ்வேலை
பயன்படுத்தி அறியமை என்ற சூரனை வதம்
செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு
விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.
பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது.
தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும்.
இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
**************************************************
அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.
அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது பெற வேண்டும். அதற்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முருகனது அருளைப் பெற முதலில் நாம் இதுவரை செய்து வந்த, உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை நிறுத்த வேண்டும்
. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் ஆகியவற்றிலும் சைவமாக இருப்பதோடு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் வேளைக்கு குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாது நாமஜெபங்களை மந்திரங்களாகச் சொல்லி உரு ஏற்றி வருவதோடு மாதம் குறைந்தது ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கட்டாயமாக செய்வதுடன் ஜீவதயவை மனதினுள் பெருக்கி எவ்வுயிர்க்கும் தீங்கு நினைத்திடாத மனதினையும் பெற்று முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனம் உருகி தொடர்ந்து பூஜை செய்ய செய்ய, முருகனருள் கூடி அனைத்தையும் பெற்று இறுதியில் முருகன் நம்மை சார்ந்து வழிநடத்திட சேராத கலைகளை சேர்த்து பெற முடியாத மரணமிலாப் பெருவாழ்வையும் முருகனருளால் பெற்று அழிவிலாத நித்திய வாழ்வை வாழலாம்........
...........
காரண குருவான கந்தனைப் போற்றிட
காரிய உடம்புள்ளே காணலாம் உண்மை.
ஞானம் அடைதல்
***********************
படிநிலையானது நான்கானது என்றும், அவற்றினிலே சரியை என்ற நிலையினிலே தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் உலக உயிர்களுக்கு தம்மால் ஆகிய உபகாரங்களை செய்தும், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், ஜீவகாருண்ய நெறி நின்றும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலாகிய தூயநெறியில் நின்று தேறி கிரியை என்ற நிலையிலே நின்று மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட சக்தி உண்டென்றும் அந்த சக்தியே கடவுள் என்றும் கடவுள் உண்டென்று நம்புதலும் அந்த கடவுளை அடைந்திட வேண்டியே பக்தி செலுத்துதலும் கடவுளை அடைந்திட ஏதுவாக உள்ள வகையினிலே சான்றோர்களை போற்றுதலும் வணங்குதலுமாய் இருந்துமே அடியவர்கள் தம்மை பாதுகாப்பதுடன் கடவுள் வழிபாட்டையும் செய்து வருதலும் கடவுள் தன்மை அடைய உதவிடும் உண்மை சாதுக்களின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு சாதுசங்க தொடர்பினை விடாது பற்றி அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முயற்சிகளை விடாது செய்தும் அவரவரால் இயன்ற அளவு ஞானிகள் கூறின, மார்க்கம்தனிலே தவதான தருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முயலுதலும், ஆக இவ்விதம் செய்து கிரியையை முடித்து, யோகமார்க்கம் தனிலே வருகையுற்று யோகநிலை என்ற நிலையடைந்து கசடான மனித தேகத்தின்கண் உள்ள நீங்காத கசடை நீக்குதற்கான ஞானபண்டிதரால் வகுத்தும் தொகுத்தும் அளிக்கப்பட்ட வாழையடி வாழையென திருக்கூட்ட மரபினை சார்ந்திட்டவர்க்கு மட்டுமே புலப்படும்படியானதொரு அற்புத கலைதனை யோககலைதனை பக்குவம் பெற்றுமே அறிந்திடல் வேண்டும்.
யோகம் என்பதே மூச்சுக்காற்றையும், அதன் இயக்கத்தையும், அதன் வெளிப்பாடையும், அதன் இரகசியத்தையும், அதன் பயன்களையும் அறிந்து யாருக்கும் எந்த சக்திக்கும் கட்டுக்கடங்காத வாசியெனும் மூச்சுக்காற்றின் இயக்கத்தை கட்டுக்குள் அடக்கி ஒடுங்கிட செய்தலாம் என்ற உண்மை அறிந்து நாசியின் இடது பக்கம் வருகின்ற இடகலை காற்றையும், நாசியின் வலதுபக்கம் ஓடுகின்ற வலகலை காற்றையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் ஒடுங்கிடச் செய்திடல் வேண்டும். அதை செய்திட அதிகாரம் பெற்றிட்டவர் யோகநாதனாம் முருகப்பெருமான் ஒருவர் மட்டுமே என்ற அதிநுட்ப சூட்சும இரகசியத்தை உணர்ந்திடல் வேண்டும்.
யோகம் என்பது ஆதிதலைவன் ஆறுமுகனாம் யோகநாதனாம், யோகமூர்த்தியாம், முருகப்பெருமானாரால்தான் செயல்படுத்திட இயலும் என்றும் அதற்குரிய சாதனங்களை அவரவர் தகுதிக்கேற்ப அவனே அருளுவான் என்றும்,
அவனருள் இல்லையேல் யோகம் இல்லையென்றும் உணர்தல் வேண்டும்.
உணர்ந்து யோகம் கற்று ஞானம்தனை அறிந்திடவே அயராது ஊன் உருகி உருகி உருகி, மனம் கசிந்து கசிந்து கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆற்றி அரற்றி தலைவன் மனம் குளிர நடந்து நடந்து, ஞானியர் நெஞ்சம் நெகிழ்ந்து கரைந்திட பக்திதனை செலுத்தி செலுத்தி, குருவிசுவாசம் மிகுதிபட நடந்து நடந்து, குருநாதன் முருகன் தம்முள் கலந்து நமக்கு உடலைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவித்து உடலையும் உயிரையும் தூய்மையாக்கி, செம்மையாக்கி, உடல்உயிரை சேர்த்து, பிறவாநிலை தனை அடைந்திடல் என்றொரு நிலைதனை அடைந்திடல் வேண்டும்.
இப்படி நான்கு படித்தர நிலைகளிலே மனிதன் பன்னெடுங்காலம் அயராது பாடுபட்டு இறையருள் துணையுடனே சரியை நிலையும் கடந்து, கிரியை நிலையையும் கடந்து யோகநிலைதனை அடைந்து இறைவனாம் முருகப்பெருமான் தனிப்பெரும் தயவினாலே அந்த சாதகன் அவன்தன் தனது சாதக இருநிலைகளாம் முன்பு செய்த சரியை, கிரியை தனிலே அளவிலாது செய்திட்ட தானதவ பலன்களாலே, பக்தி விசுவாசத்தாலே, புண்ணிய பலத்தாலே ஞானிகள் அருள்பலத்தாலே, ஞானகுருவின் அண்மையாலே, தீவினைகளை குறைத்திட்டதாலே, உலக ஜீவர்களது ஆசியினாலே உயிர்க்கொலை துறந்ததாலே, பற்றுகளை துறந்ததாலே அவர் தமக்கு ஞானம் அடைதற்கு சாதகமாய் அதன் சாதனமாம் யோகம்தனை யோகஞானத்தலைவன் முருகப்பெருமானே முன்னின்று அருளுவான்,
அந்த சாதகனுக்கு ஞானியர் புடைசூழ யோகம்தனை. இப்படி திருஞான திருக்கூட்ட மரபினர் ஒன்று கூடிட எல்லாம்வல்ல ஞானத்தலைவன் சாதகன் தனக்கு யோகமளித்து அவர்தமக்கு வாசியின் சூட்சுமங்கள் உணர்த்தி வாசியாம் பரம்பொருளை அவன் தன்னுள்ளே இருத்தி புருவமத்தியாம் சுழிமுனைக் கதவை திறந்து செலுத்தி அடைத்து அவன்தன் தேகத்தினின்று அடைக்கப்பட்ட ஓரங்குல காற்று உருதரித்த நாடிதனிலே செலுத்தி மீண்டும் வெளியேறா வண்ணமே பாதுகாத்து வாசிப்பயிற்சிதன
ை செய்திட செய்திட அக்காற்றே அளவிறந்த சக்தியுடையதாய் மாறி பெரும் ஆற்றலாய் மாறியே பெருங்கனலாய் மாறி மனிததேகத்தை சுட ஆரம்பிக்கும்.
அப்படி தவம் தணலாய் சுடுகின்ற அந்த மூலாக்கினியில் மனித தேகத்தின்கண் உள்ள பிறவிக்கு காரணமாக உள்ள அசுத்த சுக்கிலத்தை தாக்கி தாக்கி சுத்தப்படுத்த முயற்சிக்கும்.
ஆயினும் தாய்தந்தையரால் பெறப்பட்ட இந்த தேகத்தில் சுத்த சுக்கிலம் ஊறாது. ஆயின் ஒவ்வொரு அணுக்களிலுமே இயற்கையின் அதீத சக்தியினால் காமக்களிம்பு விடாது பற்றியுள்ளதால் அந்த அணுக்களிலிருந்த
ு தோன்றும் சுக்கிலமும், காமக்களிம்புடனே இருக்கின்றபடியாலே காமக்களிம்பை நீக்கிட ஞானத்தலைவனே சாதகன் உடலைச் சார்ந்து வழிநடத்தி உடல் அணுக்களிலே உள்ள காமக்களிம்பை தன்மூலக்கனல் கொண்டு சாதகன் மூலக்கனல் உதவியுடன் மிகமிக மெதுவாக அணுக்களை சூடேற்றி சூடேற்றி அணுக்கள் வெப்பமாகிடும்படியாக அதேசமயம் அணுக்கள் செத்துவிடாமலும் செய்து செய்து அணுக்களை சுத்தப்படுத்துவான்.
எப்பொழுது அணுக்கள் சுத்தமாகின்றதோ அதுவரை அதனின்று ஊறும் சுக்கிலம்தனை கட்டமாட்டார்கள் யோகிகள்.
இது அந்த ஞானக்கூட்டத்தினருக்கு மட்டுமே தெரியும். அவ்விதம் இல்லாமல் மீறி சூட்சுமம் அறியாமலேயே அசுத்த சுக்கிலத்தை கட்டினால் அசுத்தமாகிய சுக்கிலம் ஆர்ப்பரித்து எழுந்து உடம்பை விஷமாக்கி அதீத காமத்தை உண்டு பண்ணுவதோடு அந்த சாதகனை எந்த சுக்கிலம் பிறவாமையை தரவல்லதோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.
ஆதலின் அதுவரை யோகியர் தேகத்துள் தூயதேகம் பெறுமளவும் ஊறும்.
சுக்கிலம்தனை இறைவனருளால் ஞானபண்டிதன் சார்ந்து உடலை சார, அசுத்த சுக்கிலம் ஒட்டாது செய்து புறந்தள்ளி விடுவான்.
இப்படி அதிலுள்ள இரகசியங்கள் இருக்க இவ்வுலகினிலே நூறுக்கும் சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு தனக்கு தெரியாத யோகப்பயிற்சிகளை ஏதோ சில ஞானநூல்களை அதன் உண்மைப் பொருளுணராது படித்து, கற்று தேர்ந்தவர் போல பசப்பி, மக்கள் மனம் கவர்ந்து, சொல்வதை நம்பி இல்லறத்தான் சென்று அசுத்த சுக்கிலத்தை உடம்பினுள் தவறான யோகப்பயிற்சிகள் மூலம் கட்டுவானேயானால் அதனால் உடல் உஷ்ணம் காமக்கனலும், யோகக் கனலுமாய், உடல் உஷ்ணம் அளவு கடந்து ஏறி தலைபாரம் ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்பட்டு அசுத்த சுக்கிலம் உடலில் தங்கி உடம்பு நாற்றமெடுத்து விஷமாகி இறந்தும் போவான். அன்பு கொண்டு எச்சரிக்கை செய்கிறேன் மக்களே! விந்து கட்டுதல் ஆறுமுகனார் அருள் பெற்ற யோகிகளுக்கு மட்டுமே உகந்ததாகும். மற்றைய சாதாரண இல்லறவாசிகளுக்கோ, ஆசி பெறாத வாலிபர்களுக்கோ உகந்தது அல்ல. பக்தி செலுத்துங்கள் ஆறுமுகனார் திருவடியைப் பற்றி! அவன் உணர்த்துவான் உங்களுக்கு!
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் – பீர்முகம்மது
****************************************************
தக்கலை பீர் முகம்மது அவர்களும் தந்தைக்கு முன் மகன் பிறந்தான் என்று பாடுகிறார். மேலும் அவர்களின் பாடல் திருமந்திர பாடலுடன் எவ்வாறு ஒத்து போகிறது என்று சொல்லும் பாடல். அப்பட்டமான ஞான பாடலும் கூட!
அந்த பாடலை ஞான சற்குரு அவர்களின் “ஞான கடல் பீர் முகம்மது” என்ற புத்தகத்தில் இருந்து ஞானப் புகழ்ச்சி என்ற பகுதியில் உள்ள பாடல் – 10
கணங்காத தந்தைக்கு முன்பிறந்துந்தி
க்கமலத்தில் – பாடல் 10
பீரப்பா பாடலில் இது ஒரு அற்புதமான பாடல்! ஞான ரகசியம் வெளிப்படும் படலுங் கூட! தந்தைக்கு முன் பிறந்தான் – தந்தைக்கு முன்னாலயே பிறந்தவனல்?! தந்தை பிறப்பதற்கு முன் எப்படி மகன் பிறக்கமுடியும்?
தந்தையின் முன்னில் – முன்பக்கத்தில்
மகன் பிறந்தான் என்பதேயாகும்!?
கந்த புராணத்தில், சிவனின் நெற்றி கண்ணிலிருந்து வந்த தீப் பொறியே முருகன் என்கிறதல்லவா? சிவனின் முன்பு முருகன் தோன்றினான். எப்படி? நெற்றிகண் மூலமாக! உந்தி கமலம் – உந்தி – முன் தள்ளி கமலம் – தாமரை,இது பரி பாஷை நமது கண்களே தாமரைக்கு ஒப்பிடுவார்கள். கண் உந்தி கொண்டுதானே இருக்கிறது – கண்ணைத்தான் உந்திக்கமலம் என்றனர். சிவனின் உந்திக் கமலத்தின் நெருப்பிலிருந்து பிறந்தான் முன் பக்கத்தில்! முருகன்! பீரப்பா கந்த புராணத்தை சொல்லவில்லை!
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
திருமந்திரம் – .869
சாத்திரத்தில் சிறந்த திருமந்திரத்தில் சொல்லப்பட்ட ஞானத்தையே பீரப்பாவும் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் கண்ணை விழித்திருந்து தியானம் செய்யும்போது நமது உந்திகமலமாகிய கண்களில் இருந்து, நம் கண்களின் வழி, உள்ளே இருக்கும் சிவமாகிய ஒளி பிரவாகமாக வெளிப்படும்! உள் ஒளி கண்வழி வெளிப்படும் போது ஆறுவட்டமான இரு கண்களின் காட்சி நமக்கு கிடைக்கும்.! அதாவது நம் கண்ணையே நாம் நமக்கு முன்னால் காணலாம்!?
ஆறு வட்டம்தான் கதையில் ஆறுமுகமானது, சிறுவர்களுக்கு கதை – புராணம். பெரியவர்களுக்கு
ஞானம் – அனுபவம்.
இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் கிறிஸ்த்துவனுக்கும் ஒரே அனுபவம்தான்! ஞானம் ஒன்று தான்!
இறைவன் ஒருவன் தானே! சாதனை ஞான சாதனை அதாவது ஞான தவம் செய்யும் யாவருக்கும் கிட்டும் முதல் அனுபவம் இதுவே!
இங்கே எங்கேயிருக்குது மதம்!? உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அனுபவம் தான்! ஒரே இறைவன் தான்!
“முருகா! முருகா!! முருகா!!!” என்றே மனம் உருகி பூசிப்போம் யோகத்தின் இரகசியம் அறிந்து தேறுவோம்.

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்
நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும், அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும், இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.
தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.
பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.
ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,
தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.
பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.
இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.
பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,
புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா, இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.
இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள், பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம்.

Friday, June 17, 2016

சிவபெருமானுக்கு பூசையில் செய்யப்படும் உபசாரங்கள் எல்லாம்
ஐம்பெரும் பூதங்களின் சம்பந்தமுள்ளவைகளாய் ஐந்துவிதமாயிருக்கும்.
1. ப்ருத்வி சம்பந்தமான உபசாரங்கள்
சந்தனம் , புஷ்பம், கிழங்கு ,வேர் ,பழம் , அன்னம் , முதலானவைகளாகும்.
2. அப்பு
ஜலம், பால், தயிர், வஸ்திரம்
முதலியவைகளாகும்.
3. அக்னி
பொன், ரத்தினம், தீபம், கற்பூரதீபம்,
ஆபரணம் முதலியவைகளாம்.
4. வாயு
தூபம், சாமரம் , விசிறி, கொடை, பதாகை, முதலியவையாகும்.
5. ஆகாஸம்
மணி, வாத்ய வகைகள், கைமணிஓசை, "மந்திரஒலி உச்சரிப்பு"
கீதம் என்பதாகும் • ||

27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்!

நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்!
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்
1. அசுவினி - சுகந்த தைலம்
2. பரணி - மாவுப்பொடி
3. கார்த்திகை - நெல்லிப்பொடி
4. ரோகிணி - மஞ்சள்பொடி
5. மிருகசீரிடம் - திரவியப்பொடி
6. திருவாதிரை - பஞ்சகவ்யம்
7. புனர்பூசம் - பஞ்சாமிர்தம்
8. பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)
9. ஆயில்யம் - பால்
10. மகம் - தயிர்
11. பூரம் - நெய்
12. உத்திரம் - சர்க்கரை
13. அஸ்தம் - தேன்
14. சித்திரை - கரும்புச்சாறு
15. சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
16. விசாகம் - இளநீர்
17. அனுஷம் - அன்னம்
18. கேட்டை - விபூதி
19. மூலம் - சந்தனம்
20. பூராடம் - வில்வம்
21. உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
22. திருவோணம் - கொம்பு தீர்த்தம்
23. அவிட்டம் - சங்காபிஷேகம்
24. சதயம் - பன்னீர்
25. பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்
26. உத்திரட்டாதி - வெள்ளி
27. ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்