Monday, September 21, 2015

ராமரின் பட்டாபிஷேக தானம்

ராமரின் பட்டாபிஷேகத்தை முன்னிட்டும், ராவணனுடன் செய்த போரில் பலர் கொல்லப்பட்ட பாவம் அவரை விட்டு நீங்கும் பொருட்டும், எல்லாருக்கும் தானம் வழங்க வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். இதுபற்றி முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தார்கள். அரண்மனைக்கு மக்கள் வந்து, தானங்களைப் பெற்றுச் சென்றார்கள். வசிஷ்டர் அறிவித்த தானங்களில் எள் தானமும் ஒன்று. இதைப் பெறுபவர்கள் பாவத்தையும் பெற்றுக் கொள்ள நேரிடும் என்பதால் இதைப் பெற முன் வரமாட்டார்கள். அதனால் இந்த தானம் பெறுபவருக்கு, பெரிய தங்கக்கட்டிகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அயோத்தி எல்லையில், சிங்கார முனிவர் என்பவர் தன் மனைவி சொர்ணவல்லியுடன் வாழ்ந்து வந்தார். சொர்ணவல்லி நல்ல குணவதியாகவும், ஆன்ம பக்குவம் உடையவளாகவும் இருந்தாள். அவர்கள் வறுமையில் வாழ்ந்தனர்.தன் கணவரின் மனம் அருட்செல்வத்தையே நாடும், பொருட்செல்வத்தை நாடாது என்பதை, சொர்ணவல்லி நன்றாகவே அறிந்திருந்தாள். அதேநேரம், வறுமையை அவளால் தாங்க முடியவில்லை.அவள் எள் தானம் பற்றிய அறிவிப்பைக் கேட்டாள். இந்த தானத்தால் பாவம் சேரும் என்றாலும், ஏழ்மையை விரட்ட அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.
கணவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னாள்.அவள் கூறியதைக் கேட்டதும் சாந்தசொரூபியான முனிவர் கடுமையான குரலில், பொன்னுக்கு ஆசைப்பட்டு என்னுடைய தவத்தையும் தேஜஸையும் இழக்கச் சொல்கிறாயா? என்னைப் பாவியாகச் சொல்கிறாயா? என்று வெடித்து அலறினார். அதற்கு சொர்ணவல்லி கைகூப்பி வணங்கியபடியே பணிவுடன் கம்மிய குரலில், சுவாமி! நீங்கள் உங்கள் தவத்தை இழப்பதற்கு நான் சம்மதிப்பேனா? உங்களுக்குப் பாவம் வரட்டும் என்று நான் நினைப்பேனா? கணவன் செய்யும் தர்மத்திற்குத் துணையாக இருப்பவள்தான் தர்மபத்தினி. கணவனைப் பாவம் செய்யத் துõண்டுபவள் எப்படி தர்மபத்தினியாவாள்? ராமபிரான் யார்? அவர் சாட்சாத் பரப்பிரம்மம், பரமாத்ம சொரூபம், பரம்பொருள். அவர் இப்போது மனிதவடிவத்தில் வந்திருக்கிறார். நீங்கள் எள் தானம் பெற்றதும், ராமர் முகத்தைப் பாருங்கள்! அப்போது, எள் தானம் பெற்றதால் வந்த பாவம், உங்களை விட்டு அந்த விநாடியே நீங்கிவிடும். எவ்வளவு பெரிய காட்டையும் சிறிய ஒரு நெருப்புப் பொறியே எரித்துவிடுகிறது அல்லவா! அதுபோல, பரமாத்மாவான ராமரின் திவ்ய முகத்தை நீங்கள் தரிசித்த உடனேயே, எள் தானம் பெற்ற பாவம் உங்களைவிட்டு நீங்கிவிடும், என்றாள்.சொர்ணவல்லியின் விளக்கம் கேட்டு, முனிவரின் மனம் சிறிது சமாதானம் அடைந்தது. அவர் அரை மனதுடன் சம்மதித்தார்.
இந்த செய்தி, வசிஷ்ட மகரிஷிக்குத் தெரிய வந்தது. அவருக்கு, சிங்கார முனிவர் மிகவும் உயர்ந்த தபஸ்வி என்பது நன்றாகத் தெரியும். இதற்கான காரணத்தை ஆழ்ந்து யோசித்த போது, சிங்கார முனிவர் தங்கத்திற்கு ஆசைப்படுபவர் அல்ல. அவர் பரம ஏழை. மனைவி கூறியதற்கிணங்க, வறுமையைப் போக்கிக்கொள்ள எள் தானம் பெற முன்வந்திருக்கிறார். தானம் பெற்றதும், ஸ்ரீ ராமர் முகத்தைத் தரிசித்து பாவம் நீக்கிக்கொள்ள நினைக்கிறார் என்று யூகித்து புரிந்து கொண்டார்.அதே நேரம் அவர் எள் தானம் பெற்றதும்,ராமர் முகத்தைப் பார்த்து விட்டால், எள் தானம் பயன் தராமல் போய்விடும். ஆதலால் தானம் பெற்றதும், ராமர் முகத்தை முனிவர் பார்ப்பதை திரையிட்டுத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் சிங்கார முனிவர் அரண்மனைக்குச் சென்றார். எள் தானம் பெறுவதற்கு உரிய வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. தானம் பெற்றதும், ராமரின் திவ்ய முகத்தைத் தரிசிக்க வேண்டும்! என்ற எண்ணத்துடன் சிங்கார முனிவர் மேடைக்குச் சென்றார்.அங்கு ராமர் எள்ளைத் தாரை வார்த்து முனிவருக்குத் தானம் கொடுத்தார். அவ்வளவுதான்! திடீரென்று ராமருக்கும் முனிவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்தது! இப்படி ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முனிவர் அதிர்ந்து போனார். அவரது மனம் கவலையில் மூழ்கியது. இப்போது எள் தானம் பெற்றதால், எனக்குப் பாவம் அல்லவா வந்து சேர்ந்திருக்கிறது! என்று நினைத்து நினைத்து, அவரது உள்ளம் பதறியது. நடை தள்ளாடியது. நடைபிணமாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்து, ஒருவாறு தன் குடிலை அடைந்தார்.
அதற்குள் அரண்மனை வீரர்கள் ஒரு வாகனத்தில், சிங்கார முனிவர் குடிலில் தங்கக்கட்டிகளை இறக்கிவிட்டுச் சென்றிருந்தார்கள். சொர்ணவல்லி முனிவரை வரவேற்க மகிழ்ச்சியுடன் தயாராகிக் கொண்டிருந்தாள். உற்சாகம் இழந்து கவலையுடன் வந்த முனிவரைப் பார்த்து, சொர்ணவல்லி பதறிப் போனாள். நடந்ததை அறிந்து, தன் தலையில் இடி விழுந்ததுபோல் நடுங்கினாள். அப்போது அவள் சிந்தனையில், முனிவரின் கவலையைப் போக்குவதற்கு உரிய ஒரு வழி பிறந்தது. சுவாமி! நடந்தது நடந்துவிட்டது! இன்னும் சில நாட்களில் பட்டாபிஷேக விழாவின் கடைசி நாளன்று, மங்கள வாத்தியங்கள் முழங்க ராமர் தேரில் பவனி வரவிருக்கிறார். அந்த நேரத்தில் நீங்கள் அருகில் சென்று தரிசனம் செய்யுங்கள். பாவம் நீங்கிவிடும், என்று ஆறுதல் கூறினாள்.இந்த யோசனை முனிவருக்கு சரியாக பட்டது. அன்ன ஆகாரமின்றி கவலையுடன், ராமரின் தேர் நகர்வலம் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த நாளும் வந்தது. முனிவர் ஓடிச் சென்று பக்தியுடன் கண்ணீர் வழிய, ராமா, ராமா! என்று அழைத்தபடியே, தேரில் இருந்த ராமரைக் கண் குளிரத் தரிசித்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். எழுந்து நின்ற முனிவரின் கைகளை, ராமரின் காக்கும் கரங்கள் அன்புடன் பற்றிக்கொண்டன.
எள் தானம் பெற்ற பாவம் காரணமாக, நீங்கள் சிறிது காலம் துன்பப்பட நேர்ந்தது. இப்போது அந்தத் துன்பம் உங்களைவிட்டு முழுமையாக நீங்கிவிட்டது. இனி உங்கள் தவவாழ்க்கை என்றும் வளமானதாக இருக்கும், என்று கூறி ஆசீர்வதித்தார். அந்தக் கணமே முனிவர் இழந்த தவத்தையும், தேஜஸையும் மீண்டும் பெற்று, பாவம் நீங்கி குடிலுக்குத் திரும்பினார். அதன்பிறகும் முனிவர் தங்கக்கட்டிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சிங்கார முனிவர் பற்றி நாம் மேலே பார்த்த நிகழ்ச்சியை தியாகராஜர் ஒரு கீர்த்தனையில், சிங்கார முனிவர் எள் தானம் பெற்றதன் பயனாகிய தங்கத்தை அனுபவித்தாரா? விபீஷணன் வேண்டியும் ரங்கநாதர் இலங்கைக்குச் சென்றாரா? எந்தச் செயலும் விதிப்படித்தான் நடக்கும், என்று கூறியிருக்கிறார்

Saturday, September 19, 2015

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர்

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர். வசுதேவரின் சகோதரி குந்தியின் மகன் அர்ஜுனன். மற்றவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர்.  ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்தது பகவத் கீதை.   தன் அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லும் முன் உத்தவருக்கு உபதேசித்தது உத்தவ கீதை. பாகவதத்தில் ஹரிதாஸர் என்ற பட்டத்தைப் பெற்றவர்கள் உத்தவர், யுதிஷ்டிரர், கோவர்த்தனகிரி ஆகிய மூவரே. கம்ச வதத்திற்குப் பின் கிருஷ்ணர் பிருந்தாவன கோபிகைகளுக்கு உபதேசிக்க உத்தவரை அனுப்பினார். உத்தவரின் உபதேசம் கேட்ட ராதை முதலானோர் தம் பக்தியை மனமுருக எடுத்துச் சொன்ன பாடல்தான் ப்ரமர கீதை (வண்டின் கீதம்). அவதாரம் முடியப் போகிற நிலையில் கிருஷ்ணர் உத்தவர் விரும்பியதைக் கேட்கும்படி கோரினார். எதையும் அவர் கேட்டதில்லை. இனி கேட்கவும் விரும்பாதவர். ஆயினும் தயங்கி, கிருஷ்ணா, எனது நீண்ட கால ஒரு சந்தேகத்தைத் தீர்ப்பாயா? என்றார். கிருஷ்ணர் ஊக்குவிக்க உத்தவர் கேட்டார். 

கண்ணா, உன்னை லோக ரட்சகன், பரந்தாமன் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் நீயோ உடன் படித்த குசேலனை நீண்ட நாள் வறுமையில் வாடச் செய்தாய். கோபிகைளைத் தவிக்க விட்டு கோபிகா கீதம் பாடி ஆடச் செய்தாய். உன்னிடமே தஞ்சம் புகுந்த பாண்டவர்களைச் சூதாட்டத்தில் அனைத்தையும் சகுனியிடம் இழக்க வைத்து வனவாசம், அஞ்ஞாத வாசம் என அலைய வைத்தாய். திரௌபதியை மான பங்கத்தில் வாட்டி, கடைசியில்தான் காப்பாற்றினாய். நீ நினைத்திருந்தால் இவற்றையெல்லாம் நடக்காமல் தடுத்து அவர்களுக்குச் சுகம் அளித்திருக்க முடியாதா?கிருஷ்ணர் பொறுமையாகக் கூறினார்: அன்பு நண்பா, நீ சொன்னது உண்மையே. ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் இருந்த காரணத்தை நீ அறியாததால் இப்படிப் பேசுகிறாய்.  நானும் குசேலனும் சமித்துக்களைத் திரட்டக் காட்டுக்குப் போனோம். அப்போது குருபத்தினி எங்கள் இருவருக்கும் நான்கு பிடி அவலை குசேலனிடம் கொடுத்தனுப்பினாள். நல்ல மழையில் நாங்கள் குளிரில் வாடியபோது குசேலன் என் பங்கான இரு பிடி அவலையும் சேர்த்துச் சாப்பிட்டான். அதே இரண்டு பிடி அவல் அவன் எனக்குத் தரும்வரை அவன் ஏழ்மையில் வாடும்படி அவனது வினை செயல்பட்டது. 

கோபியர் ஒவ்வொருவருக்கும் நான் அடிமை, அவர்களிடம் மயங்கிக் கிடக்கிறேன் என்று கர்வம் கொண்டனர். அந்த எண்ணத்தை அகற்றச் சிறிது நேரம் மறைந்து அவர்களைத் தவிக்கச் செய்தேன். சூதாடுவது தவறு எனத் தெரிந்திருந்தும் எனக்குத் தெரிந்தால் நான் தடுத்து விடுவேன் என எண்ணி நான் அங்கு வந்து உட்கார்ந்து விடக்கூடாதே என்று பாண்டவர்கள் வேண்டியதால் நான் மண்டபத்தின் நுழைவாயிலிலே காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாது போயிற்று.  எனக்குப் பதிலாக சகுனி ஆடுவார் என்று துரியோதனன் கூறியபோது, எனக்குப் பதிலாக கிருஷ்ணர் ஆடுவார் என்று தர்மபுத்திரர் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.  தன்னால் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முடியும் என முதலில் நம்பிய திரௌபதி முடிவில் தன்னால் ஏதும் ஆகாது என்று உணர்ந்து என்னை அழைத்தபோதுதான் என்னால் ரட்சிக்க முடிந்தது.  என் பக்கபலம் இருந்ததால்தான் பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞாத வாசம் இவற்றைக் கடந்து போரிலும் வெற்றி பெற முடிந்தது. என்னைச் சரணடைந்தவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை. 

அவரவர் வினைகளுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது. நான் அதை இயக்குவதுமில்லை. அதில் தலையிடுவதுமில்லை. உள்ளே இருந்து நடப்பதை எல்லாம் நெருக்கமாகப் பார்த்து வரும் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எவரும் உணர்ந்துவிட்டால் என்னை வைத்துக்கொண்டு எந்தத் தவற்றையோ, பாவத்தையோ செய்யத் தயங்குவார்கள். எனக்குத் தெரியாமல் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தவறு செய்யும்போது அதற்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும். இல்லை எனில் உணரவும் மாட்டார்கள், மீண்டும் தவறு செய்து கொண்டிருப்பார்கள்.  கீதையில் அர்ஜுனனுக்கு உரைத்தது போலவே உத்தவருக்கும் கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தை உத்தவகீதை மூலம் உணர்த்தினார். தெளிவடைந்த உத்தவர் பத்ரிகாச்ரம் சென்று தவமியற்றி பரமபதம் அடைந்தார்.  பக்தி யோகம் மறைந்து அதை முறைப்படி போதிக்கத் தகுந்த குருவின்றி மக்கள் தவித்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுளப்படி பண்டரிபுரத்தில் நாமதேவர் என்ற பெயருடன் அவதரித்தவர் உத்தவரே என்பது நம்பிக்கை.

பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன

. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?
15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.
15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.

மகாளய பட்சம் - விளக்கம்

> மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் <<
"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

Friday, September 18, 2015

பிராம்மணன் என்றால் யார்? வேதங்கள் இது பற்றி என்ன சொல்கின்றன?

பிராம்மணன் என்றால் யார்? வேதங்கள் இது பற்றி என்ன சொல்கின்றன?
ஸாமவேதம்….….வஜ்ரஸுசிகோபநிஷத்து
...............................................................................
ஸ்லோகம்1.இந்த உபநிஷத்து அக்ஞானத்தை அகற்றும் சாஸ்த்திரம்
ஸ்லோகம் 2.பிராம்மணர் சத்திரியர் வைசியர் சூத்திர் என்று நான்கு வர்ணங்கள் உள்ளன.அவற்றுள் பிராம்மணன் என்றால் யார்? ஜீவனா?,தேகமா? ஜாதியா? ஞானமா? கர்மமா? தர்மமா?
ஸ்லோகம் 3.முதலில் ஜீவன் பிராம்மணன் என்றால் அது ஒவ்வாது.சென்றதும் வரப்போவதுமான பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்.ஒருவனேயானாலும் கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே மாதிரி இருப்பதாலும் ஜீவன் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 4.உடல் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது.அனைத்து சாதியினருக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கிறது.உடலில் வெள்ளை,சிவப்பு,மஞ்சள்,கருப்பு என பல நிறங்கள் இருந்தாலும் உடல் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 5.பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியினால் ஒருவன் பிராம்மணனா என்றால் அதுவும் இல்லை. ருஷ்யசிருங்கர்,கௌசிகர்,ஜாம்புகர்,வால்மீகி,வியாசர்,கௌதமர்,வஸிஸ்டர்,அகத்தியர் போன்ற பல ரிஷிகள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 6.அறிவால் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது,அனைத்து சாதியிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவைால் பிராம்மணன் என்பதும் இல்லை.
ஸ்லோகம் 7.கர்மத்தால் பிராம்மணன் என்றால் அதுவும் இல்லை.எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம்,ஸஞ்சிதம்,ஆகாமி என்ற கர்மங்கள் பொதுவாக காணப்படுவதால் பூர்வ கருமத்தின் விளைவால் ஜனங்கள் கிரியைகளைச்செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தாலும் பிராம்மணர்கள் இல்லை.
ஸ்லோகம் 8.தானங்கள் வழங்குவதால் பிராம்மணர்கள் என்றால் அதுவும் இல்லை.சத்திரிய முதலான பிற ஜாதியினரும் தானங்கள் செய்கிறார்கள்
ஸ்லோகம் 9.அப்படியானால் யார் தான் பிராம்மணன்.எவனொருவன் இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு முதலான நிலைகள் இல்லாதவனாகவும் ,ஸத்யம் ஞானம் அனந்தம் என்ற ஸ்வரூபமாகவும்,தான் நிர்விகல்பமாகவும்,எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ளே நின்று இயங்குவதாயும் சமம்,தமம்,உள்ளவன் விருப்பு வெறுப்பு அற்றவன்,ஆசை மோகம் முதலியவை இல்லாமல் அகங்காரம் விட்டவன்.இவனே பிராம்மணன்.இவனே பிராம்மணன் என்பது சுருதி,ஸ்மிருதி,புராண,இதிகாசங்களின் கருத்து.இதற்கு புறம்பாக பிராம்மணத்தன்மை இல்லவே இல்லை.ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும். ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும்.இது வேதம்

விநாயகர் புராணம் 1

விநாயகர் புராணம் 1
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று உன் தாய் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டாயா? உடனே அவற்றை என்னிடம் கொடு. இல்லாவிட்டால், உன்னை அடித்தே கொன்றுவிடுவேன், என்று மிரட்டினான் காமந்தன்.
இவன் குடும்பினியின் கணவன். உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் சொந்தக்காரன். குறிப்பாக வேசியர் சுகத்தில் திளைத்துக் கிடந்தவன். குடும்பினி அழுதாள். அடி உக்கிரமாக விழவே, வேறு வழியின்றி, பானைக்குள் ஒளித்து வைத்திருந்த நகைகளைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். என்ன தைரியமிருந்தால், வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்து விட்டு இவ்வளவு நேரம் காக்க வைத்திருப்பாய். அங்கே, என் காதலி அல்லிராணி என் வரவுக்காக காத்துக் கிடப்பாள். அவள் உன்னைப் போல அழுமூஞ்சியல்ல. அழகே, வடிவானவள். சோகத்திலும் புன்னகை சிந்துபவள். என் இதயராணியான அவளுக்கே இந்த நகைகள் இனி சொந்தம், என்றவன், தன்னை காக்க வைத்ததற்காக மீண்டும் அவளை தன் கோபம் தீர உதைத்து விட்டு கிளம்பி விட்டான். குடும்பினிக்கு துயரம் தாங்க முடியவில்லை. இனியும் இந்த பாவியுடன் வாழ்ந்தால், கட்டிய தாலியையும் பறித்து விடுவான். இவன் நமக்கு இனி பொட்டு வைக்க மட்டுமே பயன்படும் ஒரு கணவன். இன்னும் கொஞ்ச நாளில் நம் குழந்தைகளையும் இம்சை செய்ய ஆரம்பித்து விடுவான்.
ஆண்டவன் எனக்கு ஏழு மகன்களையும், ஐந்து பெண்களையும் தந்திருக்கிறான். கடைசிகாலத்தில், இவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி, தாய் வீட்டில் போய் அடைக்கலமாகி விட்டாள். தாய் வீட்டில் நல்ல வசதியுண்டு. தன் பேரன், பேத்திகள் சகிதமாக குடும்பினியின் பெற்றோர் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர். கணவனைப் பிரிந்து வந்தது அவர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும், தன் மகளின் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மேலிட அங்கேயே அவள் தங்கிவிட்டாள்.
அல்லிராணியின் வீட்டுக்குச் சென்ற காமந்தன், அவளோடு ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். நீ கொண்டு வந்த குறைந்த நகைக்கு, இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. மேலும், ஏதாவது கொண்டு வா, எனச் சொல்லி விரட்டி விட்டாள் அல்லி. வீட்டில் இன்னும் ஏதாவது கிடைக்குமென நம்பி வந்த காமந்தனுக்கு அதிர்ச்சி. வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு செம்பு கூட இல்லை. பக்கத்தில் விசாரித்தான். நீ செய்த கொடுமைக்கு எவள் தான் உன்னோடு வாழ்க்கை நடத்துவாள். அவள் பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள், என்றனர். காமந்தன் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை உழைத்து பொருள் சேர்க்க தன்னால் முடியாது. ஆனால், கொள்ளையடித்தால் என்ன என்று தோன்றியது. பெரிய கடாமீசை ஒன்றை வளர்த்தான். இடுப்பில் பிச்சுவா கத்தியை செருகிக் கொண்டான். இரவு நேரங்களில், சாலைகளில் போவோர் வருவோரை மிரட்டி கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டான். தர மறுத்தோரை கொலையும் செய்தான். காலப்போக்கில், பணத்தை தந்தவர்களையும் கொலை செய்வதை பொழுது போக்காக கொண்டு விட்டான். பணம் மிக அதிகமாக கொட்டவே, அல்லியை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, எந்நேரமும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தான். பணம் கிடைக்காத நாட்களில், காட்டு வழியே செல்லும் தம்பதிகளை மறித்து, கணவனைக் கொன்று விட்டு, அவனுடைய மனைவியைக் கெடுத்து கொன்று விடுவான்.
அவன் செய்யாத பாவமே இல்லை. ஒருநாள், உச்சகட்டமாக ஒரு பாவம் செய்தான். ஒரு பிராமண இளைஞன் அவனிடம் சிக்கினான். அவனிடம் இருந்த பொருளைக் கேட்டதும் பயந்து போன இளைஞன் கொடுத்து விட்டான். கத்தியை எடுத்து அவனைக் கொல்லப் பாய்ந்த போது, அந்த இளைஞன் கதறினான்.திருடனே! என்னைக் கொன்று விடாதே. எனக்கு இரண்டு மனைவிகள், மூத்தவளுக்கு குழந்தை இல்லை. இரண்டாம் மனைவியோ இன்னும் வயதுக்கு வராதவள். அவள் வயதுக்கு வந்த பின்னர், பித்ருகடன் செய்ய ஒரு ஆண்பிள்ளையை பெற்ற பின்பே மடிய வேண்டும் என நினைப்பவன் நான். ஆண் குழந்தை இல்லாதவனுக்கு நற்கதி கிடைக்காது என்பதை நீ அறிவாய். பொருளைத் தான் கொடுத்து விட்டேனே. என்னை விட்டுவிடு, என கெஞ்சினான். ஆனால், எதையும் காதில் கேட்காமல் அவனைக் கொன்று விட்டான் காமந்தன்.
பிராமணனைக் கொல்வது பெரும் பாவம். இறந்து போன பிராமணன், பிரம்மஹத்தி என்ற பூதமாக மாறி அவனைப் பீடித்தான். அன்றுமுதல், காமந்தனுக்கு எதுவுமே சரிவர நடக்கவில்லை. உடலுக்கு முடியாமல் போனது. பலமிழந்து தவித்தான். தன் நிலையை தன் சகா ஒருவனிடம் சொல்லி, தன் மனைவியை அழைத்து வரும்படி கூறினான். அவன், அங்கே போய் அதனைச் சொல்ல, பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். நான், அவனோடு வாழ முடியாது என சொல்லிவிடு, என குடும்பினி சொல்லிட்டாள். சகா இதை காமந்தனிடம் சொன்னதும், நொந்து போன அவனது வாழ்விலும் திருப்பம் வந்தது. சில பிராமணர்கள் ஒருநாள் காட்டு வழியே வந்தனர்.
நோயின் வேதனை தாளாமல் முனகிக் கொண்டே, அவர்களை அவன் அணுகினான். அவர்களை வணங்கி, தன்னிடமிருந்த பொருட்களை தானம் செய்தான். ஊருக்குள் இருக்கும் மற்ற பிராமணர்களையும் அனுப்பி வைக்க கூறினான். விஷயமறியாத அந்த வெளியூர் பிராமணர்கள், காமந்தனின் ஊரைச் சேர்ந்தவர்களிடம் இது பற்றி கூறினர். உள்ளூர் பிராமணர்களும் தர்மம் பெறுவதற்காக வந்தபோது தான், தர்மம் செய்தவன் கொள்ளைக்காரன் காமந்தன் என்பது புரிய வந்தது.
உன்னிடம் தர்மம் பெற்றால் பாவம். தானத்தைச் செய்ய தகுதியுள்ளவர்களிடம் தான் தானம் பெற வேண்டும். உனக்கேது அந்தத்தகுதி, நீ கொலைகாரன், கொள்ளைக்காரன், பெண்பித்தன், எனச் சொல்லிவிட்டு போய்விட்டனர். இந்த சம்பவம் காமந்தனை மிகவும் பாதித்தது. அப்போது, காட்டில் ஒரு தபஸ்வியை அவன் சந்தித்து தன் கதையைச் சொல்லி அழுதான். மகனே! ஊழ்வினையின் படியே இவையெல்லாம் நிகழ்ந்தன. உன் பாவத்திற்கு பரிகாரம் சொல்கிறேன் கேள்! இந்த காட்டில் பாழடைந்து போன விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அதைப் புதுப்பித்து கட்டு. உன் பாவத்தின் பெரும்பகுதி குறைந்து விடும், என்றார். தன்னிடமிருந்த பொருளைக் கொண்டு தபஸ்வி சொன்னதைப் போலவே கோயிலைக் கட்டி முடித்தான் காமந்தன். சில ஆண்டுகளுக்கு பிறகு அவன் இறந்து போனான்.
வளரும்.


Wednesday, September 16, 2015

பைரவர்

பைரவர்
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர்.
அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்.
இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி.
அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.
அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான்.
உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள்.
காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.
அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர்.
இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, "வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.
சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.
நவக்கிரக பைரவர்
பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம்.
மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
அஷ்டமி செவ்வாய்
தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும்.
அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.
தேங்காய் மூடி விளக்கு
ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும்.
அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு
விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும்.
போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.
நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.
அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.
பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக தெரியுமா.?


பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக தெரியுமா.? இதோ ரகசியம்.!
நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து, மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம், நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
உணர்ச்சியை கட்டுப்படுத்தும் வெள்ளி நகைகள்:
உணர்ச்சி வசப்படுதல் என்பது, எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளிக்கொலுசு குதிகால் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை.
சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் கூடிய கொலுசுகள் எல்லாம் பழைய பணியாகிவிட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன. சில நகை தயாரிப்பாளர்கள் கொலுசையும் மெட்டியையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் மட்டும் அணியப்பட்டு வந்தது.
சில பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிகிறார்கள். நாகரிக மங்கையர் தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பல வகை பொருட்களைக் கொண்டு நவீனபாணியில் தயாரித்த கொலுசுகளை அணிகின்றார்கள்.
தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலி கொண்டு இணைக்கப்பட்டு இருக்கும். கொலுசு முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன.
வெள்ளியிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆக்சிடைஸ்ட் வெள்ளி எப்போதும் நிறம் மங்கிக் காணப்படும். கொலுசுகள் இவ்வெள்ளியிலும் செய்யப்படுகின்றன. செயற்கை கற்கள் அதாவது போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமி பிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், தற்போது பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!


மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

Saturday, September 12, 2015

ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட்


ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட்


ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது ருத்ராட்சமாலையைவிரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள். கிடைத்ததைச் சாப்பிடுவார்கள். அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலைகடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள

Friday, September 11, 2015

ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி 
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

 சோ  நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற 
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது 
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது 
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் 
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. 
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.

கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது 
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே? 

சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா  வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் 
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து 
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு 
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், 

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.

தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம்  நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.

ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, 
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது 
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே 
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து  விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம்  உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.

Thursday, September 10, 2015

கடவுள் வேறு ; இறைவன் வேறு; ~~~~~~~~~~ ~~~~~~~~~~~

கடவுள் வேறு ; இறைவன் வேறு;
~~~~~~~~~~ ~~~~~~~~~~~
கடவுள் என்றால் தன்னுள் கடக்க உதவும் ஓர் அமைப்பு என்று பொருள்படுமே ஒழிய , அதுவே இறைவன் ஆகாது.
கடவுள் என்பது இறைவன் என்ற சக்தி இயங்க ஆதாரமாக ஆகும் ஓர் அமைப்பு. அத்தகைய சக்தியின் மூலம் நாம் நமது சக்தியினை /இறைவனை (நம்முள் உள்ள இறைசக்தியினை / இறைவனை) உணரலாம்.
எப்படியெனில், அந்த அமைப்பினை (கடவுளை) , நாம் நமது மனதில் நினைத்து (விரித்து) வழிபடும்போது, நமது மனம் அந்த ஒன்றின் மேலேயே குவிக்கப்பட்டதாக இருக்கும்போது (மனம் நிலைநிறுத்தல்) , அந்த அமைப்பின் (கடவுளின்) வழியாக , இறைவன் (இறைசக்தி) நம்முள் குடிகொள்கிறார் அல்லது நம்முள் இருக்கின்ற சக்தி எழுச்சியுற்று இறைவனுடன் ஒன்றுகிறது.
இத்தகைய தன்மையில் இயஙுகும் இறைவனை நாம் மறந்துவிட்டு (புரிந்துகொள்ளாது), நம் மனதினுள் விரிந்த அந்த கடவுள் என்கின்ற அமைப்பை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டு , அதுவே இறைவன் (அதுவே எல்லாமுமாக ) என்று நினைத்தோமானால்,
நமது செயல்கள் என்பது, சார்ந்த செயல்கள் என்றே அமையும். சார்ந்த செயல்களாக இருந்தாலும் ஜீவ நேயத்துடன் அனைத்து உயிர்களையும் நேசிக்குமாறு செயல்பட்டால், அத்தகைய தன்மையிலேயும் (அமைப்பு சார்ந்து) கூட , இறைநிலையை (தன்னை) அறியலாம்.
ஆனால், சார்ந்து என்கின்ற வட்டத்தினுள் மட்டும் இருந்து செயல்பட்டு வேற்றுமை கண்டால், தன்னையறியும் நிலை உண்டாகாது.
ஏனெனில், வேற்றுமை என்பது அமைப்புகளுக்குத்தானே ஒழிய , இறைவனுக்கு இல்லையே.
அது ஒன்றே என்றும் , ஒளிமயமானவன்
என்றும் அல்லவா உணர்த்தப்பட்டுக் கொண்டு வருகிறது. ஒளி (அக ஒளி, கண்ணால் காணும் ஒளியல்ல) என்பது பொதுவான ஒன்றுதானே, அதில் எப்படி வேற்றுமை காணமுடியும்.
ஆகையால், நாமும் நம்முள் எழும் வேற்றுமை என்ற உணர்வை அகற்றி,
ஒன்றுபட்ட சமுதாயமாக (உலக சமுதாயம்) வாழ முயல்வோமாக 

எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!

எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!

கடை வைத்திருப்பவர்கள் திருஷ்டி கழிக்க பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த வழிமுறை மிகவும் பலன் உள்ளதாகும். கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள்.
அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.

கண் திருஷ்டியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!

கண் திருஷ்டியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!

”கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது,” என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது, ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும் அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில் ஐயமில்லை.
கண் திருஷ்டியைக்களையும், சஹஸ்ர தீப தரிசனம் நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால் முற்றிலும் தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும் அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
பொறாமை சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையையே நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம். இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன.
எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால் திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம்.
கண்களால் தூண்டப்பட்ட மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது. இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள் கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம் !

மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
• மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும். • மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.
• ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.
• பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

Wednesday, September 9, 2015

ஏன்_பெரியவர்களுக்கு_அபிவாதயே_சொல்லி_நமஸ்காரம்_செய்ய_வேண்டும்‬?

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும் படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.
அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.
சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.
நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.
"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.
அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.
ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.
'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம். அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.
ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.
கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.
திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.
இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது.
(1) Abivathaye,
(2) _______ _______ ______ (Names of respective Gothra Rishis, as
Applicable as one, two, three, five or seven Rishis from the table given
Below)
(3) ____________ (Choose one as applicable »Eka Risheya,
»Dhwayarsheya, »Thrayaa Risheya, »Pancha Risheya, »Saptha Risheya),
(4) Pravaraanvitha:
(5) _______________ Soothra (Abasthampa Soothra/ Bhodhayana
Soothraa),
(6) _______________ (Yaajusha/Samo/Rg) Gaathyaathi
(7) ________________ Gothrasya
(8) ______________________ (your name)
(9) sarmaNa: aham asbibho.
ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;
1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.
2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது
3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.
4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.
எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;
1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம் thanks : Sai madhavan
2nd explane :
முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.
அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள் வரும் என்பது தான் இங்கே முக்கிய விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.
இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – சரி வரச் சொல்லுகிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன் என்று நேர் அர்த்தம் – தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டிச் சொல்கிறேன் என்று நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.
ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?
“எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து”
என்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
மகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கும்பகோணத்துக்கு வடகிழக்கில் திருப்பனந்தாள் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. தாடகை என்ற பெண் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது கட்டிய ஆடை அவிழ்ந்து விழத் தொடங்கியது. நழுவிய ஆடையை இரு முழங்கைகளாலும் அழுத்திப் பற்றிக் கொண்டு இருகைகளாலும் பிடித்திருந்த மாலையைச் சிவலிங்கத்திற்குச் சூட்ட முயன்றாள். அப்போது இறைவன் மனமிரங்கித் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் அச்சிவலிங்கம் சாய்ந்தபடியே இருந்தது.
சோழ மன்னன் செஞ்சடையப்பரை வழிபடச் சென்றபோது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். சிவலிங்கத்தை நேர் செய்ய முயன்றார். மன்னன் ஆணைப்படி யானை, சேனை முதலியவற்றின் துணையுடன் கயிறு கொண்டு இழுத்தும் சிவலிங்கம் நேராகவில்லை. குங்குலியக்கலயநாயனார் மன்னனின் இவ்வருத்தத்தைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்று தம் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கயிற்றின் மறுநுனியைச் சிவலிங்கத்தின் மேல் சுற்றி வலிந்து இழுத்தார். அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் நிமிர்ந்தார்.
பெரியபுராணம், தலபுராணம் இரண்டிலும் இச்செய்திகள் உள்ளன. தாடகை என்ற பெண், கருவறைக்குள் சென்று வழிபட்டதை இதனால் அறியலாம். சோழ நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருச்சாத்தமங்கை என்பது திருநீலக்க நாயனாரால் சிறப்புப் பெற்றது. மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமருகல் என்ற தலத்திற்கு வடகிழக்கில் இது உள்ளது. இன்று சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.
திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார். கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.
வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார். அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.
வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து, ‘அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார். ‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.
இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிறவிடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார். உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.
இச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார். நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
கொங்கு நாட்டில் வேடுபறியால் சிறப்புப் பெற்ற தலம் திருமுருகன்பூண்டி. சேரமான் பெருமாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்று வந்த பொருள்களைச் சிவகணங்கள் திருடர் வடிவில் வந்து கவர்ந்து சென்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி இழந்த பொருள்களை மீட்டார்.
திருமுருகன் பூண்டி கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. முருகநாதர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் கொங்குப் பாண்டியன் வீரபாண்டியதேவன் (கி.பி. 1265–1285) காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டில் தேவரடியார்க்குக் கொடுத்த வரிசைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
மாலைக் காலத்தில் பூசையின் போது அரங்கேறி நடனம் புரிதல், திருவிழாக் காலத்தில் ஊர்வலத்தின் இறுதியில் இறைவனுக்கு உண்டாகும் கண்ணேறு (திருஷ்டி) போக்கி ஆரத்தி எடுத்தல், பூசை முடிவில் திருநீறு, பிரசாதம் பெறும் உரிமை பெற்றிருத்தல், இறைவன் உற்சவத்தின் உலாவரும் போது உயர்ந்த ஆசனங்களிலிருந்து பார்த்தல், நடனம் ஆடிச் செல்லும் போது நடைக் காவனம் விரித்தல், மார்கழித் திருவாதிரையில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்தல் முதலிய வரிசைகள் தரப்பெற்றன.
இவற்றிக்கெல்லாம் மேலாகக் கோயிலில் மூன்றாம் அறையாகிய மகாமண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கடந்து கருவறை சென்று வழிபட உரிமை தரப்பட்ட செய்தி கல்வெட்டில் வருகின்றது.
தேவரடியாராகிய நாட்டிய பெண்கள் கருவறை வரை சென்றனர் என்பதனால் கருவறைக்குள் சென்றனர் என்பது கல்வெட்டால் புலனாகிறது. கோகர்ணம், திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) ஆகிய தென்னிந்தியக் கோவில்களிலும் சோமநாதம், கேதாரநாத், காசி, உஜ்ஜியினி, நாகநாதம், திரியம்பகம், பீமநாதம் முதலிய வட இந்தியக் கோவில்களிலும் ஆண், பெண் அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புலியூர் சிமெண்ட் ஆலைக்குப் பக்கத்தில் உள்ள உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலும், தாடிக்கொம்பு திருவருள்துறை நாதர் கோவிலும் ஆண், பெண் அனைவரும் சென்று வழிபடலாம் என்ற மரபு நடைபெற்று வருகிறது.
— ந. இரா. சென்னியப்பனார்

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா?

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா?
மாதவிடாய்இறைவனின் படைப்பில் மனிதர்களே சிறந்த படைப்பாகும். மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள். ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது.
அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்கபட்டது. அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிகபடியான உஷ்ணம் உண்டாகும். இதனால் அதிகபடியான இரத்தபோக்கு உண்டாகும். இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார்.
ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளியேறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.
அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர். இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்து விட்டது என்பதே உண்மையான விசயமாகும்.

Tuesday, September 8, 2015

கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும்?

கேள்வி: கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும்?.....
ஒரு யோகியை பார்த்தால் காலில் விழவேண்டும், பெற்றோர், பெரியவர்களைப் பார்த்தால் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும், போன்ற வழக்கங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் விஞ்ஞானப்பூர்வமான அடிப்படை உள்ளதா?
காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு.
கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். நாம் கடவுளை இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னது கூட பெற்றோர்தானே? எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை நாம் வணங்குகிறோம்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. இதன் விஞ்ஞானத்தைச் சொல்வதென்றால், உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம். அல்லது உடல் என்பதை சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த சக்திதான் உங்கள் எல்லா உறுப்புகளையும் உருவாக்க அடிப்படையாக இருக்கும் சக்தி. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும். நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம்.
ஒரு யோகியையோ குருவையோ பார்த்தால் வெறுமனே போய் காலில் விழுந்தால் போதாது. எப்படி விழவேண்டும், எப்படி அவர் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டு. அதை அறிந்து அவர்களின் பாதம் பற்றினால், மிகுந்த சக்தியை அவரிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். அதனால்தான் அந்த யோகியோ குருவோ விரும்பினால் மட்டுமே அவர் பாதங்களை நீங்கள் தொட அனுமதிப்பார்கள்.
எல்லா சமயங்களிலும் தொடுவதற்கு அனுமதி இல்லை. கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது எதற்கென்றால், அங்கு கடவுள் சக்திரூபமாக இருக்கிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக் கொள்ளும் தன்மை இயல்பாகவே அனைவருக்கும் இருப்பதில்லை. எனவே அதனுடன் நீங்கள் தொடர்பில் வரவேண்டும். அதற்காகத்தான் கோவிலில் நீங்கள் தரையில் உட்காரவேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும் என்றார்கள். அதுவும் ஆண்கள் என்றால் சட்டையைக் கழற்றிவிட்டு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கலாம். பெண்கள் என்றால் ஈர உடையுடன் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும் என்று வகுத்தார்கள்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும். ஆனால் தற்சமயம் பொத்தென்று உடலை கீழே போட்டு உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படுமாறு வணங்குகிறோம். ஆனால் பாரம்பரிய முறைப்படி சாஷ்டாங்கமாகத்தான் ஒருவர் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு பல சிறப்புகள் உண்டு.

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புது
மணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனி படுக்கை தான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவிய ல் ரீதியாகவும் நன்மை தரக் கூடியதுதான் என்று நிரூபிக்க ப்பட்டுள்ளது.
அம்மன் மாதம்
தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப்படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரு ம்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட் டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்த தல்ல என்பது பழங்கால நம்பிக்கை யாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டு மே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வை த்துவிடுகின்றனர்.
ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையு ம், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பி ள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.
ஆயுர்வேதம் சொல்லும் உண்மை
ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள து. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூல மும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நே ரிட்டால் கருவில் உதிக்கும் குழந் தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு ள்ளது. எனவேதான் இந்த மாதத் தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.
சூரியனின் நகர்வு
ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்தகால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என் றும் கூறுகின்றனர். இதனால் உட லில் நோய் எதிர்ப்பு சக்தி அதி கரிக் குமாம். மேலும் ராமாயணம், மகா பாரதம் உள்ளிட்ட இதிகாசங் களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர் கள்.
ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாய த்தை தவிர வேறு எதிலும் கவ னம் திரும்பிவிடக்கூடாது என்பதற் காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.
சித்திரையில் குழந்தை
ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள்.சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைக ளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய் வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்´ என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமா கக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின் றனர்.
செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங் கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கு ம் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கிய மான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். என வே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தி ற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
நன்றி..

பூஜை அறை வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே இருக்கலாமா?

பூஜை அறை வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே இருக்கலாமா?
பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.
எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.
இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.
பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.

Monday, September 7, 2015

நம் உடலில் உள்ள தத்துவங்களும் - அதில் உள்ள திதி நித்யாவின் அமைப்பும்

நம் உடலில் உள்ள தத்துவங்களும் - அதில் உள்ள திதி நித்யாவின் அமைப்பும். ராஜ தந்திரம் என்ற நூலில் இது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் படித்து வந்தாலே போதுமானது ஆகும்.
குரு சிஷ்ய உறவு = பூமி தத்துவம்
மந்திர மாத்ருகா = ஜல தத்துவம்
நித்யா தேவி மந்திரங்களை அறிவது =அக்னி தத்துவம்
முத்திரைகள் = வாயு தத்துவம்
நவ தவாரங்கள் =ஆகாச தத்துவம்
காம்ய ஆராதனை = கந்த தத்துவம்
காமேஸ்வரி நித்யா = ரச தத்துவம்
பகமாலினி =ரூப தத்துவம்
நித்யக்க்லின்னா =ஸ்பர்ச தாதுவம்
பேருண்ட =சப்த தத்துவம்
வஹ்னி வாசினி = யோனி தத்துவம்
மகா வஜ்ரேச்வரி = குத தத்துவம்
சிவதூதி = பாத தத்துவம்
த்வரிதா =கை தத்துவம்
குல சுந்தரி = வாக்கு தத்துவம்
நித்யா = பிராண தத்துவம்
நீலபதாகா =ஜீவா தத்துவம்
விஜயா = கண் தத்துவம்
சர்வ மங்களா =மூக்கு தத்துவம்
ஜ்வாலாமாலினி = ச்ரோத்த்ரா தத்துவம்
சித்ரா = அஹங்கார தத்துவம்
குருகுல்லா =புத்தி தத்துவம்
வாராஹி = மனசு தத்துவம்
பதினாறு நித்யாவையும் வணங்குவது = பிரக்ருதிமாயி
மாத்ருகைகளும் நேரமும் =புருஷாத்மமாயி
மந்திரங்களின் பெருமை = நித்யமாத்மாமாயி
பிராண அபானங்கள் = கலா ததுவமாயி
காலமும் இடைவெளியும் = ராகா ததுவமாயி
ஹோம குணங்கள் = வித்யா ததுவமாயி
ஸ்ரீ வாஸ்து தேவதா சக்ரா =கால ததுவமாயி
அரிமர்த்தன ஹோமம் =மாயா ததுவமாயி
சௌம்யா ஹோமம் =சுத்த வித்யா
யந்திரங்கள் = ஈஸ்வர ததுவமாயி
கிரியைகளும் பலன்களும் = சதாசிவமாயி
சாதகன் =சக்தி ததுவமாயி
அர்க்கியம் =சிவா ததுவமாயி
ஆகவே அன்பர்களே,உங்கள் உடலில் எந்த பாகம் உங்களுக்கு நோய் உள்ளதோ ,அந்த பாகத்தில் வரும் நித்யாவிற்கு பூஜை ஹோமம் செய்தால் குறைந்துவிடும் என்பதே இதன் கருத்து ஆகும்.
நீங்கள் தினமும் கீழ்கண்ட விவரப்படி திதிக்கு உள்ள அம்பாளின் பெயரை சொல்லி வந்தாலே உங்களுக்கு எல்லாம் கைகூடும்.
பிரதமை = காமேஸ்வரி
த்விதியை = பகமாலினி
திரிதியை = நித்யக்க்ளின்னா
சதுர்த்தி = பேருந்டா
பஞ்சமி - வஹ்நிவாசினி
சஷ்டி = மகா வஜ்ரேச்வரி
சப்தமி - சிவா தூதி
அஷ்டமி = த்வரிதா
நவமி = குல சுந்தரி
தசமி = நித்யா
ஏகாதசி =நீலபதாகா
த்வாதசி = விஜயா
த்ரயோதசி =சர்வ மங்களா
சதுர்தசி = ஜ்வாலா மாலினி
பௌர்ணமி = சித்ரா
இவர்கள் எல்லாரும் அம்பிகையின் திதி தேவதைகள். கடைசியாக அம்பிகையே மகா நித்யாவாக மேருவில், சிந்தாமணியில் அமர்ந்து, ஆளுகின்றாள்.

சுத்தமான மந்த்ரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால்



சுத்தமான மந்த்ரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யாகம் பண்ணினால் பெறக் கூடிய பலனை இந்த கலியுகத்திலே பெற்று விடலாம். ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சுலபமாக பெற முடிவதால் 'கலி: சாது: ' என்கிறாா் வியாஸ மகாிஷி.
இவ்வளவு சுலபத்திலும் ஒரு நிபந்தன அழகாக ஒளிந்திருக்கிறது பாருங்கள்...என்ன நிபந்தனை அது? மனம் லயித்து என்பதுதான் அந்த நிபந்தனை.
ரொம்ப சுலபமாகச் சொல்லி விடலாம்'மனம் லயிக்க வேண்டும்' என்று...ஆனால் முடிகிறதா? அதற்கும் நமது சாஸ்திரமே வழி சொல்லித் தருகிறது. அந்த வழி தான் பிராணாயாமம்.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளிவிடும் பயிற்சி என்று எளிமையாய்ச் சொல்லலாம்.
ஆனால் இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற நேரம் இருக்கிறதே, அது முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக் கொண்டே வரவேண்டும். மனம் கட்டுப்படும்.
மல்லிக் கொடிபோல் ஆடிக் கொண்டிருக்கிற நமது மனம், பிராணாயாம தேக்கத்தினாலே ஆடாமல் நிற்கும். அப்படி மனதை நிறுத்திவிட்டால், 'கோல் தேடி ஓடும் கொழுந்து போல் மால் தேடி ஓடும் மனம்' என்கிறாா் பூதத்தாழ்வாா்.
ஆக, மல்லிக் கொடி மாதிாி ஆடுகிற மனத்தைப் பிராணாயாமத்திலே நிறுத்தி, எம்பெருமான் என்கிற அந்தக் கொம்பில், அவன் திருவடியிலே கொண்டு சுற்றிவிட்டு விட்டால் அது பற்றிக் கொண்டு படரும்.
எத்தனை நேரம் உட்காா்ந்து சுலோகத்தைச் சொன்னாலும் மனம் லயிக்கமாட்டேன் என்கிறதே; இரண்டு சுலோகம் சொல்வதற்குள் எங்கேயோ போய்விடுகிறதே....இப்படி எத்தனையோ குறைகள் நமக்கு உண்டு.
இதெல்லாம் நிவா்த்தியாக வேண்டுமானால் பிராணாயாம பலம் நமக்கு இருக்க வேண்டும். அந்த பலம் பெருகப் பெருக மந்த்ரத்தை உச்சாிப்பதற்கான பலமும் அதிகமாகும். மூச்சைத் தேக்குவது என்பது மந்திர உச்சாரணத்தில் ரொம்ப முக்கியம்.
நாம் மிகவும் அவசரமான ஒரு யுகத்திலே ஓடிக் கொண்டிருக்கிறோம். ' இதைப் பண்ணுவோமா? அதைச் செய்வோமா? ' என்று மனம் அலைந்து கொண்டேயிருக்கிறது. சந்தியா வந்தனம் என்பதாக ஒன்று செய்தாலும் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து போய்விடுகிறது!
உண்மையில் ஐந்து நிமிடங்களில் முடியக் கூடிய விஷயமா அது..? பிராணாயாமம் என்பது அந்தா்கதமாயிற்றே! அதெப்படி ஐந்து நிமிடங்களில் முடியும்?
நமது ஓட்டம்தான் அதை அப்படிக் குறிக்கி விட்டது. அதனால்தான் நமக்குப் பிராணாயாம பலம் இல்லாமல் இருக்கிறது.
பிராணாயாமத்தை ரொம்ப வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஸ்த்ரீகளும் பிராணாயாமம் செய்யலாம் என்கிறது. மந்திரம் கூறிச் செய்யாவிட்டாலும் நித்யமே பெண்கள் அதைப் பயிற்சியாகச் செய்யலாம். அதற்கு புராணத்தில் முன் உதாரணம் இருக்கிறது.
" யாா் -- எந்தப் பெண் -- பிராணாயாமம் செய்தாா் அந்தக் காலத்தில்? " என்று கேட்டால், கௌசல்யா தேவி -- சாக்ஷத் ராம மாதாவே பிராணாயாமம் செய்திருக்கிறாா். அந்த எம்பெருமானை நித்யம் தியானித்தாள்.
அவள் பெற்ற பலன் எப்போ்ப்பட்டது என்பதுதான் நமக்குத் தொியுமே!
(முக்கூா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச் சாா்யாா் ஸ்வாமி)