Saturday, June 8, 2013

பசுவைக் கொன்ற பாவம் தீர என்ன பரிகாரம்?

வீட்டில் வளர்க்கும் பசுவை சித்ரவதை செய்யக் கூடாது. கொல்லக்கூடாது என்று நம் தர்ம சாஸ்திரங்கள் போதிக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ பசுவதை செய்திருந்தால் நமக்கு வாழ்நாளில் குழந்தைப்பேறின்மை திருமணத்தடை, வேலை இன்மை,சொத்து பறி போதல் இதனால் நிம்மதி இன்மை ஏற்படலாம் என்பது கருத்து.

இதற்குத் தீர்வு காண ஒரு புராணக்கதை உண்டு. ஒரு சமயம் தாலப்யர் என்ற முனிவர் புலஸ்திய முனிவரிடம் இரண்டு சந்தேகங்களைக் கேட்டார். பசுவதை, பசுவைக் கொன்றதற்கும் பிறர் பொருள், பூமியை அபகரித்தல் ஆகிய கொடும் பாவங்களுக்குப் பரிகாரம் ஏதும் உண்டா? என்று கேட்டார். அதற்கு புலஸ்தியர் கூறிய பதில் வருமாறு:-

மாசி மாத தொடக்க நாளில் பசு சாணம் இடும் போது அதைக் கீழே விழாமல் தட்டில் ஏந்தி அத்துடன் எள் பருத்திக் கொட்டை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து பூஜை அறையிலோ வீட்டு மாட்டுக் கொட்டகையிலோ வைத்து விட வேண்டும். இந்தக் கலவை அடுத்து வருகிற பவுர்ணமி தினம் வரை காயாமல் ஈரப்பதமாகவே இருந்தால் இந்தப் பாவங்கள் எல்லாம் விலகி விடும் என்பது பொருள்.

இதற்கு ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தைக்கு அடுத்து மாசி மாதத்தில் வரும் இந்த ஏகாதசி நாளில் காலை எள் அரைத்து பூசிக் கொண்டு நீராடி, எள் தானம் கொடுத்து பிறகு எள்ளால் நில ஹோமம் செய்து எள் சாதத்தை படைத்து உண்ண வேண்டும். எள் நீர் தானம் தந்து விஷ்ணுவை பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆறு விஷயங்களை அடக்கி இருப்பதால் இதற்கு ஷட்திலா (திலம்-எள்) ஏகாதவி என்ற பெயர் வந்தது. இந்த விரத மகிமையை விளக்க ஒரு புராண சம்பவமும் இங்கே குறிப்பிட வேண்டும். தான தருமங்கள் பலவற்றையும் செய்த ஒரு பெண் அன்னதானம் மட்டுமே செய்யாமல் சொர்க்கம் அடைந்தாள்.

அதனால் அவளுக்கு சொர்க்கத்தினுள் போக அனுமதி கிடைக்காமல் வருந்தி அங்கே வந்த ஒரு துறவியின் ஆலோசனைப்படி தேவலோகப் பெண் ஒருவரின் உதவியோடு ஷட்திலா ஏகாதசி விரதம் செய்து அதன் மூலம் பெற்ற உணவுண்டு பசி தீர்த்துக் கொண்டு தானமும் கொடுத்து சொர்க்கம் அடைந்தாள். இனி வரும் காலத்தில் தெரிந்தும் தெரியாமலும் பசுவதை செய்யாது இருங்கள்.

No comments:

Post a Comment