Thursday, August 22, 2013

பூஜையறையில் உள்ள சிதிலமான படங்களை என்ன செய்வது?

தாத்தா பூஜை செய்தது, அப்பா பூஜை செய்தது என்று நெடுங்காலமாக உள்ள சுவாமி படங்கள் சிதிலமடைந்திருந்தாலும் சிலர் அதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. இப்படங்களை பழுது பார்த்து வைத்துக் கொள்ள விரும்பினால் பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அதே சுவாமி படத்தை புதிதாக வாங்கி வைத்து பழையதை கழித்து விடலாம். இதில் தவறில்லை. உங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதைச் செய்யுங்கள்.

No comments:

Post a Comment