நமக்குள்ளும் சொர்க்க வாசல்.
இன்று வைணவத் திருத்தலங்களில்சொர்க்க வாசல் திறக்கப்படுவதையும் பக்தர்கள் அனைவரும் ஆனந்தப் பரவசத்தோடு அதற்குள் நுழைந்து கோஷமிட்டபடி ஆனந்தப் பரவச நிலையில் வருவதைப் பார்க்க முடிகிறது. பக்திப் பரவசம் என்பது முடிவில் நாம் அடையப் போகும் ஆனந்தப் பரவச நிலையின் ஒரு முன்னோட்டம் என்று சொல்லலாம். இறைவனின் திருவுருவத்தில்மனம் கரைந்து பின் திருவடிப் பேறாகிய முக்தி நிலைக்கு இட்டுச் செல்வது பக்தி யோகம். குண்டலினி யோகத்தில் நம் உடலிலும் ஒரு சொர்க்க வாசல் இருக்கிறது என்கிறார்கள் யோகிகள். அதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள சுஷும்னை நாடியை நோக்கிப் போக வேண்டும். இந்த சுஷும்னை நாடியை சுசேருலதை என்று மேல்நாட்டு அங்க வியூக சாஸ்திரம் வர்ணிக்கிறது. ஆனால், அது ஸ்தூல காரியங்கள். நம் யோகிகள் கூறும் சுஷும்னை நாடி சூக்கும சரீரத்தில் உள்ளது.
ஒரு குண்டலினி யோகியின் ஆன்மிக, ஆனந்தப் பயணம் இதற்குள்ளேதான் நடக்கிறது. எனவேதான் ஏசு மகான் முக்திக்கான(பரலோக இராஜ்ஜியத்துக்கான) வழி ஒடுக்கமானது என்றார். அவர் கூறியதை பிரம்மரந்திரத்தின் ஊசி முனையளவு துவாரத்தோடும் ஒப்பிடலாம். இந்த பிரம்ம துவாரமே பத்தாவது வாசல் என்று சொல்லப்பட்டுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இந்த ஸ்தூல சரீரத்திற்கு உயிராகிய ஒளியை வழங்க இதன் வழியாகவே பிரவேசித்தார் என்று சில உபநிடதங்கள் சொல்கின்றன. யோகிகளும் இதன் மூலம் உயிரை வெளியேற்றி பரமாத்மாவோடு கலப்பதுவே இறவா நிலை எனப்படுகிறது. மற்ற துவாரங்கள் வழியாக ஏற்படுவது இறப்பு. பத்தாவது ஒடுக்கமான துவாரத்தின் வழியாக பிரவேசிப்பது இணைப்பு. இறப்புக்கும், இணைப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவே ஏசு நாதர் சித்தர் பரலோக இராஜ்ஜியத்திற்கான வழி ஒடுக்கமானது என்று சொன்னார் என்று இரு கருத்துகள் உள்ளன. இரண்டுமே இணைதலுக்கான வழியே.
பிரம்ம வாசலைப் பற்றிப் பார்த்தோம் இனி சொர்க்க வாசலை கண்டு பிடித்து திறந்து நுழைவோம். சுஷும்னை நாடியானது மூலாதாரச் சக்கரம் முதல் பிரம்மரந்திரம் வரை ஓடுகிறது. விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும், மேலை நாட்டு அங்க வியூக சாஸ்த்திர வல்லுனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். சுசேருலதையில் ஒரு குழாய் போன்ற துவாரம் உள்ளது என்று. இதையே நம் நாட்டு யோகிகளும் சொல்கிறார்கள். எனவே ஸ்தூலத்தில் அது சுசேருலதை, சூக்குமத்தில் சுஷும்னை என்று நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். அதைத் தாண்டி நுணுக்கமாக மேல்நாட்டு அங்கவியூக சாஸ்திரிகள் வேறொன்றையும் சொல்லவில்லை. ஆனால் நம் யோகிகள் அதி சூக்குமங்களையும் ஞானத்தால் உணர்ந்து விளக்கியருளியிருக்கிறார்கள். இந்த சுஷும்னை நாடிக்குள்ளே வஜ்ஜிரை என்று ஒரு நாடி உள்ளது. அது ஒளி பொருந்தியது, இராஜஸ குணத்தைத் தூண்டுவது. இந்த வஜ்ஜிரை நாடிக்கு உள்ளே சித்ரை என்று ஒரு நாடி உள்ளது. இது பழுப்பு நிறமுடையது, சாத்வீக குணத்தைத் தூண்டுவது. இந்த சித்ரைக்குள்ளும் மிக மிக நுண்ணிய துவாரம் உள்ளது. இதுவே பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகிறது. இதன் வழியாகத்தான் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சகஸ்ராரத்திற்குச் செல்கிறது. அதாவது ப்ரம்ம நாடி வழியாக, பிரம்மரந்திரம் அடைந்து பிரம்ம துவாரம் வழியாக வெளியேறி பரமாத்மாவோடு கலப்பதுவே மரணமில்லாத பெரு வாழ்வு. தேகம் வீழாது.
இந்த வழியில்தான் நமது ஆறு சக்கரங்களும் அமைந்துள்ளன. அதுபோல சித்ரை நாடியின் அடி முனையில் உள்ள துவாரத்திற்கும்பிரம்ம துவாரம் என்றே பெயர். இதன் வழியாகவே குண்டலிலி நுழைந்து மேலேறி பிரம்மரந்திரத்திற்குப் போகும். இந்தப் பிரபஞ்சத்தில் இதை விளக்கும் விதமாக பத்ரிநாராயணத்திலுள்ள ஹரியிடம் சொல்லும் வாசலான ஹரித்துவாரத்தைச் சொல்லுவார்கள். இந்த சித்ரை நாடி சிறு மூளையில் முடிவடைகிறது. சில யோகிகள் சுசும்னையையே ப்ரம்ம நாடி என்பார்கள். ஏனென்றால் வஜ்ஜிரையும், வஜ்ஜிரைக்குள் சித்ரையும் சுஷும்னை நாடிக்குள்ளேயேதான் இருக்கின்றன. இந்த சித்ரை நாடியானது யோகிகளால் போற்றப்படுவதும், மிகவும் விரும்பப்படுவதுமாகும். இது மெல்லிய தாமரை நூல் போன்றது. ஐந்து வர்ணங்களாய் பிரகாசிப்பது. சரியாகச் சொன்னால் இது சுஷும்னையின் மத்தியில் கீழிருந்து மேலாக உள்ளது. இது உடலின் மிகவும் உயிர்ப்புள்ள, ஜீவாதாரமான பாகம். இதை சொர்க்கத்தின் வாசல், சொர்க்கத்தின் பாதை என்று சொல்வார்கள். இதுவே அழியாத் தன்மையை தருவது. இந்த நாடியில் உள்ள சக்கரங்களை தியானிப்பவன் வினைகள் நீங்கி பரிசுத்தமடைகிறான். எனவே இதுவே மோட்சமளிப்பது.
இந்த சுஷும்னையில் சுவாசம் ஓடும் போது மனம் சஞ்சலமற்று விளங்கும். இது ஒரு அவஸ்தை எனக் கொள்ளப்பட்டு, அந்நிலையை ''உன்மானி அவஸ்தை'' என்பார்கள். இந்த அவஸ்தை நிலையே யோகத்தில் மிக உன்னதமான நிலை. இந்த சுஷும்னை நாடி திறந்த பிறகு எளிதில் தியானம் கைகூடும். நாடிகளில் தடைகள், அசுத்தங்கள் தங்கி தடை செய்தால் மத்திய நாடியான சுஷும்னையில் சுவாசம் செல்லாது. இதற்காகவே நாடி சுத்தி மற்றும் பிராணாயாம்ம் செய்யச் சொல்கிறார்கள். எனவே இன்று வைகுண்ட ஏகாதேசியும் அதுவுமாக சொர்க்க வாசலான பிரம்ம துவாரம் மற்றும் சொர்க்கத்தின் வழியான சித்ரை நாடியின் ப்ரம்ம நாடி எல்லாம் கண்டு. பிரம்மரந்திரம் போய் பரம்பத வாசலைக் கடந்து பரமாத்மாவையும் தரிசித்து வந்தாகி விட்டது. இனி எல்லாம் சுகமே.

No comments:
Post a Comment