Wednesday, January 8, 2014

ஆஞ்சநேயரை கோவிலில் வழிபடும் முறைகள்

ஆஞ்சநேயர் சுவாமியின் சன்னதியை அடைந்ததும் நீள்வசமாக தரையில் படுத்து வணங்கி சேவித்து எழுந்து நிற்க வேண்டும். பக்தர்கள்- காது இரண்டு கைகள் இரண்டு, மோவாய்க்கட்டை ஆகிய உடலுறுப்புகள் எட்டும் தரையில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும்.

இதனை அஷ்டா நமஸ்காரம் என்று கூறுவார்கள். ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி இருக்கும். அவரை தரிசிக்க வேண்டுமானால் முதலில் விஷ்ணுவின் முன் வீற்றிருக்கும் பெரிய கருடாழ்வாரை தரிசிக்க வேண்டும்.

பின்னர் மூலஸ்தான மூர்த்தியை தரிசித்து துளசியும் தீர்த்தமும் பெற்றுக்கொண்டு சடாரி சாத்துதல் பெற்று தாயார் சன்னதிக்குச் சென்று அம்பாளை தரிசித்து விட்டு உட்பிரகாரத்தில் இருக்கும் மும்மூர்த்திகளையும் தரிசிக்க வேண்டும். கடைசியாகத்தான் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து தன் குறைகளை கூறி நிவர்த்திப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment