பிரேமை பக்திக்கு தான் முதலிடம்
ஒரு குருவிடம் ஒரு பக்தன், சுவாமி! பக்தியில் எது உயர்ந்தது? எனக் கேட்டான். அதற்கு அந்த குரு சொன்ன கதை இது. அடர்ந்த காட்டின் வழியே மூன்று பேர் சென்று கொண்டிருந்தார்கள். திடும் என உறுமல் சத்தம் கேட்கவும், எதிரே பார்த்தனர். அங்கே ஒரு புலி இவர்கள்மேல் பாயத் தயாராயிருந்தது. ஐயோ! நாம் இன்றோடு தொலைந்தோம்! என்றான் முதலாமவன். ஏன் கடவுள் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார். உடனே பிரார்த்தனை செய்வோம்! என்றான் இரண்டாமவன். ஏன் வீணாக கடவுளுக்குக் கஷ்டம் கொடுக...்க வேண்டும். வாருங்கள், இந்த மரத்தின்மீது ஏறிக்கொள்ளலாம்! என்றான் மூன்றாமவன். ஐயோ! என அலறிய முதலாமானவன் சிந்தனையில்லாதவன். அவனுக்கு இறைவன் பற்றி எதுவும் தெரியாது. இரண்டாம் நபர் ஞானம் உள்ளவன். மூன்றாம் நபர்தான் பிரேமபக்தி கொண்டவன். அவனுடைய பக்திதான் உயர்ந்தது.
பிரேமை உள்ள இடத்தில்தான் அன்பு பெருகும். அன்பு கொண்ட இதயம் அன்புக்குரியவருக்கு கஷ்டம்தர விரும்பாது. சர்வ வல்லமை கொண்ட கடவுளானாலும் அவருக்குக்கூட கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை இந்த மனம். இத்தகைய பிரேம பக்தி கொண்டவர்கள் அனைவருமே இறைவனால் நேசிக்கப்படுவார்கள்

No comments:
Post a Comment