Saturday, June 14, 2014

60-ம் கல்யாணம்

ஓருவருக்கு 60 வயது முடிந்து 61-வது வயது தொடங்கும் நாளில் 60-ம் கல்யாணம் செய்து கொண்டாடுகிறார்கள். இதுபற்றி சவுனக மகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்ற நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 60 வயது முடிந்து 61-வது தொடங்கும் நாளில் காலயவனன், சுதூம் ரன் என்னும் தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலு இழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள் - ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும்.

ஒருவர் பிறக்கும் போது வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61 வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால் இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்

No comments:

Post a Comment