Thursday, July 10, 2014

கடமையே தெய்வம்

திருவண்ணாமலையில், ரமண மகரிஷி கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஊழியர் துடைப்பத்தால் கிரிவலப்பாதையை பெருக்கிக் கொண்டிருந்தார். ரமணரைப் பார்த்ததும், துடைப்பத்தை கீழே போட்டு விட்டு, அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். ரமணர் அவனிடம், ""ஏனப்பா வேலையை நிறுத்தி விட்டாய்? அவரவர் கடமையை பொறுப்பாக கவனமாகச் செய்வதும், கடவுளை வணங்குவது போல தான்,'' என்று கனிவோடு கூறினார்.
அப்போது, ரமணரின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பக்தர்,""அதெப்படி! தங்களைப் போன்ற
மகான்களைக் கண்டால் மரியாதை செய்ய வேண்டாமா?'' என்றார்.
ரமணர் அவரிடம்,"" அவரவர் கடமையை வேறெந்த நினைவுமின்றி, மனதை ஒருமுகப்படுத்தி செய்வதே மிகச்சிறந்த தெய்வத்தொண்டு'' என்றார்.

No comments:

Post a Comment