Sunday, February 21, 2016

நான் யார் ?

நான் யார் ?
நமக்கு மொத்தம் ஐந்து 5 விதமான உடல்கள் கோசங்கள் உள்ளன.அவை அன்னமய,ப்ராணமய,மனோமய,விஞ்ஞானமய,ஆனந்தமயகோசங்கள்
1.அன்னம் மயகோசம்- இது நாம் சாப்பிடும் உனவால் ஆனது.
நல்ல சத்துள்ள உனவுகளை-சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகவும் ,செழிப்பாகவும் காணப்படும்.
சத்துயில்லாத உனவுகளை சாப்பிட்டால் உடல் மெலிந்து,நோய் உள்ளது போல் தோன்றும்.
நிறைய உன்டால் உடல் மிக பருமனாககாணப்படும்.
அறவே சாப்பிடாமல் இருந்தால் உடல் மிக மெலிந்து எலும்பு தோளுமாக தெரியும்.
இத்தேகத்தை ஐடம் என்று உபநிஷத்கள் சொல்கின்றன.
உதாரணம் ;
1.நாம் நன்றாக தூங்கும்போது நம் அருகில் யார் வந்தாலும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை .அதற்கு காரணம் உடம்பு ஐடம்.
2.நாம் எதையாவது ஆழ்ந்து கதைபுத்தகத்தை ,வேலை அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது நம்மை சுற்றி என்ன எப்படி சூழ்நிலைகள் இருப்பதுகூட நமக்கு தெரியாது.சிலநேரங்களில் பசியைகூட மறந்த நிலையில் இருப்போம் இதற்கு அடிப்படை காரணம் உடம்பு ஐடம் .
…………………………………………………
பஞ்சப்ராணன்
1.ப்ராணன்…….. சுவாசம்
2.அபாணன்……. வெளிக்காற்று
3.வியாணன்……. சாப்பிடும் சாப்பாட்டை ஜீரணப்படுத்துதல்.
4.உதாணன்…….. இரத்த சுத்தி
5.ஸமானன்……….உடற்சுத்தி
ஒரே ப்ராணன் தான் தன் செயலுக்யேற்றார் போல் பெயர்,வடிவம் மாறுகிறது.
கொட்டாவி..பசி..தும்மல்..தாகம்..விக்கல்..
இந்தப் ப்ராணன் நான் இல்லை
———————————————
அஹங்காரம்
மனம் ,சித்தம், புத்தி,அந்தக்கரணம் .ஒரே ஒரு மனம் வெவ்வேறு நிலைகளில் மறுதல் அடைகிறது.
1.மனம்- நமது எல்லா எண்ணங்களின் மொத்த உருவமே மனம் எனப்படும்.
2.சித்தம்- எண்ணங்களின் பதிவுகள்,ஆசைகளின் பதிவு அல்லது ஆசைகளின் மொத்த உருவம்.
3.புத்தி- எண்ணங்களின் தெளிவு பெறும் இடம்.சிந்தனை செய்யும் இடம்.
பிரச்சனைகளை எதிர்நோக்கி முடிவு செய்யும் இடம்.
4.அந்தக்கரணம்- எண்ணங்களை செயல் வடிவமாக்கும் இடம்.
1.மனம்- ஆசைகளை உற்பத்தி ஆகும் இடம் மனம்
-கவலை, இன்பம், கோபம்,சிரிப்பு,ஆனந்தம்,துக்கம்,சோம்பல்,விருப்பு,வெருப்பு,தேவை,தூற்றுதல்,
போற்றுதல், பார்த்தல்,ருசித்தல்,உணர்தல், பேசுதல் இதுபோன்ற இன்னும் பல உணர்ச்சிகளுக்கு காரணம் நம் மனம்.
இந்த மனம் நான் இல்லை
நான் யார்?
………………………………………………
2.சித்தம்- மோகம்,ஆசை,பேரசை,ஏக்கம்,தீராஏக்கம்,தீராதஆசைகள் .
எந்த எண்ணங்கள் மனதில் மிக ஆழமாக பதிகிறதோ அதுவே சித்தம் எனப்படும்.
இந்த சித்தமும் நான் அல்ல?
நான் யார்?
……………………………………………………
3.புத்தி
அறிவு,விடைகாணும் இடம், தெளிவு பெறும் இடம்,சமாதாணம் செய்யும் இடம்,அறிவுரை கூறும் இடம்,அறியவகை கண்டுபிடிப்புக்கள் கண்டு பிடிக்கும் இடம்,
இந்த புத்தியும் நான் இல்லை.
அப்படியென்றால் நான் யார்?
…………………………………………………
அந்தக்கரனம்
ஐந்து கர்ம இந்திரியங்களையும் ஐந்து ஞானயிந்திரியங்களையும் செயல் செய்ய வைப்பது இந்தக் அந்தக்கரணம்.
மனமே மனம் புத்தி சித்தம் அஹங்காரமாக தன் செயலுக்கேற்ப மா£றுகிறது.
மனம் ஒன்றுதான் எண்ணங்களுக்கு ஏற்ப தகுந்தார்ப்போல் மாறுகிறது.
இந்தக் அந்தக்கரணம் நான் இல்லை.
நான் யார்?
……………………………………
மனம்
மனத்தற்கு மூன்று குணங்கள் உண்டு
1.தமோகுணம்
2.ரஜோகுணம்
3.ஸத்வகுணம்
எண்ணங்களுக்கு ,குணத்திற்கு ஏற்ப பெயர் வழங்கப்படுகிறது.
1.தமோகுணம்-தன்மேல் தனக்கு நம்பிக்கை இல்லாமை,சோம்பல்,தூக்கம்,
கலக்கம்,புத்திமந்தம்,பிடிவாதம் ,பொய்யைத் உண்மையென்று நினைத்தல்
அறியாமை,கர்வம்,திமிர்,ஒருப்பொரு¬ஐ வேருரொன்றாக கருதுதல்(விசேப,ஆவரணசக்தி)யோசிக்க முடியாத குணம்.இல்லாததை இருப்பது
போல் காண்பித்தல்.
உதாரணம்; கயிரை பாம்பாக பார்த்தல் .
இந்த தமோகுணமே பிறப்பிறப்புக்கு காரணம் ஆதிகாரணம் ஆகிறது
புனரபி ஜனணம் புனரபி மரனம்
இந்த தமோகுணம் நான் இல்லை
அப்படியானால் நான் யார்?
2 ரஜோகுணம்
இல்லாததை தோற்றுவிக்கும் குணம் கொண்டது.
விருப்பு, வெறுப்பு,துன்பம்,ஆசை,கோபம்,லோபம்(பற்று),இடம்பம்(பெருமைபடுதல்)
அஹங்காரம்(தேகத்தை நான் என்று ஆன்மாவாக நினைத்தல்).பொறமை,
வெளிநாட்ட செயலில் ஈடுபடுதல்.
முயற்சி ,பற்று,பேராசை,இந்திரியங்களின் சேட்டை,அமைதியின்மை இவையாவும்
இரஜோகுணத்தால் உண்டாகும். ஸம்ஸாரத்திற்கு இந்த இரஜோகுணம் தான்
மூலகாரணம்.
இந்த இரஜோகுணம் நான் இல்லை.
பிறகு நான் யார்?
………………………………………
3 ஸத்வகுணம்
மனத்தெளிவு,அமைதி சந்தோஸம்,போதும் என்ற மனம்,ஸதா இன்பத்தில் இருத்தல்,
சாந்தி,கருனை,அன்பு,பரிவு,உயர்ந்த எண்ணம்,நல்லவர்களாக இருத்தல்
பரமாத்விடம் பக்தி,மனத்தை நல்வழியில் செலுத்துதல்,கர்வமின்மை,சிரத்தை
முக்தியின்மேல் நட்டம்,தெய்வஸம்பத்து,பொய்யானதில் இருந்து விலகுதல்
இந்த உலகம் ,இந்த உடம்பு பொய்யெனப் தெரிந்துக்கொள்ளுதல்,எது நித்தியம்
எது அநித்தியம் என்று விவேகத்தால் விசாரித்துக்கொள்ளுதல்.

No comments:

Post a Comment