Sunday, February 14, 2016

தர்பை பற்றி ஆகமம் சொல்லும் அற்புதம்:

தர்பை பற்றி ஆகமம் சொல்லும் அற்புதம்:
(1) விஸ்வாமித்ர குஸோஸீர ஸாலீ மௌம்ஜீச தர்பகா:|
தூர்வா : ஸ்ரேஸ்டா முநி ப்ரோக்தா: ஸப்த தர்பா: ப்ரகீர்த்திதா :||
விஸ்வாமித்ரம், குசம், உசீரம், ஸாலீ, மௌம்சீ, தர்பை, அருகு என்று தர்பத்தை 7வகையாக சொல்லி இருக்கிறது .
(2) அக்ரஸ்தூளா பவேந்நாரீ மூலஸ்தூலம் ந பும்ஸகம்|
மூலாக்ர ஸமம் வாபி புமா நித்யபி தீயதே ||
நுனி பெருத்ததை ஸ்த்ரீ தர்பம் என்றும்,
அடி பெருத்ததை நபும்ஸகம்( அலி) தர்பம் என்றும்,
அடியும் நுனியும் ஒரே மாதிரி இருப்பதை புருஷ தர்பம்
என்றும் சொல்லுவதுண்டு .
(3) விவாஹே புருஷ தர்பா : ஸ்த்ரீ தர்பா : பும்ஸுவனே ததா |
நபும்ஸகம் த்வந்ய கர்மஸு ஏஷ தர்பஸ்ய நிர்ணய :||
விவாஹத்திற்கு புருஷ தர்பையையும்,
பும்ஸவனத்திற்கு ஸ்த்ரீ தர்பயையும்,
மற்ற கர்மாக்களுக்கு நபும்ஸக தர்பத்தையும் உபயோகிக்க வேண்டும் .
(4).அர்ச்சனம் ஜப ஹோமம்ச, தானம் ச பித்ரு தர்ப்பணம் |
அபவித்ரானு பாணிம்ச தத் ஸர்வம்ச விநஸ்யதி||
அர்ச்சனை, ஜபம், ஹோமம், பித்ரு தர்ப்பணம் ஆகிய காலங்களில் பவித்ரம் அணிந்து கொண்டுதான் காரியங்களைச் செய்ய வேண்டும். பவித்ரம் அணியாமல் அச்செயல்களை செய்தால் அவை பயனற்றதாகி விடும் என்று பாரமேஸ்வர ஸம்ஹிதை கூறுகின்றது .
(5)பவித்ரம் ஏக தர்பேன ப்ரேத கர்மணி தாரயேத்|
நித்ய கர்மணி தர்பாப்யாம் த்வாப்யாமேவ சதுர்முக ||
பித்ரு கார்யம் த்ரிபிர் தர்பை: சதுர்பிர் தேவ பூஜனே |||
பஞ்சபி: பௌஷ்டிகே தர்பை: ஷட்பிஸ் ஸாந்த்யாம் பவித்ரகம் ||
போஜனே வளயம் குர்யாது ஸப்தபி: ஸர்வ கர்மஸு||
ப்ரேத காரியங்களில் ஒரு தர்பத்தாலும், சுப காரியங்களில் இரண்டு தர்பங்களாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்பங்களாலும், தேவ காரியங்களில் நான்கு தர்பங்களாலும், யாகங்களில் ஐந்து தர்பங்களாலும், சாந்தி கர்மாக்களில் ஆறு தர்பங்களாலும் பவித்ரம் அணிந்து கொள்ள வேண்டும். போஜன காலத்தில் ஏழு தர்பங்களை வளையமாகச் செய்து போட்டுக் கொள்ள வேண்டும் .
(6) த்வியங்குலம் வளயம் ப்ரஹ்மநு க்ரம்தி ரேகாம் குலா மதா|
சதுரங்குலமாயாம : பஞ்சமுஷ்டி ஸ்ம்ருதா குஸா:||
ஐந்து முஷ்டி உள்ள தர்பத்தால் வளையம் இரண்டு அங்குலம் உள்ளதாகவும், உயரம் நான்கு அங்குலம் உள்ளதாகவும் பவித்ரம் பண்ண வேண்டும் .
(7) விஸீர்ணா விகளா ஹ்ரஸ்வா வக்ரா ஸ்தூளா க்ருஸா த்விதா |
க்ருமி தஷ்டாஸ்ச தீர்காஸ்ச வர்ஜயேத் ஸமிதோ புத:||
பிளந்தது, ஒடிந்தது, சிறியது, கோணலானது, பருமனானது, மெலிந்தது, விரிந்தது, புழு அரித்தது, மிக நீளமானது ஆகிய ஸமித்துக்களை உபயோகிக்க கூடாது .
(8) ஏதே வித்த விநாஸிந: ஸ்தூளா ராஜ பயங்கரீ|
த்விதா சோர பயங்கரீ விஸீர்ணா ஸுக மாஹரேத்||
அக்னிதாஹம் பவேத்தீர்கம் க்ருஸா காந்தா ஸுகம் ஹன்யாது ||
இவைகள் பொருளை அழிக்கும்.
1) மிகப் பருமனாயுள்ளது ராஜ தண்டனையை அழிக்கும்; 2) பிளவு பட்டது திருடர் பயத்தையும்;
3) பிளந்தது சுகத்தையும் போக்கும்;
4) மிக நீளம் அக்னி பயத்தையும்;
5) மெல்லியது உடல் நலக் குறைவையும் உண்டாக்கும்.
(9) அஸ்வத்த வட பாலாஸ ப்லக்ஷோ தும்பர ஸம்பவா :|
ஸம்யபாமார்க கதிரா : குசேன ஸமிதோ நவ :||


அரசு, ஆல், புரசு, ப்லக்ஷம், அத்தி, வன்னி, நாயுருவி, கருங்காலி, தர்பை இந்த ஒன்பதும் ஸமித்துக்களாகும்.

No comments:

Post a Comment