Saturday, February 6, 2016

சீதையின் கதை

சீதையின் கதை
விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மனைவியாக சீதையை இராமாயணம் சித்தரிக்கிறது.
எனவே, இவர் லட்சுமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார்.
இதனால் சீதை பூமாதேவியின் புதல்வியாகக் கருதப்படுகிறார்.
சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார்.
இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர்.
எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது.
இதனால் சீதை இராமரின் மனைவியானார்.
இராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் இலட்சுமணனும் சென்றனர்.
அப்போது இலங்கை அரசனான இராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் சிறை வைத்தான்.
பின்னர் இராமர் வானரங்களின் துணையுடன் இராவணனை வென்று சீதையை மீட்டார்.
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள்.
ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான்.
அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள்.
வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு லவன் என்னும் ஒரு குழந்தை பிறந்தது.
சீதை மிக அக்கறையுடன் லவனை பாதுகாத்து வந்தாள்.
ஒரு நாள் சீதை ஆற்றங்கரைக்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு லவனைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றாள்.
அப்போது வால்மீகீ நிஷ்டையிலிருந்தார்.
தாய் மனதல்லவா, சென்றவள் திரும்பி வந்து வால்மீகி நிஷ்டையிலிருப்பதைப் பார்த்துவிட்டு மனம் கேட்காமல் லவனின் பாதுகாப்பு கருதி தானே லவனை தூக்கிச் சென்றாள்,
ஆனால் அதை அறியாத வால்மீகி முனிவர் நிஷ்டை கலைந்ததும் குழந்தை லவனைக் காணாது பதறிப் போனார், சீதை வருவதற்குள் கண்டுபிடிக்க முடியாமல்,
பக்கத்திலிருந்த ஒரு புல்லை எடுத்து ஒரு குழந்தையாக செய்து விட்டு, மீண்டும் நிஷ்டையிலாழ்ந்தார்,
சீதை லவனுடன் திரும்பி வந்து பார்க்கும் போது, அங்கு இன்னொரு குழந்தை இருப்பதைப் பார்த்துவிட்டு குழம்பினாள்.
நிஷ்ட்டை கலைந்து விழித்த வால்மீகி தவறை உணர்ந்தார், ஆனாலும் சீதை “குசன்” என்று பெயரிட்டு அந்தக் குழந்தையையும் தானே வளர்த்தாள், குசன் என்றால் புல் என்று பொருள் வரும்.
இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள்.
பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள்.
பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது

No comments:

Post a Comment