Friday, May 13, 2011


சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு!

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே தமிழ் புத்தாண்டு பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (சித்திரை) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது


கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.



எண் தமிழ் வருடங்கள்



1 பிரபவ

2 விபவ

3 சுக்ல

4 பிரமோதூத

5 பிரசோற்பத்தி

6 ஆங்கீரச

7 ஸ்ரீமுக

8 பவ

9 யுவ

10 தாது

11 ஈஸ்வர

12 வெகுதானிய

13 பிரமாதி

14 விக்கிரம

15 விஷூ

16 சித்திரபானு

17 சுபானு

18 தாரண

19 பார்த்திப

20 விய

21 சர்வசித்து

22 சர்வதாரி

23 விரோதி

24 விக்ருதி

25 கர

26 நந்தன

27 விஜய

28 ஜய

29 மன்மத

30 துன்முகி

31 ஹேவிளம்பி

32 விளம்பி

33 விகாரி

34 சார்வரி

35 பிலவ

36 சுபகிருது

37 சோபகிருது

38 குரோதி

39 விசுவாசுவ

40 பரபாவ

41 பிலவங்க

42 கீலக

43 சௌமிய

44 சாதாரண

45 விரோதிகிருது

46 பரிதாபி

47 பிரமாதீச

48 ஆனந்த

49 ராட்சச

50 ந‌ள

51 பிங்கள

52 காளயுக்தி

53 சித்தார்த்தி

54 ரௌத்திரி

55 துன்மதி

56 துந்துபி

57 ருத்ரோத்காரி

58 ரக்தாட்சி

59 குரோதன

60 அட்சய


மருத்துநீர்

புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

இம் மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு என்பனவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்பெறுவதாகும். பெரும்பாலும் புத்தாண்டு நாளுக்கு முதல்நாள் மருத்துநீர் அருகிலிருக்கும் கோயிலிலே காய்ச்சப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் இலவசமாகவே இதனைப் பெற்றுக் கொள்வர். சிலர் பணம் கொடுத்தும் பெறுவர்.

மருத்துநீர் தலையிலே தேய்த்து நீராடினால்தான் சித்திரைப் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்னும் நம்பிக்கை இந்துக்களிடையே உண்டு. அவ்வாறு நீராடிய பின்னர் புதிய ஆடைகளைக் குடும்பத்தினர் எல்லோரும் அணிவர்.

சித்திரைப் பொங்கல்

தைத்திங்கள் முதல் நாளிலே பொங்கலிடுவது போல சித்திரைத் திங்கள் முதல்நாளிலும் பொங்கல் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்திலே பொங்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வீட்டு முற்றத்தில் பொங்கலிடும் இடம் சாணியினாலே மெழுகப்பட்டுத் தூய்மையாயிருக்கும். மாவிலை, தோரணம் கட்டப்படும். மூன்று கற்கள் வைத்து அதன்மேலே பாலுடன் கலந்த நீர் விட்ட பானை ஏற்றப்படும். பால் பொங்கிவரும் போது வீட்டின் தலைவர் அதனுள் கிழக்குப் பக்கமாகவோ வடக்குப் பக்கமாகவோ பார்த்து அரிசியும் பயறும் சேர்ந்த கலவையைக் கையினால் அள்ளி மூன்று தடவை இடுவர். மிகுதியை வீட்டுத் தலைவி பானையுள் இட்டு, ஏனைய பொருட்களையும் சேர்த்து பொங்கல் தயாரிப்பார். மஞ்சளிலே குட்டிப் பிள்ளையார் அமைப்பர். பழம், வெற்றிலை, பாக்கு முதலியனவற்றுடன் பொங்கல் படையல் இடப்படும். கற்பூர ஆரத்தியின் பின்னர் ஒரு சிறிய வாழை இலைத் துண்டிலே பொங்கலில் ஒரு பகுதியை இட்டு, காகத்தைக் கூவி அழைத்து, அது உண்ணுவதற்கேற்றபடி உயரமான ஓர் இடத்திலே வைக்கப்படும். அதன் பின்னர் குடும்பத்தினர் பொங்கல் உண்பர். பொங்கலுடன் பலகார வகைகளையும் பரிமாறும் வழக்கமும் இருந்தது.

இன்று, தைத்திங்களிலே வீட்டு முற்றத்திலே பொங்குவது போல சித்திரைத் திங்களிலே பொங்கும் வழக்கம் அருகியே விட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டினுள் அடுப்பிலே பொங்குவர். பலர் பொங்கும் வழக்கத்தினையே கைவிட்டுவிட்டனர்.

கைவிசேடம்

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்கும் வழக்கமுண்டு. இதற்கான உகந்த நேரம் பஞ்சாங்கத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்தைக் கடைப்பிடித்து, வீட்டிலே தந்தையே பெரும்பாலும் கைவிசேடம் வழங்குவார். வெற்றிலையில் பணத்தை வைத்துக் கொடுக்க வாங்குபவர்கள் அவருடைய காலிலே விழுந்து வணங்கி ஆசிபெற்ற பின்னர் கைவிசேடத்தை வாங்கிக் கொள்வர். சிலரிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் அவர்களைத் தேடிச் சென்று சித்திரைப் புத்தாண்டிலே கைவிசேடம் பெற்றுக் கொள்வர். அவ்வாறு கைவிசேடமாகப் பெற்ற பணத்தினை அடுத்த சித்திரைப் புத்தாண்டு வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

விளையாட்டுக்கள்

போர்த் தேங்காய் அடித்தல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக அமைந்தது. போர்த் தேங்காய் அடித்தல் தமிழரிடையே நடைபெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது கோயில் திருவிழாக்களிலும் விசேட கொண்டாட்ட நாட்களிலும் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புத்தாண்டு நாளிலே இவ்விளையாட்டுப் பல காலமாக நடைபெற்று வந்தது.

 ‘கோழிச்சண்டை’ இன்னொரு பரம்பரை விளையாட்டுப் போட்டி சித்திரைப் புத்தாண்டின் போது நடைபெற்று வந்தது. இம்மரபுவழிபட்ட நிகழ்வினையும் டானியல் தன்னுடைய நாவலிலே விரிவாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்க்கப்படும் பக்குவம் பற்றி டானியல் தன்னுடைய அடிமைகள் நாவலில் மிக நுணுக்கமாகக் கூறுகின்றார். இன்று ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் முக்கிய விடயமாகத் திகழும் ‘கோழிச்சண்டை’ நம்முடைய தேசத்திலே சிறப்பாக நடைபெற்றதென்பதற்கு டானியலுடைய நாவல் சான்றாக உள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்களில் ஒன்று ‘தாச்சி’ எனப்படும் ‘கிளித்தட்டு’ ஆகும். இதனை விட எல்லை, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவார்கள். பெண்கள் கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான், நாயும் புலியும் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்திலேயே புதிய பஞ்சாங்கம் வெளி வரும். இலங்கையிலே ‘இரகுநாதையர்’ குழுவினர் கணித்து வெளியிடும் வாக்கிய பஞ்சாங்கமும் ‘திருக்கணித’ குழுவினர் கணித்து வெயியிடும் திருக்கணித பஞ்சாங்கமும் வெளிவருகின்றன. சீனர்கள் தங்களுடைய காலக் கணிப்பில் 60 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்குப் பெயர்களும் இட்டுள்ளனர். கீழைத் தேயக் காலக் கணிப்பில் இது பொதுவான விடயமாக அமைகின்றது. இந்துக் காலக் கணிப்பிலும் 60 ஆண்டுக் கணக்கு இடம்பெறுகின்றது. பிரபவ ஆண்டு தொடக்கம் அஷய ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. “இப்பஞ்சாங்கத்திற்கு ஆதாரமாகவுள்ள கணித சித்தாந்தம் மக்களை உய்விக்கும் பொருட்டு மஹாமகத்துவம் பொருந்தியவர்களும் யோக சித்தியால் திரிகால ஞானமுணர்ந்த தத்துவஞானிகளும் ஆகிய முனிசிரேஷ்டர்களால் ஒரு கற்பகாலம் வரையுமுள்ள கிரககால வரையறைகளை எக்காலமும் எளிதிற் கணிக்குமாறு யுக்தியனுபவங்களுக்கியைய நன்கருளிச் செய்யப்பட்டுள்ளது” என்று வாக்கிய பஞ்சாகக்காரர் குறிப்பிடுவதை நோக்குக. இரண்டு பஞ்சாங்கங்கள் பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்; அதனாலே சில வேளைகளில் உபத்திரவமும் ஏற்படுகிறது.





தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?



தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!




சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.



காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.



நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).



ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.



ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.



பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.



எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?



ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.



சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]



விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]



அனுசம் = ஆனி



பூராடம் - பூராடி = ஆடி



சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]



பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]



அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]



கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]



மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி



பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]



மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]



உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].



ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.



இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?



முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.


யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


-
திருமந்திரம் (திருமூலர்)





உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.



அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.


இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம்.


Thursday, May 12, 2011

தத்தாத்ரேயரின் -24 குருமார்கள்

தத்தாத்ரேயரின் -24 குருமார்கள்

மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!
சென்னை கந்தாஸ்ரமத்தில், தத்தாத்ரேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் இவரது ஜெயந்தி விழா சிறப் பாக நடத்தப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தத்தாத்ரேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.

மகான்களும் அன்னப்பறவையும்

மகான்களும் அன்னப்பறவையும்

மனிதன், தெய்வத்தை வழிபட வேண்டும். அந்த தெய்வத்தை, நமக்கு அறிமுகம் செய்பவர் ஆசார்யன்; அதாவது, குரு.
மகான்களின் குணம் என்னவென்றால், எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவது தான். தர்மம் தழைக்க வேண்டும்; அதர்மம் அழிய வேண்டும். நல்லவன் வாழ வேண்டும்; தீயவன் திருந்த வேண்டும் என்று நினைப்பர். தீயவன் திருந்தினால், அவனும் நல்லவனாகி விடலாம். சாதாரண மனிதனுக்கும், மகான்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
மகான்களின் பெருமைகளைப் பற்றி சொல்லும் போது, இவர்களை ஹம்சபட்சி அன்னப்பறவை) களுடன் ஒப்பிட்டனர். இவர்களை பரமஹம்சர்கள் என்றனர். சன்னியாசிகளை அன்னப்பறவையின் தன்மை கொண்டவர்கள் என்று கூறினர்.
அன்னத்தின் உடல் வெண்மை; இவர்களும் வெள்ளை மனம் படைத்தவர்கள். அன்னம், இமயத்தின் உச்சியில் உலவும்; இவர்களும் உயர்ந்தோர் உள்ளத்தில் உலாவுவர். அன்னம் மோகத்தை வெறுக்கும்; இவர்களும் சிற்றின்பத்தை வெறுப்பர். இரண்டு சிறகுகளுடன் வானத்தில் அன்னம் பறக்கும்; தரையிலும் நடை பயிலும். அது போல் இவர்களும், ஞானம், கர்மம் என்ற இரண்டு சிறப்புகளால் இறைவனுடனும், நம்முடனும் உறவு கொண்டாடுவர். அன்னத்தின் உடலில் நீர் ஒட்டாது; இவர்களிடம் உலக மாயப்பாசி ஒட்டாது. அன்னம் தாமரை இலையை புசிக்கும்; இவர்களும் சாத்வீக உணவையே ஒரு வேளை உண்பர். அன்னம், “க்வ… க்வ…’ என்று கத்தும். “க்வ’ என்றால், “எங்கே?’ என்று பொருள். மகான்களும், நல்ல சீடர்களை “எங்கே, எங்கே?’ என்று தேடுவர். அன்னம் வீட்டில் தங்காது; இவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் தங்க மாட்டார்கள். அன்னப்பறவைகளின் அலகும், கால்களும் சிவந்திருக்கும். உபதேசம் செய்து, செய்து இவர்களின் திருவாயும், அடியார்களின் இருப்பிடம் தேடிச் சென்று, சென்று இவர்களின் திருப்பாதங்களும் சிவந்திருக்கும். அன்னம், நீரையும், பாலையும் பிரித்து, பாலையே பருகும். இவர்களும் சாஸ்திரங்களின் சாரமான விஷயங்களையே கிரகித்துக் கொள்வர். இப்படி ஒரு உயர்ந்த உவமான, உவமேயம் சொல்லப்பட்டுள்ளது.
மக்கள் ஷேமமாக இருக்க வேண்டும், உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஆசை. அதற்காகவே தவம், தியானம் எல்லாம் செய்கின்றனர். இப்படிப்பட்ட மகான்களை நாம் தேடிப் போய் ஆத்ம ஞானம் பெற வேண்டும்.
ஒரு மகான், எங்கே இருந்தாலும், அவரைத் தேடிச் சென்று, அவரது அருள் பெற வேண்டும்; அவரிடம் உபதேசம் பெற வேண்டும். மனித ஜென்மா கடைந்தேற இதுவே சிறந்த மார்க்கம். தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை மகான்கள். தேடி வந்தவர்களை புறக்கணிப்பதுமில்லை; அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்கள் உய்யும் மார்க்கத்தைச் சொல்லி அருள் செய்வர்.
“உனக்கு ஷேமம் ஏற்படும்…’ என்று மகான்கள் சொல்லி விட்டால், அது அப்படியே நடக்கும். இவர்களது வாக்கை பகவான் காப்பாற்றுகிறார்; பொய்யாகாது. நம்பிக்கையோடு சென்று நலம் பெற வேண்டும்!

Wednesday, May 11, 2011

ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?

ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?

வடகிழக்கு பருவ காற்று தென்மேற்கு பருவகாற்று இவைகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஜன்னல் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொ்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் காற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைப்பதுதான் நல்லது இதனால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பபர்கள். இதனால்தான் நமது முன்னோர்கள் பூஜை அறையையும் முதியோர் தங்கும் அறையையும் ஈசானிய மூலையில் கட்டினார்கள்

ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?
நாமது வீடுகளில் ஈசானிய மூலையை காற்று வராதபடி அடைத்து வைக்கக் கூடாது. தாராளமாக காற்று வரும்படி அந்த பக்கத்தில் சன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அடிக்கடி நோய் ஏற்படும். ஆண் சந்ததி ஏற்கடாது

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ஏன்?
வடக்கு, வடகிழக்கு திசைகளில் அலமாரிகள் வைக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் செல்வமும் ஆரோக்கியம் சந்தோசமும் நிறைந்து இருக்கும் அதனால் அங்கு ஜன்னல்கள் வைக்கலாம். தென்மேற்கு திசையில் அலமாரிகள் வைக்கலாம்
வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?

நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் சமமாகும்

நாம் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதுண்டு அப்போது பல நவரத்தினக் கற்களையும் பஞ்சலோக பொருட்களையும் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து இருப்போம் இப்படி அதற்கு தெய்வீகத் தன்மையை உண்டு பண்ணிவிட்டு இப்போது, அதன் மீது அமர்தால் அது லட்சுமியை அவமதிப்பதாகத்தானே கருதமுடியும்

கோவில்பிரகாரமும் பரம்பொருளும்

கோவில்பிரகாரமும் பரம்பொருளும்

பல கோவில்களுக்கு நாம் செல்வதுண்டு. அதுவும் பழமை வாய்ந்த பாடல் பெற்ற கோவில்கள் என்றால், தனி மகிழ்ச்சிதான்! கோவிலுக்கு உள்ளே செல்லும் போது கூடவே மனத்தில் "ஏன் இறைவனை உடனே பார்க்க முடிவதில்லை? ஐந்து பிரகாரங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கிறது?" என்ற கேள்வியும் ஓடும்.

காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள். ஐந்து பிரகாரமும் நம் ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், காது, மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் குறிக்கிறது. இந்த ஐந்தறிவுப் பொறிகள் மூலம் ஐந்தறிவு அனுபவம் என்ற நிலையைத் தாண்டி ஆறாவது அறிவின் வழியால் உணர்வதே கடவுள். ஆனால் தினமும் இந்த ஐம்புலன்கள் தரும் இன்பத்திலேயே மனிதன் உழன்று கொண்டிருக்கிறான்.

பல புராணங்கள், காப்பியங்கள், மற்றும் காவியங்கள் மூலம் மனிதனை இந்த ஐம்புலன்கள் படுத்தும் பாட்டை உணரலாம். யயாதி, விசுவாமித்திரர், இராவணன் ஆகியோரின் கதைகள் - இன்னும் எத்தனையோ? உடலால் மனிதன் மெய்யின்பத்தைத் துய்க்கிறான். அது மனிதனை அடிமை ஆக்குகிறது. ஆசை என்னும் நெய்யை ஊற்ற, ஊற்றக் கொழுந்து விட்டு எரியும் தீ போன்றது. மனிதனின் ஆசை என்றுமே அடங்குவதில்லை.

அடுத்து பசிக்கு உண்பதைக் காட்டிலும் ருசிக்கு உண்டு அவதிப்படுகிறான். அடுத்து வருவது கண். கண் போன போக்கிலே காலும் மனமும் போவதால், மனிதன் மீண்டும் ஆசை வலையில் சிக்கி விடுகிறான். நாசியின் மூலம் மனிதன் வாசனை வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். செவியின் மூலம் கேட்கப்படும் பலவித ஓசையினால் ஈர்க்கப்பட்டு, பாதை மாறிச் சென்று அல்லல் படுகிறான். தினம் தினம் மனிதன் இந்தப் போராட்டத்தில் உழல்வதால், அவன் சக்தி செலவாவதோடு மனமும் துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த நிலையிலிருந்து மீள வழி இல்லையா?

வழி இருக்கிறது. அதுதான் கோவிலுக்குக்குச் செல்லுதல். அதனால்தான் "கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று நம் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதன் மூலம் மனிதன் ஆதம் பலம் பெறுகிறான். இந்த ஆத்ம பலம் கொண்டு இந்த ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் மனிதன் இறைவனைக் காணலாம். ஒவ்வொரு பொறி தரும் இன்ப நுகர்ச்சி பற்றிய எண்ணங்களை ஒவ்வொரு பிரகாரத்திலும் விட்டுச் சென்றால், நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு நாளும் மனிதன் பஞ்சப் பிரகாரங்களைக் கடந்து, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைவனைத் தரிசிக்கச் செல்லும் போது அவன் வாழ்க்கை பயனுள்ளதாகிறது. இதனைத் தொடர்ந்து கடை பிடிப்பதன் மூலம் மனிதன் பரம்பொருளைப் பற்றிய பேரின்பத்தை அடைய முடியும் என்ற கருத்தைத் திருமூலர், "பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு; மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன; மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால் பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே" என்ற பாடல் மூலம் அழகாகக் கூறுகிறார்.

வாருங்கள்! கோவிலுக்குச் செல்வோம். நம் ஐந்து பசுக்களையும் நெறிப்படுத்துவோம். பாலாய்ச் சொரியும் பரம்பொருளின் இறையருளில் மாந்தித் திளைப்போம்!

சீக்கியம்

சீக்கியம்


மிக அண்மையில் தோன்றிய சமயம் சீக்கியம். இந்திய வட மாநிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் எழுந்த சமயம். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இரண்டு கோடி மக்கள்வரை இச்சமயம் சார்ந்தவர் உளர். பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தில் வாழ்பவர்.

சீக்கிய சமயம் இந்து, இஸ்லாம், புத்தசமயக் கருத்துகளை உள்ளடக்கியது. முகாலயர் ஆட்சி இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டின பின்னர் ஆரம்பித்தது. கபீர் என்ற முஸ்லீம் (1440-1518) குருநானக் என்ற இந்து (1469-1538) சமயத்தவர் சீக்கிய சமயத்தை ஆரம்பித்தனர். பஞ்சாப் மொழியில் 'சீக்' என்றால் ஒழுக்கம்.

இந்து சமயமும் இஸ்லாமும் பல கொள்கைகளில் வேறுபட்டவை. ஆயினும் இரண்டு சமயத்திலுமுள்ள சிறப்பு அம்சங்களை தேர்ந்து சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறுவர்.

இந்து சமயம் பல கடவுள்களை வணங்குவது. இஸ்லாம் ஒரே கடவுள் கொள்கை கொண்டது. சீக்கியமும் ஒரே கடவுள் கோட்பாட்டை ஏற்றது.

இந்து சமயத்திலுள்ள கர்மம், மறுபிறவிக் கொள்கையை சீக்கியம் ஏற்றது. இஸ்லாம் ஒரு பிறப்பினை கூறும். இந்து சமயத்திலுள்ள நான்கு வர்ணப்பிரிவு, சாதி அமைப்பை சீக்கியம் ஏற்பதில்லை. இஸ்லாம் சமயமும் ஏற்காது.

சமண, புத்த சமய ஆதிக்கத்தின் பின்னர் இந்து சமயம் உயிர்க் கொலை, மாமிச உணவை தவிர்த்தது. இஸ்லாம் சமயப் படி சீக்கிய சமயத்தவர் தாவர உணவுடன் மாமிச உணவையும் ஏற்றனர். சமயங்கள் யாவும் எதிர்க்கும் மதுபானம், புகைத்தலை சீக்கியம் தவிர்த்துக் கொள்ளும்.

இந்து சமயத்திலுள்ள சமய சடங்கு முறைகளையும் சீக்கிய சமயம் தவிர்க்கும். இஸ்லாமிய குரான் போல சீக்கிய சமய பரிசுத்த நூல் குருநானக்கும் மற்றும் குருமாரும் எழுதிய கிரந்தம் ஆகும். 3384 பாடல்களைக் கொண்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்நூல் பாதுகாக்கப்படுகிறது.

சீக்கிய சமயத்தவர் நீள் முடியும், தாடியும், இடுப்பில் வாளையும் கொண்டிருப்பர்.

'நான்'எனும் ஆணவத்தை விட்டு பக்திப் பாடல், தொழுகை, சேவை மூலம் ஆத்மா புனிதம் பெறும் என்னும் நம்பிக்கை கொண்டது சீக்கிய சமயம். அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஒரு தடவையாவது யாத்திரை செல்ல வேண்டும் எனவும் சீக்கியம் வேண்டும்.

குருநானக் சாந்தம், அமைதியை வேண்டியவர். ஆயினும் ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் இன்றும் சிறந்த போர் வீரர்களாக சீக்கிய சமயத்தவர் கருதப்படுகின்றனர்.

குருநானக் பிறந்த நாள் அரசு விடுமுறையுடன் வழிபாட்டு நாளாகக் கொண்டாடப்படும்.

பழைமை வாய்ந்த சமயம்- இந்து சமயம்

இந்து சமயம்


இந்திய உபகண்டத்தின் மிகப் பழைமை வாய்ந்த சமயம் இந்து சமயமாகும். பரந்த கண்ணோட்டமும் பண்பாடும் கொண்டது. கி.மு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது இந்து சமயம் எனக் கூறலாம். மற்றைய சமயங்களைப் போல இந்து சமயத்தை ஆரம்பித்தவர், ஆதியில் போதித்தவர் என எவரையும் குறிப்பிட்டுக் கூற முடியாது.

இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் மற்றும் உலநாடுகள் வரை இந்துக்கள் இன்று பரந்து வாழ்கின்றனர். ஏறக்குறைய 100 கோடி மக்கள் இந்துசமயத்தைச் சார்ந்துள்ளனர்.

பக்திநெறியும் கட்டுப்பாடுகளும் சித்தாந்தமும் கொண்ட சமயம் இந்து சமயம். ஆத்மா அழிவற்றது; அரிதான மானிடப் பிறவியில் தெய்வ வழிபாட்டுடன் அறவாழ்வு வாழ்ந்து மறுபிறவித் தொடரிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலே இந்து சமயத்தவரின் குறிக்கோளாகும். இந்த உயர்ந்த நிலையை மோட்சம் என்பர்.

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுவர். ஆயினும் முழுமுதற் கடவுளாக சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் கொள்வர். பிரம்மாவைப் படைப்புத் தெய்வமாகவும் விஷ்ணுவை காக்கும் கடவுளாகும், சிவனை அழிக்கும் தெய்வமாகவும் இந்து சமயம் கூறும். சிவனை, சிவலிங்க வடிவத்திலும் வழிபடுபவர் சைவசமயத்தினர். நடன உருவத்தில் நடராசப் பெருமானாகவும் சிவபெருமான் சிதம்பரத்தில் காட்சி தருவார். சைவ சமயத்தவர் நெற்றியில் விபூதியை, சிறப்பாக மூன்று குறிகளுடன் அணிவர்.

விஷ்ணுவை வழிபடுவர் வைஷ்ணவர். விஷ்ணுவை இராமர் அவதாரமாக இராமாயணத்திலும், கிருஷ்ணர் அவதாரமாக மகாபாரதத்திலும் பார்க்கலாம். வைஷ்ணவர்கள் நாமம் போட்டுக் கொள்வர். பிரம்மாவுக்கென தனிச் சமயம் இல்லை.

மேலும் காளி, துர்க்கை, பார்வதி அம்மன், சரஸ்வதி, இலட்சுமி போன்ற பெண் தெய்வங்களையும் முருகன், விநாயகர், வைரவர் முதலான தெய்வங்களையும் சைவர்கள் வழிபடுவர். அண்ணன்மார், வீரபத்திரர் போன்ற வீரபுருஷரான சிறுதெய்வ வழிபாடுகளும் உள.

இந்துசமயம் இவ்வாறு பல்வேறு தெய்வங்களின் விக்கிரக வழிபாட்டையும் ஏற்கும். கோவில்களிலும் வீடுகளிலும் விக்கிரகம், படங்களை வைத்து இந்துக்கள் வழிபடுவர்.

தீபாவளி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியன இந்து சமயத்தவரின் சிறப்பான வழிபாட்டு விழா நாட்களாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், ஐப்பசி மாதத்து வெள்ளிக் கிழமைகள், கார்த்திகை திங்கள், கந்த சஷ்டி போன்ற காலங்களில் விரதமிருந்தும் (நோன்பு) வழிபடுவர்.

இந்து நதிக்கரையில் நிலவிய இயற்கை வழிபாடும் மத்திய ஆசியாவிலிருந்து கி.மு. 1500 வரை இந்தியாவிற்கு வந்த ஆரியரின் வேத, உபநிடமும் இணைந்து இந்து சமயம் உருப்பெற்றது என்றும் கூறுவர்.

இராமாயணம், மகாபாரம் உப்ட்ட இதிகாசங்களும் பல்வேறு புராணங்களம் இந்துசமயத்தின் ஆதாரமாக உள்ளன. பகவத் கீதை இந்துக்களின் புனித நூலாகக் கொள்ளப்படுகிறது. பாரதயுத்த களத்தில் எதிரியாக உறவினர்களைக் கண்டு கலங்கிய அர்ச்சுனனுக்கு கீதோபசாரமாக பகவான் கிருஷ்ணர் கூறும் அறிவுரைகளைக் கொண்டது பகவத்கீதை. 'ஆத்மா அழிவற்றது, கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே' எனப் போதிக்கும் நூல்.

இந்து சமயம் பிற சமயக் கொள்கைகளையும் அணைக்கக் கூடிய சமயம்; சமயக் கொள்கையை, கிறிஸ்தவம், இஸ்லாம் போலப் பரப்பவோ முயல்வதில்லை. கி.மு. 6ம் நூற்றாண்டு வரையில் சமணசமயம், புத்த சமயங்களுக்கும் இந்து சமயம் வழிவிட்டது.

காலப்போக்கில் புத்தசமயம் தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்து சமயம் புத்த, சமண சமயங்களின் சிறப்பம்சங்களை ஏற்றுக் கொண்டதனாலும் இச்சமயங்கள் வலுவிழந்து வந்தன. தமிழ்நாட்டில் கி.பி. 6இ7ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி காலகட்டத்தில் சைவ சமயம் வலுப்பெற்றது. நாயன்மார்கள் தோன்றி தேவார திருவாசகங்கள் பாடியதோடு சைவசமயத்தை விரிவுபடுத்தினர். வடஇந்தியவில் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில் இந்து சமய எழுச்சி ஏற்பட்டது என்பர்.

முகலாய சாம்ராச்சிய காலத்தில் இஸ்லாமும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவமும் அரசுகளின் செல்வாக்குகளுடன் இந்தியாவில் பரப்பப்பட்டன; ஆயினும் இன்று 100 கோடி மக்களது சமயமாக, உலகின் மூன்றாவது மிகப் பெரிய சமயமாக இந்து சமயம் நிலைபெற்றுள்ளது. ராம்மோகன்ராய், இராமகிஷ்ணர், மகாத்மாகாந்தி போன்ற சமயப் பேரறிஞர்கள் தொடர்ந்து இந்து சமயத்தைப் பேணிவந்தனர்.

பல தெய்வங்கள், வளம்மிக்க புராண, இதிகாச இலக்கியங்கள், விரிவான இந்து சமயத் சித்தாந்தம் ஆகியன இந்து சமயத்தைப் பாதுகாத்து வருவன என்பவர்.

வாஸ்து புருஷன்-புராணக் கதை.

வாஸ்து புருஷன்-புராணக் கதை.
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் என்று நாம் பஞ்சாங்கத்தில் பார்த்திருக்கிறோம். இந்த வாஸ்து புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கு உண்டாகலாம். இதற்கு ஒரு புராணக் கதை.

அண்டகாசுரன் தன் தவத்தினாலும் அதனால் பெற்ற வரத்தினாலும் தன்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினான். தேவர்களும் சிவனிடம் சென்று முறையிட்டு, தங்களைக் காக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமானும் அண்டகாசுரனுடன் கடும் போரிட்டார்.

அப்போது அவர் முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் கீழே பூமியில் விழ, அந்தத் துளியிலிருந்து ஒரு பூதம் போல் பெரிய மனித உருவம் தோன்றியது. தோன்றியபோதே 'பசி பசி' என்று அலைந்தது. அப்போது சிவபெருமான், அண்டகாசுரனைக் கொன்று, அவனைக் கீழே போட்டார். பின் அந்த உடலைத் தின்று பசியாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அதைத் தின்றபின்னும் அந்த உருவம் 'பசி' என்று அலைந்து, தேவலோகத்தில் புகுந்து தொந்தரவு செய்தது. அதனின் தொந்தரவு தாங்காமல் அதனைக் கீழே தள்ளி, குப்புறப் படுக்க வைத்து, அதன் மேல் 45 தேவதைகள் அமர்ந்தனர்; துன்புறுத்தினர்; அந்த உருவமும் பிரும்மாவை வேண்டித் தன்னைக் காக்கும்படி சொன்னது.

பிரும்மாவும் அதன் முன் தோன்றிக் காத்தருளினார். பின் அந்த உருவத்திற்கும் ஒரு பதவி அளித்தார். அதாவது புதுக் கட்டடம், கட்டுபவர் உனக்குப் பூஜை செய்து படையல் படைத்த பின்தான் வீடு கட்டத் தொடங்க வேண்டும் என்றார்.

"அப்படி செய்யவில்லை என்றால் நான் அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பேன்" என்றது அந்த மனித உருவம். பிரும்மாவும் அதற்குச் சம்மதித்து அதன் பெயரை வாஸ்து புருஷன் என்று வைத்தார்.

வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு நாட்கள் தான் விழித்திருப்பார்; மற்ற நாட்களில் தூங்குவதாகச் சொல்லப்படுகிறது. அந்த எட்டு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம்தான் விழித்திருப்பார். அதில் முதலில் விழித்தவுடன் காலைக் கடன் செய்வார்; பின் குளித்து வருவார்; பின் பூஜை செய்வார்; அதற்குப் பிறகு போஜனம்; போஜனத்திற்குப் பின் தாம்பூலம் போடுவார். இப்போது அவர் தாம்பூலம் போடும் நேரத்தில் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்ய, வீடு மளமளவென்று ஏறி, ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடிவடையும்.

வாஸ்து புருஷனைக் கீழே தள்ளி அவன் மேல் 45 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்பது. இது சதுரமாக இருக்கும். பிரும்மா வாஸ்துவைக் காப்பாற்றியதால் வீட்டின் நடுப் பாகம் பிரும்மாவுக்காகக் கொடுக்கப்பட்டு, அதற்கு பிரும்மஸ்தானம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்:

சித்திரை 10ஆம் தேதி
வைகாசி 21ஆம் தேதி
ஆடி 11ஆம் தேதி
ஆவணி 6ஆம் தேதி
ஐப்பசி 11ஆம் தேதி
கார்த்திகை 8ஆம் தேதி
தை 12ஆம் தேதி
மாசி 22ஆம் தேதி

வாஸ்து தினமும் தூங்கும் போது அசைந்து அசைந்து, ஒரு இடம் இல்லாமல் மாறுகிறார். இதனால் சில மாதங்களில் அவர் படுக்கும் திசை மாறிவிடுகிறது.

இரவில் 12இலிருந்து 3 வரை கிழக்கை நோக்கி இருக்கிறார்

காலை 3இலிருந்து 6 வரை தெற்கை நோக்கி இருக்கிறார்

காலை 6 முதல் 9 வரை மேற்கில் இருக்கிறார்

காலை 9 முதல் 12 வரை வடக்கில் இருக்கிறார்

வாஸ்து பூஜை சரியாகச் செய்தபின் கட்டடம் கட்ட ஆரம்பிக்க, எல்லாம் நலம் தான்.
‘வாஸ்து புருஷன்’ என்பவர் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட திசையில் சிரசு வைத்திருப்பார், கால் வைத்திருப்பார் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியை மையமாக வைத்தே வாஸ்து புருஷன் கணிக்கப்படுகிறது.

சூரியன் உதிக்கும் திசை, மறையும் திசை, உத்ராயணம், தட்ஷிணாயனம் ஆகியவையும் வாஸ்து புருஷன் குறித்த கணிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கும் பாவனை இயக்கம் என்ற கணிப்பு மேற்கொள்ளப்படும். ஜாதகம் எழுதும் போது கூட சிலர் இராசி, நவாம்சம் ஆகியவற்றுடன் பாவனை இயக்கத்தையும் கணித்துக் கூறுவர்.

வாஸ்துவில் ‘வாஸ்து புருஷன்’ என்பது கூற பாவனை இயக்கத்தைப் போன்றதே. இயற்கையை ஒன்றி வாஸ்து புருஷன் கணிக்கப்பட்டுள்ளதால், அதை வைத்து வீடு கட்டும் போது சில செயல்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும் போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டை கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது.

வாஸ்து புருசன்
வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள்.

 வாஸ்து புருசன் பணிகள்

வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள்
  1. பல் துலக்குகிறார்.
  2. நீராடுகிறார்
  3. பூஜை செய்கிறார்
  4. உணவு உண்கிறார்
  5. தாம்பூலம் தரிக்கிறார்.
இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும்

 வாஸ்து நேரம்

வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது.
வ,எண்மாதம்நாள்நேரம்
1சித்திரை10காலை மணி 8.54 முதல் 9.30 வரை
2வைகாசி21காலை மணி 10.06 முதல் 10.42 வரை
3ஆடி11காலை மணி 7.42 முதல் 8.18 வரை
4ஆவணி6பகல் மணி 3.18 முதல் 3.54 வரை
5ஐப்பசி11காலை மணி 7.42 முதல் 8.18 வரை
6கார்த்திகை8காலை மணி 10.54 முதல் 11.30 வரை
7தை12காலை மணி 10.06 முதல் 10.42 வரை
8மாசி22காலை மணி 10.06 முதல் 10.42 வரை

வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்கள் எதுஎது?

வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார். எனவே அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது


வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.

வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்



கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.

 திக்குகளின் அதிபதிகள்

முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு இந்திரனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, நிருதி ஆகியோர் அதிபதிகள்.

 வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்


இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான் .

 

தைப்பூச ம்

தைப்பூசமும், சிறப்புகளும்!


ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) வருவது தைப்பூசம். இந்த நாளில் எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

முருகனுக்கு வேல் வழங்கிய நாள்

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்..
கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.
கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக்கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

பழனியில் தைப்பூசம்

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்..
தைப்பூசத்தின் சிறப்புகள்:
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.
சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.
வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

`அருட்பெருஞ் ஜோதி - தனிப் பெருங்கருணை‘ எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை :

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும்.

நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.



தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
  • சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
  • சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  • தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
  • வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

 தைப்பூச விரத முறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

ஈழத்தில் தைப்பூசம்

தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

Sunday, May 8, 2011

சௌளம்

சௌளம்


இது குடுமி வைப்பது. ஆண் குழந்தைகளுக்கு மட்டுமேன்னு சொல்ல வேண்டியது இல்லை.
பிறந்த வருஷத்திலேயோ அல்லது மூன்றாவது வருஷமோ செய்யலாம்.

லௌகிக அக்னியில் ஹோமங்கள்.
அக்னிக்கு மேற்கே கிழக்கு பார்த்து குமாரனை உட்கார வைத்து, மந்திரம் சொல்லி தலையை வென்னீர் கலந்த நீரால் நனைத்து,

மூன்று மூன்று தர்பங்களை இடையில் வைத்து, நான்கு மந்திரங்களால், ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையிலும் முடியை வெட்ட  வேண்டும். வலது புறம் தாயாரோ அல்லது ஒரு பிரம்ம சாரியோ நின்றூ கொண்டு வெட்டியதை வாங்கிக்கொள்ள வேண்டும். அடுத்து காளையின் சாணியில் அவற்றையும் நெல்லையும் சேர்த்து அத்தி மரத்தின் அடியிலோ அல்லது நாணல் (பாத்து இருக்கீங்களாப்பா? ;-)) புதரின் அடியிலோ வைக்கணும். இதனால் முன்னேயே வாங்கிக்கொள்ளும் போதே ஒரு மடக்கில் நெல்லும் சாணமும் சேர்த்து அதிலேயே வாங்கிக்கொள்வதுண்டு.

குடுமி வைத்துக்கொள்வது இப்போது மிகவே அரிதாகி வருகிறது. நம் ஆத்ம சக்தியை விரயமாகாமல் இது கட்டிப்போடுகிறது. யாருக்கு கேசம் பிரிந்து இருக்கிறதோ அவர்களை தீய சக்திகள் எளிதில் அண்டுகின்றன. ஆண்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். பெண்களும் இப்போதெல்லாம் தலையை விரித்துப்போட்டுக்கொள்வது "நாகரீகம்" ஆகிவிட்டது. கேசத்தின் நுனி வெளியே தெரிவதாக இருந்தால் அது மேல் நோக்கி இருக்க வேண்டும். மடித்து உள்ளே போட்டுவிட்டால் (கொண்டை போல) பிரச்சினை இல்லை. இன்னும் கிராமத்து பெண்கள் தலை வாரி நுனியை மேல் நோக்கி மடித்து கட்டுவதை பார்த்து இருக்கிறேன். வெளியே தெரியாமல் இருக்கத்தான் ரிப்பன் வந்தது. இப்போது வழக்கொழிந்து போய்விட்டது. பிரச்சினைகளும் அதிகமாகி விட்டதல்லவா?

குடுமி வைத்தபின் அதை நீக்கிக்கொள்வது ஆத்ம ஹத்தியாக கருதப்படுகிறது (தற்கொலை). பாரத போரின் முடிவில் அச்வத்தாமாவை என்ன செய்வது, குரு புத்திரனாயிற்றே என்றூ யோசித்து அவன் சிகையை மட்டும் வெட்டிவிட்டதாக மஹாபாரதத்தில் வருகிறது அல்லவா?

நாம கரணம்

நாம கரணம்:

குழந்தைக்கு பெயரிடுதல். எளிய கர்மா. இரட்டைபடை எழுத்துக்கள் இருக்கணும் என்கிறாங்க பெரியவங்க. (க்,ச் மாதிரி புள்ளி எழுத்து கணக்கில்லே) பெண் குழந்தைகளுக்கு ஆ அல்லது ஈ யில் முடிவதாக வைப்பாங்க.

வைக்கிற பேரு கேட்க இனிமையா இருக்கணும். மாடர்ன்னா வைக்கிறேன்னு பலரும் அர்த்தமே இல்லாத சொற்களை பேராக்கறங்க. நல்ல அர்த்தம் இருக்கணும். தாத்தா பாட்டி பேர்களும் இறைவன் பேர்களும் எப்பவுமே நல்லது. எந்த நக்ஷத்திரத்துக்கு எந்த எழுத்திலே பேர் ஆரம்பிக்கணும்ன்னு கூட நியதிகள் இருக்கு. பஞ்சாங்கத்திலே போட்டு இருக்கும்.

கடவுள் பேரை வைக்கிறதாலே ஒரு லாபம். அடிக்கடி கடவுளை
கூப்பிட்டுகிட்டே இருக்கலாம். அஜாமிளன் கதை தெரியுமில்லையா?

வழக்கமா 11 ஆம் நாள்,16 ஆம் நாள்,21 ஆம் நாள்,31 ஆம் நாள், பெயரிடறாங்க. பிரசவம் முடிந்து சுத்தி செய்து அப்புறம்  குழந்தை காதிலே "உன் பெயர் ........” அப்படின்னு சொல்லுவார். மத்த பெரியங்களும் அதேபோல சொல்லி ஆசீர்வாதம் செய்வாங்க

ஜாத கர்மா:

ஜாத கர்மா:

முன் காலத்திலே குழந்தை பிறப்பதாக அறியப்படும் நாளுக்கு ஒரு மாசம் முன்னாலேயே எங்கே குழந்தை பிறப்பு இருக்கலாம்ன்னு தீர்மானம் செய்து முடிவு பண்ணுவாங்க. அனேகமா அது நிர்ருதி திசைல இருக்கும் (தென் மேற்கு).பிரவசத்துக்கு சில நாட்கள் முன்னே பெரியவங்களை, தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு பாட்டு மணிசத்தத்தோட நுழைவாங்க. என்ன லேகியங்கள், மருந்துகள், உணவு சாப்பிடிடலாங்கிறதுல நிறைய கட்டு பாடுகள். அறை புதுசா பிறக்கிற குழந்தைக்கு இதமா கொஞ்சம் இருட்டாவே இருக்கும்.

குழந்தை பிறக்க கஷ்டமானாலோ இல்லை வலி சரியா எடுக்கலைனாலோ சில வேத மந்திரங்கள் ஓதப்படும்.

குழந்தை பிறந்த சேதி கேட்ட உடன் தகப்பன் அப்படியே ஓடிப்போய் ஒரு குளத்திலேயோ நதியிலேயோ குதிக்கனும். (இல்லைங்க, தற்கொலை முயற்சி இல்லே!) அப்ப தண்ணி பனை மர உயரத்துக்கு எழும்பனும். (ஒபெலிஸ்க் குதிச்சாதான் இது சாத்தியம் என்கிறார் நண்பர்) இதனால பித்ருக்கள் சந்தோஷமாகிறாங்க.

சூதிக அக்னின்னு ஒரு அக்னி பிரசவ ரூமிலே மூட்டி கடுகு, நெல் தானியங்கள் ஹோமம் செய்வாங்க. இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; நிறைய பலன் தரக்கூடியது.

மந்திரம் சொல்லி தேனை குழந்தை வாயிலே ஒரு தங்க காசால் ஒரு சொட்டு விடுவாங்க. இதனால் குழந்தை புத்திசாலியா இருக்கும். குழந்தை காதிலே நீண்ட ஆயுசை வேண்டி தகப்பனால் சில மந்திரங்கள் ஓதப்படும்.
இதுக்கு பிறகுதான் தொப்புள் கொடியை துணிப்பாங்க.

இப்ப இதெல்லாம் சரியா செய்கிறது குறைஞ்சு போச்சு. இந்த கர்மாவை பெண்ணுக்கு கல்யாணம் போதும் பையனுக்கு உபநயனம் போதும் செய்கிறாங்க. என்ன பிரயோசனம்? கர்மாக்களை அததற்கு உரிய காலத்திலே செய்தால்தான் பலன் கிட்டும்.

பும்ஸவனம்

பும்ஸவனம்

இது கர்ப்பம் தெரிந்த உடனே செய்யப்படவேண்டியது. ஒரு ஆண் குழந்தையை பெறுவதற்கான கர்மா. புஷ்ய நக்ஷத்திரத்துல செய்ய வேண்டியது. (அதாங்க பூசம்). எப்படியானாலும் ஆண் நக்ஷத்திரத்துல செய்யணுமாம்.
ஒவ்வொரு கர்ப்பத்துக்கு முன்னேயும் செய்யணுமா என்கிறதுல ரிஷிகளுக்கு கொஞ்சம் அபிப்பிராய பேதம் இருக்கு. அவரவர் குடும்ப பழக்கமும் க்ருஹ்ய சூத்திரமும்தான் இதை முடிவு செய்யணும்.

ஔபாசன அக்னில ஹோமம் உண்டு .

முக்கிய காரியமா இந்த கர்மாவில மரத்தின் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ உள்ள இரு காய்களுடன் கூடிய ஆலங்கொழுந்தை எடுத்துவந்து மந்திரத்தோட மூக்கில வலது பக்கம் பிழிகிறாங்க. அது தொண்டைக்கு வரும்போது அவள் அதை விழுங்கணும். ஆண் குழந்தையோ அல்லது நல்ல பிரஜையோ பிறக்க வேண்டிக்கிறாங்க.
ஏன் ஆல மொக்கு? சுஷ்ருதர் கர்ப்பிணிகளுக்கு இது பல பிரச்சினைகளை சரி பண்ணும் என்கிறாராம்.

கூடவே வலது கையிலே ஒரு மந்திரிச்ச கயிறும் கட்டுவாங்க.

மந்திரங்களோட பொதுவான அர்த்தம்:

ஈசான தேவதை நம் வேண்டுதல்களை நிறைவேற்றட்டும். தாதா உலகை குழந்தைகளாலும் மற்ற செல்வங்களாலும் வாழ்த்தட்டும். அவர் இந்த வீட்டையும் குழந்தைகள் தந்து வாழ்த்தட்டும்.யமனை வென்றவர்கள் இந்த வீட்டில் வசிக்கட்டும். அக்னி எனக்கு குழந்தைகள் கொடுத்து அருளட்டும். இந்திரன் அதே போல் அருளட்டும். அழகான குழந்தைகள் எனக்கு பிறக்கட்டும்.

கர்ப்பாதானம்

கர்ப்பாதானம்

அடுத்து ஒருவர் வாழ்நாளில் வரும் கர்மாக்களை பாக்கலாம்.
இவற்றுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். சம்ஸ்காரம் என்றால் "பண்படுத்துதல்" என்பதுதான் பொருள். மனிதனின் வாழ்க்கையை இவை பண்படுத்துவதால அப்படி பெயர் கொடுத்து இருக்காங்க.
மனித வாழ்க்கைக்கான சம்ஸ்காரம் பிறக்கிற முன்னேயே ஆரம்பிக்குது.
அதனால முதல்ல...
--
கர்ப்பாதானம்

இது குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பட்ட கர்மா. இதுக்கெல்லாம் ஒரு கர்மாவான்னு கேட்டா, ஆமாம். நல்ல குழந்தை பெற்றுக்கொள்வது முக்கியமானதாலே அதுக்குன்னு பல சட்ட திட்டங்கள் உண்டு. கர்ப்பம் உண்டாகக்கூடிய காலம் ருதுக்காலம் ன்னு பேர். இந்த காலத்தில கர்ப்பம் தரிக்க நல்ல நாள் குறிப்பாங்க.

இதுக்கெல்லாம் நல்ல நாளா?

ஆமாம். பராசரர் நல்ல குழந்தை உண்டாவதற்கான நாளை கண்டு கொண்டதால தன் மனைவியுடன் கூட அவசரமா போகும் போது மழையால தடை வந்தது. நேரம் தப்பி விடுமோன்னு மச்சகந்தியை பரிமளகந்தியாக்கி, அவளோட கூட, வியாசர் பிறந்தார். அதனால நேரம் முக்கியம்தான்.

இதுல சொல்கிற மந்திரங்கள் நல்ல ஆண் குழந்தை பிறப்பை வேண்டிதான் இருக்கு. ஏன் ஆண் குழந்தைனா தனக்கு பின் ஆண் சந்ததி இருப்பதால பித்ரு காரியங்கள் தடங்காம நடக்கும் என்பதாலதான்.

பொதுவா இந்த நேரத்தில சொல்கிற மந்திரங்களோட அர்த்தம் இப்படி இருக்கு. "அரணியில் கட்டையை கடைவதால் ஏற்படக்கூடிய அக்னி போல, நீண்ட ஆயுளும் பலமும் கூடிய ஆண் குழந்தைகள் பிறக்கட்டும். நான் கடவுளின் ஒரு பகுதி. என் பித்ருக்களின் கட்டுகளை நீக்குவதற்காக நல்ல மகன்களை பெறுவேன். தேஜஸும் செல்வமும் கொண்ட புத்திரர்கள் உண்டாகட்டும். அவர்கள் தகுந்தவர்களுக்கு தேவையான தான தருமங்களை செய்து நீண்ட காலம் வாழட்டும். மோட்சத்தை அடையட்டும். இறைவன் உன்னை கர்ப்பம் தரிக்க தகுதி உள்ளவளாக செய்யட்டும். கெட்ட சக்திகள் உன்னை விட்டு அகலட்டும். உன் குழந்தைகள் ஊனம் ஏதும் இல்லாது இருக்கட்டும். நீ தெய்வீக காமதேனு போல இருப்பாயாக.

சாப்பிட்ட பின்

சாப்பிட்ட பின்

கொஞ்சம் தண்ணீர் குடிச்சு நகர்ந்து போய் 18 முறை வாய் கொப்பளிக்கணும். (ரொம்ப நாள் முன்னே பல் வைத்தியர்கிட்டே போக வேண்டி இருந்தது. என் விஸ்டம் பல் தொந்திரவு செய்யுதுன்னு அதை பிடுங்கிட்டார். அப்புறம் நாலு நாள் பல் தேய்க்காதே. அதுக்கு பதிலா 18 தரம் கொப்பளிச்சுடுன்னார்!) தண்ணியை இடது பக்கமா துப்பணும்.

சர்யாதி என்கிற அரசனையும் சுகன்யா என்கிற அவரோட பெண்ணையும் ச்யவனர் என்கிற ரிஷியையும் (அதே ச்யவன ப்ராஷ் ரிஷிதான்!) இந்திரன், அச்வினி குமாரர்களையும் நினைத்துக்கொண்டு கண்களை நனைக்கணும். ஈரமான கட்டை விரல்களால கண்களை தேய்க்கனுமாம். அப்ப கண் நோய்கள் வராதாம். கௌதமர் சொல்கிறார்.

நல்ல வெத்திலை, நல்ல சுண்ணாம்பு, நல்ல பாக்கு இதெல்லாம் சேத்து தாம்பூலம் எடுத்துக்கலாம். இது ஜீரணத்துக்கு உதவும். வெள்ளிக்கிழமை கட்டாயம் செய்யணும் என்கிறார்கள் சிலர். லக்ஷ்மி காடாக்ஷம் கிடைக்குமாம்.

எப்போதுமே வெத்திலை பாக்கு சாப்பிட்டால் ஆயுஸ், புத்தி, பலம், ப்ரக்ஞை, வீரியம், இதெல்லாம் நசிக்கப்படும். நாக்குக்கு ருசியே தெரியாம போகும்.

200 அடிகள் நடக்கணுமாம். பிறகு உட்கார்ந்து வேலை செய்யலாம். வேதம்/ இதிகாஸ புராணம், சாஸ்திரம் இதெல்லாம் படிக்கலாம்.

அப்புறமா குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் கவனிக்கணும் - லௌகிக சமாசாரங்கள்.

சாப்பிடக்கூடியவை கூடாதவை:

சாப்பிடக்கூடியவை கூடாதவை:


வெங்காயம், சிவப்பு முருங்கை, உள்ளிப்பூண்டு, பலாண்டு, நாய்க்குடை, தாமரை தண்டு, சுரைக்காய் இவை ஜாதியால் உண்ண தகுந்தவை இல்லை. அதாவது allium cepa family முழுக்க உண்ண தகுந்தது இல்லை. இப்படி.

கெட்ட எண்ணங்களோட ஒருவர் உணவை பார்த்தாலே அது காரியத்தால கெடுகிறதாம்.
நெய், எண்ணை முதலியனவால செய்த பலகாரங்கள் ரொம்ப நாள் வைத்திருந்தா கெட்டு போகும். பழைய சோறும் அப்படிதான். தயிர், தேன், பக்ஷணங்கள் இதெல்லாம் காலத்தால கெட்டு போகா.

கள்ளு, வெங்காயம் இதெல்லாம் சேர்த்தவை; சீமப்பால் கலந்தது (அதாவது கன்று போட்டு 10 நாளுக்குள்ள கறக்கிற பால்) இதெல்லாம் சேர்க்கையால் கெட்டவை.
எப்பவாவது இதை சாப்பிடலாமா கூடாதான்னு சந்தேகம் வந்தா அது ஸஹ்ருல்லேகம் என்கிறாங்க. இந்த "சந்தேக பிரியாணி" எல்லாம் சாப்பிடக்கூடாது.

பராசரர் இந்த பட்டியல்ல வெளுப்பு கத்தரி, மரத்தின் பிசின், (இதுல பெருங்காயம் வந்துடும்) கோவில் சொத்து, ஒட்டக/ ஆட்டு பால் இதெல்லாம் சேத்து, தெரியாத்தனமா இதெல்லாம் சாப்பிட்டாக்கூட பிராயசித்தம் செய்யணும் என்கிறார்.

தேவலர் மரப்பிசின்ல பெருங்காயத்துக்கு எக்ஸெப்ஷன் தரார்.

யவை/ கோதுமையால செஞ்சதுக்கு காலம் கடந்தது என்கிற குற்றம் இல்லையாம். ( அப்ப சப்பாத்தி ரொட்டி எல்லாம் பரவாயில்லை.)

தயிர் தவிர புளிச்சது எதுவும் சாப்பிடக்கூடாது. (யப்பாடா எவ்ளோ தரம் இதை தட்டறது? பரவாயில்லைன்னு சா.கூ வே எழுதறேன்.!) ஆபத் தர்மமா வேற சோறு கிடைக்காத போது புளிச்சதை தண்ணீரால அலம்பி சாப்பிடலாம்.
புளிப்பு இஞ்சி, தயிர், கஞ்சி, எள்ளு, சாதம்(!), நெல்லிக்காய் இதெல்லாம் ராத்திரியில் சா.கூ.

சில விஷயங்கள் ஒண்ணா சேந்தா கெட்டு போகும். வெண்கல பாத்திரம் + இளநீர்/ கருப்பஞ்சாறு; தாமிர பாத்திரம்+ தயிர்,பால்; உப்பு + பால்/நெய் இதெல்லாம் கெட்டு போகிற சேர்க்கைகள். (பல கோவில்களிலேயும் தெரியாத்தனமா காப்பர் சொம்பில பால் எடுத்து அபிஷேகம் நடக்குது)

என்னயா இது? கூடாது கூடாதுன்னு எல்லாம் சொன்னா எப்படி? கூடும்ன்னு சொல்லுங்கிறீங்க. சரி சரி.

அகத்தி, துளசி, நெல்லி, சுண்டைக்காய் அவை யாரோட வயத்தில இருக்கோ அவனுக்கு ஹரி பக்கத்தில இருக்காராம். யார் சாப்பாடு, பக்ஷணம், லேஹ்யம் எல்லாத்தையும் நமோ நாரயணான்னு சொல்லி தொட்டு சாப்பிடரானோ அவன் நல்ல லோகத்த அடைகிறானாம்.
நாராயண!

இந்த பட்டியல்ல பலதும் நமக்கு பிடிச்சவையா இருக்கலாம். அதனால அதுக்கெல்லாம் "அதுக்கு மருத்துவ குணம் இருக்கு" என்பது போல வக்காலத்து வாங்க வேண்டாம். சாப்பிடலாமா வேண்டாமான்னு அவரவர் முடிவு செஞ்சுக்கலாம்.- இந்த பதிவுகள்ல வர மத்த விஷயங்கள் போலவே!

சாப்பாட்டுநியமங்கள் 3

சாப்பாட்டுநியமங்கள் 3

நின்று கொண்டு, நடந்து கொண்டு, தலையில் துணி கட்டிக்கொண்டு, தெற்கு முகமாக உட்கார்ந்து சாப்பிட்டால் அவன் உணவை ராக்ஷசர்கள் சாப்பிடுகிறர்கள்.

சாப்பிடும்போது கால்களை தொடக்கூடாது. கட்டிலிலோ கையில் வைத்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. பாதுகை போட்டுக்கொண்டு சா.கூ. வண்டிகளில் இருந்து கொண்டு சா.கூ.
காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு - இதெல்லாம் பற்களால கடிச்சு சா.கூ. (துண்டாக்கி பரிமாறினால் பிரச்சினையே இல்லை.)

தவறி வெளியே விழுந்ததும் சாப்பிட தக்கதல்ல.

அசுத்தனாக எதையுமே சா.கூ. படுத்துக்கொண்டு; கால்களை நீட்டுக்கொண்டு; மனசை (ஏதேனும் படிக்கிறது போல) வேறு எங்கேயோ வைத்துக்கொண்டு; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

சந்தியா காலம், பிரதோஷ காலம், இருட்டில் விளக்கு இல்லாமல், இரவு பத்து மணிக்கு மேல்; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

அன்னத்தில் கேசம், எறும்பு, அசுத்தத்தில் வாழும் புழு இப்படி ஏதேனும் இருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட அன்னத்தை எடுத்துவிட வேண்டும். மீதியை பிறகு நீரால் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். கையில் எடுத்ததில் அசுத்தம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். ஒரு வேளை அவை வாய்க்குள் போய் விட்டால் துப்பி விட்டு, தண்ணீரால் கொப்பளித்துவிட்டு, நெய் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக பசிக்கு தகுந்தபடி உணவு.

சன்னியாசி 8 கவளங்கள். வான பிரஸ்தன் (இப்ப ரிடயர்ட் ஆசாமி ) 16. க்ருஹஸ்தன் 32.
ப்ரஹ்மசாரி, அக்னிஹோத்திரம் செய்பவர், காளை மாடு இவர்களுக்கு இப்படி சட்ட திட்டமில்லை. ரெண்டு வேளை மட்டும் என்கிற சட்டம் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏன்னா அப்படி தேவையான அளவு சாப்பிட்டாதான் அவங்க அவங்க வேலையை திறமையோட செய்ய முடியுமாம்.

ஏன் இப்படி சாப்பாட்டை பத்தி இவ்வளவு எழுதுகிறேன் என்று தோணலாம்.
பல கர்மாக்களை செய்யாமல் இருக்கிறோம். சாப்பிடுவதை மட்டும் எப்படியும் செய்தே தீர வேண்டும் இல்லையா? அதனால செய்கிற இந்த கர்மாவை சரியாக செய்யலாமே என்னுதான். புத்தகங்களை படித்து அத்தனையும் எழுதினால் பதிவுகள் மிக நீளமாக போகும்.

உபநயனம்

உபநயனம்
வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்கிர சம்ஸ்காரம் இது।

உபநயனம் ன்னா கிட்டே கொண்டு போகிறது ன்னு பொருள்। எந்த கர்மாவால வேத வித்தைக்காக மாணவன் குருகிட்டே அழைத்துக்கொள்ள படுவானோ அதுக்கு உபநயனம் ன்னு பெயர். அந்தண க்ஷத்திரிய வைச்யர்களுக்கு தாயால முதல் பிறப்பும் உபநயனத்தால இரண்டாவது பிறப்பும் ஏற்படுகின்றன. இதனால இவர்களுக்கு த்விஜர் (இரு பிறப்பாளர்) என்று பெயர்.

இந்த கர்மா ஆண் பிள்ளைகளுக்குத்தான். பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க.

உண்மையில இதை செய்து வைக்க வேண்டியவர் வேதம் சொல்லித்தரப்போற குரு.

இப்ப இது பெரும்பாலும் வெத்து சடங்கா போயிட்டதால பையனோட அப்பாவே செய்கிறார். செய்து வைக்க அப்பா இல்லைனா அப்பப்பா; அவர் இல்லைனா செய்து வைக்க தகுதி உள்ளவங்க இந்த வரிசைல : அண்ணா, தாயாதி, அதே கோத்திரத்தை சேர்ந்தவங்க இப்படின்னு பட்டியலே இருக்கு. சன்யாசிகள் செய்து வைக்கக்கூடாது. மனைவி இல்லாதவர் செய்து வைக்கிறதும் அதமம்.

கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவர் செய்து வைக்கிறதும் உபநயனத்தால கொஞ்சம் கூட ஞானத்தை நாடாததும் இருட்டிலிருந்து இருட்டுக்கு போகிறது போலவாம். ஏழு வயதில் அந்தண சிறுவனுக்கும் அவன் நல்ல புத்தி கூர்மை இருந்தா ஐந்து வயசிலேயும் உபநயனம் செய்விக்கலாம். சக்தியை அனுசரித்து பதினாறு வயது வரை தள்ளிப்போடலாம்.

மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கத்துக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தராங்க. வாழ்கைக்கு தேவையான ஞானத்தை தரவர் ஆச்சாரியர்தான். அதனால அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கறதோ அபசாரம் செய்கிறதோ கூடாது.

உபநயன காலத்தில் குருவானவர் மாணவனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச்சொல்லி ஆசீர்வதிக்கிறார். “ இந்த கல்லைப்போல வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சமும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப்போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்வாயாக. அறியாமையில் இருந்து விழித்து எழு. உறங்காதே.!"

உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக சொல்கிறங்க. அதனாலேயே இதுக்கு பிரம்மோபதேசம் ன்னு பேர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் சொல்றார்: இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது

காயத்ரி ஜபத்தால் மனது ஒருமை படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது. ஞான ஒளியை தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன.

காமம் உள்புகுந்தபின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதை செய்து கொள்ள சொல்கிறார்கள். எண்ணை பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதை காமம் அதிகம் பாதிக்காது.

பத்து வயதில் க்ஷத்திரியனும் 11 இல் வைச்யனும் உபநயனம் செய்ய காலம். மற்ற மதத்தவர் கூட இதே வயதில் இது போன்ற கர்மா செய்கின்றனர். பார்சிகள் குழந்தையின் 6 வயது 3 மாதங்களில் நவ்ஜோத் என்று செய்கிறார்கள்.
மனிதனுக்கு இதற்கு முன்னால் செய்யப்பட்ட கர்மாக்கள் அனைத்துமே இதற்கு தகுதியை உண்டாக்கத்தான்.

உடல் சுத்திக்காக முதலில் வபனம் (முடி திருத்தம்); நீண்ட ஆயுளுக்காவும், தன் பிள்ளைபோல மாணவனை காப்பாற்றவும் அக்னியை வேண்டுகிறார்கள். முன் சொன்னபடி கருங்கல் மீது ஏறி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வாதம் செய்த பின் ஆடை, மேகலை, மான்தோல், தண்டம் முதலியன பல தேவதைகளின் அருளை வேண்டிக்கொண்டு மாணவனுக்கு தரப்படும்.

வாமன அவதாரத்தின் போது அவருக்கு நடந்த உபநயனம் விரிவாக பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தம் 18 வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. சூரியன் அவருக்கு நேரில் காயத்திரியை உபதேசம் செய்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவையும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இவை பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தை தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையும் அளித்ததாக சொல்லி இருக்கிறது.

இந்த தேவதைகளின் அருளினால் வாமனர் பிரகாசித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹோமங்கள் செய்வதில் பயனாகும் மந்திரங்கள் மாணவனின் நீண்ட ஆயுள், செல்வம், ஐச்வர்யம், மேதாவிலாசம், புகழ் இவற்றை வேண்டி அக்னியை பிரார்த்திப்பதாக உள்ளது. பின் ஸமித்துக்களை மாணவன் ஹோமம் செய்கிறான். இந்த ஸமிதாதானம் ப்ரம்மசாரியால் தினமும் செய்யப்பட வேண்டியது.

முப்புரி நூலை எப்போதும் தரித்து இருக்க வேண்டும். அந்தணர் அல்லாத பலர் இதை சில விசேஷங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டு (திருமணம், அந்திம காரியம்) மற்ற நேரங்களில் அணிவது இல்லாமல் போய் விட்டது. பூணூல் மூன்று இழைகள் கொண்டதாக செய்து அதை கட்டைவிரல் அல்லாத மற்ற 4 விரல்களில் 96 முறை சுற்றி துணித்து; இந்த நூலை நனைத்து மீண்டும் மூன்றாக முறுக்கி (இப்போது 9 இழை ஆகிவிட்டது) மூன்றாக சுற்றி முடி போட வேண்டும். இது பிரம்ம கிரந்தி. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளனர். பூணூலின் நீளம் தொப்புள் வரை இருக்க வேண்டும்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு கார்யங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின் பற்றுவதில்லை.
முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மான் தோல்: இதை முழுதாக தோளில் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எங்கே! மான்களும் அரிதாகி விட்டன. பயன்படுத்தினால் சட்டமும் பாயும்! போட்டுக்கொள்ளலாமே தவிர அதில் படுக்கவோ, உட்காரவோ கூடாது. ஆயுர்வேதத்தில் இதற்கு க்ஷய ரோகத்தை நீக்கும் குணம் சொல்லப்படுகிறது.

தண்டம்: தன் நெற்றி உயரம் அளவுள்ள பலாச (முறுக்கன், புரசு- பூவரசு அல்ல) தண்டத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவர்கள் காயத்ரீயின் பொருளை விசாரம் செய்த போது இந்த மரம் அதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததாம். அதனால் காயத்ரீயின் 3 பாதங்களையும் அறிந்து கொண்டு மும்மூன்று இலைகள் உள்ள காம்புகளாக தளிர் விட்டதாம். இதன் தண்டத்தை கைக்கொண்டவன் பொய் வார்த்தைகளை கேட்க மாட்டான்; ஞாபக சக்தி பெருகும் என சொல்லப்படுகிறது.

பின் ஆசாரியன் அனுமதி பெற்று பிட்சை எடுக்க வேண்டும். முதல் பிட்சை அன்னையிடமும் பின் பிட்சை மறுக்காத தன் பெரிய தாயார் அக்கா இவர்களிடமும் பெறலாம். இது தவிர அப்பா முதலானவர்களிடமும் வாங்கலாம். மூன்றோ தேவையானால் அதிகமான பேர்களிடம் பிட்சை பெறலாம். முடிந்த பிறகு ஆசாரியனிடம் அதை கொண்டு காட்டி அவர் அனுமதித்தபின் சாப்பிடலாம்.

உபநயன தினத்திலிருந்து 3 நாட்கள் உப்பு, உரப்பு இவற்றை விலக்க வேண்டும். 3 நாட்கள் அரிசியாகவும் பின் அன்னமாகவும் பிசை பெற வேண்டும். சந்தியா உபாசனையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

சுருக்கமாக கர்மா வழிமுறை பின்வருமாறு:

பூர்வ அங்கமாக உதகசாந்தி என்கிற வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்தல்; மந்திர ஜபம்; அங்குரார்ப்பணம்; ப்ரதிசரபந்தம்; அப்ப்யுதயம்; புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா.

விக்னேஸ்வரபூஜை;  புண்யாஹம்: முப்புரி நூல் தரித்தல்; (இதுவல்ல முக்கிய கர்மா); உப்பு காரம் இல்லாத நெய்யும் பாலும் சேர்த்த அன்னத்தால் குமார போஜனம் - பையனுடன் சில பிரம்மசாரிகளுக்கு உணவிடல்; சௌளத்தில் சொன்னபடி மீண்டும் திக் வபனம் (முடி திருத்தம்); குளியல்; கோமணம் கட்டுதல். பக்கதில் பையனை இருத்திக்கொண்டு ஆசாரியன் லௌகீக அக்னியை இட்டு ஹோமம். முன் சொல்லிய பலாச தண்டம் முதலானதை அளித்தல்; முன் சொன்னது போல அம்மியில் நிற்கவைத்து ஆசீர்வாதம்; ஆசார்யனுக்கும் மாணவனுக்கும் இடையில் ஒரு உரையாடல்; பின் மாணவன் கையை பிடித்துக்கொண்டு ஆசார்யன் ஹோமம் செய்வித்தல்; மீதி ஹோமத்தை ஆசார்யன் முடித்தல்;

ப்ரம்ஹோபதேசம் - இதுதான் இந்த கர்மாவில் முக்கிய பாகம்.
கூடியிருக்கும் பெரியோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நவக்ரஹங்களுக்கு திருப்தி செய்து ஆசார்யனின் பாதங்களை கழுவி பூசித்து "ஸாவித்ரீயை உபதேசம் செய்யுங்கள்" என வேண்டுதல். அவரும் உபதேசிப்பார். பட்டால் தங்களை மூடிக்கொண்டு அது நடக்கும். முடிந்து பலாச தண்டம் எடுத்துக்கொள்ளுதல்; மாணவனே குருவுக்கு தக்ஷிணை தருதல்; குரு மேற்கொண்டு பல மந்திர உபதேசங்கள், சூரிய வழி பாடு துவக்கம். பிறகு ப்ரம்மசர்யம் எப்படி  அனுஷ்டிக்க வேண்டும் என சில கட்டளைகள் இடுகிறார்.

நீ ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிப்பவனாக இருக்கிறாய்
அப்படியே செய்கிறேன்.
என்னால் அனுமதிக்கப்பட்டவனாக நீர் அருந்து
அப்படியே செய்கிறேன்.
கர்மாவை செய் (சமித்துக்கள் சேகரித்து கொண்டு வருவது, சமிதாதானம் செய்தல் போன்றவை)
அப்படியே செய்கிறேன்.
பகலில் தூங்காதே
அப்படியே இருக்கிறேன்.
தினந்தோறும் உணவுக்காக பிக்ஷை எடு
அப்படியே செய்கிறேன்.
எனக்கு கட்டு பட்டவனாக, என் உத்திரவு இல்லாமல் பிறருக்கு ஹோமம் செய்வித்தல், வேதம் சொல்லிக்கொடுத்தல் ஆகியவற்றை செய்யாதிரு.
இதற்குப்பின் பிக்ஷை எடுத்தல்.
நான்கு நாட்கள் அதே துணியை உடுத்தி இருக்க வேண்டும். 4 வது நாள் ஆசாரியன் வேறு துணியை கொடுத்து அதை வாங்கிக்கொள்வார்.

நான்காம் நாள் பலாச கர்மா ....
நான்காம் நாள் பலாச கர்மா

மாணவன் மூன்று நாட்கள் அரிசியே பிசை எடுக்க வேன்டும். 4 ஆம் நாள் முதல் அன்ன பிட்சை. இதுவரை ஆபஸ்தம்பர் கூறியபடி கர்மாவுடைய வரிசையை பாத்தோம். இனி சொல்கிறது மற்றவர் எழுதியபடி.

கர்மா எது, எப்போ, எப்படி செய்யணும்னு கொஞ்சம்தான் வேதத்திலோ சாஸ்திரத்திலோ இருக்கும். முழு விவரங்கள் பாக்க கிருஹ்ய ஸூத்திரங்களைதான் பாக்கணும். அவரவர் ஸூத்திரப்படி கர்மாக்களை செய்யணும்.
அப்படி பார்க்கும்போது பலாச கர்மா சிலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது.

4 ஆம் நாள் ஆசார்யனுடன் கிழக்கு அல்லது வடக்கு திசை சென்று ஒரு புரச மரத்தின் அடியில் 3 மண் திட்டுகள் செய்ய வேண்டும். முறையே பிரணவம், ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகிய தேவதைகளை ஆவாஹனம் செய்து மந்திரங்களால் போற்றி முன் எடுத்துக்கிட்ட பலாச தண்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வேறு தண்டம் எடுத்துக் கொண்டு ஆசாரியனுடன் திரும்பணும்.

உபதேசம் செய்யப்போறவர் விசேஷமாக அதிக ஜபம் செய்து உபதேசம் செய்தால் நல்ல பலன் இருக்கும். அதுக்கு தனியா சங்கல்பமே இருக்கு.
இல்லாட்டா இருட்டுலேந்து இருட்டுக்கு போகிற மாதிரி ஆகிடும். அதனால் உபதேசம் செய்ய நல்ல குலத்திலே பிறந்து நல்ல அனுஷ்டானம் உள்ளவரை பார்த்து தேர்ந்து எடுக்கணும்.
சுமங்கலி பிரார்த்தனை முன் கூட்டியே தவறாமல் செய்யணும். சமாராதனையும் அவரவர் குல வழக்கப்படி செய்யணும். (சாதாரணமா அந்தணர்களுக்கு உணவளிக்கிறதுதான் சமாராதனை.)

அங்குரார்ப்பணம் என்பது புண்யாஹம் செய்து 5 பாலிகை கிண்ணங்களில் நெல், உளுந்து, எள்ளு, பச்சை பயறு, கடுகு ஆகியவற்றை மந்திர பூர்வமாக இட்டு பூஜை செய்தல். ஓஷதி ஸூக்தமும் சொல்லுவர். 5-7 சுமங்கலிகளும் ஜலம் தெளிப்பர். பின் தினசரி காலையும் மாலையும் ஜலம் தெளித்து பூஜை செய்து 5 ஆம் நாள் தேவதைகளை அனுப்பி வைத்து, நதியிலோ குளத்திலோ கரைத்துவிடுவர்.
பிரதிசர பந்தம் என்பது ரக்ஷை கட்டிக்கொள்ளல்.

உணவு உண்ணல்-2

வாய் கொள்கிற அளவு எடுத்துக்கணும். அதை அப்படியே வாயில் இடணும். வாய்ல போட்டது திருப்பி இலைக்கு வரக்கூடாது. அதிகமாக எடுத்து வாயில போட்டு மீந்ததும், கடித்து மீந்ததும் இலைக்கு வரக்கூடாது.
சத்தம் போட்டு உறிஞ்சி கடித்து சாப்பிடக்கூடாது. இது போல சிலதை எடிகெட்ஸ் னு இப்ப கடைபிடிக்கிறாங்க.
தண்ணீரை தூக்கியே குடிக்கணும். குடித்து மீந்ததும், எச்சில் பட்டதும் திருப்பி குடிக்க உகந்தது இல்லை.

பலரும் பந்தியில சாப்பிடும் போது நடுல யாரும் எழுந்து போகக்கூடாது. அப்படி எழுந்தால் பந்தி முழுதும் எச்சிலாகும். ஒரு வேளை அவசியம் எழுந்துக்க வேண்டினால் பந்தியை பிரித்துவிட்டு எழுந்துக்கணும்.
சாப்பிடும் போது ஒத்தரை ஒத்தர் தொடக்கூடாது. இடது கையால் தானே பறிமாறிக்கொள்ளக்கூடாது. அப்படி செய்தா அந்த பாத்திரமும் எச்சிலாகும்.

சாதாரணமா இடது கையால எதுவும் குடிக்கக்கூடாது. சாப்பிடும் போது விதி விலக்கு. வலது கையால இலையை தொட்டுக்கொண்டு இடது கையால தண்ணீர் குடிக்கலாம்.

உப்பு, ஊறுகாய், காய்கறி, நெய், எண்ணை, பாயஸம் (நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப போட்டது, போடாதது எல்லாமே-) அன்னம் இதெல்லாம் கரண்டி இல்லாம பறிமாறக்கூடாது.

எண்ணையில் பக்குவம் செய்தவற்றை கையால போடலாம். பழம், பட்சணங்களை சிறுவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் போட்டு விட்டே, தான் போட்டுக்கொள்ளலாம்.

பாயஸம், நெய், தேன், தயிர், பழம் எல்லாம் மிச்சமில்லாமல் சாப்பிடலாம். மற்றதில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வைக்கணும்

உணவு உண்ணல்



உணவு உண்ணல்
உண்பது பிராண அக்னி ஹோத்திரம்ன்னு சொல்கிறாங்க.

கை கால்கள் வாய் இவற்றை சுத்தம் செய்துகிட்டுதான் சாப்பிட உக்காரணும்.சாதாரணமாக இரண்டு வேளை சாப்பாடு சாஸ்திர சம்மதம்.
சந்தோஷமா சாப்பிடணும். கோபத்தோடயோ சண்டை போட்டுக்கிட்டோ சாப்பிட உக்காரக்கூடாது.

மற்றவர்களுக்கு உணவிட்ட பின்னே ஆசமனம் செய்து / நீர் அருந்தி விட்டு ஏகாந்தமாக அமரணும்; குறிப்பா அதிகமா சாப்பிடுகிறவர்கள். கால்கள் பூமியில் படுகிற மாதிரி உக்கரணும். மேல் துணி இருக்கணும்.
உட்காருகிற ஆசனம் மண்ணாலோ, பலாசத்தாலோ, இரும்பாலோ செய்ததா இருக்ககூடாது. பிளவு பட்டு இருக்கக்கூடாது.
தட்டு போடுகிற இடத்தை சுத்தம் செய்யணும்.

தட்டு தங்கம் (ஆஹா! அப்படி கொடுத்து வெச்சவங்க யாரும் உண்டா?!) வெள்ளி, வெண்கலம் (கிருஹஸ்தர்கள் மட்டும்) ஆகியவற்றில் இருக்கலாம். வாழை இலை மிக உசிதமானது. புரச இலை தாமரை இலை இவற்றை கிருஹஸ்தர் தவிர மத்தவங்க உபயோகிக்கலாம். (இந்த தையல் இலை என்கிறது புரச இலைகளால தைத்ததுதான்.)
இரும்பு (stainless steel), மண் பாத்திரம் (ceramic plate), உடைந்த பாத்திரம் இதெல்லாம் தவிர்க்கணும்.

அன்னம் பரிமாரிய பின் நீரால அதை பிரதக்ஷிணம் செய்து சற்று தெளிக்கணும். பரிசேஷணம் குல ஆசாரம். அதற்கு தனித்தனியாகவே நீரை எடுக்கணும். ஒரு உள்ளங்கை நீர் எடுத்து 3 சுத்து சுத்தி ப்ரோக்ஷணம் செய்வது கூடாது.
மற்றவர் நீர் ஊற்ற உள்ளங்கையில் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் கலந்த அன்னத்தை பல் படாம 5 பிராணன்களுக்கு ஆஹுதியாக விழுங்க வேண்டும்.
திரும்பியும் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.

கொஞ்சம் இருங்க, கொஞ்சம் அன்னத்தை எடுத்து தர்மராஜனுக்கு, சித்ரகுப்தனுக்கு, பிரேதங்களுக்கு என்று பலி வைக்க வேண்டும்.
அன்னத்தை வணங்கிய பின்னே சாப்பிட ஆரம்பிக்கலாம். சாப்பிடுகிறபோது அன்னத்தை இறைக்ககூடாது; திட்டக்கூடாது. “அன்னம் ந நிந்த்யாத்" என்பது உபநிஷத் வாக்கியம்.

மௌனமாகவே சாப்பிடணும். பேசிக்கொண்டே சாப்பிடுகிறவன் வாழ் நாளை ம்ருத்யு கொண்டு போகிறானாம். ஆனால் கிருஹஸ்தன் அவன் கூட சாப்பிடறவங்க இருந்தா, அவங்களை உபசரிப்பதற்காக பேசலாமாம். "அடியே, பக்கத்து இலைக்கு இன்னும் கொஞ்சம் பாயஸம்" என்பது போல சொல்லாம்! போடுகிற பதார்த்தங்களை வேண்டாம் என்றோ, போதும் என்றோ சொல்ல பேசலாம்.

சிராத்தநியமங்கள்

சிராத்தநியமங்கள்

சிராத்தம் வருகிற மாசத்திலோ பட்சத்திலோ சவரம் செய்து கொள்ளுதல், வேறு வீடுகளில் சாப்பிடுதல், ஸ்திரீ ஸங்கம் இவற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பசும் சாணத்தால் சிராத்தம் செய்யும் பூமியை மெழுகி எள்ளை இறைக்க வேண்டும்.
உளுந்து இல்லாமல் சிராத்தம் செய்யப்பட்டதாகாது. தேனை பித்ருக்கள் விரும்புகிறார்கள்.

சுருக்கமாக சிராத்த விஷயம்:
1. 12 நாழிகைக்கு மேல் (ஒரு நாள் = 60 நாழிகை. 12 நா = காலை 11 மணி) ப்ராம்மணர்களுக்கு ஸ்னானத்துக்கு தைலம் சூர்ணம் முதலியன கொடுக்க வேண்டும். அவர்கள் குளித்த பின் கர்த்தாவும் குளிப்பார். துவாதசியானால் நெல்லி சூர்ணம் கொடுக்க வேண்டும்.
2. ஆவாஹனம், அர்க்யம், சங்கல்பம், பிண்ட தானம், எள்நீர் கொடுத்தல், ஆசனம், பாத்யம், அன்னதானம் இவற்றில் நாம கோத்திரங்களை சொல்ல வேண்டும்.
3. தேவர்களின் ஆவாஹனத்தில் இரண்டு பாதங்கள், முழங்கால்கள், தோள்கள் தலை இவற்றில் அக்ஷதை போடவும்.
4. பித்ருக்கள் ஆவாஹனத்தில் தலை தோள்கள், முழங்கால்கள் என இறங்கு வரிசையில் எள்ளை போடவும்.
5. வீண் பேச்சு கூடாது.
6. தேவர்களுக்கு கட்டை விரலை பிடிக்காமலும் பித்ருக்களுக்கு பிடித்தும் மந்திரம் சொல்வர்.
7. சமையலின் குற்றங்களை சொல்லகூடாது

இவை போல பல உண்டு.

பித்ருக்களை வஸுக்களாயும், தாத்தாவை ருத்திரர்களாயும், அவருடைய அப்பாவை ஆதித்யர்களாயும் வேதம் சொல்லுகிறது.
ஒரு வேளை மற்ற புண்ய காலங்களில் (96) சிராத்தம் செய்ய முடியாவிட்டால் ஆம ரூபமாக, ஹிரண்ய ரூபமாக (அந்தணர்களுக்கு தக்ஷிணையாக) கொடுத்து செய்யலாம். சக்தி இல்லாதவன் பசுக்களுக்கு ஒரு நாளுக்கு போதுமான புல்லை போடலாம். பிண்டங்கள் போடலாம். தில (எள்) தர்ப்பணம் செய்யலாம்.

யார் சிராத்தம் செய்ய முடியாமல் - சக்தி இல்லாமல் இருக்கிறானோ அவன் அதற்கு பிரதிநிதியாக என்ன உள்ளது என்று பார்த்து அதை செய்தால் முக்கியமாக செய்ய வேண்டியபடி செய்த பலன் கிடைக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

யார் சிரத்தையுடன் பித்ருக்களையும் அக்னியையும், தேவர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா பிராணிகளுக்கும் உள்ளிருக்கும் இறைவனை பூஜிக்கிறார்கள். ஆயுள், புத்திரர்கள், புகழ், சுவர்க்கம், யசஸ், புஷ்டி, பலம், பாக்கியம், பசுக்கள், சுகம், தனம், தான்யம் இவற்றை அடைகிறார்கள்.
ஆகவே கிருஹஸ்தன் சிராத்தத்தை சரியாக செய்ய வேண்டும்.

சீமந்தோநயனம்:

சீமந்தம் / சீமந்தோநயனம்:

இது சம்ஸ்காரங்களில் மூன்றாவது.
 சீமந்தோநயனம் என்றால் வகிடு பிரிக்கிறது என்று அர்த்தம்.
முதல் கர்ப்பத்தின் ஐந்தாம் மாசம் முதல் எட்டாம் மாசம் வரை செய்யலாம்.
இதில் முக்கியமாக வெள்ளை நிறம் இருக்கும் முள்ளம் பன்றி முள், நெற்கதிர், அத்தி  மரத்தின் சிறு கிளை இவைகளால் பெண்ணின் வகிடு பிரிக்கிறாங்க. (அதாவது நெற்றியில் ஆரம்பித்து மேல் நோக்கி இழுக்க வேண்டும்) இப்படி செய்கிறதால் பெண்ணின் மனதிலே இருக்கும் கிலேசங்கள் அகலும். சந்தோஷமா இருப்பாங்க. குழந்தையும் நல்லா இருக்கும்.

இதில் கூப்பிடுகிற தேவதை ராகா. இந்த தேவதை பௌர்ணமி, சந்திரனுக்கு தேவதை. அப்ப கர்ப்பம் பயனுள்ளதா இருக்கும்; முள்ளம்பன்றி முள் போல கூர்மையா புத்தி இருக்கும்; பூர்ண சந்திரம் போல குழந்தை அழகா இருக்கும்.

மந்திர அர்த்த சுருக்கம்:

ராகா தேவதையை வேண்டுகிறேன். இந்த கர்மா பழுதில்லாமல் இருக்கட்டும். என் மகன் கூர்மையான புத்தியுடன் இருக்கட்டும். ராகா நமக்கு நிறைய செல்வங்களையும் ஆயிரம் வகையில் அபிவிருத்திகளும் கொடுத்து வளர்க்க வேண்டும்.

இந்த கர்மா போது வாத்தியங்கள் குறிப்பாக வீணை வாசிக்க சொல்கிறங்க. . இது மன அமைதி தருவதோடு பால் தரும் திறனை அதிகப்படுத்துகிறதாம். பெண்களும் வீரனான குழந்தையை பெற்று எடுப்பாய் என்று பாடுவாங்களாம்.

பெண்ணின் தலையில் நெற்கதிரை வைக்க வேண்டும். எஜமானனும் கர்ப்பிணி மனைவியும் அன்று நக்ஷத்திர உதயம் வரை மௌனமாக உபவாசம் இருக்க வேண்டும்.

Saturday, May 7, 2011

வளைகாப்பு

வளைகாப்பு
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் தரும் இல்லற வாழ்வில் இருவரும் எய்தும் பேரின்பம் குலம் தழைக்க ஒரு பிள்ளையைப் பெறுவதுவே. அதிலும் மனைவி கருவுற்று அவளுக்கு வளைகாப்பு நடைபெறுகையில் இவ்வின்பம் பெரும் எதிர்பார்ப்புடன் கலந்து ஒருவித உணர்ச்சிப் பெருக்கினை உண்டாக்க வல்லது.
தனியொரு மனிதன் எனும் சாதாரண நிலையிலிருந்து தந்தை எனும் பெரும் பதவியைப் பெறும் பெருமிதம் கணவன் முகத்தில் காணும் நன்னாளிது. இந்த வளைகாப்பு விழாவைக் கொண்டாட மனைவியின் உடன் பிறந்த சகோதரி இருந்துவிட்டால் இந்த இன்பம் பன்மடங்காகப் பெருகி அனைவரையும் உற்சாகப் படுத்தத் தவறுவதில்லை.

மலர்கள் சூட்டி, மஞ்சள் கூட்டி, வளையல் பூட்டி, திலகம் தீட்டி கர்ப்பிணிப் பெண்ணைப் போற்றி மகிழ்ந்து பாராட்டும் இந்நாளை மகிழ்வுடன் கொண்டாடாத மனிதர் யாரும் இல்லை. அன்று அவளுக்குப் பூட்டி மகிழும் வண்ண வண்ன வளையல்களின் சிறப்பையும் விழாவில் கணவன் மனைவி இருவரின் மன நிலையையும் அழகு தமிழில் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்:

அக்காளுக்கு வளைகாப்பு
Song: ம்ங்கையர் முகத்திலே - mangaiyar mugathile
Movie: Kalyana parisu - திரைப்படம்: கல்யாணப் பரிசு
Singers: Jikki பாடியவர்: ஜிக்கி
Lyrics: P. Kalyana sundaram இயற்றியவர்: பி. கலியாண சுந்தரம்
Music: A.M. Raja இசை: ஏ.எம். ராஜா
Year: 1957


ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

வளைகாப்பு, குளித்த மாதக் கணக்கிலிருந்து, ஐந்தாம் அல்லது ஏழாம் மாசம் செய்யப்படும். சாதாரணமாகப் பிறந்தகத்தில் செய்வது வழக்கம்.
சீமந்தத்துடன் சேர்ந்து செய்தால் ஆறாம் அல்லது எட்டாம் மாசம் என்பது கணக்கு.

வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.

காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.

சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு.

முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.

கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.

மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.

நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.

சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.
இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.

இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.

முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.

இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)

முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.

கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.

மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.

அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.

அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.

ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.

பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.
மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.

பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.

வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.

5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.

ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.

வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.

சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .

மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.

மாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம்.
அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.