Thursday, April 11, 2013

மந்திரசெபம்


மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?

மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

 இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.

எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

எப்படி இருந்து செபிக்க லாகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.

. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.

. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.
செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.



 

முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்பது சரியா?


முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்பது சரியா?

முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்கிற நம்பிக்கை நம் நாட்டிலுள்ளது.

குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் அந்தக் குழந்தை வீட்டார்க்கு மட்டுமல்ல. அண்டை வீட்டார்க்கும் உண்டு.

சில குழந்தைகளுக்கு முன்னதாகப் பல் முளைக்கும். சில குழந்தைகளுக்கு தாமதமாகப் பல் முளைக்கும். முன்னதகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.

இதற்குக் காரணமென்ன?

பேசுவதற்குப் பயன்படும் முக்கிய உறுப்பு நாக்கு. முன்னதாகப் பல் முளைத்து பற்கள் கூடும் போது பேச முற்படும் குழந்தையின் நாவிற்கு புதிதாக முளைத்த பற்களால் சில தடைகள் ஏற்படுகின்றன.

இதனால்தான் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.

காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது சரியா?


 

காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடயே உள்ளது. இது உண்மையா?

காகங்களை முன்னோர்களாகக் கருதி அவைகளுக்கு உணவு படைக்கும் வழக்கம் இந்து சமயத்தினரிடையே ஒரு வழக்கமாக இருக்கிறது. மேலும் காகம் கத்தும் திசைக்குக் கூட முக்கியத்துவமும் அளிக்கின்றனர்.

காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது உண்மையல்ல. விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதன் உருமாற்றமே இந்தச் செய்தி.

விருந்தினர் வந்தால் நிறைய உணவு வகைகள் தயாரிப்பார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மிச்சமிருந்தால் அதைக் காகத்திற்கு அளிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் “விருந்து கழிந்தால் காகம் கத்தும்” என்று சொல்லப்பட்டது.

காலப்போக்கில் காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்கிற நிலைக்கு மாறிப் போய்விட்டது என்பதுதான் இங்கு உண்மை.

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா?


பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா?

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பழம் நம்பிக்கை. இன்னும் கூட சில கிராமங்களில் இந்நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மைதான்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஹார்மோன் செயல்பாட்டினால் உடற்பாகங்களைப் போலவே அவர்களது தலைமுடியும் சற்று கூடுதலாகவே வளர்கிறது. இது குழந்தைப் பிறப்புக்குப் பின்பும் மூன்று மாத காலத்திற்குத் தொடரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடுகள் குறைந்து பழைய நிலைக்கு மாறும். இந்தக் காலத்தில் அவர்களுக்கு தலை முடி இயற்கையாகவே சிறிது உதிரத் தொடங்கும்.

குழந்தை பிறந்து மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான் சிரிக்கத் தொடங்கும். இதைக் கணக்கில் கொண்டுதான் மேற்கண்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பிறந்த குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும் மூன்றுமாதத்திற்குப் பின்பு முடி கொட்டும் என்பதே உண்மை.

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது சரியா?


 

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது சரியா?

 

கோவிலுக்குப் போனாலும் சுத்தமாகப் போகணும் என்பது ஐதீகம்.அப்போ சுத்தமில்லாத போது எப்படிக் கோவில் போவது ?...எல்லா சமயத்திலும் மிக முக்கியம் சுத்தம் ....

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாமா?

 

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலில் பிரவேசிக்கவோ தரிசனம் செய்யவோ கூடாதென்று ஆண்கள் கூறினால் அவர்களை பெண்களை எதிர்ப்பவர்கள் என்று கருதி விட வேண்டாம்.

இந்த நாட்களில் பெண்களுக்கு தனி அறையும் படுக்கையும் அளித்திருந்த முன் தலைமுறை அந்நாட்களை அசுத்தத்தின் நாட்களாகக் கருதியிருந்தனர். இந்நாட்களில் பெண்கள் கோயில் தரிசனம் என்ன, வீட்டின் முன்பக்கம் வருவதும், தூய மூலிகைச் செடிகளின் பக்கம் வருவதும் கூட தடை செய்யப்பட்டு வந்தன. ஆண்களின் அருகாமையும் அனுமதித்திருக்கவில்லை.

சபரிமலை போன்ற கோயில்களில் தரிசனத்துக்காக விரதம் பூண்டிருக்கும் ஆண்கள், வீட்டிலுள்ள பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் தங்கள் உணவை வீட்டிற்கு வெளியில் சுயமாக தயார் செய்து உண்பதும் வழக்கமாயிருந்தது.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந் நேரங்களில் கோயில் தரிசனம் செய்தல் இந்த வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும். ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமலிருக்கவே மாதவிடா நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது என்று கூறுவது.

பட்டுப்பூச்சிகளை வளர்க்குமிடத்தில் மாதவிடாய் கொண்ட பெண்கள் சென்றால் அதன் புழுக்கள் மாண்டு போவதாக விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. அதாவது சிறு வெப்ப மாற்றமும் இப்புழுக்களை பாதிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம்.தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி வலைகள் உண்டாக்கி அதனுள் சமாதியிருக்கும் புழுக்களைப் போலவே கோயிலைப் பொறுத்தவரை இறையின் நிலையும். இவ்வாறு திவ்ய ஜீவ சக்தியை பாதிக்காமலிருக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதி என்றால் என்ன?



தெளிவு பெற முடியாத விஷியங்களையும், சம்பவங்களையும் நாம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது அதற்கு “விதி” என்று கூறுகின்றோம். ஆனால் விதியின் மகிமை “நாம் வேதனைபபடும் பொழுது அந்த வேதனையைத் தாங்கும் சுமை தாங்கியாக நிற்பதே ” அந்த விதி தான்.

அசைவம் சாப்பிடலாமா ?

“மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால் அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன. இதை குற்றம் என்று கூற முடியாது. விதை விதைத்து, தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும். மாமிசமானது பிற உயிரினங்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும். அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரிய வரும். தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும். ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும். மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிட தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்கு பலவீனம் உண்டாகிவிடும். சிலருக்கு நோய்களும் ஏற்படலாம். நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும். உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, 2, 3 மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம். குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது”

கொடியில் ரிஷப உருவம் வரையப்படுவது ஏன்?

கொடியில் ரிஷப உருவம் வரையப்படுவது ஏன்? நான்கு குணங்களை கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதற்கு ஏற்ப ஆன்மாக்கள் பரிசுத்தம் உடையவர்கள் ஆனால், அவர்களை அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து இறைவன் உயர்த்தி விடுவான். திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்ந்த நிலையை அடையச் செய்வதற்கு இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்வார் என்பதைக் குறிப்பதற்காகவே திருவிழாவின் முதல்நாளில் கொடியேற்றப்படுகிறது. அதுபோல திருவிழா முடிந்த பின்பு இந்த கொடி இறக்கி வைக்கப்படும். அந்த கோவிலை சுற்றியிருக்கும் பல ஊர்மக்களும் இந்த கோவிலில் நடக்கப்போகும் திரு விழாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு வசதியாகவே இந்த நிகழ்ச்சி அமைகிறது. மேலும், பல ஊர் கோவில்களில் கொடியேற்றியவுடன் மக்கள் வெளிர்களுக்குச் செல்வதையும், சில சடங்குகளைச் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். திருவிழா முடிந்து, கொடி இறக்கியதும் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்வார்கள்.

கோவிலில் கொடி ஏற்றப்படுவது ஏன்?

கோவிலில் கொடி ஏற்றப்படுவது ஏன்? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஏன் தெரியுமா? கோவில்கள் இருக்கும்போது தான் திருவிழாக்கள் நடத்த முடியும். அப்போது மக்கள் அனைவரும் ஒன்று கூடுவர். மக்களின் ஒற்றுமை நலன் கருதி மக்களுக்காக இந்த விழாக்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். கோவில் திருவிழாவில் முதலில் கொடி ஏற்றப்படுகின்றன. அப்போது ரிஷப உருவத்தை ஒரு துணியில் எழுதி இதற்கு பூஜைகள் செய்து கயிற்றில் கட்டி கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவார்கள்.

சாமிக்கு பூவும் பழமும் படைப்பது ஏன் ?

சாமிக்கு பூவும் பழமும் படைப்பது ஏன் ? இந்த உலகமும், உலகில் உள்ள புழு, பூச்சி முதல் மனிதன் வரை சகலஜீவராசிகள் யாவுமே. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று இவைகளையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவைகளையும் படைத்தான். மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம்; பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம்; அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிக்கலாம். இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான்; நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமை. பகவான், ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு தன் சுய ரூபத்தைக் காண்பிக்கிறான்; பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு நரசிம்மனாகவும் காட்சியளித்தான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான். எந்த சின்ன பொருளை பகவானுக்கு, அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, ஏற்று சந்தோஷப்படுகிறான். மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை அவன் தன் பக்தனாக பாவிக்கிறான். பக்தர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான். சபரி என்கிற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காட்டில் உள்ள கனிகளை சேகரித்து பகவானின் வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமர். பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்; பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி! என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப்பட்டான். பக் தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும் என்பது அவனது கொள்கை. இதே நாராயணன் தானே மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனா கவும் உருவெடுத்தான்! எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதா வது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவன் அருள் செய்வான்! “சாமியாவது, பூதமாவது…’ என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!

ஒரு மண்டலம் விரதம் இருப்பது ஏன்?

ஒரு மண்டலம் விரதம் இருப்பது ஏன்? சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48-ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும், நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்த நாட்களில், எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோவிலுக்குச் செல்லுதல், அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை ஜெபித்தல், மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை ஜெபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபம் ஏற்றுதல்… போன்ற எளிய விதங்களில் வழிபட வேண்டும். ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு மண்டலம் செய்து வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில் உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது. ஆனால், மண்டல வழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு விருப்பமான இஷ்ட தேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள் பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.

சரணாகதி என்பது

. சரணாகதி – அர்த்தம் என்ன ? சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. “இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!’ என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. “பகவானே… நீ தான் கதி; நீ விட்ட வழி…’ என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. “நான், நான்’ என்று சொல்லி, “நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்…’ என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான். பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.

முடி காணிக்கை கொடுப்பது ஏன் ?

முடி காணிக்கை கொடுப்பது ஏன் ? இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல… புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா! சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். சோழநாட்டின் தளபதியாக பணி செய்தார். சிவபக்தியில் சிறந்த மானக்கஞ்சாறர் அப்பகு தியில் வசித்தார். அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார். பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், “இது எனக்கு வேண்டும்… பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்!’ என்றார். சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார். அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது. ஒருசமயம், சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலிநாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு இது தெரிந்தால் சிக்கல் வருமே என அவளைச் சமாதானம் செய்வதற்காக, தன் நண்பரான சிவனை பரவையாரின் வீட்டுக்கு தூது போகச் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், தன் சுயலாபத்துக்காக இறைவனை தூது போகச் சொன்ன சுந்தரர் மீது வெறுப்பில் இருந்தார். இதையறிந்த சிவபெருமான், கலிக்காமரையும், சுந்தரரையும் நண்பர்களாக்கும் பொருட்டு ஒரு நாடகமாடினார். கலிக்காமருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அதை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியுமென கலிக்காமர் மனைவியின் கனவில் வந்து சொன்னார் சிவபெருமான். இதையறிந்த சுந்தரரும் கலிக்காமரை காண வந்தார். தன் எதிரியால், தான் பிழைக்கக்கூடாது எனக்கருதிய கலிக்காமர், தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, தானும் தற்கொலைக்கு முயன்றார். சிவபெருமான் அவரைத் தடுத்து, கலிக்காமருக்கும் உயிர் கொடுத்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாயினர். இப்படி பக்திக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்தவர் கலிக்காமர்; அவரது மனைவியோ பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக் கம் பிரபலமானது. கலிக்காமரின் குருபூஜை, ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் நடத்தப்படும். இறைவனுக்கு காணிக்கையாக கொடுப்பதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என சிலர் கருதலாம். உண்மையைச் சொல்லப்போனால் எளிமையை இது வலியுறுத்துகிறது. இறைவன் மனிதனிடம் எதையும் எதிர்பார்ப்ப தில்லை. இருந்தாலும், தனக்கு செய்த உதவிக்காக, மனிதன் தலைமுடியில் இருந்து தங்கம் வரை காணிக்கையாகக் கொடுக்கிறான். ஏழைகளால் தலைமுடியை மட்டுமே காணிக்கையாகத் தர முடிகிறது. இதை விற்கும் கோவில் நிர்வாகம் இந்தப் பணத்தை சுவாமியின் கணக்கில் சேர்க்கிறது

கற்பக விருட்சத்தின் மகிமை என்ன

கற்பக விருட்சத்தின் மகிமை என்ன `கேட்டதை எல்லாம் கொடுக்குமாம்…கற்பக விருட்சம்’ என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேண்டியதை எல்லாம் தந்து அருள்பவள் சக்தி தேவி. அம்பிகையைப் போலவே கேட்டதைத் தந்து அருளும் மரம் தான் இந்த கற்பக விருட்சம். தெய்வ அற்புதம் நிறைந்தது. பாற்கடலில் உள்ள அமுதத்தை எடுப்பதற்காக தேவர்கள் அனைவரும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் பயன்படுத்தி, ஆழமாகக் கடைந்து கொண்டிருந்த போது, அந்த அற்புதம் நடந்தது. அப்போது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் விதவிதமாக வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி தோன்றிய பொருட்களில் வலம்புரிச்சங்கையும், சாளக்ராமத்தையும் மகாவிஷ்ணு தன் கையில் எடுத்துக் கொண்டார். திரவியங்கள், பொன், மாணிக்கம், சிந்தாமணிகள் என்று பல பொருட்களும் வெளிவந்தன. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு திசைக்குச் சென்று விட்டன. தொடர்ந்து, பச்சை நிறத்தில் மரக்கிளை போல பாசிக்கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் அழகாக நீரில் மிதந்து வந்தது. அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு தேவி பொற்காசுகளை இரைப்பது போன்று மகாலட்சுமியை போன்ற அழகுடன் நின்று கொண்டிருந்தாள். அந்த மரம் குபேரதிசையான வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. அதைக் கண்டு முனிவர்கள் வியந்தனர். அவர்கள் அதைப் பார்த்த உடன், “ஆகா…கற்பக விருட்சம்..! ஆகா…கற்பக விருட்சம்..!” என்று இரண்டு கைகளையும், கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதைக் கவனிக்காமல் இருந்தனர். பச்சை நிறம் பூசிய இரண்டு தேன்கூடுகள் இணைந்தது போன்று தெய்வ சக்திகள் நிறைந்து இருந்தது இந்த மரம். தெய்வ சக்திகள் நிறைந்த இந்த மரம் கேட்டதைத் தரும் சக்தியுடையது. இதன் உள்ளே இருக்கும் தேவிக்கு ஸ்வர்ணவர்ஷிணி என்று பெயர். இவள் பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமிக்குச் சமமானவள். இவள் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் நிகரற்றவள் என்று கற்பக விருட்ச தியான சுலோகம் கூறுகிறது. கற்பகத் தருவை அதில் உறைந்திரு
சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள் சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது. நண்பர்களே, இன்று சிவராத்திரி தினம். சிவனை வழிபடுங்கள். பலனைப்பெறுங்கள்

லிங்கோத்பவ காலம்!

லிங்கோத்பவ காலம்! சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி. மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமே மகா சிவ ராத்திரி.சிவபெருமானின் அருவுருவ வடிவான லிங்கோத்பவ வடிவம் உற்பத்தியான தினம் இது. அன்று இரவு 11.30 மணி முதல் 1.00மணி வரை உள்ள காலமே, ‘லிங்கோத்பவ காலம்! ஆகவே, சிவராத்திரியன்று குறிப்பிட்ட இந்த காலத்திலாவது சிவதரிசனம் செய்து பலன்பெற வேண்டும்.திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சந்தோஷமாக வாழ ஒரு வழி கிடைக்கும் சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித...்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும்.நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ''இருநிலனாய் தீயாகி'' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

கம்முன்னு இரு என்றால் என்ன?

ஒன்றும் செய்யமுடியாது விட்டால்கம்முன்னு இரு என்று சொல்கிறார்களே. கம்முன்னு இரு என்றால் என்ன? வினாயகரின் மகிமையை உலகில் வழங்கும் ஒரு பழமொழியிலிருந்தே உணரலாம். நீ 'கம்' என்று பேசாமல் இருந்தாலே எல்லாம் சரியாக நடைபெறும் என்று சொல்வது வழக்கம். அதற்குப் பொருள் 'கம்' என்ற பீஜாக்ஷ்ரத்தை ஜபித்தால் அவர் எல்லாக் காரியத்தையும் நடத்திக் கொடுப்பார் என்பதாகும்.. கம்முன்னு இரு என்று சொல்வது கணபதியைக் குறிக்கும். ஓம் கம் கணபதியே நம என்றொரு மந்திரமுண்டு. மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமானைச் சிந்தித்துக் கொண்டிருப்பதையே கம்முன்னு இரு என்று சொல்வதாகக் கூறுவர். கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்