Thursday, April 11, 2013

கொடியில் ரிஷப உருவம் வரையப்படுவது ஏன்?

கொடியில் ரிஷப உருவம் வரையப்படுவது ஏன்? நான்கு குணங்களை கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதற்கு ஏற்ப ஆன்மாக்கள் பரிசுத்தம் உடையவர்கள் ஆனால், அவர்களை அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து இறைவன் உயர்த்தி விடுவான். திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்ந்த நிலையை அடையச் செய்வதற்கு இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்வார் என்பதைக் குறிப்பதற்காகவே திருவிழாவின் முதல்நாளில் கொடியேற்றப்படுகிறது. அதுபோல திருவிழா முடிந்த பின்பு இந்த கொடி இறக்கி வைக்கப்படும். அந்த கோவிலை சுற்றியிருக்கும் பல ஊர்மக்களும் இந்த கோவிலில் நடக்கப்போகும் திரு விழாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு வசதியாகவே இந்த நிகழ்ச்சி அமைகிறது. மேலும், பல ஊர் கோவில்களில் கொடியேற்றியவுடன் மக்கள் வெளிர்களுக்குச் செல்வதையும், சில சடங்குகளைச் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். திருவிழா முடிந்து, கொடி இறக்கியதும் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்வார்கள்.

No comments:

Post a Comment