Saturday, November 7, 2015

உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா?

கேள்வி ‘இதுவே என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் ஆண்டவா!’ என்ற வேண்டுதல்களை நாம் கேட்டிருப்போம். உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா? இதற்கும் ‘கர்மா’விற்கும் என்ன சம்பந்தம்? சத்குரு: இது பெரும்பாலும் இந்தியர்களின் பிரச்சனை தான். அனுபவத்தில் உணராவிட்டாலும், அவர்கள் பேச்சுவழக்கில் ‘பிறவிகள்’ சர்வசாதாரணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, அதை அவர்கள் அனுபவத்திலும் கொணர முயன்று கொண்டிருக்கிறோம்… ஏனெனில், அவர்கள் மனதளவிலேனும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள். பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். இப்போது நீங்கள் நியுயார்க் நகரில் இருக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை பிறந்தால், மறுபடியும் இங்கேயே பிறந்து, இதே தெருக்களில் நடக்க விரும்புவீர்களா? அல்லது அதைத் தாண்டி என்ன உள்ளது என்று அறிய விரும்புவீர்களா? முழுமையான வாழ்வை வாழ்ந்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையுமே பார்த்திருப்பீர்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஏதுமிருக்காது. முந்தைய அனுபவங்களுக்கும், இதற்கும் சிற்சிறு வேறுபாடுகள் இருக்கும் தான், ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று உங்களுக்குத் தெரிந்து விடும். அதனால், ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி தான் உங்களுக்கு எழும். எளிமையாகச் சொல்வதனால், இப்போது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆனால் ஒரு நாள் இறந்துவிடுவீர்கள். ஆக, அடிப்படையில் உங்கள் உடல் என்பது, நீங்கள் சேகரித்த ஒன்று. இப்போது நீங்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தாலும், அமெரிக்க நாட்டில் உற்பத்தியான உணவை சில வருடங்களாக நீங்கள் உண்டிருந்தாலும், உங்கள் முக அமைப்பு, தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படவில்லை. இவ்வளவு ஏன், இன்னும் 50 ஆண்டுகளுக்கு நான் அமெரிக்க நாட்டு உணவினை உண்டாலும், நான் இந்தியனாகவே தோற்றமளிப்பேன். அதில் வித்தியாசம் இருக்காது. ஏன்? ஏனெனில், இது மரபணு சம்பந்தப்பட்டது. இங்கிருக்கும் பொருட்களை எடுத்து ஒரு கட்டிடத்தைக் கட்டினால், அது ஒரு வகையில் தோற்றமளிக்கும். ஆனால் இங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடல்கள் உருவாக்க முயன்றால், உணவு உட்கொண்டவரைப் பொருத்து, தோற்றம் இந்தியனாகவோ, ஆஃபிரிக்கனாகவோ, அல்லது வேறு எவராகவோ தோன்றும். அமெரிக்க மண்ணில் விளையும் உணவினை உண்டால், உட்கொள்பவர்கள் மெதுவாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் போல் தோற்றம் கொள்ளவேண்டும். ஆனால் இங்கு நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும், கலப்புத் திருமணம் செய்யவில்லை என்றால், உங்கள் வம்சத்தின் தோற்றம் எவ்விதத்திலும் மாறுபடாது. அடிப்படையில் அது உங்கள் தாய்நாட்டின் முக அமைப்பு, தோற்றமாகவே இருக்கும். இதை தர்க்க ரீதியாக அணுகிப் பார்ப்போம். ஒரே உணவை வெவ்வேறு மனித உடல்கள் உட்கொண்டாலும், அவர்கள் தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படுவதில்லை. உணவு ஒன்று தான், ஆனால் தோற்றம் முன்பு எப்படி இருந்ததோ அதே வகையில் இருக்கிறது. ஏன்? காரணம், அவ்வுடல்களில் இருக்கும் ஞாபகக் கட்டமைப்பு. உணவும், மற்ற பிற ஆகாரங்களும் நியுயார்க் நகரில் இருந்து கிடைக்கப் பெறலாம். ஆனால் உங்கள் தோல், மூக்கு, கண், உடல் என எல்லாம் உங்கள் தாய்நாட்டை ஒத்து இருக்கிறது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்குள் சில தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. அது தான் உங்கள் தோற்றம், சிந்தனை, நீங்கள் நடக்கும் விதம் என எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது. அதற்காக, உடல் சம்பந்தப்பட்ட தகவல் மட்டும் தான் உங்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிட வேண்டாம். மகப்பேறு மருத்துவமனையில் சென்று, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைப் பாருங்கள். ஒவ்வொன்றின் குணாதிசயமும் வித்தியாசப்படும். உங்களுக்குள் சேர்த்து வைக்கப்படும் தகவல் வெறும் உடற் சம்பந்தப்பட்டது அல்ல. அது அதையும் தாண்டி நீள்கிறது. பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். ஆனால் அமெரிக்க மண்ணை எடுத்து உங்கள் உடலை உருவாக்கினாலும், அதை வார்க்கும் தகவல் வேறெங்கோ (தாய்நாடு அமெரிக்காவாக இல்லாவிட்டால்) இருந்து நீங்கள் பெற்றது. அந்தத் தகவலின் பதிப்புத் திறன், நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு இருப்பதை விட அதிகமாக இருப்பதால், அது தன்னைப் பதித்து உங்கள் உடலில் வெளிப்படுகிறது என்ற அளவிற்கு தெளிவாக இருக்கிறதா? ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இந்த உடல் என்பது நீங்கள் உண்ட உணவின் சேர்க்கை. இந்த உணவு அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது, ஒரு வகையில் நீங்கள் டென்னஸியின் மண்ணை உட்கொண்டிருக்கிறீர்கள். இப்பகுதியில் தான், முன்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ‘செரூக்கி’ (Cherokee) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் தோற்றம் ஓர்வகையில் அமைந்தது. ஆப்பிரிக்க மாகாணத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் வேறு ஒருவகையில் தோற்றம் கொண்டார்கள். இதுபோல், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் தோற்றம் ஒருவருக்கொருவர் மிக வித்தியாசமாய் இருக்கும். இது… உலகின் பல்வேறு இடங்களுக்கும் மிக எளிதாக பயணம் மேற்கொண்டு, கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கு முன்பு இருந்த நிலை. நிலம், நீர், காற்று, அப்பகுதியின் தட்பவெப்பம், வானிலை ஆகியவை மனிதனின் தோற்றத்தை எந்த அளவிற்கு, எப்படி எல்லாம் மாற்றியது, மாற்றவல்லது என்பது மானுடவியலில் தெளிவாய் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்போது நான் இந்தியாவில் இருந்து டென்னஸிக்குக் குடிபெயர்ந்தாலும், எவ்வளவு தான் இம்மண்ணில் விளைந்த உணவை உண்டாலும், இப்பகுதியின் பழங்குடியினரை என் தோற்றம் பிரதிபலிக்காது. நான் சுமந்து கொண்டிருக்கும் தகவலின் வீரியம், நான் உட்கொள்ளும் உணவின் ஞாபகத்தைவிட வலியது. இப்படி நாம் உண்ணும் உணவையும் தன் வழியில் மாற்றியமைக்கும் இந்த ஞாபகங்கள் இந்த வாழ்க்கையில் நாம் சேர்த்ததல்ல. நம் பிறப்பிற்கும் முன்பே இவை இருந்தன. இதைத்தான் கர்மா என்றழைக்கிறோம். இது மிகமிக அதிகமான தகவல் கிடங்கு. இப்போது நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்தத் தகவல்கள் உங்கள் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இதற்கு மற்ற பரிமாணங்களும் உண்டு. உடலைப் பொருத்தவரை, இது மிக வெளிப்படையாகத் தென்படுகிறது. உங்கள் தோல், உங்கள் மூக்கு என இன்னும் பலவற்றில் இது வெளிப்படுகிறது. மற்ற நிலைகளில் இதன் தாக்கம் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவற்றிலும் இது செயல்படுகிறது. இப்போது தான் பிறந்த குழந்தையாக இருந்தாலும், ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் வெவ்வேறு தகவல்களை சுமப்பதால், அவற்றின் குணாதிசயங்களும் வித்தியாசப்படுகின்றன. ஒன்றிற்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன் பிள்ளைகள் ஒரே மரபணுக்களை சுமந்தாலும், அவர்கள் முற்றிலும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று. ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். மரபணு மூலம் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தகவல்களைத் தாண்டி, வேறு விதமான தகவல்களையும் அவர்கள் சுமக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மரபணுத் தகவல்கள் உடலாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் சுமக்கும் மற்றொரு தகவல் கிடங்கு, இதைவிட மிகப் பெரிது. அதை உணர வேண்டுமென்றாலே, கூர்மையான கவனம் வேண்டும். அதற்கும் மேலாக, அது என்ன, அது எப்படி சேகரிக்கப் பட்டுள்ளது, அதை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றாலோ, அது முற்றிலும் வேறு விதமான விஷயம். ஆன்மீக செயல்முறைகள் இத்தகவலைப் பற்றி அறிந்திட வழிசெய்கின்றன. இத்தகவற் கிடங்கு இத்தனை வலியது என்றால், அதை கவனிப்பது நல்லதல்லவா! இது எத்தனை வலியது என்றால், நீங்கள் வாழும் சூழ்நிலையை அது ஆள வல்லது. உங்கள் நோக்கம் எதுவாகினும் அதை அமிழ்த்திவிட்டு, தனக்குத் தேவையானதை செய்துகொள்ளக் கூடியது. இப்போது இங்கே உட்கார்ந்து, நீங்கள் தியானம் செய்ய விழைகிறீர்கள். ஆனால் அதுவோ, தனக்குத் தேவையானதை நிகழ்த்திக் கொள்கிறது. உண்மை தானே? இத்தகவல்களின் வீரியத்தைக் குறைக்க நீங்கள் வழி செய்யாவிட்டால், இத்தகவல்களை விலக்கி வைக்க நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால், உங்களில் மாற்றம் செய்துகொள்வதும், வளர்வதும், மலர்வதும் வெறும் வார்த்தைகள் தான். அது நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை, காரணம் அத்தகவல்கள் இந்த எண்ணத்தை அமிழ்த்தி, வீழ்த்திவிடும். அத்தகவல்களில் இருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாவிட்டால், நீங்கள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்குமாறு, அது உங்களைக் கட்டுப்படுத்தும். இத்தகவற் கிடங்கில் இருந்து உங்களை மெதுமெதுவாக விலக்கிக் கொள்வதற்கு, ஒரு ஏதுவான உடலை, மனதை, உணர்வு மண்டலத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறை தான் யோக விஞ்ஞானம்!

Read more at :  

தரையில் அமர்வதால் என்ன பயன்?

கேள்வி நம் நாட்டில் மட்டும்தான் காலம் காலமாக சமைப்பது, பூஜை செய்வது, திருமணம் செய்வது, சாப்பிடுவது, படிப்பது என்று எல்லாவற்றையுமே பூமியின் மீது, தரையில் அமர்ந்து செய்கிறோம். இப்போதெல்லாம் நாமும் டைனிங் டேபிளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். தரையில் உட்காருவதால் பயன் உண்டா? சத்குரு: பூமியிலிருந்து வந்த உடல் உங்கள் உடல் வானத்திலிருந்து வரவில்லை. அது பூமியின் பாகம். எது பூமியாக இருந்ததோ அது இப்போது மனிதனாக அமர்ந்திருக்கிறது. ஒரு நாள் இது மீண்டும் மண்ணாக ஆகிவிடும். எனவே பூமியில் நடக்கும் மாற்றங்கள் எல்லாம் நம் உடலிலும் நடக்கின்றது. நீங்கள் சூட்சுமமாக இருந்தால் அதை கவனிக்கமுடியும். சூழ்நிலைகளை சவாலாக எடுத்து வெற்றி பெறுவதும் அல்லது துன்பமாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதும் உங்களிடம்தான் இருக்கிறது. ஒரு சில உயிரினங்கள் இதை நுட்பமாக உணரும். மனிதர்களால் இதை உணரமுடிவதில்லை. குறிப்பாக பாம்புகளுக்கு இந்த உணரும் தன்மை அதிகம். அவற்றுக்குக் காதுகளே இல்லை. சப்தங்களைக்கூட அவை அதிர்வுகளாகவே உணர்கின்றன. இது எப்படிச் சாத்தியம் என்றால் பாம்பின் உடல் முழுவதும் மண்ணோடு தொடர்பில் இருப்பதால்தான். இங்கு இருக்கும் ஒரு பாம்பு, இன்னும் பத்து நாள் கழித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடக்கப்போகும் பூகம்பத்தைக்கூட அறிந்து கொள்ளும். உடல் உபாதைகளோடு இங்கு யோகா மையத்திற்கு வருபவர்களிடம் நான் எளிமையான ஒரு வழியைச் சொல்வதுண்டு. செருப்பு அணியாமல் தினமும் சிறிது நேரம் தோட்ட வேலை செய்யுங்கள் என்பேன். ஓரிரு மணிநேரங்களாவது கை, கால் எல்லாம் மண்ணில் படும்படி இருக்கவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதனால் உடலில் புதிய உறுதி ஏற்படும். மண்தானே நம் உடலாக மாறியுள்ளது? சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு யோகக் கலாச்சாரத்தில் ஒரு சிகிச்சை உண்டு. குழி தோண்டி அவர்களை கழுத்து வரை புதைத்துவிடுவார்கள். சிலமணி நேரம் அவர்கள் தம் உடலை முழுமையாக பூமியுடன் தொடர்பில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நோயிலிருந்து முழுமையாக வெளிவரமுடியும். ஆனால் புதைப்பது என்றால் இப்போது மிகவும் பயப்படுகிறார்கள். எனவே தோட்ட வேலை செய்யச் சொல்கிறோம், அல்லது உடல் முழுவதும் மண் பூசும் (Mud Bath) முறையைக் கையாள்கிறோம். உங்களுக்குள் இனிமை உருவாக்கிட மேலும் நீங்கள் உங்களுக்குள் எப்போதும் மிகவும் இனிமையான உணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. வாழ்க்கையின் உயரத்தை அடைய அப்போதுதான் தேவையான உறுதி மற்றும் தைரியத்துடன் இருப்பீர்கள். உங்களுக்குள் அந்த இனிமைத்தன்மை நிலையானதாக இருந்தால் வெளிப்புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் உங்களைப் பாதிக்க முடியாது. நீங்கள் பாதிக்கப்பட முக்கியமான காரணமாக இருப்பது எது? உங்கள் உடலும் மனமும்தான். இவைதான் உங்களுக்கு பாதிப்பைத் தரமுடியும். கடவுளோ, பிசாசோ, அல்லது அடுத்துள்ள ஆளோ உங்களுக்கு பாதிப்பைத் தரமுடியாது. அவை உங்களுக்கு சூழ்நிலைகளை உருவாக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலைகளை சவாலாக எடுத்து வெற்றி பெறுவதும் அல்லது துன்பமாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதும் உங்களிடம்தான் இருக்கிறது. எனவே பாதிப்பைத் தரும் உங்கள் உடலோ மனமோ எல்லாம் பொருள்தன்மையானதுதான். மூளை என்பதும் உடலின் ஒரு பகுதிதான். உங்கள் உடல் மண்ணிலிருந்து வந்ததுதான். எனவே நீங்கள் வெறும் மண் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. எனவே உடல், மனம் தரும் பாதிப்பிலிருந்து நீங்கி உங்களுக்குள் இனிமையான உணர்வை உறுதியுடன் ஏற்படுத்திக் கொள்ள ஒரு வழி, உங்களை பல வழிகளிலும் பூமியுடன், இந்த மண்ணுடன் தொடர்புபடுத்திக் கொள்வதே. எனவேதான் நம் கலாச்சாரத்தில் உட்கார்ந்தாலும், நின்றாலும், உறங்கினாலும் பூமியுடன் தொடர்பு வைத்துச் செய்கிறோம். நமக்கு ஒரு ‘நாற்காலி’ உருவாக்கத் தெரியாமல் அனைத்தையும் கீழே அமர்ந்து செய்தோம் என்று நினைத்துவிடாதீர்கள். வாழ்வின் அடிப்படையை ஆழமாகப் புரிந்து, இந்த உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து, இந்த உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக தரையுடனான தொடர்பு அவசியம் என்பதை உணர்ந்ததால்தான் இந்த பழக்கத்தை உருவாக்கினார்கள்.

Read more at :

துன்பம் வரும் வேளை

கேள்வி துன்பங்கள் வரும்போது, மனிதன் கடவுளிடம் கூடுதலாகப் பிரார்த்தனை செய்வது அவசியமா? அதனால் பலனுண்டா? சத்குரு: எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதுவல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள். கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே? பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும். துன்பங்கள் வரும்போது சாய்ந்துகொள்ளும் தோளாக கடவுளைக் கூப்பிட்டால் மட்டும் என்ன? உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளை தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்! கேள்வி சத்குரு, மரண தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன? சத்குரு அண்மையில் மும்பை கலவரம் குறித்த வழக்கில் பன்னிரெண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் உறவினர்களைப் பார்க்கும்போது, உங்கள் மனம் வேதனைப்படலாம். ஆனால் இந்தப் பன்னிரெண்டு பேரால், அநியாயமாக சில நூறு பேர்களில் உயிர்கள் பறிக்கப்பட்டதை எப்படி மறக்க முடியும்? சமூகக் கோட்பாடுகளில் இக்குற்றங்களுக்கு தண்டனைகள் தரப்படவில்லை என்றால், இக்குற்றங்கள் கேள்வி கேட்பாரின்றி பெருகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்த பூமியில் வாழ்பவர்கள் அச்சத்திலேயே வாழ வேண்டி வரும். தனிப்பட்ட முறையில் மரண தண்டனைகளை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால் இன்றைய சமூகச் சூழ்நிலையில் இதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை!

எது பாவம்? எது புண்ணியம்?

நீ செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சே தீருவ!”- இப்படி நம்மைப் பார்த்து யாரேனும் சொல்லிவிட்டால், அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க, உடனே கடவுளிடம் மனு தாக்கல் செய்து பாவ விமோச்சனம் கேட்போம். உண்மையில் பாவங்களுக்கு தண்டனை கிடைக்குமா? கடவுளிடம் பிரார்த்தனை செய்வது பலனளிக்குமா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம். கேள்வி துன்பங்கள் வரும்போது, மனிதன் கடவுளிடம் கூடுதலாகப் பிரார்த்தனை செய்வது அவசியமா? அதனால் பலனுண்டா? சத்குரு: எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே? பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும். துன்பங்கள் வரும்போது சாய்ந்துகொள்ளும் தோளாக கடவுளைக் கூப்பிட்டால் மட்டும் என்ன? உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளை தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்! கேள்வி பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்? சத்குரு: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள். நிபந்தனையற்ற அன்பைக்கொண்டு உங்களை வசப்படுத்த அவர்கள் முனைவதில்லை. மாறாக அச்சத்தையும் குற்ற உணர்வையும் உங்கள்மீது அவர்கள் விட்டெறிகிறார்கள். உங்கள் மனதில் அச்சமும் குற்ற உணர்வும் ஓங்குகையில் நீங்கள் புத்திசாலித்தனத்தை இழக்கிறீர்கள். மனிதத்தன்மையை இழக்கிறீர்கள். அதைப் பயன்படுத்தி அவர்கள் உங்களை அடக்கி ஆள முனைகிறார்கள். அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், சமூகம், பெற்றோர் எல்லோருமே இதே தந்திரத்தைக் கையாள்கிறார்கள். எல்லையில்லாத் தன்மையை உணரும் வாய்ப்பு கொண்ட உங்களை இந்தச் சங்கிலிகளால் அவர்கள் கட்டிப்போடுகிறார்கள். படைத்தவன்மீது நம்பிக்கையற்றவர்களும், மனிதநேயம் மறந்தவர்களும் மட்டுமே பாவம் புண்ணியம் பற்றிப் பேசுவார்கள். கேள்வி மூளைக்கும் மனதுக்கும் என்ன வித்தியாசம்? சத்குரு: மூளை உடலின் ஒரு பாகம். எலும்பு, தசை நரம்பு போன்ற மற்ற பாகங்களைப் போல் மூளையும் செல்களால் ஆனதுதான். ஆனால் எலும்பிலும், நரம்பிலும், தசையிலும் இருக்கும் செல்களின் உணர்ந்துகொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளன. மூளையில் இருக்கும் செல்களோ மிக நுட்பமானவை. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், மூளையுடன் உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரானிக் சாதனங்களை ஒப்பிடலாம். அவை நாளுக்கு நாள் எப்படி சிறிதாகிக் கொண்டே வருகின்றன? கைக்குள் அடங்கும் கம்ப்யூட்டர்கள் வந்துவிட்டன. நாளைக்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு சிப் கண்டுபிடிக்கப்படலாம். அதைக் காற்றில் வீசிவிட்டால், அது இயங்கும் அளவுக்கு விஞ்ஞானம் நுட்பமாகிவருகிறது. அதேபோல்தான் மூளையில் இருக்கும் செல்கள் சாதாரணமாய் கவனித்துவிடக் கூடியவை அல்ல. மிகமிக நுட்பமானவை. மூளையைப் பயன்படுத்தாமல், மனம் இயங்க முடியாது. மூளை என்பதை மனது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வாகனம் என்று சொல்லலாம். எப்படி உங்கள் உயிர் பிரிந்த பின், உடல் இந்த உலகில் இயங்க முடியாதோ, அதேபோல், மூளை தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்போது, உங்கள் மனம் தன் வெளிப்படையான இயக்கத்தை நிறுத்திவிடுகிறது. ஆனால் உடலைப் பிரிந்த பின்னும் உயிர் எப்படி நுட்பமாக இயங்குமோ, அதேபோல் உங்கள் மனமும் மூளையைப் பிரிந்த பின்னும் தொடர்ந்து நுட்பமாக இயங்கும். தனக்கேற்ற அடுத்த உடலைத் தேடிக்கொள்ளும்!

சடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா?

நம் கலாச்சாரத்தில் சடங்குகள் என்ற பெயரில் பல அர்த்தமற்ற நடைமுறைகள் இருப்பதைக் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்ற ஆவல் நம் சிந்தனையில் பிறப்பது சகஜமே. ஆனால், அதற்கு சரியான தீர்வு எது? சத்குரு தன் வாழ்க்கையில் சடங்குகள் குறித்து தான் பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். சத்குரு: அமானுஷ்ய சடங்குகள் சிறு வயதிலிருந்தே, சடங்குகள் என் வாழ்க்கையின் ஓர் அம்சமாக இருந்ததில்லை. ஆனால், என்னைச் சுற்றி நடந்த சடங்குகளை நெருக்கமாகக் கவனித்து வந்திருக்கிறேன். நம்புவதற்கு அரிதான அமானுஷ்ய சடங்குகளில் சில மட்டும் என்னைக் கவர்ந்து இருக்கின்றன. சடங்குகள், சில நெறிமுறைகளை வாழ்க்கையில் புகுத்துகின்றன. ஓரளவு விழிப்பு உணர்வை எட்டும்வரை சில நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அத்தியாவசியமாகிறது. அரிசியால் செய்த ஒரு பொம்மை 3 அடிகள் எடுத்து வைத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். இதுபோன்ற தந்திரங்கள் தொடர்பான சடங்குகள் தவிர, மத ரீதியான சடங்குகளோ, சமூகச் சடங்குகளோ என்னைக் கொஞ்சமும் ஈர்த்தது இல்லை. எந்தச் சடங்கிலும் அதன் அர்த்தம் தெரியாமல் கலந்து கொண்டது இல்லை. மந்தை ஆடுபோல் மற்றவர் செய்வதைச் செய்யும் எந்தச் செயலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மூடத்தனம்தான் இருப்பதிலேயே மிக மோசமான குற்றம், விழிப்புணர்வுடன் வாழும்போது எதுவும் சடங்காக உருக்கொள்வது இல்லை. இளம் வயதில் அர்த்தம் விளக்க முடியாத சடங்குகளை எதிர்த்திருக்கிறேன். பெரும்பான்மையானவர்கள் ஒரே வழியில் செல்லும்போது அதைத் தினந்தோறும் மறித்துக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை என்று, மாற்ற முடியாதவற்றை அவற்றின் போக்கிலேயே விடும் மனமாற்றம் பிற்பாடு நிகழ்ந்தது. சடங்குகள், சில நெறிமுறைகளை வாழ்க்கையில் புகுத்துகின்றன. ஓரளவு விழிப்பு உணர்வை எட்டும்வரை சில நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அத்தியாவசியமாகிறது. ஆனால், நான் சடங்குகளைப் பரிந்துரைப்பது இல்லை. என் வாழ்க்கை விழிப்புணர்வுடன் இயங்குவதால், சடங்கு முறைகள் என் வாழ்வின் அங்கமாக மாறியது இல்லை. சடங்குகள் ஏன் துவக்கப்பட்டன? அவற்றின் பின்னணியில் புதைந்திருக்கும் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்த பிறகு, விழிப்புணர்வுடன் அவற்றை அணுகினேன். சடங்குகள் விஞ்ஞானப்பூர்வமானவையா? பெரும்பான்மையான சடங்குகள், விஞ்ஞான பூர்வமான நோக்கத்துடன் துவக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையால், அடிப்படை கலைந்து அர்த்தமற்ற சக்கை மட்டும் தங்கிவிட்டது. பிரார்த்தனைகள் கூட அவற்றின் அடிப்படையை இழந்து சடங்காகச் செய்யப்படுவதை எல்லா மதங்களின் ஆலயங்களிலும் நீங்கள் காணலாம். ‘தந்த்ரா’ என்னும் தந்திர முறையில் வெளியில் இருக்கும் பல பொருட்களைக் கொண்டு ஒருவித சக்தி நிலையை உருவாக்குவதற்குச் சடங்குகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. அக்பர் ஒருமுறை வேட்டைக்காகக் காட்டுக்குப் போயிருந்தபோது, ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுநேரம் தனியே வந்துவிட்டார். மாலை நேரம் வந்தது. ஐந்து வேளையும் தொழுகை செய்யும் வழக்கம் இருந்ததால், அக்பர் பூமியில் மண்டியிட்டுத் தொழுகையில் ஈடுபட்டார். மரம் வெட்டச் சென்று, வீடு திரும்பாத கணவனைத் தேடிக்கொண்டு, அந்த நேரத்தில் அங்கே வந்தாள் காட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெண். தொழுகையில் இருந்த அக்பரைக் கவனிக்காமல் வந்ததால், அவர் மீது இடறினாள். ஆனால், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் சுதாரித்துச் சென்றுவிட்டாள். மாமன்னனாகிய தன் மீது மோதியதும் அல்லாமல், மன்னிப்புகூட கேட்காமல் செல்லும் அவளைக் கண்டு அக்பர் மிகவும் கோபம் கொண்டார். ஆனால், தொழுகையை முறிக்க விரும்பாமல் தொடர்ந்தார். அந்தப் பெண்மணி கணவனுடன் திரும்பி வந்தபோது, அக்பர் தன் தொழுகையை முடித்திருந்தார். அவர்களைக் கோபமாக நிறுத்தினார். “இந்த நாட்டின் மன்னன் நான் என்று தெரியுமா? தொழுகையில் இருந்த என்னை இடறிவிட்டு, மன்னிப்புகூடக் கேட்காமல் போகிறாயே, என்ன திமிர்?” அந்தப் பெண் அயராமல் சொன்னாள், “என் கணவனைத் தேடி சென்றபோது மன்னனையே நான் கவனிக்கவில்லை. ஆனால், கடவுளை எண்ணித் தொழுகையில் இருந்த உங்களால், சாதாரண மரவெட்டியின் மனைவியை எப்படிக் கவனிக்க முடிந்தது?” விழிப்புணர்வு இன்றி, எதையும் சடங்காகச் செய்கையில் அதன் நோக்கம் இப்படித்தான் பழுதுபட்டுப் போகிறது. பிழைப்பிற்காக அல்ல சடங்குகள் தங்கள் பிழைப்புக்காக சடங்குகளை மற்றவர் மீது திணிப்பவர்களிடம் ஒன்று சொல்வேன். முன்பு வேறு வழி இல்லாதபோது உங்கள் வாழ்க்கையை நடத்த நீங்கள் இதைத் தொழிலாக்கிக் கொண்டு இருக்கலாம். ஆனால், இன்றைக்குப் பிழைப்பு நடத்த எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன. காலம் மாறிப் போனதில் அர்த்தம் இழந்துவிட்ட சடங்குகளை இன்றைக்கும் பிழைப்புக்காக நடத்துவது தேவையற்றது. ‘தந்த்ரா’ என்னும் தந்திர முறையில் வெளியில் இருக்கும் பல பொருட்களைக் கொண்டு ஒருவித சக்தி நிலையை உருவாக்குவதற்குச் சடங்குகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. யோகா மற்றும் தியானம் புறத்தைச் சார்ந்தது இல்லை. அங்கே சக்தி நிலையை உருவாக்குவதற்கு உங்களுடைய உட்புறமே முழுமையாக உதவி செய்கிறது. உங்கள் உடலும், உயிருமே சக்தியைத் தயாரிக்கும் தொழிற்கூடமாகின்றன. தந்திர முறைகளில் இருக்கும் வெளிப்படையான கவர்ச்சி யோகாவில் இல்லாமல் போகலாம். ஆனால், தந்திர முறைகளைப் போல் அல்லாமல், யோகா முற்றிலும் நம்பகமானது. அதற்காக இறந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சடங்குகள் எல்லாவற்றையும், வாழ்விலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஒரு சடங்கு எதற்கு துவக்கப்பட்டது. அந்த நிலை இன்றைக்கும் சமூகத்தில் தொடர்கிறதா என்று கவனிக்க வேண்டும். மேலும், அதை அர்த்தம் உள்ளதாக மாற்ற எப்படி உயிரூட்டுவது என்று பார்க்க வேண்டும். அதனால்தான், மக்களுக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றும் சில சடங்குகளின் விஞ்ஞானபூர்வமான அடிப்படையை மீண்டும் அவற்றில் புகுத்த முனைந்திருக்கிறேன். மக்களின் உணர்ச்சிகள் சுலபமாகக் கிளறப்படும் ஆபத்து இருப்பதால், சடங்குகள் தொடர்பான மாற்றங்களைக் கையாள்பவர்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். சடங்குகளை நான் இழிவுபடுத்திப் பேசவில்லை. ஆனால், உங்கள் கவனம் ஆன்மீக முன்னேற்றத்தில் இருந்தால், சடங்குகளுக்கு அவசியம் இல்லை என்கிறேன். ஆன்மீகப் பாதையில் செல்வதாக இருந்தால், எதையும் அண்ணாந்து பார்க்க வேண்டாம். எதையும் குனிந்து பார்க்க வேண்டாம். அக்கம் பக்கத்தில் கூட பார்க்க வேண்டாம். உள்நோக்கிப் பார்த்தால் போதும்!

 

தந்த்ரா’ என்றால் காமம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

தாந்த்ரீகம்’ என்றாலே பலர் இன்று காமம் என்று புரிந்து வைத்துள்ளனர். தாந்த்ரீகம் என்பது உண்மையில் என்ன? தாந்த்ரீகம் எப்போது சாத்தியமாகிறது? இங்கே, அந்த அற்புத தொழில்நுட்பத்தை பற்றி விளக்குகிறார் சத்குரு. சத்குரு: ‘தாந்த்ரீகம்’ என்றால் “தொழில்நுட்பம்” என்று அர்த்தம். நிறைய மேற்கத்திய நாட்டினர் தாந்த்ரீகத்தைப் பற்றி புத்தகங்கள் எழுத ஆரம்பித்ததால், மக்களின் மனதில் மெதுவாக, தாந்த்ரீகம் என்ற வார்த்தைக்கு, காமம் என்ற அர்த்தம் தங்கிவிட்டது. ஆனால் தாந்த்ரீகத்திற்கும் காமத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தாந்த்ரீகம் என்பது ஒரு வழிமுறை – நமக்கு வேண்டியதை உருவாக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம். உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட வடிவங்களையும், அடையாளங்களையும், தற்பொழுது இல்லாத திறன்களையுடைய விவேகத்தையும் உருவாக்குவதே தாந்த்ரீகம்வின் நோக்கம். நமக்கு வேண்டிய விதத்தில் பொருள்நிலை சூழ்நிலைகளை உருவாக்குவதுதான், பருப்பொருள் தொழில்நுட்பமாகும். மனித மனங்கள் தங்களுக்கு வேண்டியதை உருவாக்க முயல்கின்ற போது, அவை நிறைய விஷயங்களைக் கேட்கும். ஆனால் உங்களது பிரார்த்தனைகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கப் பட்டுவிட்டால், உங்களது வாழ்க்கை பெரும் அழிவை சந்திக்க நேரிடலாம். அதனால், உங்களுக்கு வேண்டிய பொருள்நிலை சூழ்நிலைகளை உருவாக்குவதில் தாந்த்ரீகத்திற்கு நம்பிக்கையில்லை, ஆனால், அசாதாரணமான, உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட வடிவங்களையும், அடையாளங்களையும், தற்பொழுது இல்லாத திறன்களையுடைய விவேகத்தையும் உருவாக்குவதே தாந்த்ரீகத்தின் நோக்கம். யோகாவில் அதனை தந்த்ர யோகா என்று கூறுவார்கள் – நமது உடல், மனம், சக்தி ஆகியவைகளை வாழ்க்கையின் கருவிகளாக உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்வதனால், அது இன்னும் உயரமான வாய்ப்புகளைப் பெற நமக்கு உதவுகிறது. அதனால், படைப்பவன் உருவாக்குவதுபோல, ஒருவருக்கு திறன் வேண்டுமானால், தனது தனித்த ஆளுமையை, தனது கற்பனைத் திறனிலிருந்து தள்ளி வைப்பதுதான் மிக அடிப்படையான விஷயம். இதனை உங்கள் கற்பனைத் திறனில் ஏற்றிவிட்டால், அதில் வேறொரு படியான, உயிர் சக்திகளை கலந்தால், அதுவே ஒரு வாழ்க்கை வழிமுறையாகிவிடும். இந்த தாந்த்ரீக பாரம்பரியங்கள் இந்த விஷயங்களிலெல்லாம் தேர்ச்சிப் பெற்று விட்டன. பொதுவாக மக்களுக்கு, தன்னோடு சம்பந்தமில்லாத அல்லது தான் ஈடுபடாத ஏதோ ஒன்றுடன் எப்படி நடந்துக் கொள்வது என்பது தெரிவதில்லை. நீங்கள் அந்த வரைமுறைகளைத் தாண்டிவிட்டால், உங்களால் பல அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். உங்களது ஆளுமையிலிருந்து, உங்களது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், சக்திநிலை ஆகியவைகளை பிரித்தெடுத்தால்தான், அப்படி நடக்கும். நீங்கள் இங்கு செய்யும் இந்த யோகாவெல்லாமே, அடிப்படையில், உங்கள் ஆளுமையை நீங்கள் செய்யும் எளிமையான வேலைகளிலிருந்து பிரித்தெடுப்பதுதான் – தற்பொழுது இந்த உலகில் நடந்ததற்கு, ஒர் ஆழமான நேர்மாறு. ஒரு காலக்கட்டத்தில், “நீங்கள் கடவுளை நம்பவேண்டும்” என்று பிரசாரம் செய்தார்கள், இப்பொழுது “நீங்கள் உங்கள் மேலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று பிரசாரம் செய்கிறார்கள். அதுவே மோசமாக இருந்தது, இது மிக மோசமாக இருக்கிறது. “நான் என் மேலேயே நம்பிக்கை வைக்காவிட்டால், நான் எப்படி தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும்? நான் என்னுடைய சுயமரியாதையை வளர்க்கவில்லையென்றால், இந்த உலகில் எப்படி நடந்துக் கொள்ள முடியும்?” இப்பொழுது, நீங்கள் சுவாசிக்கும் காற்றே, உங்களை உயிருடன் வாழவைக்க பலவிதமான செயல்கள் செய்கிறது. அதற்கு ஏதாவது சுய மரியாதை இருக்கிறதா? தயக்கமேயில்லாமல், ஒருவித பயமும் இல்லாமல், நாம் இதை சுவாசித்து, உள்ளே கொண்டு போகலாம். யாராவது ஒருத்தரையாவது, உங்களால் முழு நம்பிக்கையுடன் உள்ளே கொண்டு போக முடியுமா? தனிமனிதனது, தனித்தன்மையானது ரொம்ப பலமாகிவிட்டதால், மனிதனை அவனது அசல் தன்மையிலிருந்து இடமாற்றி விட்டது. அவன் ஒரு உயிராய் வாழ்வதை நிறுத்திவிட்டான். அவன் ஒரு உயிராய் வாழ்ந்தால், உயிராய் மட்டுமே வாழ்ந்தால், அவனுடைய திறன்கள் பிரம்மாண்டமானவை, அவை இந்த பருப்பொருள் வடிவத்துக்குள் அடங்க வேண்டியதில்லை, ஏனென்றால் அவனுக்கு எல்லாவற்றுக்கும் நுழைவுரிமை இருக்கிறது.

: ‘தந்த்ரா’ என்றால் காமம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் வள்ளி எந்தப்பக்கம்? தெய்வானை எந்தப்பக்கம்?

முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் வள்ளி எந்தப்பக்கம்? தெய்வானை எந்தப்பக்கம்? என்ற கேள்வி வந்திருக்கிறதா!!! இல்லையா!!!!?
அதாவது எப்போதும் முருகனுக்கு வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.
வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால், முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.

முக வசியம் உண்டாக மந்திரம்

முக வசியம் உண்டாக மந்திரம்

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.
மந்திரம்:-
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.
பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??

நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??
இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு உரிய சீதோஷ்ணம் ,காரத்துவம் நிறைந்து காணப்படும்.
சிவ பெருமான் தான் இத்தலத்தின் நாயகனாக ஆட்சி புரிபவராக இருப்பார்.இங்கே நவக்கிரகங்கள் அதிகாரிகளாக இருப்பார்கள்.சில நேரங்களில் அதிகாரிகள் சரியில்லாமல் இருப்பார்.அதிகாரிகள் வன்மை காரணமாகத் தான் ஜோதிடர்கள் ஆட்சி புரிபவர்களை நேராகப் பொய் பார்க்கச் சொல்வார்கள்.ஆகவே ,இப்படி க்ஷேத்திரங்களுக்கு நீங்கள் போகும்போது வழியில் பல கோயில்களில் ஆட்சியாளர்களைச் சந்திக்கலாம் ; வழிபடாலாம்;கர்மத்தை போக்கலாம்.சந்தோசமாக வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.
ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள்.அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்களை விட அதிகாரம் இல்லை.ஆகவே நாம் தாராளமாக எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபடலாம்.நவகிரக கோவிலுக்கு சென்று திரும்பும் போது வழியில் பல கோவில்களுக்கு சென்று அருள் மழையில் நனையலாம். ஆகவே இறைவன் தண்டிப்பவன் அல்ல.
இறைவன் ஒருவன் தான் மிகப் பெரியவன் என்ற எண்ணத்தோடு எல்லா கோவில்களுக்கும் செல்வோம்.நல் வாழ்வு பெறுவோம்.

கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும் ? கலியுக முடிவில் உலகம் அழியுமா

கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும் ? கலியுக முடிவில் உலகம் அழியுமா ?
'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம்.
கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.
'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்).
ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல.
பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).
தற்பொழுது நடைபெறுவது வைவசுவத (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.
தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் மரபு உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் அளவுக்கு கலிக் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது.
தற்காலத்தில் தங்களையே 'கல்கி அவதாரம்' என்று அறிவித்துக் கொண்டு சில மூடாத்மாக்கள் களம் இறங்கியுள்ளனர். ஆணவத்தின் உச்சத்தில் செயல்பட்டு வரும் இத்தகு சுயநலவாதிகளிடம் அறியாமையால் மக்களும் சென்று சிக்கிக் கொள்கின்றனர். இதுவும் கலியின் கொடுமைகளுள் ஒன்று.
நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலியின் மீது பழியை ஏற்றி வைத்து கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.
"சதூர்யுக முடிவில் பிரளயம் வரும்" என்ற பிழையான கருத்து நிலவி வருகிறது. இதற்கு புராணங்களில் எவ்வித சான்றும் எல்லை. கல்பத்தின் முடிவிலேயே பிரளயம் நிகழும். இப்பிரளயம் 'நைமித்திக பிரளயம்' என்று குறிக்கப் படுகிறது!!!

இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் எதற்காக?

இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் எதற்காக?
14 -வருடம் எதற்காக ?
கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதன் காரணம்:-யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும, என்கிறது இந்துமத சாஸ்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள்.இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் . இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும்.என்வே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான்.
வாசியோகம்.!!!
வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.

குரு

சாத்திரங்களின் அர்த்தங்களை போதிப்பவர்- போதக குரு.
மெய்ப் பொருளின் தன்மையை உணர்ந்தவர் (தத்துவ தரிசனம் பெற்றவர்) - வேதக குரு.
தொழில் முன்னேற்றம் குடும்பமேனமை காரயசித்தி போன்றவை மூலம் இல்வாழ்க்கையை மேம்படுத்துபவர் - நிகித குரு
இவ்வுலக இன்பத்தை நாடினாலும், பரம்பொருள் அன்பமான பேரின்பத்தை நாடினாலும்
நாம் விரும்பிய இன்பத்தை நமக்கு தருபவர்- காமிய குரு.
சன்மார்க்க நெறியில் அறிவைத்தூண்டி தியானம் கைகூடச் அருள் செய்பவர் - சூசக குரு.
உலக வாழ்வில் வெறுப்பும், ஆன்மீக வாழ்வில் அளவற்ற விருப்பமும் உண்டாக்கி வைப்பவர்- வாசக குரு.
சிவ - ஜீவ ஐக்கியத்தை ஏற்படுத்துபவர் எவரோ அவரே- காரக குரு.
ஐயம் எல்லாம் நீக்கி, அறிவைத் தெளிவாக்கி ஆன்ம விடுதலையுடன்வாழச் செய்பவர் - விகித குரு.
மேற்கூறிய எண்வகை குருமார்களின் தன்மையையும் ஒருங்கே கொண்டவர்- சற்குரு.

தாய் தந்தையரின் பெருமை

தாய் தந்தையரின் பெருமை

ஒரு ஆசார்யன் பத்து உபாத்யாயர்களை விட உன்னதமானவன். நூறு ஆசார்யர்களை விட தந்தை உன்னதமானவர் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. தாயிற்கு இதை விட உன்னத ஸ்தானம். தாய் 1000 தந்தையரை விட உன்னதமானவள். யாக்ஞவால்கி மஹரிஷி காலத்தில் உபநயனம், தந்தையோ அல்லது சகோதரனோ செய்வர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் மற்றவர். இல்லை என்று சொன்னால் தந்தை, சகோதரர்  மரணம் அடைந்தார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இவர்களுக்கு தகுந்த யோக்யதை இல்லையென்றால் உபநயனம் மற்றவர்கள் செய்து வைப்பர். தந்தை, சகோதர வேத்த்தில் ஒரு ஸாகையாவது அத்யயனம் செய்திருக்க வேண்டும். அத்யாபனம் செய்திருக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் செய்யக்கூடாதி விருத்தியில் (வேலை) இருக்கக்கூடாது. இந்த பிரமானத்தை வைத்து பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் எந்த தந்தையும் தன் மகனுக்கு உபநயனம் செய்யும் தகுதி இல்லை. சில ஸ்ம்ருதிகளில் பெரியவர்களுக்கும், பூஜைக்குரியவர்களும் குரு ஸ்தானத்தில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தந்தை, பாட்டனார், சகோதரர், தாய்-தந்தையினுடைய சகோதரர்கள், சகோதரியின் மாமனார், அரசர், படித்தவர்கள், நன்னடத்தையுடன் இருப்பவர்கள் ஆகிய ப்ராஹ்மணர்கள் – தாய், ஆசாரியரின் பத்னீ, அத்தைகள், சித்திமார்கள், மூத்த சகோதரர்கள் – எல்லோரும் குருமார்களே. இவ்வளவு குருமார்களும் இருந்தாலும் ஆசாரியனுக்கு விசேஷமான இடம் உண்டு. வித்யா தானம் செய்வதால் அவருக்கு பித்ரு ஸ்தானம். அவருக்கு மரியாதை அதிகம். குருவிற்கு சம்மந்தமுடையதே கௌரவம்.
தர்ம சாஸ்திரம், ஆதம் வித்யை சொல்பவர் அல்ல குரு. எந்த வித்தையை சொல்லிக் கொடுத்தாலும் அவர் குருவே என்று மனு கூறுகிறார். ஸத்வித்தையை போதிக்கும் குருவின் மகத்துவத்தை எப்படி கூறுவது என்று அவர் ஆச்சரியத்தில் உள்ளார்.

மௌனமாக போஜனம் செய்பவர்கள் ஸ்வர்கத்தை அடைவார்க

போஜனம் செய்ய வேண்டிய முறை

”மௌனேன புந்ஜமானஸ்து ஸ்வர்க்கம் ப்ராப்தா ந ஸம்சய: ஸந்ஜல்பன் புந்ஜதே யஸ்து தேநான்நமஸுசிர்பவேத் பாபம் ச கேவலம் புங்க்தே தஸ்மான்மௌனம் ஸமாசரேத் உபவாஸ ஸமம் போஜ்யம் ஜ்ஞேயம் மௌனேன நாரத! பஞ்சப்ராணாஹுதீர்யஸ்து மௌனபோஜீ நரோத்தம: பஞ்சவை பாதகான்யஸ்ய நஸ்யந்தி நாத்ர ஸம்சய:” (பத்ம புராணம்)
மௌனமாக போஜனம் செய்பவர்கள் ஸ்வர்கத்தை அடைவார்கள். பேசிக் கொண்டே சாப்பிடுகின்ற அன்னம் அபவித்ரமாகும். அதனால் அவர் பாபத்தை புஜிப்பவராவார். அதனால் மௌனமாகவே சாப்பிட வேண்டும். மௌனமாக சாப்பிட்டால் உபவாஸத்திற்கு சமமாகும். மௌனமாக பஞ்சப்ராணாஹுதியோடு (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) சாப்பிட்டவரின் பஞ்ச மஹா பாபங்கள் நசிக்கும். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Tuesday, November 3, 2015

கண்ணனின் சொல் : வர்ணங்கள் உண்டு !! ஆனால் வர்ண பேதங்கள் இல்லை!!

உதங்க முனிவருக்கு கண்ணன் சொன்ன பாடம் :
வர்ணம் என்ற விஷயத்தை ஏதோ பெரிய கேடு போல சொல்லும் போது வர்ணம் குறித்தகண்ணனின் விளக்கத்தையும் அதன் தொடர்பான ஒரு கதையையும் சொல்ல விழைகிறேன்!!
கண்ணனின் சொல் : வர்ணங்கள் உண்டு !! ஆனால் வர்ண பேதங்கள் இல்லை!! இதையே என் தத்துவம்என்று அறிவாயாக!!
கண்ணனின் காலத்தில் உதங்க முனிவர் என்ற ஒரு பெரும் தவ ஸ்ரேஷ்டர்இருந்தார்!! பற்றை அறுத்து நெடுங்காலமாக கானகத்தில் அலைந்து கடுந்தவம்இருந்து வந்தார்!! அவருக்கு மோட்சம் தர எண்ணிய கண்ணன் அதற்கு முன் ஒருபரீட்சை வைத்தான்!!
ஒரு நாள் உதங்கர் தவம் செய்த இடத்துக்குதேரில் வந்த கண்ணன் அவரை வணங்க உதங்கர் கண்ணனைப் பணிந்து துதித்தார்!!கண்ணன் அவரிடம் (சாதாரணமாக கண்ணன் யாருக்கும் சுலபமாக வரங்கள் தருவதில்லை!)என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றான்! முனிவரோ ''கண்ணா நான் ஆசைகளைஅறுத்து இறுதி நாட்களை தவம் செய்து கழிக்கிறேன் எனக்கு என்ன வரம் வேண்டும்சொல் உன் அருள் இருந்தாலே போதும்'' என்றார் !! கண்ணன் விடாப்பிடியாகவற்புறுத்திக் கேட்கவும் முனிவர் " எனக்கு ஒரு குறையுமில்லை கண்ணா!காட்டில் கிடைக்கும் கனிவகைகளை உண்கிறேன்! ஆனால் சமயங்களில் தாகம் மிகும்நேரம் பக்கத்தில் நீர்நிலைகள் இல்லாமல் போகிறது!! அதற்காக நெடுந்தூரம்அலைவதில் தவம் தடைபடுகிறது!! அதனால் அவ்வாறான நேரங்களில் எனக்கு தடையின்றிநீர் கிடைக்க அருளினால் போதும்!!'' என்றார்!! அவ்வாறே அருளிச் சென்றான்கண்ணன்!!
பல நாட்கள் கழித்து ஒரு நாள் முனிவருக்கு தாகம் மேலிடநீர்நிலைகளைத் தேடினார் எங்கும் இல்லை!! அடடா இந்தக் கண்ணன் நமக்கு வரம்தந்தானே ஆனால் இப்போது நீர் எங்குமே இல்லையே இது என்ன சோதனை என்றுஎண்ணினார் முனிவர்! அந்நேரம் அங்கு ஒரு புலையன் நடந்து வந்தான்! அவன்கையில் வில் அம்பும் தோளில் ஒரு நீர்க்குடுக்கையும் இருந்தது! அவன் நேராகமுனிவரிடம் வந்து ' முனிவரே தாகமாக உள்ளதா?? தண்ணீர் வேண்டுமா??' எனக்கேட்டு நீர்க்குடுக்கையை எடுத்தான்!! அவன் நான்காம் வர்ணம் என்பதால்அருவருப்படைந்த முனிவர் மனதுக்குள் கண்ணா நீ தந்த வரம் இப்படியா வேலை செய்யவேண்டும் என நினைத்து அவனை வெறுப்பாகப் பார்த்தவாறே பேசாமல் நின்றார்!!புலையன் அவரை சிறிது நேரம் ஆச்சரியமாகப் பார்த்துப் பின் மறைந்து போனான்!!
அப்போது அங்கு கண்ணபிரான் பிரத்தியட்சமானான்!! முனிவர் அவனிடம் கோபமாக உன்வரம் பலிக்கும் விதம் இதுதானா என்று கேட்டார்!! கண்ணன் சிரித்தவாறேசொன்னான் "அட முட்டாள் முனிவனே!! வர்ணங்கள் உண்டு வர்ணபேதங்கள் கிடையாதுஎன்பதே என் தத்துவம்!! இதை நீ அறியாதது உன் பக்குவமின்மையைக் காட்டுகிறது!!உண்மையில் புலையன் வேடமிட்டு வந்தவன் இந்திரன்!! அவன் குடுக்கையில்இருந்தது முக்தியைத் தரும் அமிர்தம்!! வர்ணத்தின் பால் கொண்ட மயக்கத்தால்நீ மோட்சம் பெரும் அருமையான வாய்ப்பை இழந்தாய்!! இனி மோட்சம் பெற நீ பலப்பலபிறவிகளை எடுத்து உழன்றே ஆக வேண்டும்!!!' என்று சொல்லி மறைந்தான்!!!
இப்போது சிந்தியுங்கள் வர்ணம் வேறுபாடுகளைப் போதித்ததா என???

Monday, November 2, 2015

கந்த சஷ்டி விரத கால முழுமை நிர்ணயம்

சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும்.கந்த சஷ்டி விரத நிர்ணயம்
    கந்த சஷ்டி விரத கால நிர்ணயம் செய்யப்பட வேண்டியது சாந்திர மாதத்திலா? சௌரமாதத்திலா?
இவ்விரதத்தினை சாந்திர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டே அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி.
    கந்த சஷ்டிக்குரியது எந்தப் பட்சம்?
இவ் விரதத்திற்குரிய பட்சம் சுக்ல பட்சமாகும் (வளர்பிறை).
    கந்த சஷ்டிக்குரிய திதி எது?
இவ் விரதத்திற்குரிய திதி வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி ஈறாகிய  ஆறு திதிகளுமாம். சப்தமி திதியில் பாரணை செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.
கந்த சஷ்டி விரத கால முழுமை நிர்ணயம்
இது சாந்திரமான ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.
கந்த சஷ்டி விரத தொடக்கத்திற்கான நிபந்தனை
மேற்படி விரதத்தினை வெறுமனே ஐப்பசி மாதப் பிரதமையில் தொடங்க இயலாது. ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகா சுத்தப் பிரதமையில் தான் கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைக் கொள்ள வேண்டும்.
    மேற்கோள் – கிருத்திகா சுத்தப் பிரதமையில் கந்தசஷ்டி ஆரம்பத்தினைக் கொள்வதே ஆகம சம்மதமாகும்.
கந்த சஷ்டி விரதத்தினை முடிப்பது எப்போது?
மேற்சொன்ன பிரதமையில் தொடங்கி சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டித்தல் வேண்டும்.
மேற்கோள் 1. ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம். (ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை 2)
மேற்கோள் 2. கந்தசஷ்டி விஷயத்தில் கிருத்திகா சுத்தப் பிரதமை தொடங்கி சஷ்டி முடிய விரதானுஷ்டானம் விதிக்கப்பட்டிருக்கிறது(சிவாகம வித்தகர் சிவஸ்ரீ எஸ். சுவாமிநாத ஆச்சாரியார், தர்மபுர ஆதீனம்)
விரதம் முடித்துப் பாறணை செய்வது எப்போது?
சஷ்டி முடிந்து மறுநாள் காலை வரும் சப்தமி திதியில் விரதம் முடித்துப் பாறணை செய்தல்
வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தில் பாறணை சொல்லப்பட்டிருக்கிறதா?
கந்தசஷ்டி விரதத்தைப் பொறுத்தவரையில் பாறணையும் அவசியமென்றே கந்தபுராணம் கூறுகிறது.
மேற்கோள் 1. கந்தபுராணம் ஸ்கந்த விரதப்படலத்தில் வரும் 23ஆம் பாடலையும் அதற்கான நம் நாட்டுப் பேரறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் உரையையும் கீழே தருகிறேன்.
     ஆரண முனிவர் வானோர் அங்(கு) அதன் மற்றை வைகல்
    சீரணி முருகவேட்கு சிறப்பொடு பூசையாற்றி
    பாறணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
    தார் அணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
(வேதம் உணர்ந்த முனிவர்களும், தேவர்களும் அந்த சஷ்டித் தினத்திற்கு அடுத்த தினமாகிய சப்தமியில் திருவருட் சிறப்பமைந்த முருகப்பிரானுக்கு வெகு சிறப்பாக விசேட பூசை செய்து விதித்ததன் பிரகாரம் பாறணம் செய்தார்கள். அனுட்டிக்கும் இந்த விரத விசேடத்தினாலே மாலையை அணிந்த அசுரர்கள், தம்மிடமிருந்து கவர்ந்துகொண்ட தத்தம் பதத்தின் தலைமையை மீண்டும் பெற்றார்கள்.)
மேற்கோள் 2. நமது நாட்டின் சைவத் தமிழ்க் காவலரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களாலும்,சிதம்பரம் பாடசாலை அறங்காவலர் பொன்னம்பலபிள்ளை அவர்களாலும் எழுதப்பெற்ற காசி மட வெளியீடான கந்தபுராண உரைநடை நூலில் வரும் மற்றொரு மேற்கோளையும் இங்கு தருகிறேன். கந்த விரதப்படலத்தில் வரும் அப்பகுதி இதோ
“சுப்பிரமணியக்கடவுளுக்குரிய ஒப்பில்லாத விரதம் வேறுமொன்றுளது.அதனையுஞ்சொல்வோம். முசுகுந்தனே கேட்பாய். தேவர்களும் முனிவர்களும் துலா மாசத்துச் சுக்கில பட்சப் பிரதமை முதலாக ஆறு நாளும் காலையில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் இரண்டு தரித்து சந்தியா வந்தனம் முடித்து கிரௌஞ்ச மலையையும்   சூரபன்மனையும் சங்கரித்த வேலாயுதராகிய முருகக் கடவுளை தம்ப விம்ப கும்பம் என்னும் மூன்றினும் இரவிலே விதிப்படி பூசை செய்து வெல்லம் சேர்த்து நெய்யினாற் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களையும் செய்து, வணங்கித் துதித்து அவருடைய புராணத்தைப் படித்து சிறிது ஜலத்தை ஆசமித்து உபவசித்திருந்து சப்தமி திதியில்  முருகக் கடவுளுக்கு விஷேச பூசையியற்றி விதிப்படி பாரணஞ்    செய்து,  பதங்களைப் பெற்றார்கள்.” (பக்கம் 667)
மேற்படி இரண்டு மேற்கோள்களாலும் பாறணையும் விரதத்தின் ஒரு பகுதியே என்பதையும்,
அதனை சப்தமி காலையிலேயே செய்த வேண்டும் என்பதனையும் அறிந்து கொள்கிறோம்.
சூரன்போருக்கும் கந்த சஷ்டி விரதத்திற்குமான தொடர்பு என்ன?
சஷ்டி திதியில் முருகன் சூரனை வதைந்தமையே சஷ்டிக்கும், சூரன் போருக்குமான தொடர்பு.
சூரன் போருக்குப் பின் தான் சஷ்டி விரதம் வந்ததா?
இல்லை. அது தவறான கருத்து. சூரன் அழியவேண்டும் என்பதற்காக தேவர்கள் கந்தசஷ்டி விரதம் பிடித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. முன் சொன்ன இரண்டு மேற்கோள்களும் இதற்கும் சான்றாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்தது எப்போது?
கந்தசஷ்டி விரத ஆரம்பம் பற்றி அபிதான சிந்தாமணி நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.  பிரதமையில் சிவனிடம் பிறந்த நெற்றிக்கண் பொறிகள், துதியையில்
கௌரியின் கற்பத்திலிருந்து திருதியையில் அக்கினியிடம் கொடுக்க அவன் அதைப் பெற்று சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள். இதுவே கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்த வரலாறு.
கந்த சஷ்டி விரதத்தில் ஆலயங்களில் சூரன்போர் செய்யும் முறை எங்கேனும் விதிக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை. கந்தபுராணக் கதையை ஒட்டியே மேற்படி கிரியை முறை ஆலயங்களில்
நடாத்தப்படுகிறது.
சஷ்டி திதி இரண்டு நாட்களில் பங்கிடப்பட்டு இருக்கும்போது முதல் நாளில் சூரன்போர் செய்து விரதத்தை முடிப்பது சரியா?
தவறு. விரத நிர்ணயத்தில் சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இரண்டு நாட்களில் திதி நிற்குமாயின் இரண்டாம் நாள் திதி
முடியும் வரை விரதம் இருந்து சப்தமி வரும் மூன்றாம் நாளில் பாறணை இயற்றுவதே சரியாகும்.
திதி நிற்கும் இரண்டாம் நாளில் அத் திதி முடிந்த பிறகு சப்தமியில் பாறணை இயற்றல் ஆகாதா?
காலைச் சந்தியில் வழிபாடியற்றி விரதம் முடிப்பதுவே சிறந்தது. எனவே இடை நேரத்தில்
பாறணை இயற்றுவது பொருந்தாது.
சஷ்டித் திதி நிற்கும் இரண்டாம் நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக அத்திதி முடிந்துவிட்டால் அதன் பின் சூரன்போர் செய்வது பொருத்தமில்லை என்பது உண்மையா? இரவும் பகலும் இல்லாத நேரத்திலே தான் சூரனைக் கொள்ள முடியும் என்பது உண்மையா?
முன்பு சொன்னது போல சஷ்டியில் சூரன்போர் நடத்துவது வெறும் சம்பிரதாயமே சூரன் போருக்காக சஷ்டி முடியும் முன் விரதத்தை முடிப்பதும், சஷ்டி நிற்கும் நேரத்திலும், மதியம் முதலிய நேரங்களிலும் பாறணை செய்வதும் பாவம்.
வேண்டுமானால் சஷ்டி நிற்கும் நேரத்திற்குள் சூரன் போரை நடத்திக்கொள்ளலாம். சூரன் போர் நடத்தும் நேரத்தில் சஷ்டி விரதத்தை முடிக்க முடியாது.
அந்திப்பொழுதில் இறக்கும் வரத்தைப் பெற்றிருந்தவன் இரணியன் மட்டுமே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை
சைவ விரத நிர்ணயம்
சைவ விரதங்கள்
உலகில் உயிர்கள் பிறந்த நோக்கம், இறைவனை அடைவதுவே. அங்ஙனம் உயிர்கள் இறைவனை அடைய, வழிபாடொன்றே வழி. அவ்வழிபாட்டினுள் உயர்ந்தோரால் விதிக்கப்பட்ட விரதங்களை மேற்கொள்ளுதல் சிறந்ததாய்க் கருதப்படுகிறது. சைவ விரதங்கள் பலவாய் விரிகின்றன. அவ் விரதங்களுக்காய் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பல நூல்களிலும் பொதிந்து கிடக்கின்றன. அங்ஙனம் விரத நியதிகளை விதித்த நூல்களை முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சைவ நூல் வரிசை
வேத, ஆகம, புராண, இதிகாசம் என்பதே சைவ நூல் வரிசையாம். இந்நூல் வரிசையில் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என நான்காம்.
அங்ஙனமே இறைவனால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்கள் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம்,அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புயம்,ஆக்கினேயம்,வீரம்,ரௌரம்,மகுடம்,விமலம், சந்திரஞாலம், முகவிம்பம்,புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவை தவிர உப ஆகமங்கள பலவும் உள.
புராணங்கள் சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காரூடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பதுமம், ஆக்நேயம், பிரம்மகைவர்த்தம் என பதினெட்டாம். இவை தவிர, உப புராணங்கள் பதினெட்டும் உள.
இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என மூன்றாம். பெரும்பாலும் இவற்றுள் ஆகம, புராண, இதிகாசங்களே விரதங்களை நிர்ணயிக்க பயன்படுகின்றன.
விரதங்களும் ஆகமங்களும்
நம் சைவ சமயத்திற்கு வேதங்கள் பொது நூல் எனவும், ஆகமங்கள் சிறப்பு நூல்கள் எனவும் உரைக்கப்படுகின்றன. மூல ஆகமங்கள் 28. சிறப்பு நூலாகிய ஆகமம் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்காக வகுக்கப்படும். ஆகமங்களின் சரியா, கிரியாபாதங்களில், வழிபாடு சார்ந்த அனைத்துக் கிரியைகளுக்கான வரையறைகளும் உரைக்கப்படுகின்றன. யோக, ஞானபாதங்களில் அறிவு மார்க்கமாய் இறைவனை அடைவதற்கு உரைக்கப்பட்ட தத்துவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன. ஆகமங்களின் நான்கு பாதங்களிலும் அமையும் விடயங்கள் பின்வருமாறு:
சரியா பாதத்தில் அமைபவை – பிராயச்தித்த விதி, பவித்திர விதி, சிவலிங்க லட்சணம்,செபமாலை,யோகப்பட்டம் முதலியவற்றின் இலட்சணம்.
கிரியா பாதத்தில் அமைபவை – மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை
செப ஓமங்கள், சமய, விசேட, நிர்வாண ஆச்சாரியர் அபிசேகங்கள்
யோக பாதத்தில் அமைபவை  – 36 தத்துவங்கள், தத்துவேசுரர், இயம, நியம, ஆசன சமாதி முறை
ஞானா பாதத்தில் அமைபவை – பதி, பசு, பாச இலட்சணங்கள்
(?)ஆகமங்களின் கிரியாபாதத்திலேயே விரதங்கள் பல நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அங்ஙனம் ஆகமங்கள் பொதுப்பட விதித்த விரத நியதிகளை பின் வந்த யோகக் காட்சிமிக்க ஞானியர் பலர் மேலும் விரித்துரைத்துப் பல நூல்களைச் செய்துள்ளனர். அந்நூல்களைக் கொண்டும் அதன் பின்வந்த ஆற்றல் மிக்க சிவாச்சாரியர் பலர் அந்நூல்களுக்குச் செய்த வியாக்கியானங்களைக் கொண்டுமே பல சைவ விரதங்கள் இன்று நிர்ணயம் செய்யப்படுகின்றன.
விரதங்களும் புராண இதிகாசங்களும்
ஆகமங்களில் விதிக்கப்படாத சில விரதங்கள் புராண, இதிகாச செய்திகள் கொண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. கந்தசஷ்டி விரதம் புராணங்களால் விதிக்கப்பட்ட விரதமாய்க் கருதப்படுகிறது.
விரத கால நிர்ணயம்
மாரி காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அடைந்து வளர்வதும், கோடை காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அற்றுப் போவதும் கால விஷேடத்தினாலேயாம். அதுபோலவே குறித்த விரதங்களை குறித்த காலங்களில் அனுஷ்டித்தால் அதற்காம் பயன் அதிகம் என்பதால், விரதங்களை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் எனும் கால நிர்ணயம் ஞானியரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அவ் விரத கால வரையறைகள் இருவகைப்பட்டனவாம். விரதங்களுள் சில திதிகளை அடிப்படையாய்க் கொண்டும், வேறு சில நட்சத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டும் வரையறுக்கப்படுகின்றன. இத்திதிகளும் நட்சத்திரங்களும் அமையும் மாதங்கள் இரு வகைப்பட்டனவாம். அவை சாந்திர மாதம், சௌரமாதம் என உரைக்கப்படும்.
திதி என்றால் என்ன?
குறித்த மாதத்தில் சூரியனோடு சமமாக நின்ற சந்திரன் சூரியனைப் பிரிந்து கிழக்கு நோக்கிப் பூமியைச் சுற்றி வந்து திரும்பவும் சூரியனைச் சந்திக்கிறது. இவ் இடைப்பட்ட காலத்தை பன்னிரண்டு பாகைக்கு ஒரு அலகு எனக் கொண்டு முப்பதாகப் பிரித்து, வளர்பிறை பிரதமை முதல் தேய்பிறை அமாவாசை ஈறாக முப்பது திதிகள் வகுக்கப்படுகின்றது.
இத் திதிகள் வளர்பிறை பிரதமை முதல் அமாவாசை ஈறாக பதினைந்தும், தேய்பிறை பிரதமை முதல் பௌர்ணமி ஈறாக பதினைந்துமாக முப்பதாகின்றன. அமாவாசை முதல் பௌர்ணமி ஈறாக வரும் திதிகளை சுக்கில பட்ச திதி அல்லது பூர்வ பட்ச திதி என உரைப்பர். பௌர்ணமி முதல் அமாவாசை ஈறாக வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதி அல்லது அபரபட்ச திதி என்று உரைப்பர். இப் பூர்வ பக்கத்தினையே உலகியலில் நாம் வளர்பிறை என்கிறோம். அபரபக்கத்தினையே தேய்பிறை என்கிறோம். பூர்வம் – தொடக்கம். அபரம் – முடிவு. சுக்கிலம் – வெண்மை. கிருஷ்ணம் – கருமை. வளர்பிறைத்திதிகள், முப்பது திதிகளினதும் தொடக்கமாய் அமைவதால் பூர்வபக்கத் திதிகள் என அழைக்கப்படுகின்றன. தேய்பிறைத்திதிகள், முடிவாய் அமைவதால் அபரபக்கத்திதிகள் என உரைக்கப்படுகின்றன. அது போலவே தேய்பிறைக்காலம் இருட்காலம் ஆதலால், அத்திதிகள் கிருஷ்ணபட்சத் திதிகள் என உரைக்கப்படுகின்றன. வளர்பிறைத் திதிகள் ஒளிக்காலம் ஆதலால் சுக்கில பட்சத்திதிகள் என உரைக்கப்படுகின்றன.
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது. ஏழாவது திதி சப்தமி எனப்படுகிறது. எட்டாவது திதி அட்டமி எனப்படுகிறது. ஒன்பதாவது திதி நவமி எனப்படுகிறது. பத்தாவது திதி தசமி எனப்படுகிறது. பதினொராவது திதி ஏகாதசி எனப்படுகிறது. பன்னிரண்டாவது திதி துவாதசி எனப்படுகிறது. பதின் மூன்றாவது திதி திரியோதசி எனப்படுகிறது. பதினான்காவது திதி சதுர்த்தசி எனப்படுகிறது. சதுர்த்தசி திதிக்கு அடுத்து வருவது பூர்வபக்கமாயின் பெர்ணமித் திதி அபரபக்கமாயின் அமாவாசை திதியாம்.
நம் விரதங்களில் சில இத்திதிகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
நட்சத்திரங்கள் என்றால் என்ன?
சந்திரன் மேஷ ராசியின் தொடக்கத்திலிருந்து பதின்மூன்று பாகை இருபது கலை வீதம் விலகிச் செல்வதனால் ஏற்படும் காலப்பகுதி ஒரு நட்சத்திரமாய்க் கணிக்கப்படுகிறது. பன்னிரண்டு ராசி காலப்பகுதியையும் சந்திரனின் சுற்றைக் கொண்டு மேல் வருமாறு பிரிக்க அப் பிரிவுகள் இருபத்தியேழாகும். இவ் இருபத்தியேழு காலப்பகுதிகளும் இருபத்தியேழு நட்சத்திரங்களாய் உரைக்கப்படுகின்றன. இந் நட்சத்திரங்கள் முறையே அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திரட்டாதி, திருகோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி என்பனவாம்.
நம் விரதங்களில் சில இந்நட்சத்திரங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
சாந்திர மாதம்  என்றால் என்ன?
இது சந்திரனின் சுற்றை வைத்து மாதங்களைக் கணிக்கும் முறை. பூர்வ பக்கப் பிரதமை தொடக்கம் (வளர்பிறை முதலாம் நாள்) அமாவாசை முடியவுள்ள காலப்பகுதி இங்கு ஒரு மாதமாம். இங்ஙனம் வரும் பன்னிரண்டு காலப் பிரிவுகள் சாந்திர மாதங்கள் எனப்படும்.
சைத்திரம்(சித்திரை), வைசாகம்(வைகாசி), ஜ்யோஷ்டம்(ஆனி), ஆஷாடம்(ஆடி), சிராவனம்(ஆவணி), பாத்திரபதம்(புரட்டாதி), ஆஸ்வீஜம்(ஐப்பசி), கிருத்திகா(கார்த்திகை), மார்க்கஷீசம்(மார்கழி), புஷ்யம்(தை), மாகம்(மாசி), பார்க்குணம்(பங்குனி) என்பனவே அவையாம்.
மூன்று சௌர வருடங்களில் (சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருஷங்களில்) வரும் முப்பத்தியாறு மாதங்களில் சாந்திர மாதங்கள் முப்பத்தியேழு நிகழும். சூரியமாதத்துடன் சந்திர மாதம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஒரு சூரிய மாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திர மாதம் அதிக மாதம் அல்லது மலமாதம் என உரைக்கப்படும். இவ் அதிக மாதம் விரத அனுஷ்டானங்களிற்கு உரியதாகாது.
விரதங்களில் சில இச் சாந்திர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டு கணிக்கப்படுகின்றன.
சௌர மாதம்  என்றால் என்ன?
இது சூரியனின் சுற்றை வைத்து மாதங்களைக் கணிக்கும் முறை. மேடம் முதல் மீனம் ஈறாகிய பன்னிரண்டு ராசிகளிலும் தனித்தனி முறையே  சூரியன் சஞ்சரிக்கின்ற சித்திரை, வைகாசி, ஆனி,  ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி,  பங்குனி ஈறான பன்னிரண்டு காலப்பகுதி சௌர மாதங்கள் எனப்படும்.
விரதங்களில் சில இச் சௌர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டு கணிக்கப்படுகின்றன.
வளர்பிறைத்திதிகள், முப்பது திதிகளினதும் தொடக்கமாய் அமைவதால் பூர்வபக்கத் திதிகள் என அழைக்கப்படுகின்றன. தேய்பிறைத்திதிகள், முடிவாய் அமைவதால் அபரபக்கத்திதிகள் என உரைக்கப்படுகின்றன. அது போலவே தேய்பிறைக்காலம் இருட்காலம் ஆதலால், அத்திதிகள் கிருஷ்ணபட்சத் திதிகள் என உரைக்கப்படுகின்றன. வளர்பிறைத் திதிகள் ஒளிக்காலம் ஆதலால் சுக்கில பட்சத்திதிகள் என உரைக்கப்படுகின்றன.
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது. ஏழாவது திதி சப்தமி எனப்படுகிறது. எட்டாவது திதி அட்டமி எனப்படுகிறது. ஒன்பதாவது திதி நவமி எனப்படுகிறது. பத்தாவது திதி தசமி எனப்படுகிறது. பதினொராவது திதி ஏகாதசி எனப்படுகிறது. பன்னிரண்டாவது திதி துவாதசி எனப்படுகிறது. பதின் மூன்றாவது திதி திரியோதசி எனப்படுகிறது. பதினான்காவது திதி சதுர்த்தசி எனப்படுகிறது. சதுர்த்தசி திதிக்கு அடுத்து வருவது பூர்வபக்கமாயின் பெர்ணமித் திதி அபரபக்கமாயின் அமாவாசை திதியாம்.
நம் விரதங்களில் சில இத்திதிகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.

6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். ... சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், ...
முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் தமிழ் கடவுள் முருகப் பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. முருகனின் அவதார நோக்கமே சூரனை வதைப்பதுதான். இதை கொண்டாடும் வகையில் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி சஷ்டி திதி வரையிலான 5 நாட்கள் விரதம் இருப்பது சஷ்டி விரதம் எனப்படுகிறது.
5 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபடலாம். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்‘ என்பார்கள். இந்த சொற்றொடர் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும். கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது இதன் பொருள். சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து உருவானவன் கந்தப்பெருமான். நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் 6 பகுதியாக விழுந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருப்பெற்றது. 6 கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பார்வதி தேவி இணைத்து ஆறுமுகனாக மாற்றினாள் என்கிறது புராணம்.
தேவர்களை அடக்கி பஞ்ச பூதங்களின் செயல்பாட்டையும் தன்வசப்படுத்தியிருந்தனர் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்கள். அவர்களை அழிப்பதற்காக தோன்றியவர் முருகன். முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்க 6 நாள் போர் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப் பெருமான் முதலில் வதம் செய்கிறார். 6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். அன்னை பார்வதி தேவி கொடுத்த வேலால் மரத்தை பிளக்கிறார் முருகன். பிளவு பட்ட மாமரமானது சேவலாகவும், மயிலாகவும் மாறுகிறது. சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார் முருகப் பெருமான்.
அசுரர்களுக்கு மோட்சம் அளிக்கும் முருகப்பெருமான் தேவலோகத்தை தேவேந்திரனிடம் ஒப்படைக்கிறார். சூரனை சம்ஹாரம் செய்த கந்தனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து தருகிறார் தேவேந்திரன். தேவசேனா, தேவயானை, தேவயானி, ஜெயந்தி ஆகிய பெயர்கள் தெய்வானையையே குறிக்கிறது. இதை கொண்டாடும் வகையில் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள் முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியவை நமக்குள் இருக்கும் ஆணவம், வன்மம், மாயை என்ற மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர்நிலையை அடையலாம் என்பது சூரசம்ஹாரம் காட்டும் நெறியாகும்.
முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. வெறுமனே தண்ணீர் மட்டும் குடிப்பது, மவுன விரதம் இருப்பது என விரதத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்கள் அனைத்திலும் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடக்கும்.
சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். விரதம் இருந்து, உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மனதார பிரார்த்தித்து வழிபட்டால் நமக்கு எதிராக வரும் அனைத்து தடைகள், தடங்கல்கள், பிரச்னைகளையும் முருகப் பெருமான் தகர்த்தெறிந்து வளமான வாழ்வு அருள்வார் என்பது நம்பிக்கை. முருகனை கந்த சஷ்டியன்று வழிபட்டு சகல நலன்களும் பெறுவோம்